Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இன்று பிறந்தநாளை கொண்டாடும் நிலாமதி அக்காவிற்கு, உளம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ❣️ நோய் நொடியின்றி வாழ்க வளமுடன். 💐
  2. உங்கள் ஆயுளில்... 40 வருடங்கள் நல்லெண்ணெய் வைத்து இருக்கின்றீர்கள் போலுள்ளது. நல்லெண்ணெய் வைத்தால் தலை முடி... பொசு பொசு என்றும், நரை இல்லாமல் கரு, கரு என்றும், சொட்டை விழாமல் அடர்த்தியாக இப்ப இருக்க வேணுமே. இப்போ உங்கள் தலைமுடியின் நிலைமையை அறிய ஆவல். பொய் சொல்லாமல்... நேர்மையான பதிலை எதிர் பார்க்கின்றேன். 😂
  3. தாலிபான் மீதான தடையை நீக்கிய ரஷ்யா! இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் பயங்கரவாத அமைப்பாக பெயரிடப்பட்ட ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான் மீதான தடையை ரஷ்யாவின் உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (17) நீக்கியது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து 2021 ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ரஷ்யாவில் ஒரு பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. நாட்டின் மீது அதன் கட்டுப்பாடு இருந்தபோதிலும், மனித உரிமைகள், நிர்வாகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சர்வதேச உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதால், தாலிபான் தலைமையிலான நிர்வாகம் எந்த நாடும் முறையாக அங்கீகரிக்கப்படவில்லை. இந்த நிலையில், ரஷ்ய நீதிமன்றத்தின் மேற்படி தீர்ப்பு, 2003 ஆம் ஆண்டு மொஸ்கோவின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்ட தலிபான்களுக்கு ஒரு இராஜதந்திர வெற்றியாகும். முன்னாள் சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் 10 ஆண்டுகாலப் போரை நடத்தியது, இது 1989 இல் மொஸ்கோ தனது படைகளைத் திரும்பப் பெற்றதுடன் முடிந்தது. எனினும், ஆப்கானிஸ்தானை நிலைநிறுத்த உதவுவதற்காக தாலிபான்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை ரஷ்ய அதிகாரிகள் அண்மையில் வலியுறுத்தி வருகின்றனர். அண்மைய ஆண்டுகளில், மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகியவை தாலிபான்களை பயங்கரவாதக் குழுக்களின் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளன. 2021 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு திரும்பியபோது,1996 முதல் 2001 வரையிலான முதல் ஆட்சிக் காலத்தை விட மிகவும் மிதமான ஆட்சியை வழங்குவதாக தலிபான்கள் உறுதியளித்தனர். ஆனால், 2021 கையகப்படுத்தலுக்குப் பின்னர் பெண்கள் மீது கட்டுப்பாடுகளை அமல்படுத்தத் தொடங்கினர். பூங்காக்கள், குளியலறைகள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொது இடங்களில் பெண்கள் தடைசெய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், பெண்கள் ஆறாம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் தாலிபான்களை உலக அரங்கில் தனிமைப்படுத்தியுள்ளன. இருப்பினும் அவர்களின் அரசாங்கம் சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428756
  4. சிங்களவர்களையும் விட்டு வைக்காத பிள்ளையான். ஊடகவியலாளர் Anuruddha Lokuhapuarachchi பதிவின் தமிழாக்கம். இராச்சிய எல்லையின் அவதாரம்: பிள்ளையான் என்பவரின் கடுமையான மனித உரிமை மீறல் மற்றும் தண்டனை வழங்கப்படாத அரசியலின் தாக்கம். இலங்கையின் நீடித்ததும் வலியுறுத்தப்படுவதுமான போருக்குப் பிறகான கணக்கீட்டில், தீர்க்கப்படாத இனமுரண்பாடு மற்றும் மறைக்கப்பட்ட பாதிக்கப்பட்டோரின் நிலை எமது மனச்சாட்சியிடம் கேள்வி கேட்டு கொண்டே நிழலாகவே தொடர்கிறது. பதில் தெரிந்தும் தெரியபடுத்தமுடியாமல் தவிக்கும் இரு முக்கிய படுகொலை சம்பவங்கள் 1)வெலிகந்தப் படுகொலை (மே 2006) 2)மற்றும் கெபித்திகொல்லாவ கிளைமோர் தாக்குதல் (ஜூன் 2006) சிங்கள சிவில் சமூகத்தின் மீது ஆழ்ந்த வடுக்களை ஏற்படுத்தின நிகழ்வுகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் போரிற்கான ஆதரவினை மக்களிடம் திரட்டும் முகமாக இந்த கொடுர தாக்குதலை LTTE இனரே மேற்கொண்டதாக அவசர அவசரமாக குற்றம்சாட்டி இருந்தார். இந்த தாக்குதலின் மூலம் வடபகுதி போரின் அவசியத்தை சிங்கள மக்கள் மத்தியில் திணிக்க முற்பட்டதுடன் யுத்தத்தை ஆதரிக்குமாறு மக்களை தூண்டவும் அதன் அவசியத்தை உணர்த்தவும் இந்த இரண்டு கொடூரத் தாக்குதல்களும் தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டனர் என விரைவாக குற்றம் சுமத்தியிருந்தார். ஆனால், இரு தசாப்தங்களுக்கு பின்னரும், நீரில் அழுத்தப்பட்டிருந்த ரப்பர் பந்தாக மேலெழுந்து இதன் உண்மை தன்மை என்ன என்ற கடினமான கேள்விகளை கேட்டு கொண்டே இருக்கின்றது. இந்த படுகொலைகளை உண்மையில் நடத்தியவர்கள் யார்? உண்மையான குற்றவாளிகளின் பின்னணி ஆராயப்பட்டதா? கண்டுபிடிக்கப்பட்டனரா?தண்டிக்க பட்டனரா? அல்லது வழி நடத்தியவர்களால் பாதுகாக்கப்பட்டு கொண்டிருக்கின்றனரா? ஆனாலும் தொடர்ச்சியாக இந்த கொடூர செயல்களின் பிரதான ஒருங்கமைப்பாளர் பெயர் அப்போதும் இப்போதும் பிள்ளையான் என எல்லோருக்கும் பரிச்சயமான சிவனேசதுரை சந்திரகாந்தன். 2006 மே 29 அன்று, பொலன்னறுவை அருகிலுள்ள வெலிகந்த பகுதியில் அரசாங்க உதவியுடன் கால்வாய் தோண்டிக் கொண்டிருந்த 13 சிங்கள விவசாயிகள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அனைவரினது உடல்களது கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன் கூரிய ஆயுதத்தால் கருத்து அறுக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுருந்தனர். இந்த துயர காட்சியினை நேரடியாக கண்டவன் நான். இந்த சம்பவத்தை மேற்கொண்டது LTTE இனரே என உடனடியாக அறிவித்திருந்தது மகிந்த தலமையிலான அரசு. ஆனால் LTTE ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர், TamilNet வாயிலாக அந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தார். சுமார் இரண்டு வாரங்களுக்குப் பின்னர், ஜூன் 15ஆம் தேதி, கெபித்திகொல்லாவ பகுதியில், பொதுமக்கள் பயணித்த ஒரு பேருந்து கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தது. அத்தாக்குதலில் சிறுவர் மற்றும் முதியோர் உள்ளடங்கலாக சுமார் 60க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த இரு தாக்குதல்களும் இராணுவ மற்றும் பராமிலிட்டரி (கருணா/பிள்றையான் ஒட்டு குழு) கட்டுப்பாட்டில் உள்ள எல்லை பகுதிகளாகவும் காணப்பட்ட அதே நேரம் LTTE கட்டுப்பாட்டு பகுதியையும் அண்மித்தே காணப்பட்ட பகுதிகளாகும். மகிந்த அரசு இந்த 2 தாக்குதல்களிற்கும் LTTE மீது குற்றம்சுமத்த, LTTE அதை மறுத்திருந்தனர்.சர்வதேச விசாரணையாளர்களிடமும் அரசாங்கம் இத்தாக்குதலை புலிகளே மேற்பொண்டனர் என குற்றம் சுமத்தி இருந்தனர். ஆனால் இதற்கான நேரடி சான்றுகள் எவையும் LTTE செய்ததாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் பொது வெளியில் LTTE மீதே தொடர்ந்து அரசு குற்றம் சுமத்தி வந்தது. இந்த தாக்குதல்களை ஆழமாக பகுப்பாய்வு செய்யும் போது, அந்தக் காலகட்டத்தில் யார் அந்த நிலப்பகுதியை கட்டுப்படுத்தினர் என்பதே முக்கியமானது. 2006 ஆம் ஆண்டில், கிழக்கு மாகாணம் — வெலிகந்த மற்றும் சுற்றுப்புறங்கள் உட்பட பல பகுதிகள் பிள்ளையானின் தலைமையிலான TMVP (தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்), ஏற்கனவே கருணா அம்மானின் தலைமையில் இருந்து பிரிந்த LTTE பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இலங்கை இராணுவ புலனாய்வுத் துறையுடன் நெருக்கமாக இணைந்து, TMVP அரசு ஆதரவு பராமிலிட்டரி அமைப்பாக செயல்பட்டது. நானும் உள்பட உள்ளூர் ஊடகவியலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த நிருபர்கள், அந்தப் பகுதிகளில் செல்லும்போது மிக நுண்ணியமாக கண்காணிக்கப்படுவோம் என அறிந்திருந்தோம். TMVP மற்றும் இராணுவ சோதனைச் சாவடிகள் அந்தப் பகுதிகளில் அமைந்திருந்தன. அவர்கள் சட்டத்திற்கு புறம்பான கொலைகார அமைப்பாக செயல்பட்டனர். இத்தகைய சூழ்நிலையில், TMVP அல்லது அதன் அரச உளவுத்துறை அனுமதியின்றி LTTE மீது இத்தகைய ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்த வாய்ப்பு சாத்தியமற்றது. பிரச்சனைக்கு உரிய கேள்வி இது: இந்த கூட்டுக் கொலைகள், மீண்டும் முழுமையான போரை சிதறவைக்கும் உரிய முன்னோட்டங்களா? யார் அதனால் லாபமடைந்தனர்? பதில், யார் செயற்பட்டனர் என்பதைவிட, இந்த குழப்பத்தில் யார் பலனடைந்தனர் என்பதையே சாரும். மகிந்த ராஜபக்ஷவிற்கு, இந்த தாக்குதல்கள் தேசிய உணர்வை தூண்டும் ஒரு வாய்ப்பாக மாறியது. இராணுவ நடவடிக்கையை உருப்படியாக நீட்டிக்க இது உதவியது. பிலள்ளையான் மற்றும் TMVPக்கு, இந்த வன்முறை அரசாங்கத்திற்குள் அவர்களின் நிலையை உறுதிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. இது அவர்களுக்கு அரசியலில் நுழைய வழிவகுத்தது, மேலும் பிள்ளையானை கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக மாற்ற இந்த வன்முறை ஊக்கப்படுத்தி ஆதரவழித்தது. இராஜ தந்திர நிகழ்ச்சி நிரலின் படி இந்த நிகழ்வுகள் LTTE இனரின் கொள்கையை நிராகரித்து “ஒருமித்த இலங்கை” பற்றிய கோஷங்களை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு கொண்டு வந்தது. 2008 நவம்பர் 18 ஆம் நாள், கொழும்பு அருகிலுள்ள அதிக பாதுகாப்பு உள்ள இடமான அத்துருகிரியவில், பிள்ளையானின் ஒருங்கிணைப்பாளர் பகல் நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இதற்கான உள்நோக்கம் தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் இல்லை. இருப்பினும், அதிகார அமைப்பை நன்கு அறிந்தவர்கள், இது எதிரிகள் செய்த தாக்குதல் அல்ல, பிள்ளையானாலே மேற்கொள்ள தாக்குதல் என்பதை பலரும் அறிந்திருந்தனர் ஆனாலும் எந்த விசாரணை ஏற்கனவே போராளியாக இருந்து, அரசியல் வாதியாக மாற்றப்பட்ட பிள்ளையானின் நிலை தெளிவானது: சேவையும் செய்யலாம், கொலை கொள்ளை ஆட்கடத்தல் செய்யலாம் ஏனெனில் அரசு தனக்குடந்தை. இவை தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல. 2005ல் மட்டக்களப்பு ஆலயத்தில் தமிழறிஞர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொல்லப்பட்ட நிகழ்வில், பிள்ளையான் 2015ல் கைது செய்யப்பட்டார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு முக்கிய சாட்சிகள் பலவந்தமாக நீக்கப்பட்டதால் அவர் 2020ல் விடுவிக்கப் பட்டார் அப்போது அரசியலில் அவருக்கான பாதுகாப்பு உயர் நிலையில் இருந்தது. பின்னர், 2019ம் ஆண்டு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் — கொழும்பு, மட்டக்களப்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களில், 260க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பக்தர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் — பிள்ளையானின் பெயர் மீண்டும் மேலெழுந்தது. அவர் மீது ஒப்பந்தமான குற்றச்சாட்டு இல்லாவிட்டாலும், கிழக்கை மையமாகக் கொண்ட இஸ்லாமிய தீவிரவாத (சஹரான் குழு) உடனான தொடர்புகள் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த எல்லாக் குற்றச்சாட்டுகளும் ஒரு முக்கியமான செய்தியை வெளிப்படுத்துகின்றன: இவ்வாறான முறைகேடான, மதம் மற்றும் இனத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகளில் சிக்கியவர்களும், இன்று அதிகாரத்தில் இருப்பது, இலங்கையின் அரசியல் கலாச்சாரத்திற்கே இழுக்காகும். இலங்கையின் போருக்குப் பிறகான விவாதங்கள் “சமாதானம்” மற்றும் “நிலைத்தன்மை” என்பதை வலியுறுத்துகின்றன. ஆனால் அதன் அடியில், தீர்க்கப்படாத வன்முறை, அரசியலால் மறுசீரமைக்கப்பட்ட மற்றும் திட்டமிடப்பட்டு மூடப்பட்ட உண்மைகள் உள்ளன. பிள்ளையான் போன்றவர்களுக்கு — சிங்களர், தமிழர், கிறிஸ்தவர்கள் மீது பயங்கர கொலை /ஆட்கடத்தல்/கப்பம் ஆகியவற்றில் தொடர்புடைய பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அதிகாரக் குழுவில் சுதந்திரமாக பயணிக்க முடிகிறதென்றால், நிச்சயமாக நல்லிணக்கம் என்பது ஒரு மாயை, நீதிமுறைகள் ஒரு அரசியல் கருவியாகவே இருந்து வருகிறது. உண்மையான சமூக நீதி, நல்லிணக்கம், புரிந்துணர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமாயின பிள்ளையான் போன்ற ஒருங்கிணைக்கப்பட்ட மனித குலத்திற்கெதிரான குற்றம் புரிந்தோர் உச்ச பட்ச தண்டனை வழங்கபட வேண்டியவர்கள். Selvakumar Kamal Nathan
  5. பிள்ளையானுக்கும் கம்மன்வில்ல வுக்கும் என்ன தொடர்பு? திடீர் என கம்மன்வில்ல சட்டத்தரணியாக ஏன் மாற வேண்டும்? கிழக்க மீட்க்க போவதாக வந்த பிள்ளையான் ஒரு துரோகியா? ஈழ போராட்டத்தை தனது சுயநலத்துக்காக சிங்கள பேரினவாதத்துக்கு காட்டி கொடுத்து சுப போக வாழ்கை வாழ்ந்தவருக்கு ஏன் மக்கள் வாக்களித்தனர்? அப்போ பிள்ளையானுக்கு வாக்களித்த மட்டக்களப்பு மக்கள் அனைவரும் ஈழ போராட்டத்தில் உயிரிழந்த அந்த ஆத்மாக்களுக்கு பதில் கூறியே ஆக வேண்டுமா? பேராட்டத்தை வெற்றி பெற செய்வதற்கு எமது படையினருடனும் அரசுடனும் சேர்ந்து தமிழர் தாயகத்தின் ஈழ கனைவ காட்டி கொடுத்த நாட்டின் தலைவர்களில் பிள்ளையானும் கருணாவும் மிக முக்கியமானவர்கள். ஆனால் இன்று பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார் கருணா வெளியிலே இருக்கின்றார் ஆனால் இந்த அரசு பிள்ளையான் அவர்களை பழி வாங்குகின்றது என்று நாமல் கூறுகின்றார் ? பிள்ளையான் தொடர்பாக இன்று சிங்கள கட்சி தலைவர்கள் பயப்படுவதற்க்கான காரணம் என்ன? கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிங்கள மக்களை முட்டாளாக்க நினைக்க வேண்டாம் என்று கம்மன் வில்லவைஎச்சரித்துள்ளதுடன் ஈஸ்டர் ஞயிறு தாக்குதல் நடந்த போது சஹரானும் பிள்ளையானும் ஒரே சிறைச்சாலையில் இருந்தார்கள் என்று அவர்களுடைய செயலாளர் சனல் 4 வுக்கு கூறியதாக குறிப்பிடுகின்றனர். அசாத் மௌலானாவுக்கும் பிள்ளையானுக்கும் உள்ள தொடர்பு என்ன ? பல காலமாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயற்பாடுகளை சர்வதேசம் வரை மும்மொழிகளிலும் கொண்டு சென்ற அசாத் மௌலானா தனக்கு துரோகம் செய்ததுள்ளதாக பிள்ளையான் பல தடவை ஊடகங்களுக்கு கூறியிருக்கின்றார் . ஆனால்.... அதை, அசாத் மௌலானா மறுத்திருக்கின்றார். இதன் பின் மறைந்துள்ள மர்மங்கள் தான் என்ன? ஆனால் இன்று சிங்கள பேரினவாத கட்சிகள் எல்லாமே ஒன்று சேர்ந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை காட்டி கொடுத்த முக்கிய நபர்கள் இவர்கள்தான் என்று வெட்ட வெளியாக கூறும் போது தமிழ் மக்கள் ஏன் இன்னும் இவர்கள் போன்ற துரோகிகளை நம்புகின்றார்கள் என்ற ஒரு கேள்வி தற்போது எழுந்துள்ளது. இனியாவது மக்கள் இது போன்ற நயவஞ்சக செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு அரசாங்கங்கள் தான் நீதி வழங்காமல் விட்டாலும் கடவுளின் நியதி என்பது கிடைத்தே ஆக வேண்டும். எமது மண்ணில் மரணித்த அத்தனை உயிர்களினதும் ஆத்மா சாந்தி அடைய உண்மைகள் வெளிவர வேண்டும். கர்மா சும்மா விடாது. Shashi Punniyamoorthy
  6. உள்ளூராட்சி தேர்தல் மீதான மக்களின் ஆர்வம் குறைந்து விட்டது – பெப்ரல் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்கியதிலிருந்து எந்தவொரு பாரதூரமான சம்பவங்களும் பதிவாகவில்லை என்று தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும், அரசு சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக 20 முறைப்பாடுகளும், தனிப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக 15 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக PAFFREL அமைப்பு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மீதான பொதுமக்களின் ஆர்வமும் குறைவாக இருப்பதாக PAFFREL கண்காணிப்பாளர்களும் தமக்குத் தெரிவித்ததாக அதன் நிர்வாகப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். இதற்கிடையில், தேர்தல்கள் பணிகளுக்காக சுமார் 4,000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தபால்மூல வாக்குகளிப்புகளை கண்காணிக்க 200 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1428751
  7. புளோரிடா பல்கலையில் பொலிஸ் அதிகாரியின் மகன் மேற்கொண்ட துப்பாக்கிச் துப்பாக்கி சூடு. புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தில் (FSU) ஒரு பொலிஸ் அதிகாரியின் மகன் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். வியாழக்கிழமை (17) மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஆறு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிதாரி என்று கூறப்படும் 20 வயதுடைய FSU மாணவர் பீனிக்ஸ் இக்னர், மாநிலத் தலைநகரான டல்லாஹஸ்ஸியில் உள்ள மாணவர் சங்கக் கட்டிடத்திற்கு அருகில் மதிய உணவு நேரத்தில் துப்பாக்கிப் பிரயோகத்தை முன்னெடுத்துள்ளார். பின்னர், சந்தேக நபர் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. இறந்தவர்கள் மாணவர்கள் அல்ல என்று பல்கலைக்கழக வளாக பொலிஸார் தெரிவித்தனர். ஆனால் அவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை. சம்பவ இடத்தில் ஒரு துப்பாக்கியும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1428727
  8. பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு 15 ஆண்டுகள் சிறை! பணமோசடி வழக்கில் பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒல்லாண்டா ஹுமாலாவுக்கு (Ollanta Humala) 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 62 வயதான ஒல்லாண்டா ஹுமாலா, கடந்த 2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதன்போது ஹுமாலாவின் தேசிய ஜனநாயக கட்சியானது தேர்தல் பிரசாரத்துக்காக அப்போதைய வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேசிடம் இருந்து இலங்கை மதிப்பில் சுமார் 7 கோடி ரூபாய் வரை நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் பெருவின் ஓடெபிரெக்டிட் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்தும் நன்கொடை பெற்றதாக கூறப்படுகின்றது. இதுதொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ஒல்லாண்டா, மற்றும் அவரது மனைவி ஹெரேடியா (Heredia) ஆகியோர் மீது தலைநகர் லிமாவில் உள்ள நீதிமன்றில் பணமோசடி வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. எனவே 2 பேருக்கு தலா 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ஒல்லாண்டா உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அவரது மனைவி ஹெரேடியா பெருவில் உள்ள பிரேசில் தூதரகத்தில் தஞ்சம் கோரியிருந்தார். அங்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அவர் தனது மகனுடன் விமானம் மூலம் பிரேசில் தப்பிச் சென்றுள்ளார். மேலும் இந்த தண்டனையை எதிர்த்து ஒல்லாண்டா ஆதரவாளர்கள் மேல்முறையீடு செய்யவுள்ளனர். அந்த வழக்கில் ஹெரேடியா பிரேசிலில் இருந்து கொண்டே காணொலிக்காட்சி மூலம் ஆஜர் ஆவார் என அவரது சட்டத்தரணி வில்பிரடோ பெட்ராசா தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428722
  9. பிக்கு… உசாரான பிக்கு. அவருக்கும் உயிர் மேல் ஆசை இருக்கும் தானே. 😂 நீங்கள், இங்கிலாந்திலும் நல்லெண்ணை முழுக்கு செய்வது ஆச்சரியமாக உள்ளது. அல்லது… சும்மா பம்பலுக்கு எழுதினீர்களா. 🤣 நான் நல்லெண்ணை முழுக்கை கைவிட்டு பல வருடங்களாகி விட்டது.
  10. சிங்கத்துக்கு எண்ணை வைத்து, தலை வாரி விட்ட போது .... 😂
  11. அதே விளையாட்டுத்தான். கோவிட் நேரம் உலகமே சுவாசக் கருவிகள் இல்லாமல் அமளிப் பட்டுக் கொண்டிருக்க... பிரான்சுக்கு ஒரு தொகை சுவாசக் கருவிகளை ஏற்றுமதி செய்தால்... அது தரமற்ற கருவி மட்டுமல்ல, அதில் பயன்படுத்தும் செயல் முறை முழுக்க சீன எழுத்துக்களில் இருந்தனவாம். கோவிட் நேரம் மருத்துவர்களின் தட்டுப்பாடு ஏற்பட்ட போது... சீனா தாம் உதவுகின்றோம் என ஒரு குழுவை அனுப்பி, அதற்கும் ஒரு தொகை பணத்தை வாங்கி விட்டார்களாம். பிரான்ஸ் இதற்கு சீன அரசாங்கத்திடம் ஆட்சேபனை தெரிவித்த போது... அவை தனிப்பட்ட நிறுவனங்கள் என்றும் தமக்கு இதில் எவ்வித சம்பந்தமும் இல்லை என சொல்லி விட்டதாம்.
  12. சீனாக்காரனின் வியாபாரம் எப்படி என்று பாருங்கள். வேறை லெவல். 😂 சீனாவை பகிஷ்கரிக்கச் சொல்லி எழுதிய வாசகம் கொண்ட ஒரு லட்சம் T சேட்டுக்களை, சீனாவில் தயாரித்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து இருக்கின்றார்கள். 🤣
  13. அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர்; தங்கத்தின் விலை புதிய சாதனை! அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போரின் தாக்கம் குறித்து முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளதால், தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, புதன்கிழமை அன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,357.40 (£2,540) அமெரிக்க டொலர்கள் என்ற விலையை எட்டியது. பின்னர் அதன் விலை உச்சத்திலிருந்து சரிந்து. வியாழக்கிழமை (17) 3,322 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலையானது மூன்றில் ஒரு பங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கைகள் மெதுவான வளர்ச்சி, அதிக விலைகள் மற்றும் வேலையின்மை அபாயங்களைக் குறிக்கும் என்று அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் கூறியதைத் தொடர்ந்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. பொருளாதார நிச்சயமற்ற காலங்களில் முதலீட்டாளர்களுக்கு இந்த விலைமதிப்பற்ற உலோகம் ஒரு பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படுகிறது. ஆய்வாளர்கள் இந்த ஆண்டு தங்க ஏற்றத்தை நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ஈரானியப் புரட்சியுடன் ஒப்பிட்டுள்ளனர். அப்போது 1979 நவம்பர் முதல் 1980 ஜனவரி வரை தங்கத்தின் விலைகள் கிட்டத்தட்ட 120% உயர்ந்தன. உலகளாவிய வர்த்தகப் போரின் தாக்கம் குறித்த நிச்சயமற்ற தன்மை தொடங்கியதால், கடந்த மாதம் முதல் முறையாக தங்கம் ஒரு அவுன்ஸ் $3,000 ஐத் தாண்டியது. ட்ரம்ப் நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வரிகள், வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் வணிகங்களுக்கு விதிக்கப்படும் வரிகள், பணவீக்கம் குறித்த அச்சங்களைத் தூண்டியுள்ளது. இது முதலீட்டாளர்களை தங்கம் போன்ற பாதுகாப்பான புகலிட சொத்துக்கள் என்று அழைக்கப்படுவதை நோக்கித் தள்ளியுள்ளது. ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, ட்ரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145% வரை வரி விதித்துள்ளார். ஏற்கனவே உள்ளவற்றுடன் புதிய வரிகள் சேர்க்கப்படும்போது, சில சீனப் பொருட்களின் மீதான வரிகள் 245% ஐ எட்டக்கூடும் என்று அவரது நிர்வாகம் இந்த வாரம் கூறியது. மேலும் சீனா அமெரிக்க இறக்குமதிகள் மீது 125% வரியை விதித்து பதிலடி கொடுத்துள்ளது. 90 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்ட பின்னர், பல நாடுகள் மீதான அமெரிக்க வரிகள் அமலுக்கு வருமா என்பது குறித்தும் நிச்சயமற்ற தன்மை உள்ளது. இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு உற்பத்தியை மீண்டும் கொண்டு வரும், அமெரிக்க தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் பில்லியன் கணக்கான டாலர்கள் வரி வருவாயை உருவாக்கும் என்று டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது. https://athavannews.com/2025/1428646
  14. பிள்ளையான் ராக்கெட். 😂
  15. VAT விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான அறிவிப்பு! பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால் மற்றும் தயிர் ஆகியவற்றுக்கு VAT வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் திரவ பால் மற்றும் தயிர் மீதான VAT வரி நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலம் ஏப்ரல் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன ஏப்ரல் 11 ஆம் திகதி அதற்கு ஒப்புதல் அளித்தார். அதன்படி, தொடர்புடைய சட்டம் அந்தத் திகதியில் அமலுக்கு வந்ததிலிருந்து, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பல வரித் திருத்தங்களைச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. திரவ பால் மற்றும் தயிர் தவிர, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் மின்சார உற்பத்திக்காக இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் நாப்தா மீதான VAT வரியும் நீக்கப்பட்டுள்ளதாக இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டத்தின் படி, வெளிநாடு வாழ் தனிநபர்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு VAT விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில், இலங்கையில் வசிக்காத தனிநபர்கள் மின்னணு தளங்கள் மூலம் தனிநபர்களுக்கு வழங்கும் சேவைகளுக்கு VAT பொருந்தும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், வணிக நோக்கங்களுக்காக பொருட்களை இறக்குமதி செய்யும் அல்லது ஏற்றுமதி செய்யும் அனைத்து நபர்களும் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1428590

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.