Everything posted by தமிழ் சிறி
-
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!
ரவுடி தேரர்.... அரச விருந்தினராக சிறைச்சாலையில் இருப்பதுதான் நல்லது. 😂
-
ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுரகுமார!
ஜேர்மனுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அனுரகுமார! ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வ அரசு பயணமாக எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி ஜேர்மனிக்கு விஜயம் செய்ய உள்ளார். கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இன்று (23) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இதனைக் கூறினார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஜனாதிபதி, ஜேர்மன் ஜனாதிபதியை சந்திப்பார் என்றும், இலங்கைக்கு வருகை தரும் ஜேர்மன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குத் தேவையான சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1432994 @குமாரசாமி , @Kandiah57 , @Paanch , @Kavi arunasalam , @nochchi , @வாத்தியார் , @shanthy
-
7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!
7வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை! ஏழு வயது சிறுமியை சட்ட ரீதியான பாதுகாவலரிடம் இருந்து கடத்தி, பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 62 வயது ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 17 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்தத் தீர்ப்பை வழங்கினார். குறித்த குற்றவாளிக்கு 30,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு, அதனை செலுத்தத் தவறினால் ஒரு வருட கூடுதல் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 30 இலட்சம் ரூபாவும், அவளது தாய்க்கு 10 இலட்சம் ரூபாவும் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த இழப்பீடு செலுத்தப்படாவிட்டால் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. தண்டனை விதிக்கப்படுவதற்கு முன், அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், குற்றவாளி ஐந்து பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது ஐந்து பிள்ளைகளும் பெண் குழந்தைகள் எனவும் கூறினார். இவ்வாறு பெண் குழந்தைகளை கொண்ட ஒரு தந்தை இத்தகைய பாலியல் துஷ்பிரயோகம் செய்தது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அவருக்கு சட்டத்தால் வழங்கப்படக்கூடிய அதிகபட்ச தண்டனையை விதிக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி கோரினார். குற்றவாளி சார்பில் ஆஜரான சட்டத்தரணி, குற்றவாளி 62 வயதுடையவர் எனவும், அவர் கடந்த ஏழு ஆண்டுகளாக காசநோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார். அவரது இளைய மகள் 14 வயதுடையவர் எனவும், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு லேசான தண்டனை விதிக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி கோரினார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், தனது மகளுக்கு ஏற்பட்ட அநீதி இன்னொரு குழந்தைக்கு ஏற்படாதவாறு குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என கோரினார். முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதி, குற்றவாளியின் குற்றத்தின் தன்மையை பரிசீலிக்கையில், குற்றவாளி தொடர்பில் மென்மையாக செயல்பட முடியாது என சுட்டிக்காட்டினார். ஐந்து பெண் குழந்தைகளின் தந்தையாக இருந்தும், பெண் குழந்தைகளின் மதிப்பை உணர்ந்திருக்க வேண்டிய குற்றவாளி, ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தது கடுமையான குற்றம் என நீதிபதி குறிப்பிட்டார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று சமூகத்தில் வலுவான குரல் எழுப்பப்படும் இந்த காலகட்டத்தில், இவ்வாறான சம்பவங்களை சமூகம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், எனவே குற்றவாளி தொடர்பில் மென்மையாக செயல்பட முடியாது எனவும் கூறி, இந்த தண்டனையை நீதிபதி அறிவித்தார். https://athavannews.com/2025/1432991
-
யாழில். ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் உயிரிழப்பு!
யாழில். ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் உயிரிழப்பு! வீதியோரமாக இருந்த ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சரசாலை பகுதியை சேர்ந்த வைத்திலிங்கம் சிவராஜன் என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் கடந்த 16ஆம் திகதி வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில், தனிப்பட்ட தேவைக்காக வெளியில் சென்ற சமயம், கொடிகாமம் பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் இருந்த சீமெந்தினால் ஆனா உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் முதியவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்திருந்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். https://athavannews.com/2025/1432963
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
ஆம், சசி ... அந்தக் கடைசிப் பந்தி சரியான கருத்து. 👍 சிலருக்கு... எத்தனை, எதனுடன் ஒப்பிடுவது என்ற பக்குவம் இன்னும் காணாது. 😂 🤣
-
கருத்து படங்கள்
உப்பு கொண்டு வரும் கப்பலை... இன்னும் காணவில்லை.
-
பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
- கொழும்பிலுள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் துப்பாக்கியுடன் சென்ற பெண் கைது
- நாட்டில் உப்பு தட்டுப்பாடு : உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்!
உப்பு கொண்டு வரும் கப்பலை... இன்னும் காணவில்லை.- 72வது உலக அழகிப் போட்டி – இறுதிச் சுற்றில் அனுதி குணசேகர
72வது உலக அழகிப் போட்டி – இறுதிச் சுற்றில் அனுதி குணசேகர இந்தியாவின் தெலங்கானாவில் நடைபெற்று வரும் 72வது ‘உலக அழகி போட்டியில்’ Head-to-Head Challenge பிரிவில் 107 அழகிகளில் இருந்து இறுதி 20 பேருக்குள் இலங்கையை சேர்ந்த அனுதி குணசேகர தகுதி பெற்றுள்ளார். அனுதி இந்த சுற்றில் ஆசிய மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் முதல் 5 பேருக்குள் தெரிவாகியுள்ளார். இவருடன் இந்த சுற்றில் ஆசிய மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் இருந்து தாய்லாந்து, துருக்கி, லெபனான் மற்றும் ஜப்பான் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 74 ஆண்டு கால உலக அழகி போட்டி வரலாற்றில் Head-to-Head Challenge பிரிவில் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கை போட்டியாளராக அனுதி இடம்பிடித்துள்ளார். மேலும், அனுதியின் மற்றொரு தனித்துவமான வெற்றியாக, இந்த முறை உலக அழகி போட்டியில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டி பிரிவுகளிலும் இறுதி சுற்றுக்கு வந்த ஆசியாவின் ஒரே போட்டியாளராகவும் இவர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அனுதி பங்கேற்கும் Head-to-Head Challenge பிரிவின் இறுதி 20 பேர் பங்கேற்கும் இறுதிப் போட்டி இன்று (23) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432885- வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்!
வாகன இறக்குமதிக்கு இலங்கை செலவிட்டுள்ள டொலர்கள்! வாகன இறக்குமதிக்காக சுமார் 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் (LCs) ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில் வியாழக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வாகனங்கள் ஏற்கனவே நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார். மேலும், 2025 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை வரை ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1432875- உத்தரபிரதேசத்தில் கனமழையால் 34 பேர் உயிரிழப்பு!
உத்தரபிரதேசத்தில் கனமழையால் 34 பேர் உயிரிழப்பு! உத்தரபிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக 34 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் ஏற்பட்டுள்ள திடீர் வானிலை மாற்றமானது பல மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக காஸ்கஞ்ச் மற்றும் பதேபூர் பகுதிகள் கனமழையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மரங்கள் வேரோடு சாய்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளன. நொய்டாவில், பல மரங்கள் வேரோடு சாய்ந்து வாகனங்கள் மீது விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் புயல், மழை மற்றும் ஆலங்கட்டி மழை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நிவாரணப் பணிகளை முழு வேகத்தில் மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார். மின்னல், புயல் அல்லது மழை தொடர்பான பேரிடர்களால் மனிதர்கள் அல்லது விலங்குகள் உயிரிழந்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும் எனவும் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432831- ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க ட்ரம்ப் நிர்வாகம் தடை!
ஹார்வர்டில் பல்கலையில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்க ட்ரம்ப் நிர்வாகம் தடை! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் வியாழக்கிழமை (22) ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மாணவர்களைச் சேர்க்கும் திறனை இரத்து செய்தது. மேலும், தற்போதைய வெளிநாட்டு மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு மாற்றவோ அல்லது அவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்தை இழக்கவோ கட்டாயப்படுத்துகிறது. அதேநேரத்தில், ஏனைய கல்லூரிகளுக்கும் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்துவதாக உத்தரவு அச்சுறுத்துகிறது. 2025-2026 கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் திட்ட சான்றிதழை நிறுத்துமாறு உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் உத்தரவிட்டதாகத் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்களைப் பாதிக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும் பழிவாங்கும் செயலாகும் என்றும் ஹார்வர்ட் கூறியது. ஹார்வர்டில் உள்ள சில வெளிநாட்டு மாணவர் விசா வைத்திருப்பவர்கள் குறித்து கிறிஸ்டி நோயம் கோரிய தகவல்களை வழங்க ஹார்வர்ட் மறுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக புள்ளிவிவரங்களின்படி, ஹார்வர்ட் 2024-2025 கல்வியாண்டில் கிட்டத்தட்ட 6,800 சர்வதேச மாணவர்களைச் சேர்த்தது, இது அதன் மொத்த சேர்க்கையில் 27% ஆகும். 2022 ஆம் ஆண்டில், சீன நாட்டினர் 1,016 பேர் வெளிநாட்டு மாணவர்களாக இருந்ததாக பல்கலைக்கழக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து கனடா, இந்தியா, தென் கொரியா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் வந்தனர். இது தொடர்பான கருத்துக்கான கோரிக்கைக்கு வொஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் உடனடியாக பதிலளிக்கவில்லை. https://athavannews.com/2025/1432896- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கந்தையா அண்ணை... சொல்லுறன் என்று குறை நினைக்கப்படாது, எண்டாலும் சொல்ல வேண்டி இருக்கு. நமது கோவில்களுக்கு என்று சில விதிமுறைகள், வரைமுறைகள் உண்டு. அதனை மீறாமல் ஒழுக்கமாக செய்து முடிப்பதே ஆறறிவு மனிதருக்கு அழகு. கோவில் திருவிழாவுக்கு மேளம் அடிக்க வந்தவனுக்கு... ஆடு வெட்டி... இரத்த வறையும், ஆட்டுக் கறியும் வைத்து கொடுப்பதும், அவனுக்கு சாராயம் கொடுப்பதும் ஒழுக்கமான செயல் அல்ல. அப்படியான மனப்பிறழ்வு உள்ளவர்கள் திருவிழாவை செய்யாமல்.... அந்தத் திருவிழாவை ஆச்சாரமாக செய்பவர்களிடம் ஒப்படைத்து விடுவதே புண்ணியமானதும், பண்பானதுமான செயல். அதை விட்டுட்டு.... செய்த கூடாத செயலை, பெருமையாக வேறு சொல்லிக் கொண்டு திரிவதை என்னவென்று சொல்ல. பொதுவாக தமிழர்கள்.... எந்த ஒரு செயலையும் விதிமுறைகளை மீறி செய்துவிட்டு, அதனை பெருமையாக நினைப்பவர்கள். அதனை கெட்டித்தனம் என நினைத்துக் கொண்டு விஞ்ஞான விளக்கமும் கொடுப்பதை பார்க்க சகிக்க முடியாது. ஒரு முஸ்லீம் பன்றி இறைச்சி சாப்பிட்டு விட்டு, பெருமையாக பீத்திக் கொண்டு திரிவதில்லை. முற்ற வெளியில் தமன்னாவின் நிகழ்ச்சி பார்க்க காசு கொடுத்து ரிக்கற் வாங்காமல் பனைமரத்தில் ஏறி நின்று பார்த்த இனமும், 50 ரூபாய் ரிக்கற் வாங்கி விட்டு 5000 ரூபாய் ரிக்கற் எடுத்தவர்களுக்கான கதிரையில் இருந்து கொண்டு... சண்டித்தனம் விட்ட இனத்திடம், வேறு நல்ல விடயங்களை எதிர்பார்க்க முடியாதுதானே. 😂 உங்களுக்கு இதனை தனிப்பட சொல்லவில்லை. இங்கு மாமிசக் கடை வைப்பதற்கு முட்டுக் கொடுத்த எல்லோருக்கும் பொதுப்படையாக சொல்லப் பட்டது. நன்றி. 🙏- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
வேலவன் சாமியார்… இதில் இறங்கியிராவிட்டால், கடை இப்போதும் இருந்திருக்கும் என்ற உண்மை… உங்களுக்கு இன்னும் புரிபடவில்லைப் போலுள்ளது. 😂- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
எங்கடை சில ஆட்களுக்கு…. கோயிலுக்கு பக்கத்தில் இருந்து தான் இறைச்சி தின்ன வேண்டும் என்ற குறுக்குப் புத்தி ஏன் வந்தது என்று தெரியவில்லை. விட்டால்… பூணூல் போட்டுக் கொண்டு பூசை செய்யவும் வெளிக்கிட்டு விடுவார்கள் போலுள்ளது. யாழ்ப்பாணத்தில் எத்தனையோ மாமிசக் கடைகள் “ஈ” ஓட்டிக் கொண்டு இருக்க, கோவிலடிக்கு வந்துதான் இறைச்சி சாப்பிட வேண்டும் என்ற கீழ்த்தரமான சிந்தனையை என்னவென்பது. சிலருக்கு…. சைவம் என்றால், அதற்குள் சம்பந்தம் இல்லாமல் வந்து கருத்து கந்தசாமி போல்… எதையாவது உளறிக் கொட்டி விட்டு போவதை வழக்கமாகவே வைத்திருக்கின்றார்கள். புதன்கிழமை மதிப்பிற்குரிய வேலன் சுவாமிகள் குறிப்பிட்ட Barista கடையின் முன் நடாத்திய போராட்டத்தின் போது…. அளவுக்கு அதிகமான பொலிசார் கடைக்குப் பாதுகாப்பு கொடுக்கும் போதே… இது ஒரு அரசியல்வாதியின் பினாமியின் கடையாக இருக்கலாம் அல்லது அன்னிய மதத்தை சேர்ந்தவரது கடையாக இருக்கலாம் என யோசித்தேன். நீங்கள் அவர் தென்னிலங்கையை சேர்ந்த சிங்களவர் என குறிப்பிட்ட போது… பொலிசாரின் அதிகப் படியான பாதுகாப்பின் அர்த்தம் புரிந்தது. எப்படியோ… கடை அகற்றப் பட்டது சந்தோசம்👍🏽. அதற்காக அழுது வடிபவர்கள்… சோனக தெருவில் உள்ள “மொக்கன் கடையில்” புட்டும், மாட்டு இறைச்சிக் கறியும் சாப்பிட்டு ஆறுதல் அடையட்டும். 😂 🤣- அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம்
கடையின் பெயர் BARISTA. பெயரிலேயே... Bar உள்ளதை பார்த்தால், மாட்டு இறைச்சியுடன், மதுபானமும் இருக்கும் போலுள்ளது. மானிப்பாயில், சுமந்திரன் இப்பிடி ஒன்றைத்தான் திறந்து வைத்தது பழைய செய்தி. 😜 😂- தமிழ் இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும் , அரசாங்கம் எச்சரிக்கை.
சட்டங்கள் சரியாக பாய்ந்திருந்தால், எதற்கு இந்த முள்ளிவாய்க்கால்.- தமிழ் இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும் , அரசாங்கம் எச்சரிக்கை.
தமிழ் இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும் , அரசாங்கம் எச்சரிக்கை. இலங்கையில் தமிழ் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கனடாவில் பிரிம்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதியொன்றில் தமிழின அழிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட நினைவுத் தூபி தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை தனியார் தொலைக்காட்சியொன்றில் கருத்து வெளியிட்ட அவர், ”இலங்கையில் தமிழ் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறும் குற்றச்சாட்டுகளை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது. கனடாவின் பிரிம்டன் நகர சபையின் அனுசரணையுடன் அமைக்கப்பட்டுள்ள குறித்த நினைவுத் தூபிக்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். இறுதி யுத்தத்தில் நந்திக்கடல் பகுதியில் கை குழந்தைகளுடன் வந்தவர்களைக்கூட எமது இராணுவத்தினர்தான் காப்பாற்றியிருந்தனர். இன அழிப்பு என்பது தமிழர்களை இராணுவத்தினர் தேடி தேடி கொலை செய்திருக்க வேண்டும். அவ்வாறு இடம்பெற்றதா? யுத்தக்காலத்தில் சரணடைந்த அல்லது இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தவர்களை இராணுவத்தினர்தான் காப்பாற்றியிருந்தனர்.” என்றார். இதேவேளை, தமிழ் இன அழிப்பு உள்ளிட்ட பதங்களை பயன்படுத்தி கோஷங்கள் மற்றும் பதாதைகள் வைக்கப்படுகின்றன. முள்ளிவாய்க்கால் பகுதியில் இம்முறையும் இந்தப் பதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எதுவும் ஏன் எடுக்கப்படுவதில்லை என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் இன அழிப்பு போன்ற கருத்துகள் பகிரப்படுவதற்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். https://a7tv.com/if-comments-such-as-tamil-ethnic-cleansing-are-shared/?fbclid=IwY2xjawKcJepleHRuA2FlbQIxMABicmlkETBlSUNTVG96M2YzazZWcXQyAR6phOI2bFaOe3EqOUMe1CkIAwQnweqaOvv1U23JHvznDYUoNshC8Izf9UhHog_aem_RTtVPlmO59bwXgnjIo9_4Q- நாட்டில் உப்பு தட்டுப்பாடு : உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்!
- 22 வயது இளைஞனும் 22 வயது யுவதியும் 2 மாதங்களுக்கு முன்னர் வீட்டாரின் எதிர்ப்பை மீறி திருமண பந்தத்தில் இணைந்த நிலையில் இளைஞனை தாக்கிவிட்டு யுவதியை கடத்திச்சென்ற சம்பவம் பதிவு
👉 https://www.facebook.com/watch?v=1747521376144972 👈 யாழில்... காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய சகோதரன். வெளியாகிய அதிர்ச்சி காணொளி! 👆- பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி! இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
இலஞ்சம் பெற்ற பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு விளக்கமறியல்! இலஞ்சம் வாங்கும் போது கைதுசெய்யப்பட்ட வவுனியா பூவரசங்குளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெறமுற்ப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேற்று மாலை(21) கைது செய்யப்பட்டிருந்த வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்றையதினம் (22) வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இதேவேளை, பாதுகாப்பு காரணங்களை அடிப்படையாக கொண்டு 27 ஆம் ஆம் திகதி வரை அவரை யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கு 27 ஆம் திகதிக்கு பின்னர் கொழும்பு நீதிமன்றுக்கு மாற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432844 @Kandiah57 அண்ணை ... யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு புதிதாக ஒருவர் இன்று வந்திருக்கின்றார். 😂- நாட்டில் உப்பு தட்டுப்பாடு : உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் விளக்கம்!
உப்பு இறக்குமதியில் மேலும் தாமதம்! இறக்குமதி செய்யப்பட்ட உப்பு நாட்டை வந்தடைவதற்கு இன்னும் சில நாட்கள் தாமதம் ஏற்படக்கூடும் என தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவும் பாதகமான வானிலை காரணமாக இத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கப்பல் நேற்று இரவு(22) நாட்டிற்கு வரவிருந்தது. இந்தநிலையில் தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 250 மெற்றிக் தொன் உப்பு மற்றும் தேசிய உப்பு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 2,800 மெற்றிக் தொன் உப்பு என மொத்தம் 3,050 மெற்றிக் தொன் உப்பு நாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது. இருப்பினும், சீரற்ற வானிலை காரணமாக சில நாட்களுக்கு தாமதமாகலாம் எனவும் , அதன் பின்னர் நாட்டிற்கு உப்பு தொடர்ந்து கொண்டுவரப்படும் எனவும் தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1432861- NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!
NPPயின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்! தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இன்று (22) இலங்கைப் பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியினுடைய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். திரைத் துறையில் வடக்கு மற்றும் தென் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் – யுவதிகளை உள்ளீர்த்தல், சினிமா துறை ஊடாக முதலீட்டு வாய்ப்புக்களை ஏற்படுத்தல், குறிப்பாக வட மாகாணத்தில் சினிமாத் துறை ஊடாக புதிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த சந்திப்பில் கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகர், மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், பவானந்தராஜா, ஜெகத் மனோகரன ஆகியோர் பங்கேற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432847- சாகோஸ் தீவுகள் ஒப்பந்தம் இடைநிறுத்தம்!
அநியாயமாக ஒரு நாட்டிற்கு கிடைக்க வேண்டிய சுதந்திரம் மயிரிழையில் தவறிப் போய் விட்டது. கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டவில்லை. - கொழும்பிலுள்ள ஆடம்பர தொடர்மாடி குடியிருப்புக்குள் துப்பாக்கியுடன் சென்ற பெண் கைது
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.