Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தைப்பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி! தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி , 15ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில் முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். பின்னர் அங்கிருந்து மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் மாலை 4 மணியளவில் கலந்து கொள்ளவுள்ளார். மறுநாள் 16ஆம் திகதி காலை 09 மணிக்கு மீசாலை ஆரம்ப பாடசாலையில் வீட்டு திட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வார். பின்னர் மதியம் 2 மணியளவில் கொக்குவில் தொழிநுட்ப கல்லூரி மைதானத்தில் “முழு நாடும் ஒன்றாக .. ” போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார். https://athavannews.com/2026/1459391
  2. ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் அறிமுகம்! பறக்கும் ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல கருத்து வெளியிட்டுள்ளார். இதன்போது வணிக ரீதியான பெறுமதி கொண்ட அனைத்து ட்ரோன் விமானங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இதேவேளை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை இந்த ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது எனவும் இதில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் என இரண்டு பிரிவுகள் உள்ளன. இவை முறையாக வானில் பறக்கவிடப்படுவதற்கான ஒழுங்குவிதிகளை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டிலிருந்து அவற்றை அமுல்படுத்தத் தீர்மானித்துளளதாகவும் 250 கிராமிற்கும் குறைவான எடையுடைய ‘விளையாட்டுப் பொருள்’ (Toy) வகையைச் சேர்ந்த ட்ரோன்களை நாம் ஒழுங்குபடுத்தப் போவதில்லை எனவும் ஆனால், 250 கிராமிற்கு மேற்பட்ட அல்லது வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் ட்ரோன்களை நாம் கட்டாயம் ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அவற்றை இறக்குமதி செய்வதற்கும் தனியான ஒழுங்குவிதிகள் காணப்படுகின்ற நிலையில் அதற்கமையச் ட்ரான் பயன்பாட்டாளர்கள் செயற்பட முடியும் எனவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1459342
  3. சீனாவுக்கு போட்டியாக புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியில் இந்தியா! பங்களாதேஷ் துறைமுகங்களில் சீனா முதலீடு செய்து இராணுவ பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில், உள்கட்டமைப்பை உருவாக்கி வரும் நிலையில், இந்திய கடற்படை கொல்கத்தா அருகே புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியை துவங்கி உள்ளது. இந்தியாவை சுற்றி சீனா இராணுவ மற்றும் பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சிக்கிறது. இதற்காக பாகிஸ்தானின் குவாதர், இலங்கையின் அம்பாந்தோட்டை , மியான்மரின் கியாக்பியூ, பங்களாதேஷின் சிட்டகாங் என, பல நாடுகளில் துறைமுகங்கள் மற்றும் இராணுவ தளங்களை உருவாக்கி வருகிறது. இந்தியாவை சுற்றி, இது ஒரு மாலை போல் அமைந்துள்ளதால், இதை, ‘ஸ்ட்ரிங் ஆப் பேர்ல்ஸ்’ (String of Pearls) எனப்படும், முத்துமாலை உத்தி என அழைக்கின்றனர். இதற்கு பதிலடியாக இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் கடல் பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளுடன் இணைந்து, ‘குவாட்’ (‘Quad) அமைப்பை இந்தியா துவக்கி உள்ளது. சீனாவை எதிர்கொள்ளும் மற்றொரு முயற்சியாக, மேற்கு பங்களாதேஷ் மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஹால்டியா துறைமுகம் அருகே, வங்க கடலில் புதிய கடற்படை தளம் அமைக்கும் பணியை இந்திய கடற்படை துவங்கியுள்ளது. https://athavannews.com/2026/1459360
  4. ISIS பயங்கரவாதி குழு இலக்குகளை குறிவைத்து சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்! சிரியாவில் உள்ள ISIS பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது நேற்று (10) பாரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் இணைந்து நடத்தியுள்ளன. ‘ஆபரேஷன் ஹாக்கி ஸ்ட்ரைக்’ (Operation Hawkeye Strike) எனும் பெயரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட இத்தாக்குதலில், சிரியா முழுவதும் உள்ள 35-க்கும் மேற்பட்ட ISIS மறைவிடங்கள் குறிவைக்கப்பட்டன. குறித்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்குகள், கட்டளை மையங்கள் மற்றும் பயிற்சித் தளங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தாக்குதலில் 90-க்கும் மேற்பட்ட துல்லியமான ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இதேவேளை, கடந்த மாதம் 13 ஆம் திகதி சிரியாவின் பால்மைரா பகுதியில் ISIS பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஒரு மொழிபெயர்ப்பாளர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் சிரியாவில் நீண்டகாலமாக ஆட்சி செய்த பஷார் அல்-அசாத் பதவியிலிருந்து அகற்றப்பட்ட நிலையில் தற்போது அஹ்மத் அல்-ஷரா தலைமையிலான புதிய சிரிய அரசாங்கம் பதவியேற்றுள்ளது. இந்தப் புதிய அரசாங்கம் அமெரிக்காவுடன் இணைந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1459368
  5. ட்ரம்பு தான்.... நோபல் பரிசு தனக்கு வேணும் என்று, அடம் பிடிக்கிறான் சார்.
  6. சிறீலங்காவின் முன்னணி போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைகார கும்பலின் தலைவனோடு (ராஜபக்ச குடும்பத்தின் அடியாள்) இணைந்து அட்டூழியங்களை செய்த இந்த நபரை சிறையில் அடைத்தமைக்காக மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் . ஆனால் பாரிய குற்றச்செயலில் ஈடுபட்ட இந்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆகவே அநுரகுமார அரசும் தமிழ் மக்களை நன்றாகவே ஏமாற்றுகின்றது என்பதற்கு இது நல்ல உதாரணம். இதே குற்றத்தை வேறு ஒரு சாதாரண தமிழ் பொதுமகன் செய்திருந்தால் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் குறைந்தது 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து என்னவெல்லாம் செய்து விசாரணை செய்திருப்பார்கள். Kunalan Karunagaran is with தமிழ் அரசுக் கட்சி தீவகம்
  7. இன்னும் போட்டுத் தள்ள வேண்டிய தமிழர்கள் நிறைய உள்ளார்கள் என... ஓட்டுக் குழுத் தலைவன் "டக்கி" சொல்கிறார் போலுள்ளது. இவர் அரசுடன் ஒட்டி உறவாடிய சமயம்... 20 ஆயுதங்களுக்கு மேல் அன்பளிப்பாக பெற்றுள்ளார். அதில் ஒன்றுதான்... சிங்கள பாதாளக் குழுவினருக்கு இவரால், கொடுக்கப் பட்டுள்ளது. மிகுதிக்கு அலுவல் பார்க்கப் போகுது... டக்கி.
  8. இன்று முதல் கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: கையொப்பம் திரட்டல். கல்வி அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான பொதுமக்களின் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று (10) ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான மக்கள் எதிர்ப்பை இதன் மூலம் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2026/1459245
  9. வென்னப்புவ சட்டவிரோத மதுபான விவகாரம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை! புத்தளம், வென்னப்புவ பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் ஆறு பேர் உயிரிழந்து, எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துயர சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பொலிஸாரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் 2026 ஜனவரி 6 அன்று வென்னப்புவ பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் சட்டவிரோதமாக காய்ச்சிய மதுபானத்தை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக, சட்டவிரோத மதுபான வர்த்தகத்தில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஜனவரி 7 ஆம் திகதி மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, இரு சந்தேக நபர்களையும் ஜனவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், விசாரணையின் ஒரு முன்னேற்றமாக, சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான கிழக்கு பண்டிருப்புவ, கலவத்தையைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஜனவரி 7 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஜனவரி 8 ஆம் திகதி அவர் மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மேலும் விசாரணைக்காக இரண்டு நாள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டது. மேலும் சந்தேக நபர்களை அடையாளம் காணவும், இறப்புகளுக்கு வழிவகுத்த சட்டவிரோத மதுபானத்தின் சரியான கலவையைக் கண்டறியவும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2026/1459034
  10. டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை! கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (09) கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே முன்னாள் அமைச்சரவை பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார். திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷுக்கு துப்பாக்கி வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டுக்காக கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி) டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர், கம்பஹா நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், 2026 ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். டிசம்பர் 30 அன்று, டக்ளஸ் தேவானந்தாவின் உடல்நிலையை மதிப்பிட்ட பின்னர் மருத்துவர்களின் பரிந்துரைகளைப் பின்பற்றி மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1459098
  11. கந்தரோடை விகாரை பெயர்ப்பலகை அகற்றம். யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் ” கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்” என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து , “கந்தரோடை விகாரை” என நாட்டப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் சந்தைக்கு அருகில் , தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் “கந்தரோடை விகாரை” என திசை காட்டும் பெயர் பலகை நடாத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கந்தரோடை விகாரைகள் அமையப் பெற்றுள்ளதாக கூறப்படும் , புராதன இடத்தினை , ” தொல்லியல் ஆய்வு மையம்” என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என பிரதேச சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை அடுத்து வீதிகளில் “கந்தரோடை விகாரை ” என திசை காட்டும் பெயர் பலகைகளை அகற்றும் செயற்பாட்டை பிரதேச சபை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் சுன்னாகம் பகுதியில் நாட்டப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. அதேவேளை , குறித்த பகுதியில் காணப்படும் சந்தைக்கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதாகும். அதன் சிறப்புக்கள் தொடர்பில் மும்மொழிகளிலும் எழுதிய கல்வெட்டு அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1458977
  12. இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் அறிவிப்பு! பங்களாதேஷில் கடந்த டிசம்பர் 18ம் திகதி பங்களாதேஷ் மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் கூறியுள்ளது. பங்களாதேஷில் கடந்த டிசம்பர் 18ம் திகதி பங்களாதேஷ் மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன. அங்குள்ளவர்கள் ஹிந்துக்களை தேடிப்பிடித்து தாக்குவதுடன், அவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. கடந்த 35 நாட்களில் மட்டுமே 11 ஹிந்துக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில் ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும், ஹிந்துக்களுக்கு எதிரான சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் ஒப்பந்தமாகி இருந்த முஷ்தபிஜூர் ரகுமான், கோல்கட்டா அணியில் இருந்து விலக்கப்பட்டார். இதனால், அதிருப்தியடைந்த பங்களாதேஷ் , டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவுக்கு வர மாட்டோம் என்று முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இருநாடுகளிடையே பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் அறிவித்துள்ளது. டில்லி, கோல்கட்டா, சென்னை,மும்பை, அகர்தலா மற்றும் கவுகாத்தியில் செயல்பட்டு வரும் பங்களாதேஷ் தூதரகங்கள் மூலம் வழங்கப்படும் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விசாக்களை தவிர்த்து, சுற்றுலா உள்ளிட்ட பிற வகை விசாக்கள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூதரக அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்,’ வணிக மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களைத் தவிர, இந்தியர்களுக்கு ஏனைய வகை விசாக்கள் வழங்குவதை நிறுத்திவிட்டோம் என கூறியுள்ளார். https://athavannews.com/2026/1458863
  13. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க தீர்மானம்! பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அத்துடன் சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாடத்திட்டம் தொடபான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நுகேகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதேவேளை 6ஆம் வகுப்புக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பாட அலகை நீக்குவதற்கு, தேசிய கல்வி நிறுவகம் அனுமதி வழங்கியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தலைமையிலான குழுவை நியமிப்பதற்கு, தேசிய கல்வி நிறுவகத்தின் நிர்வாக சபை தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்கள் பிள்ளைகளின் மனதிற்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு, கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நிலையில் நேற்றையதினம் பிரேரணையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். https://athavannews.com/2026/1458927

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.