Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சுப. சோமசுந்தரம் அவர்களே.. நல்லதொரு பம்மாத்து கட்டுரைக்கு நன்றி. 😁
  2. வெளிநாட்டு போத்தல்களும், உள்நாட்டு போத்தல்களுமாக இருக்குமோ? 🤣 ஆதவன் செய்தி நிறுவனம் வாசகரின் மூளைக்கு வேலை தருகின்றது. 😂 ஒரு முன்னாள் பொலீஸ் மாஅதிபரின் வீட்டில் 795 + 214 + 1009 = 2018 மது போத்தல்கள் இருந்துள்ளது என்றால்.. அவர் எப்படிப் பட்ட யோக்கியனாக இருந்திருப்பார். ஒரு சாராய குதமே... வீட்டில் இருந்துள்ளது.
  3. தேசபந்து தென்னகோனுக்கு விளக்கமறியல்! பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாளை வரை விளக்கமறியலில் வைப்பதற்கு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அதன்படி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று முற்பகல் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது வெலிகம – பெலேன பகுதியிலுள்ள விருந்தகம் ஒன்றுக்கு முன்பாக 2023 டிசம்பர் 31 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில் அவர் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்தநிலையில், குறித்த வழக்கு நாளைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1425780
  4. தமிழரசு கட்சி... சாரி, 😂 சுயேச்சைக் குழுவின் வேட்பாளராக போட்டியிடுகின்றார். 🙂
  5. வெலிகந்தை முன்னாள் OICஐ கைது செய்ய உத்தரவு! வெலிகந்தை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலன்னறுவை இலக்கம் 02 நீதிவான் பொலிஸாருக்கு நேற்று (18) உத்தரவிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெலிகந்தை பொலிஸார் இரு சந்தேக நபர்களை 20 பசுக்களுடன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கால்நடைகளை அரசாங்க பண்ணை ஒன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்ட போதும் கடத்தல்காரர்கள் இருவருக்கு விற்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ்மா அதிபருக்கும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக அநாமதேய மனுவொன்றின் மூலம் பொலன்னறுவை நீதிவானிடம் உண்மைகளை முன்வைத்ததையடுத்து, நீதிவான் இது தொடர்பில் நேரில் விசாரணை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, விசாரணைகளை பொலிஸ் மா அதிபர் மற்றும் வடமத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் நீதிவான் ஒப்படைத்துள்ளார். https://athavannews.com/2025/1425757
  6. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா ஆரம்பம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா தலைமையில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. அந்தவகையில் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் அணிவகுத்து, கொடி, குடை, ஆலவட்டங்கள் சகிதம் விழா அரங்குக்கு வருகைதந்த துணைவேந்தர், அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிப் பட்டங்கள், பரிசில்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றார். இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை 13 அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு வைபவத்தில் மூவாயிரத்து 920 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425762
  7. இன சார்பு வழக்கு தீர்வுக்காக $28 மில்லியனை செலுத்த கூகுள் ஒப்புதல்! கூகுள் நிறுவனம் தனது ஊதியம் மற்றும் தொழில் முன்னேற்ற நடைமுறைகளில் இன சார்பு இருப்பதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கைத் தீர்ப்பதற்கு 28 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. ஹிஸ்பானிக், லத்தீன், பூர்வீக அமெரிக்க மற்றும் பிற சிறுபான்மை பணியாளர்களை விட வெள்ளை மற்றும் ஆசிய ஊழியர்களுக்கு சிறந்த ஊதியம் மற்றும் தொழில் வாய்ப்புகளை தொழில்நுட்ப நிறுவனமான நிறுவனம் வழங்கியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு முன்னாள் கூகிள் ஊழியர் ஒருவர் இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்தார். சில இனப் பின்னணியைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒரே மாதிரியான வேலையைச் செய்த போதிலும், அவர்களின் வெள்ளை மற்றும் ஆசிய சக ஊழியர்களை விட குறைந்த அடிப்படை சம்பளம் மற்றும் பணி நிலைகள் வழங்கப்பட்டதாக அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கான ஊதியத்தில் முரண்பாடுகளைக் காட்டியதாகக் கூறப்படும் கசிந்த உள் ஆவணத்தின் அடிப்படையில் இந்த வழக்கு கட்டமைக்கப்பட்டது. இந்த நடைமுறை நிறுவனத்தில் ஊதியம் மற்றும் தொழில் முன்னேற்றத்தில் நீண்டகாலமாக நிலவும் இன மற்றும் இன வேறுபாடுகளை வலுப்படுத்துவதாக வழக்குத் தொடுநரின் சட்டத்தரணிகள் வாதிட்டனர். இந்த வகுப்புவாத நடவடிக்கை வழக்கு 2018 பெப்ரவரி 15 முதல் 2024 டிசம்பர் 31 வரை கூகிளில் பணிபுரிந்த குறைந்தது 6,632 நபர்களை உள்ளடக்கியது. https://athavannews.com/2025/1425791
  8. //பெண்ணின் பெயர் என்ன ???? இலங்கை மொழிகள் சிங்களம் தமிழ் பேசுவாளா ??? என்ன மாற்றங்கள் கொண்டு வர உள்ளார்??? நம்ம நாட்டை ஜேர்மன்காரர். அட்டையை போட்டு விடுவார்கள் போல்லுள்ளது. 🤣🤣. // @Kandiah57 பெண்ணின் பெயர் தெரியவில்லை. அவருக்கு ஆங்கிலமும், ஜேர்மன் மொழியும் தெரியும். அது போதும்தானே. இனி வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்க, சுமந்திரன் தேவையில்லை. 😂 இவவை வைத்தே அலுவல் பார்க்கலாம். 😃 நீங்கள் எல்லாரும் புலம் பெயர் தேசங்களில் தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராக வரும் போது, ஜேர்மன்காரி நம்ம நாட்டில் போட்டியிடுவதில் என்ன தவறு. 🤣
  9. உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்! மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மன் நாட்டவர் ஒருவர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்று தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜேர்மன் பெண் ஒரு சுயேச்சைக் குழுவின் வேட்பாளராக கலேவல பிரதேச சபைக்கு போட்டியிட உள்ளார். வைப்புத்தொகையை செலுத்திய பின்னர், இலங்கையில் மாற்றங்களைக் கொண்டுவரும் நம்பிக்கையுடன் தான் போட்டியிடுவதாக ஜெர்மன் பெண் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். https://athavannews.com/2025/1425754 @குமாரசாமி, @Kandiah57, @Paanch, @nochchi, @Kavi arunasalam, @shanthy
  10. தேசபந்து தொடர்பில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றில் விசேட அறிக்கை! நீதிமன்றில் சரணடைந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (19) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார். பல நாட்களாக தலைமறைவாக இருந்த தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக அமைச்சர் அங்கு குறிப்பிட்டார். அத்துடன் நேற்று (18) குற்றப் புலனாய்வு திணைக்கள குழுவொன்று ஹோகந்தர பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபரின் வீட்டை சோதனையிட்டதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். 795 வெளிநாட்டு மதுபான போத்தல்களும், 214 மது போத்தல்களும், 1009 மதுபான போத்தல்களும் அங்கு காணப்பட்டதாகவும் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது துப்பாக்கிகள் என சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி ரக ஆயுதம் மற்றும் இரண்டு நவீன கையடக்கத் தொலைபேசிகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த கையடக்கத் தொலைபேசிகள் மூலம் பாரியளவிலான தகவல்களை வெளிக்கொணர முடியும். இது தொடர்பில் எதிர்காலத்தில் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார். இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று காலை மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். 2023 ஆம் ஆண்டு வெலிகமாவில் உள்ள ஒரு முக்கிய ஹோட்டலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் தேசபந்து தென்னகோன் தேடப்பட்டு வந்தார். மாத்தறை நீதிவான் நீதிமன்றம் தென்னகோனை கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது, அதன் பிறகு அவர் மாத்தறை நீதிவானின் உத்தரவை இடைநிறுத்த இடைக்கால உத்தரவைக் கோரி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். பின்னர், குற்றப் புலனாய்வுத் துறையின் கோரிக்கையின் அடிப்படையில், தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்தது. மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை இரத்து செய்யக் கோரி, இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனின் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த ரிட் மனுவை திங்கட்கிழமை (17) மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. https://athavannews.com/2025/1425749
  11. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருவதாக ப்ளூம்பெர்க் அறிக்கை! கடந்த காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வேகமாக வளர்ந்தது, இது சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் வலுவான உள்நாட்டு செயல்பாட்டைக் குறிப்பதாக ப்ளூம்பெர்க் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. 2024 டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.4% உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரத் துறை செவ்வாயன்று (19) தெரிவித்துள்ளது. இது ப்ளூம்பெர்க் கணக்கெடுப்பில் பொருளாதார வல்லுநர்களால் கணிக்கப்பட்ட 5.3% விரிவாக்கத்தை விட அதிகமாகும். 2024 ஜூலை-செப்டம்பர் காலத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்கள் முந்தைய 5.5% இலிருந்து 5.3% ஆகக் குறைக்கப்பட்டன. முழு ஆண்டிலும், பொருளாதாரம் 5% விரிவடைந்தது, முந்தைய ஆண்டு 2.3% சுருக்கத்திலிருந்து மீண்டது. 2022 ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் கடன் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குப் பின்னர், இலங்கை ஒரு திருப்புமுனையைத் தழுவியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி சுமார் 5% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தெற்காசிய நாடு இந்த மாதம் IMF கடன்களில் சுமார் $334 மில்லியன் பெற்றுள்ளதால், பொருளாதார மீட்சியை வலுப்படுத்த உதவியது. கடன் வழங்குநரிடமிருந்து தொடர்ந்து நிதியைப் பெற, எரிசக்தி விலைகளை அதிகரித்து நிதி அளவுருக்களை பூர்த்தி செய்ய வேண்டும். டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் தொழில்துறை உற்பத்தி ஒரு வருடம் முன்பு இருந்ததை விட 13.1% வளர்ச்சியடைந்துள்ளது, இது முந்தைய காலாண்டில் 10.1% ஆக இருந்தது. சேவைகள் துறை கடந்த காலாண்டில் 2.5% வளர்ச்சியடைந்தது, அதே நேரத்தில் விவசாய உற்பத்தி இந்த காலகட்டத்தில் 2.2% சுருங்கியது. 2025 ஆம் ஆண்டின் முதல் கொள்கைக் கூட்டத்தில், பணவீக்கம் இலக்கை அடைய உதவும் அதே வேளையில், பொருளாதார மறுமலர்ச்சியை ஆதரிக்கும் வகையில், இலங்கையின் மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை 8% இல் வைத்திருந்தது. அடுத்த கொள்கை முடிவு மார்ச் 26 அன்று எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. https://athavannews.com/2025/1425709
  12. வீதி விபத்தில் நெதர்லாந்து பெண் மரணம்! அம்பேபுஸ்ஸ – திருகோணமலை வீதியின் பல்வெஹெர பகுதியில் முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதியதில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தம்புள்ளையிலிருந்து ஹபரணை நோக்கிச் சென்ற கார் ஒன்று கடை ஒன்றின் முன் நிறுத்துவதற்காக வீதியில் இடதுபுறமாகத் திரும்பிய போது அதே திசையில் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று காரின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படாத போதிலும் அதே திசையில் பயணித்த மற்றுமொரு முச்சக்கரவண்டி மேற்படி வாகனங்கள் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென வீதியின் வலது பக்கம் திரும்பி எதிர்திசையில் வந்த லொறியுடன் மோதியுள்ளது. இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 02 வெளிநாட்டு ஆண்களும் 02 பெண்களும் படுகாயமடைந்ததுடன் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 54 வயதுடைய நெதர்லாந்து பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய லொறி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1425701
  13. பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் சரண்! பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று மாத்தறை நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இதேவேளை உயர் நீதிமன்றத்தால் தற்காலிகமாக சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்யுமாறு அனைத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகளும், பிரிவு அதிகாரிகளும் மற்றும் துணைப் போலீஸ் அதிகாரிகளும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அறிவுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1425695
  14. இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் தடை விதிப்பு! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரைகள் காரணமாக நாளை (20) முதல் மே 8 வரை நடைபெறும் நாடாளுமன்ற அமர்வுகளில் அர்ச்சுனாவின் உரைகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். மேலும், அவர் அவ்வப்போது தெரிவிக்கும் நாடாளுமன்றத்தை அவமதிக்கும், அநாகரீகமான கருத்துக்கள் ஹன்சாட் பதிவுகளிலிருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1425719
  15. போராட்டத்தில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது! பணிக்கு வருகை தராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரித்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையிலேயே தமிழக அரசு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அத்துடன் மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, ஏனைய விடுப்போ அரசு ஊழியர்கள் எடுக்கக் கூடாது என்றும், காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை சேகரிக்குமாறும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425746
  16. அமெரிக்காவை எதிர்க்க அவுஸ்திரேலியாவுடன் கை கோர்த்த கனடா! ஆர்க்டிக் பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் விதமாக கனடா அரசு பல பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் அவுஸ்திரேலிய அரசிடம் ரேடார் தொழில் நுட்ப சாதனங்களை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் குறித்த திட்டத்தின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியாவுடன் இணைந்து இராணுவ ரேடார் தொழில் நுட்ப அமைப்பை உருவாக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்க்டிக் பகுதிகளில் அமெரிக்க அரசு தமது ஆதிக்கத்தைச் செலுத்தி வரும் நிலையில், கனடா அரசு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425726
  17. எலோன் மஸ்க் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் குறிவைக்கப்படும் டெஸ்லா வாகனங்கள்! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தில் எலோன் மஸ்க்கின் சர்ச்சைக்குரிய பங்கு குறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்ததால், அமெரிக்காவில் உள்ள ஒரு சேவை மையத்தில் பல டெஸ்லா வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. அதே நேரத்தில் கார் உரிமையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் ஒரு டாக்ஸிங் வலைத்தளத்தில் கசிந்தன. லாஸ் வேகாஸில் அமைந்துள்ள டெஸ்லா சேவை மையத்தில் பல டெஸ்லா வாகனங்கள் செவ்வாய்க்கிழமை (18) தீக்கிரையாக்கப்பட்டன. இது தவிர கன்சாஸில் மேலும் பல டெஸ்லா வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவத்தை பயங்கரவாதச் செயலாக அமெரிக்க புலனாய்வுப் பிரிவி விசாரித்து வருகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. “இது டெஸ்லா வசதியின் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்” என்று லாஸ் வேகாஸ் காவல்துறையை மேற்கோள் காட்டி CNN செய்தி வெளியிட்டுள்ளது. டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், தீப்பிடித்த வாகனங்கள் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டு, சம்பவத்தை “பயங்கரவாதம்” என்று அழைத்தார். அரசாங்கத்தின் செயல்திறனை அதிகரிக்கும் முயற்சியில் மத்திய துறைகளில் வேலை வெட்டுக்களுக்கு எலோன் மஸ்க் அழுத்தம் கொடுத்ததற்காக அவர் எதிர்விளைவை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த சம்பவங்கள் வந்துள்ளன. இந்த சம்பவங்கள் டெஸ்லாவின் நிதி நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளன, நிறுவனம் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக விற்பனை சரிவை எதிர்கொள்கிறது. கடந்த வாரம், எலோன் மாஸ்க்கிற்கு ஆதரவளிக்கும் விதமாக ட்ரம்ப் ஒரு டெஸ்லா வாகனத்தை வாங்கினார். இதற்கிடையில், டெஸ்லாவின் துயரங்களை மேலும் அதிகரிக்கும் வகையில், ‘Dogequest’ என்ற டாக்ஸிங் வலைத்தளம், டெஸ்லா உரிமையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கசியவிட்டதாக நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. இந்த தளம் அமெரிக்காவில் உள்ள டெஸ்லா உரிமையாளர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களை வெளிப்படுத்துகிறது. https://athavannews.com/2025/1425732
  18. மற்றுமொரு கோர விமான விபத்து: 12 பேர் உயிரிழப்பு. மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில், (Honduras) 18 சுற்றுலாப் பயணிகளுடன் பயணித்த சிறிய ரக விமானமொன்று நேற்றைய தினம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை இவ்விபத்தில் ஐந்து பேர் உயிர் தப்பியுள்ளனர் எனவும் ஒருவர் மாயமாகியுள்ளார் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2025/1425697
  19. இதே கல்வி முறைதான் ஜேர்மனியில் உள்ளது. ஐந்தாம் வகுப்பில்... பிள்ளைகளை ஏற்ற கல்விக்கு பிரித்து அனுப்பி விடுவார்கள். நன்றாக படிக்கும் பிள்ளைகளை ஒரு பாடசாலைக்கும், நடுத்தரமானவர்கள் மற்றைய பாடசாலைக்கும், அதற்கு கீழானவர்கள் வாகனம் திருத்துதல், கட்டிடிட வேலை போன்ற தொழில் கல்விக்கும் தயார் படுத்தத் தொடங்கிவிடுவார்கள். அந்த வகுப்புகளில், இரண்டு வருடங்களில் தமது திறமையை காட்டினால் நன்றாக படிக்கும் பாடசாலைக்கும் அவர்களின் விருப்பத்துடன் அனுப்பி வைப்பார்கள். இது... மாணவர்களுக்கு சிறந்த பலனை தருகின்றது. தொழில் கல்வி பயின்ற பல மாணவர்கள்... தமது சொந்தக்காலில் பலரை வைத்து வேலை வழங்கும் முதலாளிகளாகவும் பரிணமித்து உள்ளார்கள்.
  20. உண்மைதான் ஏராளன். பொலிஸ்காரன் இன்னுமொரு போலிஸ்காரனை காட்டிக் கொடுக்க மாட்டான். அவர்கள் தமிழர்களைப் போல்... கோடாலிக் காம்புகள் அல்ல. 😂
  21. அதற்கு முதல்… கொழும்பில் தமிழரசு கட்சி போட்டியிடும் என்று சொன்னதும் “சுமந்திர தேரர்” தான். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.