Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இது ஒரு ஓவியம் என்றால்.... நம்ப முடிகின்றதா. 🙂
  2. பாப்பாண்டவர் பிரான்ஸ்சிஸ்சின் இறுதிச் சடங்கு / Pope Francis' funeral at St. Peter's Basilica
  3. ஈரானில் பாரிய வெடிப்புச் சம்பவம்! 500க்கும் மேற்பட்டோர் காயம். தெற்கு ஈரானின் பன்டார் அப்பாஸில்(Bandar Abbas) உள்ள ஷாஹீன் ராஜீ துறைமுகத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச் சம்பவத்தில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரானில் உள்ள ஷாஹித் ராஜீ தெற்கு துறைமுகத்தில் பல கொள்கலன்கள் வெடித்தது இந்த சம்பவம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இந்த துறைமுகம் முக்கியமாக கொள்கலன் போக்குவரத்தை கையாளுவதுடன், எண்ணெய் தாங்கிகள் மற்றும் பிற கனிய இரசாயன வசதிகளை வழங்கும் துறைமுகம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வெடிப்பு சம்பவம் துறைமுகத்தை கடுமையாக சேதப்படுத்தியுள்ளதுடன், வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் வெடிப்புக்கான காரணம் ஆபத்தான பொருட்கள் மற்றும் இரசாயனங்கள் இருக்கலாம் என்று ஈரானிய சுங்க அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் துறைமுகத்தின் உள்ள படகு முனையத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், வெடிப்பால் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429636
  4. நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்! ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து, நடுநிலையான விசாரணைக்குத் தாம் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது பஹல்காமில் நடந்த துயரச் சம்பவம் பழி சுமத்தும் மற்றொரு உதாரணமாகும் எனவும், இவ்வாறான விடயங்களுக்குத் தீர்வு காண வேண்டும் எனவும், எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான, நம்பகமான விசாரணைகளிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்கத் தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜ் முகம்மது ஆசிஃப் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429615
  5. கோசான்... அருமை. சிரித்து வயிறு நோகுது. 😂 🤣 ரூம் போட்டு யோசிப்பீங்களா. 😃
  6. மற்றைய அரசாங்கங்களுக்கும் இவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. காட்சி தான் மாறி இருக்கே தவிர, செய்கைகள் எல்லாம் ஒரே மாதிரித்தான் உள்ளது.
  7. டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை தடுப்புக்காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! டேன் பிரியசாத் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் விசாரணை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் மிரிஹானை விசேட விசாரணை பிரிவினரால் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெலவிடம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார் இதன்போது சந்தேக நபரை தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு பொலிஸார் நீதவானிடம் அனுமதி கோரியிருந்தனர். இந்த நிலையில் டேன் பிரியசாத் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் விசாரணை செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் மிரிஹானை விசேட புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 22 ஆம் திகதி இரவு வெல்லம்பிட்டியவில் உள்ள ‘லக்சந்த செவன’ தொடர்மாடி குடியிருப்பில் வைத்து; டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்து. மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரைசுமார் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். டேன் பிரியசாத் கொலை சம்பவம் தொடர்பாக வெல்லம்பிட்டி பொலிஸார் மற்றும் மேல்மாகாண குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எவ்வாறாயின் இந்த கொலைசம்பவம் தனிப்பட்ட காரணங்கள் நிமித்தம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். https://athavannews.com/2025/1429556
  8. பாப்பரசர் பிரான்சிஸ்ஸின் இறுதி ஆராதனைகள் இன்று! நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனைகள் இன்று (26) நடைபெறவுள்ளன. இலங்கை நேரப்படி இன்று மாலை 1.30 மணியளவில் வத்திக்கான் நகரில் உள்ள புனித பேதுரு சதுக்கத்தில் இறுதி ஆராதனைகள் நடைபெறவுள்ளன. இறுதித் திருப்பலியை கர்தினால் கல்லூரியின் தலைவர் கர்தினால் ஜியோவானி பெட்டிஸ்டா ரே நடத்தவுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உட்பட 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாப்பரசரின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார். இதுதவிர, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோரும் வத்திக்கானுக்கு பயணமாகியுள்ளனர். இந்நிலையில் அரசாங்கம் இன்றைய தினத்தை (26) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. குறித்த அறிக்கையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429551
  9. தந்தை செல்வாவின் 48ஆவது ஆண்டு நினைவு தினம்! இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிறுவுனர் தந்தை சா.ஜே.வே.செல்வநாயகத்தின் 48வது நினைவு நாளும் நினைவுப் பேருரை நிகழ்வும் இன்றையதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழிலுள்ள தந்தை செல்வநாயகம் நினைவு சதுக்கத்தில் இன்று காலை 9.00 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில், தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு, அவரது சமாதியில் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. https://athavannews.com/2025/1429571
  10. கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு – வௌியான முக்கியத் தகவல். கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 5:35 மணியளவில், குறித்த இளைஞர் தனது வீட்டில் இருந்தபோது இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார். முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் வு-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை சுட்டதாக தெரியவந்துள்ளது. காயமடைந்த இளைஞர், வட்டிக்கு பணம் வழங்குவது மற்றும் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர் என தெரிய வந்துள்ளது. இவர் தனது தந்தையுடன் வீட்டில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கிதாரிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்நிலையில் காயமடைந்த இளைஞர் முதலில் மினுவங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429563
  11. இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார்! – ஈரான் அறிவிப்பு. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சயீது அப்பாஸ் அராச்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் ”இந்தியாவும், பாகிஸ்தானும் தமது சகோதர நாடுகள் எனவும், இரு நாடுகளுக்கு இடையேயும் நுாற்றாண்டு பழமையான கலாசாரம் மற்றும் நாகரிக உறவுகள் உள்ளதாகவும் , மற்ற நட்பு நாடுகளை போல அவர்களுக்கும் தாம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த இக்கட்டான நேரத்தில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கு இரு நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்ய ஈரான் தயாராக இருப்பதாகவும்” அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1429580
  12. ரஷ்யாவில் கார்குண்டு வெடிப்பு; இராணுவத் தளபதி உயிரிழப்பு. ரஷ்யாவில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் அந்நாட்டின் இராணுவ துணை தளபதி யாரோஸ்லாவ் மோஸ்காலிக் உயிரிழந்துள்ளார். ரஷ்யா தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள பாலஷிகா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றே நேற்று திடீரென வெடித்துத்துச் சிதறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் காரில் இருந்த ரஷ்யா ஆயுதப் படையின் செயல்பாட்டுத் துறையின் துணைத் தளபதியான யாரோஸ்லாவ் மோஸ்காலிக் உயிரிழந்தார். அவரின் காரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டு மர்ம நபர்களால் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயங்கர சத்தத்துடன் நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பால் அப்பகுதியே புகைமண்டலமாக மாறியதாகவும், அருகில் இருந்த கட்டடங்களின் ஜன்னல்கள் வெடித்துச் சிதறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான தீவிர விசாரணைகளை ரஷ்ய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1429566
  13. பந்தா பரமசிவம், பந்தா காட்டப் போய்… கலியாண வீட்டிலை, அதுகும் சாப்பாட்டு பந்தியிலை… தொங்கட்டானை காட்டிக் கொண்டு நிண்டிருக்கு. 😂 போதாக் குறைக்கு… துபாயிலை ஷேக்கு கூட இப்பிடித்தான் என்று, மொத்த ஷேக்கின்ரை மானத்தையும் வாங்கி போட்டுது. 😁 எனக்கும் நீண்ட நாட்களாக ஷேக்குமார்… ஜட்டி போடுவங்களா, இல்லையா என்ற சந்தேகமும் பந்தா பரமசிவம் மூலம் தீர்ந்தது. 🤣
  14. டுபாய் நைக் ஜட்டி கதை தெரியாது கோசான். வடிவேலுவின்…. டுபாய், விவேகானந்தர் தெருவில் நடந்ததா… 🤣
  15. ஜேர்மனியில்…. நோயாளர் காவு வண்டியின் சேவையும், பணி புரிபவர்களின் வேகமும் மிகுந்த திருப்தியாக உள்ளது. வீதியில்… அவசர ஒலி எழுப்பி செல்லும் போது, மற்றைய வாகன ஒட்டிகள் அதன் முக்கியத்துவம் கருதி உடனேயே இடமும் வலமும் ஒதுங்கி நடு வீதியை அம்புலன்ஸ்சிற்காக ஒதுக்கி விடும் அழகே தனி. வாகன அனுமதிப் பத்திரம் எடுக்கும் போது… அவசர நோயாளர் வண்டி, தீயணைப்பு வண்டியின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுப்பதால்… அனைத்து வாகன ஓட்டிகளும் இதனை நன்கே புரிந்து வைத்துள்ளார்கள்.
  16. கறுப்பு கங்காருவிற்கு வெள்ளை குட்டியும், வெள்ளை கங்காருவிற்கு கறுப்பு குட்டியும் பிறந்திருக்கு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.