Everything posted by தமிழ் சிறி
-
இலங்கையில் 5 நிமிடங்களில் மிருகங்களை கணக்கெடுக்கும் திட்டம் - இது சாத்தியமாகுமா?
- மது ஊழல் போராட்டம்; அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கைது!
மது ஊழல் போராட்டம்; அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கைது! தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட தமிழக பாஜக தலைவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (டாஸ்மாக்) மதுபான ஊழலுக்கு எதிராக இன்று (17) திட்டமிட்ட போராட்டத்திற்கு முன்னதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 11 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம், போராட்ட இடத்தை அடைவதற்கு முன்பே தலைவர்கள் வீட்டுக் காவலில் கைது செய்யப்பட்டனர் அல்லது தடுத்து வைக்கப்பட்டனர். தனது தடுப்புக்காவல் குறித்து பேசிய சௌந்தரராஜன், அவர்கள் எங்களை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. எனது 300 காரியகர்த்தாக்கள் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் வெளியே செல்வதை அவர்கள் விரும்பவில்லை. டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் 1,000 கோடி (இந்திய ரூபா) ஊழலை நாங்கள் கண்டிக்கிறோம். நான் வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும், ஆனால் அவர்கள் என்னை அதைச் செய்ய அனுமதிக்கவில்லை” என்றார். இந்தக் கைதுகளைக் கண்டித்து, திமுக அரசு பயத்தில் செயல்படுவதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார். இது குறித்து எக்ஸில் பதிவிட்டுள்ள பதிவில் அவர், “பயத்தால் நடுங்கும் திமுக அரசு, அதன் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளை போராட்டத்தில் பங்கேற்க விடாமல் வீட்டுக் காவலில் வைத்துள்ளது. ஜனநாயக ரீதியாக நாங்கள் போராட்டத்தை அறிவித்ததாலா நீங்கள் இதுபோன்ற கோழைத்தனமான செயல்களில் ஈடுபடுகிறீர்கள்? திகதி அறிவிக்காமல், திடீரென்று ஒரு நாள் போராட்டம் நடத்தினால் உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு மாநில மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (டாஸ்மாக்) சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் மதுபான ஊழல் தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் (ED) தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதிக விலை நிர்ணயம், கையூட்டு மற்றும் ஊழல் தொடர்பாக மூன்று குற்றப் பத்திரிகைகளை ED பதிவு செய்துள்ளது. இதில் டாஸ்மாக் நடவடிக்கைகளில் ரூ.1,000 கோடி முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் தமிழ்நாடு முழுவதும் பல சோதனைகளை இந்த நிறுவனம் நடத்தியது. இந்தக் குற்றச்சாட்டுகளை திமுக அரசு கடுமையாக மறுத்து, அவற்றை அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று நிராகரித்துள்ளது. பாஜகவின் இந்தப் போராட்டம் சர்ச்சையைத் தூண்டும் முயற்சி என்றும், எதிர்க்கட்சிகள் தலைமையிலான மாநிலங்களை மத்திய அமைப்புகள் குறிவைப்பதாகவும் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். https://athavannews.com/2025/1425494- நாஜி பிரசாரத்தை முறியடிக்க தொடங்கப்பட்ட 'வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா' நிறுவனத்தை மூட டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்
வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை செயல் இழக்க செய்ய டொனால்ட் டிரம்ப் உத்தரவு! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் உத்தரவை தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இயங்கும் வொய்ஸ் ஒவ் அமெரிக்கா (Voice Of America) செயல் இழக்கும் நிலை உருவாகியுள்ளது. வொய்ஸ் ஒவ் அமெரிக்கா (Voice Of America) தனக்கு எதிரானது எனவும் தீவிரவாத போக்குகொண்டது எனவும் குற்றம்சாட்டியுள்ள டொனால்ட் டிரம்ப் அதனை செயல் இழக்க செய்யும் உத்தரவில் கைச்சாத்திட்டுள்ளார். டிரம்பின் இந்த உத்தரவு வரிசெலுத்துவோர் இனி தீவிரபிரச்சாரங்களிற்கு அடிமையாகாமல் இருப்பதை உறுதி செய்யும் என தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை தனது அறிக்கையில் வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை விமர்சித்து அரசியல்வாதிகள் வலதுசாரி ஊடகங்கள் தெரிவித்த கருத்துக்களை இணைத்துக்கொண்டுள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது நாஜிகளின் பிரச்சாரத்தை எதிர்கொள்ள வானொலி சேவையாக உருவாக்கப்பட்ட வொய்ஸ் ஒவ் அமெரிக்கா (Voice Of America) ஒருவாரத்திற்கு சர்வதேச அளவில் மில்லியன் கணக்கான மக்களை சென்றடைவதாக தெரிவிக்கப்படுகின்றது. டிரம்பின் உத்தரவு வொய்ஸ் ஒவ் அமெரிக்கா (Voice Of America) அதன் முக்கியமான பணியை செய்யமுடியாமல் செய்துள்ளது, அமெரிக்காவின் எதிர் நாடுகளான ரஸ்யா ஈரான் சீனா போன்றவை அமெரிக்காவை அவமதிப்பதற்காக , அவமானத்தை ஏற்படுத்துவதற்கான கதையாடல்களை உருவாக்குவதற்கு மில்லியன் டொலர்களை செலவிடும் நேரத்தில் எங்களால் அதற்கு எதிரான முக்கியமான பணியைமுன்னெடுக்க முடியாமல் உள்ளது என வொய்ஸ் ஒவ் அமெரிக்காவின் இயக்குநர் மைக் அப்ரமோவிட்ஸ் தெரிவித்துள்ளார். அதேவேளை டிரம்பின் இந்த உத்தரவு சுதந்திரமான ஊடகங்கள் குறித்த அமெரிக்காவின் நீண்ட கால அர்ப்பணிப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என அமெரிக்காவின் தேசிய ஊடக கழகம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1425486- வெனிசுலாவைச் சேர்ந்த 200 பேரை எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா!
வெனிசுலாவைச் சேர்ந்த 200 பேரை எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்பியது அமெரிக்கா! வெனிசுலாவைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களையும், சட்டவிரோத குடியேற்ற வாசிகளையும் எல் சால்வடாரில் உள்ள சிறைக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவரவர் சொந்த நாடுகளுக்கு டொனால்ட் ரம்ப் தலைமையிலான அரசு திருப்பி அனுப்பி வருகிறது. மேலும், சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், வெனிசுலாவைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள், போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களை ட்ரம்ப் தலைமையிலான அரசு அனுப்பி வைத்துள்ளது. அமெரிக்காவில் கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை அடைத்து வைப்பதற்காக, பயன்படுத்தப்பட்ட வனப்பகுதியை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ள தனிமை சிறையிலேயே அவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்க்காலத்தில் மட்டுமே பயன்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட பிரத்யேக சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன் இப்படி கைதிகளை வேறு நாட்டு சிறைக்கு அனுப்பிய நடவடிக்கை இரண்டு முறை மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்பும் சட்டத்தை 14 நாட்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிடுவதற்கு முன்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களை சிறையில் வைத்து பராமரிக்கத் தேவையான நிதியுதவியையும் அளிக்க எல் சால்வடார் நாட்டுடன் அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425508- பசுபிக் பெருங்கடலில் 95 நாட்களாக காணாமல் போன பெருவியன் மீனவர் மீட்பு!
பசுபிக் பெருங்கடலில் 95 நாட்களாக காணாமல் போன பெருவியன் மீனவர் மீட்பு! பசுபிக் பெருங்கடலில் 95 நாட்கள் காணாமல் போய், கரப்பான் பூச்சிகள், பறவைகள் மற்றும் கடல் ஆமைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்த பெருவியன் மீனவர் ஒருவர், தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி, தெற்கு பெருவியன் கடற்கரையில் உள்ள மார்கோனா என்ற நகரத்திலிருந்து மீன்பிடிப் பயணத்திற்காக மாக்ஸிமோ நாபா காஸ்ட்ரோ என்ற 61 வயதுடைய நபர் புறப்பட்டார். இரண்டு வார திட்டமிடப்பட்ட பயணத்திற்கான உணவை அவர் கொண்டு சென்றார். ஆனால், பத்து நாட்களுக்குப் பின்னர் புயல் காற்று அவரது படகை திசைதிருப்பியது. இதனால், அவர் பசுபிக் பெருங்கடலில் தத்தளித்ததுடன், காணாமல் போனார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் தேடுதலைத் தொடங்கினர், ஆனால் பெருவின் கடல்சார் ரோந்துப் படையினரால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், கடந்த புதன்கிழமை ஈக்வடார் ரோந்துக் கப்பலான டான் எஃப் அவரை கடற்கரையிலிருந்து 1,094 கிமீ (680 மைல்) தொலைவில், நீரிழப்பு மற்றும் ஆபத்தான நிலையில் கண்டுபிடித்து மீட்டது. மாக்சிமோ தனது படகில் மழைநீரை நிரப்பி அருந்தியும், கிடைத்ததைச் சாப்பிட்டு உயிர் பிழைத்ததாகவும் கூறினார். வெள்ளிக்கிழமை, ஈக்வடார் எல்லைக்கு அருகிலுள்ள பைட்டாவில் தனது சகோதரருடன் ஒரு உணர்ச்சிபூர்வமான சந்திப்பில், கடல் ஆமைகளை நாடுவதற்கு முன்பு கரப்பான் பூச்சிகள் மற்றும் பறவைகளை எப்படி சாப்பிட்டேன் என்பதை விவரித்தார். அவரது கடைசி 15 நாட்கள் உணவு இல்லாமல் கழிந்ததாகவும் படகில் தத்தளித்த போது, தனது இரண்டு மாத பேத்தி உட்பட தனது குடும்பத்தினரை நினைத்தது வருந்தியதாகவும் கூறினார். மீட்பின் பின்னர் மாக்சிமோ, பெருவியன் தலைநகர் லிமாவிற்கு விமானத்தில் கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைகளுக்காக பைட்டாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425522- சிந்தனைக்கு சில படங்கள்...
வாஸ்தவமான உண்மை சுவியர். 🙂 இப்பதிவை பார்த்து மனம் பின்னோக்கி பாய்ந்தது. நன்றி.- கருத்து படங்கள்
- பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை - நிராகரித்தார் ரணில்
- தேசபந்து தென்னகோன் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்ய உத்தரவு
- யூடியூப்பர்களும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன்.
யூடியூப்பர்களும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த யூத எழுத்தாளர் ஆகிய ஆர்தர் கோஸ்லரிடம் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கூறுங்கள் என்று கேட்ட பொழுது, அவர் சொன்னார், மந்தர்களே-mediocres- எல்லா இடங்களிலும் முதன்மை வகிப்பார்கள் என்று. அவர் எதைக்கருதி அவ்வாறு சொன்னார் என்பது தெளிவில்லை. ஆனால் இப்போதுள்ள சமூக வலைத்தள ஊடகச் சூழலை வைத்துப் பார்க்கும் பொழுது அது ஒரு தீர்க்கதரிசனமோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. சமூக வலைத்தளங்களின் பயன்பாடு என்பது இரண்டு புறமும் கூரான கத்தி போன்றது. ஒருபுறம் சமூக வலைத்தளங்கள் சாதாரண மக்களைப் பொறுத்தவரையில்அதிகம் ஜனநாயகமானவை. பாரம்பரிய ஊடகங்களுக்கு இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் எவயுமின்றி யாரும் விரும்பியதைக் கூறலாம். அதை விரைவாகப் பரப்பலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நலிவுற்ற பிரிவினர் தங்கள் கருத்துக்களை உடனடியாகவும் விரைவாகவும் பரவலாகவும் பரப்பக்கூடிய வாய்ப்புகள் முன்னெப்பொழுதையும் விட அதிகரித்துள்ளன. இது முக்கியமான நன்மை. அவ்வாறு சமூக வலைத்தளங்களை உச்சமாகப் பயன்படுத்திய ஒரு மருத்துவர் தமிழ் மக்களால் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அதேசமயம் பாரம்பரிய ஊடகங்கள் போலல்லாது சமூக வலைத்தள ஊடகச் சூழல் என்பது துறை சார்ந்த நிபுணத்துவம், துறை சார் அறம் என்பவற்றை அதிகம் மதியாத ஒன்றாகவும் மாறி வருகிறது. எப்படியென்றால் அது பொதுப் புத்தியை அதிகம் பிரதிபலிப்பது.பொதுப் புத்தி எப்பொழுதும் விஞ்ஞானபூர்வமானதாக அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும் என்று இல்லை. அது பெரும்பாலும் இனம் சார்ந்து, மதம் சார்ந்து மொழி சார்ந்து, சாதி சார்ந்து, ஊர் சார்ந்து, பால் சார்ந்து… என்று பல்வேறு சார்பு நிலைகளுக்கு ஊடாகவும் வெளிப்படுவது. அது பெரும்பாலும் ஒரு குழு மனோநிலை. அதனால், சமூக வலைத்தள சூழல் எனப்படுவது, மற்றொரு சமூகத்துக்கு அல்லது சமூகத்தின் மற்றொரு பிரிவினருக்கு அல்லது மற்றொரு நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் பரவலாக்கப்படுவதற்கா னவாய்ப்புகளை ஒப்பீட்டுளவில் அதிகமாகக் கொண்டிருக்கின்றது. அதனால்தான் ஐநாவின் வெறுப்புப் பேச்சுகளுக்கான சிறப்புத் தூதுவர்கள் சமூகவலைத்தளச் சூழலானது இன ரீதியான, மத ரீதியான, நிற ரீதியான, வெறுப்புப் பேச்சுக்களை பரப்புகின்றன என்று விமர்சிக்கின்றார்கள். குறிப்பாக பர்மாவில் ரோகியங்கா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பில் முகநூல் ஒரு கருவியாகத் தொழில்பட்டது என்று ஐநாவின் அறிக்கை ஒன்று கூறுகிறது. அதுபோலவே சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் கண்டி, திகன ஆகிய இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு,ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைகளின்போது, முகநூல் தடை செய்யப்பட்டது. இப்போதுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் தடவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பொழுது, ருவிட்டர் தளத்தை அதிகம் பயன்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன. அதாவது சமூக வலைத்தளச் சூழல் என்பது ஒருபுறம் சமானிய மக்களின் பொதுப் புத்தியை பிரதிபலிக்கின்றது. இன்னொரு புறம் அவ்வாறு பொதுக் புத்தியை பிரதிபலிப்பது என்பதினாலே பொது புத்திக்குள் காணப்படும் இனம், மொழி,மதம், நிறம் சாதி சார்ந்த வெறுப்புகளை பரவலாக்கும் களமாகவும் மாறி வருகிறது. அதனால்தான் சமூக வலைத்தள சூழல் என்பது நிபுணர்களை வெளித்தள்ளுகின்றது என்று பொதுவாக அவதானிக்கப்பட்டுள்ளது. துறை சார் ஞானம் இல்லாதவர்கள் கருத்துக்கூறும் ஒரு பொதுத் தளத்தில் துறை சார் நிபுணர்கள் கருத்துக் கூறி அவமதிக்கப்பட விரும்ப மாட்டார்கள். எனவே அவர்கள் விலகி நிற்பார்கள்.இதனால் ஒரு குறிப்பிட்ட கருத்து விஞ்ஞானபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அணுகப்படும் சூழலை அங்கே முழுமையாக உத்தரவாதப்படுத்த முடிவதில்லை. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை குறிப்பாக, 2009க்குப் பின்னரான ஈழத் தமிழ் அரசியல் சூழலிலும் அதைக் காண முடியும். வெறுப்பர்களே அதிகம் விளைந்து விட்டார்கள். எதையும் ஆழமாக வாசிப்பதில்லை. ஒரு கைபேசியும் இணைய இணைப்பும் இருந்தால் காணும். யாரும் எதையும் சொல்லலாம் என்ற ஒரு நிலை. இதில் ஜனநாயகம் உண்டு. அதேசமயம் எனது நண்பர் ஒருவர் கூறுவதுபோல, தனக்குத் தெரியாத ஒன்றைப்பற்றிக் கருத்துக் கூறும் துணிச்சலை அது வழங்கி விட்டது. இந்தத் துணிச்சல் மனித குலம் இதுவரை கண்டடைந்த அறிவியல் மகத்துவங்களுக்கு எதிரானது. எனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி கருத்துக் கூறும் துணிச்சல் என்பது அறிவியலின் வீழ்ச்சி. பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் குறிப்பாக யுடியூப்கள் பொதுப் புத்தியை கவரும் பொருட்டு காணொளிகளை வெளியிடுகின்றன. அதனால் பொது புத்தியின் பலவீனம் எதுவென்று கண்டு அதனைச் சுரண்டி காசு உழைக்கின்றன. ஒரு சமூகத்துக்கு நல்லதையும் உன்னதமானதையும் எடுத்துக்காட்டி அந்த சமூகத்தின் உளவியல் கூர்ப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டியதுதான் ஊடகப் பணியாகும். மாறாக அந்த சமூகத்தின் பலவீனம் எதுவோ அல்லது அந்த சமூகத்தை எங்கே இலகுவாகச் சுரண்டலாமோ அதை விற்பது என்பது சமூகக் கூர்புக்கு எதிரானது. மனித குலத்துக்கு எதிரானது. குறிப்பாக ஈழத் தமிழர்களைப் பொருத்தவரை 2009க்கு பின்னரான கூட்டு உளவியல் என்பது அதிகம் கொந்தளிப்பானது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காத; பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத; தலைமைத்துவ வெற்றிடம்; புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதிக்கம்.. போன்ற பல காரணிகளும் கடந்த 15 ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கூட்டு உளவியலைத் தீர்மானிக்கின்றன. இக்கூட்டு உளவியலைத் தீர்க்கதரிசனமாகக் கையாளவல்ல தலைமைகள் கடந்த 15 ஆண்டுகளாக மேலுயரவில்லை. கூட்டுக் காயங்களிலும் கூட்டு மனவடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகத்துக்கு, கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல அரசியலை, விழுமியங்களை முன்வைத்துத் தலைமை தாங்கவில்லை பொருத்தமான தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தில், சமூக வலைத்தளங்களால் திறந்து விட்டிருக்கும் கட்டுப்பாடற்ற,கட்டற்ற சூழலானது வெறுப்பவர்களுக்கும் மந்தர்களுக்கும் கயவர்களுக்கும் பொய்யர்களுக்கும் அதிகம் வாய்ப்பானதாக மாறி வருகிறது. பொதுவாக ஒரு சமூகத்தின் பொதுப் புத்தியானது சீரியஸானதாக அறிவுபூர்வமானதாக விஞ்ஞானபூர்வமானதாக இருப்பது குறைவு. சீரியஸானதுக்கும் ஜனரஞ்சகத்துக்கும் இடையிலான இடைவெளி என்பது எல்லாச் சமூகங்களிலும் காணப்படுவது. ஆனால் ஈழத் தமிழ் சமூகத்தில் அந்த இடைவெளி ஆழமானது.யூரியுப்பர்களின் காலத்தில் அந்த இடைவெளி மேலும் ஆழமாகிக் கொண்டே போகிறது. சீரியஸான, அறிவுபூர்வமான சமூக விலைத்தலங்களையும் காணொளித்தளங்களையும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்கள்தான்.சீரியஸ் இல்லாத,மந்தமான, உணர்ச்சிகரமான, விஞ்ஞான பூர்வமற்ற, பொழுதுபோக்கான,எல்லாவற்றையும் காசாக்க முற்படும் யூரியுப்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம்.சில சமயங்களில் அந்தத் தொகை மில்லியன் கணக்கானது. இவ்வாறு அறிவுபூர்வமானதுக்கும் மந்தமானதுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துச் செல்லுமோர் சமூகப் பொருளாதார அரசியல் சூழலில், அண்மை வாரங்களாக யூடியூபர்களின் மோசடிகள் தொடர்பாகவும் குற்றச்செயல்கள் தொடர்பாகவும் அதிகம் செய்திகள் வெளி வருகின்றன. ஒருபுறம் நிதிப்பலம் மிக்க புலம்பெயர்ந்த சமூகம். அது தாயகத்தை நோக்கி பிரிவேக்கத்தோடு உதவுவதற்குக் காத்திருக்கின்றது. இன்னொரு புறம் தாயகத்தில் உதவிக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள். இந்த இரண்டு தரப்பையும் அதாவது தேவையையும் வளங்களையும் இணைப்பவர்கள் யார் என்று பார்த்தால், ஒன்றில் தனி நபர்கள் அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்கள் அல்லது சில தொண்டு நிறுவனங்கள் போன்றவைதான். இதில் தனி நபர்களாக இருப்பவர்களில் ஒரு பகுதியினர் அரசியல்வாதிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் ஒரு பிரிவினர் தான் கண்ணீரையும் வறுமையையும் காணொளியாக்கிக் காசாக்குகிறார்கள். இதில் ஒரு சிறு தொகையினர்,ஒருகை கொடுப்பது மறு கைக்குத் தெரியாமல் தொண்டு செய்கிறார்கள்.அதை அவர்கள் விளம்பரப்படுத்துவதில்லை. ஆனால் அவர்கள் மிகச் சிறிய தொகையினர். யாருக்கெல்லாம் பிரபல்யம் வேண்டுமோ, யாரெல்லாம் பிரபல்யத்தைக் காசாக்க விரும்புகின்றார்களோ, அவர்கள்தான் இப்பொழுது குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கிறார்கள். இது ஒரு உலகப் பொதுவான ஒரு போக்குத்தான்.ஆனால் ஈழத் தமிழ் அரசியற் சூழலில் இதன் விளைவுகள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பாரதூரமானவை. 2009க்குப் பின்னரான ஈழத் தமிழர்களின் சமூகப் பொருளாதார அரசியல் உளவியல் எனப்படுவது கொந்தளிப்பானது. தலைமைத்துவம் இல்லாதது. இந்த வெற்றிடத்துக்குள் யூடியூபர்கள் புகுந்து விளையாடுகிறார்கள்.நேரலையில் தோன்றி ஒரு மருத்துவர் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிவிட்டார். எனவே இந்த விடயத்தில் 2009க்குப் பின்னரான தமிழ்க் கூட்டு உளவியலை வெற்றிகரமாகக் கையாளவில்லை, ஒரு கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல, அரசியலை முன்னெடுக்க விரும்பும் தரப்புகள் ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சிக்குத் தலைமைதாங்கத் தயாராக இருக்கவேண்டும்.புத்திசாலிகளும் அறிவுபூர்வமாகச் சிந்திப்பவர்களும் துறை சார்ந்த ஞானம் உடையவர்களும் அரசியலில் மேலோங்கும் பொழுது, மந்தர்கள் பின்வாங்கி விடுவார்கள்.இல்லையென்றால் மந்தர்களே எல்லா இடங்களிலும் மேலெழுவார்கள். https://athavannews.com/2025/1425347- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
யூடியூப்பர்களும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த யூத எழுத்தாளர் ஆகிய ஆர்தர் கோஸ்லரிடம் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கூறுங்கள் என்று கேட்ட பொழுது, அவர் சொன்னார், மந்தர்களே-mediocres- எல்லா இடங்களிலும் முதன்மை வகிப்பார்கள் என்று. அவர் எதைக்கருதி அவ்வாறு சொன்னார் என்பது தெளிவில்லை. ஆனால் இப்போதுள்ள சமூக வலைத்தள ஊடகச் சூழலை வைத்துப் பார்க்கும் பொழுது அது ஒரு தீர்க்கதரிசனமோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது. சமூக வலைத்தளங்களின் பயன்பாடு என்பது இரண்டு புறமும் கூரான கத்தி போன்றது. ஒருபுறம் சமூக வலைத்தளங்கள் சாதாரண மக்களைப் பொறுத்தவரையில்அதிகம் ஜனநாயகமானவை. பாரம்பரிய ஊடகங்களுக்கு இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் எவயுமின்றி யாரும் விரும்பியதைக் கூறலாம். அதை விரைவாகப் பரப்பலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நலிவுற்ற பிரிவினர் தங்கள் கருத்துக்களை உடனடியாகவும் விரைவாகவும் பரவலாகவும் பரப்பக்கூடிய வாய்ப்புகள் முன்னெப்பொழுதையும் விட அதிகரித்துள்ளன. இது முக்கியமான நன்மை. அவ்வாறு சமூக வலைத்தளங்களை உச்சமாகப் பயன்படுத்திய ஒரு மருத்துவர் தமிழ் மக்களால் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அதேசமயம் பாரம்பரிய ஊடகங்கள் போலல்லாது சமூக வலைத்தள ஊடகச் சூழல் என்பது துறை சார்ந்த நிபுணத்துவம், துறை சார் அறம் என்பவற்றை அதிகம் மதியாத ஒன்றாகவும் மாறி வருகிறது. எப்படியென்றால் அது பொதுப் புத்தியை அதிகம் பிரதிபலிப்பது.பொதுப் புத்தி எப்பொழுதும் விஞ்ஞானபூர்வமானதாக அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும் என்று இல்லை. அது பெரும்பாலும் இனம் சார்ந்து, மதம் சார்ந்து மொழி சார்ந்து, சாதி சார்ந்து, ஊர் சார்ந்து, பால் சார்ந்து… என்று பல்வேறு சார்பு நிலைகளுக்கு ஊடாகவும் வெளிப்படுவது. அது பெரும்பாலும் ஒரு குழு மனோநிலை. அதனால், சமூக வலைத்தள சூழல் எனப்படுவது, மற்றொரு சமூகத்துக்கு அல்லது சமூகத்தின் மற்றொரு பிரிவினருக்கு அல்லது மற்றொரு நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் பரவலாக்கப்படுவதற்கா னவாய்ப்புகளை ஒப்பீட்டுளவில் அதிகமாகக் கொண்டிருக்கின்றது. அதனால்தான் ஐநாவின் வெறுப்புப் பேச்சுகளுக்கான சிறப்புத் தூதுவர்கள் சமூகவலைத்தளச் சூழலானது இன ரீதியான, மத ரீதியான, நிற ரீதியான, வெறுப்புப் பேச்சுக்களை பரப்புகின்றன என்று விமர்சிக்கின்றார்கள். குறிப்பாக பர்மாவில் ரோகியங்கா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பில் முகநூல் ஒரு கருவியாகத் தொழில்பட்டது என்று ஐநாவின் அறிக்கை ஒன்று கூறுகிறது. அதுபோலவே சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் கண்டி, திகன ஆகிய இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு,ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைகளின்போது, முகநூல் தடை செய்யப்பட்டது. இப்போதுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் தடவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பொழுது, ருவிட்டர் தளத்தை அதிகம் பயன்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன. அதாவது சமூக வலைத்தளச் சூழல் என்பது ஒருபுறம் சமானிய மக்களின் பொதுப் புத்தியை பிரதிபலிக்கின்றது. இன்னொரு புறம் அவ்வாறு பொதுக் புத்தியை பிரதிபலிப்பது என்பதினாலே பொது புத்திக்குள் காணப்படும் இனம், மொழி,மதம், நிறம் சாதி சார்ந்த வெறுப்புகளை பரவலாக்கும் களமாகவும் மாறி வருகிறது. அதனால்தான் சமூக வலைத்தள சூழல் என்பது நிபுணர்களை வெளித்தள்ளுகின்றது என்று பொதுவாக அவதானிக்கப்பட்டுள்ளது. துறை சார் ஞானம் இல்லாதவர்கள் கருத்துக்கூறும் ஒரு பொதுத் தளத்தில் துறை சார் நிபுணர்கள் கருத்துக் கூறி அவமதிக்கப்பட விரும்ப மாட்டார்கள். எனவே அவர்கள் விலகி நிற்பார்கள்.இதனால் ஒரு குறிப்பிட்ட கருத்து விஞ்ஞானபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அணுகப்படும் சூழலை அங்கே முழுமையாக உத்தரவாதப்படுத்த முடிவதில்லை. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை குறிப்பாக, 2009க்குப் பின்னரான ஈழத் தமிழ் அரசியல் சூழலிலும் அதைக் காண முடியும். வெறுப்பர்களே அதிகம் விளைந்து விட்டார்கள். எதையும் ஆழமாக வாசிப்பதில்லை. ஒரு கைபேசியும் இணைய இணைப்பும் இருந்தால் காணும். யாரும் எதையும் சொல்லலாம் என்ற ஒரு நிலை. இதில் ஜனநாயகம் உண்டு. அதேசமயம் எனது நண்பர் ஒருவர் கூறுவதுபோல, தனக்குத் தெரியாத ஒன்றைப்பற்றிக் கருத்துக் கூறும் துணிச்சலை அது வழங்கி விட்டது. இந்தத் துணிச்சல் மனித குலம் இதுவரை கண்டடைந்த அறிவியல் மகத்துவங்களுக்கு எதிரானது. எனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி கருத்துக் கூறும் துணிச்சல் என்பது அறிவியலின் வீழ்ச்சி. பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் குறிப்பாக யுடியூப்கள் பொதுப் புத்தியை கவரும் பொருட்டு காணொளிகளை வெளியிடுகின்றன. அதனால் பொது புத்தியின் பலவீனம் எதுவென்று கண்டு அதனைச் சுரண்டி காசு உழைக்கின்றன. ஒரு சமூகத்துக்கு நல்லதையும் உன்னதமானதையும் எடுத்துக்காட்டி அந்த சமூகத்தின் உளவியல் கூர்ப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டியதுதான் ஊடகப் பணியாகும். மாறாக அந்த சமூகத்தின் பலவீனம் எதுவோ அல்லது அந்த சமூகத்தை எங்கே இலகுவாகச் சுரண்டலாமோ அதை விற்பது என்பது சமூகக் கூர்புக்கு எதிரானது. மனித குலத்துக்கு எதிரானது. குறிப்பாக ஈழத் தமிழர்களைப் பொருத்தவரை 2009க்கு பின்னரான கூட்டு உளவியல் என்பது அதிகம் கொந்தளிப்பானது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காத; பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத; தலைமைத்துவ வெற்றிடம்; புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதிக்கம்.. போன்ற பல காரணிகளும் கடந்த 15 ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கூட்டு உளவியலைத் தீர்மானிக்கின்றன. இக்கூட்டு உளவியலைத் தீர்க்கதரிசனமாகக் கையாளவல்ல தலைமைகள் கடந்த 15 ஆண்டுகளாக மேலுயரவில்லை. கூட்டுக் காயங்களிலும் கூட்டு மனவடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகத்துக்கு, கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல அரசியலை, விழுமியங்களை முன்வைத்துத் தலைமை தாங்கவில்லை பொருத்தமான தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தில், சமூக வலைத்தளங்களால் திறந்து விட்டிருக்கும் கட்டுப்பாடற்ற,கட்டற்ற சூழலானது வெறுப்பவர்களுக்கும் மந்தர்களுக்கும் கயவர்களுக்கும் பொய்யர்களுக்கும் அதிகம் வாய்ப்பானதாக மாறி வருகிறது. பொதுவாக ஒரு சமூகத்தின் பொதுப் புத்தியானது சீரியஸானதாக அறிவுபூர்வமானதாக விஞ்ஞானபூர்வமானதாக இருப்பது குறைவு. சீரியஸானதுக்கும் ஜனரஞ்சகத்துக்கும் இடையிலான இடைவெளி என்பது எல்லாச் சமூகங்களிலும் காணப்படுவது. ஆனால் ஈழத் தமிழ் சமூகத்தில் அந்த இடைவெளி ஆழமானது.யூரியுப்பர்களின் காலத்தில் அந்த இடைவெளி மேலும் ஆழமாகிக் கொண்டே போகிறது. சீரியஸான, அறிவுபூர்வமான சமூக விலைத்தலங்களையும் காணொளித்தளங்களையும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்கள்தான்.சீரியஸ் இல்லாத,மந்தமான, உணர்ச்சிகரமான, விஞ்ஞான பூர்வமற்ற, பொழுதுபோக்கான,எல்லாவற்றையும் காசாக்க முற்படும் யூரியுப்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம்.சில சமயங்களில் அந்தத் தொகை மில்லியன் கணக்கானது. இவ்வாறு அறிவுபூர்வமானதுக்கும் மந்தமானதுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துச் செல்லுமோர் சமூகப் பொருளாதார அரசியல் சூழலில், அண்மை வாரங்களாக யூடியூபர்களின் மோசடிகள் தொடர்பாகவும் குற்றச்செயல்கள் தொடர்பாகவும் அதிகம் செய்திகள் வெளி வருகின்றன. ஒருபுறம் நிதிப்பலம் மிக்க புலம்பெயர்ந்த சமூகம். அது தாயகத்தை நோக்கி பிரிவேக்கத்தோடு உதவுவதற்குக் காத்திருக்கின்றது. இன்னொரு புறம் தாயகத்தில் உதவிக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள். இந்த இரண்டு தரப்பையும் அதாவது தேவையையும் வளங்களையும் இணைப்பவர்கள் யார் என்று பார்த்தால், ஒன்றில் தனி நபர்கள் அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்கள் அல்லது சில தொண்டு நிறுவனங்கள் போன்றவைதான். இதில் தனி நபர்களாக இருப்பவர்களில் ஒரு பகுதியினர் அரசியல்வாதிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் ஒரு பிரிவினர் தான் கண்ணீரையும் வறுமையையும் காணொளியாக்கிக் காசாக்குகிறார்கள். இதில் ஒரு சிறு தொகையினர்,ஒருகை கொடுப்பது மறு கைக்குத் தெரியாமல் தொண்டு செய்கிறார்கள்.அதை அவர்கள் விளம்பரப்படுத்துவதில்லை. ஆனால் அவர்கள் மிகச் சிறிய தொகையினர். யாருக்கெல்லாம் பிரபல்யம் வேண்டுமோ, யாரெல்லாம் பிரபல்யத்தைக் காசாக்க விரும்புகின்றார்களோ, அவர்கள்தான் இப்பொழுது குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கிறார்கள். இது ஒரு உலகப் பொதுவான ஒரு போக்குத்தான்.ஆனால் ஈழத் தமிழ் அரசியற் சூழலில் இதன் விளைவுகள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பாரதூரமானவை. 2009க்குப் பின்னரான ஈழத் தமிழர்களின் சமூகப் பொருளாதார அரசியல் உளவியல் எனப்படுவது கொந்தளிப்பானது. தலைமைத்துவம் இல்லாதது. இந்த வெற்றிடத்துக்குள் யூடியூபர்கள் புகுந்து விளையாடுகிறார்கள்.நேரலையில் தோன்றி ஒரு மருத்துவர் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிவிட்டார். எனவே இந்த விடயத்தில் 2009க்குப் பின்னரான தமிழ்க் கூட்டு உளவியலை வெற்றிகரமாகக் கையாளவில்லை, ஒரு கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல, அரசியலை முன்னெடுக்க விரும்பும் தரப்புகள் ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சிக்குத் தலைமைதாங்கத் தயாராக இருக்கவேண்டும்.புத்திசாலிகளும் அறிவுபூர்வமாகச் சிந்திப்பவர்களும் துறை சார்ந்த ஞானம் உடையவர்களும் அரசியலில் மேலோங்கும் பொழுது, மந்தர்கள் பின்வாங்கி விடுவார்கள்.இல்லையென்றால் மந்தர்களே எல்லா இடங்களிலும் மேலெழுவார்கள். https://athavannews.com/2025/1425347- மெதிரிகிரிய வன்முறை; ஆறு சந்தேக நபர்கள் கைது!
மெதிரிகிரிய வன்முறை; ஆறு சந்தேக நபர்கள் கைது! மெதிரிகிரிய பகுதியில் அண்மையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களும் மெதிரிகிரியவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த வன்முறை சம்பவம் தொடர்பில் மீதமுள்ள சந்தேக நபர்களை கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2025/1425382- உள்ளூராட்சி தேர்தல்; வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் இன்று ஆரம்பம்!
உள்ளூராட்சி தேர்தல்; வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் இன்று ஆரம்பம்! எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணிகள் இன்று (17) தொடங்குகிறது. இன்று முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் இன்று தொடங்கும், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளல் முடிந்ததும் தேர்தல் திகதி அறிவிக்கப்படும். இதற்கிடையில், உள்ளுராட்சித் தேர்தலுக்கான தபால்மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைகிறது. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், தபால் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக, தங்கள் நிறுவனம் அமைந்துள்ள மாவட்டத்தில் உள்ள மாவட்டத் தேர்தல் அலுவலகத்திற்குச் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. மேலும், இன்று தொடங்கும் க.பொ.த சாதாரண தர (சாதாரண தர) பரீட்சைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வேட்புமனுக்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் வேட்பாளர்களைக் கேட்டுக்கொள்கிறார். https://athavannews.com/2025/1425405- கல்லெறி தாக்குதலுக்கு உள்ளான நபர் சடலமாக மீட்பு!
கல்லெறி தாக்குதலுக்கு உள்ளான நபர் சடலமாக மீட்பு! கொஹுவல பகுதியில் பாடசாலை மாணவனின் பணப்பையை திருட முயன்றதற்காக கற்களால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் நுகேகொடை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நுகேகொடை, நலந்தராம வீதியில் குறித்த ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (16) கொஹுவலாவில் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு மாணவனை மிரட்டி, அந்த நபர் மாணவனின் பணப்பையைத் திருட முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில், அருகிலுள்ள மக்கள் குறித்த நபரை கற்களால் தாக்கினர், அதையடுத்து அவர் தப்பிச் சென்றார். இருப்பினும், நேற்று (16) மாலை நுகேகொடையில் உள்ள நடைபாதையில் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது தலையின் பின்புறம் மற்றும் காதுகளுக்கு அருகில் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை, அதே நேரத்தில் கொஹுவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1425475- கேதார்நாத்தில் இந்துக்கள் அல்லாதவர்களை தடை செய்ய வேண்டும் – சர்ச்சையை ஏற்படுத்திய புதிய பரிந்துரை!
கேதார்நாத்தில் இந்துக்கள் அல்லாதவர்களை தடை செய்ய வேண்டும் – சர்ச்சையை ஏற்படுத்திய புதிய பரிந்துரை! கேதார்நாத் ஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைவதை கட்டுப்படுத்த வேண்டும் என்று உத்தரகண்டின் பாரதிய ஜனதாக் கட்சியின் சட்டமான்ற உறுப்பினர் ஆஷா நௌடியல் (Asha Nautiyal) கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்துக்கள் அல்லாத சிலர் மத தலத்தின் புனிதத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பதாக கேதார்நாத் சட்டமான உறுப்பினர் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குடியிருப்பாளர்களுடன் பொறுப்பு அமைச்சர் சவுரப் பகுகுணா அண்மையில் ஒரு கூட்டம் நடத்தியதாகவும் நௌடியல் குறிப்பிட்டார். இதன் போது சில பங்கேற்பாளர்கள், இந்து அல்லாத நபர்கள் கேதார்நாத் தாமின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிப்பதாகக் கூறினர். அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு, அந்த இடத்திற்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என்று முன்மொழியப்பட்டதாகவும் அவர் கூறினார். இதற்கு பதிலளித்த உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத், பாஜக தலைவர்கள் பரபரப்பான கருத்துக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்று கூறினார். சார் தாம் யாத்திரை ஏப்ரல் 30 ஆம் திகதி அக்ஷய திருதியை அன்று தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, அப்போது கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆலயங்களின் கதவுகள் திறக்கப்படும். கேதார்நாத் ஆலயத்தின் வாயில்கள் மே 2 ஆம் திகதியும், பத்ரிநாத் ஆலயத்தின் வாயில்கள் மே 4 ஆம் திகதியும் திறக்கப்படும் நிலையில் இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன. https://athavannews.com/2025/1425385- மாசிடோனிய இரவு விடுதியில் தீ விபத்து; 51 பேர் மரணம்!
மாசிடோனிய இரவு விடுதியில் தீ விபத்து; 51 பேர் மரணம்! வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 51 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஸ்கோப்ஜியிலிருந்து கிழக்கே 100 கிமீ (60 மைல்) தொலைவில் உள்ள கோக்கானி (Kocani) நகரில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றிலேயே ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. நாட்டில் பிரபலமான ஹிப்-ஹாப் இரட்டையர்களான ADN இசைக்குழுவின் நிகழ்ச்சியின் போது அதிகாலை 03:00 மணியளவில் (02:00 GMT) தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்தினை அடுத்து, சில மணிநேரங்களுக்குப் பின்னரும் அந்த இடம் எரிந்து கொண்டிருந்தாக தெரிவிக்கப்பட்டது. இசை நிகழ்ச்சியில் 1,500 பேர் வரை கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இசை நிகழ்வின் போது வாணவேடிக்கை சாதனங்களைப் பயன்படுத்தியதால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1425369- அமெரிக்க கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள்; அனிமேஷன் வீடியோவை வெளியிட்ட ஹவுத்தி!
அமெரிக்க கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள்; அனிமேஷன் வீடியோவை வெளியிட்ட ஹவுத்தி! அழிக்கப்பட்ட கடற்படைக் கப்பல்களுக்கு அருகில் அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் மிதப்பதை சித்தரிக்கும் ஒரு அனிமேஷன் வீடியோவை ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ இசையுடன் தொடங்கி, அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட ஒரு சவப்பெட்டி தண்ணீரில் மிதப்பதை சித்தரிக்கிறது. பின்னர் அது அழிக்கப்பட்ட போர்க்கப்பல்களில் இருந்து விலகிச் செல்லும் பல எண்ணிக்கை அதே கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகளைக் காண்பிக்கும் வகையில் சித்தரிக்கப்படுகிறது. செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை (15) முழு அளவிலான இராணுவத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த வீடியோக் காட்சி வெளியிடப்பட்டுள்ளதுடன், கிளர்ச்சியாளர்கள் பழிவாங்குவதாகவும் சபதம் செய்தனர். சவுதி அரேபியாவின் எல்லையில் கிளர்ச்சியாளர்களின் கோட்டையான வடக்கு மாகாணமான சாதாவிலும், தலைநகர் சனாவில் சனிக்கிழமை இரவு முழுவதும் அமெரிக்கத் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ஹவுத்திகளால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2023 ஒக்டோபரில் காசாவில் போர் தொடங்கியதிலிருந்து ஹவுத்திகளுக்கு எதிரான மிக விரிவான தாக்குதல்களில் இந்த வான்வழித் தாக்குதல்களும் ஒன்றாகும். ஞாயிற்றுக்கிழமை ஈரானும் ட்ரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்து ஹவுத்திகளுக்கு உதவ மறுத்தது. ஈரானின் துணை இராணுவ புரட்சிகர காவல்படையின் தலைவர் ஜெனரல் ஹொசைன் சலாமி, ஹவுத்திகளின் தாக்குதல்களில் தனது நாடு ஈடுபடவில்லை என்று மறுத்தார். மேலும் பிராந்தியம் முழுவதும் அது கூட்டணி வைத்திருக்கும் போராளிக் குழுக்களின் “தேசிய அல்லது செயல்பாட்டுக் கொள்கைகளை அமைப்பதில் அது எந்தப் பங்கையும் வகிக்கவில்லை” என்று கூறினார். இதற்கிடையில், அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோருடன் ட்ரம்ப் தாக்குதல்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் படங்களையும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் எடுத்த ஆயுதமேந்திய இயக்கமான ஹவுத்திகள், 2023 நவம்பர் முதல் கப்பல் போக்குவரத்தை குறிவைத்து 100க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இது உலகளாவிய வர்த்தகத்தை சீர்குலைத்துடன், அதிகளவிலான பதில் நடவடிக்கையில் அமெரிக்க இராணுவத்தையும் ஈடுபடுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1425426- உடல் நலப் பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி
போப் பிரான்சிஸ்ஸின் புதிய புகைப்படம் வெளியானது! உடல் நலம் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸ், உடல் நலம் தேறி வருவதாகத் தகவல் வெளிவந்த நிலையில், அதனை உறுதிப் படுத்தும் வகையில் அவரது புதிய புகைப்படத்தை வத்திக்கான் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. குறித்த புகைப்படத்தில் போப் பிரான்சிஸ் ஜெமில்லி மருத்துவமனையில் சக பாதியார்களுடன் பலிபீடத்தின் முன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்து திருப்பலியில் பங்கேற்றிருப்பதைக் காணலாம். போப் பிரான்சிஸ் கடந்த பெப்ரவரி மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வெளியான முதல் புகைப்படம் இதுவாகும். ….. 88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பெப்பிரவரி மாதம் 14-ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு அண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1425408- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
குழுநிலைப் போட்டிகளுக்கான கேள்விகள் 1) முதல் 70) வரை. 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதிர் RCB 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH எதிர் RR 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK எதிர் MI 4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC எதிர் LSG 5) செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் GT எதிர் PBKS 6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RR எதிர் KKR 7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH எதிர் LSG 8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் CSK எதிர் RCB 9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT எதிர் MI 10) ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் DC எதிர் SRH 11) ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RR எதிர் CSK 12) திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI எதிர் KKR 13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் LSG எதிர் PBKS 14) புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RCB எதிர் GT 15) வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR எதிர் SRH 16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் LSG எதிர் MI 17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK எதிர் DC 18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS எதிர் RR 19) ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR எதிர் LSG 20) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் SRH எதிர் GT 21) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் MI எதிர் RCB 22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் PBKS எதிர் CSK 23) புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் GT எதிர் RR 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB எதிர் DC 25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK எதிர் KKR 26) சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் LSG எதிர் GT 27) சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் SRH எதிர் PBKS 28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RR எதிர் RCB 29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் DC எதிர் MI 30) திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் LSG எதிர் CSK 31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் PBKS எதிர் KKR 32) புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் DC எதிர் RR 33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI எதிர் SRH 34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB எதிர் PBKS 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT எதிர் DC 36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR எதிர் LSG 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS எதிர் RCB 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI எதிர் CSK 39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR எதிர் GT 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG எதிர் DC 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH எதிர் MI 42) வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RCB எதிர் RR 43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK எதிர் SRH 44) சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் KKR எதிர் PBKS 45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI எதிர் LSG 46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் DC எதிர் RCB 47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RR எதிர் GT 48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC எதிர் KKR 49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் CSK எதிர் PBKS 50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் RR எதிர் MI 51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT எதிர் SRH 52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RCB எதிர் CSK 53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் KKR எதிர் RR 54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS எதிர் LSG 55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH எதிர் DC 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI எதிர் GT 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் KKR எதிர் CSK 58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS எதிர் DC 59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG எதிர் RCB 60) சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH எதிர் KKR 61) ஞாயிறு 11 மே 10:00 am GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் PBKS எதிர் MI 62) ஞாயிறு 11 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் DC எதிர் GT 63) திங்கள் 12 மே 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் CSK எதிர் RR 64) செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB எதிர் SRH 65) புதன் 14 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் GT எதிர் LSG 66) வியாழன் 15 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் MI எதிர் DC 67) வெள்ளி 16 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RR எதிர் PBKS 68) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB எதிர் KKR 69) ஞாயிறு 18 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் GT எதிர் CSK 70) ஞாயிறு 18 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் LSG எதிர் SRH கேள்விகள் 71) முதல் 90) வரை: 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) CSK KKR MI SHR 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) CSK #2 - ? (3 புள்ளிகள்) KKR #3 - ? (2 புள்ளிகள்) MI #4 - ? (1 புள்ளி) SRH 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! DC 74) செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 75) புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 76) வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator KKR 77) ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? SRH 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? RR 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Abhishek Sharma 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? SRH 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Rashid Khan 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? GT 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? Abhishek Sharma 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? SRH 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Varun Chakravarthy 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? KKR 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Ravindra Jadeja 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? CSK 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? CSK- சிரிக்கவும் சிந்திக்கவும் .
ஆசியரும், ஐரோப்பியரும் பாவிக்கக் கூடிய Two in one கக்கூஸ். 😂 🤣- கருத்து படங்கள்
- நடு வானத்தில் விமானப் பணிப்பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு முயற்சி!
நடு வானத்தில் விமானப் பணிப்பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு முயற்சி! சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த விமானத்தில் பணிபுரியும் இரு விமானப் பணிப்பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டவர் ஆவார். சந்தேக நபர் நேற்று (15) இரவு 10.00 மணியளவில் சிங்கப்பூரில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். வருகையின் போது, சந்தேக நபர் அதிக குடிபோதையில் விமானத்தில் பணிபுரியும் இரண்டு விமான பணிப்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றார். அதன்படி, விமானப் பணிப்பெண்கள் இருவரும் சம்பவம் குறித்து விமானத்தின் பைலட்டிடம் தெரிவித்ததையடுத்து, அவர் குறித்து கட்டுநாயக்க விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. விமானம் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்கியதும் இலங்கை குற்றப்பிரிவு பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்து கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக விமானப் பணிப்பெண்கள் இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த பயணி நீர்கொழும்பு சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்பட்டதும் அவர் அதிகளவில் குடிபோதையில் இருந்தமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இலங்கையின் வான்பரப்பில் இடம்பெற்றுள்ளதால், சந்தேகநபர் இன்று (16) கொழும்பு இல.01 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். https://athavannews.com/2025/1425326- வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு!
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வோருக்கு விசேட அறிவிப்பு! வேலைவாய்ப்புக்காக தனியார் முகவர்களின் ஊடாக வெளிநாடு செல்லும்போது 1989 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி குறித்த முகவர் நிலையம் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். வேலைவாய்ப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்புகின்றோம் எனக் கூறி நிதி மோசடியில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் அண்மையில் நடைபெற்ற வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பங்குபற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிறுவனங்கள் மற்றும் கட்டணங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் பணியகத்தின் இணையதளத்தில் அறிந்துகொள்ள முடியும் என்றும், எந்தவொரு தரப்பினரும் அங்கீகரிக்கப்பட்ட தொகையை விட அதிகமாகப் பெற்றுக் கொண்டால் அல்லது அனுமதிப் பத்திரம் இன்றி ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபட்டால் பணியகத்தில் முறைப்பாடு செய்ய முடியும் என அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர். ரஷ்யாவில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாட்டின் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்கள் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகவும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கு பதிலளித்த குழுவின் தலைவர், இந்த நிலைமையை தான் அறிந்திருப்பதாகவும், இது மிகவும் சிக்கலான சூழ்நிலை என்றும் வலியுறுத்தினார். சுற்றுலா வலயங்களில் இசை நிகழ்ச்சிகள் மற்றும் இரவு விருந்துகளுக்கான ஒலிபெருக்கிகளின் பயன்பாடு இரவு 10 மணியுடன் மட்டுப்படுத்தப்படுவது சுற்றுலாத்துறையின் விருத்திக்குப் பொருத்தமானதாக இருக்காது என பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்குச் சுட்டிக்காட்டினர். பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு கௌரவ பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2025/1425329- ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி!
ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி! இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று (16) காலை நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். காலை 7:30 மணியளவில் அவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டடதாகவும், அங்கு வைத்தியர்கள் ECG மற்றும் எக்கோ கார்டியோகிராம் உள்ளிட்ட பரிசோதனைகளை நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்படலாம் என்று வைத்தியசாலைக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளருக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1425303- அமெரிக்க புயலில் பலர் பலி.
தெற்கு அமெரிக்க சூறாவளி; 34 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களில் சனிக்கிழமை (15) வீசிய பயங்கர சூறாவளியால் குறைந்தது 34 பேர் உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மிச்சிகன், மிசோரி மற்றும் இல்லினாய்ஸ் உட்பட ஏழு மாநிலங்களில் சனிக்கிழமை இரவு வரை 250,000 க்கும் மேற்பட்ட வீடுகளும், கட்டிடங்களும் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டன. கிழக்கு லூசியானா, மேற்கு ஜோர்ஜியா, மத்திய டென்னசி மற்றும் மேற்கு புளோரிடா பன்ஹேண்டில் முழுவதும் சூறாவளி எச்சரிக்கை வெளியிடப்படுள்ளதால், பொது மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்கிழக்கு முழுவதும் கடுமையான வானிலை தொடர்ந்து நிலவி வருவதால், மத்திய மிசிசிப்பி, கிழக்கு லூசியானா மற்றும் மேற்கு டென்னசி ஆகிய இடங்களிலும்; அலபாமா மற்றும் ஆர்கன்சாஸின் சில பகுதிகளிலும் திடீர் வெள்ளம் மற்றும் வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் வெள்ளம் ஆபத்தானதாக இருக்கலாம் என்று தேசிய வானிலை சேவை (NWS) தெரிவித்துள்ளது. சனிக்கிழமை இரவு அலபாமா முழுவதும் பல சூறாவளி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. மிசோரியின் அவசரகால மேலாண்மை நிறுவனம், இதுவரை 25 மாவட்டங்களில் 19ஐ சூறாவளிகளைத் தாக்கியதாக தெரிவித்துள்ளது. மிசோரியில் உயிரிழந்த 12 பேரில் ஒருவரின் வீடு ஒரு சூறாவளியால் இடிந்து விழுந்துள்ளதுடன், அனர்த்தம் காரணமாக பல வாகனங்களும் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1425332 - மது ஊழல் போராட்டம்; அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் கைது!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.