Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தெற்கு கடலில் போதைப் பொருட்களுடன் கைப்பற்றப்பட்ட படகு! இலங்கைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் பல நாள் மீன்பிடிப் படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்சமயம் குறித்த படகு காலி துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்போது படகில் இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டதாகவும் ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2025/1450562
  2. வரி வருவாயில் சுங்கத்துறை புதிய சாதனை! இலங்கை சுங்கத்துறை, 2025 ஒக்டோபர் 15 அன்று 2,470 மில்லியன் ரூபாவை வசூலித்து. இது இதுவரை இல்லாத அளவிலான ஒரு நாள் வரி வருவாயை பதிவு செய்த சந்தர்ப்பம் என்று சுங்கத்துறை தெரிவித்துள்ளது. சுங்க பணிப்பாளர் ஜெனரலின் கூற்றுப்படி, இந்த ஆண்டு இதுவரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் 1,867 பில்லியன் ரூபாவாகும். இதனால், சுங்கத்துறை அதன் வருடாந்திர இலக்கான ரூ. 2,115 பில்லியனைத் தாண்டும் பாதையில் செலுத்துகிறது. இதற்கு வாகன இறக்குமதி வரிகள் முக்கிய வருமான ஆதாரமாக இருப்பதாகவும், அவை சுங்க வருவாயில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1450559
  3. தொலைபேசியூடான உடனடி கடன் சேவை குறித்து பொலிஸார் எச்சரிக்கை! இணையத்தளங்கள் அல்லது கைத் தொலைபெசிகள் ஊடாக கவனத்தை ஈர்க்கும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டு அல்லது நேரடி தொலைபேசி அழைப்புகள் மூலம் எவ்வித சாட்சிகளுமின்றி உடனடியாக பணத்தை பெற்றுக்கொள்ளும் முறையை காண்பித்து கடன் வழங்க முன்வரும் நிறுவனங்கள் தொடர்பாக பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய நிறுவனங்கள் ஊடாக கையடக்கத் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு கடன்களை மக்கள் பெற்றுக்கொள்ளும் போது பெறப்படும் வட்டி வீதம் மற்றும் கடனை மீண்டும் செலுத்த வேண்டிய காலங்கள் தொடர்பாக எவ்வித முழுமையான தகவல்களும் முன்னறிவித்தலுமின்றி கடன் வழங்குவதால் கடன் பெறுபவர்கள் பல சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் மன அழுத்தங்களுக்கும் உள்ளாகுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சில நிறுவனங்கள் கடனை மீளப்பெறும் கட்டத்தில் அதிர்ச்சிகரமாக அதிகளவிலான வட்டிகள் வசூலிக்கப்படுவதாகவும், தொடர்ந்தும் தொலைபேசி அழைப்புகள் மூலம் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், அவர்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறான தகவல்களை பரப்பும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றனர். இதனை தொடர்ந்து, இவ்வாறான முறையில் இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பாக இலங்கை பொலிஸ், இலங்கை மத்திய வங்கியின் வங்கியற்ற நிதி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தல் மற்றும் மேற்பார்வை திணைக்களத்தை தொடர்பு கொண்டு விசாரணைகள் மேற்கொண்ட போது , இவ்வாறான பல நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குபடுத்தல் முறைமை கடைபிடிக்காமல் செயற்படுவதாகவும், கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பாக ஒழுங்குபடுத்தல் முறைமையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் மேலும் அறிவித்துள்ளனர். அதனால், இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக உடனடியாக கடன் பெறும் போது அது தொடர்பாக அவதானத்துடனும், விளக்கங்கள் அதன் நிபந்தனைகளை முறையாக அறிந்து அதன் பின்னர் சேவையை பெற்றுக்கொள்ளுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். https://athavannews.com/2025/1450553
  4. உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஹங்கேரியில் ட்ரம்ப், புட்டின் சந்திப்பு! உக்ரேனில் நடந்து வரும் மோதல் குறித்து கவனம் செலுத்துவதற்காக, ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளார். இரு தலைவர்களுக்கும் இடையில் வியாழக்கிழமை (16) சுமார் இரண்டரை மணி நேரம் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொலைபேசி உரையாடலில் இரு தலைவர்களும் அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த உரையாடலானது மிகவும் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக ட்ரம்ப் விவரித்தார். அதேநேரம், கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் இந்த அழைப்பை ‘மிகவும் தகவல் தரும், மிகவும் வெளிப்படையானது’ என்று கூறினார். உக்ரேன் போரைச் சுற்றியுள்ள அதிகரித்த இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு மத்தியில் வரவிருக்கும் உச்சிமாநாடு கடந்த ஆகஸ்ட் நடுப்பகுதிக்குப் பின்னர் தலைவர்களின் முதல் நேரடி ஈடுபாட்டைக் குறிக்கிறது. எனினும், சந்திப்பின் திகதியை ட்ரம்ப் குறிப்பிடவில்லை. எனினும், அதற்காக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார். உலகின் சக்திவாய்ந்த இரு தலைவர்களுக்கும் இடையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த சந்திப்பின் பின்னணியானது உக்ரேனில் நடந்து வரும் போர் ஆகும். இது 2022 பெப்ரவரி ரஷ்யா ஒரு பெரிய அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து ஆரம்பித்தது. இந்த மோதல் பாரிய உயிர் இழப்புக்கும் பொதுமக்களின் இடம்பெயர்வுக்கும் வழிவகுத்தது. அதே நேரத்தில் உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மையையும் பாதித்தது. திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, ட்ரம்ப் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை ஓவல் அலுவலகத்தில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு பல முக்கியமான விடயங்களை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2,500 கிலோ மீட்டர் (சுமார் 1,600 மைல்கள்) பயண வரம்பைக் கொண்ட டோமாஹாக் ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் அடங்கும். ரஷ்யா மீது அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு வழிமுறையாக இந்த நீண்ட தூர திறன்களைப் பற்றி ஜெலென்ஸ்கி விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1450565
  5. முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளும், முதலமைச்சர் போட்டியில் இருக்கும் போது… சுமந்திரனை முதலமைச்சர் வேட்பாளாராக அறிவிக்க இந்தியா சம்மதிக்காது. இதிலும் சுமந்திரன்… “இலவு காத்த கிளி” தான். சுமந்திரனுக்கு இனி அரசியலில் எதிர்காலம் இல்லை. அதற்கு எப்போதோ முடிவுரை எழுதப்பட்டு விட்டது. “தான் வெட்டிய குழியில்… தானே விழுந்து உத்தரிக்கும்” சீவன் என்றால் அது சுமந்திரன் தான். 😂
  6. 🔴 தெற்கு கடலில் போதைப்பொருளுக்கான வேட்டை - பல கிலோ கண்டுபிடிப்பு! தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளில் மொத்தம் 839 கி.கி போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 670 கி.கி ஐஸ் (Ice), 156 கி.கி ஹெரோயின் (Heroin), 12 கி.கி ஹஷீஷ் (Hashish) என்பன அடங்குகின்றன. தெற்கு கடலில் மிதந்து வந்த நிலையில் நேற்று (14) சுமார் 51 பொதிகள் மீட்கப்பட்டன. இந்தப் பொதிகள் நேற்று (14) மாலை தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன. 3 பொதிகளில் ஹெரோயின் இருப்பதாகவும், மற்ற 48 பொதிகளிலும் ஐஸ் ரக போதைப்பொருள் இருப்பதாகவும் கடற்படை தெரிவித்தனர். இவை உனாகுருவே சாந்த என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானவை என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த செப்டெம்பர் மாத தொடக்கத்தில், 3 படகுகள் மூலம் போதைப்பொருட்கள் நாட்டிற்குள் கடத்தப்படவுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் பிரசாந்தவுக்கு தகவல் கிடைத்திருந்தது. இதனையடுத்து, பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில், கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் தேவேந்திரமுனை மற்றும் தங்காலை கடல் பகுதிகளில் 32 நாட்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. சம்பந்தப்பட்ட படகுகளுடன் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. படகுகளின் இருப்பிடத்தைக் கண்டறிய பயன்படுத்தப்படும் VMS (Vessel Monitoring System) அமைப்பு செயலிழக்கச் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை விமானப்படையின் உதவியும் பெறப்பட்ட போதிலும், இந்த 3 படகுகள் தொடர்பான எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. எனவே, இந்தப் பொதிகள் சந்தேகநபர்களால் கடலில் வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்குப் பேசிய பாதுகாப்பு பிரதியமைச்சர், பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டின் எதிர்கால சந்ததியினரை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் ஒன்றாக இணைந்து செயல்படும் தேசிய நடவடிக்கை’ மற்றும் இந்த போதைப்பொருளை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்தார். மேலும், கடல் வழிகள் வழியாக நாட்டிற்குள் போதைப்பொருள் நுழைவதைத் தடுக்க, பரந்த கடல் எல்லையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இலங்கை கடற்படை ஆற்றிய முக்கிய பங்கைப் பாராட்டிய பாதுகாப்பு பிரதியமைச்சர், நாட்டில் போதைப்பொருள் பரவுவதை ஒரு தேசிய அச்சுறுத்தலாக அரசாங்கம் கருதுவதாகவும், போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்க உறுதிபூண்டுள்ளதாகவும் வலியுறுத்தினார். போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு பொதுமக்களின் பெரும் ஆதரவு இருப்பதாகவும், பொதுமக்கள் வழங்கும் தகவல்கள் நடவடிக்கைகளின் வெற்றிக்கு பெரும் பலம் என்றும், அதற்காக பொதுமக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். தேசிய பாதுகாப்பிற்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு மூலம், தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள் உள்ளிட்ட எந்தவொரு சட்டவிரோத பொருட்களையும் கடல் வழியாக நாட்டிற்குள் கொண்டு வர வாய்ப்பில்லை என்றும், மீன்பிடி நடவடிக்கைகள் என்ற போர்வையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது, அதை ஆதரிப்பது அல்லது அதை உருவாக்குவது போன்ற எந்தவொரு முயற்சியும் வெற்றிபெற அனுமதிக்கப்படாது என்றும், அத்தகைய கடத்தலை அடக்குவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்துடன் நடவடிக்கைகள் தொடரும் என்றும் மேலும் வலியுறுத்தினார். Vaanam.lk
  7. ஆட்டை திருடிய வடிவேலு, பஞ்சாயத்தை கூட்டுற மாதிரி இருக்கு. 😂 🤣
  8. காணொளி: 👉 https://www.facebook.com/reel/670893809039091 👈 செவ்வந்திக்கு... இன்னும் சிரிப்பாக இருக்கு. 😂
  9. 🛑கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட பின்னர் 3 மாதங்களாக பல இடங்களில் பதுங்கியிருந்தேன் 🛑மத்துகமவில் மாத்திரம் ஒன்றரை மாதங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்தேன் 🛑மாத்தறையிலும் தங்கியிருந்த பின்பு, படகில் இந்தியாவிற்கு சென்றேன் 🛑கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை, கெஹெல்பத்தர பத்மேவின் கூற்றுப்படி எடுத்துச் சென்றேன். (இஷாரா செவ்வந்தியின் வாக்கு மூலம்) ################ ############## கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட முன், நிதி வசதியில்லாத பெண் ஒருவருக்கு பண உதவி செய்ததாகவும், சஞ்சீவ கொலையின் போது நீதிமன்றத்திற்கு சென்ற தன்னை, உண்மையான வழக்கறிஞர் என எண்ணிய பெண் தன்னை வழக்கு ஒன்றை வாதாட அழைத்ததாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார். “கணேமுல்ல சஞ்சீவவை சுட கமாண்டோ சலிந்துவுடன் நீதிமன்றத்திற்கு வந்தபோது, வழக்கறிஞர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஓய்வு அறையில் இருந்தேன். அங்கு வந்த மிகவும் உதவியற்ற தோற்றமுடைய ஒரு பெண் என்னிடம் பேசினார். நான் ஒரு வழக்கறிஞர் என்று அவர் நினைத்தார். அந்தப் பெண்ணின் கணவர் அவரை மோசமாக அடிப்பதாகவும் வழக்கு புதுக்கடை நீதிமன்றத்தில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். தன்னிடம் ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளது. அந்தத் தொகைக்கு வழக்கில் வாதாட முடியுமா எனவும் குறித்த பெண் தன்னிடம் கேட்டதாக செவ்வந்தி தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் அந்தப் பெண்ணுக்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன். நான் வேறொரு வழக்கிறக்காக வாதாடவுள்ளதாக கூறினேன். அதனால் நான் அந்த பெண்ணின் வழக்கை அங்கிருந்த மற்றுமொரு பெண்மணியிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு, என் பார்வையில் இருந்த மற்றொரு பெண் வழக்கறிஞரிடம் அழைத்துச் சென்றேன். அந்தப் பெண் வழக்கறிஞரிடம் சென்று தனது கதையைச் சொன்னார். வழக்கில் முன்னிலையாக 2000 ரூபாய் கேட்டார். அந்த பெண் மிகவும் உதவியற்றவராக என்னைப் பார்த்தார். நான் அவரை அறையிலிருந்து வெளியே அழைத்து, என்னிடம் இருந்த 5000 ரூபாயை கொடுத்து, அந்தப் பெண் சட்டத்தரணியை வழக்கில் வாதாட அழைக்குமாறு கோரினேன். அந்த பெண் என் கைகளைப் பிடித்து, வணங்கி பணத்தை பெற்றுக் கொண்டார்” என இஷாரா செவ்வந்தி குறிப்பிட்டுள்ளார். Jaffna Muslim ·
  10. இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட இலங்கை பாதாள உலகக் குழுவினரின் கைதும் பின்னணியும்! காத்மாண்டுவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்னவின் கொலையுடன் தொடர்புடைய ஆறு இலங்கையர்களை நேபாளம் நாடு கடத்தியுள்ளதாக The Kathmandu Post செய்தி வெளியிட்டுள்ளது. நேபாள காவல்துறையினருடன் இணைந்து நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கை, குற்றம் சாட்டப்பட்டவர்கள் காத்மாண்டு மற்றும் பக்தபூர் முழுவதும் வாடகை வீடுகளில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட நிலையில் புதன்கிழமை (15) நாடு கடத்தப்பட்டதாகவும் அது கூறியுள்ளது. அந்த செய்திச் சேவையின் தகவலின்படி, இஷாரா செவ்வந்தி வீரசிங்க பின்புர தேவகே ( வயது 26), ஜீவதாசன் கனகராசா ( வயது 33), தக்ஷி நந்தகுமார் (23), தினேஷ் ஷியமந்த டி சில்வா (49), கெனடி பஸ்தியம்பிள்ளை ( வயது 35), மற்றும் தினேஷ் நிசாந்த குமார விக்ரம ஆராச்சிகே ( வயது 43) ஆகியோரே நாடு கடத்தப்பட்டவர்கள் என சிரேஷ்ட பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2025 பிப்ரவரி 19 அன்று கொழும்பில் உள்ள புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்திற்குள் சஞ்சீவ கொல்லப்பட்ட வழக்கில் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பு பட்டியலில் இடம்பெற்றிருந்தார். இந்த அறிவிப்பு நேபாளம் உள்ளிட்ட இன்டர்போல் உறுப்பு நாடுகளை அவரது நடமாட்டங்களைக் கண்காணிக்கத் தூண்டியது. காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம் இந்த வழக்கு குறித்து குறிப்பாக கவலை தெரிவித்ததாக நேபாள காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன்படி, நக்சலில் உள்ள நேபாள காவல்துறை தலைமையகத்தில் உள்ள இன்டர்போல் தேசிய மத்திய பணியகம், சந்தேக நபர்களைக் கண்டுபிடித்து கைது செய்ய ஒரு சிறப்புக் குழுவை நியமித்தது என்று அந்த அதிகாரி கூறினார். காவல்துறை விசாரணையில், ஆறு பேரும் மலேசியா மற்றும் துபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டுள்ள இலங்கை குற்றவியல் அமைப்பான கெஹல்பத்தர பத்மே கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது. ஆகஸ்ட் 25 அன்று இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பத்மேவுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பையும் பிறப்பித்திருந்தது. சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் பத்மே தான் மூளையாக செயல்பட்டதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சந்தேக நபர்கள் பல வாரங்களாக நேபாளத்தில் இரகசியமாக வசித்து வந்ததும், போலி அடையாளங்களைப் பயன்படுத்தி, இந்திய குடிமக்கள் என்று அவர்கள் கூறிக் கொண்டதும் கண்டறியப்பட்டது. அவர்களில் இருவர் விமானம் மூலம் நேபாளத்திற்குள் நுழைந்ததாகவும், மற்றவர்கள் இந்தியாவிலிருந்து தரை வழியாக எல்லையைத் தாண்டியதாகவும் நம்பப்படுகிறது. சந்தேக நபர்கள் யாரும் நேபாளத்தில் குற்றங்களைச் செய்யவில்லை என்பதால், நேபாள சட்டத்தின்படி அவர்களை நாடு கடத்துவதற்கு வசதியாக அதிகாரிகள் குடிவரவுத் துறையுடன் ஒருங்கிணைந்தனர். சிரேஷ்ட குடிவரவு அதிகாரி ஒருவர், சட்டத் தேவைகளின்படி அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறை மேற்பார்வையின் கீழ் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார். இலங்கை பாதாள உலக நபர்கள் நேபாளத்தில் தஞ்சம் புகுந்தது போன்ற வழக்குகள் மிகவும் அரிதானவை என்று இன்டர்போல் அதிகாரிகள் குறிப்பிட்டனர். மேலும் அவர்கள் விரைவாக நாடுகடத்தப்படுவதை உறுதி செய்வதில் நேபாள காவல்துறைக்கும் இலங்கை தூதரகத்திற்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிக முக்கியமாக அமைந்ததாகவும் – தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1450514
  11. போதை மாஃபியாக்கள் தினமும் கைதாக... நாமல் ராஜபக்சவுக்கு கெடி கலக்கமாக உள்ளது. போதைக் கும்பலில் 40 பேர் குறி வைக்கப் பட்டிருந்தவர்கள். அதில் 18 பேர் வரையே இதுவரை கைது செய்யப் பட்டுள்ளார்கள். இன்னும் 22 பேர் தலைமறைவாகி உள்ளார்களாம்.
  12. இந்த பாதாள உலக ஆட்கள் எல்லாம் ஏன் சினிமா ஹீரோ, ஹீரோயின் ரேஞ்சுக்கு இருக்கிறார்கள்? 🤔 இலங்கையின் Most wanted Criminals. ஆனா விஷயம் தெரியாதவர்களிடம் இந்த போட்டோக்களைக் காட்டினால் நம்பவே மாட்டார்கள். மக்களே தெரிந்துகொள்ளுங்கள் - வாழ்க்கையில் திருப்தியாக, நிம்மதியாக வாழ “அழகு” மட்டும் இருந்தால் போதாது. Rajeevan Ramalingam
  13. அமுலுக்கு வந்த பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போர் நிறுத்தம்! தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையே வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழி மோதல்கள் பதற்றங்களை அதிகரித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் புதன்கிழமை (15) தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. அதன்படி, எல்லைப் பதற்றங்களைத் தணிக்க ஆப்கானிஸ்தான் தரப்பு வேண்டுகோளின் பேரில், பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக இஸ்லாமபாத் வெளிவிவகார அலுவலகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் அதே நாளில் சமூக ஊடகங்களில், ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படும் என்று அறிவித்தார். பாகிஸ்தான் தரப்பின் வேண்டுகோள், வற்புறுத்தலின் பேரில் இரு நாடுகளுக்கும் இடையே புதன்கிழமை போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் என்று முஜாஹித் கூறினார். அதேநேரம், பாகிஸ்தான் தரப்பில் எந்த தாக்குதலையும் நடத்தாத வரை, போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறு ஆப்கானிஸ்தான் அரசாங்கம் அதன் அனைத்துப் படைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பல நாட்கள் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சண்டை மற்றும் வான்வழித் தாக்குதலுக்குப் பின்னர் இந்த அறிவிப்புகள் வந்துள்ளன. 2021 ஆம் ஆண்டு காபூலில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து இரு இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையேயான மிக மோசமான மோதல் இதுவாகும். பாகிஸ்தானில் தாக்குதல்களை அதிகரித்த போராளிகளைக் கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தான் தாலிபான் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இஸ்லாமாபாத் கோரியதைத் தொடர்ந்து, முன்னாள் நட்பு நாடுகளுக்கு இடையேயான அண்மைய மோதல் வெடித்தது. போராளிகள் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படுவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. எனினும், தாலிபான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து, பாகிஸ்தான் இராணுவம் ஆப்கானிஸ்தான் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவதாகவும், எல்லைப் பதற்றங்களைத் தூண்டுவதாகவும், நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் கூறியுள்ளது. எவ்வாறெனினும், இரு நாடுகளுக்கு இடையிலான இந்த மோதலின் விளைவாக பொது மக்கள் பலர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1450482
  14. ஹமாஸ் ஒப்படைத்த பணய கைதிகளின் உடல்களில் குழப்பம்! பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைப்பதற்கு அவகாசம் தேவைப்படுவதாக இஸ்ரேலிடம் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்து வந்த போர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சியால் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அமெரிக்கா முன்மொழிந்த 20 அம்ச திட்டங்களின் முதல் கட்டத்திற்கு மட்டுமே, இருதரப்பும் ஒப்புதல் அளித்துள்ளதுடன் அதன்படி பணயக்கைதிகளை பரஸ்பரமாக விடுவித்தனர். மொத்தம் 28 பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் படிப்படியாக ஒப்படைத்து வருகிறது. பிணைக்கைதிகளின் உடல்கள் அடங்கிய பெட்டிகளை சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஹமாஸ் இயக்கம் ஒப்படைத்து வருகிறது. அண்மையில், பணயக்கைதியின் உடலுக்கு பதிலாக வேறு உடலை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேல், தங்கள் நாட்டைச் சேர்ந்த பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் முறையாக ஒப்படைக்க வேண்டும் என்று ஹமாஸூக்கு எச்சரிக்கை விடுத்தது. இதேவேளையில், ஹமாஸ் ஒப்பந்தத்தை கடைபிடிக்கவில்லை எனில், இஸ்ரேல் காசாவில் தாக்குதலை தொடங்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு மேலும் இரு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைத்துள்ளது. மேலும், காசாவின் இடிபாடுகளில் சிக்கியுள்ள பணயக்கைதிகளின் உடல்களை மீட்டுக் கொண்டு வர அவகாசமும், நவீன உபகரணங்களும் தேவை என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. தற்போது வரை மொத்தம் 28 உடல்களில் 9 பேரின் சடலங்கள் இஸ்ரேலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மத்தியஸ்தம் செய்த நாடுகளின் உதவியுடன் எஞ்சியவர்களின் உடல்களை தேடும் பணியில் ஹமாஸ் அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். https://athavannews.com/2025/1450477
  15. அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ட்ரம்பின் திட்டத்தை தடுத்த அமெரிக்க நீதிமன்றம்! கலிபோர்னியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி நீதிபதி புதன்கிழமை (15) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு, பகுதி அரசாங்க முடக்கத்தின் போது கூட்டாட்சி ஊழியர்களின் பெருமளவிலான பணிநீக்கங்களை நிறுத்துவதற்கு உத்தரவிட்டார். அதே நேரத்தில் பணி நீக்கங்கள் சட்டவிரோதமானது என்ற தொழிற்சங்கங்களின் கூற்றுக்களை அவர் பரிசீலித்துள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் நடந்த விசாரணையின் போது, வழக்கு தொடரும் வரை 30க்கும் மேற்பட்ட கூட்டாட்சி நிறுவனங்களில் பணிநீக்கங்களைத் தடுக்க இரண்டு தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கையை அமெரிக்க மாவட்ட நீதிபதி சூசன் இல்ஸ்டன் ஏற்றுக்கொண்டார். இந்த முடிவு விரைவில் மேல்முறையீடு செய்யப்படலாம். ஆனால், ட்ரம்ப் நிர்வாகத்தினால் தங்கள் பதவிகளைக் குறைக்க சுமார் ஒரு வருட காலமாக அழுத்தம் கொடுத்து வரும் கூட்டாட்சி ஊழியர்களுக்கு இது ஒரு நிவாரணத்தை வழங்குகிறது. அரசாங்க முடக்கத்தின் போது கூட்டாட்சி பணியாளர்களைக் குறைப்பதாக ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, தற்போது அதன் 15 ஆவது நாளில், அமெரிக்க அரசாங்கம் முழுவதும் கணிசமான பணிநீக்கங்களைத் தொடங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை கடந்த வாரம் கூறியது. புதன்கிழமை ஒரு உத்தரவில், புதிய கூட்டாட்சி ஊழியர்களை பணியமர்த்துவதில் ஏற்கனவே இருந்த முடக்கத்தை ட்ரம்ப் நீட்டித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1450478
  16. செவ்வந்தி… கள்ளத் தோணியில் இந்தியா போய், நேபாளத்தில் இருந்து விமானத்தின் மூலம், தாய் நாட்டிற்கு வரும் போது… கொடுப்புக்குள் சிரிப்பு வரத்தான் செய்யும். 😁 😂 🤣
  17. ஆண்டிகள் கட்டிய மடம் போலுள்ளது. 😁 இவர்களுக்கு, கட்டுக்காசும் கிடைக்குமோ தெரியாது. 😂 முன்னாள் ஒட்டுக் குழுக்களும்… தேர்தல் என்றவுடன், “நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு” மோப்பம் பிடித்து வந்து விடுகின்றார்கள். 🤣
  18. நிச்சயமாக குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிலும் இவர்களின் குழு…. பெருமளவில் போதைப் பொருள் கடத்தல், கொலை என்று…. தங்களுடைய பணத் தேவைக்கும், சொகுசு வாழ்க்கைக்குமாக.. நாட்டு மக்களையும், இளைய சமுதாயத்தையும் சீரளித்துக் கொண்டு இருக்கும் கோர சிந்தனை உடையவர்கள். சில வாரங்களுக்கு முன்…. இந்தக் கும்பலின் 850 கிலோ பெறுமதியான ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப் பட்டிருந்தது. அந்த 850 கிலோவும் அடுத்த பத்து வருடத்துக்கு இலங்கையின் பாவனைக்கு போதுமானது என்று வாசித்தேன். அத்துடன் எல்லாம் முடிந்தது என்று பெரு மூச்சு விடுவதற்கிடையில்…. நேற்று தெற்கு கடல் பகுதியான தங்காலையில் 840 கிலோ ஐஸ் போதைப் பொருட்கள் 51 சாக்குகளில் கடலில் மிதந்த வண்ணம் இருந்ததை கடற்படையினர் கண்டு எடுத்துள்ளார்கள். இவை எல்லாவற்றின் பெறுமதி பல பில்லியன் ரூபாய்களை தானும் என்கிறார்கள். ஆக…. இந்தப் போதைப் பொருள் வலையமைப்பு இன்னும் இயங்கிக் கொண்டுதான் உள்ளது. இதன் ஆணி வேரைத் தேடிப் போனால்… நிச்சயம் பெரும் கொழுத்த அரசியல்வாதிகள் இருப்பார்கள் என்பது கசப்பான உண்மை. இந்தப் போதைப் பொருள் மாஃபியாக்களை, கைது செய்யும் நடவடிக்கையை…. அனுரா அரசை தவிர்ந்த வேறு எந்த அரசும் இவ்வளவு மூர்க்கமாக செய்திருக்கவே மாட்டார்கள். ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானோரின் கண்ணசைவுடன்தான் இந்தப் போதைப் பொருள் கடத்தலும், வியாபாரமும் நடந்து கொண்டுள்ளதாக பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றார்கள். ஆகவே…. வேரோடும், வேரடி மண்ணோடும் இந்த வலையமைப்பை அழித்து ஒழிக்கும் வரை… கைது செய்யப்பட்டவர்களை முட்டிக்கு முட்டி தட்டி… விசாரிக்க வேண்டும்.
  19. அகில இலங்கை ரீதியில்.... அடிக்கடி முக்கிய செய்திகளில் இடம் பிடிப்பது.. "சாவகச்சேரியான்ஸ்" மட்டுமே. 🤣 அந்த மண்ணில் அப்படி ஒரு மகிமை இருக்கு. 😂
  20. எங்களுக்கே... செவ்வந்தியை பார்க்க பாவமாய் இருக்கு, வக்கீல் சுமந்திரனை பிடித்து, ஆளை ஜாமீனில் வெளியே எடுத்து விடுங்க. 😂
  21. செவ்வந்தி... புதிதாக மூக்குத்தி குத்தி உள்ளார். இது, இந்தியாவில் குத்தப் பட்டதா, நேபாளத்தில் குத்தப் பட்டதா என்று, யாழ் கள புலநாய்வாளர்கள், தீவிரமாக புலனாய்வு செய்கிறார்கள். 😂 🤣
  22. செவ்வந்தி... கள்ளத் தோணியில் இந்தியா சென்று, நேபாளத்தில் இருந்து, விமானம் மூலம் இலங்கை வருகின்ற வழியில் எடுத்த படம். பிள்ளை.... சரியாய் பயந்து போச்சுது போலை கிடக்கு. 😂 கறுப்பு உடையுடன் இருப்பவர் சாவகச்சேரியை சேர்ந்த... தக்சி என்று முகநூலில் உள்ளது.
  23. @நிழலி …. இனி, செவ்வந்தியை பார்க்கிறது என்றால், “வெலிக்கடை” மறியலுக்குள் போய்த்தான் பார்க்க வேணும். 😂 🤣
  24. செவ்வந்தி... "மேக்கப்" எல்லாம் போட்டுக் கொண்டு, ஜாலியாகத்தான் இருந்திருக்கின்றார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.