Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்! வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சமூக ஆர்வலரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினருமான டான் பிரியசாத் (Dan Priyasad) உயிரிழந்துள்ளார். வெல்லம்பிட்டி, சாலமுல்ல பகுதியில் அமைந்துள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் நேற்று (22) இரவு 9:10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 39 வயதான டான் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார். அவரது தோள்பட்டையில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுகளும், மார்பில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுகளும் பாய்ந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் மற்றொருவர் லேசான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1429188
  2. அடுத்த 4 மாதங்களுக்கு போதுமான இன்சுலின் இருப்பு உள்ளது! அடுத்த நான்கு மாதங்களுக்கு தேவையான இன்சுலின் இருப்பு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இதன்போது இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நாட்டில் தேவையான அளவு இன்சுலின் இருப்பு உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், மருந்து தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு தேவையான மருந்து இருப்பை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் சில மருந்துகளுக்கு அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், விநியோகஸ்தர்களின் பலவீனங்கள் இதற்கு ஒரு காரணமாக இருந்ததாகவும் அமைச்சர் கூறினார். இதை தவிர்க்க, பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429173
  3. ஜம்மு காஷ்மீரில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல்; 26 பேர் மரணம்! ஜம்மு காஷ்மீரில் அண்மையில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாக பஹல்காமில் செவ்வாய்க்கிழமை (22) தீவிரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் இந்திய கடற்படையைச் சேர்ந்த ஒரு அதிகாரியும், உளவுத்துறைப் பணியகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரியும் உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்களை வெளியேற்றுவதற்காக இராணுவ ஹெலிகொப்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. ஏனெனில் அந்தப் பகுதிக்கு கால்நடையாகவோ அல்லது குதிரையில் சென்றோ மட்டுமே செல்ல முடியும். தாக்குதலின் பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாலை ஸ்ரீநகருக்கு விஜயம் மேற்கொண்டார். அங்கு ஜம்மு-காஷ்மீர் காவல்துறை பணிப்பாளர் ஜெனரல் நளின் பிரபாத் அவருக்கு விளக்கம் அளித்தார். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி – தனது இரண்டு நாள் சவுதி அரேபியா பயணத்தை முடித்துக்கொண்டு செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவுக்கு திரும்பினார். அவருடன் பேசி தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிடுமாறு கேட்டுக் கொண்டார். பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில், ஒரு மலையின் உச்சியில் உள்ள புல்வெளியில் துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டன. தீவிரவாதிகள் காடுகளிலிருந்து வெளியேறி கண்மூடித்தனமாக சுடத் தொடங்கியதாக சாட்சியங்கள் தெரிவித்தன. துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் வெளியான காட்சிகளில் பலர் அசையாமல் தரையில் கிடப்பதையும், பல பெண்கள் உதவிக்காக மன்றாடுவதையும் வெளிக்காட்டியுள்ளது. பிரதமர் மோடி சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்து கொண்டிருந்த நேரத்திலும், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த நேரத்திலும் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. இன்று அதிகாலை டெல்லி திரும்பிய பிரதமர், சவுதி அரேபியா நடத்திய அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் கலந்து கொள்ளவில்லை. அவர் முதலில் புதன்கிழமை (23) இரவு இந்தியாவுக்குப் புறப்படுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தார், ஆனால் தாக்குதலுக்குப் பின்னர் தனது பயணத்தை முடித்துக்கொண்டார். இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்த அவர், “பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் உறுதி அசைக்க முடியாதது, அது இன்னும் வலுவடையும்” என்றார். “அவர்களின் தீய திட்டம் ஒருபோதும் வெற்றிபெறாது,” என்று அவர் மேலும் கூறினார். “பேரழிவு தரும் பயங்கரவாத தாக்குதலை” திரு. வான்ஸ் கண்டனம் செய்தார். “கடந்த சில நாட்களாக, இந்த நாட்டின் அழகையும் அதன் மக்களையும் நாம் கண்டு வியந்து போயுள்ளோம். “ஆழ்ந்த தொந்தரவான” காஷ்மீர் தாக்குதலுக்குப் பின்னர், அமெரிக்கா இந்தியாவுடன் “வலுவாக நிற்கிறது” என்றும் அவர் கூறினார். இதேவேளை,பஹல்காம் சுற்றுலாப் பயணிகளின் தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த பயங்கரவாதியின் பிரத்யேக முதல் படம் வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் உள்ளூர் கிளையான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் தற்போது முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். https://athavannews.com/2025/1429191
  4. தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM. உலகின் முதல் தங்க ATM இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த ATM நிறுவனமானது ஷாங்காய் வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை, நாணயத்தை விற்று பணமாக்க பலரும் விரும்புகின்றனர். ஆனால், நஷ்டமின்றி தங்கத்துக்கு ஈடான முழுப்பணமும் எங்கும் கிடைக்காது என்பதால். தங்கத்தை விற்க பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இதனைத் தவிர்க்கும் வகையில் சீனாவின் ஷாங்காய் நகரில், ‘சைனா கோல்ட்’ என்ற நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தங்க ATM சீன மக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த இயந்திரத்தில், நகையை வைத்தால், அதை எடை போட்டு, எவ்வளவு என்பதை திரையில் காட்டும். அதை ஏற்று ஒப்புதல் அளித்தால், தங்கம் உருக்கப்பட்டு, அதற்குரிய பணம், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும். சீன கிங்ஹுட் குழுமம் பராமரிக்கும் இந்த தங்க ATM தங்கத்தின் தரத்தை பரிசோதித்து, அதற்கு ஈடான பணத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்கும். மேலும் தினசரி தங்கத்தின் விலையை ATM, திரையில் அறிவிப்பதாகவும், தங்கத்தை விற்றால் எங்கு கூடுதல் பணம் கிடைக்கும் என்று மக்கள் அலையாமல், அன்றைய விலையில் தங்கத்தை இந்த ATM இமில் வைத்து, தங்கள் வங்கிக் கணக்கில் உடனடியாக பணத்தைப் பெறலாம் என்றும் சைனா கோல்ட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குறித்த ATM இல் தங்கள் தங்கத்தை விற்று பணம்பெற நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429168
  5. அவர்களில் நொட்டினால்…. நாட்டில் குழப்பம் ஏற்பட்டு, அரசாங்கம் கவிழும் என்று அனுரவிற்கு தெரியும். அதனால்… ஐந்து வருடங்களுக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டே இருப்பார்கள். வழக்கம் போல் மக்கள் தான் ஏமாளிகள்.
  6. துருக்கி, ரஸ்சியன், உக்ரைன் காரியள் என்றாலும் ஓகேயா… ஓம் எண்டால், டக்கெண்டு சொல்லுங்கோ. 2’ம் கலியாணத்தை ஜாம்… ஜாம்… என்று நடத்தி விடலாம். 😂 ஆனால் ஒண்டு… சீதனத்தை, நீங்கள்தான் கொடுக்க வேண்டி வரும். 🤣
  7. மறைந்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் பூதவுடல் பிரார்த்தனைகளுடன் பார்வைக்காக வத்திக்கானில் வைக்கப்பட்டது. Vaanam.lk
  8. கந்தையா அண்ணை உங்கள் கதையைப் போல் உறவினர்களால் பலர் ஏமாற்றப்பட்டு மனம் வெறுத்த நிலையில் உள்ளார்கள். என்ன செய்வது... மற்றவனின் காணிக்கு ஆசைப்படுவது எமது இனத்தில் மிக அதிகம் போலுள்ளது. எல்லைச் சண்டைக்காக சொத்தையே அழித்தவர்கள் பலர் எம்மில் உள்ளார்கள். 😢
  9. இந்தப் பறவையை பார்க்க.. யார் போல் உள்ளது. நான் பார்த்த உடனே.. ட்ரம்ப் என்று நினைத்து விட்டேன். 😂
  10. நானும் அநேகமான வீட்டு வேலைகளை விரும்பி செய்வேன். மனைவிக்கு ஒத்தாசையாக இருப்பது எமது கடமை. ஒரு வீட்டில், மூன்று சமையலா தலை சுத்துது. நீங்கள் சைவத்துக்கு மாறினால் அல்லது மனைவிக்கு... அசைவத்தை பழக்கினால் இரண்டு சமையல் ஆகி விடுமே. மகன் ஏன்... தனிய சமைக்கின்றார். ஜேர்மன் சமையலா.
  11. அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை! அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கு, மிகக் கடுமையான நெருக்கடி கொடுக்கப் போவதாக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் பரஸ்பரம் என்ற பெயரில் அனைத்து வர்த்தக கூட்டாளிகள் மீதும் தான்தோன்றித்தனமாக வரிகளை விதித்து, ‘பரஸ்பர வரி’ பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாகவும் சீனா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், எளியோரை வலிமையானவர்கள் வேட்டையாடினால், அனைத்து நாடுகளுமே பாதிக்கப்படும் எனவும், அமெரிக்கா உடனான வர்த்தக மோதலை தீர்க்க முயற்சிக்கும் அனைத்து தரப்பினரையும் சீனா மதிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சர்வதேச அளவில் நீதி, நியாயத்தை நிலைநாட்ட, அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது எனவும், அதே நேரத்தில், சீனாவுக்கு தன்னுடைய சட்டப்பூர்வமான உரிமை மற்றும் நலனை பாதுகாக்கும் திறனும் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார், மேலும் சீனாவின் நலன்களை பலி கொடுத்து, அமெரிக்காவும்,அதன் கூட்டாளி நாடுகளும் வர்த்தக ஒப்பந்தம் செய்வதை மிகக் கடுமையாக எதிர்ப்பதாகவும், அது போன்ற சூழல் ஏற்பட்டால், அதற்கேற்ற எதிர் நடவடிக்கைகளை சீனா உறுதியாக எடுக்கும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. அத்துடன் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் நாடுகளுக்கு சீனா பதிலடி கொடுக்கும் எனவும் சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429114
  12. மற்றைய நாடுகளில் எப்படியோ... ஸ்ரீலங்காவில் சிங்கம், வீட்டோடு மாப்பிள்ளைதான். 😂
  13. மனைவிக்கு உழைத்து கொடுக்கும் அவசியம் இல்லை என்றால்... நீங்களும் சமையல் செய்து, சீலை தோய்த்து, விட்டு வேலைகள் செய்து, குழந்தைக்கு "பம்பஸ்" மாத்தி, குளிக்க வார்க்கின்ற வேலைகளையும் நீங்கள் செய்யத் தயாராக இருக்க வேண்டும். டீல்... ஓகேயா. 😂
  14. குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு! குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நாட்டில் இரண்டாம் கட்டமாக மீண்டும், குரங்குகள் உள்ளிட்ட விவசாய நிலங்களுக்கு பாதிப்பினை ஏற்டுத்தக் கூடிய வனவிலங்குகள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன தெரிவித்துள்ளார். விலங்குகள் கணக்கெடுப்பு தொடர்பாக அமைச்சின் குழுவொன்று நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் கட்ட கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் எதிர்வரும் நாட்களில் இக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் முதல் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் ஊடாக தீர்மானங்களை எடுக்காது இரண்டாம் கட்ட கணக்கெடுப்பினையும் மேற்கொண்டு தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரட்ன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429115
  15. “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டம் விடுத்துள்ள வேண்டுகோள்! புனித தலதா மாளிகைக்கு வழிபாட்டிற்காக வரும் பக்தர்கள், பொலிதீன் உள்ளிட்ட உக்காத பொருட்களை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும், தலதா மாளிகையைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலின் தூய்மையைப் பராமரிப்பதில் அதிகபட்ச கவனம் செலுத்துமாறும், குப்பைகூழங்களை உரிய இடங்களில் மாத்திரம் கொட்டுவது தொடர்பில் கூட்டாக தலையீடு செய்து பிரஜைகள் என்ற வகையில் தமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என “கிளீன் ஸ்ரீ லங்கா ” திட்டம் நினைவுகூர்ந்துள்ளது. நாட்டில் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறைசார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் சமூகத்தை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் நோக்கத்துடன் அரசாங்கத்தின் பிரதான திட்டமாக “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் குப்பைகூழங்கள் அற்ற சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கும், குப்பைகளை முறையாக அகற்றும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த திட்டத்தின் கீழ் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ தலதா மாளிகை கண்காட்சியுடன் இணைந்து, ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தை மையமாகக் கொண்டு “கிளீன் ஸ்ரீ லங்கா” திட்டத்தின் கீழ் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1429143
  16. உள்ளுராட்சி தேர்தல் முடிந்த பின்... இந்தச் சோதனைச் சாவடிகள் மீண்டும் முளைக்கும். இப்பிடி எத்தினை சித்து விளையாட்டுக்களை பார்த்து விட்டோம். 😂 நமக்கே... விபூதி அடிக்கிறாங்கள். 🤣
  17. பரிசுத்த பாப்பரசருக்கு வவுனியாவில் அஞ்சலி! பாப்பரசர் போப்பிரான்சிஸ் அவர்களிற்கு வவுனியா தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் போப்பிரான்ஸ்சிஸ் வத்திகானில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலிநிகழ்கள் இடம்பெற்றுவருகிறது.அந்தவகையில் வவுனியா தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்கள் தொடர்போராட்டம் மேற்கொண்டுவரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அன்னாரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது. https://athavannews.com/2025/1429146
  18. போப்பின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை! போப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல் 26 சனிக்கிழமை அந் நாட்டு நேரப்படி காலை 10:00 மணிக்கு (BST 09:00) நடைபெறும் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் கலந்துகொள்ளும் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கைத் திட்டமிடுவதற்காக செவ்வாயன்று (22) கார்டினல்கள் வத்திக்கானில் கூடினர். இதன்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் நடைபெறும் ஒரு மாநாட்டிற்கு முன்னதாக இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதனிடையே, இன்று முதல் இறுதி மரியாதை செலுத்தத் தொடங்க அனுமதிக்கப்படும் வகையில் அவரது பூதவுடல் தாங்கிய சவப்பெட்டி செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவிற்கு கொண்டு வரப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும், முதல் பெண்மணி மெலனியா ட்ரம்பும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1429153
  19. அடுத்த போப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் கார்டினல் மெல்கம் ரஞ்சித்! போப் பிரான்சிஸின் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது திடீர் மறைவு, வத்திக்கானின் அடுத்த பிரதிநிதி யார் என்பது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், திங்கட்கிழமை (21) காலமான போப் பிரான்சிஸுக்குப் பின்னர், இலங்கையின் கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித்தை அடுத்த போப்பாக தேர்வு செய்ய பல சர்வதேச ஊடகங்கள் பெயரிட்டுள்ளன. சாத்தியமான வாரிசுகளின் தொகுப்பில், வொஷிங்டன் எக்ஸாமினர், பிலிப்பைன்ஸின் கார்டினல் லூயிஸ் டேகிள், பிரான்சின் கார்டினல் ஜீன்-மார்க் அவெலின் மற்றும் இத்தாலியின் கார்டினல் பியட்ரோ பரோலின் போன்ற பிற முக்கிய நபர்களுடன் கார்டினல் மெல்கம் ரஞ்சித்தும் பெயரிடப்பட்டுள்ளார். கார்டினல் மெல்கம் ரஞ்சித்தின் பாரம்பரியவாத நிலைப்பாட்டை, குறிப்பாக லத்தீன் வழிபாட்டு முறைக்கு அவர் அளித்த ஆதரவு மற்றும் ஒரே பாலின திருமணத்திற்கு எதிர்ப்பு ஆகியவற்றை வொஷிங்டன் டைம்ஸ் எடுத்துக்காட்டி, கார்டினல்கள் கல்லூரிக்குள் மிகவும் பழமைவாத குரல்களில் அவரை நிலைநிறுத்தியது. எவ்வாறெனினும், அடுத்த போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டிற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. https://athavannews.com/2025/1429092
  20. அடுத்த போப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் கார்டினல் மெல்கம் ரஞ்சித்! போப் பிரான்சிஸின் மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது திடீர் மறைவு, வத்திக்கானின் அடுத்த பிரதிநிதி யார் என்பது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில், திங்கட்கிழமை (21) காலமான போப் பிரான்சிஸுக்குப் பின்னர், இலங்கையின் கொழும்பு பேராயர் கார்டினல் மால்கம் ரஞ்சித்தை அடுத்த போப்பாக தேர்வு செய்ய பல சர்வதேச ஊடகங்கள் பெயரிட்டுள்ளன. சாத்தியமான வாரிசுகளின் தொகுப்பில், வொஷிங்டன் எக்ஸாமினர், பிலிப்பைன்ஸின் கார்டினல் லூயிஸ் டேகிள், பிரான்சின் கார்டினல் ஜீன்-மார்க் அவெலின் மற்றும் இத்தாலியின் கார்டினல் பியட்ரோ பரோலின் போன்ற பிற முக்கிய நபர்களுடன் கார்டினல் மெல்கம் ரஞ்சித்தும் பெயரிடப்பட்டுள்ளார். கார்டினல் மெல்கம் ரஞ்சித்தின் பாரம்பரியவாத நிலைப்பாட்டை, குறிப்பாக லத்தீன் வழிபாட்டு முறைக்கு அவர் அளித்த ஆதரவு மற்றும் ஒரே பாலின திருமணத்திற்கு எதிர்ப்பு ஆகியவற்றை வொஷிங்டன் டைம்ஸ் எடுத்துக்காட்டி, கார்டினல்கள் கல்லூரிக்குள் மிகவும் பழமைவாத குரல்களில் அவரை நிலைநிறுத்தியது. எவ்வாறெனினும், அடுத்த போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான மாநாட்டிற்கான திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. https://athavannews.com/2025/1429092
  21. கெஹெலியவுக்கு எதிரான வழக்கு – சட்டமா அதிபரின் கோரிக்கை! தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒன்றை அமைக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். தலைமை நீதிபதியிடம் எழுத்துப்பூர்வ கடிதம் மூலம் சட்டமா அதிபர் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல 07 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு 2024 செப்டெம்பரில் பிணை வழங்கப்பட்டது. இரண்டு மூத்த அரச அதிகாரிகளின் உதவியுடன் போலி ஆவணங்களை உருவாக்கி 22,500 தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசி குப்பிகளை ஒரு மருந்து நிறுவனம் இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிஐடி விசாரணையைத் தொடங்கிய பின்னர், அவர் பல சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், மேற்படி தரமற்ற மருந்தை இறக்குமதி செய்ததன் மூலம் ரூ.130 மில்லியன் நிதி மோசடி நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக கெஹெலிய ரம்புக்வெல்ல அண்மையில் (ஏப்ரல் 09) குற்றப் புலனாய்வுப் பிரிவில் (சிஐடி) முன்னிலையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429124
  22. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு! முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 25 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக இந்த அழைப்பானை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் 05 ஆம் திகதி வரை சாமர சம்பத் தசநாயக்கவை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் தசநாயக்க முன்னிலையான போது அவர் 03 குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு அவற்றில் முதல் இரண்டு வழக்குகளுக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும் மற்றுமொரு வழக்கிற்காக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1429060
  23. அமெரிக்க துணை ஜனாதிபதியின் குழந்தைகளுக்கு மயில் இறகுகளைப் பரிசளித்த பிரதமர் மோடி! அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் (JD Vance ) 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றைய தினம் தனது குடும்பத்தினருடன் டெல்லிக்கு வருகை தந்தார். இதன்போது அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸுக்கு மத்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். இச் சந்திப்பின்போது ஜே.டி.வான்ஸ் அவரது மனைவியான இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகள் இவான், விவேக், மிராபெல் ஆகியோரும் உடன் இருந்தனர். இதன்போது பிரதமர் மோடியும், ஜே.டி. வான்சும் கலந்துரையாடிக்கொண்டிருந்த வேளை ஜே.டி.வான்சின் குழந்தைகள் பிரதமர் மோடி அருகே சென்று அவரின் மடியில் அமர்ந்துகொண்டனர். இதையடுத்து குழந்தைகளுக்கு பிரதமர் மோடி மயில் இறகுகளை பரிசாக அளித்துள்ள நிலையில் அதை அக் குழந்தைகளும் பெற்றுக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429095

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.