Everything posted by தமிழ் சிறி
-
இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
- கருத்து படங்கள்
- அமெரிக்க வரியும் இந்திய – இலங்கை வர்த்தகமும்
- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
இந்திய பிரதமருக்கு சுதந்திர சதுக்கத்தில் சிறப்பு வரவேற்பு. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று (05) முற்பகல் நடைபெற்றது. இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் ‘நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு’ Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோடிஇ குதிரைப்படையை முன்னிலையாக கொண்டு சுதந்திர சதுக்க வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்திய பிரதமருக்கு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. அதனையடுத்து இரு நாடுகளினதும் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்ட பின்னர் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஆரம்பமானது. இதன்போது கௌரவ வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்திய பிரதமர் இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் பிரமுகர்களுக்கான கௌவரத்தை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து இருநாட்டுத் தலைவர்களும் இருதரப்பு பிரதிநிதிகளை அறிமுகப்படுத்தினர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் அரச நிகழ்வில்இ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் ஆகியோரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்இ வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உட்பட இரு நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டனர். https://athavannews.com/2025/1427522- பொது வாக்கெடுப்பு நடத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-விஜய்!
பொது வாக்கெடுப்பு நடத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-விஜய்! 3 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி இலங்கை வரவுள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரத்தில் இடைக்காலத் தீர்வு பெற பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வேண்டுக்கோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு. ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும். அத்துடன் மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை. மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம், தமிழ்நாடு அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது. 1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியான தி.மு.க.தான். 1999 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால்தான். அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது. அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை என்று அவர் தெரிவித்தார். அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது. இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன. குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்? கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது. எப்போதும் மீனவ நண்பனாகவே, உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம், ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது. கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு. நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும். மாண்புமிகு ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள், கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும். இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அமைதியும் நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க பொது வாக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வு. நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும். தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பே. இந்நிலையை நோக்கி நகர, சர்வதேசச் சமூகத்தை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும். போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த, இலங்கை அரசுக்கு ஒன்றிய பிரதமர் அவர்கள், நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.இலங்கை செல்லும் நம் மாண்புமிகு ஒன்றிய பிரதமர் அவர்கள், ‘கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்’ என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும். நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒன்றிய பிரதமரின் இந்த இலங்கைப் பயணம் தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும் என்று விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1427487- இலத்திரனியல் வாகன இறக்குமதியில் மோசடி!
இலத்திரனியல் வாகன இறக்குமதியில் மோசடி! வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அடிப்படையில் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் பாரிய மோசடி இடம்பெற்றிருப்பதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது. வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அந்நாட்டிலிருந்து அனுப்பும் பணத்தின் அடிப்படையில் முழுமையான இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பில் 2022 மே 01ஆம் திகதி முதல் 2023 செப்டெம்பர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் பற்றிய கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை குறித்து அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் தலைமையில் கூடி ஆராய்ந்தபோதே இந்த விடயம் தெரியவந்தது. இவ்வாறு வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் நிதிச் சுத்திகரிப்பு இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். இது விடயத்தில் முன்னெடுக்கப்பட்ட சகல நடவடிக்கைகளையும் ஆராய்ந்துபார்க்கும்போது இது தெரியவருவதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பிட்ட இந்தக் காலப்பகுதியில் 1077 வாகனங்களுக்கான இறக்குமதிக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், இதில் 77 அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய கணக்காய்வாளர் நாயகம், 640 அனுமதிப்பத்திரங்களுக்காக இரண்டு பிரதான நிறுவனங்கள் வசதிகளை வழங்கும் இறக்குமதியாளர்களாகச் செயற்பட்டிருப்பதாகவும் குழுவுக்குத் தெரியப்படுத்தினார். இதன் ஊடாக அனுமதிப்பத்திரம் வழங்குவது என்ற போர்வையில் வணிகம் இடம்பெற்றுள்ளமை வெளிப்பட்டிருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1427519- மோடி வருகை- இந்திய மீனவர்கள் விடுதலை!
செவிடன் காதில் ஊதிய சங்கு. 😂- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
இந்திய- இலங்கை தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார். இதன்போது இந்தியப் பிரதமருக்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான இராஜ தந்திர பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதோடு பல்வேறு பட்ட ஒப்பந்தங்களும் பரிமாறப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1427570- தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவசர மகஜர்
கடந்த பல வருடங்களாக வழமையாக சொல்லும்... 13'ம் திருத்த சட்டத்தையும் நிறைவேற்றச் சொல்லி, ஸ்ரீலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கச் சொல்லுங்கப்பா. 😂- இரு யாழ் மீனவர்களை விடுவித்த இந்திய அரசு!
இரு யாழ் மீனவர்களை விடுவித்த இந்திய அரசு! இந்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழைச் சேர்ந்த இரு மீனவர்கள் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடந்த 15ஆம் திகதி மீன் பிடிக்காகக் கடலுக்கு சென்ற இரு இலங்கை மீனவர்களும் படகின் இயந்திரம் பழுதடைந்தமையால் , இராமநாதபுரத்தை அண்டிய கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த வேளை தமிழக கடலோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் , இலங்கைக்கு இந்திய பிரதமர் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் . அதனை அடுத்து புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2 யாழ்ப்பாண மீனவர்களையும் இந்திய அரசாங்கம் விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த மீனவர்கள் இருவரும் மிக விரைவில் விமான மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1427583- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
கொழும்பில் மோடிக்காக திரையிடப்பட்ட சுந்தரகாண்ட நாடகம். இலங்கைக்கு வருகைத்தந்துள்ள இந்தியப் பிரதமருக்கு, ராமாயண இலக்கியத்தின் சுந்தர காண்டத்தில் உள்ள சில பகுதிகளை எடுத்துக்காட்டும் ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சி நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் தான் கருத்து வெளியிட்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘சுந்தர காண்டத்தின் சில பகுதிகளை எடுத்துக்காட்டும் ஒரு பொம்மலாட்ட நிகழ்ச்சியின் காட்சிகளை கண்டுகளித்தேன். இதனை ஏற்பாடு செய்த பொம்மலாட்ட சங்கத்தினருக்கும், அவர்களின் ஆர்வத்திற்கும் வீரியத்திற்கும் எனது பாராட்டுகள். அத்தோடு கொழும்பில் தன்னை வரவேற்ற இந்திய சமூகத்தினரின் அற்புதமான வரவேற்புக்கு மழை எந்தத் தடையாகவும் இருக்கவில்லை.அவர்களின் அரவணைப்பு மற்றும் உற்சாகத்தால் நான் மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன் அவர்களுக்கும் நன்றி” என கூறியிருந்தார். பிரதமர் நரேந்திர நரேந்திர மோடி தனது இலங்கை பயணத்தின் போது கொழும்பில் உள்ள ஹோட்டலில் தங்கியிருக்கும் நிலையில், அங்கு வந்தடைந்த இந்திய புலம்பெயர்ந்தோர் மற்றும் இந்திய சமூகத்தினரிடமிருந்து அவருக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை இந்திய புலம்பெயர்ந்தோர் வரவேற்றனர். பிரதமர் மோடியின் இலங்கை வருகை குறித்து இந்தியக் கொடிகளை ஏந்திய மக்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அவர் ஹோட்டலில் இந்திய புலம்பெயர்ந்த உறுப்பினர்களுடன் கைகுலுக்கி உரையாடுவதைக் காண முடிந்தது. https://athavannews.com/2025/1427559- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
தமிழ்... அரச மொழி என்பது எல்லாம்... வாக்குகளை பெற மட்டுமே. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்... இப்ப நவ துவாரத்தையும் மூடிக் கொண்டு இருப்பார்களே.- நாக பாம்பினை கைகளால் பிடித்த குருக்கள் பாம்பு தீண்டி மரணம்!
நியாயம்... நான் சரியாகவே விளங்கியுள்ளேன். சிலவேளை நான் எழுதியதில் பொருள் மயக்கம் ஏற்பட்டிருக்கலாம். செய்தியின் படி குருக்களுக்கு பாம்பு கடித்தது இரவு 9 மணியிருக்கும் என நினைக்கின்றேன். அவரை வற்புறுத்தி வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றது நள்ளிரவு 1 மணி. குருக்கள் அதற்கிடையில் நான்கு மணித்தியாலத்தை... பாம்பை பிடித்து போத்தலில் அடைப்பதையும், பாம்பின் விசத்தை இல்லாது செய்யும் வித்தையும் தெரியும் என்று தேவையில்லாமல் நேரத்தை வீணாக்கி உள்ளார். அதனாலேயே... குருக்களின் அதிகப் பிரசங்கித்தனம் என்று குறிப்பிட்டேன்.- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்கலாம் வாங்க
- நாக பாம்பினை கைகளால் பிடித்த குருக்கள் பாம்பு தீண்டி மரணம்!
யாழில் வெற்று கைகளால் நாக பாம்பினை பிடித்த குருக்கள் உயிரிழப்பு.- நானும் ஆனந்தபுரமும்..... 04/04/2009.
இதுவே எனது இறுதி இருப்பிடம் இதிலிருந்து என்னால் ஒரு அடிகூட இனி நகரமுடியாது. தலைவர் உறுதியாக கூறிவிட்டார். பெரும் ஊடறுப்பு தாக்குதலுக்கு தயாராக இருந்த அனைத்து அணிகளும் தயார்நிலையில் விடப்பட்டுவிட்டன. தலைவரின் இருப்பிடத்தை அண்மித்தே அனைத்து தளபதிகளது கட்டளை நிலையங்களும் போடப்பட்டிருந்தது. உள்ளே நகர்ந்த அணியின் இறுதிவேவுத் தகவலுக்காக காத்திருந்தவேளை அது. தீடீரென எதிர்பாராத விதமாக இராணுவம் முன்னேற்றத்தை மேற்கொண்டது.எங்கோ தகவல் கசிவு ஏற்பட்டதை விளங்கிக்கொண்டோம். இராணுவத்தின் முன்னேற்றம் எடுத்த எடுப்பிலே தலைவரின் இருப்பிடத்திற்கு நேரே தொடங்கப்பட்டதுதான் தாக்குதலின் தீவிரத்தை அதிகரித்திருந்தது. தலைவர் இருந்த இடத்தைக் கடந்து இராணுவம் ஊடறுத்துவிட்டது. நச்சுக்குண்டுகளின் தாக்கத்தாலும் எறிகணைகளின் சிதறல்களாலும் காயத்திற்குள்ளான போராளிகள் சமராட முடியாது மயங்கி விழுந்தனர். எங்களுக்கு உடம்பெல்லாம் எரிகாயமாக இருக்கிறது மூச்சுவிட மூக்கெல்லாம் எரியிது கண்ணால் பார்க்க முடியாதிருக்கிறது.உடனடியாக உதவிக்கு வாங்கோ. தலைவரின் பாதுகாப்பு அணியின் வோக்கி......கட்டளையிட்டு அடங்கியது. ராங்கோ வண்....ராங்கோ வண். லீமா சேரா......! பலமுறை அழைத்தும் தொடர்பில்லை. ரூ எய்ற்.....ரூ எய்ற்..... பப்பா நவம்பர்....! கடாபி அண்ணை எடுத்தார். நான் கிட்ட போய்ட்டேன்.ஆனால் அடி பின்னுக்கு இருந்தும் வருகிது.box பண்ணிற்றான் என நினைக்கிறேன். அந்தப்பக்கம் மணியின்ர பெடியள்தான் வெளியால உடைக்கிறதைவிட உள்ளால உடைக்கிறதுதான் சரி.இன்னும் ஆள் உள்ளுக்கதான்......! ராங்கோவின் கட்டளை இறுக்கமாக கிடைத்தது. தலைவரைச்சுற்றி இராணுவம் போட்ட முற்றுகை box ற்குள் ஒரு சிறிய பாதுகாப்பு box எமது அணிகளால் போடப்பட்டது.இப்பொழுது அந்த box க்குள் இருந்து,நகரும் box ஆக களமுனை மாறியது. சாரங்களை கிழித்து முகங்களில் இறுக்கமாக கட்டியபடி ஒவ்வொருவரது சண்டை அணிகளும் தலைவரின் இருப்பிடத்தை நோக்கிப் பாய்ந்தது. வெளியில் இருந்து மூன்று பக்கங்களால் எமது box ஐ நோக்கி எமது ஏனைய அணிகள் நகர்ந்து இராணுவத் தடுப்பை உடைத்து உள்நுழைந்து பாதுகாப்பாக தலைவரை மீட்டெடுத்தது. ஆனந்தபுரத்தைவிட்டு வெளியேற தலைவர் மறுத்தபோதும் அவரது கட்டளையை அந்தச்சந்தர்ப்பத்தில் ஏற்றுக்கொள்ளாது ஒருவாறு தட்டுத்தடுமாறி பலருடைய வேண்டுதல்களின் பின்னர் முழு விருப்பின்றி தலைவர் சம்மதிக்க ஆனந்தபுரத்திலிருந்து தலைவரை பாதுகாப்பாக அனுப்பிவைத்தன அணிகள். தொடர்ந்துவந்த நாட்கள்.....உள்ளே அகப்பட்ட இராசயனக் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளான போராளிகளை மீட்பதற்கான களமாகவே விரிந்தது.இப்போது இராணுவத்தின் தாக்குதல் அடங்கிவிட்டது கொல்லப்பட்ட இராணுவத்தின் உடல்களைக் கடந்து சண்டையணிகள் பழைய நிலைகளுக்குச் சென்று விட்டது.நூற்றுக்கணக்கான இராணுவத்தின் உடலங்கள் சிதறிக்கிடந்தது.பின்வாங்கிய இராணுவம் சிறிது நேரத்தில் பலமான விமானக்குண்டுவீச்சுகளை மேற்கொண்டது.மீண்டும் போராளிகள் இராசயனக்குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகினர்.இருபது தடவைக்கு மேலாக தொடர் விமானக் குண்டுத்தாக்குதல்களையும் அதேவேளை தொடர் எறிகணைத்தாக்குதலையும் சரமாரியாக மேற்கொண்ட சிங்களப்படை இராசயன முகக்கவசங்களுடன் முன்னேறியது. மயக்கத்துடனும்கூட போராளிகள் துப்பாக்கிகளைக் கைவிடாது சமராடினர். எதிரியிடம் எமது ஆட்லறிகள் பிடிபட்டுவிடக்கூடாதென்பதற்காக அதனை குண்டுவைத்து அழிப்பதில்கூட தம்மை வெடிமருந்தோடு அழித்தனர் சில போராளிகள்.ஊடறப்புக்களில் ஈடுபட்டபடி மயங்கிவிழுந்துகொண்டிருந்தனர். எல்லோருடைய வோக்கிகளும் கட்டளைகளைக் கொடுத்தபடியே ஆனாலும் வெளியிலிருந்து உதவிக்கு அணிகள் அவசர அவசரமாக அப்பொழுதுதான் அனுப்பப்பட்டுகொண்டிருந்தது. களச்சண்டைகள் கைகலப்புச் சண்டையாக மாறிப்போக போராளிகள் இராணுவத்தோடு நேரடியாகவே மோதும் நிலை உருவானது. வெளியிலிருந்து அணிகள் சென்று உள்நுழைந்து சண்டையை தீவிரப்படுத்தியபோதும்.இராசயனத் தாக்குதலுக்கு உள்ளான அணிகள் அனைத்துமே செயலிழந்துபோய்விட்டன. இன்னொரு பக்க முன்னரங்கை பலவீனப்படுத்தி அடுத்த பக்கத்தை பலப்படுத்துவதைத் தவிர வேறு தெரிவு இருக்கவில்லை. 04/04/2009 விடியாத நாளாக இருளாகிப்போனது. கவிப்புயல் சரண்- நானும் ஆனந்தபுரமும்..... 04/04/2009.
நானும் ஆனந்தபுரமும்..... 04/04/2009. அப்போது அந்த வைத்தியர் யார் என்று எனக்கு தெரியாது அவருக்கு உதவியாக அவருடைய மாமா அங்கு இருந்தார் அவருடைய குடும்பமும் அதே வைத்தியசாலையில் இருந்தது என்று தெரியும். ஆனந்தபுர கோர தாண்டவத்தின் இறுதி நாள் வித்துடல்கள் கிடந்த கிடங்கிற்குள் மயக்க நிலையில் நான் இருந்தது தெரியாமல் வீரச்சாவு என்று நினைத்து என்னையும் போட்டு விட்டு சென்று விட்டனர். மயக்கம் தெளிந்து நான் அலம்பிக்கொண்டு கிடந்தேன் ஒருவர் எனது கைகளை பிடிக்க மற்றையவர் எனது இரு கால்களையும் பிடித்து தூக்கி கொண்டு வாகனத்தில் போட்டார்கள். பின் வைத்தியசாலையில் நான் பெரிய சத்தமாக கத்தினேன் நான் சாக போறன் சாகப்போறன் என கத்தினேன் அதற்கு முதல் தேசிக்காய் தண்ணி தாங்க என்று கத்த அங்கு இருந்த வைத்தியர் தம்பி நீ சாக மாட்டாடா கத்தாத என்றார். இல்லை நான் செத்திடுவன் எனக்கு தேசிக்கா தண்ணி கொடுங்க என மீண்டும் மீண்டும் கத்தினேன். முதல் 3 நாட்கள் உணவும் தண்ணியும் இல்லை கடும் தாகம் எனக்கு தேசிக்காய் தண்ணி குடிக்கனும் என்று கத்தினன். வைத்தியர் சொன்னார் தம்பி உடல் முழுவதும் காயம் நீ தண்ணீர் கூட குடிக்க கூடாது என்றார். வேதனை தாங்க முடியாது கடும் கெட்ட வார்த்தையால் வைத்தியரை திட்டினேன் வைத்தியரின் மாமா அங்கு இருந்தார் வைத்தியரின் மனைவியையும் கெட்ட வார்த்தைகளால் திட்டினேன். அப்போது அவரின் மாமா தம்பி நீ தண்ணி குடிச்சா செத்திடுவா என்றார் நான் செத்தாலும் பரவாயில்லை தண்ணீர் தாருங்கள் என்று கதறினேன் பின் ஏதோ ஒரு துளி ஆ என்று சொல்லி அடி தொண்டைக்குள் விட்டார்கள். ஆனால் என்னால் தாங்க முடியவில்லை எவ்வளவு தூசனம் பேசியும் யாரும் என்னை கண்டிக்கவில்லை. சேலேன் ஏற்றப்பட்டது கொஞ்சம் அமைதியாக இருந்தேன் நன்றாக இருட்டி விட்டது சேலேனை கடித்து மட மட என குடித்துவிட்டேன் சிறிது நேரத்தில் எனக்கு பக்கத்தில் இருந்தவர் இறந்து விட்டார் என தூக்கி சென்றார்கள். பின் வைத்தியர் என்னை வந்து செக் பன்னினார் இவ்வளவு வேகமாக சேலேன் முடிந்துவிட்டதை பார்த்தவுடன் சேலேன் குழாயை செக் பன்னினார் நான் அதை கடித்து குடித்தது அவருக்கு தெரிந்து விட்டது. இரண்டு கைகளும் கால்களும் கட்டப்பட்டது ஆனால் அவர்கள் என்னை அடிக்கவில்லை, பின் மயக்கம் தெளிந்து பார்த்தவுடன் வைத்தியசாலையாக இயங்கி கொண்டு இருந்த ஒரு பாடசாலை காயப்பட்டவர்களுடன் படுத்திருந்தேன், பக்கத்தில் ஒருவன் பெரிய சத்தமாக கதிறி அழுதுகொண்டு இருந்தான் அண்ணேக்கு கையில காயம் எல்லாமே போய்ற்று எனி எதுவும் செய்ய முடியாது என இடை விடாமல் கத்தினார். எனக்கு எதுவும் புரியவில்லை பிறகு ஆறுதலாக கேட்டேன் அதன் பிறகு ஆனந்தபுரத்தில் நடந்தது பற்றி தெளிவாக கூறி கூறி அழுதார், அவர் ஓர் பொருப்பாளராக இருந்திருப்பார் ஆனால் அழுகையை நிறுத்தவில்லை. உண்மையிலேயே நான் போராட்டத்திற்கு புதுசு ஆனந்த புரத்தில் சிக்குண்டு கிடந்த நேரம் எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை, எங்களுக்கு அது பற்றி விளக்கமும் இல்லை, என் போன்ற பலர் அங்கு இருந்தார்கள் கோபித் அண்ணா வீரச்சாவு அடையும் வரை நாங்கள் அமைதியாகதான் இருந்தோம். வைத்தியசாலையில் என்னால் எழுந்து நிற்க முடியாது உடல் முழுவதும் 8 இடங்களில் காயம் கட்டிலில் கிடக்கும் க,எனக்கு ஒட்டு துனியும் இருக்காது அந்தரங்கம் ஒரு துண்டு துனியால் மூடப்பட்டு இருக்கும் சலம் மலம் எல்லாம் அப்படியே போகும். ஒரு ஐயாவும் ஒரு சின்ன தம்பியும் என்னை சுத்தம் செய்வார்கள். இப்படி சில நாள் சென்றவுடன் தம்பி எனி நீ நடக்க பழக வேண்டும் என்றார்கள். நானும் கட்டிலில் இருந்து எழுந்து கீழ் கால் வைக்கும்போது விழுந்து விட்டேன் அப்படி பலமுறை நடந்தது. எனியும் நடக்காமல் இருந்தால் சரி வராது என்று தடியை ஊண்டிக்கொண்டு டொய்லெட் போய் அங்கு விழுந்து எழும்ப முடியாமல் பல மணிநேரம் அதற்குள்ளே கிடந்தது என்னும் கண்களுக்குள் நிற்கிறது. இந்த படத்தில் கிடப்பது நானா என்பது எனக்கு தெரியாது ஆனால் கையில் சிவப்பு நூல் வெடிபட்ட இடம் அந்த வைத்தியர் அவர் பக்கத்தில் ஒரு ஐயா இது எல்லாம் என் கண்களுக்குள் வந்து போகிறது. தாயக விடுதலை போராட்டத்தில் எப்போதுமே நடக்காத பாரிய இழப்பு ஆனந்த புரத்தில் நடந்தேறியது. தேசிய தலைவர் கூறிய போன்று பலமுறை நூல் இழையில் உயிர் தப்பியது காலம் என்னும் ஏதோ ஒரு விடையத்தை செய்து முடிப்பதற்காக என்னை தயார் படுத்துகிறது என உணர்கிறேன் ... இது நான் இல்லை 2009 முன் வாழ்ந்த போராளி கார்மேகனின் நினைவுகளில் இருந்து... Malaravan Uthayaseelan- இந்தியப் பிரதமர் மோடி இன்று இலங்கை வருகை!
இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம்! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வேண்டுகோளுக்கு அமைவாக இலங்கைக்கான அரச விஜயமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று இரவு வந்தடைந்தார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் ராமலிங்கம் சந்திரஸேகர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ ஆகியோரால், பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி மற்றும் இராஜதந்திரிகள் குழுவினருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார். இந்திய பிரதமர் இந்நாட்டிற்கு விஜயம் செய்யும் நான்காவது சந்தர்ப்பம் இதுவென்பதுடன், இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பொருளாதார, கலாச்சார மற்றும் வரலாற்று தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்வது, இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்களை பலப்படுத்திக்கொள்வதுமே இந்த அரச விஜயத்தின் நோக்கமாகும். இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளது. அதேபோல் இலங்கையிலிருக்கும் நாட்களில் இந்திர பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியவையும் தரிசிக்க உள்ளதோடு, இந்திய ஒத்துழைப்புடன் இலங்கையின் முன்னெடுக்கப்படும் பல வேலைத்திட்டங்களையும் திறந்து வைக்கவுள்ளார். இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவும் இதில் கலந்துகொண்டுள்ளனர். https://athavannews.com/2025/1427490- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கருத்து படங்கள்