Everything posted by தமிழ் சிறி
-
இலங்கை, பூட்டான், நேபாளத்துக்கு இந்திய ரூபாயில் கடன் வழங்க அனுமதி ! - இந்திய ரிசர்வ் வங்கி
இலங்கையர்களுக்கு கடன் வழங்க இந்திய வங்கிகளுக்கு அனுமதி! இலங்கை, பூட்டான் மற்றும் நேபாளத்தில் வசிக்கும் எந்தவொரு நபருக்கும் வங்கிக்கும் கடன் வழங்குவதற்கு இந்திய வங்கிகளுக்கும் அவற்றின் கிளைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியால் (Reserve Bank of India) வெளியிடப்பட்ட 2018 ஆம் ஆண்டு அந்நிய செலாவணி முகாமை (கடன் வாங்குதல் மற்றும் கடன் வழங்குதல்) விதிமுறைகளில் திருத்தம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை திருத்தத்தின்படி, இந்திய வங்கிகள் தற்போது இலங்கை, பூட்டான் மற்றும் நேபாளத்தில் இருக்கும் ஒரு வங்கிக்கோ அல்லது தனிநபருக்கோ இந்திய ரூபாயில் கடன் வழங்க அனுமதியளிக்கின்றது. அதன்படி, வெளிநாடுகளில் இருக்கக்கூடிய இந்திய வங்கியின் கிளைகள் தற்போது பூட்டான், நேபாளம் அல்லது இலங்கையில் வசிக்கும் ஒரு வங்கிக்கோ அல்லது ஒரு நபருக்கோ இந்திய ரூபாயில் கடன் வழங்கலாம். இந்த வளர்ச்சி இலங்கையில் உள்ள வணிகங்களுக்கு கடன் அணுகலை எளிதாக்குவதுடன் அத்தகைய கடன்களை இந்திய ரூபாயில் குறிப்பிட அனுமதிக்கும் ஏற்பாடு இலங்கை வணிகங்களுக்கு குறிப்பாக நன்மை பயக்கும். மேலும், மாற்று விகித அபாயங்களைக் குறைக்கும் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் நிதி இணைப்புகளை வலுப்படுத்த உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1450333
-
கருத்து படங்கள்
- இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.
பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு! ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் ( Sveriges Riksbank) பரிசை “புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக” ஜோயல் மோகிர் (Joel Mogir) , பிலிப் அகியோன் (Philip Achion) மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக ரோயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் (Royal Swedish Academy of Sciences) அறிவித்துள்ளது. ஒரு பாதியை “தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான முன்நிபந்தனைகளை அடையாளம் கண்டதற்காக” ஜோயல் மோகிருக்கு வழங்கவும், ஏனைய பாதியை “படைப்பு அழிவின் மூலம் நீடித்த வளர்ச்சியின் கோட்பாட்டிற்காக” அகியோன் மற்றும் ஹோவிட்டிற்கு கூட்டாக வழங்கவும் நோபல் குழு முடிவு செய்துள்ளது. https://athavannews.com/2025/1450280- ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகள் விடுதலை, டிரம்ப் வருகை - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
என்ன செய்வது…. பொய்மையில் வாழும் உலகம். வல்லவன் வகுத்ததே…. வாய்க்கால் என்ற மாதிரி, அறம், நீதி, வாய்மை… எதுவும் இக்காலத்தில் எடுபடாது.- இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
பல மாதங்களாக, அரசாங்கதுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்த செவ்வந்தி…. இறுதியில் பிடிபட்டார். 😁 அனுரா அரசாங்கத்துக்கு, ஒரு… ஓ…. போடுங்க. 😂 🤣- ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகள் விடுதலை, டிரம்ப் வருகை - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
அந்தக் கடைசி வரிதான்… ஹைலைட். 😂 🤣- ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகள் விடுதலை, டிரம்ப் வருகை - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
இரண்டு வருடங்கள் போராடியும் மீட்க முடியாமல் போன இஸ்ரேலிய பணயக்கைதிகளை, ஹமாஸிடமிருந்து மீட்டுக் கொடுத்து அமைதியை ஏற்படுத்தி கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்பின் சாதனையை பாராட்டி இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு தங்கத்திலான புறா ஒன்றை வழங்கிய காட்சியே இது! நோபல் கிடைக்காவிட்டாலும் தங்கப்புறாவை பெற்று ரம்ப் மனமகிழ்ந்தார். Almashoora Latest News- தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
ஓம். கண்டு கொண்டேன். 👍 🙂- தமிழ் தொழிலதிபரும் மனைவியும் பலருக்கு கடன் கொடுக்காமல் நாட்டை விட்டு தலைமறைவு
யாழ்.கள நிருபர்... அவர்களின் படத்தை எடுத்துப் போடவும். 😂- ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகள் விடுதலை, டிரம்ப் வருகை - மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?
ஹமாஸ் வசமிருந்த 20 பணயக்கைதிகளும் விடுவிப்பு! ஹமாஸ் அமைப்பினரால் 13 இஸ்ரேலிய பணயக்கைதிகளை உள்ளடக்கிய இரண்டாவது குழு மத்திய காஸாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, ஏழு இஸ்ரேலிய பணயக்கைதிகளை கொண்ட முதலாவது குழுவை முன்னதாக ஹமாஸ் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ள நிலையில் தற்போது அடுத்த குழுவையும் ஒப்படைத்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேல் தடுத்துவைத்துள்ள 1,900க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளுக்கு பதிலாக மொத்தமாக 20 உயிருடன் உள்ள பணயக்கைதிகள் பரிமாறிக்கொள்ளப்படுவார்கள் என்று ஹமாஸ் தெரிவித்திருந்த நிலையில் இன்று இரண்டு குழுக்களாக 20 பணயக்கைதிகளை ஹமாஸ் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது. இதேவேளை பணயக்கைதிகளின் குடும்பத்தினரும் நண்பர்களும் மகிழ்ச்சி வெளியிட்டுவருகின்றனர். எதிர்வரும் நாட்களில் காசாவில் பணயக் கைதிகள் விடுதலை, பாலஸ்தீன கைதிகள் விடுதலை மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிண்ணனியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிராந்திய அமைதி உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று எகிப்துக்கு செல்வதற்கு முன்னதாக இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார். அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி ஆகியோர் ஷர்ம் எல்-ஷேக்கில் இன்று நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டுக்கு தலைமை தாங்கவுள்ளனர். இந்த மாநாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். “காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் புதிய சகாப்தத்தை உருவாக்குதல்” ஆகியன இந்த மாநாட்டின் நோக்கமாக கருதப்படுகின்றன. https://athavannews.com/2025/1450242- கருத்து படங்கள்
- உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது தெற்காசிய பிராந்திய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்!
உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது தெற்காசிய பிராந்திய மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்! வலுப்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பு மூலம் ஆரோக்கியமான முதுமை மற்றும் புகையற்ற புகையிலையை எதிர்த்துப் போராடுவது ஆகியவை, ஒக்டோபர் 13 முதல் 15 வரை இலங்கையில் நடத்தப்படும் WHO தென்கிழக்கு ஆசியாவின் 78 பிராந்தியக் குழு அமர்வில் சுகாதாரத் தலைவர்கள் விவாதிக்கும் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும். தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார அவசர நிதியத்தின் (SEARHEF) நிதியை விரிவுபடுத்துதல் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பான் எதிர்திறனுக்கு (AMR) எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல் குறித்து சுகாதார அமைச்சர்கள் மற்றும் உறுப்பு நாடுகளின் மூத்த அதிகாரிகள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தென்கிழக்கு ஆசியாவிற்கான அலுவலகப் பொறுப்பாளர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், டாக்டர் கேத்தரினா போஹ்மே மற்றும் பிற உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) நிபுணர்கள் மூன்று நாள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். இது எதிர்வரும் ஆண்டுகளுக்கான பிராந்தியத்தில் சுகாதார நிகழ்ச்சி நிரலை அமைக்கும். பிராந்திய நிர்வாகக் குழுக் கூட்டம் முன்னுரிமைச் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்த தீர்மானங்களை நிறைவேற்றும் என்றும், முந்தைய ஆண்டுகளின் தீர்மானங்களுடன் ஒப்பிட்டு முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உறுப்பு நாடுகளும் உலக சுகாதார நிறுவனமும் (WHO) ஆரோக்கியமான முதுமை குறித்த பிரகடனத்தை ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் விகிதம் வேகமாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து ஆரோக்கியமான முதுமை குறித்த கவனம் செலுத்தப்படுகிறது. 2050 ஆம் ஆண்டில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிராந்தியத்தின் மக்கள்தொகையில் 20.9% ஆக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2024 இல் 11.3% ஆக இருந்தது. முதுமை தவிர்க்க முடியாதது என்றாலும், இந்த மக்கள்தொகை மாற்றத்தை அதன் நன்மையை அதிகரிக்க சுகாதார மற்றும் சமூக அமைப்புகள் போதுமான அளவு தயாராக இருக்க வேண்டும். புகையில்லா புகையிலை, மின்னணு சிகரெட்டுகள், நிக்கோடின் பைகள் மற்றும் பாக்கு ஆகியவற்றின் பயன்பாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான உத்திகள் குறித்து இந்தக் கூட்டம் விவாதிக்கும். 280 மில்லியனுக்கும் அதிகமான வயதுவந்தோர் புகையில்லா புகையிலை பயன்படுத்துபவர்கள் மற்றும் அண்ணளவாக 11 மில்லியன் இளம் பருவத்தினர் புகையிலை பயன்படுத்துபவர்கள் என உலகளாவிய புகையிலை பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒரு பங்கின் விகிதாசார சுமையை தென்கிழக்கு ஆசியப் பிராந்தியம் தொடர்ந்து சுமந்து வருகிறது. மின்னணு சிகரெட்டுகள் மற்றும் நிக்கோடின் பைகள் போன்ற புதிய நிக்கோடின் தயாரிப்புகளின் வளர்ந்து வரும் பயன்பாடு மற்றும் பாக்கு கொட்டையின் பரவலான சமூக கலாச்சார பயன்பாடு ஆகியவை சவாலை மேலும் அதிகரிக்கின்றன. இயற்கை பேரழிவுகளுக்கு ஆளாகக்கூடிய, உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியம், சுகாதார அவசரநிலைக்குப் பிறகு உடனடியாக உயிர்காக்கும் செயற்பாடுகளில் உதவுவதற்காக அதன் சொந்த பிராந்திய சுகாதார அவசர நிதியைக் கொண்டுள்ளது – தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார அவசர நிதி (SEARHEF). 2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதிலிருந்து, 10 உறுப்பு நாடுகளில் 49 அவசரநிலைகளில் உதவியுள்ளது. இந்த நிதியின் தொகையை விரிவுபடுத்துவது குறித்து இந்த கூட்டம் ஆலோசிக்கும். நிதியத்தின் ஆணை 2016 இல் அவசரகால தயார்நிலைக்கும் ஆதரவளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. உலகளாவிய உறுதிமொழிகளுடன் பிராந்திய கொள்கை நடவடிக்கைகளை இணைப்பதன் மூலம் நுண்ணுயிர் எதிர்ப்பான் எதிர்திறனுக்கு (AMR) எதிரான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது, பிராந்தியக் குழுவில் மற்றொரு முன்னுரிமைப் பிரச்சினையாக இருக்கும். ஐ.நா. பொதுச் சபையின் நுண்ணுயிர் எதிர்ப்பான் எதிர்திறன் மீதான அரசியல் பிரகடனம் போன்ற சமீபத்திய உலகளாவிய மற்றும் பிராந்திய மைல்கற்கள், புதுப்பிக்கப்பட்ட உத்வேகத்தையும் நடவடிக்கைக்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன. கிட்டத்தட்ட 2 பில்லியன் மக்கள் வசிக்கும் உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியம், மனநலம், நல்வாழ்வு மற்றும் வாழ்க்கைத் தரத்தை வலுப்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறது; பெண்கள், இளம்பெண்கள், இளம் பருவத்தினர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் முதலீட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது; தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளை புரிந்து திறமைகளையும், அறிவை நிர்வகித்தலையும் மற்றும் ஆராய்ச்சியையும் அதிகரிக்கிறது. அனைத்து மக்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தவும், வழங்கவும் மற்றும் பாதுகாக்கவும், சுகாதாரம் தொடர்பான நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) மீண்டும் உரிய பாதையில் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். https://athavannews.com/2025/1450179- புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!
புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு! இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. CBSL வெளியிட்ட அண்மைய அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. அறிக்கையின்படி, கடந்த ஆண்டு இதே மாதத்தில் பெறப்பட்ட வெளிநாட்டு பணம் அனுப்புதல் 555.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள். அதன்படி, இந்த ஆண்டு செப்டம்பரில் பெறப்பட்ட வெளிநாட்டு பணம் அனுப்புதல் முந்தைய ஆண்டின் செப்டம்பர் மாதத்தை விட 140.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகம். இதற்கிடையில், ஜனவரி 01 முதல் இந்த ஆண்டு இன்றுவரை நாடு 5,811.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு பணம் அனுப்பியுள்ளதாக CBSL தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பெறப்பட்ட வெளிநாட்டு பணம் அனுப்புதலின் அளவு 4,843.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள். இது இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பெறப்பட்ட பணம் அனுப்புதலில் 967.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளது. 2025 செப்டம்பரில் சுற்றுலா வருவாய் 182.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் செப்டம்பர் 30 வரை சுற்றுலா வருமானமாக 182.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. https://athavannews.com/2025/1450186- கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!
தமக்குப் பிடித்த துணையுடன் வாழ முடிவு எடுத்த… தம்பதிகளுக்கு, இனிய திருமண வாழ்த்துக்கள். குடும்பப் படங்களை…. சமூக வலைத்தளங்களில் பதியும் போது, ஏற்படும் ஆபத்தான விடயங்களில்… மேற்படி சம்பவமும் ஒன்று. பெண்ணின் தாய்… தமது மகிழ்ச்சிக்காக இயல்பாக பதிந்த படத்திற்கு இவ்வளவு விமர்சனம் வைத்தமை மிகவும் அருவருப்பான செயல். மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை… விமர்சிக்கும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது. வாழ்த்த விருப்பம் இல்லாவிடில்… ஒதுங்கி இருந்திருக்கலாம். இது…. அந்தக் குடும்பத்திற்கு எவ்வளவு மன உழைச்சலை கொடுத்திருக்கும் என்பதை, சம்பந்தப் பட்டவர்கள் சிந்தித்து இருந்திருக்க வேண்டும். நாளைக்கு இது… அவர்களின் குடும்பத்திலும் நடக்கலாம்.- மாவீரர் தளபதி விதுசா + விதுசன் இருவரின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா இறைப்பாதம் அடைந்தார்
ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா.- பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு!
ஜனாதிபதியால் மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கப் பட்ட போது...- எகிப்தில் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் பங்குபற்றப்போவதில்லை!
எகிப்தில் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் பங்குபற்றப்போவதில்லை! எகிப்து தலைநகர் ஷர்ம் எல்-ஷேக்கில் நாளையதினம் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் அமைப்பினர் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வருகை தொடர்பாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி ஆகியோர் தலைமையில் நாளை ஷர்ம் எல்-ஷேக்கில் காசா அமைதிக்கான மாநாடு நடைபெறவுள்ளதாக எகிப்திய ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் “இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் புதிய சகாப்தத்தை உருவாக்குதல்” ஆகியன இந்த மாநாடு நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரிட்டனின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் ஸ்பெயினின் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். இதேவேளை, பிரன்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். https://athavannews.com/2025/1450169- தமிழ் மக்கள் ஐநாவில் நம்பிக்கையிழக்கிறார்களா? நிலாந்தன்.
தமிழ் மக்கள் ஐநாவில் நம்பிக்கையிழக்கிறார்களா? நிலாந்தன். எர்னெஸ்ற் ஹேமிங்வே ஓர் அமெரிக்க எழுத்தாளர்.அவர் எழுதிய A Farewell to Arms- “போரே நீ போ” என்ற நாவல் உலகப் புகழ்பெற்றது. கதையின் களம் இரண்டாம் உலக மகாயுத்தத் சூழலுக்குரியது. நாவலின் மையப் பாத்திரம் போரினால் சப்பித் துப்பட்ட ஒரு கட்டத்தில் பின்வரும் பொருள்படக் கூறும் “இப்பொழுது சமாதானம்,அமைதி,போர் நிறுத்தம் போன்ற வார்த்தைகள் அவற்றின் புனிதத்தை இழந்து விட்டன.வீதிகளின் பெயர்கள்,ரெஜிமென்ற்களின் பெயர்கள்,படைப்பிரிவின் பெயர்கள்தான் அவற்றுக்குரிய அர்த்தத்தோடு காணப்படுகின்றன.” என்று. இது கடந்த 16ஆண்டுகளாகத் தமிழ் அரசியலில் கூறப்பட்டு வருகின்ற “நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல்,நிலைமாறுகால நீதி”போன்ற வார்த்தைகளுக்கும் பொருந்துமா? மீண்டும் ஓர் ஐநா தீர்மானம் கடந்த ஆறாம் திகதி திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.கடந்த 16 ஆண்டுகளிலும் இவ்வாறு 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன.இந்த தீர்மானங்களால் தமிழ் மக்களுக்குக் கிடைத்தவை என்ன? கடந்த 16 ஆண்டுகளிலும் போர் முடிந்த கையோடு ஐநா மகிந்தவை பாராட்டியது.வெல்லக் கடினமான பயங்கரவாத அமைப்பு ஒன்றை தோற்கடித்தமைக்காக ஐநாவில் மகிந்தவுக்கு பாராட்டு பத்திரம் கிடைத்தது.ஆனால் சில ஆண்டுகளிலேயே ஐநாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. அதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு. முதலாவது காரணம் மஹிந்த சீனாவை நோக்கிச் சாயத் தொடங்கியது.இரண்டாவது காரணம் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் உழைப்பு. இந்த இரண்டு காரணங்களின் விளைவாகவும் 2012இலிருந்து ஐநா தீர்மானங்கள் மகிந்த அரசாங்கத்துக்கு எதிராக வரத் தொடங்கின.ஆனால் மஹிந்த அரசாங்கத்தை அசைக்க முடியவில்லை. 2015 ஆம் ஆண்டு ஓர் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இந்த ஆட்சி மாற்றத்தில் மேற்கு நாடுகளும் இந்தியாவும் இணைந்து மஹிந்தவைத் தோற்கடித்தன.ரணில்-மைத்திரி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தன.அந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் அதற்கு கால அவகாசத்தை வழங்குவதற்காக அப்பொழுது நடக்கவிருந்த ஐநா கூட்டத்துடன் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.அக்கூட்டத் தொடரில்தான் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது நிலைமாறு கால நீதிக்கான தீர்மானம்-பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம்-நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிய பொழுது அப்போது இருந்த இலங்கை அரசாங்கம் அதாவது நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்படுகின்ற அரசாங்கம் அந்தத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது. அதன்பின் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஐநா நிலை மாறு கால நீதிச் செய்முறைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்தது. ஆனால் 2018 இல் நடந்த யாப்புச் சதி முயற்சி ஒன்றின்மூலம் மைத்திரிபால சிறிசேன நிலைமாறு கால நீதி முன்னெடுப்புகளைத் தோற்கடித்தார்.அதாவது நிலை மாறு கால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரி அதனைக் காட்டிக் கொடுத்தார்.விளைவாக நிலைமாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட யாப்புருவாக்க முயற்சிகள் இடைக்கால வரைபுடன் நின்று விட்டன. அந்த நிலைமாறுகால நீதிச் செய்முறைகளை சுதந்திரன் தோல்வியுற்ற பரிசோதனை என்று சொன்னார்.2021ஆம் ஆண்டு ஐநா கூட்டத் தொடரை முன்னிட்டு கட்சிகளை இணைத்து ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்கான சந்திப்பு வவுனியாவில் நடந்த பொழுது அதில் வைத்து சுமந்திரன் “ஆறாண்டுகளாக ஒரு பரிசோதனை செய்தோம் அதில் தோல்வி அடைந்து விட்டோம்” என்ற பொருள்படச் சொன்னார்.இத்தனைக்கும் அவர்தான் நிலைமாறு கால நீதியின் தமிழ்ப் பங்காளி. நிலைமாறு கால நீதி என்ற கருத்துருவம் நிலை மாற்றம் ஏற்பட்டிருக்கும் ஒரு நாட்டுக்குத்தான் பொருந்தும்.இலங்கையில் அப்படி என்ன நிலை மாற்றம் ஏற்பட்டது? யுத்தம் நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால் யுத்தத்தை தோற்றுவித்த அரசியல் காரணிகள் அப்படியே உள்ளன.அதற்காக உருவாக்கப்பட்ட படைக் கட்டமைப்பும் புலனாய்வுக் கட்டமைப்பும் அப்படியே உள்ளன.கடந்த 15 ஆண்டுகளின் பின் மாற்றம் என்று கூறிக்கொண்டு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால்கூட இன்றுவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க முடியவில்லை என்பது ஓர் ஆகப்பிந்திய உதாரணம்.அந்தச் சட்டத்தை கடந்த மாதம் நீக்க போவதாக அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தது. எனவே இலங்கைத்தீவில் நிலைமாற்றம் ஏற்படவில்லை.நிலைமாற்றம் ஏற்படாத போது நிலைமாறுகால நீதியை எப்படி ஸ்தாபிப்பது?அப்படி ஸ்தாபிக்க முற்படுவது என்பது குற்றம் சாட்டப்பட்டவர்களே நீதி விசாரணை செய்வதுதான்.எனவே நிலைமாறுகால நீதிச் செய்முறைகள் தோற்றுப் போனதற்கு மைத்திரி மகிந்தவிடம் அப்பம் சாப்பிட்டுவிட்டு குத்துக்கரணம் அடித்தது மட்டும் காரணமில்லை. நிலைமாற்றம் இல்லாத ஓர் அரசியல் சூழலில் நிலைமாறு கால நீதியை அமுல்படுத்தலாம் என்று நம்பியதுதான் தவறு. அதன் பின் கோத்தபாய வந்தார்.ஐநா மீண்டும் இறுக்கிப்பிடித்தது. முடிவில் நிலைமாறு கால நீதிச் செய்முறைகளில் ஏற்பட்ட பின்னடைவுகளின் விளைவாக,ஐநா 2021ஆம் ஆண்டு மற்றொரு தீர்மானத்தின்மூலம் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தை உருவாக்கியது.இந்த அலுவலகமானது இலங்கை தீவில் போர்க்களத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக சான்றுகளையும் சாட்சிகளையும் இன்று வரை சேகரித்து வருகிறது.கடந்த ஆறாம் தேதி நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானமானது மேற்படி அலுவலகத்தைத் மேலும் இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இயங்க அனுமதிக்கின்றது. எனவே இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம் கடந்த 16 ஆண்டுகளிலும் ஐநா மைய தமிழ் அரசியலின்மூலம் கிடைத்தவை எவையெவை என்று பார்த்தால், இடையில் நிறுத்தப்பட்ட பலவீனமான நிலை மாறுகால நீதிச் செய்முறைகள், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம் இவை இரண்டும்தான். நிலைமாறு கால நீதியின் கீழ் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளில் குறிப்பாக காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் போன்றவற்றை பாதிக்கப்பட்ட மக்கள் பொருட்படுத்தவில்லை;நிராகரித்து விட்டார்கள்.அதேசமயம் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் அலுவலகத்தைச் சேர்ந்த ஐநா அலுவலர்கள் இலங்கைக்குள் வர இன்றுவரை அனுமதியில்லை.அனுர ஜனாதிபதியாக வந்த பின்னரும் அதுதான் நிலைமை.அந்த அலுவலகத்தைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. உள்நாட்டு நீதி விசாரணைப் பொறிமுறைக்கூடாகவே பொறுப்புக் கூறமுடியும் என்று அரசாங்கம் கூறிவருகிறது. இதில் ஐநா இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறதா? ஒருபுறம் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம்.அது பன்னாட்டுப் பரிமாணத்தைக் கொண்டது. இன்னொருபுறம் உள்நாட்டுப் பொறிமுறையை வெளிநாட்டு நிபுணத்துவ உதவிகளின்மூலம் பலப்படுத்தலாம் என்று எதிர்பார்ப்பது.அதாவது குற்றம் சாட்டப்படும் தரப்பையே விசாரிப்பதற்கு அனுமதிப்பது. மனித உரிமைகள் பேரவையின் மேற்படி நிலைபாட்டை எதிர்த்தே பாதிக்கப்பட்ட மக்கள் செம்மணியில் மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கையை எரித்தார்கள். கடந்த ஆறாம் திகதி ஐநா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக செம்மணி வளைவில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புகளும் பல்கலைக்கழக மாணவ அமைப்புகளும் ஏனைய அரசியல் செயற்பாட்டாளர்களும் இணைந்து அந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தார்கள்.இப்போராட்டத்தின் முடிவில் செம்மணியில் அணையா விளக்கு இடம்பெற்ற இடத்தில் வைத்து, ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை,பாதிக்கப்பட்ட அம்மாக்களால் எரிக்கப்பட்டது. இதில் ஒரு செய்தி உண்டு. எந்த ஐநாவை தலையிட வேண்டும் என்று கேட்டுத் தமிழ் மக்கள் ஊர்வலம் போனார்களோ,எந்த ஐநாவில் நீதி கேட்டு தமிழ் அரசியல்வாதிகளும் செயல்பாட்டாளர்களும் ஒவ்வொரு ஆண்டும் ஜெனிவாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்களோ,எந்த ஐநா மன்றத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு ஆண்டும் கடிதங்கள் எழுதப்படுகின்றனவோ,எந்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வர வேண்டும் என்று கேட்டு ஒரு சுடரை மூன்று நாட்கள் அணியாமல் ஏற்றி வைத்திருந்தார்களோ,அதே இடத்தில்,அதே ஆணையாளருடைய அறிக்கையைப் பாதிக்கப்பட்ட அம்மாக்கள் ஏரிக்கும் ஒரு நிலைமை.கடந்த 16 ஆண்டு கால ஐநாவை நோக்கிய அரசியலில் தமிழ் மக்கள் ஏமாற்றம் அடைந்து வருவதை அது காட்டுகிறது.இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் போன்ற சொற்கள் அவற்றின் புனிதத்தை இழக்கத் தொடங்கி விட்டதையும் அது காட்டுகின்றதா ? https://athavannews.com/2025/1450118- பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக உயர்த்தப்படும்- ஜனாதிபதி உறுதி!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக உயர்த்தப்படும்- ஜனாதிபதி உறுதி! 2025ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. வீட்டு உரிமைப் பத்திரங்களைப் பெறும் 2,000 பயனாளிகளுக்கு ஜனாதிபதி அடையாளமாக சில உரிமைப் பத்திரங்களை வழங்கி வைத்திருந்தார். வசதியான வீடு, சுகாதாரமான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை அரசு, இந்திய அரசுடன் இணைந்து, மலையக சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு்ள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய பிரதிநிதிகள் குழு ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். https://athavannews.com/2025/1450155- பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு!
பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு! மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறுகிறது. இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டமாக 2000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைகள் இதன்போது வழங்கப்படுகிறது. நிகழ்வில் ஜனாதிபதியுடன் இணைந்து பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய பிரதிநிதிகள் குழு ஆகியோர் பங்கேற்றுள்ளனர். https://athavannews.com/2025/1450145- ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
ஒக்டோபர் மாதத்தில் 9 நாட்களில் 46,000 ஐ கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை! இந்த ஆண்டின் ஒக்டோபர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 46ஆயிரத்து 868 ஐ கடந்துள்ளது. ஒக்டோபர் மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மொத்தம் 14 ஆயிரத்து 221 இந்தியர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன் இது சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 30.3% ஆகும். மேலும் இங்கிலாந்திலிருந்து 3 ஆயிரத்து 171 பேரும் ஜெர்மனியிலிருந்து 2ஆயிரத்து 652 பேரும் சீனாவிலிருந்து 4ஆயிரத்து 416 பேர் மற்றும் பங்களாதேஷிலிருந்து 2ஆயிரத்து 158 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். https://athavannews.com/2025/1450143- சூடான்: துணை இராணுவ தாக்குதலில் 57 போ் உயிரிழப்பு!
சூடான்: துணை இராணுவ தாக்குதலில் 57 போ் உயிரிழப்பு! வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் துணை இராணுவப் படையான ஆா்.எஸ்.எஃப் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 17 குழந்தைகள் உட்பட 57 போ் உயிரிழந்துள்ளனர். இதனை அந்த நாட்டு உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆா்.எஸ்.எஃப் படையால் முற்றுகையிடப்பட்டுள்ள வடக்கு டாா்ஃபா் மாகாணத் தலைநகரான அல்-பஷீரில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் உயிரிழந்தவா்களில் 17 சிறுவா்கள், 22 பெண்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, தாக்குதலில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஏழு பெண்கள் உட்பட 21 பேர் காயமடைந்ததாக சூடான் உள்நாட்டுப் போரைக் கண்காணிக்கும் மருத்துவ நிபுணர்களின் குழுவான சூடான் மருத்துவர்கள் வலையமைப்பு தெரிவித்துள்ளது. சூடானில் அல்-புா்ஹான் தலைமையிலான இராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆா்எஸ்எஃப் துணை இராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக கடந்த 2023 ஏப்ரல் 15-ஆம் திகதி முதல் போர் நடந்து வருகிறது. இதில் இலட்சக்கணக்கானவா்கள் உயிரிழந்திருப்பதாகவும் சுமாா் 1.4 கோடி போ் இருப்பிடங்களை விட்டு புலம் பெயா்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக சா்வதேச நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1450137- கருத்து படங்கள்
- கச்சத்தீவில் தஞ்சமடையும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த இந்திய மீனவர்கள் நடவடிக்கை!
கச்சத்தீவில் தஞ்சமடையும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த இந்திய மீனவர்கள் நடவடிக்கை! அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரத்தில் நேற்றையதினம் (11) போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இராமேஸ்வரத்தில் இந்த போராட்டம் நடைபெற்ற நிலையில் ஏராளமான மீனவர்களும், கைதான மீனவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றிருந்தனர். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் கடந்த 9 ஆம் திகதி 30 மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் பயணித்த 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர்களை விடுவிக்கக்கோரி நேற்றையதினம் இராமேஸ்வரத்தில் இந்த போராட்டம் இடம்பெற்றது. இதேவேளை, போராட்டத்தின் போது கருத்து வௌியிட்ட தமிழக விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யேசுராஜா கருத்து தெரிவித்திருந்தார். நடுக்கடலில் இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அதிகமாக நடைபெற்று வருகிறது எனவும் இலங்கை சிறையில் தவிக்கும் மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிக்கக்கோரியும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினையின்றி மீன்பிடிக்க நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தியும் அடுத்தக்கட்ட போராட்டத்தை நடத்த உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து மீனவ குடும்பத்தினர், படகுகளில் சென்று கச்சத்தீவில் தஞ்சமடையும் போராட்டம் நடத்த உள்ளோம் எனவும் விரைவில் அதற்கான திகதி அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் பிரதமர் நினைத்தால் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். எனவே, மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1450122- நாளொன்றிற்கு சுமார் 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்!
நாளொன்றிற்கு சுமார் 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்! நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதால் 20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு மாதமும் பெண்கள் சுய மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. 20 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் மருத்துவ மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளவும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மார்பகப் பரிசோதனை செய்து கொள்ளவும் பரிந்துரைக்கப்படுகிறது. மார்பகங்களில் கட்டிகள், மார்பகத்தின் தோல் மங்கலாகுதல், மார்பக வீக்கம், அசாதாரண வெளியேற்றம் அல்லது முலைக்காம்பிலிருந்து இரத்தப்போக்கு, முலைக்காம்பில் பள்ளம் (சமீபத்தில்), மார்பகங்களில் வலி அல்லது தோலில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் அல்லது ஆபத்து காரணிகளை அனுபவித்தால் பெண்கள் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2025/1450102 - இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.