Everything posted by தமிழ் சிறி
-
'பேரரசுகளின் கல்லறை': ஆப்கானிஸ்தானில்... பிரிட்டன், சோவியத், அமெரிக்கா தோற்றது ஏன்?
பிரிட்டிஷ், சோவியத் மற்றும் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளன, ஆனால் அனைவரும் பின்வாங்க வேண்டியிருந்தது. 'பேரரசுகளின் கல்லறை': ஆப்கானிஸ்தானில்... பிரிட்டன், சோவியத், அமெரிக்கா தோற்றது ஏன்? சமீபத்திய எல்லை மோதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் 48 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனாலும், பதற்றம் தொடர்கிறது. கத்தார் மத்தியஸ்தராக இருந்து அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம், மோதல் மோசமாகலாம் என்றும் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், இந்தியா வந்திருந்த தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கியின் கூற்று சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பாகிஸ்தானின் பெயரை நேரடியாகச் சொல்லாமல், மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். "ஆப்கானியர்களின் தைரியத்தை சோதிக்க வேண்டாம், அவர்களை அதிகமாக துன்புறுத்த வேண்டாம். அதைச் செய்ய நினைத்தால், முதலில் பிரிட்டனிடம், சோவியத் யூனியனிடம், அமெரிக்காவிடம், நேட்டோவிடம் கேளுங்கள். அவர்கள் உங்களுக்குத் தெளிவாகச் சொல்வார்கள், ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவது எளிதல்ல," என்று அவர் கூறியிருந்தார். சமீபத்தில், தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவரும் இதேபோன்ற கருத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், ஒரு பாரம்பரிய ராணுவமோ,பெருமளவில் வளங்களோ இல்லாத நாட்டில் உலகின் பல வல்லரசுகளும் ஏன் தோல்வியடைந்தன? ஏன் ஆப்கானிஸ்தான் 'பேரரசுகளின் கல்லறை' (Graveyard of Empires) என்று அழைக்கப்படுகிறது? என்ற கேள்வியை பலரும் முன்வைக்கின்றனர். 'பேரரசுகளின் கல்லறை' பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கம்யூனிச ஆட்சியின் வீழ்ச்சியைத் தடுக்க ஆப்கானிஸ்தானில் தரையிறங்கிய சோவியத் ராணுவம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. இந்தக் கேள்விக்கான பதில் ஆப்கானிஸ்தானின் வரலாற்றிலும் அதன் புவியியல் அமைப்பிலும் பதிந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டில், உலகின் மிக சக்திவாய்ந்த பேரரசாக இருந்த பிரிட்டிஷ் பேரரசு தனது முழு ராணுவ வலிமையையும் பயன்படுத்தி ஆப்கானிஸ்தானைக் கைப்பற்ற முயன்றது. ஆனால் இறுதியில் 1919ஆம் ஆண்டு பிரிட்டன் தோல்வியை ஏற்று, ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பின், 1979ஆம் ஆண்டு, சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. 1978ஆம் ஆண்டில் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தடுப்பதே அதன் நோக்கமாக இருந்தது. ஆனால் அவர்கள் ஒருபோதும் போரில் வெற்றி பெற முடியாது என்பதை உணர அவர்களுக்கு பத்து ஆண்டுகள் ஆயின. பிரிட்டிஷ் பேரரசும் சோவியத் யூனியனும் சில விஷயங்களில் ஒற்றுமையைக் கொண்டிருந்தன. ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போது இரு பேரரசுகளும் தங்கள் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தன. ஆனால் , அந்தப் படையெடுப்பிற்குப் பிறகு, இரு பேரரசுகளும் படிப்படியாகச் சிதையத் தொடங்கின. அதன் பின், 2001ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தன. அங்கு பல ஆண்டுகளாக நடந்த போர்களில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இருபது ஆண்டுகள் கடந்தபின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற முடிவு செய்தார். அதுவே ஆப்கானிஸ்தானில் தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுத்தது. இந்த முடிவு உலகம் முழுவதும் பெரும் விமர்சனத்தையும் சர்ச்சையையும் எழுப்பியது. இன்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப், பைடனின் முடிவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த முடிவே தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்ற வழிவகுத்தது. "ஆப்கானியர்களே போராடத் தயாராக இல்லாத ஒரு போரில், அமெரிக்கர்கள் உயிரிழக்க கூடாது"என்று பைடன் கூறினார். "பேரரசுகளின் கல்லறை" என்ற பெயரால் பிரபலமான ஆப்கானிஸ்தானை நினைவு கூர்ந்து, "எவ்வளவு வலிமையான ராணுவம் பயன்படுத்தப்பட்டாலும், ஒரு நிலையான, ஒருங்கிணைந்த மற்றும் பாதுகாப்பான ஆப்கானிஸ்தான் உருவாவது சாத்தியமில்லை," என்றும் பைடன் தெரிவித்தார். கடந்த சில நூற்றாண்டுகளில், ஆப்கானிஸ்தானைக் கட்டுப்படுத்த முயன்ற உலகின் வலிமையான வல்லரசுகளுக்கு, அந்த நாடு உண்மையிலேயே ஒரு கல்லறையாக மாறியிருக்கிறது. ஏனென்றால் ஆரம்பத்தில் சிறிய வெற்றிகளைப் பெற்றாலும், இறுதியில் எல்லா பேரரசுகளும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. வல்லரசுகள் தோற்றது ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்கப் படைகள் 2001 இல் ஆப்கானிஸ்தானில் தரையிறங்கின, ஆய்வாளர் டேவிட் ஆஷ்பி, 'Afghanistan: Graveyard of Empires' ('ஆப்கானிஸ்தான்: பேரரசுகளின் கல்லறை)என்ற தலைப்பில் ஆப்கானிஸ்தானின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு நூலை எழுதியுள்ளார். "ஆப்கானியர்கள் மிக வலிமையானவர்கள் என்பதல்ல காரணம். ஆனால் ஆப்கானிஸ்தானில் நடந்த பெரும்பாலான நிகழ்வுகள், அந்த நாட்டை ஆக்கிரமிக்க முயன்ற வல்லரசுகளின் தவறான முடிவுகளால் ஏற்பட்டவை தான்"என அவர் அப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். "நீங்கள் மேலோட்டமாகப் பார்த்தால், ஆப்கானிஸ்தான் ஒரு கடினமான நாடு. மிக மோசமான உள் கட்டமைப்பும், மிகக் குறைந்த வளர்ச்சியையும் கொண்ட ஒரு சிக்கலான நாடு" என ஆய்வாளர் ஆஷ்பி கூறுகிறார். "சோவியத் யூனியன், பிரிட்டன் அல்லது அமெரிக்கா என எந்தப் பேரரசும் ஆப்கானிஸ்தானுடன் இணக்கமாக நடந்துகொள்ளவில்லை. அவர்கள் தங்களது வழியில் போக விரும்பினர். ஆனால் ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுச் சிக்கல்களையும், அதன் சமூக-மத அமைப்புகளையும் அவர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள முயலவில்லை"என்று அவர் குறிப்பிடுகிறார். 'ஆப்கானிஸ்தானை யாராலும் தோற்கடிக்க முடியாது' என்று அடிக்கடி கூறப்படுகின்றது. அது உண்மை அல்ல. பாரசீகர்கள், மங்கோலியர்கள், மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர் ஒருகாலத்தில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியிருந்தனர். ஆனால், ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க முயன்ற கடைசி மூன்று வல்லரசுகளும் தங்கள் முயற்சிகளில் படுதோல்வியடைந்தன' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்று முறை படையெடுத்த பிரிட்டிஷ் பேரரசு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,1878 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் ஆப்கன்-பிரிட்டிஷ் போரின் ஓவியம். 19ஆம் நூற்றாண்டில், மத்திய ஆசியாவின் கட்டுப்பாட்டைப் பெற வேண்டும் என்ற நோக்கில், பிரிட்டிஷ் மற்றும் ரஷ்ய பேரரசுகளுக்கு இடையே நடந்த போரில் ஆப்கானிஸ்தான் முக்கியத் தளமாக இருந்தது. இது ரஷ்யாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையே பல ஆண்டு கால ராஜ்ஜீய மற்றும் அரசியல் மோதலுக்கு வழிவகுத்தது. இறுதியில் பிரிட்டன் வெற்றி பெற்றாலும், அதற்கு பெரும் விலை கொடுக்க நேரிட்டது. 1839 முதல் 1919 வரை, பிரிட்டன் மூன்று முறை ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. ஆனால் மூன்று முறையும் இறுதியில் தோல்வியைத் தழுவியது. முதல் ஆங்கிலோ–ஆப்கன் போரில் (1839), பிரிட்டன் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. ஏனென்றால், பிரிட்டன் விரைவாகச் செயல்படாவிட்டால் ரஷ்யா ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றும் என்று அது நம்பியது. ஆனால் பிரிட்டன் விரைவில் ஒரு வரலாற்று தோல்வியைச் சந்தித்தது. சில பழங்குடியினர், எளிய ஆயுதங்களின் உதவியால், உலகின் சக்திவாய்ந்த படையான பிரிட்டன் படையை முற்றிலுமாக அழித்தனர். மூன்று ஆண்டுகள் தொடர்ந்த ஆக்கிரமிப்புக்குப் பிறகு, ஆப்கானியர்கள் பிரிட்டன் ராணுவத்தை பின்வாங்கச் செய்தனர். 1842ம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிரிட்டிஷ் முகாமிலிருந்து ஜலாலாபாத்திற்குச் சென்ற 16,000 வீரர்களில், ஒரே ஒரு பிரிட்டிஷ் குடிமகன் மட்டும் தான் உயிருடன் திரும்பினார். இந்தப் போர், பிரிட்டிஷ் பேரரசின் விரிவாக்கக் கொள்கையை பலவீனப்படுத்தியது என்றும், ஆங்கிலேயர்களை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்ற நம்பிக்கையைச் சிதைத்தது என்றும் ஆய்வாளர் ஆஷ்பி குறிப்பிடுகிறார். நாற்பதாண்டுகள் கழித்து, பிரிட்டன் மீண்டும் முயற்சி செய்தது. அந்த முறை ஓரளவு வெற்றி கிடைத்தது. 1878 முதல் 1880 வரை நடந்த இரண்டாம் ஆங்கிலோ–ஆப்கன் போருக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையை தன் கட்டுப்பாட்டில் எடுக்கும் நிலைக்கு பிரிட்டன் வந்தது. ஆனால் 1919ஆம் ஆண்டு, பிரிட்டனால் தேர்ந்தெடுக்கப்பட்ட எமிர், பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தார். இதுவே மூன்றாம் ஆங்கிலோ–ஆப்கான் போர் வெடிக்கக் காரணமானது. அந்த நேரத்தில், போல்ஷெவிக் புரட்சி ரஷ்யாவின் அச்சுறுத்தலைக் குறைத்திருந்தது. அதேசமயம், முதலாம் உலகப் போரால் பிரிட்டனின் ராணுவச் செலவுகள் பெரிதும் உயர்ந்திருந்தன. இதனால், ஆப்கானிஸ்தான் மீதான பிரிட்டனின் ஆர்வம் மங்கியது. நான்கு மாத நீண்ட போருக்குப் பிறகு, பிரிட்டன் ஆப்கானிஸ்தானை சுதந்திரம் பெற்றதாக அறிவித்தது. ஆப்கானிஸ்தானில் அதிகாரப்பூர்வ ஆட்சி இல்லாவிட்டாலும், பிரிட்டன் அந்த நாட்டில் பல ஆண்டுகளாக தன் செல்வாக்கை பராமரித்து வந்ததாக நம்பப்படுகிறது. சோவியத் ஒன்றியத்தின் படையெடுப்பு 1920களில், எமீர் அமானுல்லா கான் ஆப்கானிஸ்தானில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முயன்றார். பெண்கள் புர்கா அணிய வேண்டிய கட்டாயத்தை நீக்குதல் உள்ளிட்ட அவரது சில சீர்திருத்தங்களை பழங்குடியினரும் மதத் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர். இதனால் நாட்டில் உள்நாட்டுப் போர் வெடித்தது. இந்த உள்நாட்டுப் போரின் காரணமாக, ஆப்கானிஸ்தான் பல தசாப்தங்களாக அமைதியின்றி இருந்தது. பின்னர் 1979ஆம் ஆண்டு, சோவியத் யூனியன், கம்யூனிச அரசாங்கத்தை பாதுகாக்கும் பொருட்டு ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. இதற்கு எதிராக பல முஜாஹிதீன் அமைப்புகள் உருவாகி, சோவியத் படைகளுக்கு எதிராக போரிட்டன. அந்த அமைப்புகள் அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, இரான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகளிடமிருந்து நிதியுதவியும் ஆயுதங்களும் பெற்றன. பதிலுக்கு, சோவியத் படைகள், பிரச்னையின் மூலமாக கருதிய பல கிராமங்கள் மற்றும் பகுதிகளின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தின. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவோ அல்லது உயிரிழக்கவோ நேர்ந்தது. இந்தப் போர், பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. சுமார் 15 லட்சம் பேர் கொல்லப்பட்டனர், ஐந்து மில்லியன் மக்கள் அகதிகளாக மாறினர். சில காலத்திற்கு சோவியத் படைகள் முக்கிய நகரங்கள் மற்றும் வர்த்தக மையங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், முஜாஹிதீன்கள் கிராமப்புறங்களில் தீவிரமாக செயல்பட்டனர். சோவியத் ராணுவம் பலவிதமான போர் தந்திரங்களை முயற்சித்தும், கொரில்லா போராளிகள் அவர்களின் தாக்குதல்களைத் முறியடித்து வந்தனர். இதனால் முழு நாடும் போரால் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில், அப்போதைய சோவியத் தலைவர் மிகைல் கோர்பச்சேவ், ரஷ்ய பொருளாதாரத்தை சீர்திருத்தும் போது போரைத் தொடர முடியாது என்பதை உணர்ந்து, 1988 இல் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெற முடிவு செய்தார். இந்தப் போர், சோவியத் யூனியனுக்கு பொருளாதார ரீதியாக மிகுந்த பொருட்செலவை ஏற்படுத்தியது. இது சோவியத் யூனியனின் மிகப்பெரிய அரசியல் தவறுகளில் ஒன்றாக கருதப்படுகிறது என்று ஆஷ்பி கூறுகிறார். இந்தப் போருக்குப் பின்னர், சோவியத் யூனியன் சிதைவடைந்து, பிளவுபடத் தொடங்கியது. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையும் பேரழிவும் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,2009 ஆம் ஆண்டில் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அமெரிக்கா தாலிபான்களை பின்னுக்குத் தள்ளியது, ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கவில்லை. பிரிட்டன் மற்றும் சோவியத் யூனியனின் தோல்விகளுக்குப் பிறகு, 9/11 தாக்குதலைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா அமைப்பை அழிக்க அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. முந்தைய இரண்டு பேரரசுகளைப் போலவே, அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானை விரைவாகக் கைப்பற்றி, தாலிபன்களை சரணடையச் செய்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது, ஆனாலும் தாலிபன் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தன. 2009ஆம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, கூடுதல் படைகளை அனுப்பி தாலிபன்களுக்கு தற்காலிக பின்னடைவை ஏற்படுத்தினார். ஆனால் அதுவும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2014 ஆம் ஆண்டில் அதிக சேதங்கள் ஏற்பட்டன. பின்னர் நேட்டோ தனது பணி முடிந்ததாக அறிவித்து, ஆப்கானிய ராணுவத்திடம் பொறுப்பை ஒப்படைத்தது. இதற்குப் பிறகு, தாலிபன்கள் மீண்டும் பல பிரதேசங்களை கைப்பற்றினர். அடுத்த ஆண்டு, 2015இல், காபூலில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் விமான நிலையத்துக்கு அருகே பல தற்கொலை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் பல தவறுகள் நடந்ததாக ஆஷ்பி விளக்குகிறார். "ராணுவமும், ராஜ்ஜீய முயற்சிகளும் இருந்தபோதிலும், ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால், அமெரிக்காவாலும் சர்வதேச சமூகத்தாலும், ஆப்கானிஸ்தானை ஒரு மறைமுகப் போர் நடத்துவதிலிருந்து தடுக்க முடியவில்லை. அந்த மறைமுகப் போர், மற்ற எல்லா ஆயுதங்களையும் விட அதிக வெற்றியை பெற்றது," என்று அவர் கூறுகிறார். அமெரிக்காவுக்கு செலவு மிக்க போர் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அடைந்த தோல்வி தெற்கு வியட்நாமில் நடந்த நிகழ்வுகளுடன் ஒப்பிடப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் நடத்திய போர் அதிக உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியது என்றால், அமெரிக்க படையெடுப்பு அதிக செலவு மிக்கதாக இருந்தது. சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் போருக்கு ஆண்டு ஒன்றுக்கு 2 பில்லியன் டாலர் செலவிட்டது. அமெரிக்கா 2010–2012 காலத்தில் ஆண்டுக்கு சுமார் 100 பில்லியன் டாலர் செலவிட்டதாகக் கருதப்பட்டது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அடைந்த தோல்வி தெற்கு வியட்நாமில் நடந்த நிகழ்வுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டெபானிக், "இது ஜோ பைடனின் சயகான்" (வியட்நாம் போரில் தெற்கு வியட்நாமின் தலைநகராக திகழ்ந்த சயகான் நகரத்தை வடக்கு வியட்நாம் படைகள் கைப்பற்றியது வரலாற்றில் அமெரிக்கப் படைகளின் பெரும் தோல்வியைக் குறிக்கிறது) என்று ட்வீட் செய்துள்ளார். "சர்வதேச அரங்கில் இது ஒரு மிகப்பெரும் தோல்வி, அதை ஒருபோதும் மறக்க முடியாது." அமெரிக்கப் படைகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியது ஒரு மனிதாபிமான நெருக்கடிக்கு வழிவகுத்தது, லட்சக்கணக்கான மக்களை இடம் பெயர நேர்ந்தது. "வரும் நாட்களில் தாலிபன் அரசு சர்வதேச சமுதாயத்தால் அங்கீகாரம் பெறுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அதைப் பற்றி எனக்கு பெரும் சந்தேகங்கள் உள்ளது," என்கிறார் ஆஷ்பி. சர்வதேச சமுதாயம் தாலிபன்களை கையாள முடியாமல் போனால், பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆப்கானிஸ்தானை மீண்டும் தாக்க ஒரு வேறு சக்தி முயற்சி செய்யுமா? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு எழுதியவர்,நோர்பெர்டோ பிரேட்ஸ்
-
முன்னாள் சபாநாயகருக்கான உணவுச்செலவு – கணக்காய்வில் வெளியான தகவல்!
முன்னாள் சபாநாயகருக்கான உணவுச்செலவு – கணக்காய்வில் வெளியான தகவல்! முன்னாள் சபாநாயகர் ஒருவருக்கு அவரது பதவிக் காலத்தில், உணவுக்காக.... மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பான முழுமையான கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. நாடாளுமன்றத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியதாக நடத்தப்பட்ட முழுமையான கணக்காய்வின் அறிக்கை, பதில் கணக்காய்வாளர் நாயகம் தர்மபால கம்மன்பிலவினால் சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் பணிப்புரைக்கமையவே இந்த விசேட கணக்காய்வு விசாரணை சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கணக்காய்வு அறிக்கையில் நாடாளுமன்றத்தின் பல்வேறு துறைகளிலும் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல முக்கிய நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்த தகவல்கள் விரிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்த முழுமையான கணக்காய்வு அறிக்கை எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1450730
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
- ஊடகத்துறையில் முத்திரை பதித்த... ஆற்றல் மிகு இலக்கியவாதி, நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி.
ஊடகத்துறையில் முத்திரை பதித்த... ஆற்றல் மிகு இலக்கியவாதி, நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி. -வீரகேசரி- கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி வாரவெளியீட்டில் 19.10.2025இல் பதிவாகி வெளிவந்திருப்பது….. அரசியல் ஆய்வாளரும், இலக்கியவாதியும், விமர்சகரும், நிகழ்ச்சி நெறியாளரும்…. 20வருடங்களுக்கு மேலாக ஊடகப்பணியாற்றி வன்னி மண்ணில் 12.02.2009 அன்று எறிகணை வீச்சுக்கு இலக்காகி கொடிய போரின் சாட்சியாக மக்கள் மனங்களிலில் வாழும் நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்கள் பற்றிய பார்வை..……. பேரன்பும்,நன்றியும் திரு.ச.சிறிகஜன் அவர்கள், பிரதம ஆசிரியர், வீரகேசரி, மற்றும் இணை ஆசிரியர்கள், நிர்வாகக் குழுமத்தினர்க்கு. நன்றி மூத்த படைப்பாளி திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களுக்கு. யாழ்.உரும்பையூர் து.திலக்(கிரி) சுவிற்சர்லாந்திலிருந்து எழுதும்… வாரம் ஒரு படைப்பாளி… ************************* (பார்வை - 65) ஈழத்துப் பத்திரிகைத்துறை என்பது அன்றுதொட்டு இன்றுவரை மிகச் சவால் நிறைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. அதிலும் ஓர் ஊடகருடைய நேர்த்திய பணி என்பது உள்ளதை உள்ளபடி எழுதுதல், பக்கச்சார்பற்ற நிலையைக் கொண்டிருத்தல், நேரிடைக் களத்தில் நின்று எழுதுதல் இவ்வாறாக இன்னும் பல நெறிமுறைகளை ஊடகதர்மம் கொண்டிருக்கிறது. அவ்வாறான வலியும் சவாலும் நிறைந்த உணர்வுமிகு பயணம் ஒன்றில்தான் ஈழநாடு, ஈழநாதம், ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளின் அரசியல் களநிலவரம், விமர்சனம், வெளிச்சம் சஞ்சிகையின் கவிதை, சிறுகதைகள் போன்ற படைப்புகளை பு.சிந்துஜன், பு.சத்தியமூர்த்தி, விவேகானந்தன், கதிர்காமத்தம்பி, ஹம்சத்வனி எனும் புனைபெயர்களில் ஆக்கங்களை படைத்து வந்தவரும் ரி.ரி.என் தொலைக்காட்சியின் நாள்நோக்கு, அரசியல்களம் மற்றும் பல நிகழ்ச்சிகளை வழங்கியவர் மறைந்தும் மறையாது ஊடகத்துறையில் முத்திரை பதித்து வாழும் ஒரு நேர்த்திய வெளிப்படைத் தன்மைகொண்ட துணிச்சலான ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளரும், இலக்கியவாதியும், விமர்சகரும், நிகழ்ச்சி நெறியாளரும் ஊடக நண்பர்கள், மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவரும் 20வருடங்களுக்கு மேலாக ஊடகப்பணியாற்றி இறைபதமடைந்த நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களது பார்வையோடு இவ்வாரம் இணைவோம். தாயகத்தின் சிரமென விளங்கும் யாழ்ப்பாணத்தில் கல்வியாளர்களும், கலைப் பேராளர்களும் நிறைந்திருக்கும் இணுவில் கிராமத்தில் திரு.திருமதி.புண்ணியமூர்த்தி பற்குணமலர் மண இணையருக்கு 30.10.1972ஆம் ஆண்டு மகனாகப் பிறந்த சத்தியமூர்த்தி அவர்கள் மன்னம்பிட்டி எனும் தமிழ் கிராமத்தில் எட்டு வயது வரை வளர்ந்தார். கிராம உத்தியோகஸ்தரான இவரது தந்தை, தாய், சகோதரி, மற்றும் இரண்டு சகோதர்ர்கள் என அழகான குடும்ப ஓட்டத்தில் சத்தியமூர்த்தி தன் கல்வியை மன்னம்பிட்டி மகா வித்தியாலயத்தில் கற்கும் காலத்தில் முதலாம் ஆண்டில் மிகுந்த ஈடுபட்டுடன் காட்டிய அதிதீவிர கல்வி அறிவால் பள்ளிச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்தார். எட்டாவது வயதில் யாழ் மண்டைதீவில் தனது அம்மம்மாவுடன் வாழ்ந்த காலத்தில் தொடர்நிலைக் கல்வியை யா/மண்டைதீவு மகா வித்தியாலத்தில் கற்ற இவர் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்று யா/இந்துக் கல்லூரியில் உயர்தரம் வரை தனது கல்வியைத் கற்று யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவக் கல்வியை தொடர்ந்தார். தனது பட்டப் படிப்பில் அரசியலை ஒரு பாடமாக எடுத்துக் கொண்ட இவர் தனது பள்ளிக்காலம் முதல் கவிதை, சிறுகதை, பேச்சு, கட்டுரை என தன் சிந்தனைகளில் எதிர்படும் காட்சிகளை எழுதத் தொடங்கினார். இவ்வாறாக சத்தியமூர்த்தியின் பயணம் கல்வியோடும் இலக்கியப் படைப்புகளோடும் சிறந்துகொண்டிருக்கையில் 1995ஆம் ஆண்டு இவரது சகோதரன் தாய் மண்ணில் சிந்துஐன் எனும் வீர நாமத்துடன் மண்ணுள் விதையானான். உடன் பிறந்தவனின் தாய்மண்மீதான ஆளமான நேசத்தை இவரால் புரிந்துகொள்ள முடிந்தாலும் உடன்பிறப்பு என்ற வகையில் சற்றுத் துவண்டுபோன சத்தியமூர்த்தி அவர்கள் “ இன்று நீ சென்றுவிட்டாய் நாளை நான் உன்னை தொடர்ந்து வருவேன் நீ நிம்மதியாய் உறங்கு” என்று தன் சகோதரனின் நினைவாக அன்று குறிப்பொன்றைப் பதிந்துள்ளார். இளமைக் காலத்தில் சத்தியமூர்த்தி அவர்கள் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்களால் யாழ்ப்பாணம் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தில் வேலைக்குச் சேர்க்கப்பட்டு “ஆதாரம்” எனும் சஞ்சிகையை அவருடன் இணைந்து வெளியிட்டுக்கொண்டிருந்தார். அதில் இவரது எழுத்துகள் ஊடாக தொடர்ந்து கருத்துகள் பதிவேற்றப்பட்டதோடு பல பத்திரிகைகளில் பல்வேறு புனை பெயர்களில் தன் படைப்பான்றலை வெளிப்படுத்தி நின்றார். 1995ஆம் ஆண்டு யாழ் இடம்பெயர்வினால் பல்கலைக்கழக கல்வியை தொடரமுடியாத சத்தியமூர்த்தி வன்னிமண்ணில் கால் பதித்து தாயக சட்டக்கல்லூரியில் சட்டக்கற்கையை முடித்து சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். பின்னர் சட்டக்கல்லூரியின் அதிபர் பொறுப்பினை ஏற்று பணிபுரிந்தார். தன் ஆளுமைத் திறனாலும் தூரநோக்குச் சிந்தனையாலும் தன் பணிகளை செவ்வனே ஆற்றிய சத்தியமூர்த்தி வன்னிப் பெருநிலப் பரப்பில் போர்மேகங்கள் சூழ்ந்தவேளை எல்லைகாப்புப் பணியில் சுழற்சிமுறையில் பகுதிநேரமாக தன்னை இணைத்துக் கொண்டார். தவணைமுறை தவறாது மாதத்திற்கு ஒருவாரம் தாய்மண்ணுக்கான தன் பணியை விருப்போடு ஆற்றினார். இயற்கையின் மீதும் தாய்மண்மீதும் குடும்பத்தின் மீதும் ஆழமான பற்றுறுதிகொண்ட இவர் பிறரது கண்ணீரை எந்தவகையிலாவது யாருடைய உதவியை நாடியும் துடைத்தே ஆகவேண்டுமென்று உறுதியாய் நிற்பார். முகாமைத்துவ உதவிப் பரீட்சையில் சித்திபெற்று முல்லைத்தீவு கல்வித் திணைக்களத்தில் முகாமையாளராகப் பணியாற்றிய இவர் தனது பணிக்காலங்களில் பல்வேறு பணிகளை ஆற்றி கல்விச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்றார். முல்லைத்தீவுக் கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட முறைசாரா கல்விப் பிரிவினரால் “இதழியல்” கற்கை நெறியை ஏழு கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து நடாத்தி பல ஊடகவியலாளர்களை உருவாக்கி வெளிக்கொணர்ந்தார். பின்னர் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய சத்தியமூர்த்தி பல ஊடகர்கள், எழுத்தாளர்களின் மனங்களில் தன் நற்பண்புகளாலும், நேர்த்தியான கடமை உணர்வுகளாலும் பலராலும் நேசிக்கப்படும் ஓர் ஊடகரானார். ஈழநாடு பத்திரிகையின் இயங்குநிலை தடைப்பட தொடர்ந்தும் ஈழநாதம் பத்திரிகையில் இணைந்து செய்தி, கட்டுரை, களநிலவரங்கள் என்பவற்றை எழுதினார். புலிகளின் குரல் வானொலியிலும், கனேடியத் தமிழ் வானொலியிலும், ஐ.பி.சி வானொலியிலும் பலரது நேர்காணல்களை, களமுனை நிலைமைகளை, பொறுப்புநிலை சார்ந்தோரின் நேர்காணல்கள் ஊடாக வெளிக்கொணர்ந்த இவர் நிதர்சனம் தொலைக்காட்சிச் சேவையூடாக அரசியல்களம் நிகழ்ச்சியையும் வழங்கி வந்தார். போர் ஓய்ந்து சமாதானம் நிலவிய காலத்தில் சத்தியமூர்த்தி அவர்கள் மட்டக்களப்பு கல்குடா வலையக்கல்வி பணிபனைக்கு சென்றார். சமாதானம் முடிவுற்று மீண்டும் தாயகப் பகுதியில் போர்மேகங்கள் சூழ கிளிநொச்சி சுகாதார திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்று வந்துசேர்ந்த சத்தியமூர்த்தி அவர்கள் 2004ஆம் ஆண்டு் மார்கழி மாதத்தில் ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தால் உடமைகளை இழந்த மக்களின் தேவைகளை இரவுபகல் பாராமல் பொது அமைப்புகள், களச்சேவையாளர்களுடன் இணைந்து தன் பணியையும் ஆற்றிநின்றார். ரி.ரி.என் தொலைக்காட்சி ஊடாக நாள்நோக்கு, அரசியல்களம் ஆகிய நிகழ்ச்சிகளை வழங்கியதன் மூலம் பும்பெயர் வாழ் மக்களிடையே நாட்டு நிலைமைகளை அறியும் வாய்ப்பை ஏற்படுத்தினார். இதனூடாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்மக்கள் மனங்களிலும் நீங்காது நிலைத்தார். நிதர்சனம் தொலைக்காட்சி் (த.தே.தொ) சேவையில் கு.வீரா தொகுத்து வழங்கிய “நிலவரம்” நிகழ்ச்சியில் பலமுறை அழைக்கப்பட்டார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இத் தொலைக்காட்சி மூலம் அறியப்பட்ட இவர் 16.06.2005 அன்று ஊடகப் பணியில் இருந்த நந்தினி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து கிளிநொச்சியில் வாழ்ந்து வந்தார். 2006ஆம் ஆண்டுபெண் குழந்தையைப் பெற்றெடுத்தனர் தனது மகள் பிறந்து இரண்டாவது நாளில் 550 பக்கங்களைக் கொண்ட பஞ்சதந்திரக் கதைகள் என்ற புத்தகத்தை வாங்கி வந்து “ மகளே இதிலுள்ளது கதைகள் மட்டுமல்ல வாழ்க்கையின் தத்துவங்களும்தான் அடங்கி இருக்கிறது இதைப் பின்பற்றி வாழவேண்டும்” என எழுதி தன்னுடைய கையொப்பத்தையும் மனைவியின் கையொப்பத்தையும் இட்டு மகளிடம் கையளித்தார். ஒரு பண்பான, தாய்மண்ணையும் தாய் மொழியையும் நேசிக்கின்ற நெறிமுறை தவறாத ஒரு தந்தையாக ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி வாழ்ந்தார் என்பதை இன்னும் பல சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றது. கிளிநொச்சி நகர் போர்ச்சூழல்களால் மெல்ல மெல்ல இயல்பு நிலையை இழக்கத் தொடங்கியது சத்தியமூர்த்தி குடும்பம் மூங்கிலாறிற்கு இடம்பெயர்ந்தது. உயிரிழப்பு, நில ஆக்கிரமிப்புச் செய்திகள் காட்டாற்று வெள்ளமாய் மெல்ல மெல்ல ஊர்மனைகள்தோறும் பரவுகிறது. உண்மைச் செய்திகள் வெளியே செல்வதில் ஊடகத் தணிக்கை முட்டுக்கட்டை போட்டு நிற்கிறது. தொடர் இழப்புகள் இடப்பெயர்வுகள். வைத்தியசாலைகள், பாடசாலைகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் அத்தனையும் இலக்குவைத்து துவம்சம் செய்யப்படுகிறது. சத்தியமூர்த்தியின் கால்களும் எழுதுகோலும் அவலங்களை உண்மை நிலைகளை பதிப்பாக்கத் துடிக்கின்றது. விசுவமடுப் பகுதியில் பரவலாக எறிகணைகள் வீழ்ந்து வெடித்தவண்ணம் இருக்கிறது. சத்தியமூர்த்தி அவர்கள் செல்மழைக்குள் நின்றுகொண்டு வானலையூடாக உலகம்வாழ் மக்களுக்கு “சுற்றிவரக் குண்டுமழை பொழிகிறது. மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள் இன்று உங்களோடு கதைக்கும் நான்கூட இந்தக் குண்டுக்குப் பலியாகலாம்” என அந்த அவலச் சூழலை எடுத்தியம்பிக்கொண்டிருந்தார். இவரது குடும்பம் மு/தேவிபுரம் வந்தடைந்தது. அங்கும் இருக்கமுடியாத சூழல் வர மக்கள் பெருமளவில் இடம்பெயர சத்தியமூர்த்தி குடும்பமும் புது/இரணைப்பாலையை வந்தடைந்தது. அங்கும் இருக்கமுடியாத சூழல் வர புதுக்குடியிருப்பு கோம்பாவிலுள்ள திம்பிலி வெட்டையில் பல இலட்சம் மக்கள் ஆங்காங்கே சிதறிக் குடிலமைக்க இவரது குடும்பமும் குடிலமைத்தது. ஊடகர்கள் தாம் கண்ணும் கருத்துமாகய் நேசித்த ஊடகப் பணியில் சிறிதளவேனும் பின்வாங்கலையோ,தாமதத்தையோ உண்டுபண்ணாது தம்சேவை நேரங்கள் தாண்டியும் இரவு பகலாக ஓடியோடி மக்களின் துயர துன்பங்களை கட்டவிழ்த்துவிடப்படும் போர்ப் பூதத்தையும் ஒவ்வொரு மணித்துளியும் கடந்தவர்களாய் கடமையாற்றிய பல்வேறு ஊடகவியலாளர்களுள் சத்தியமூர்த்தியும் ஒருவராகிறார். அந்தச் சூழலில் இணையத்தள வசதிகள், தொலைபேசி வசதிகள் இருந்ததே இல்லை. செய்தி ஊடகங்கள் நாளுக்கு நாள் ஒவ்வொரு இடமாக தற்காலிக கொட்டகைகள் அமைத்து இடம்மாறிக்கொண்டிருந்தது. இவ்வாறாக ஓடியோடி இழப்புகளை, அழிவுகளை தாள்களிலே எழுதி எழுதி ஊடகங்களில் சமர்ப்பித்து இயன்றவரை வெளி உலகிற்கு தெரியப்படுத்திக்கொண்டிந்த ஊடகர், ஆய்வாளர், நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி அவர்கள் 12.02.2009 அன்று எறிகணை வீச்சில் காயமடைந்து கொடிய போரின் சாட்சிகளுள் ஒருவராய் ஏதுமே அறியா இரண்டரைவயது நிரம்பிய தனது மகளின் இறுதி முத்தத்தோடு இவ்வுலக வாழ்வு துறந்தார். இறுதியான அந்தப் புகைப்படம் ஐக்கியநாடுகள் சபை மனித உரிமை கூட்டத் தொடரின்போது பேச மொழியற்ற உணர்வுப் படமாய் நீதி கேட்டு நிற்கிறது. ஊடக தர்மத்தையே தங்கள் உயிரிலும் மேலாக நேசித்த ஊடகவியலாளர்கள் பலரை ஈழமண் சந்தித்திருக்கிறது. ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நினைவாக யா/இந்துக்கல்லூரி 1991ஆம் ஆண்டு சக மாணவர்கள் இணைந்து “பு.சத்தியமூர்த்தி நினைவுகளுடன் பேசுதல்” எனும் நூலினை. 12.02.2019இல் திருமதி.நத்தினி சத்தியமூர்த்தி, செல்வி. சிந்து சத்தியமூர்த்தி ஆகியோரின் பதிப்புரிமையோடு ராதையன், வேலணையூர் சுரேஸ், பு.கமலநந்தினி, கை.சரவணன், ஜெ.கோகுலவாசன் ஆகியோரின் மலர்த் தொகுப்புடன் யாழ்ப்பாணம் எவகிறீன் அச்சுப் பதிப்புடன் இந்நினைவு மலர் வெளிவந்துள்ளது. இந்நூலினை…… “பு.சத்தியமூர்த்திக்கும் உலகெங்கும் அடக்குமுறைக்கு எதிராகவும் மானுட உரிமைகளுக்காகவும் எழுதுகோல் ஏந்திப் போராடிய சக ஊடகப் போராளிகள் அனைவருக்கும்… “ படையல் செய்யப்பட்டிருக்கிறது. ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களுடனான நெஞ்சகலா நினைவுகளை யா/இந்துக் கல்லூரி 1991ஆம் ஆண்டு பிரிவு மாணவர்கள், யாழ்ப்பாணம் எழுகலை இலக்கியப் பேரவை, முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, ஓவியர் புகழேந்தி, பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம், வலம்புரி நாளிதழ் பிரதம ஆசிரியர் நல்லையா விஜயசுந்தரம், மூத்த ஊடகவியலாளர் ராதேயன், மூத்த ஊடகவியலாளர் காக்கா அண்ணை, யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கம், கலாநிதி சி.ரகுராம், நண்பன் சி.செவ்வேள், கவிஞர் வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா, வைத்திய கலாநிதி செல்வலிங்கம் தெய்வகுமார், பன்னாட்டு விவகார அரசறிவியலாளர் கலாநிதி ரஞ்சித் ஶ்ரீறீஸ்கந்தராஜா, உடுவில் அரவிந்தன், திருமதி. சத்தியமூர்த்தி நந்தினி, சிந்து சத்தியமூர்த்தி, நீலன் கீலன், ஆதிலட்சுமி சிவகுமார், ஊடகவியலாளர் இளங்கீரன், கவிஞர் முல்லைக் கமல், நரேஸ், ரேணுகா உதயகுமார், த.தே.தொலைக்காட்சி சிவா (புவியரசன்), ந.லோகதயாளன், சிதம்பர பாரதி, ந.மயூரரூபன், செ.சதீஸ்குமார் (விவேகானந்தனூர் சதீஸ்), கண்ணதாசன் மோகனகுமாரி, இரா.ராஜன், ஈழமுரசு பொறுப்பாசிரியர் கி.ஜெயசுந்தர், ஊடகவியலாளர் இதயச்சந்திரன், திருமதி.ப்ரியம்வதா பயஸ் (காயத்திரி பயஸ் ராஜா), கார்த்தி ஜனனி, தர்மலிங்கம் சிவா, கை.சரவணன், நா.எழில், ஆனந்தி சகோதரி, ஊடகவியலாளர் உமா, யாழ் இந்துவின் மைந்தன் ஊடக மையம் பிரான்ஸ் பொறுப்பாளர் க.ஆதித்தன், ஊடகவியலாளர் பரா பிரபா, சிவப்பிரகாசம் றாஜ், நேரு குணரட்ணம், கனேடிய தமிழ் வானொலி செந்தமிழினி பிரபாகரன், சத்தி பரமலிங்கம், அ.யோ.கொலின் (அன்பழகன்), முன்னாள் ஈழநாதன் (வெள்ளிநாதம்) வார இதழ் ஆசிரியர் ஶ்ரீ.இந்திரகுமார், தமிழன்பன் அருள்திலா, காவலூர் இ.விஜேந்திரன், பிறேமினி அற்புதராசா, ஊடகவியலாளர் எஸ்.வி.ஆர்.கஜன், வட்டு சுப்பிரமணிய வித்தியாசாலை அதிபர் ஜெ.கோகுலவாசன், ந.நவராஜன், பு.சிந்துஜன், சுதர்சன், வலி வடக்கு பிரதேச்சபை உறுப்பினர் ச.சஜீவன், சி.நிசாகரன் ஆகியோரின் நினைவுக் குறிப்புகளோடு இந்நூல் சத்தியமூர்த்தி அவர்களின் நினைவு சுமந்து நிற்கிறது. உயிரிழப்புகளையும், உடலக்குவியல்களையும், வாழ்வியலில் மனித இனம் அனுபவிக்கமுடியாத வலிகளையும், சொல்லிலடங்கா வேதனைகளையும், அர்ப்பணிப்புமிகுந்த தியாக உணர்வு கலந்த வாழ்வியலையும் எழுதிய, வாசித்த, நிகழ்ச்சிகளாய்த் தொகுத்த மிக அற்புதமான ஊடகவியலாளர்களை, ஆய்வாளர்களை ஈழமண் தாங்கி நின்றிருக்கின்றது, நிற்கிறது என்ற ஊடக தர்மம்மிகு ஊடக நாயகர்களை நெஞ்சார நினைந்துருகுவதோடு நலிவுற்றுப் போகும் ஊடக தர்மம் தம்முயிர் கொடுத்தும் ஊடகதர்மம் காத்த உன்னத ஊடகர்களை நெஞ்சிருத்தி நெறிமுறை காத்து ஊடகப்பணியாற்ற வேண்டுமென்று உரிமையுடன் வேண்டுகிறோம். து.திலக்(கிரி), 19.10.2025.- தீபாவளி... சிரிப்புகள்.
- சுவிற்சலாந்தின் நல்லிணக்க நகர்வுகள் – நிலாந்தன்.
சுவிற்சலாந்தின் நல்லிணக்க நகர்வுகள் – நிலாந்தன். இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் சுவிற்சலாந்து ஆர்வத்தோடு காணப்படுவதாக தெரிகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளும் அரச பிரதிநிதிகளும் தீர்வு முயற்சிகள் தொடர்பாக உரையாடுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை சுவிற்சலாந்து ஏற்படுத்திக் கொடுத்தது. சுவிற்சலாந்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது துறைசார் நிபுணர்களும் அங்குள்ள தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வதற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். இந்த சந்திப்பின் அடுத்த கட்டமாக கடந்த வாரம் கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதுவரின் இடத்தில் காலை உணவோடு ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.இதில் அழைக்கப்பட்ட தமிழ் கட்சிகளின் தலைவர்கள் சிலர் கலந்து கொள்ளவில்லை. சுவிற்சலாந்து ஏன் இந்த விடயத்தில் ஆர்வமாக காணப்படுகிறது? ஏற்கனவே புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் சில இலங்கையில் உள்ள பௌத்த மகா சங்கங்களில் உள்ள ஒரு பிரிவினரோடு இணைந்து “இமாலய பிரகடனம்”என்ற ஒரு பிரகடனத்தை வெளியிட்டது நினைவில் இருக்கலாம். இந்த பிரகடனத்தின் பின்னணியில் சுவிற்சலாந்தே இருந்ததாக அவதானிப்புகள் உண்டு. கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதரகத்தில் முன்பு பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராஜதந்திரி ஒருவர் இமாலய பிரகடனத்தை உருவாக்கும் முயற்சிகளில் பின் இருந்து உழைத்ததாக கருதப்படுகிறது.அதற்கு வேண்டிய நிதி அனுசரணையையும் சுவிற்சலாந்தே வழங்கியதாக ஊகிக்கப்பட்டது. ஆனால் ஹிமாலிய பிரகடனம் தோற்றுவிட்டது. அதைத் தயாரித்த புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் அங்குள்ள தமிழர்களின் மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டு விட்டன. குறிப்பாக கனடாவில் அந்த பிரகடனத்துக்காக உழைத்த கனேடிய தமிழ் காங்கிரஸ் என்ற அமைப்புக்கு எதிராக அங்குள்ள ஏனைய எல்லாத் தமிழ் அமைப்புகளும் ஒன்று திரண்டன. இமாலய பிரகடனம் சொதப்பிய பின் சுவிற்சலாந்து மறுபடியும் இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் மற்றொரு நகர்வை முன்னெடுக்கின்றது. சுவிற்சலாந்துக்கும இலங்கைக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் தொடங்கியதில் இருந்து வரும் ஆண்டுடன் எழுபதாவது ஆண்டு முடிவடைகிறது.அதையொட்டி இலங்கைத் தீவில் சமாதான முயற்சிகளில் ஈடுபட சுவிற்சலாந்து ஆர்வமாக இருப்பதாக உத்தியோகபூர்வமாக கூறப்படுகிறது. ஆனால் அதுவல்லாத ராஜதந்திர இலக்குகள் அங்கே இருக்கலாம் என்று ஊகிக்க முடியும். சக்திமிக்க மேற்கு நாடுகளின் ஆலோசனைகள் இன்றி சுவிற்சலாந்து தன்னிச்சையாக இதுபோன்ற சமாதான முயற்சிகளில் இறங்காது. ஏனென்றால் இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவத்தைக் கருதிக் கூறின் இங்கு சமாதானத்தை ஏற்படுத்துவது என்பது நன்னோக்கத்தின் அடிப்படையில் மட்டும் இருக்க முடியாது.அதைவிட ஆழமான பொருளில் அங்கே சக்திமிக்க நாடுகளின் அரசியல், பொருளாதார,ராணுவ,ராஜதந்திர இலக்குகள் இருக்க முடியும். போரைப் போலவே சமாதானமும் ஓர் அரசியல் நடவடிக்கைதான்.போரைப் போலவே சமாதானத்திலும் ராஜதந்திர இலக்குகள் இருக்கும். சமாதானத்திலும் நிலையான நலன்கள் இருக்கும். சமாதான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்கள் தேவ தூதர்கள் அல்ல. அவர்கள் ராஜதந்திரிகள்தான்.அவர்கள் தந்திரமாகத்தான் நடப்பார்கள்.வெளிப்படையாக கதைக்க மாட்டார்கள். உள்நோக்கங்களை வெளிப்படுத்த மாட்டார்கள். கடந்த 16 ஆண்டுகளாக ஈழத் தமிழ் அரசியலானது பெரும் போக்காக ஐநா மைய அரசியலாகக் காணப்படுகிறது. ஆனால் அதிலும் இப்பொழுது ஈழத் தமிழர்களுக்கு சலிப்பும் வெறுப்பும் சந்தேகமும் ஏற்பட்டுவிட்டது.சில கிழமைகளுக்கு முன்பு செம்மணி வளைவில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளரூடைய அறிக்கை பாதிக்கப்பட்ட மக்களால் எரிக்கப்பட்டது. எந்த மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணி வளைவுக்கு வரக் கேட்டு ஒரு விளக்கை ஏற்றி மூன்று நாட்கள் அணியாமல் வைத்திருந்தார்களோ, அதே மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை அதே செம்மணி வளைவில் வைத்து எரிக்கும் ஒரு நிலைமை. அதாவது ஈழத் தமிழர்கள் ஐநா மைய அரசியலில் ஏமாற்றம் அடைய தொடங்கி விட்டார்கள் என்பதனை அது காட்டுகிறது. இப்படிப்பட்டதோர் பின்னணிக்குள்தான், சுவிற்சலாந்தின் புதிய நகர்வுகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்கின. ஏற்கனவே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இமாலய பிரகடனத்தின் பின்னால் இருந்த அதே நாடு இப்பொழுது மீண்டும் இலங்கைத் தீவில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றது. சுவிற்சலாந்து உலகின் சமஸ்டி முன்னுதாரணங்களில் பிரதானமான ஒரு நாடாக கருதப்படுகிறது.எனவே அப்படிப்பட்ட ஒரு நாடு நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபடும் பொழுது அது மிக உயர்வான ஒரு சமஸ்டி தீர்வை ஆதரிக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.ஆனால் இப்போது நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தைகளின்படி குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதம் சுவிற்சலாந்தில் நடந்த சந்திப்பின்போது அரச பிரதி கூறியவற்றின் அடிப்படையில் சிந்தித்தால்,”எக்கிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற யாப்பு உருவாக்கத்துக்கான இடைக்கால வரைபுதான் பேச்சுவார்த்தை மேசையில் இருப்பதாகத் தெரிகிறது. சுவிற்சலாந்தில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்ட அரச பிரதிநிதி ஒரு விடயத்தை அழுத்தமாக தெரிவித்துள்ளார். இடைக்கால வரைபுக்கு தமிழ் மக்களின் ஆணையும் உண்டு என்பதேஅது.ஏனென்றால், நிலைமாறு கால நீதிச் செய்முறைகளின் கீழ் உருவாக்கப்பட்டதே புதிய யாப்புக்கான இடைக்கால வரைபு ஆகும். நிலைமாறு கால நீதி என்பது ரணில்-மைத்திரி அரசாங்கத்தோடு இணைந்து ஐநா முன்வைத்த ஒரு தீர்வு. நிலை மாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் நாடாளுமன்றம் சாசனப் பேரவையாக மாற்றப்பட்டது. ஒரு புதிய யாப்பை உருவாக்குவதற்காக வழிநடத்தல் குழுவும் ஏனைய உபகுழுக்களும் உருவாக்கப்பட்டன.இக்குழுக்களில் அப்பொழுது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அங்கம் வகித்தார்கள்.ஜேவிபியும் அங்கம் வகித்தது. அக்காலகட்டத்தில் சம்பந்தர் திரும்பத் திரும்ப ஒரு விடயத்தைக் கூறி வந்தார். அதற்கு முன் தயாரிக்கப்பட்ட எல்லா யாப்புக்களும் தமிழ் மக்களின் பங்களிப்பின்றி உருவாக்கப்பட்டவை. ஆனால் தமிழ் மக்களின் பங்களிப்போடு ஒரு புதிய யாப்பு உருவாக்கப்படுவது அதுதான் முதல் தடவை என்றும் அவர் சொன்னார். ஆனால் அந்த யாப்புருவாக்க முயற்சியைக் குழப்பியது சிங்களத் தரப்புதான்.குறிப்பாக நிலை மாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேன அதனை 2018ஆம் ஆண்டு ஒரு யாப்புச்சதி முயற்சியின் மூலம் தோற்கடித்தார். மைத்திரிபால சிறிசேன அந்த யாப்பு உருவாக்க முயற்சிகளின்போது தெரிவித்த ஒரு கருத்தை இப்பொழுது சுமந்திரன், கஜேந்திரக்குமாருக்கு பதில் அளிப்பதற்காகப் பயன்படுத்துகின்றார். அது என்னவென்றால், தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பயமுறுத்தாத வார்த்தைகளை பயன்படுத்துவது என்ற முடிவின் அடிப்படையில்தான் எக்கிய ராஜ்ய என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது என்று. ஆனால் தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் பயமுறுத்தாத சொற்களைக் கொண்ட யாப்பை உருவாக்க வேண்டும் என்று கூறிய மைத்திரிபால சிறிசேனதான் அந்த யாப்பின் இடைக்கால வரைபை தோற்கடித்தார் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டும் . அதுமட்டுமல்ல, யாப்புருவாக்க முயற்சிகள் தேங்கி நின்றபின் 2021 ஆம் ஆண்டு ஐநாவுக்கு ஒரு கூட்டு கடிதத்தை எழுதுவதற்காக தமிழ்க் கட்சிகள் வவுனியாவில் கூடியபொழுது, அதில் கலந்து கொண்ட சுமந்திரன் சொன்னார், 6 ஆண்டுகளாக ஒரு பரிசோதனை செய்தோம். அதில் தோற்று விட்டோம்… என்று. அங்கே அவர் குறிப்பிட்ட தோல்வியுற்ற பரிசோதனை எனப்படுவது நிலைமாறு கால நீதிதான். நிலைமாறு கால நீதியின் தமிழ்ப் பங்காளி அவர். யாப்புருவாக்க முயற்சியின் முன்னணித் தமிழ்ப் பங்காளியும் அவர். அப்படிப் பார்த்தால் ஓர் அடிப்படைக் கேள்வி இங்கே எழுகிறது. தோல்வியுற்ற பரிசோதனையின் விளைவாகக் கிடைத்த இடைக்கால வரைவு எப்படி வெற்றி பெற்ற ஒன்றாக இருக்க முடியும்? நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகள் தோல்வியுற்றதற்கு அடிப்படைக் காரணம் மைத்திரியோ ரனிலோ அல்ல. அதைவிட ஆழமான ஒரு காரணம் உண்டு. என்னவென்றால், நாட்டில் நிலை மாற்றம் ஏற்படாமலேயே நிலை மாறு கால நீதியை ஸ்தாபிக்க முயன்றமைதான்.அதற்கு ஜநாவும் பொறுப்பு.நிலைமாற்றம் ஏற்படாத காரணத்தால்தான் மைத்திரி மகிந்தவிடம் அப்பம் சாப்பிட்டுவிட்டு நல்லாட்சி என்று அழைக்கப்பட்ட அந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சித்தார்.நிலைமாற்றம் ஏற்படாத காரணத்தால்தான் ஈஸ்டர் குண்டுகள் வெடித்தன. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக,நிலை மாற்றம் ஏற்படாத காரணத்தால்தான் எக்கிய ராஜ்ஜிய என்ற அந்த வார்த்தையையே பயன்படுத்த வேண்டி வந்தது. தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் மயக்கம் தரும் விதத்தில் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏன் வந்தது? வெளிப்படைத் தன்மை மிக்க ஒரு சமஸ்ரியை ஏன் தமிழ் மக்களுக்கு வாக்களிக்க முடியாமல் போனது? அதை நோக்கி ஏன் சிங்கள மக்களை, சிங்கள மக்களுடைய கூட்டு உளவியலைத் தயார்படுத்த முடியாமல் போனது? ஏனென்றால் அங்கே நிலை மாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை என்பதால்தான். அதே இடைக்கல வரைவுதான் இப்பொழுது பேச்சுவார்த்தை மேசையில் வைக்கப்பட்டிருப்பதாக கஜேந்திரகுமார் குற்றம் சாட்டுகிறார்.அது ஒற்றை ஆட்சிப் பண்புமிக்கது என்றும் அவர் கூறுகிறார்.இந்த விடயத்தில் சுமந்திரன் சமூக வலைத்தளங்களில் கஜேந்திரக்குமாருக்கு பதில் கூறிக் கொண்டிருப்பதற்குப் பதிலாக, அதுதொடர்பான பகிரங்க விவாதம் ஒன்றுக்குப் போக வேண்டும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணியும் இந்த விடயத்தை மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக விவாதித்துத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அது வெளிப்படைத் தன்மையுள்ள சமஸ்டி என்றால் ஏன் வெளிப்படையாக விவாதிக்க முடியாது? இல்லையென்றால் அதற்குள் ஏதோ கள்ளம் இருக்கிறது என்றுதானே பொருள்? தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது. எனவே ஒரு தீர்வு முயற்சியை அவர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்த தேவையான அடிப்படைப் பலத்தைக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் தமிழ்த் தரப்பு ஒன்றாக நின்று அதை எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டு கஜேந்திரக்குமார் நாடாளுமன்றத்தில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட உறுப்பினர்களை ஒன்றாகத் திரட்டும் ஒரு வேலையில் ஈடுபட்டார். ஆனால் அதற்குத் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி ஆதரவு தரவில்லை. அவர்கள் அதற்குத் தெரிவித்த அடிப்படைக் காரணம் என்னவென்றால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் தலைமைத்துவப் போட்டியைக் கையாண்டு கட்சியை உடைக்க முயற்சிக்கிறது,அதன்மூலம் கட்சியைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது என்பதுதான்.ஐநாவுக்குக் கடிதம் எழுதும் விடயத்திலும் அப்படிதான் தமிழரசுக்கட்சி கருதியது. அரசாங்கம் ஒரு புதிய யாப்பை கொண்டுவரக்கூடிய பலத்தோடு காணப்படுவதாக ஐநாவும் மேற்கு நாடுகளும் நம்புகின்றன.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் தங்களுக்கு ஆணை வழங்கியிருப்பதாக அரசாங்கம் ஐநாவிலும் உலகின் எல்லாத் தலை நகரங்களிலும் பெருமையாக கூறிக்கொள்கிறது. அதுபோலவே யாப்புருவாக்கத்துக்கான இடைக்கால வரைபிலும் தமிழ் மக்களின் ஆணை ஏற்கனவே பெறப்பட்டு விட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக ஒரு புதிய யாப்பை உருவாக்கத் தேவையான மக்கள் அபிப்பிராயத்தைத் திரட்டும் பணிகள் ஏற்கனவே நிலைமாறு கால நீதிச் செய்முறைகளின் கீழ் 2015ல் தொடங்கி 18 வரையிலுமான காலப்பகுதிக்குள் செய்து முடிக்கப்பட்டுவிட்டன என்றும் அரசாங்கம் கூறுகிறது.அதாவது இதை மேலும் கூர்மையாகச் சொன்னால், புதிய யாப்புக்கான இடைக்கால வரைவுக்கு ஏற்கனவே தமிழ் மக்களின் ஆணை உண்டு இது முதலாவது. இரண்டாவது, அந்த இடைக்கால வரைபை அதன் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தத் தேவையான மக்கள் ஆணை இப்பொழுது தேசிய மக்கள் சக்திக்கு உண்டு. இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையிலும் அவர்கள் இடைக்கால வரைபை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்தப் போகிறார்கள் என்று கஜேந்திரக்குமார் எச்சரிக்கின்றார். ஆனால் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி அதனை பொருட்படுத்துவதாக தெரியவில்லை.எக்கிய ராஜ்ஜிய சுமந்திரனின் உழைப்புத்தான்.எனவே சுமந்திரன் அணி அதை எதிர்க்குமா? அது மட்டுமல்ல கஜேந்திரகுமாருடன் ஒர் ஆவணத்தை எழுதி அதில் கையெழுத்திட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அந்த விடயத்தில் வேறு விதமாகச் சிந்திப்பதாகத் தெரிகிறது. அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை வைக்கக் கூடும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். மாறாக ஒரு புதிய யாப்பை உருவாக்கும் அமில பரிசோதனையில் அவர்கள் இப்போதைக்கு இறங்க மாட்டார்கள் என்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுவதாகத் தெரிகிறது. எனவே ஒரு மாகாண சபைத் தேர்தலை நோக்கி அவர்கள் உழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.அதன் ஒரு கட்டமாக 13ஆவது திருத்தம் தொடர்பான கருத்தரங்குகளை ஈபிஆர்எல்எஃப் தொடர்ச்சியாக ஒழுங்குப்படுத்தி வருகின்றது. இக்கருத்தரங்குகளின் பின்னணியில் வரதராஜப் பெருமாள் இருக்கிறார் என்ற ஊகம் ஒன்று இருந்தது.அண்மை நாட்களில் வரதராஜப்பெருமாள் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பகிரங்கமாக, வெளிப்படையாகக் காணப்படுகிறார். எனவே மாகாண சபைத் தேர்தல்களை நடத்துமாறு இந்தியா அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியா மேற்படி கருத்தரங்குகள்?என்ற சந்தேகம் அதிகரிக்கின்றது.அண்மையில் ஐநா கூட்டத் தொடரில் இந்தியா 13ஆ வது திருத்தத்தைக் குறித்தும் மாகாண சபைத் தேர்தல்களைக் குறித்தும் குறிப்பிட்டிருந்தது. ஐ நா தீர்மானத்திலும் அவை உண்டு. இப்படிப்பட்டதோர் பின்னணியில் மாகாண சபைத் தேர்தல் முதலில் வருமா? அல்லது யாப்புருவாக்க முயற்சிகள் முதலில் வருமா? என்ற கேள்விக்கு விடை முக்கியம். மாகாண சபைத் தேர்தல்கள் முதலில் நடக்குமாக இருந்தால், இப்போது இருக்கும் தமிழ்த் தேசியப் பேரவை என்ற கூட்டு பெரும்பாலும் உடைந்து விடும். சுமந்திரன் அணி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை எப்படித் தனிமைப்படுத்துவது என்று சிந்தித்து புதிய கூட்டுக்களை உருவாக்கும்.ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வீட்டின் பக்கம் போனாலா அல்லது சைக்கிளின் பக்கம் போனாலா தமக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகம் என்றுதான் சிந்திக்கும்.தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாட்டைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு வழங்கிய ஆணையை எப்படிப் புதுப்பிப்பது என்று என்பிபி சிந்திக்கும். அவ்வாறு அவர்கள் தமிழ் மக்களின் ஆணையைப் புதுப்பித்துக் கொள்வார்களாக இருந்தால் யாப்புருவாக்க முயற்சிகளில் அரசாங்கத்தின் கை ஓங்கும். கஜேந்திரக்குமார் எச்சரிப்பது போல நடக்கும். மாறாக,யாப்புருவாக்க முயற்சிகள் முதலில் தொடங்கப்பட்டால், அங்கேயும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்படவில்லை என்றால் அதுவும் அரசாங்கத்துக்கு அனுகூலமாக அமையும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்ப்பை அரசாங்கம் பொருட்படுத்துமா இல்லையா என்பது தமிழ்மக்கள் அப்புதிய யாப்பருவாக்க முயற்சிகளுக்குக் காட்டப்போகும் எதிர்ப்பில்தான் தங்கியிருக்கும். https://athavannews.com/2025/1450711- கருத்து படங்கள்
- ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை!
1.8 மில்லியனை கடந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை! 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகைதந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.8 மில்லியனை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 75 ஆயிரத்து 657 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 லட்சத்து 1,151 ஆக அதிகரித்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ளதுடன் குறித்த காலப்பகுதியில் சுமார் 4 லட்சம் இந்திய சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகதந்துள்ளனர். இதுவரை 3 லட்சத்து 96ஆயிரத்து 274 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பிரான்ஸில் இருந்து 90 ஆயிரத்து 250 பேரும் , அவுஸ்திரேலியாவில் இருந்து 81 ஆயிரத்து 040 பேரும் நெதர்லாந்தில் இருந்து 53 ஆயிரத்து 922 பேரும் அமெரிக்காவில் இருந்து 50 ஆயிரத்து 027 பேரும் இந்த ஆண்டு இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். இதேவேளை இத்தாலியில் இருந்து 39ஆயிரத்து 932 பேரும் , கனடாவில் இருந்து 37ஆயிரத்தது 606 பேரும் ஸ்பெயினில் இருந்து 36ஆயிரத்து 430 பேரும் மற்றும் போலந்தில் இருந்து 36ஆயிரத்து 389 பேரும், இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். கடந்த ஆண்டு, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான (2,053,465) சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இலங்கைக்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இறுதியாக 2018 ஆம் ஆண்டில் வருகைதந்திருந்தனர். குறித்த ஆண்டில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான (2,333,796) சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இலங்கையின் வருடாந்திர சுற்றுலாப் பயணிகளின் வருகை நான்கு சந்தர்ப்பங்களில் இரண்டு மில்லியனைத் கடந்துள்ளதுடன் 2016, 2017, 2018 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகைந்துள்ளனர். https://athavannews.com/2025/1450679- தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் 210 உறுப்பினர்கள் பொலிஸாரிடம் சரண்!
தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் 210 உறுப்பினர்கள் பொலிஸாரிடம் சரண்! தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் உட்பட, 210 நக்சல்கள் சத்தீஸ்கரில் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். நாடு முழுதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சல்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்நிலையில் நக்சல் பாதிப்பு அதிகமாக இருந்த சத்தீஸ்கரின் அபுஜ்மார் மற்றும் வடக்கு பஸ்தார் ஆகிய பகுதிகள் நக்சல் இல்லாத பகுதிகளாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், பஸ்தார் மாவட்டத்தின் ஜக்தல்பூரில் பொலிஸார் மற்றும் துணை ராணுவப்படையினர் முன்னிலையில், 210 நக்சல்கள் நேற்று சரண் அடைந்தனர். சரண் அடைந்த நக்சல்களில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார். ஏ.கே.47 துப்பாக்கிகள் 19, தானியங்கி துப்பாக்கிகள் 17, இலகு ரக துப்பாக்கிகள் 30 உட்பட மொத்தம் 153 ஆயுதங்களையும் நக்சல்கள்பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1450681- ஆப்கானிஸ்தான் எல்லை அருகே தற்கொலைத் தாக்குதல்; 7 பாகிஸ்தான் வீரர்கள் மரணம்!
ஆப்கானிஸ்தான் எல்லை அருகே தற்கொலைத் தாக்குதல்; 7 பாகிஸ்தான் வீரர்கள் மரணம்! ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே வெள்ளிக்கிழமை (17) நடந்த தற்கொலைத் தாக்குதலில் ஏழு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்லாமபாத் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்லாமாபாத் – காபூல் இடையேயான பலவீனமான போர்நிறுத்தம் முன்னாள் நட்பு நாடுகளுக்கு இடையேயான கடுமையான மோதலை நிறுத்திய நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) உடன் தொடர்புடைய ஒரு தற்கொலை கார் குண்டுதாரி வடக்கு வசிரிஸ்தானின் மிர் அலியில் உள்ள பாதுகாப்புப் படை வளாகத்தில் மோதியதாகவும், துப்பாக்கிச் சண்டையில் மூன்று போராளிகள் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த மிகப்பெரிய குண்டுவெடிப்பு அருகிலுள்ள வீடுகளை சேதப்படுத்தியது. மேலும் சம்பவ இடத்திலிருந்து வந்த வீடியோக்கள் வானத்தில் அடர்த்தியான புகை மூட்டங்கள் வீசுவதைக் காட்டியது. ஒரு வாரமாக நீடித்த தீவிர எல்லைச் சண்டையில் இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து புதன்கிழமை இரு நாடுகளுக்கு இடையிலும் 48 மணிநேர போர் நிறுத்தமானது அமுலுக்கு வந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1450635- இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
செவ்வந்தியை... சுமார் 8 மாதங்களாக, மறைத்து வைத்திருந்து உதவிய "மதுகம ஷான்" என்பவரின் தொடர்புகள் குறித்த படங்கள் தற்போது கிடைத்துள்ளன (நீல நிறத்திலான சேர்ட் அணிந்தவர்.) Fais Journalist- இரசித்த.... புகைப்படங்கள்.
புதிய வரவு. வாழை இலையில் தீபாவளி உடுப்பு. 😍- தீபாவளி... சிரிப்புகள்.
- தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!
இரண்டு கிழமையில்.... இலங்கையில் ஒரு பவுண் தங்கம், ஒரு லட்சத்தி நான்காயிரம் (104,000) ரூபாய் அதிகரித்துள்ளது. இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 410,000 ரூபாவாக காணப்படுகிறது.- இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
- இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
பாதாள உலக குழுக்களுக்குப் பின்னால் இருப்பவர்களை அரசு நடுநிலையான விசாரணை நடத்த வேண்டும். இதை அரசியல் மயப்படுத்தக் கூடாது எனவும் நாமல் ராஜபக்ச வேண்டுகோள். அண்மையில் இந்தோனேசியாவில் பிடிபபட்ட, பாதாள குழு தலைவன் "கெஹல்பத்தர பத்மே"... இரண்டு படத்திலும் மகிந்தவிற்கு வலது புறம் நிற்கிறார். கெஹல்பத்தர பத்மே.... மகிந்தவுடன் நெருக்கத்தில் இருக்கும் படம். மகிந்த ➡ கெஹல்பத்தர_பத்மே ➡ செவ்வந்தி இதான் உண்மை என்பதற்கு, இந்தப் புகைப்படம் போதுமே. Deepan Djr- கருத்து படங்கள்
- மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் கைது!
மஹிந்தவின் முன்னாள் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்! சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றம் இன்று (17) நெவில் வன்னியாராச்சியின் பிணை மனுவை நிராகரித்து, அவரை எதிர்வரும் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது. 28 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை குவித்ததாகக் கூறப்படும் வழக்கில் நெவில் வன்னியாராச்சி கடந்த 02 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார். https://athavannews.com/2025/1450595- இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மூவர் கைது! இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் கான்ஸ்டபிள், அவரின் மனைவியின் தாய் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்தவரென கருதப்படும் “மாத்தறை ஷான்” என்பவரின் நெருங்கிய நண்பரொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1450657- இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா - நாமல் கடும் விமர்சனம்
- இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
கொலைக்கு பின் தப்பிச் சென்ற வழிகளை வெளிப்படுத்திய இஷாரா செவ்வந்தி.!! கணேமுல்ல சஞ்சீவவின் கொலையைத் தொடர்ந்து, தப்பிச் சென்ற விதம் குறித்து நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, பாதுகாப்புப் பிரிவிடம் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். கொலை சம்பவத்திற்குப் பிறகு, இரண்டு மாதங்களுக்கும் மேலாக மத்துகம மற்றும் தங்காலை பகுதிகளில் தலைமறைவாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் இலங்கை பொலிஸ் குழுவினர், அந்நாட்டு பொலிஸாருடன் இணைந்து நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அதன்படி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல உள்ளிட்ட நான்கு அதிகாரிகள் அடங்கிய குழுவினர், சந்தேக நபர்களை ஸ்ரீலங்கன் விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வந்தனர். நேற்று (15) மாலை 6.52 மணியளவில் சந்தேக நபர்களுடன் விமானம் நாட்டை வந்தடைந்தது. இவ்வாறு அழைத்துவரப்பட்ட குற்றவாளிகள் பலத்த பாதுகாப்புடன் பல்வேறு பொலிஸ் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன்படி, இஷாரா செவ்வந்தி, டுப்ளிகேட் இஷாரா எனப்படும் தக்ஷி, ஜே.கே. பாய் மற்றும் ஜப்னா சுரேஷ் ஆகியோர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர். கம்பஹா பபா, களனி வலய குற்றத் தடுப்புப் பிரிவிடமும், நுகேகொடை பபி, மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவிடமும் ஒப்படைக்கப்பட்டனர். இந்த நடவடிக்கை தொடர்பான பல முக்கிய தகவல்கள் 'அத தெரண'வுக்கு கிடைத்துள்ளன. உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல மற்றும் கிஹான் சில்வா என்ற பொலிஸ் அதிகாரி ஆகியோர் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி இந்த நடவடிக்கைக்காக நேபாளம் சென்றுள்ளனர். அங்கு, நேபாள துணைத் தூதுவர் சமீரா முனசிங்க மற்றும் அவரது கணவர் ஆகியோர் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கி, அந்நாட்டு பொலிஸாரையும் தொடர்புபடுத்தி உதவியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து செயற்பட்ட இலங்கை விசாரணை அதிகாரிகள், மற்றொரு தரப்பின் மூலம் ஜே.கே. பாயை கைது செய்துள்ளனர். அவரிடம் இஷாரா குறித்து ரொஹான் ஒலுகல வினவியபோது, தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் கூறியுள்ளார். எனினும், அவரிடமிருந்து இஷாராவின் தொலைபேசி இலக்கத்தை பொலிஸார் பெற்றுள்ளனர். அதன்படி மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், இஷாரா தங்கியிருந்த இடம் கண்டறியப்பட்டு, ஒலுகல மற்றும் மற்றுமொரு பொலிஸ் அதிகாரி, அவர் வசித்த வீட்டிலிருந்து ஐந்து வீடுகள் தள்ளி தங்கியிருந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நேபாள பொலிஸாரைக் கொண்டு அந்த இடத்தை சோதனையிட்டபோது, இந்தியாவின் பெங்களூருவிலிருந்து வந்த தமிழினி என்ற பெண், ஒரு ஈரடுக்கு மாடி வீட்டின் மேல் தளத்தில் வாடகைக்கு தங்கியிருப்பது தெரியவந்தது. இதற்காக அவர் மாதந்தோறும் 6,000 நேபாள ரூபாய் செலுத்தியதும் கண்டறியப்பட்டது. மேலதிக விசாரணையில், தமிழினி என்ற பெயரில் தங்கியிருந்தது இஷாரா என்பது உறுதி செய்யப்பட்டது. அனைத்து தகவல்களையும் உறுதிப்படுத்திய பின்னர், நேபாள பொலிஸாருடன் அந்த இடத்திற்குச் சென்ற ஒலுகல மற்றும் மற்றுமொரு அதிகாரி, கீழ் தளத்தில் தங்கியிருந்து, அவர்களை மேல் தளத்திற்கு அனுப்பி இஷாராவை கைது செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, நேபாள பொலிஸார் அவரைக் கைது செய்தபோது அவர் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை. பின்னர், ஒலுகல அவர் இருந்த இடத்திற்குச் சென்று, "எப்படி இருக்கிறீர்கள் செவ்வந்தி?" என்று வினவியுள்ளார். அதற்கு பதிலளித்த அவர், "நன்றாக இருக்கிறேன் சேர்" என்று கூறியுள்ளார். "தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள்" என்று ஒலுகல கூறியபோது, "சேர், எனக்கு இந்த நாடே வெறுத்துப்போயிருந்தது" என்று அவர் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு சுமார் ஒரு மாதம் மத்துகமவில் உள்ள ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்ததாக இஷாரா கூறியுள்ளார். பின்னர், பத்மேயின் அறிவுறுத்தலின் பேரில் மித்தெனிய பகுதிக்குச் சென்று அங்கும் சுமார் ஒரு மாதம் தங்கியிருந்துள்ளார். அப்போது 'பெக்கோ சமன்' என்பவர் அவருக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார். பின்னர், யாழ்ப்பாணம் சென்று மூன்று நாட்கள் தங்கியிருந்து, ஜே.கே. பாயுடன் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். இதற்கு சுமார் ஐந்து மணி நேரம் ஆனது என்றும், ஒரு பெரிய படகில் சிறிது தூரம் சென்று, பின்னர் ஒரு சிறிய படகு மூலம் இந்தியாவிற்குள் நுழைந்ததாகவும் இஷாரா குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தபோது, ஜே.கே. பாய் அவருக்கு 'தமிழினி' என்ற பெயரில் ஒரு இந்திய அடையாள அட்டையை தயாரித்துக் கொடுத்துள்ளார். அதன் பின்னரே நேபாளம் சென்றதாக அவர் கூறியுள்ளார். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், தன்னுடன் ஜே.கே. பாய் தவிர மேலும் நான்கு பேர் இருந்ததாக இஷாரா தெரிவித்துள்ளார். அதன்படி, கம்பஹா பபா, நுகேகொடை பபி, ஜப்னா சுரேஷ் மற்றும் இஷாராவின் தோற்றத்தில் இருந்த தக்ஷி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கெஹெல்பத்தர பத்மே கைது செய்யப்படுவதற்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஜப்னா சுரேஷும் தக்ஷியும் விமானம் மூலம் நேபாளம் வந்துள்ளனர். அவர்கள் ஆறு பேரும் ஒரே வீட்டில் தங்கியிருந்த நிலையில், பத்மே கைது செய்யப்பட்ட பின்னர், ஆறு பேரும் ஆறு வெவ்வேறு இடங்களுக்குப் பிரிந்து சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், தக்ஷியின் விபரங்களைப் பயன்படுத்தி செவ்வந்தியை ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்ப பத்மே ஏற்பாடு செய்திருந்ததும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மன்னார், பேசாலை பகுதியிலிருந்து படகு மூலம் இந்தியாவுக்கு புறப்பட்டதாகவும், அதற்கான ஏற்பாடுகளை 'பெக்கோ சமன்' என்பவர் மூலம் பத்மே செய்ததாகவும் சந்தேக நபர் கூறியுள்ளார். அவர் 2019 ஆம் ஆண்டு கொஹுவல, ஜம்புகஸ்முல்ல பிரதேசத்தில் ஒருவரைக் கொலை செய்துவிட்டு, அன்றே டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளார். பின்னர், கடந்த ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். Eastern News7- இஷாரா செவ்வந்தியை கைதுசெய்ய அரசாங்கத்திற்கு ஒரு வருட காலம் எடுத்ததா - நாமல் கடும் விமர்சனம்
மகிந்த ஜனாதிபதியாகி, செய்த உருப்படியான வேலை என்றால்... தனது மொக்கு மகனை, வக்கீல் சோதனை பாஸ் பண்ண வைத்து விட்டார். 😂- தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!
தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியது; ஒரு பவுண் 410,000 ரூபா! நாளுக்கு நாள் புதிய சாதனைகளை முறியடித்துச் செல்லும் தங்கத்தின் விலையானது வெள்ளிக்கிழமை (17) மற்றொரு முக்கியமான வரம்பைத் தாண்டியது. அமெரிக்கா-சீனா வர்த்தக உறவுகள் குறித்த கவலைகள் அதிகரித்து வருவதும் தங்கத்தின் விலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அத்துடன், முதலீட்டாளர்கள் மத்தியில் தங்கம் வாங்கும் ஆர்வம் அதிகரிப்பதற்கு, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு அதிக வட்டி விகிதக் குறைப்பை மேற்கொள்ளக்கூடும் என்ற வதந்திகளும் காரணம் என்றும் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை தங்கக் கட்டியின் விலை 1.2 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,379.93 ஆக உயர்ந்து, 30 டிரில்லியன் டொலர் சந்தை மூலதனத்தை எட்டியது. இது 2008 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதன் அதிகபட்ச வாராந்திர இலாபத்தைப் பதிவு செய்யும் சந்தர்ப்பமாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் தங்கத்தின் விலை 165.61 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஸ்பெக்டேட்டர் இன்டெக்ஸின் தரவுகள் தெரிவிக்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2022 ஆம் ஆண்டில், தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு $1,649 ஐத் தாண்டியது. இன்று தங்கத்தின் விலைகள் இதுவரை இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட $4,380 ஐத் தொட்டுள்ளன. இது குறித்த மூன்று ஆண்டுகள் காலக்கட்டத்தின் இரு மடங்கிற்கும் அதிகமான அதிகரிப்பாகும். இந்த ஆண்டு தங்கத்தின் விலை 65 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. புவிசார் அரசியல் மற்றும் வர்த்தக பதட்டங்கள், அதிகரித்து வரும் நிதி மற்றும் கடன் அளவுகள் மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் மத்தியில் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதேவேளை, வெள்ளியின் விலையும் இந்த வாரம் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது. அதன்படி, அதன் விலை வெள்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ் $54.3775 ஆக புதிய உச்சத்தை எட்டியது. இலங்கை விலை விபரம்! கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 410,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 379,200 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1450577- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- இரசித்த.... புகைப்படங்கள்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.