Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தண்ணீருக்குள் மிதக்கும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – பரீட்சாத்த போட்டிகள் இடைநிறுத்தம்! ஜனவரி மாதம் 14ஆம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்த முதலாவது பரீட்சார்த்த கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற மைதானத்திற்குள் அதிகவான தண்ணீர் நிற்பதை அவதானிக்க முடிந்துள்ளது. யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் தற்போதும் நடைபெற்று வருகின்றது. ஆனால் டித்வா சூறாவளி காரணமாக கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. எனினும் தற்போது மைதானத்திற்குள் அதிகளவான தண்ணீர் தேங்கியுள்ளது. டித்வா சூறாவளி தாக்கத்திற்கு முன்னர் சில பரீட்சாத்த போட்டிகளை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை தீர்மானித்திருந்தது. இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி 14 ஆம் திகதி நடைபெறவிருந்த முதலாவது பரீட்சார்த்தப் போட்டி தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. https://athavannews.com/2025/1457913
  2. கிரிபாட்டி தீவில் முதலாவதாக மலர்ந்தது 2026 புத்தாண்டு! உலகம் முழுவதும் 2026 ஆம் ஆண்டை வரவேற்பதற்கான கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிட்டிமாட்டி தீவு உலகிலேயே முதன்முதலாகப் புத்தாண்டை வரவேற்றுள்ளது. கிரிபாட்டி நாடு பல நேர வலயங்களை கொண்டிருந்தாலும், அதன் கிரிட்டிமாடி தீவு சர்வதேச திகதிக்கோட்டிற்கு மிக அருகில் உள்ளதால், உலகிலேயே முதன் முதலாகப் புத்தாண்டை வரவேற்கும் இடமாகத் திகழ்கிறது. இலங்கை நேரப்படி இன்று மாலை 3:30 அளவில் கிரிபாட்டி தீவில் நள்ளிரவு 12 மணிக்கு 2026 புத்தாண்டு பிறந்தது. ‘கிறிஸ்மஸ் தீவு’ என்றும் அழைக்கப்படும் இந்தத் தீவில் வசிக்கும் மக்கள், வாணவேடிக்கைகள் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் 2026 ஆம் ஆண்டை உற்சாகமாக வரவேற்றனர். https://athavannews.com/2025/1457928
  3. சுத்து மாத்து சுமந்திரனின்... வளர்ப்பு எப்பிடி இருக்கு என்று பாருங்கோவன். தமிழரசு கட்சியை... சல்லியாய் நொருக்க, ஆபிரகாம் சுமந்திரன் படுகிறபாடு கொஞ்ச நஞ்சம் இல்லை. சுத்துமாத்து சுமந்திரன் ஏற்கெனவே... நொருக்கி, பாடையில் ஏத்தி வைத்திருக்கிறதை, இந்த வருஷ கடைசி "டார்கெட்" ஆக "4 கிலோ கஞ்சா அசைன்மென்ட்" கொடுத்துள்ளார் சுத்துமாத்து. சென்ற கிழமை சுமந்திரனின் "அல்லக்கை" ஒன்று... கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு இருந்த நிலையில்.. அது, ஆளும் கட்சி ஊத்திக் கொடுத்த சாராயத்தில் "நிறை வெறியில்" குப்புற கவுண்டு, ஆளும் கட்சிக்கு வாக்களித்த கேவலத்த்தால், தமிழரசு கட்சி தனது தவிசாளர் பதவியை ஆளும் கட்சியிடம் இழந்து இருந்தமை குறிப்பிடத் தக்கது. இப்போ.... கஞ்சா கேசில், சுமந்திரனின் இன்னுமொரு தமிழரசு கட்சி அல்லக்கை உறுப்பினர் கைது. சுமந்திரன்... தொட்டதெல்லாம், சர்வகுலநாசம். சிங்களத்துக்கு செம்பு அடிக்கத்தத்தான் சுமந்திரன் லாயக்கு. வக்கீல் தொழிலும் தெரியாது, அரசியலும் தெரியாது.... என்ன இழவுக்கு கோட்டு, சூட்டுடன்... தான் ஒரு ஆள் என்று திரியுது தெரியவில்லை. இதற்குள் மாகாண சபை முதல்வர் கனவு வேறை.
  4. கனடாவின் கடற்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஈரான்! ஒட்டாவாவின் தீவிரவாதக் குழுக்களின் பட்டியலில் ஈரானிய இராணுவக் கிளையைச் சேர்க்கும் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, கனடாவின் கடற்படையை ஒரு பயங்கரவாத அமைப்பாக தெஹ்ரான் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சு, கனடாவின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று குற்றாம் சாட்டியுள்ளது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்த பின்னர் நிறைவேற்றப்பட்ட 2019 ஈரானிய சட்டம், வொஷிங்டனின் வழியைப் பின்பற்றும் நாடுகளுக்கு எதிராக பரஸ்பர நடவடிக்கை எடுக்க அங்கீகாரம் அளிக்கிறது என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஒட்டாவாவின் ரோயல் கனடிய கடற்படையை இந்தச் சட்டத்தின் எல்லைக்குள் வருவதாகக் தெஹ்ரான் கருதுவதாகவும், இதன் விளைவாக, அதை ஒரு பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்துவதாகவும் அறிக்கை கூறுகிறது. Athavan Newsகனடாவின் கடற்படையை பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்ட ஈரான்!ஒட்டாவாவின் தீவிரவாதக் குழுக்களின் பட்டியலில் ஈரானிய இராணுவக் கிளையைச் சேர்க்கும் முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக, கனடாவின் கடற்படையை ஒரு பயங்கரவாத அமைப்பாக தெஹ்ரான் அறிவித்துள்ளது. இது தொடர்பில் அறி
  5. நான் நேற்று.... ரணில், கேகலிய ரம்புக்வெல மாதிரி, கைது செய்யப் பட்டவுடன் டக்ளஸ்ஏன், மருத்துவ மனைக்கு செல்லவில்லை என நினைத்து சந்தோசப் பட்டேன். அந்தத் சந்தோசம் ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. வைத்தியசாலையில் ஜாலியாக போய்... டக்கி, படுத்து விட்டது. பார்க்கப் போனால்.... பிள்ளையான் மட்டும்தான், உடல் ஆரோக்கியமான மனிதன் போலுள்ளது. மறியலுக்குப் போன நாளில் இருந்து, மாதக் கணக்கில் வைத்திய சாலைப் பக்கமே போகாமல், கம்பிக்குப் பின்னால் இருந்து களி தின்று கொண்டு இருக்கின்றார். இல்லாவிடில்... பிள்ளையானுக்கு, வைத்தியசாலையில் போய் படுத்திருந்தால் விசேட கவனிப்பு இருக்கும் என்று ஒருவரும் சொல்லிக் கொடுக்கவில்லையோ. என்ன இருந்தாலும்... பிள்ளையானுக்கு, கெட்டித்தனம் காணாது. 😂
  6. இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு! யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னரே தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரையில் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார். எனவே பொலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் 15 தோட்டாக்களுடன் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதத்தை பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படும் என ராமநாதன் அர்ச்சுனா மேலும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த ராமநாதன் அர்ச்சுனா, யாழ் மாவட்ட அபிவிருந்த்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அது தொடர்பாக நான் பொலிஸாரிடம் தெரிவித்தேன். ஆனால் பொலிசார் அதனை முறையாக விசாரணை செய்யவில்லை. கொலை மிரட்டல் விடுத்தவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எப்போது விசாரணைக்கு வரமுடியும் என கேட்டிருந்தனர். அவர்கள் கிறிஸ்மஸ் உள்ளதாகல் தற்போது வரமுடியாது என கூறியிருந்தனர். எவவே அவர்களை 19ஆம் திகதி வருமாறு பொலிசார் கூறியிருந்தனர். கொலை மிட்டல் விடுக்கப்பட்டுள்ள எனக்கு நீதி கிடைக்கவில்லை. மாறாக நான் யாரையாவது தவறுதலாக அழைத்து பேசியிருந்தால். பொலிசார் உடனடியாக என்னை கைது செய்திருப்பார்கள். வீதியிலுள்ள மஞ்சள் கோட்டில் என் வாகனத்தை நிறுத்தியதற்காக நான் கைது செய்யப்பட்டேன். தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்கு இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்படடிருந்தால் பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பாகர்கள். கஞ்சாவை பறிமுதல் செய்யச் சென்ற அப்பாவி பொலிஸ் அதிகாரிக்கு இன்று என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் நான் பாதுகாப்பாக இல்லாவிட்டாலும் எனக்கு பதினைந்து தோட்டாக்கள் கொண்ட ஆயுதம் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் நாட்டைக் கட்டியெழுப்ப வந்துள்ளோம், மக்களைக் கொல்ல முடியாது. ஜனாதிபதி அனுரகுமார மக்களைக் கொல்லச் சொல்கிறாரா… யாராவது என்னிடம் வந்து என்னைக் கொல்லப்போகிறேன் என கூறினால் பொலிசாரிடம்தான் நான் முறையிடுவேன். நான் அனுரகுமாரவிடம் போன் செய்து சொன்னேன். சட்டம் அமல்படுத்தப்படவில்லை என.. அவர் ஆனந்த விஜேபாலனாயவிடம் கூறினார். ஆனாலும் சட்டம் அமல்படுத்தப்படவில்லை. இந்த நிலை தொடர்ந்தால் பின்னர், நான் சுட வேண்டியிருக்கும்… ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவரைக் காப்பாற்ற சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இப்போது மிகவும் முயற்சி செய்கிறார்… வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு உதவுகிறார்கள். அவர்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு உள்ளது, எனவே அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார். https://athavannews.com/2025/1457659
  7. யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது! யாழ்ப்பாணத்தில் 04 கிலோ கிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்கா அருகில் இன்றைய தினம் அதிகாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டார். வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய போதைப்பொருளை கையளிப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1457695
  8. காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம் ! வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தைஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியை சேர்ந்த 69 வயதுடைய வையாபுரி சந்திரன் எனும் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது மகனான ஜெயகாந்தன் கடந்த 2008ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார். இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1457707
  9. இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்! இலங்கையில் பிறந்த கல்வியாளரும், இங்கிலாந்தின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய தலைவரும் துணைவேந்தருமான பேராசிரியர் நிஷான் கனகராஜா (Nishan Canagarajah) 2026 ஆம் ஆண்டுக்கான கிங்ஸ் புத்தாண்டு விருதுகளில் நைட் பட்டம் பெற்றுள்ளார். உயர்கல்விக்கு, குறிப்பாக உள்ளடக்கத்தை ஆதரிப்பதில் பேராசிரியர் கனகராஜாவின் மதிப்பிட முடியாத பங்களிப்பை இந்த விருது அங்கீகரிக்கிறது. பேராசிரியர் கனகராஜா தனது புகழ்பெற்ற வாழ்க்கை முழுவதும், வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நியாயமான சமூகத்தை உருவாக்குவதற்கும் கல்வி ஒரு சக்தியாக இருப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டியுள்ளார். இங்கிலாந்தின் முதல் பன்மை நகரமான லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதல் சிறுபான்மை இன துணைவேந்தராக அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி கவனிக்கப்படாதவர்களுக்கும், பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளவர்களுக்கும் குரல் கொடுத்துள்ளார். மேலும், தடைகளைத் தாண்டி ஏனையவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கவும் பாடுபட்டுள்ளார். இலங்கையில் பிறந்து படித்த பேராசிரியர் கனகராஜா, இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்றார், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றார். அவரது கல்வி வாழ்க்கை மூன்று தசாப்தங்களாக நீடிக்கிறது, 2019 இல் லெய்செஸ்டரில் துணைவேந்தராக வருவதற்கு முன்பு பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் மூத்த பதவிகளையும் வகித்துள்ளார். https://athavannews.com/2025/1457746
  10. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவாநந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி! தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா உடல் நலகுறைபாடு காரணமாக தற்போது மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டார் கடந்த 2019 ஆம் ஆண்டு, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த ‘மாகந்துரே மதூஷிடம்’ மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது. இந்த துப்பாக்கி கடந்த 2001 ஆம் ஆண்டு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ராணுவத்தினரால் டக்ளஸ் தேவாநந்தாவிற்கு வழங்கப்பட்டிருந்தது குறித்த துப்பாக்கி, வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகிலுள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். மேலும் டக்ளஸ் தேவானந்தாவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவும் பெறப்பட்டிருந்தது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பெறப்படதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட 1500 க்கும் மேற்பட்ட ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட 9 மில்லிமீட்டர் தோட்டாக்கள் தொடர்பாக தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை டக்ளஸ் தேவானந்தா கடந்த 28 ஆம் திகதி கம்பஹா மேலதிக நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் 2026 ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் எனினும் அவர் தற்போது உடல்நல குறைபாடு காரணமாக மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1457743
  11. ஒட்டுக்குழு தலைவன் டக்ளஸ் தேவானந்தா வெளியில் நின்றால், பொதுமக்களின் உயிருக்குத்தான் ஆபத்து. ஆன படியால்... அவனை மறியலில் வைத்திருப்பதே, நாட்டிற்கு நன்மை.
  12. யாழ் மாவட்டம் முழுவதும் சுமார் 3000 குடும்பங்கள் மலசல கூட வசதிகள் இன்றி சிரமம்! யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3,012 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்றுமுன் தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கலந்துரையாடலின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரன் மூர்த்தி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன், சாந்தை கிராமத்தில் பல குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி மலசலக்கூடங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த துறைசார் அதிகாரிகள், யாழ். மாவட்ட புள்ளிவிபரங்களின்படி மாவட்டம் முழுவதும் சுமார் 3,012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டனர். https://athavannews.com/2025/1457523
  13. யாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது – யாழ் அரசாங்க அதிபர் பிரதீபன் பெருமிதம்! இந்த ஆண்டு யாழ் மாவட்டத்திற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களால் கிடைக்கப் பெற்ற சுமார் 7869.8 மில்லியன் ரூபாய்களில் சுமார் 6735.8 மில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். நேற்று முன்தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது தலைமை உரையை ஆற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இவ் வருடம் நிறைவடைய உள்ள நிலையில் யாழ் மாவட்ட செயலகத்துக்கு பொது நிர்வாக உள்நாட்டல்கள அமைத்து மற்றும் ஏனைய அமைச்சுகள் மூலம் கிடைக்கப்பெற்ற நிதிகள் 15 பிரதேச செயலக நீதியாக உரிய முறையில் செலவு செய்யப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்நாட்ட அலுவலர்கள் அமையத்தினால் யாழ் மாவட்ட செயலகத்துக்கு ஒதுக்கப்பட்ட 2700.9 மில்லியனில் 2625.2 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய அமைச்சுகள் மூலம் 5368.8 மில்லியன் ரூபா கிடைக்கப்பட்டுள்ள நிலையில் 4210.5 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. தீவக வீதிகள் வேலைத் திட்டம் நாட்டிலே ஏற்பட்ட இடர் நிலை காரணமாக உரிய காலப் பகுதியில் நிறைவு செய்யப்படாத நிலையில் அதற்கான நிதியை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் சந்திரசேகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். ஆகவே இவ் வருடம் நிறைவடைய இம்மாதம் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் இருக்கின்ற நிலையில் தற்போது இடம் பெற்று வரும் வேலைகளுக்கான கொடுப்பனவுகள் இம்மாத இறுதி வரை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். Athavan Newsயாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது...இந்த ஆண்டு யாழ் மாவட்டத்திற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களால் கிடைக்கப் பெற்ற சுமார் 7869.8 மில்லியன் ரூபாய்களில் சுமார் 6735.8 மில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்
  14. சில வேளை அதுதான்…உண்மையாய் இருக்குமோ. 😂
  15. டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து விசாரணை ஆரம்பம்! கைத்துப்பாக்கி தொலைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து அந்த திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகவே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். மதூஷிடம் இருந்து கண்டெடுக்கப்பட்ட அந்தத் துப்பாக்கியின் இலக்கங்களைச் சோதித்தபோது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து தெளிவுபடுத்தத் தவறியமையினாலேயே அவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவில் விசாரிக்கப்படும் நிலையில், இன்று (28) கம்பஹா நீதவானிடம் ஆஜர்படுத்தப்படுப்படவுள்ளார். https://athavannews.com/2025/1457509
  16. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை: யார் பொறுப்பு? நிலாந்தன். எனது நண்பரான உளவளத் துணை ஆலோசகர் ஒருவர் அடிக்கடி ஒரு மேற்கோளை சுட்டிக்காட்டுவார்…”எதிர்த் தரப்பு உங்களை கோபப்படுத்தி விட்டதென்றால் அது அதன் முதலாவது வெற்றியைப் பெற்றுவிட்டது என்று பொருள்” ஒருவர் உங்களை கோபப்படுகிறார் என்றால், உங்களைக் கோபப்படுத்துவது தான் அவருடைய நோக்கம் என்றால், நீங்கள் கோபப்படாமல் இருப்பதுதான் அவரைத் தோல்வி அடையச் செய்யும். நீங்கள் கோபப்பட்டீர்கள் என்றால், கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டீர்கள் என்றால், எதிரி நினைப்பதை நீங்கள் செய்கிறீர்கள் என்று பொருள். இது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கும் பொருந்தும். ஓர் அரசியல் செயற்பாட்டாளர் முகநூலில் எழுதுகின்றார்..மருத்துவர் அர்ஜுனா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் கருவி என்று. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் அபிவிருத்தி தொடர்பான சீரியஸான உரையாடல்களை திசை திருப்பி, தனிநபர் தாக்குதல்கள், குழப்பங்கள்,மோதல்கள் போன்றவற்றின் மூலம் முடிவுகளை எடுக்க விடாமல் தடுப்பதுதான் அர்ஜுனாவுக்கு வழங்கப்பட்ட வேலை என்றும். அந்த வேலையை அவர் திறம்படச் செய்கிறார் என்றும்…. இது ஒரு சதிக் கோட்பாடு.இக்கட்டுரை எப்பொழுதும் சதி,சூழ்ச்சிக் கோட்பாடுகளை எடுத்த எடுப்பில் நம்புவதில்லை. மருத்துவர் அர்ஜுனா யாருடைய கருவி என்பதை விடவும் முக்கியமானது, ஆழமானது எதுவென்றால், அவர் உங்களைக் கோபப்படுத்தும்போது நீங்கள் எப்படிப் பொறுமையாக இருக்கிறீர்கள் என்பதுதான். நீங்கள் கோபப்பட்டு அவரைப்போலவே தகாத வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்களா இல்லையா என்பதுதான்.நீங்கள் கோபப்படுவதன்மூலம் அவரை வெற்றி அடைய வைக்கிறீர்களா இல்லையா என்பதுதான். இது அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல,அரசு நிர்வாகிகளுக்கு குறிப்பாக அர்ஜுனா அடிக்கடி நோண்டும் மருத்துவத்துறை சார்ந்தவர்களுக்கும் பொருந்தும்.அவர் உங்களிடமிருந்து கோபமான பதிலை,எதிர்வினையை எதிர்பார்க்கிறார் என்றால் நீங்கள் கோபப்படாமல் இருப்பதுதான் உங்களுடைய முதிர்ச்சி;பக்குவம். ஏன் அதுதான் உரிய உபாயமும் கூட. ஆனால் கடந்த ஓராண்டு காலத்துக்கு மேலாக நடைபெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களைப் பார்த்தால் யாரும் நிதானமாக இருப்பதாகத் தெரியவில்லை. சில சமயங்களில் ஆளுநரும் அரச அதிபரும் சாட்சிகளாக இருக்கிறார்கள்.அவர்கள் வாயைத் திறக்க விரும்பவில்லை. அவர்கள் அரச ஊழியர்கள். அரசியல்வாதிகளின் சண்டைகளுக்குள் வாயை கொடுத்து பதவியை கெடுத்துக் கொள்ள அவர்கள் தயாரில்லை. ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஆளுநரும் அரச அதிபரும் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு, சில சமயங்களில் சிரிப்பையும் அடக்கிக் கொண்டு, சென் பௌத்த ஞானிகள் போல சாட்சிகளாக இருக்கிறார்கள். அப்படி நமது அரசியல்வாதிகளும் இருந்தால் என்ன?அரசாங்கம் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை குழப்புவதற்காகத்தான் இப்படிப்பட்ட வேலைகளை பின்னிருந்து ஊக்கிவிக்கின்றது என்று கூறுவோமாக இருந்தால், அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் தொடர்பாக தமிழ் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு முடிவுக்கு வரலாம்.அதை மக்களுக்கு வெளிப்படுத்தலாம்.அதை அரசாங்கத்துக்கு ஒரு முறைப்பாடாகத் தெரியப்படுத்தலாம். இங்கு பிரச்சினையாக இருப்பது அர்ச்சுனா மட்டுமல்ல.அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும்தான்.”இப்படிப்பட்ட குழப்பங்கள், கோளாறுகள் சிங்களப் பகுதிகளில் இல்லை.குறிப்பாக யாழ்ப்பாணத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில்தான் இவை காணப்படுகின்றன…” என்று கூறிய ஓய்வு பெற்ற மூத்த நிர்வாகி ஒருவர்,அபிவிருத்திக் குழுக் கூட்டங்களுக்குள் யாருடைய கமராவை அனுமதிப்பது என்ற முடிவை எடுப்பதன்மூலம் இந்தக் குழப்பங்களை உடனடியாகத் தடுக்கலாம் என்று. ஆனால் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் மட்டுமல்ல,ஆளுநரும் அடிக்கடி அரச ஊழியர்களை,நிர்வாகிகளைக் குற்றம் சாட்டுகிறார்.சில சமயங்களில் எச்சரிக்கின்றார்.இதன் மூலம் “தமிழ் அரச நிர்வாகிகளில்தான் தவறு உண்டு, அரசாங்கத்தில் இல்லை”என்ற ஒரு தோற்றம் வெற்றிகரமாகக் கட்டி எழுப்பப்படுகிறது. ஆளுநர் யார்? அவர் அரசாங்கத்தின் பிரதிநிதி.அவர் தன்னுடைய அதிகாரங்களைப் பயன்படுத்தி தனக்குக் கீழே வேலை செய்யும் நிர்வாகிகளை மாற்றலாம் தண்டிக்கலாம்.ஆனால் அவர் அப்படிச் செய்வதை விடவும் அதிகமாக அரச நிர்வாகிகளைக் குறை கூறுகிறார் என்பதுதான் கடந்த பல மாத கால அவதானிப்பு ஆகும். இவ்வாறு தமிழ் அதிகாரிகளை தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளோடு மோத விடுவது;தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு இடையே மோதிக் கொள்வது; தங்களுடைய அபிவிருத்தியைத் தீர்மானிக்கும் கூட்டங்களை தமிழ் மக்கள் நகைச்சுவை காட்சிகளாகப் பார்ப்பது….போன்றவற்றின் மூலம் தமிழ் அரசியலின் சீரியஸைக் குறைத்து அதை ஒரு பகிடியாக்கி விடுவது என்பது ஒரு நிகழ்ச்சி நிரலாக இருக்க முடியும். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் குழப்பப்படுவதற்கு அல்லது கோமாளிக் கூத்துகளாக மாற்றப்படுவதற்கு பின்வரும் காரணங்கள் கூறப்படுகின்றன. முதலாவது காரணம் ஏற்கனவே இக்கட்டுரையில் கூறப்பட்டது போல அரசாங்கத்தின் சூதான ஒரு நிகழ்ச்சி நிரல். இரண்டாவது காரணம், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தலைவர்களின் ஆளுமை குறைவு. மூன்றாவது காரணம்,அர்ஜுனாவும் உட்பட சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நாகரீகத்தைப் பேணாமை. நான்காவது காரணம், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்குள் கமராக்கள் அனுமதிக்கப்படுவது.அல்லது அங்கே நடக்கும் விவாதங்களை சில ஊடகவியலாளர்கள் வணிக நோக்கு நிலையில் இருந்து கையாள்வது. இதில் முதலாவதாகக் கூறப்படுவது ஒரு சூழ்ச்சிக் கோட்பாடு.ஆனாலும் தமிழர்களைத் தமிழர்களோடும் மோத விடுவதன்மூலம் தமிழ்த் தேசிய அரசியலை மதிப்பிறக்கம் செய்ய விரும்புகின்றவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து சிலரை அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ கையாள முடியும் என்ற சந்தேகம் பலமாக உண்டு. அரசாங்கத்தின் சதி சூழ்ச்சிகள் என்பவற்றிற்கும் அப்பால்,அவ்வாறு அரசாங்கத்தால் கையாளப் படத்தக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் உண்டு என்பது தமிழ் அரசியல் வீழ்ச்சியைக் காட்டுவது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவையான முதிர்ச்சியோடும் பக்குவத்தோடும் இல்லை என்பதுதான் இங்கு முதலாவது காரணம்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் ஆளுமை எதுவென்பதல்ல இங்கு பிரச்சனை.தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆளுமை எதுவென்பதுதான் இங்கு முதல் பிரச்சினை. தமிழ்த் தேசிய அரசியல் அவ்வாறு சீரழிந்து போனதுக்கு எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொருத்தமான முடிவுகளை எடுக்கத் தவறியதன் விளைவாக தமிழ் மக்கள் தொடர்ந்து தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் மக்களை தோற்கடிப்பது வெளித் தரப்புகள் என்பதை விடவும், தமிழ்த் தரப்பே என்பதுதான் உண்மை. தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசிய இனம் என்று அழைத்துக் கொண்டாலும், நடைமுறையில் அவர்கள் ஒரு தேசமாக இருக்கிறார்களா என்ற பாரதூரமான கேள்வியை இங்கே எழுப்ப வேண்டும். ஒரு தேசத்துக்குரிய கூட்டுணர்வோ சகோதரத்துவமோ தமிழ் மக்கள் மத்தியில் உண்டா? ஒருவர் மற்றவரை துரோகியாக்குவது; ஒருவர் மற்றவருக்கு “பார்” பட்டம் சுட்டுவது;ஒருவர் மற்றவரை வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்களின் முகவர் என்று முத்திரை குத்துவது; ஒரு கட்சிக்குள்ளேயே இரு குழுக்கள் பிரிந்து நின்று ஒன்று மற்றதை அவதூறு செய்வது; யாராவது சமூகத்தில் மினுங்கிக் கொண்டு எழுந்தால், யாராவது சமூகத்துக்கு நல்லதைச் செய்ய முயற்சித்தால், அல்லது நல்லதை சொல்ல முயற்சித்தால்,அவரைச் சந்தேகிப்பது;அவரை அவதூறு செய்வது;வசை பாடுவது; சிறுமைப்படுத்துவது… இப்படியே தமிழ் மக்கள் ஒருவர் மற்றவரை நம்பாமல், ஒருவர் மற்றவரை சந்தேகித்து, ஒருவர் மற்றவரைத் துரோகியாக்கி, ஒருவர் மற்றவரை சிறுமைப்படுத்திச் சீரழிய,தமிழ் சமூகத்தில் யாருமே கதாநாயகர்களாக எழ முடியாமல் போய்விட்டது. தாங்கள் வாக்களித்த தலைவர்களையே ஒரு சமூகம் சந்தேகிக்கின்றது; அவதூறு செய்கிறது என்று சொன்னால்,அது அந்த சமூகத்தின் வீழ்ச்சியைக் காட்டுகிறது.தான் வாக்களித்த ஒரு தலைவரைப் பார்த்து ஒரு சமூகம் சிரிக்கிறது என்று சொன்னால் அந்தச் சமூகம் தன்னுணர்வை,கூருணர்வை இழந்து வருகிறது என்று பொருள்.இவ்வாறு தமிழர்கள் ஒருவர் மற்றவரைத் துரோகியாக்கிக் கொண்டிருக்க,யாருமே கதாநாயகர்களாக எழமுடியாத தோல்விகரமான ஒரு வெற்றிடத்தில்,தென்னிலங்கையிலிருந்து அனுர குமார திஸநாயக்க கதாநாயகராக இறக்கப்படுகிறார்.தமிழ்ப் பாடல்களின் பின்னணியில் அவர் நாயக நடை போடுகிறார். அனுரவைப் போல நாயக வலம் வரும் தமிழ்த் தலைவர் யாராவது உண்டா? ஏன் இல்லாமல் போனது? எல்லாத் தோல்விகளுக்கும் எதிரியைப் பழி செல்வதும்,சூழ்ச்சிக் கோட்பாடுகளை உற்பத்தி செய்வதும் ஒரு வழக்கமாகப் போய்விட்டது. நாங்கள் எங்கே பிழை விட்டோம்? நாங்கள் எங்கே தேசமாக இல்லாமல் போனோம்? என்பதனை தமிழ்த் தரப்பு தன்னைத்தானே சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும். இது தமிழ் மக்கள் தங்களை தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம். சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சிகளையும் திட்டிக் கொண்டிருப்பதனால் பிரச்சனை தீராது.உள்ளதில் பெரிய கட்சி கடந்த ஓராண்டு காலப் பகுதிக்குள் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் கரைத்துறைப் பற்று பிரதேச சபையில் ஏற்பட்ட தோல்வி காட்டுகிறது.ஒரு தேசமாகத் திரட்டப்படாத மக்கள் சிதறிக் கொண்டே போகிறார்கள்.சிரிப்புக்கிடமாகி விட்டார்கள். அடுத்த ஆண்டாவது தமிழ் மக்கள் தங்களைப் பார்த்து தாங்களே சிரிக்காத ஒரு ஆண்டாக மலராதா? https://athavannews.com/2025/1457504
  17. யாழ் உள்ளக விளையாட்டு அரங்கு நிதி கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றம்! யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டு அரங்கினை நிர்மாணிப்பதற்காக அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 169 மில்லியன் ரூபாய் நிதி செலவு செய்யப்படாமல் கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். நேற்று முன்தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் உள்ளக விளையாட்டு அரங்கு தொடர்பான கேள்வியின் போது பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, உள்ளக விளையாட்டு அரங்கு தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தில் இடம் பெற்றுவரும் நிலையில் நீதிமன்ற வழக்கு இடம்பெறுகின்ற காரணத்தினால் வழக்கு நிறைவடையாமல் கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் குறித்த நிதியை கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பில் கட்டுவதற்குரிய உத்தரவு கிடைக்குமாயின் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் அல்லாவிட்டால் மாற்றுக்காணி ஒன்றை தேர்வு செய்து உள்ள விளையாட்டு அரங்கினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2025/1457475
  18. சாத்தான், இலங்கையிலேயே…. போர் நடந்த காலத்திலும் சரி, அதற்குப் பின் வந்த காலங்களிலும்… அதிக ஜனாதிபதிகளின் கீழ் அமைச்சராக இருந்தவர் ஒட்டுக்குழு தலைவன் டக்ளஸ் என நினைக்கின்றேன். 1) சந்திரிக்கா. 2) மகிந்த. 3) மகிந்த. (இரண்டாம் முறை) 4) மைத்திரி. 5) கோத்தா. 6) ரணில். மேலே உள்ள தரவுகள் பிழை என்றால்…. சுட்டிக் காட்டவும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.