Everything posted by தமிழ் சிறி
-
ஏமாற்று வியாபாரம்.
இப்போ மார்க்கெட்ல புதுவிதமான இன்னொரு ஏமாற்று வியாபார யுக்திய தொடங்கி இருக்காங்க மக்களே. அது என்ன வியாபாரம்னா டிஷ்யூ பேப்பர் மேக்கிங் அப்படிங்குற புதிய விதமான வியாபாரம். இதுக்கு முன்னாடி பாக்கு மட்ட பிளேட், பேப்பர் கப்பு தயாரிப்பு, பேப்பர் பிளேட் தயாரிப்பு அப்படின்னு சொல்லி ஒன்னுக்குமே ஆகாத ஒரு இரும்பு சாமான நம்ம தலையில கட்டிக்கிட்டு 10 லட்ச ரூபா வாங்கிக்கிட்டு போயிருவாங்க. மாசம் நீங்க 5 லட்ச ரூபாய் வரைக்கும் பேப்பர் கப்பு தயாரிச்சு நீங்க வெளியே கொடுக்கலாம் அப்படின்னு சொல்லி நம்ம தலையில வச்சு கட்டிருவாங்க. ஆனா நடந்தது என்னன்னா நீங்க பேப்பர் கப், தட்டம் எல்லாம் தயாரிச்சிகிட்டு அதை நீங்களே வச்சிக்க வேண்டியது எவனும் வாங்க இருக்க மாட்டான். ஆனால் இவங்க மிஷின் தலையில் வைத்து கட்டிக்கிட்டு போயிடுவாங்க. மிஷின விக்கிறது வரைக்கும் தேனு மாதிரி பேசுவானுங்க மிஷின் வித்ததுக்கு அப்புறம் அவங்க கிட்ட இருந்து எந்த விதமான ரெஸ்பான்ஸ் இருக்காது. இப்ப புதுசா டிஷ்யூ பேப்பர் மேக்கிங் அப்படின்னு சொல்லி புதுசா இன்னொரு வியாபாரத்தை தொடங்கி இருக்கிறார்கள். நீங்கள் மெஷின், ரா மெட்டீரியல் வாங்குவதற்கு 6 இலட்சம் கொடுத்தீங்கன்னா மாசம் 3 லட்ச ரூபா லாபம் மட்டும் பாக்கலாம்னு. இந்த அளவுக்கு லாபம் பாக்குறத எதுக்கு அவனுக நம்ம தலையில வச்சு கட்டணும் இவனுங்க எல்லாம் நம்மள வாழ வைக்கிறதுக்காக இல்ல, முடிஞ்ச அளவு நம்ம கிட்ட இருந்து பணத்தை பு~டுங்கிட்டு ஓடுறதுக்கு தான் இருக்கிறானுங்க. தயவு செய்து இந்த மாதிரி எந்த மாதிரி வியாபாரம் போய் மாட்டி விடாதீங்க நண்பர்களே. மேலும் யாராவது இந்த மாதிரி பேப்பர் கப் தயாரிப்பு டிஷ்யூ பேப்பர் தயாரிப்பில் ஈடுபட்டு வெற்றிகரமாக இருக்கிறீர்களா அல்லது ஏமாந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா என்று சொன்னால் கொஞ்சம் நன்றாக இருக்கும். கள்ள ஆட்டம்
-
சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
ஆஞ்சநேயருக்கு வடை மாலை. நாமக்கல்.- பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
பிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துகுவிப்பை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு. மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கொலைகள் மற்றும் சொத்துக்குவிப்பு ஆகியவற்றை ஆராய்ந்து விசாரிக்க உடனடியாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்கும் வண்ணம் வலியுறுத்தியுள்ளனர். அறிக்கையில் பின்வரும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. சொத்துக்கள்:- இலங்கையில் உள்ள சொத்துக்கள். 01. வீடு - 01, மட்டக்களப்பு பூம்புகார் என்ற இடத்தில் இந்த வீடு அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 2 கோடி. 02. வீடு - 02, கொழும்பு இராஜகிரிய என்னும் இடத்தில் றோயல் அப்பார்ட்மென்டில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 6.5 கோடி. 03. வீடு - 03, கொழும்பு கறுவாத்தோட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 23 கோடி. 04. வீடு - 04, மட்டக்களப்பு வாவிக்கரை வீதி - 01 என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 12 கோடி. 05. சுற்றுலாவிடுதி - 01, திருகோணமலை உப்புவெளி என்ற இடத்தில் இந்த சுற்றுலாவிடுதி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 5 கோடி. 06. சுற்றுலாவிடுதி - 02, நுவரெலியா, நுவரெலியா நகர் என்ற இடத்தில் இந்த சுற்றுலாவிடுதி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 17 கோடி. 07. 12 ஏக்கர் நிலம், மட்டக்களப்பு பாசிக்குடா என்ற இடத்தில் இந்த 12ஏக்கர் நிலம் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 25 கோடி. 08. 50 ஏக்கர் நிலம், திருகோணமலை, கும்புறுப்பிட்டி என்ற இடத்தில் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 20 கோடி. 09. நிலத்தொகுதி, மட்டக்களப்பு திராய்மடு என்னும் இடத்தில் இந்த நிலத்தொகுதி காணப்படுகிறது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை. 10. 115ஏக்கர் வயற்காணி, மட்டக்களப்பு புளுட்டுமானோடை என்ற இடத்தில் இந்த வயற்காணி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை. 11. 10ஏக்கர் நிலம், மட்டக்களப்பு மாங்கேணி என்ற இடத்தில் இந்த நிலம் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை. 12. ஆழ்கடல் மீன்பிடி இழுவைப்படகுகள் 12, கொழும்பு டிக்கோவிட்ட என்னும் இடத்தில் இந்த இழுவைப்படகுகள் காணப்படுகின்றன. இதன் பெறுமதி: 20 கோடி. வெளிநாட்டு சொத்துக்கள்:- 13. சிங்கப்பூர் Orchard Road இல் அமைந்துள்ள Alfred Tower என்ற இடத்தில் இருக்கும் தொடர்மாடி குடியிருப்பில் வீடு - 01. இதன் பெறுமதி: 7.5 கோடி. 14. நகைக்கடையும் கட்டடமும், சுவிட்சர்லாந்து சூரிச் என்ற இடத்தில் இந்த நகைக்கடையும் கட்டடமும் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 150 கோடி. 15. வெளிநாட்டு வங்கிகளிலுள்ள மொத்த பணத்தொகை 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள். சரி நிகர்- ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த முயற்சிகளை கைவிட அமெரிக்கா திட்டம்?
ரஷ்யா- உக்ரேன் இடையே சமரசம் செய்யும் பணியிலிருந்து விலக அமெரிக்கா முடிவு! ரஷ்யா- உக்ரேன் இடையே சமரசம் செய்யும் பணியிலிருந்து விலக அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”அமெரிக்கா கவனம் செலுத்த வேண்டிய, முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன எனவும், எனவே, எந்த முன்னேற்றமுமின்றி, அமைதிப் பேச்சுவார்த்தையை மாதக்கணக்கில் தாம் தொடரப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் “போர் நிறுத்தம் குறித்து விரைவாக தீர்மானிக்க வேண்டும் எனவும், அது சாத்தியம் என்றால் மட்டுமே, ஜனாதிபதி ட்ரம்ப் அதற்கான மத்தியஸ்த முயற்சிகளை தொடர்வார் எனவும், இல்லாவிட்டால், இன்னும் சில தினங்களில், ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சியை அமெரிக்கா கைவிடும்” எனவும் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். உக்ரேன் – ரஷ்யா இடையே, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரியில் பதவியேற்ற ட்ரம்ப், இரு நாடுகளிடையே போரை நிறுத்த முயற்சியை ஆரம்பித்து வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428846- ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்!
ஆழ்ந்த இரங்கல்கள்.- மலரும் நினைவுகள் ..
- ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்!
👉 https://www.facebook.com/watch?v=1377814256588154&locale=de_DE 👈 👆 ஆசிய இளையோருக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் 18 வயதுக்குட்பட்ட மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டத்தில் இலங்கையின் தருஷி அபிஷேகா தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.- துரை வைகோ Vs மல்லை சத்யா: வைகோ கண்டித்தது ஏன்? ம.தி.மு.க-வில் என்ன நடக்கிறது?
ம.தி.மு.க. பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்.- ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்!
ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டி: 9 ஆவது இடத்தில் இலங்கை. சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை 9 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆசிய தடகள சம்மேளனத்தின் ஏற்பாட்டில், கதீஃப் நகரில் நான்கு நாட்கள் நடைபெற்ற இச் சம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் நேற்றுடன் (18) நிறைவடைந்தன. இதில் இலங்கை ஒரு தங்கப் பதக்கம், மூன்று வெள்ளிப் பதக்கங்கள், நான்கு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 8 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. இதன்படி, போட்டியில் பங்கேற்ற நாடுகளில், குறைந்தபட்சம் ஒரு வெண்கலப் பதக்கமாவது வென்ற 19 நாடுகளில் இலங்கை பதக்கப் பட்டியலில் 9ஆவது இடத்தைப் பெற்றது. இப் போட்டியில் இலங்கை வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை, ஆசிய 18 வயதுக்குட்பட்டோர் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இலங்கை பெற்ற மிக உயர்ந்த பதக்க எண்ணிக்கையாகும். கடந்த 2023ஆம் ஆண்டு இப்போட்டித் தொடர் நடைபெற்றபோது, இலங்கை இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 4 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது. இதேவேளை குறித்த போட்டியில் 19 தங்கப் பதக்கங்கள், 12 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களுடன் சீனா பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ள நிலையில், ஜப்பான் மூன்று தங்கப் பதக்கங்கள், மூன்று வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428839- கிளிநொச்சியில் தந்தை செலுத்திய டிப்பர் வாகன சில்லில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!
கிளிநொச்சியில் தந்தை செலுத்திய டிப்பர் வாகன சில்லில் சிக்கி குழந்தை உயிரிழப்பு! கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்குளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய பெண் குழந்தையொன்று டிப்பர் வாகனத்தின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளது. தந்தை செலுத்திய டிப்பர் வாகனத்தின் முன் சில்லில் சிக்கி இவ்வாறு குழந்தை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1428817- கொழும்பு ஒருகொடவத்தை பகுதியில் மகனால் தாக்கப்பட்டு தந்தை உயிரிழப்பு!
கொழும்பு ஒருகொடவத்தை பகுதியில் மகனால் தாக்கப்பட்டு தந்தை உயிரிழப்பு! மகன் இரும்புக் கம்பியால் தாக்கியதில் தந்தையொருவர் உயிரிழந்த சம்பவம் கொழும்பு கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்டவர், 54 வயதுடைய அவிசாவளை வீதி, ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், மகன் இரும்புக் கம்பியால் தந்தையின் தலையில் தாக்கியுள்ளார் எனவும், இதனால் பலத்த காயமடைந்த தந்தை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த தந்தையின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு தாக்குதலை மேற்கொண்ட 20 வயதான மகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரேண்பாஸ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1428828- ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்!
ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கைக்கு மூன்று பதக்கங்கள்! 18 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியில் நேற்று (18) நடைபெற்ற தடகளப் போட்டியில் தருஷி அபிஷேகா தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 2 நிமிடங்கள் 14.86 வினாடிகளில் போட்டியை முடித்து அவர் தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார். இதுதவிர, நேற்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஷவிந்து அவிஷ்க வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார். 1 நிமிடங்கள் 53.41 வினாடிகளில் தனது பந்தயத்தை முடித்த ஷவிந்து இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார். இதேவேளை, பவன் நெத்ய சம்பத் ஆண்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் (2.03 மீ) வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428825- கருத்து படங்கள்
- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார்? – சரத் வீரசேகர
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி யார்? – சரத் வீரசேகர. “உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை ஜனாதிபதி உரிய ஆதாரங்களுடன் வெளிப்படுத்தாவிடின் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும்” என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதி வழங்கிய போலி வாக்குறுதியாகவே இது கருதப்படும் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் பிரதான சூத்திரதாரியை ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னதாக வெளிப்படுத்துவதாக கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் வைத்து ஜனாதிபதி வாக்குறுதியளித்திருந்தார் எனவும், தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை ஜனாதிபதி வெளிப்படுத்தாவிடின் வீதிகளில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என கொழும்பு பேராயர் தெரிவித்திருந்தார் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மேலும் இந்த அரசாங்கத்தினை ஆட்சியில் அமர்த்துவதற்கு கொழும்பு பேராயர் குழுவினர் பாரிய ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர் எனவும் எனவே தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை அறிந்து கொள்ள அனைவரும் ஆவலாக உள்ளனர் எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி வாக்குறுதியளித்தவாறு உரிய ஆதாரங்களுடன் உண்மையான சூத்திரதாரி அடையாளப்படுத்தப்படுவாரா இல்லையா என்பது தெரியவில்லை எனவும், சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி வாக்குறுதியை நிறைவேற்றாவிடின் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கும் செயலாகும் எனவும், அத்துடன் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதி செய்த செயலாகவே கருதப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1428809- ஸ்ரீ தலதா வழிபாடு; ஆரம்ப நிகழ்வுக்காக இராஜதந்திரிகள் புகையிரதத்தில் கண்டிக்குப் பயணம்!
ஸ்ரீ தலதா வழிபாடு; ஆரம்ப நிகழ்வுக்காக இராஜதந்திரிகள் புகையிரதத்தில் கண்டிக்குப் பயணம்! 16 வருடங்களுக்குப் பின்னர் நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று (18) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா, நேபாளம், நெதர்லாந்து, இந்தியா, மியன்மார், பலஸ்தீன், பிரான்ஸ், நியூசிலாந்து, கியூபா, எகிப்து, ஜப்பான், பிரித்தானியா, தாய்லாந்து, கனடா மற்றும் கொரியா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழு, இன்று காலை 7.00 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து கண்டிக்கு புறப்பட்ட புகையிரதத்தின் சிறப்பு கண்காணிப்புப் பெட்டியில் பயணித்தது. இலங்கை மீண்டும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்து வருவதுடன், இதுவரை நாட்டைச் சூழ்ந்திருந்த அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு, நாட்டிற்குள் சகவாழ்வு நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற செய்தியை நட்பு நாடுகளுக்கு தெரிவிக்கவும், அந்தப் பயணத்திற்கு அவர்கள் அனைவரின் ஆதரவையும் பெறம் நோக்கத்துடனும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்டியை நோக்கிப் பயணித்த இக்குழு, முதலில் மகாவலி ரீச் ஹோட்டலை சென்றடைந்ததுடன், அங்கு ஹெல பாரம்பரியத்திற்கு ஏற்ப அவர்களுக்காக சிறப்பு சிங்கள-தமிழ் புத்தாண்டு விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு இந்தக் குழுவுடன் மற்றொரு இராஜதந்திரிகள் குழுவும் இணைய திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் 44 பேர் கொண்ட இந்தக் குழு “சிறி தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க தலதா மாளிகைக்குச் செல்லவுள்ளதோடு, அதன் பின்னர் அந்தக் குழு அதே புகையிரதத்தில் மீண்டும் கொழும்புக்கு நோக்கித் திரும்பும். ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில், மல்வத்து, அஸ்கிரி தேரர்களின் அனுசாசனையுடன் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டுதலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்ட “சிறி தலதா வழிபாடு” இன்று முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும். ஆரம்ப நாளான இன்று (18) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், பக்தர்களுக்கு “தலதா” புனித தந்த தாதுவை வழிபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், நாளை (19) முதல் தினசரி பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும். https://athavannews.com/2025/1428771- ஏமன் எண்ணெய் முனையம் மீது அமெரிக்கா தாக்குதல்; 58 பேர் உயிரிழப்பு!
ஏமன் எண்ணெய் முனையம் மீது அமெரிக்கா தாக்குதல்; 58 பேர் உயிரிழப்பு! ஹவுத்தி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனின் செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு முக்கிய எண்ணெய் முனையம் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 126 பேர் காயமடைந்ததாகவும் ஹவுத்திகளால் நடத்தப்படும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி பயங்கரவாதிகளுக்கு எரிபொருள் வழங்கும் இந்த மூலத்தை அகற்றவும், அவர்களின் சட்டவிரோத வருவாயை இழக்கச் செய்யவும் இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது. எனினும், வடமேற்கு ஏமனை ஆளும் ஹவுத்தி தலைமையிலான அரசாங்கம், அந்த முனையம் ஒரு பொதுமக்களை கொண்ட பகுதி என்றும், அந்தத் தாக்குதல் “முழுமையான போர்க்குற்றம்” என்றும் கூறியது. செங்கடல் கப்பல் போக்குவரத்து மற்றும் காசா போருடன் தொடர்புடைய இஸ்ரேல் மீதான ஹவுத்தி தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, கடந்த மாதம் அமெரிக்கப் படைகள் தங்கள் குண்டுவீச்சு தாக்குதல்களை தீவிரப்படுத்துமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார். அன்றிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மிகவும் மோசமான தாக்குதல் சம்பவங்களில் ஒன்றாக இது அமைந்தது. https://athavannews.com/2025/1428787- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- அதிக வயதான ஆமைக்கும் தலையில் எண்ணெய் பூசும் நிகழ்வு
- இரசித்த.... புகைப்படங்கள்.
- பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
பிள்ளையானின் 588 கோடி மதிப்புள்ள சொத்துகுவிப்பை விசாரணை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு. மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கொலைகள் மற்றும் சொத்துக்குவிப்பு ஆகியவற்றை ஆராய்ந்து விசாரிக்க உடனடியாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்கும் வண்ணம் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம்.com- பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளார்
பிள்ளையானின் ஓட்டுநர் பிள்ளையானும் அதிரடியாக கைது. பிள்ளையானின் ஓட்டுநர் பெயரும்... பிள்ளையான் என்பது குறிப்பிடத்தக்கது. 😂- அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்ட உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்ட உக்ரேனின் கனிம ஒப்பந்தம்! உக்ரேனில் கனிம வளங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஆரம்ப படியாக, கெய்வ் மற்றும் வொஷிங்டன் வியாழக்கிழமை (17) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக உக்ரேன் தெரிவித்துள்ளது. இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும். இயற்கை வளங்கள் தொடர்பான ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு நாடுகளும் கடந்த பெப்ரவரியில் தயாராக இருந்தபோதிலும், ட்ரம்பிற்கும் உக்ரேனிய தலைவர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான ஓவல் அலுவலக சந்திப்பு குழப்பமாக மாறியதால் அது தாமதமானது. இந்த நிலையில் குறித்த ஒப்பந்தம் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள உக்ரேனின் முதல் துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்வைரிடென்கோ, எங்கள் அமெரிக்க கூட்டாளிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்திடுவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வியாழக்கிழமை கைச்சாத்திடப்பட்ட உள்நோக்க ஒப்பந்தம் ஒரு பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தமாகும். இது உக்ரேனின் மறுகட்டமைப்புக்கான முதலீட்டு நிதியை அமைப்பதற்கும் வழி வகுக்கிறது – என்றார். 2022 இல் உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பை நடத்திய ரஷ்யாவுடனான போரில் உக்ரேனுக்கு அமெரிக்க ஆதரவு தேவை என்பதை அங்கீகரித்த பின்னர் இந்த ஒப்பந்தம் வந்துள்ளது. https://athavannews.com/2025/1428765- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை கொண்டாடும் நிலாமதி அக்காவிற்கு, உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ❣️ நோய் நொடியின்றி வாழ்க வளமுடன். 💐- அதிக வயதான ஆமைக்கும் தலையில் எண்ணெய் பூசும் நிகழ்வு
உங்கள் ஆயுளில்... 40 வருடங்கள் நல்லெண்ணெய் வைத்து இருக்கின்றீர்கள் போலுள்ளது. நல்லெண்ணெய் வைத்தால் தலை முடி... பொசு பொசு என்றும், நரை இல்லாமல் கரு, கரு என்றும், சொட்டை விழாமல் அடர்த்தியாக இப்ப இருக்க வேணுமே. இப்போ உங்கள் தலைமுடியின் நிலைமையை அறிய ஆவல். பொய் சொல்லாமல்... நேர்மையான பதிலை எதிர் பார்க்கின்றேன். 😂 - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.