Everything posted by தமிழ் சிறி
-
டிசம்பர் முதல் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி!
டிசம்பர் முதல் போக்குவரத்து அபராதங்களை ஒன்லைனில் செலுத்தும் வசதி! பொலிஸாரால் அறவிடப்படும் போக்குவரத்து மீறல் அபராதங்களை ஒன்லைனில் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் முதல் நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வரும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பொது சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2025/1451457
-
கடலில் மிதந்து வந்த போத்தலினால் பறிபோன இரு உயிர்கள்!
கடலில் மிதந்து வந்த போத்தலினால் பறிபோன இரு உயிர்கள்! புத்தளம் பகுதியில் கடலில் மிதந்து கொண்டிருந்த போத்லில் இருந்த திரவத்தை அருந்திய இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த திரவத்தை அருந்திய மேலும் இருவர் தற்போது புத்தளம் வைத்தியசாலையல் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புத்தளம், நுரைச்சோலை பகுதியில் உள்ள ஒரு மீன்பிடி வாடியில் இருந்தபோது நான்கு பேர் கொண்ட குழு திரவத்தை அருந்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் ஒருவர் இறந்ததை தொடர்ந்து, பொலிஸார் விசாரணையை ஆரம்பித்தனர். அதன் பின்னர், மீன்பிடி வாடியிலிருந்த மற்றொரு நபரின் உடலை பொலிஸார் கண்டுபிடித்தனர். சம்பவம் தொட்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1451439
-
செயற்கை மழைக்கான டெல்லியின் மேக விதைப்பு சோதனை தோல்வி!
செயற்கை மழைக்கான டெல்லியின் மேக விதைப்பு சோதனை தோல்வி! டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் விலையுயர்ந்த முயற்சி செவ்வாய்க்கிழமை (29) தோல்வியடைந்தது. அதே நேரத்தில் மேலும் பல சோதனைகள் நடந்து வருவதாக காற்றின் தரம் மிகவும் மோசமாக இருந்த நிலையில், புகைமூட்டம் நிறைந்த நகரத்தில் மேக விதைப்பு சோதனையை மேற்கொண்ட பின்னர் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசாங்கம், தெரிவித்துள்ளது. டெல்லியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் முயற்சிக்கு 1 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் செலவானதாகக் கூறப்படுகிறது. கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தினால் இயக்கப்படும் ஒரு சிறிய, ஒற்றை-இயக்கி விமானம் செவ்வாயன்று வடமேற்கு டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் சில பகுதிகளில் பறந்து, மழையை பொழிய வைக்கும் இரண்டு சோதனையை நடத்தியது. இருந்தாலும் மழை பொழியவில்லை. டில்லியில் காற்று மாசு மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. இதனால் குழந்தைகள், முதியோர் மற்றும் நோயாளிகள் நுரையீரல் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர். இந்த சமயத்தில் காற்றின் தரத்தை மேம்படுத்த செயற்கை மழையை ஏற்படுத்த டில்லி அமைச்சரவை முடிவு செய்தது. அதன் ஒரு பகுதியாக மே 7 அன்று டெல்லி அமைச்சரவை மேக விதைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஐந்து சோதனைகளுக்கு ₹3.21 கோடி ஒதுக்கியது – ஒரு முயற்சிக்கு சுமார் ₹64 லட்சம். கான்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து திட்டமிடப்பட்ட இந்த சோதனைகள் ஆரம்பத்தில் மே மாத இறுதியில் மற்றும் ஜூன் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டன. ஆனால் இரண்டு ஒத்திவைப்புகளை எதிர்கொண்டன: இந்த செவ்வாயன்று நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளுக்கும் மொத்தம் தோராயமாக ₹1.28 கோடி செலவாகியதாக தெரிவிக்கப்படுகிறது. மேக விதைப்பு என்றால் என்ன? மேக விதைப்பு (Cloud Seeding) என்பது — மழை பெய்யும் அளவை அதிகரிக்க செயற்கையாக மேகங்களில் வேதியியல் பொருட்களைப் பயன்படுத்தும் ஒரு வானிலை மாற்றுதல் தொழில்நுட்பம் ஆகும். இதில் பொதுவாக வெள்ளி அயோடைடு (Silver Iodide), சோடியம் குளோரைடு (உப்பு), அல்லது டிரை ஐஸ் (Dry Ice – கார்பன் டைஆக்சைடு உறைவு வடிவம்) போன்ற பொருட்கள் விமானங்கள் அல்லது ராக்கெட் மூலம் மேகங்களுக்குள் விடப்படுகின்றன. இவ்வித பொருட்கள் மேகங்களுக்குள் உள்ள நீராவியை துகள்களாக ஒட்டச் செய்து, மழைத்துளிகள் உருவாக வழி செய்கின்றன. அதன் விளைவாக மழை பெய்யும் வாய்ப்பு அதிகரிக்கும். https://athavannews.com/2025/1451447
-
ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"!
ஜமைக்காவை தாக்கிய பின்னர் கியூபாவை நோக்கி நகரும் சூறாவளி "மெலிசா"! இதுவரை பதிவான வலிமையான அட்லாண்டிக் சூறாவளிகளில் ஒன்றாக ஜமைக்காவைத் தாக்கிய பின்னர் மெலிசா கிழக்கு கியூபாவை நோக்கி நகர்ந்துள்ளது. அங்கு அது புதன்கிழமை (29) அதிகாலை ஒரு பெரிய புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால், கியூபாவில் அதிகாரிகள் 700,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தித்தாளான கிரான்மா தெரிவித்துள்ளது. மேலும், நான்காம் வகை புயல் சாண்டியாகோ டி கியூபா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பேரழிவு தரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்தனர். கிரான்மா, சாண்டியாகோ டி கியூபா, குவாண்டனாமோ, ஹோல்குயின் மற்றும் லாஸ் டுனாஸ் மாகாணங்களுக்கும், தென்கிழக்கு மற்றும் மத்திய பஹாமாஸுக்கும் சூறாவளி எச்சரிக்கை அமுலில் இருந்தது. பெர்முடாவிற்கு சூறாவளி எச்சரிக்கை அமுலில் இருந்தது. செவ்வாய்க்கிழமை இரவு, மெலிசா மணிக்கு 130 மைல் (215 கிமீ) வேகத்தில் காற்று வீசியது மற்றும் மியாமியில் உள்ள அமெரிக்க தேசிய சூறாவளி மையத்தின்படி, வடகிழக்கில் 9 மைல் (15 கிமீ) வேகத்தில் நகர்ந்தது. இந்த சூறாவளி கியூபாவின் குவாண்டநாமோவிலிருந்து தென்மேற்கே சுமார் 110 மைல் (175 கிலோமீட்டர்) தொலைவில் மையம் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1451468
-
தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!
சென்ற தலைமுறை.... மொத்த தாலிக்கொடி கட்டி கெத்தாக வாழ்ந்தார்கள். பாவம்... வாற தலைமுறை, மஞ்சள் கயிறுதான் தஞ்சம் போலை. 😂
-
ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?
முஸ்லீம் தாதிகளுக்கு சீருடையில் விலக்கு அளிக்கப் பட்டமைக்கு சில பிக்குகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள். அரசு அறிவித்த சீருடையில் வேலை செய்ய விரும்பாவிடில்… வேறு வேலையை தேடச் சொல்லி உள்ளார்கள்.
-
ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?
ஹிஸ்புல்லாவிடம் அந்த 2 மில்லியன் அமெரிக்க டொலர் எப்படி வந்து என்று, லஞ்ச ஊழல் காவல்துறை உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
-
தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!
பத்து நாளில் முதல் முறையாக, கொழும்பு புறக்கோட்டை சந்தையில் 22 காரட் தங்கம் தற்போது ரூ. 298,000க்கு விற்கப்படுகிறது. இது அக்டோபர் 17 அன்று பதிவான ரூ. 379,200 விலையுடன் ஒப்பிடும்போது ரூ. 81,200 குறைவாகும். The Morning
-
கருத்து படங்கள்
- தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!
தங்கத்தின் விலை மீண்டும் சரிவு; 22 கரட் 298,000 ரூபா! உலக சந்தையில் அவுன்ஸ் ஒன்றுக்கு 4,000 அமெரிக்க டொலர்களுக்கு கீழே தங்கத்தின் விலை குறைந்ததைத் தொடர்ந்து, இன்று (28) உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை கடுமையாகக் குறைந்தது. புவிசார் அரசியல் பதட்டங்கள் தணிந்து வருவதால், தங்கம் உள்ளிட்ட பாதுகாப்பான புகலிட சொத்துக்களுக்கான தேவை குறைந்துள்ள நிலையில், உலகளவில் தங்கத்தின் விலை குறையும் போக்கு ஏற்பட்டுள்ளது. 2025 ஒக்டோபர் 20 ஆம் திகதி தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $4,381.21 என்ற உச்சத்தை எட்டியது. ஆனால் கடந்த வாரம் 3.2 சதவீதம் பின்வாங்கி திங்களன்று அவுன்ஸ் ஒன்றுக்கு $4,000 க்கும் கீழே சரிந்தது. சற்று முன்னர் வரையான சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு அமைவாக, ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 1.87% சரிந்து 3,930.14 அமெரிக்க டொலர்களாக இருந்தது. அதேநேரம் வெள்ளி 46.41 அமெரிக்க டொலர்களாக இருந்தது. அமெரிக்க-சீன வர்த்தக பதட்டங்கள் தளவர்வதற்கான அறிகுறிகளும் தங்கத்தின் பாதுகாப்பான புகலிட ஈர்ப்பைக் குறைத்தன. ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா மற்றும் சீனாவின் பேச்சுவார்த்தையாளர்கள் அமெரிக்க கட்டணங்களை இடைநிறுத்துவதற்கும் சீனாவின் அரிய-பூமி ஏற்றுமதி கட்டுப்பாடுகளை ஒத்திவைப்பதற்கும் ஒரு ஒப்பந்தத்திற்கான கட்டமைப்பை கோடிட்டுக் காட்டிய பின்னர், உலகின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கிடையிலான வர்த்தக பதட்டங்களைத் தணிப்பதற்கான அறிகுறிகள் எழுந்தன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வியாழக்கிழமை (30) சந்தித்து மேலும் வர்த்தக விதிமுறைகள் குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் இந்த வாரம் பணவியல் கொள்கையை எளிதாக்க நடவடிக்கை எடுக்கும் என்ற வர்த்தகர்கள் நம்பிக்கையும் தங்கத்தின் விலை மாற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது. பல ஆய்வாளர்கள் தங்கம் ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு 5,000 அமெரிக்க டொலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கும் அதே வேளையில், அண்மைய விலை ஏற்றத்தின் நிலைத்தன்மை குறித்து சிலர் சந்தேகம் கொண்டுள்ளனர். கேபிடல் எகனாமிக்ஸின் ஆய்வாளர்கள் 2026 ஆம் ஆண்டின் இறுதியில் அவுன்ஸ் ஒன்றுக்கு 3,500 அமெரிக்க டொலர்களாக தங்கள் கணிப்பை திருத்தியுள்ளனர். இலங்கை விலை விபரம்! கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 320,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 298,200 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1451391- துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த கொலை – வெளியான திடுக்கிடும் உண்மை! வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என நம்பப்படும் ஒருவர் காவல்துறையினரால் நேற்று மலை(26) மஹரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேகநபர் மஹரகம, நாவின்ன பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை, துபாயிலிருந்து பெறப்பட்ட 1.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்றும் , கொலைக்கு முன்னர் அந்தப் பணம் கொலையாளிக்கு ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் விசாரணைகள் தற்போது வெளிப்படுத்தியுள்ளன. இதேவேளை, கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்ட 7 பேர் மேலதிக விசாரணைகளுக்காக நிதி மோசடி விசாரணைப் பிரிவிடம் (FCID) ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து பல பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்தி வருகின்றன. இந்தக் கொலை தொடர்பான விசாரணை பொலிஸ் மா அதிபரின் முழு மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்டது. இதற்காக, தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், அரச புலனாய்வு சேவை, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி, கொழும்பு மாவட்டம் பிரதி பொலிஸ்மா அதிபர், மேல் மாகாணம் தெற்கிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர், நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பணிப்பாளர், குற்ற அறிக்கைகள் பிரிவின் பணிப்பாளர் மற்றும் தெற்கு அதிவேகச் நெடுஞ்சாலை சுற்றுலாப் பிரிவு பணிப்பாளர் ஆகியோர் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டனர். https://athavannews.com/2025/1451256- புரோஸ்டேட் புற்றுநோய் (ஆண்) விரைவில் கண்டறிய இங்கிலாந்தில் புதிய நடவடிக்கை!
புரோஸ்டேட் புற்றுநோய் (ஆண்) விரைவில் கண்டறிய இங்கிலாந்தில் புதிய நடவடிக்கை! எட்டு ஆண்களில் ஒருவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படுவதாக இங்கிலாந்தின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கடந்த ஆண்டு இங்கிலாந்தில் மொத்தம் 58,218 ஆண்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டகாக கண்டறியப்பட்டனர். இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 9% அதிகரிப்பு என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இங்கிலாந்தில் இந்த நோய் குறித்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கும் ஆண்கள் ஒரு நாளுக்குள் நோயறிதலை மேற்கொள்ள இங்கிலாந்தில் புதிய சோதனை முறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி, MRI ஸ்கேன்களில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சில நிமிடங்களில் உடலில் இருக்கும் சிக்கலான படையணிகளைக் கண்டறிய கூடிய முறைகள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் புற்றுநோய்க்கான அதிக ஆபத்து இருப்பதாக ஸ்கேன் முடிவு செய்தால், அது முன்னுரிமை மதிப்பாய்வுக்காக ஒரு கதிரியக்க நிபுணருக்கு அனுப்பப்படுவதுடன் அதே நாளில் நோயாளி செல் பரிசோதனைக்கு முன்பதிவு செய்யப்படுவார். இந்த தொழில்நுட்பம் ஆரம்பத்தில் 15 மருத்துவமனைகளில் சோதனை செய்யப்படும் என்றும், இந்த அணுகுமுறை ஆண்களின் நோய் குறித்த காத்திருப்பைக் குறைக்கும் என்றும் கூறுகிறது. இந்நிலையில் தற்போது, புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக சந்தேகிக்கும் ஆண்கள் தங்கள் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் இந்த நோயறிதல் முறையினையும் செல் பரிசோதனையையும் மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1451385- இங்கிலாந்தில் விடுதிகளில் இருக்கும் அகதிகளை ராணுவ முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை!
இங்கிலாந்தில் விடுதிகளில் இருக்கும் அகதிகளை ராணுவ முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை! இங்கிலாந்து அரசு, நாட்டில் தங்கியிருக்கும் அகதிகளை விடுதிகளில் இருந்து வெளியேற்றி, இராணுவ முகாம்களில் தங்க வைக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அரசாங்கம் தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள இரு இராணுவ முகாம்களை பற்றி கலந்தாலோசித்து வருகிறது. இவற்றில் சுமார் 900 பேரை தங்க வைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து முதலில் The Times பத்திரிகை செய்தி வெளியிட்டது. உள்துறை அமைச்சு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு, தகுந்த இராணுவ முகாம்களை விரைவாக அடையாளம் கண்டு தயார்படுத்துமாறு பிரதமர் கியர் ஸ்டார்மர் உத்தரவிட்டுள்ளார். அரசாங்கம் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் அகதிகளை விடுதிகளில் தங்க வைக்கும் நடைமுறையை முழுமையாக நிறுத்துவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளது. இதேவேளை, விடுதிகள் வழியாக தங்குமிடம் வழங்கும் திட்டம், அரசுக்கு பல பில்லியன் பவுண்டுகள் இழப்பை உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1451369- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை தாக்கிய சவுதி பயணி கைது!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான ஊழியர்களை தாக்கிய சவுதி பயணி கைது! ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு பெண் விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரின் கூற்றுப்படி, சந்தேக நபர் ரியாத்தில் இருந்து கொழும்புக்குச் செல்லும் போது விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர் 28 வயதான சவுதி நாட்டவர், அவர் மலேசியாவிற்கு தனது பயணத்தைத் தொடர திட்டமிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார். விமானம் தரையிறங்கத் தயாராகும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில், அனைத்து பயணிகளும் சீட் பெல்ட்களை கட்டிக்கொண்டு இருக்க வேண்டும். இருப்பினும், சந்தேக நபர் இந்த விதிமுறையை மீறி கழிப்பறைக்குள் செல்ல முயன்றார், இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரும் சுற்றுலா பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர் இன்று (27) கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். https://athavannews.com/2025/1451228- வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்கா – சீனா இணக்கம்!
வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பில் அமெரிக்கா – சீனா இணக்கம்! அமெரிக்காவும் சீனாவும் ஒரு சாத்தியமான வர்த்தக ஒப்பந்தத்தின் கட்டமைப்பை ஒப்புக் கொண்டுள்ளன. இது இந்த வார இறுதியில் அந்தந்த தலைவர்கள் சந்திக்கும் போது விவாதிக்கப்படும் என்று அமெரிக்க திறைசேரியின் செயலாளர் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க வரிகளை அதிகரிப்பதையும் சீன அரிய மண் ஏற்றுமதி கட்டுப்பாடுகளையும் இடைநிறுத்துவதையும் நோக்காக்க கொண்டுள்ளது. கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த பேச்சுவார்த்தைகள், நவம்பர் 1 முதல் சீன இறக்குமதிகள் மீதான ட்ரம்பின் 100% வரிகளின் அச்சுறுத்தலை நீக்கியதாக அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்காட் பெசென்ட் கூறினார். சீன அதிகாரிகள் பேச்சுவார்த்தைகள் குறித்து மிகவும் கவனமாக இருந்தனர், மேலும் சந்திப்புகளின் முடிவுகள் குறித்து எந்த விவரங்களையும் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார். தென் கொரியாவின் கியோங்ஜுவில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை (30) ட்ரம்பும் ஜியும் சந்தித்து, விதிமுறைகளில் கையெழுத்திட உள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிரம்ப்-ஜி பேச்சுவார்த்தைகளை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், இரு தலைவர்களும் சந்திப்பார்கள் என்பதை சீனா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. https://athavannews.com/2025/1451204- கொலம்பிய ஜனாதிபதி மீது பொருளாதார தடை விதித்த டொனால்ட் ட்ரம்ப்!
Cow boy அப்படித்தான். மற்றவனை தட்டிச் சுத்தித்தான் வாழ்க்கை நடத்துவார்கள். 😂- துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!
வெலிகம துப்பாக்கிசூடு- தப்பிச்சென்ற நபரை கைது செய்ய பொதுமக்களிடம் பொலிசார் உதவி! வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் மேலும் ஒரு சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். கடந்த 22ஆம் திகதி வெலிகம பிரதேச சபை தலைவரை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் திட்டமிட்ட நடவடிக்கையின் பின்னர், அநுராதபுரம் – கெகிராவ பொலிஸ் பிரிவின் 50 வீட்டு தொகுதியில், இக் குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பிரிவின் அதிகாரிகள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன், இன்று (26) அதிகாலையில், கைவிடப்பட்டிருந்த ஒரு வீட்டைச் சோதனையிட்டனர். இதன்போது, பெண் ஒருவர் உட்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டபோது, அவர்களுடன் இருந்த மேலும் சில நபர்கள் பொலிஸாருடன் முரண்பட்ட நிலையில் அங்குலுகம பகுதியைச் சேர்ந்த ஹக்மன பரநலியனகே நுவன் தாரக எனும் சந்தேகநபர் ஒருவர் தப்பி சென்றுள்ளார். குறித்த சந்தேகநபரை கைது செய்யவே பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர். இந்த சந்தேகநபர் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமானவர் மற்றும் வலது கையின் மேல் பகுதியில் ஆங்கிலத்தில் “ANURADA” என்றும், இடது கையில் “හිතුමතේ ජීවිතේ” (சுயாதீன வாழ்க்கை) என்றும் பச்சை குத்தியுள்ளார். இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்க (WhatsApp) – 071 859 8888 நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு – 011 233 7162 / 071 859 2087 இதேவேளை, குறித்த வீட்டில் சந்தேகநபர்கள் குற்றத்திற்குப் பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள்,12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் திணைக்களம், தென் மாகாணப் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், மாத்தறை மற்றும் அநுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1451164- துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!
வெலிகம பிரதேசசபை தலைவர் கொலை – மேலும் ஒரு சந்தேகநபர் கைது! வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாகவும் இருந்ததாக கூறப்படும் மேலும் ஒரு சந்தேகநபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகம பொலிஸாரால் காலியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி, லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக இதுவரை பெண் ஒருவர் உள்ளடங்கலாக நான்கு சந்தேகேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கெகிராவ பகுதியில் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மூன்று பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களில் பெண் ஒருவரும் அடங்கியுள்ளார். சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதேவேளை, உயிரிழந்த லசந்த விக்ரமசேகரவின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெறுகின்றன. https://athavannews.com/2025/1451160- ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியை உட்பட இருவர் கைது!
ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியை உட்பட இருவர் கைது! கம்பளை உலப்பனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரும் அவரது மருமகன் ஜஸ் மற்றும் ஹொரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பளை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கம்பளை உலப்பனை பிரதேசத்தில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவரும் மாமியார், மருகன் ஆகிய இருவர் 200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கம்பளை குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, அவர்களிடம் இருந்து இரண்டு தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த மருமகன் முச்சக்கரவண்டி சாரதியாக உள்ள நிலையில் இவர்கள் கம்பளை, நாவலப்பிட்டி உலப்பனை போன்ற பகுதியில் இந்த சூட்சமான முறையில் போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளனர். 67 வயதுடைய ஒய்வு பெற்ற ஆசிரியை பல பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளில் முன்னேடுத்து வந்த நிலையில் தற்போது ஒய்வு பெற்றியிருந்த சந்தரப்பத்தில் மருமகனுடன் இணைந்து ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதேவேளை, கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். மேலதிக விசாரணை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1451151- மதுபோதையில் யாழ் தேவி ரயிலை செலுத்திய தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் கைது!
மதுபோதையில் யாழ் தேவி ரயிலை செலுத்திய தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் கைது! யாழ்தேவி’ ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் , கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (25) பிற்பகல் அனுராதபுரத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த இந்த ரயில், பிற்பகல் 2.40 மணியளவில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை அடைந்துள்ள நிலையில் அவர் மது அருந்தியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை அநுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் அவர் நீதிமன்றில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். இதேவேளை, யாழ்தேவி ரயிலுக்கு வேறொரு கட்டுப்பாட்டாளர் நியமிக்கப்பட்ட நிலையில் அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1451106- துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!
வெலிகம பிரதேச தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது! வெலிகம பிரதேச சபையின் தலைவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெகிராவ பிரதேசத்தில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட மூவரில் ஒரு பெண்ணும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளை அடையாளம் காண இரண்டு பொலிஸ் குழுக்கள் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆராய்ந்து வந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் பாதுகாப்புப் பிரிவில் இருந்து தப்பிச் சென்றவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அத்துடன், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சம்பவ இடத்தில் இருந்து மாத்தறை வரை ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்ததாகவும், மாத்தறையில் வைத்து வேறொரு நபர் அவருக்கு மற்றொரு மோட்டார் சைக்கிளை வழங்கியதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை, கடந்த 22 ஆம் திகதி வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர அவரது அலுவலகத்தில் வைத்து இனந்தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1451124- கொலம்பிய ஜனாதிபதி மீது பொருளாதார தடை விதித்த டொனால்ட் ட்ரம்ப்!
கொலம்பிய ஜனாதிபதி மீது பொருளாதார தடை விதித்த டொனால்ட் ட்ரம்ப்! உலகளவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளான கொலம்பியா, வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். போதைப்பொருள் கும்பலை தடுக்கும் நடவடிக்கை என்று கூறி, கரீபியன் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் நுழைந்த எட்டு கப்பல்களையும் அமெரிக்க இராணுவம் தகர்த்துள்ளது எனவும் கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி எனவும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். கொலம்பிய நாட்டு வயல்களில் போதைப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து பெரிய அளவிலான உதவிகள் மற்றும் மானியங்கள் கிடைத்தும், பெட்ரோ அதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை என்று கூறி, அந்நாட்டிற்கான உதவிகளையும் குறைத்ததுடன் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் நாடுகள் பட்டியலில் 30 ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக கொலம்பியாவையும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இணைத்துள்ளார். இந்த பின்னணியில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை எனக் கூறி, கொலம்பிய ஜனாதிபதி பெட்ரோ, அவரது மனைவி, மகன் மற்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஆகிய நான்கு பேர் மீது, அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அவர்கள் உலகளவில் போதைப்பொருள் வணிகத்தில் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1451140- இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க.
இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க. கடந்த காலங்களில் மருத்துவத்துறையில் இன்று இருப்பதுப்போல நவீன கருவிகள் அன்று இல்லை. எனவே நோயாளியின் நோய்க்கான காரணத்தை கண்டறிவது ஒரு சவாலான காரியமாக இருந்து வந்தது. பின்னர் எக்ஸ் ரே, ஈசிஜி, எம்ஆர்ஐ போன்ற தொழில்நுட்ப கருவிகள் வந்த பின்னர் மருத்துவர்களுக்கு நோயாளிகளின் பிரச்சனையை கண்டறிவது மிகவும் எளிதாவிட்டது. அதிலும் எம்ஆர்ஐயின் வருகைக்கு பின்னர் நோய்களை துல்லியமாக கணித்து அதற்கு தகுந்த மருத்துவ நடைமுறைகளை எடுக்க மருத்துவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது நம்முடைய அணிகலங்களை கழற்றுமாறு அங்குள்ளவர்கள் அறிவுறுத்துவார்கள். இது பலருக்கும் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் இதற்கு பின்னால் ஒரு மிக முக்கியமான பாதுகாப்பு காரணம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? என்ன காரணம் என்பதை இங்கு பார்ப்போம். எம்ஆர்ஐ கருவியானது உடலின் உள்ளுருப்புகள் மற்றும் திசுக்களின் கட்டமைப்பை எக்ஸ் ரேயின் உதவியில்லாமல் பதிவு செய்வதற்கான ஒரு செயல் முறையாகும். இந்த செயல் முறையில் எம்ஆர்ஐ ஸ்கேன் உயர்தர காந்தங்களை பயன்படுத்தி மிக அதிக சக்திவாய்ந்த காந்தப்புலங்களை இந்த கருவி ஏற்படுத்துமாறு வடிவமைக்கப்படுள்ளது. இந்த காந்தப்புலங்கள் மனித உடல் உள்ளுறுப்பகளின் உயர்த்தர முப்பரிமாண படத்தை உருவாக்க பயன்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் இந்த முப்பரிமாண படங்கள் உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் காயங்கள் அல்லது தேவையற்ற வளர்ச்சி இருக்கிறதா என்பதை தீர்மானிக்க மருத்துவர்கள் மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. இந்த எம்ஆர்ஐ கருவி எப்படி வேலை செய்கிறது என்றால், ஒரு உளுந்த வடையை நிற்க வைத்தது போல் ஒரு உள்ள அமைப்பில் நடுவே படுக்கை ஒன்று நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த படுக்கையில் படுத்திருக்கும் நபர் மெதுவாக உள்ளே நகர்த்தப்படுவார். எம்ஆர்ஐ உள்ளே உள்ள சக்திவாய்ந்த காந்த புல சக்தி ஸ்கேன் செய்யப்படும் ஒவ்வொரு திசுக்களின் புரோட்டானையும் வரிசைப்படுத்துகிறது. அதே நேரத்தில் ரேடியோ அதிர்வலைகள் இந்த புரோட்டங்களில் மின்சார சமிஞ்க்கைகளை உருவாக்கி அவற்றின் வரிசையை சிதறடித்துவிடுகிறது. இப்போது எம்ஆர்ஐயின் காந்த புலங்கலையும், ரேடியோ அதிர்வலையையும் நிறுத்திவிடுவார்கள். இதனால் உறுப்பின் புரோட்டான்கள் காந்தத்தன்மையை இழந்து தங்களது பழைய அமைவிடத்திற்கு திரும்பும். அவ்வாறு திரும்பும்போது புரோட்டான்கள் தங்களை சிதறடித்த ரேடியோ அதிர்வலைகளை வெளியில் அனுப்பும். இதை எம்ஆர்ஐ கருவியில் பொருத்தபட்டிருக்கும் ஒரு சென்சார் கிரகித்து அதனை கணினிக்கு அனுப்பும். கணினியானது சென்சார் அனுப்பிய ரேடியோ அலைகளை ஒருகிணைத்து அதனை முப்பரிமாண படங்களை தயாரித்து திரையில் காண்பிக்கும். எம்ஆர்ஐ கருவியின் முக்கிய பாகமாக இருப்பது அதன் சக்தி வாய்ந்த காந்தங்களாகும். இவை ஸ்கேன் செயல் முறையின் முக்கிய அங்கமாக இருக்கிறது. இந்த காந்தங்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றால் சுமார் 15அடி தூரத்தில் உள்ள உலோகத்தையும் ஈர்க்கவல்லது. காந்தங்கள் இந்த அதீத சக்திகொண்டதால் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும் அறைக்குள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இப்போது புரிந்திருக்கும் ஏன் எம்ஆர்ஐ அறைக்குள் ஆபரணங்களை கழற்ற சொல்கிறார்கள் என்று. சிலர் எச்சரித்தும் அதை மதிக்காமல் இந்த ஆபரணங்களை அணிந்திருந்தால் என்னவாகும் என்றால் எல்லா ஆபரணங்களையெல்லாம் அந்த காந்தங்கள் வேகமாக இழுத்துக்கொள்ளும். எந்த அளவிற்கு இழுத்துக்கொள்ளும் என்றால் ஒரு வழிப்பறி கொள்ளையன் நகையை திருடுவதற்கு வேகமாக கழுத்திலிருந்து பிடுங்கிக்கொள்ளும் வேகமும் அதன் வேகமும் சமமாக இருக்கும். இதனால் காயம் ஏற்படும் சமயத்தில் மரணம் சம்பவிக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே அடுத்த முறை எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது சென்மெட் பார்க்காமல் அணிந்திருக்கும் ஆபரணங்கள் கழற்றி வைத்துவிட்டு உள்ளே செல்லவும். சிந்திக்க வைக்கும் சிறுகதைகள்- ஐ.நா சபையை கடுமையாக விமர்சித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!
ஐ.நா சபையை கடுமையாக விமர்சித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்! ஐக்கிய நாடுகள் தற்போது சரியாக செயல்படுவதில்லை என்றும் அதன் விவாதங்கள் ஒருபக்க சார்புடையதாக மாறியுள்ளன, எனவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். டில்லியில் வெளியுறவு அமைச்சக வளாகத்தில், நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் 80வது ஆண்டு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது, ஐக்கிய நாடுகள் சபை தற்போது சரியாக செயல்படவில்லை எனவும் அதன் முடிவெடுக்கும் நடைமுறை, அதன் உறுப்பு நாடுகளின் எண்ணங்களையும், தேவைகளையும் பிரதிபலிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதன் விவாதங்கள் பெரும்பாலும் ஒருபக்க சார்புடையதாக மாறிவிட்டன எனவும் அதன் செயல்பாடு முடங்கி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, சீர்திருத்தம் செய்ய முயன்றால், அதையே தடுக்கின்றனர் எனவும் தற்போது நிதி நெருக்கடியும் ஐக்கிய நாடுகளுக்கு ஒரு கூடுதல் பிரச்னையாக உருவாகியுள்ளது எனவும் ஐக்கிய நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பயங்கரவாதம் எனவும் பஹல்காம் போன்ற தாக்குதலுக்கு பொறுப்பேற்ற அமைப்பை, ஒரு பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் நாடு வெளிப்படையாகப் பாதுகாக்கிறது எனவும் இந்நிலையில், ஐக்கிய நாடுகள் எவ்வாறு பல நாடுகளின் உறவின் நம்பகத்தன்மையை காப்பாற்றும எனவும் அவர் இதன்போது வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கேள்வி எழுப்பினார். https://athavannews.com/2025/1451076- கருத்து படங்கள்
- தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!
Important Information
By using this site, you agree to our Terms of Use.