Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. 26/11 மும்பை தாக்குதல்; அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா! 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் இந்தியாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரான தஹாவ்வூர் ஹுசைன் ராணா (Tahawwur Hussain Rana), புதன்கிழமை (9) அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் விரைவில் இந்தியா திரும்பவுள்ளார். 64 வயதான அவர் சிறப்பு தனி விமானம் மூலம் இந்தியாவின் டெல்லிக்கு அழைத்து வரப்படவுள்ளார். அவர் விமான நிலையத்தில் தரையிறங்கிய உடனேயே, அவரை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) காவலில் எடுத்து விசாரிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனடிய-அமெரிக்கரான தஹாவூர் ராணா, லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடையவர் மற்றும் 166 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற 2008 மும்பை தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவரான டேவிட் கோல்மன் ஹெட்லியின் நெருங்கிய நண்பர் ஆவார். இந்தியாவில், ராணா மீது குற்றவியல் சதி, இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்தல், கொலை, மோசடி மற்றும் சட்டவிரோத தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில் அமெரிக்காவின் இந்த நாடு கடத்தல் பிரதமர் நரேந்திர மோடியின் இராஜதந்திரத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார். https://athavannews.com/2025/1428144
  2. தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளர் பதில் கூற வேண்டும்.. மெளனம் காத்தால் சம்மதமா !!!! பல நூறு மாணவர்களின் கல்வி சார்ந்த பொறுப்பை நடுத்தெருவில் விட்டுவிட்டு மாநகர பதவிக்காக ஜேவிபியின் பின்னால் அலையும் பல்கலைக்கழக விரிவுரையாளர். தற்போது ஜேவிபியின் பின்னால் அலையும் கபிலன் என்ற யாழ்பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அவருக்கு வழங்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்வி சார்ந்த பல பொறுப்புக்களை நட்டநடுத்தெருவில் விட்டு விட்டு ஜேவிபி காட்டிய பதவி ஆசையில் ஜேவிபியிற்கு பின்னால் திரிகிறார். யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத் தகவல்களின் படி கபிலன் என்ற நபர் அவருக்கு வழங்கப்பட்ட பல பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவுசெய்து கையளிக்காமல் நடுத்தெருவில் விட்டுவிட்டு தனது ராஜனாமா கடிதத்தினை துணைவேந்தரிடம் கையளித்துவிட்டு வெளியேறியதாக அறிய முடிகிறது. கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல மாணவஅணிகளின் பரீட்சை வினாத்தாள்களை திருத்தி கையழிக்கவில்லை என குற்றம் சாட்டடப்படடுகிறது. அது மட்டுமல்ல பல மாணவ அணிகளின் விரிவுரைகளை நிறைவுசெய்ய வில்லை எனவும் அவற்றை அரைகுறையாக விட்டு தேர்தலுக்காக பல்கலைக்கழகத்தினை விட்டு வெளியேறியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் மாணவர்களின் செய்முறை பயிற்சிகள் மற்றும் திட்டங்களையும் நிறைவுசெய்யாமல் பாதியில் விட்டுச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்தோடு இறுதிவருட மாணவர்களின் ஆய்வு மேற்பார்வை விடயங்களையும் அரைகுறையாக விட்டுச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட பணிகளுக்காக மாதாந்தம் பல இலட்சம் ரூபா ஊதியமாகப்பெற்ற ஒருவிரிவுரையாளர் ஒரு பொறுப்புணர்வின்றி தனது பொறுப்புக்களையும் கடமைகளையும் கையளிக்காமல் மாநகர சபைப்பதவிக்காக ஜேவிபியின் காலில் விழுந்துள்ளார். பல்கலைக்கழக விடுப்பில் பல லட்சம் ரூபா மாதாந்த ஊதியத்துடன் உயர்படிப்பை படித்து நிறைவுசெய்த பின்னர் தனது கல்வி முன்னேற்றத்திற்கு அடித்தனமாக இருந்த பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டிருந்த பொறுப்புக்களையும் உரிய முறையில் கவனிக்க தவறிய ஒருவர் ஒரு பொறுப்புள்ள கல்விமானாக இருக்கமுடியாது. இத்தகையை பொறுப்பற்ற ஒருவர் இனவாத சக்தியான ஜேவிபியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு என்னத்தை கிழிக்க போகிறார் என்பது தான் தமிழ் மக்களுக்கு முன்னால் உள்ள கேள்வி......... ஜேவிபியின் வாலில் தொங்கிக்கொண்டிருக்கும் கபிலன் மாநகர சபைத்தேர்தலில் வென்றாலும் சரி தோற்றாலும் சரி பதவியாசையில் தமிழினத்திற்கு துரோகம் இழைத்தவர்களின் பட்டியலில் இடம்பிடிப்பார் என்பது தான் ஜதார்த்தம்........ Sornalingam Varnan
  3. கடந்த ஒக்ரோபர் மாதம்... அச்சுவேலி – வசாவிளான் வீதியை திறந்த போது.. சுமந்திரன் பொங்கல் சாப்பிட்ட காட்சி.
  4. யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – கள ஆய்வில் ஈடுப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட குழுவினர்! யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகைதந்த இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரி, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் ஆகியோர் இணைந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான கலந்துரையாடலில் ஈடுப்பட்டதோடு, கள விஜயத்திலும் ஈடுப்பட்டுள்ளனர். மண்டைத்தீவு பகுதியில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட காணி தொடர்பாகவும் அதனுடைய தற்போதைய நிலைமை தொடர்பாகவும் நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, இதற்கான திட்ட முன்மொழிவு பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது தொடர்பாகவும் இதன்போது பேசப்பட்டது. வடக்கு பிராந்தியத்தில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த கிரிக்கெட் மைதானத்தை அமைப்பதற்கான ஆரம்ப திட்டங்கள் குறித்து விவாதித்தனர். இந்த முயற்சியினால் வடக்கு மாகாணத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கப்பெருவதோடு, கிரிக்கெட் உட்கட்டமைப்பு மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சனத் ஜயசூரிய அவர்கள் மைதானத்தின் கட்டுமானத்திற்காக நிதி உதவி வழங்குமாறு கடந்த வாரம் வருகை தந்த இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. https://athavannews.com/2025/1428183
  5. டொமினிகன் குடியரசில் இரவு விடுதி ஒன்றில் கூரை இடிந்து வீழந்து ஏற்பட்ட 184 பேர் உயிரிழப்பு! டொமினிகன் குடியரசின் சாண்டோ டொமிங்கோவில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (08) கூரை இடிந்து வீழந்ததில் குறைந்தது 184 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த பேரழிவு தரும் இந்த அனர்த்தத்தில் குறைந்தது நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. மோப்ப நாய்களின் உதவியுடன் 300க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சம்பவத்தின் போது குறித்த இரவு விடுத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், விபத்தில் 500 முதல் 1,000 பேர் வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. Athavan Newsடொமினிகன் குடியரசில் ஏற்பட்ட அனர்த்தத்தில் 184 பேர் உயிரி...டொமினிகன் குடியரசின் சாண்டோ டொமிங்கோவில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (08) கூரை இடிந்து வீழந்ததில் குறைந்தது 184 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த பேரழிவு தரும் இந்த அனர்த்தத்தி...
  6. அமெரிக்காவின் வரிகள்; சீனாவின் அழைப்பை நிராகரித்த அவுஸ்திரேலியா! அமெரிக்காவின் வரிகளை எதிர்கொள்ள இணைந்து செயல்படுவதற்கான பீஜிங்கின் முன்மொழிவை அவுஸ்திரேலியா இன்று (10) நிராகரித்தது. அதற்கு பதிலாக அதன் வர்த்தகத்தை தொடர்ந்து பன்முகப்படுத்துவதாகவும், அதன் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான சீனாவை நம்பியிருப்பதைக் குறைப்பதாகவும் அவுஸ்திரேலியா கூறியுள்ளது. உலகில் நடக்கும் எந்தவொரு போட்டியிலும் நாங்கள் சீனாவுடன் கைகோர்க்கப் போவதில்லை என்று அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ரிச்சர்ட் மார்லஸ் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, இந்தியா, பிரித்தானியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் அவுஸ்திரேலியா தனது பொருளாதார மீள்தன்மையை உருவாக்கும் என்று அவர் கூறினார். எனினும் இந்த அறிவிப்பானது அவுஸ்திரேலியாவிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் அது தனது பொருட்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை சீனாவிற்கு அனுப்புகிறது. அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் அவுஸ்திரேலியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் 5% க்கும் குறைவாகவே உள்ளன. அமெரிக்காவிற்கும் பிற முக்கிய பொருளாதாரங்களுக்கும் இடையிலான வரிகள் மற்றும் பிற வர்த்தக கட்டுப்பாடுகள் குறித்த தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மை, நாட்டில் வணிக முதலீடு மற்றும் வீட்டுச் செலவு முடிவுகளில் குளிர்ச்சியான விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று அவுஸ்திரேலியாவின் மத்திய வங்கி எச்சரித்துள்ளது. இதனிடையே, அதிர்ச்சியூட்டும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (09), பல நாடுகள் மீதான அதிக வரிகளை தற்காலிகமாகக் குறைப்பதாகக் கூறினார். ஆனால் சீனாவை குறிவைத்து தொடர்ந்து வரிகளை உயர்த்தினார். அதன்படி 104% இலிருந்து 125% ஆக வரி உயர்த்தப்பட்டது. இது உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான வர்த்தகப் போரை மேலும் அதிகரித்தது. இதனிடையே, சீனா அனைத்து அமெரிக்க இறக்குமதிகளுக்கும் 84% பதிலடி வரிகளை விதித்துள்ளது, இது பீஜிங்கிற்கும் வொஷிங்டனுக்கும் இடையிலான வர்த்தகப் போரை ஆழப்படுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428170
  7. கடந்த ஒக்ரோபர் மாதம்... சுமந்திரன், அச்சுவேலி – வசாவிளான் வீதியை.. தான் சொல்லித்தான் திறந்தது என்று "பீலா" விட்டு.. பொங்கல் பொங்கி தின்ற மாதிரி, இன்று திறக்கப் பட்ட பொன்னாலை – பருத்தித்துறை வீதியும் தன்னால் தான் திறக்கப் பட்டது என்று "பீலா" விடவில்லையா. 😂 அல்லது தனது சுத்துமாத்துகள் எல்லாம், இனி வேலைக்கு ஆகாது என்று சுமந்திரன் அமைதியாக இருக்கின்றாரா. 🤣
  8. எல்லோரும் “பென்சன்” எடுக்கின்ற வயதில் உள்ளவர்கள் போலுள்ளது.
  9. யாழில் பாதை திறப்பு! யாழ்ப்பாணம் பலாலி வீதியில் வசாவிளான் சந்தியில் இருந்து பருத்தித்துறை- பொன்னாலை வீதியுடன் இணையும் பலாலி சந்தி (T சந்தி) வரையான 2.5 கிலோமீற்றர் நீளமான வீதி மக்களின் பாவனைக்காக 35 ஆண்டுகளின் பின்னர் இன்றைய தினம் (10) ஆம் திகதி அதிகாலை 6 மணிமுதல் இராணுவத்தினரால் கட்டுப்பாடுகளுடன் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் 1 ஆம் திகதி இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த வசாவிளான் மத்திய கல்லூரியில் இருந்து வசாவிளான் சந்தியூடாக அச்சுவேலி செல்லும் வீதி திறக்கப்பட்டது. இன்று இரண்டாம் கட்டமாக வசாவிளான் சந்தியிலிருந்து- பலாலி T சந்திவரை திறக்கப்பட்டதையடுத்து பலாலி வீதி இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து முழுமையாக மீண்டுள்ளது. Vaanam.lk
  10. சீனாவுக்கு 125% வரி; ஏனைய நாடுகளுக்கான கட்டணம் இடைநிறுத்தம் – ட்ரம்ப் உத்தரவு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை (10) பல நாடுகளுக்கான தனது பரஸ்பர கட்டணத்தை 90 நாள் இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளார். இந்த 90 நாள் காலகட்டத்தில், கணிசமாகக் குறைக்கப்பட்ட 10 சதவீத பரஸ்பர கட்டணம் மட்டுமே அமுலில் இருக்கும் என்று அவர் கூறினார். எனினும், சீனா மீதான வரிகளை உடனடியாக 125 சதவீதமாக அதிகரிப்பதாக அவர் அறிவித்தார். இது முன்னர் அறிவிக்கப்பட்ட 104 சதவீதத்திலிருந்து அதிகமாகும். இந்த அறிவிப்பானது உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடையேயான உயர்மட்ட மோதலை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட ட்ரம்பின் பரஸ்பரக் கட்டணங்கள் நடைமுறைக்கு வந்த 24 மணி நேரத்துக்குப் பின்னர், ஒரு பெரிய வர்த்தகப் போர் குறித்த அச்சங்களைத் தூண்டியதுடன், மந்தநிலை குறித்த கவலைகளையையும் எழுப்பியது. இந்த எழுச்சி சர்வதேச பங்குச் சந்தைகளில் இருந்து டிரில்லியன் கணக்கான டொலர்களை அழித்தது மற்றும் ட்ரம்பின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தோன்றிய அமெரிக்க அரசாங்க திறைசேரி வருவாயில் கொந்தளிப்புக்கு வழிவகுத்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428138
  11. கனடிய விமான நிலையத்தில் மகனை கடத்திய பெண் கைது. டொரொண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் தனது சிறிய மகனை நாட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்ல முயற்சித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தனது மனைவி ஆறு வயது மகனை கனடாவை விட்டு வெளியே அழைத்துச் செல்லலாம் என சந்தேகம் தெரிவித்து புகார் செய்ததைத் தொடர்ந்து காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. பீல் பிராந்திய காவல்துறை மற்றும் கனடா எல்லைப் பாதுகாப்பு சேவையின் உதவியுடன், அந்த பெண்ணும், குழந்தையும் பியர்சன் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர். 36 வயதுடைய குறித்த பெண் குழந்தையை கடத்தினார் எனும் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை தந்தையிடம் பாதுகாப்பாக மீளவளிக்கப்பட்டதாகவும், சந்தேகநபர் ஒன்டாரியோவில் உள்ள பெர்த் நகர நீதிமன்றத்தில் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டதாகவும் காவல்துறை கூறியுள்ளது. https://athavannews.com/2025/1428137
  12. சி.ஐ.டி.யில் ஆஜரான கெஹெலிய! முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (09) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார். தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஆஜரானதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல 07 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு அவருக்கு பிணை வழங்கப்பட்டது. இரண்டு மூத்த அரச அதிகாரிகளின் உதவியுடன் போலி ஆவணங்களை உருவாக்கி 22,500 தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசி குப்பிகளை ஒரு மருந்து நிறுவனம் இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து சிஐடி விசாரணையைத் தொடங்கிய பின்னர், அவர் பல சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், மேற்படி தரமற்ற மருந்தை இறக்குமதி செய்ததன் மூலம் ரூ.130 மில்லியன் நிதி மோசடி நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2025/1428016
  13. சட்டத்தை மதித்து நடக்கும் சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும்! – ஜனாதிபதி தெரிவிப்பு, ”கையூட்டல் மற்றும் ஊழல் குற்றங்களிலிருந்து அரசியல் பொறிமுறையை மீட்டெடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதால் அதிகாரிகளும் விரைவில் சரியான பாதைக்குத் திரும்ப வேண்டும்” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ‘தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் 2025-2029’ வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது நாட்டின் அரச நிறுவன கட்டமைப்பின் கௌரவம் மற்றும் பெறுமதிகளை அழித்து, கையூட்டல் மற்றும் ஊழல் ஆட்சி மேலோங்கியிருந்ததாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் அரச சேவையில் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்கவில்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன் அதிகாரிகள் இனியும் மாறத் தயாராக இல்லையெனில், மே மாதத்திற்குப் பின்னர் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஊழலுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசியல் பழிவாங்கல் அன்றி, மனிதாபிமான கடமை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் ”சட்டத்தை மதிக்கும், சட்டத்திற்கு அஞ்சும் சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும், நாட்டிலிருந்து கையூட்டல் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொறுப்பை அடுத்த தலைமுறையின் மீது சாட்டாமல் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அதற்குத் தீர்வு அளிக்கப்படும்” எனவும் ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார். மேலும்” மக்களின் ஒவ்வொரு ரூபாய்க்கும் பொறுப்புக்கூறும் வகையிலான தேசிய நிகழ்ச்சி நிரலின் மூலம் இலங்கையை உலக நாடுகளுக்கு முன்பாக உயர்த்தி வைக்கும் பொறுப்பை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1428143
  14. யாழில் கடற்றொழில் அமைச்சரின் வருகைக்காகக் காத்திருந்த மீனவர்களுக்கு ஏமாற்றம்! யாழ், சுழிபுரத்திற்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,வருகை தரவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில், அவரது வருகைக்காக வெகுநேரம் காத்திருந்த மீனவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று முன் தினம் சுழிபுரம் காட்டுப்புலம் மீனவர்களை காலை 10 மணியளவில் கடற்தொழிலாளர் மண்டபத்தில் ஒன்று கூடுமாறும், கடற்றொழில் அமைச்சர் உட்பட்ட குழு மூன்று வாகனங்களில் வருகை தரவுள்ளனர் எனவும், அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களுக்கு பிரதேச கடற்றொழில் பரிசோதகர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சரின் வருகைக்காக காலை 10 மணியிலிருந்து பி.ப 2 மணி வரை மீனவர்கள் காத்திருந்துள்ள நிலையில் அவர்கள் வருகை தரப்போவதில்லை எனத் தகவல் கிடைத்துள்ளதாகவும், இதனையடுத்து மீனவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது அப்பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428122
  15. ரணில் ஜனாதிபதியாக இருந்திருந்தால் 44% அமெரிக்க வரியை ஒரே நாளில் நீக்கியிருப்பார் – ராஜித ரணில் விக்ரமசிங்க இன்னும் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இலங்கை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 44% வரியை ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நீக்க வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார். யூடியூப் அலைவரிசை ஒன்றுக்கு அளித்த செவ்வியின் போது பேசிய அவர், பில்லியனர் தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் ஆலோசனையின் பேரில் ட்ரம்ப் நிர்வாகத்தின் போது இந்த வரி விதிக்கப்பட்டதாகக் கூறினார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர்களில் எலோன் மஸ்க் ஒருவர் என்றும், அந்த வலுவான நட்பைப் பயன்படுத்தி இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க பேச்சுவார்த்தை நடத்தியிருக்கலாம் என்றும் அவர் மேலும் கூறினார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இல்லாததால் இலங்கை அந்த வாய்ப்பை இழந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். ரணில் விக்ரமசிங்கே பதவியில் இருந்திருந்தால், 44% வரியை முழுமையாக நீக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் 24% ஆகக் குறைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1428090
  16. யாழில். 35 ஆண்டுகளின் பின் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி! யாழ்.வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதியானது கடந்த 1990ஆம் ஆண்டு முதல் மக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வடக்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் காங்கேசன்துறை சென்று அங்கிருந்தே பலாலி வடக்கிற்கு செல்லும் நிலைமை காணப்பட்டு வந்த நிலையில் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் சுமார் 15 வருட காலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் குறித்த வீதியானது இன்றைய தினம் வியாழக்கிழமை முதல் , பல்வேறு நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் மக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டப்பட்டுள்ளது. குறித்த வீதி ஊடாக காலை 06 மணி முதல் மாலை 05 மணி வரை மாத்திரமே மக்கள் பயணிக்க முடியும் என்றும் வீதியில் பயணிப்பவர்கள் வீதியின் இடையில் வாகனத்தினை நிறுத்துதல், வாகனங்களைத் திருப்புதல், பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுத்தல், ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் நடைபயணம் மற்றும் பேருந்து தவிர்ந்த பாரவூர்திகள் குறித்த வீதியூடாக செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மணித்தியாலத்துக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் மாத்திரமே பயணிக்க வேண்டும். சாரதிகளுக்கான அடையாள ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் இவ்வாறான கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனும் அறிவுறுத்தல் பதாகை வீதியில் தமிழ் மொழியில் எழுதி காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428116
  17. ஜெயலலிதாவுக்கு எதிராகப் பேசியது ஏன்?- ரஜினி விளக்கம். மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பனின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று, ‘ஆர்.எம்.வி. தி கிங் மேக்கர்’ என்ற ஆவணப் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த முன்னோட்டக் காட்சியில், நடிகர் ரஜினிகாந்த் ஆர்.எம்.வீரப்பன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ஜெயலலிதாவுக்கு எதிராக நான் குரல் கொடுத்ததற்கு சில காரணங்கள் இருந்தால்கூட, இந்த காரணம் முக்கியமானது. இதுகுறித்து ஜெயலலிதாவிடம் நான் பேசுவதாக ஆர்.எம்.வி.யிடம் கூறினேன். ஆனால், ஜெயலலிதா ஒரு முடிவெடுத்தால் மாற்ற மாட்டார், அவரிடம் பேசி உங்கள் மரியாதையை நீங்கள் இழக்க வேண்டாம். அப்படி சொல்லி அங்கு சேர வேண்டிய அவசியமில்லை எனத் தெரிவித்துவிட்டார்” என்றார். https://athavannews.com/2025/1428070
  18. பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்களை வாங்கும் இந்தியா! பிரான்சிடம் இருந்து 26 ரபேல் விமானங்களை வாங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளது. விமானப்படையில் 36 ரபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கடற்படைக்கும் ரபேல் விமானங்களை வாங்க மத்திய அரசு பேச்சு வார்ததை நடத்தி வருகின்றது. இந்நிலையில், பிரான்சிடம் இருந்து இந்திய பெறுமதியில் 63,000 கோடி ரூபாய் செலவில் 26 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. அந்தவகையில் ஒற்றை இருக்கை கொண்ட 22 விமானங்கள், இரண்டு இருக்கை கொண்ட 4 விமானங்கள் என மொத்தம் 26 ரபேல் விமானங்களை இந்தியா வாங்குகிறது. இதுதொடர்பாக இந்தியா, பிரான்ஸ் இடையே விரைவில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428076
  19. ஹொலிவூட் திரைப்படங்களுக்குச் சீனாவில் தடை விதிக்கத் தீர்மானம்! சீன அரசு ஹொலிவூட் திரைப்படங்களுக்குத் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 104% வரி விதிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுடன் அமெரிக்கா மேற்கொள்ளும் வணிகத்தில் திரைப்படத் துறை மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. குறிப்பாக அமெரிக்காவில் எடுக்கப்பட்டு வெளியாகும் திரைப்படங்கள், சீனாவில் அதிக அளவிலான வசூலைக் குவித்து வருகின்றன. இதன்காரணமாக ஏராளமான ஹொலிவூட் திரைப்படங்கள் மொழிமாற்றம் செய்யப்பட்டு நேரடியாகத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டும் வருகின்றன. ஹொலிவூட் படங்கள் உலகளவில் செய்யும் வசூலில் 10% சீனாவில் இருந்து மட்டும் கிடைக்கிறது என்பதும் குறிப்பிட்டுக் கூறக் கூடிய விடயமாகும். இந்நிலையில் அமெரிக்கா விதித்துள்ள வரி விதிப்பின்மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான திரைப்பட வணிகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1428021
  20. சீனாவை தவிர பிற நாடுகளுக்கான வரி விதிப்பு தற்காலிகமாக நிறுத்தம். அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 125 வீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மேலும், இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு கடந்த 2ஆம் திகதி அமெரிக்கா அறிவித்த புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னதாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை இரட்டிப்பாக்கியதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி வழங்கும் வகையில் சீனா இன்று அமெரிக்க பொருட்களுக்கு 84 வீத வரி விதிப்பை அமுல்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்கா சீன பொருட்களுக்கான வரியை 125 வீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மருந்துப் பொருட்கள் மீதும் விரைவில் வரி உயர்வு மருந்துப் பொருள்கள் மீதான வரி உயர்வு விரைவில் அறிவிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் மருந்துப் பொருள்களின் உற்பத்தி அதிக அளவு இல்லையென்றாலும், மருத்துவத் துறை வணிகத்தைக் கட்டுப்படுத்தும் முக்கிய நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. இதனால், மற்ற நாடுகளின் மருத்துவ இறக்குமதிகளுக்கு விரைவில் புதிய வரியை டிரம்ப் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் குடியரசுக் கட்சியினருக்கான நிதி திரட்டும் விழாவின் இரவு உணவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஜனாதிபதி டிரம்ப், ”புதிய வரி விதிப்பின் மூலம் உலக நாடுகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன. இது அமெரிக்காவுக்குக் கிடைத்த வெற்றி. விரைவில் மருந்துப் பொருட்களுக்கான வரி உயர்வை எதிர்பார்க்கலாம். மருந்துப் பொருட்களின் விற்பனை சந்தையாக அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகிப்பதால், இந்த விலையேற்றத்தால் உலக நாடுகள் நம்மிடம் வரவேண்டிய நிலை ஏற்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு மருந்து உற்பத்தி கணிசமாக இல்லாதது குறித்து நீண்ட காலமாக அமெரிக்கா வருந்திவரும் நிலையில், நாட்டிற்குள் அதிக மருத்துவத் துறை உற்பத்திகளைக் கொண்டுவர வரிகளை உயர்த்தும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. எஃகு, அலுமினியம், ஆட்டோமொபைல், தாமிரம் மற்றும் மின்னணு சில்லுகள் (சிப்) உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு ஏற்கனவே வரி உயர்வை அறிவித்துள்ள நிலையில், விரைவில் மருந்து பொருள்களுக்கும் புதிய வரி விதிக்கப்படும் என்ற டிரம்ப்பின் அறிவிப்பு சந்தை முதலீட்டாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1428133

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.