Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. வென்னப்புவ சட்டவிரோத மதுபான விவகாரம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை! புத்தளம், வென்னப்புவ பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் ஆறு பேர் உயிரிழந்து, எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துயர சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பொலிஸாரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் 2026 ஜனவரி 6 அன்று வென்னப்புவ பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்தது. பாதிக்கப்பட்டவர்கள் சட்டவிரோதமாக காய்ச்சிய மதுபானத்தை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக, சட்டவிரோத மதுபான வர்த்தகத்தில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஜனவரி 7 ஆம் திகதி மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, இரு சந்தேக நபர்களையும் ஜனவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், விசாரணையின் ஒரு முன்னேற்றமாக, சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான கிழக்கு பண்டிருப்புவ, கலவத்தையைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஜனவரி 7 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஜனவரி 8 ஆம் திகதி அவர் மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மேலும் விசாரணைக்காக இரண்டு நாள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டது. மேலும் சந்தேக நபர்களை அடையாளம் காணவும், இறப்புகளுக்கு வழிவகுத்த சட்டவிரோத மதுபானத்தின் சரியான கலவையைக் கண்டறியவும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2026/1459034
  2. டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை! கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று (09) கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே முன்னாள் அமைச்சரவை பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார். திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷுக்கு துப்பாக்கி வழங்கியமை தொடர்பான குற்றச்சாட்டுக்காக கடந்த டிசம்பர் 26 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் துறையால் (சிஐடி) டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார். பின்னர் அவர், கம்பஹா நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், 2026 ஜனவரி 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். டிசம்பர் 30 அன்று, டக்ளஸ் தேவானந்தாவின் உடல்நிலையை மதிப்பிட்ட பின்னர் மருத்துவர்களின் பரிந்துரைகளைப் பின்பற்றி மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1459098
  3. கந்தரோடை விகாரை பெயர்ப்பலகை அகற்றம். யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால் , கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் ” கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்” என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து , “கந்தரோடை விகாரை” என நாட்டப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் சந்தைக்கு அருகில் , தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் “கந்தரோடை விகாரை” என திசை காட்டும் பெயர் பலகை நடாத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் கந்தரோடை விகாரைகள் அமையப் பெற்றுள்ளதாக கூறப்படும் , புராதன இடத்தினை , ” தொல்லியல் ஆய்வு மையம்” என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என பிரதேச சபையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை அடுத்து வீதிகளில் “கந்தரோடை விகாரை ” என திசை காட்டும் பெயர் பலகைகளை அகற்றும் செயற்பாட்டை பிரதேச சபை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் சுன்னாகம் பகுதியில் நாட்டப்பட்டிருந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. அதேவேளை , குறித்த பகுதியில் காணப்படும் சந்தைக்கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதாகும். அதன் சிறப்புக்கள் தொடர்பில் மும்மொழிகளிலும் எழுதிய கல்வெட்டு அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1458977
  4. இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் அறிவிப்பு! பங்களாதேஷில் கடந்த டிசம்பர் 18ம் திகதி பங்களாதேஷ் மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் கூறியுள்ளது. பங்களாதேஷில் கடந்த டிசம்பர் 18ம் திகதி பங்களாதேஷ் மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அங்கு வன்முறை சம்பவங்கள் தீவிரம் அடைந்துள்ளன. அங்குள்ளவர்கள் ஹிந்துக்களை தேடிப்பிடித்து தாக்குவதுடன், அவர்களின் வீடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. கடந்த 35 நாட்களில் மட்டுமே 11 ஹிந்துக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லியில் ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும், ஹிந்துக்களுக்கு எதிரான சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரில் ஒப்பந்தமாகி இருந்த முஷ்தபிஜூர் ரகுமான், கோல்கட்டா அணியில் இருந்து விலக்கப்பட்டார். இதனால், அதிருப்தியடைந்த பங்களாதேஷ் , டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியாவுக்கு வர மாட்டோம் என்று முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இருநாடுகளிடையே பதற்றம் நிலவி வந்தது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக பங்களாதேஷ் அறிவித்துள்ளது. டில்லி, கோல்கட்டா, சென்னை,மும்பை, அகர்தலா மற்றும் கவுகாத்தியில் செயல்பட்டு வரும் பங்களாதேஷ் தூதரகங்கள் மூலம் வழங்கப்படும் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விசாக்களை தவிர்த்து, சுற்றுலா உள்ளிட்ட பிற வகை விசாக்கள் வழங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூதரக அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்,’ வணிக மற்றும் வேலைவாய்ப்பு நோக்கங்களைத் தவிர, இந்தியர்களுக்கு ஏனைய வகை விசாக்கள் வழங்குவதை நிறுத்திவிட்டோம் என கூறியுள்ளார். https://athavannews.com/2026/1458863
  5. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை சபாநாயகரிடம் சமர்ப்பிக்க தீர்மானம்! பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். அத்துடன் சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாடத்திட்டம் தொடபான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நுகேகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதேவேளை 6ஆம் வகுப்புக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பாட அலகை நீக்குவதற்கு, தேசிய கல்வி நிறுவகம் அனுமதி வழங்கியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தலைமையிலான குழுவை நியமிப்பதற்கு, தேசிய கல்வி நிறுவகத்தின் நிர்வாக சபை தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்கள் பிள்ளைகளின் மனதிற்கு பொருத்தமற்ற பல விடயங்களையும், பாட அலகுத் தொகுதிகளில் பல்வேறு பிழைகளைக் கொண்டு காணப்படுவது மற்றும் இது தொடர்பாக சரியான நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு, கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நிலையில் நேற்றையதினம் பிரேரணையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். https://athavannews.com/2026/1458927
  6. புகையிலை, சிகரெட் பயன்பாட்டினால் இலங்கையில் வருடாந்தம் 22,000 உயிரிழப்புகள்! புகையிலை மற்றும் சிகரெட் பாவனைக் காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 22 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்படும் அனைத்து இறப்புகளில் 83 சதவீதமானவை தொற்று அல்லாத நோய்களால் ஏற்படுகின்றது. இந்த இறப்புகளில் செல்வாக்கு செலுத்தும் நான்கு பிரதான காரணிகளில் புகையிலை பயன்பாடும் ஒன்றாகும் என்றும் ADIC சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் சுமார் 1.5 மில்லின் பெரியவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். அதேநேரம், உலகளவில் ஒவ்வொரு ஆறு வினாடிக்கும் புகையிலை பயன்பாடு காரணமாக ஒரு இறப்பு பதிவாவதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க குறிப்பிட்டார். https://athavannews.com/2026/1458815
  7. விஷ மதுபானத்தால் 7 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதான சந்தேகநபர் கைது! சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 7 பேர் உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 47 வயதுடையவர் எனவும், அவர் காலவத்தை, கிழக்கு பண்டிரிப்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுபானம் அருந்தி உடல்நலக்குறைவு ஏற்பட்ட மேலும் 08 பேர் தற்போது நீர்கொழும்பு மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 6ஆம் திகதி சட்டவிரோத மதுபானம் அருந்தி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இதன்போது ஏற்கனவே இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். குறித்த இரு பெண்களையும் நேற்று மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வென்னப்புவ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2026/1458823
  8. ரஷ்ய எண்ணெய்க் கொள்வனவு: இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது ட்ரம்பின் 500% வரி! ரஷ்யாவிலிருந்து எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி பொருட்களை வாங்கும் நாடுகள் மீதான வரிகளை குறைந்தது 500 சதவீதமாக உயர்த்த அச்சுறுத்தும் ஒரு சட்டமூலத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பச்சைக்கொடி காட்டியதாக கூறப்படுகிறது. இந்த சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டால், அமெரிக்காவின் தடைகளை மீறி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு வரிகளால் அழுத்தம் கொடுக்கப்படும். செனட் சபையில் ட்ரம்பின் நெருங்கிய காங்கிரஸ் நண்பர்களில் ஒருவரான அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் இந்த விடயத்தை உறுதிபடுத்தினார். ரஷ்யாவின் உக்ரேன் படையெடுப்புடன் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒப்பந்தத்துக்காக ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இதில் அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளின் தொகுப்பு மொஸ்கோவை பொருளாதார ரீதியாக முடக்கும் நோக்கம் கொண்டது. இந்த நிலையில் மேற்படி புதிய சட்டமூலம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்டம், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு சீனா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளின் மீது மிகப்பெரிய செல்வாக்கை வழங்கும். மேலும் உக்ரேனில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் போருக்கு நிதியளிக்கும் தள்ளுபடி செய்யப்பட்ட ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த அவர்களை ஊக்குவிக்கும் என்று தென் கரோலினா குடியரசுக் கட்சி தனது பதிவில் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1458914
  9. டேங்கர் கப்பலை கைப்பற்ற அமெரிக்காவுடன் இணைந்து இங்கிலாந்தும் உதவியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிப்பு! சர்வதேசத் தடைகளை மீறிச் செயல்பட்ட (Marinera) மரைனேரா மற்றும் (M/T Sophia) எம்/டி சோபியா ஆகிய இரண்டு எண்ணெய் கப்பல்களை அமெரிக்கக் கடலோரக் காவல்படை வெற்றிகரமாகக் கைப்பற்றியது. இந்தப் பாரிய நடவடிக்கையில், பிரித்தானியப் படைகள் கண்காணிப்பு மற்றும் ஆதரவுப் பணிகளை மேற்கொண்டு அமெரிக்காவிற்குத் துணையாக நின்றன. பிடிபட்ட குறித்த கப்பல்கள் ரஷ்யா, ஈரான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தியதாகவும், பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளன. கப்பல்களைக் கைப்பற்றுவதற்கு முன்பாக அவை தங்கள் அடையாளங்களை மாற்றிக்கொண்டு தப்பிக்க முயன்ற போதிலும், வட அட்லாண்டிக் பகுதியில் வைத்து அவை மறிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் நிழல் கப்பற்படைக்கு (Shadow Fleet) எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதற்கு ரஷ்யா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. அமெரிக்க மற்றும் பிரித்தானியத் தலைவர்கள் இந்த வெற்றியைக் கடல்சார் பாதுகாப்பிற்கான ஒரு கூட்டு முயற்சியாகக் கொண்டாடுகின்றனர். https://athavannews.com/2026/1458958
  10. ஓரின சேர்க்கையை பற்றி இருந்ததாக தகவல். அதை பார்த்து.. பிக்குகள், பாதிரியார்மார் எல்லோரும் பொங்கி எழுந்து விட்டார்களாம். தங்களை குறிப்பிடுவதாக கருதி விட்டார்களோ.... 😂 🤣
  11. அட்லாண்டிக் கடலில் பெரும் பதற்றம்: ரஷ்யா – அமெரிக்கா கடும் போட்டி. அமெரிக்கப் படைகளால் தீவிரமாகத் துரத்தப்படும் ‘மரினேரா’ எனப்படும் எண்ணெய் கப்பலுக்குப் பாதுகாப்பாக ரஷ்யா தனது நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பிற கடற்படை கப்பல்களை அனுப்பியுள்ளதாக அதிர்ச்சித் தகவலை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. ஆரம்பத்தில் ‘Bella 1’ என்று அழைக்கப்பட்ட இக்கப்பல், வெனிசுலா மீது அமெரிக்கா விதித்துள்ள தடையை மீறி எண்ணெய் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. கடந்த மாதம் கரீபியன் கடலில் அமெரிக்க கடலோரக் காவல்படை இதனை மறிக்க முயன்றபோது, கப்பல் பணியாளர்கள் அதில் ஏற அனுமதி மறுத்து அட்லாண்டிக் கடலை நோக்கித் தப்பினர். தப்பியோடும் வழியில் கப்பல் பணியாளர்கள் அதன் மேல்பகுதியில் ரஷ்யக் கொடியைப் பெயிண்ட் செய்ததுடன், கப்பலின் பெயரை ‘மரினேரா’ என மாற்றினர். தற்போது இது உத்தியோகபூர்வமாக ரஷ்யாவின் சோச்சி துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கப்பல் தற்போது ஸ்கொட்லாந்து மற்றும் ஐஸ்லாந்துக்கு இடையிலான வடக்கு அட்லாண்டிக் பகுதியில் கடும் குளிரிலும் மோசமான வானிலையிலும் பயணித்து வருகிறது. வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடந்த சனிக்கிழமை அமெரிக்க விசேட படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகம் தனது கடல்சார் முற்றுகையைத் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்கா இக்கப்பலை மூழ்கடிப்பதை விட, அதைக் கைப்பற்றவே விரும்புகிறது. இதற்காக பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு சுமார் 10 போக்குவரத்து விமானங்கள் மற்றும் சிறப்பு உலங்கு வானூர்திகள் வந்து சேர்ந்துள்ளன. கப்பலின் பெயர் மாறினாலும், அதன் தனித்துவமான அடையாள எண் மாறாததால், சர்வதேச சட்டப்படி அதைக் கைப்பற்ற தமக்கு அதிகாரம் இருப்பதாக அமெரிக்கா வாதிடுகிறது. சர்வதேச கடற்பரப்பில் ரஷ்யக் கொடியுடன் பயணிக்கும் கப்பலுக்கு அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் தேவையற்ற நெருக்கடியைக் கொடுப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு சாடியுள்ளது “கடல் வழிப் பயணச் சுதந்திரம்” பற்றிப் பேசும் நாடுகள், அதனைத் தாமும் கடைப்பிடிக்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரம், யுக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்து வரும் ராஜதந்திர முயற்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஒருபுறம் சமாதானப் பேச்சுக்கள் நடக்கையில், மறுபுறம் நடுக்கடலில் இரு நாட்டுப் படைகளும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளது. https://athavannews.com/2026/1458682
  12. தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு.
  13. நான்கு ஆண்டு சேவைக்கு பின்னர் இலங்கையை விட்டு வெளியற தயாராகும் அமெரிக்க தூதர் ஜூலி சுங்! அமெரிக்காவின் உயர்மட்ட இராஜதந்திரியாக சுமார் நான்கு ஆண்டுகள் பணியாற்றியதை முடித்துக்கொண்டு, எதிர்வரும் ஜனவரி 16 ஆம் திகதி தூதர் ஜூலி சுங் (Julie Chung ) இலங்கையை விட்டு வெளியேறுவார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. தூதர் ஜூலி சுங் 2022 பெப்ரவரியில் கொழும்பில் தனது பதவிக் காலத்தைத் தொடங்கினார். 2023 இல் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவு, 2024 இல் அமெரிக்க அமைதிப் படை தன்னார்வலர்களின் மீள் வருகை மற்றும் ஃபுல்பிரைட் திட்டத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவு உள்ளிட்ட பல மைல்கற்களால் இலங்கையில் ஜூலி சுங்கின் பதவிக்காலம் குறிக்கப்பட்டதாக அமெரிக்க தூதரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2022 ஒக்டோபரில் அதன் புதிய LEED தங்கம் சான்றளிக்கப்பட்ட வசதிக்கு தூதரகம் நகர்வதையும் அவர் மேற்பார்வையிட்டார். இது இலங்கையில் நிலையான, பாதுகாப்பான மற்றும் நீடித்த இருப்புக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது மற்றும் இந்தோ-பசிபிக் எதிர்காலத்திற்கான நவீன கூட்டாண்மையை உருவாக்குவதில் அமெரிக்காவின் கவனத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தூதர் சுங்கின் தலைமையின் கீழ், அமெரிக்க தூதரகம் இலங்கையின் பொருளாதார மீட்சியை ஆதரிப்பதற்கான குறிப்பிடத்தக்க முயற்சிகளை முன்னெடுத்ததாக தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான அமெரிக்காவின் ஆதரவு மற்றும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பல அமெரிக்க விவசாயத் துறை தொகுப்புகள் மற்றும் மிக அண்மையில் 2025 டிசம்பரில் தித்வா சூறாவளிக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க உதவி, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு சரியான நேரத்தில் மனிதாபிமான ஆதரவை வழங்கியது ஆகியவை இதில் அடங்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1458648
  14. தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு. சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அனுமதி நேற்று (06) வழங்கப்பட்டதாகக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். https://athavannews.com/2026/1458645
  15. ஐரோப்பா முழுவதுமான பனிப்பொழிவில் ஆறு பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து! கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டமான வானிலை காரணமாக ஐரோப்பா முழுவதும் பரவலான பயணத் தடை ஏற்பட்டுள்ளது. கண்டத்தில் வானிலை தொடர்பான அசம்பாவித சம்பவங்களில் மொத்தம் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்சின் இரண்டு தனித்தனி பகுதிகளில் பனிமூட்டமான வானிலையால் இடம்பெற்ற வாகன விபத்தில் 05 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் போஸ்னியாவின் தலைநகர் சரஜெவோவில் 16 அங்குலம் (40 செ.மீ) பனிப்பொழிவு ஏற்பட்டதில் ஒரு பெண் உயிரிழந்தார். இதேவ‍ேளை, கடுமையான பனி மூட்டமன வானிலையால் ஐரோப்பா முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான பயணிகள் பாரிஸ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர். புதன்கிழமை (07) வரை இடையூறு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2026/1458633
  16. அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் உக்ரேனுக்கு படைகளை அனுப்ப இங்கிலாந்து, பிரான்ஸ் முடிவு! ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், உக்ரேனில் படைகளை நிலைநிறுத்துவதற்கான பிரகடனத்தில் பிரான்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) அறிவித்துள்ளார். பாரிஸில் உக்ரேனின் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், எதிர்கால படையெடுப்பைத் தடுக்க இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் “உக்ரேன் முழுவதும் இராணுவ மையங்களை நிறுவும்” என்றும் அவர் கூறினார். அதேநேரத்தில், பின்னர் உக்ரேனில் ஆயிரக்கணக்கான படையினர் நிறுத்தப்படலாம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார். உக்ரேனுக்கான வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை நேச நாடுகள் பெரும்பாலும் ஒப்புக்கொண்டன. மேலும் ஒரு போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பதில் அமெரிக்கா முன்னணியில் இருக்கும் என்று முன்மொழிந்தன. ஆனால் பிரதேசத்தின் முக்கிய பிரச்சினை இன்னும் விவாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் தலைநகரில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புகள் குறித்து மொஸ்கோ இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்ன் 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கினார். மேலும் மாஸ்கோ தற்போது உக்ரேன் பிரதேசத்தில் சுமார் 20% கட்டுப்பாட்டில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1458630
  17. அமெரிக்காவுக்கு 2 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெயை ஏற்றுமதி செய்யவுள்ள வெனிசுலா! கராகஸ் மற்றும் வொஷிங்டன் இடையே 2 பில்லியன் டொலர் மதிப்புள்ள வெனிசுலா மசகு எண்ணெய் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (06) தெரிவித்தார். இது சீனாவிலிருந்து விநியோகங்களைத் திசைதிருப்பும் அதே வேளையில் வெனிசுலாவுக்கு எண்ணெய் உற்பத்தியில் ஆழமான குறைப்புகளைத் தவிர்க்க உதவும் ஒரு முக்கிய பேச்சுவார்த்தையாகும். அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்குத் சந்தையை திறந்துவிடவும் இல்லையெனில் இராணுவத் தலையீட்டை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும் என்றும் ட்ரம்பின் கோரிக்கைக்கு வெனிசுலா அரசாங்கம் பதிலளிக்க ஆரம்பித்துள்ளது என்பதற்கான வலுவான அறிகுறியாக இந்த ஒப்பந்தம் உள்ளது. வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு “முழுமையான அணுகலை” வழங்க இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் விரும்புவதாக ட்ரம்ப் கூறியுள்ளார். கடந்த டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து ட்ரம்ப் விதித்த ஏற்றுமதி தடை காரணமாக வெனிசுலாவில் மில்லியன் கணக்கான பீப்பாய்கள் எண்ணெய் கப்பல்களிலும் சேமிப்பு தொட்டிகளிலும் நிரப்பப்பட்டுள்ளன. வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்தின் மீது அதிகரித்து வரும் அமெரிக்க அழுத்தத்தின் ஒரு பகுதியாக இந்த முற்றுகை இருந்தது. இது கடந்த வார இறுதியில் அமெரிக்கப் படைகள் அவரைக் கைப்பற்றுவதில் உச்சக்கட்டத்தை அடைந்தது. வெனிசுலாவின் உயர் அதிகாரிகள் மதுரோவின் கைதினை ஒரு கடத்தல் என்று கூறியுள்ளனர் – மேலும் அமெரிக்கா நாட்டின் பரந்த எண்ணெய் இருப்புக்களை திருட முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில் புதிய உடன்பாடு மூலமாக வெனிசுலா 30 முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் வரை அனுமதிக்கப்பட்ட மசகு எண்ணெயை அமெரிக்காவிற்கு ஒப்படைக்கும் என்று ட்ரம்ப் ஒரு சமூக ஊடகப் பதிவில் செவ்வாயன்று தெரிவித்தார். இது குறித்து மேலும் குறிப்பிட்ட ட்ரம்ப், இந்த எண்ணெய் அதன் சந்தை விலையில் விற்கப்படும், மேலும் அந்த பணம் அமெரிக்க ஜனாதிபதியாக என்னால் கட்டுப்படுத்தப்படும், இதனால் அது வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவது உறுதிபடுத்தப்படும் – என்று கூறினார். மேலும் எண்ணெய் கப்பல்களில் இருந்து எடுக்கப்பட்டு நேரடியாக அமெரிக்க துறைமுகங்களுக்கு அனுப்பப்படும் என்றும் ட்ரம்ப் கூறினார். இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் பொறுப்பேற்றுள்ளார். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் வெனிசுலா எண்ணெயின் அளவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அமெரிக்க மசகு எண்ணெய் விலை 1.5% க்கும் அதிகமாக சரிந்தது. இதேவ‍ேளை, 2020 இல் வெனிசுலாவுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை விதித்ததிலிருந்து கடந்த பத்தாண்டுகளில் வெனிசுலாவின் எண்ணெயை வாங்குபவர்களில் சீனா முன்னணியில் இருந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1458627
  18. சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு! வென்னப்புவ – மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானத்தை அருந்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத மதுபானம் அருந்தி இறந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களின் உடல்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும், ஆபத்தான நிலையில் இருந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக வென்னப்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பின்னர் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. மரணத்திற்கான சரியான காரணம் மற்றும் சந்தேகிக்கப்படும் சட்டவிரோத மதுபானத்தின் மூலத்தைக் கண்டறிய மாரவில பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். https://athavannews.com/2026/1458531
  19. வெனிசுலாவின் நிலைமை குறித்து இலங்கை அதிகாரப்பூர்வ அறிக்கை! வெனிசுலாவில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், பலாத்காரத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்தல், தலையிடாமை, சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வு காணுதல் மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு போன்ற சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியது. வெனிசுலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும் பதற்றத்தைக் குறைத்தல் மற்றும் உரையாடல் மூலம் அமைதியான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்து தரப்பினரையும் அழைக்கிறது. இந்த முக்கியமான கட்டத்தில், ஐக்கிய நாடுகள் சபையும் அதன் உறுப்புகளான ஐ.நா. பாதுகாப்பு பேரவையிலும் இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொண்டு, வெனிசுலா மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் இறையாண்மை உரிமைகளைக் கருத்தில் கொண்டு அமைதியான தீர்வை நோக்கிச் செயல்படுவது முக்கியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1458491
  20. நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்! நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார். நுண்நிதி கடன்களைப் பெற்ற சுமார் 200 பெண்கள் இப்போது தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி இவ்வாறு தெரிவித்தார். இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையின் பெயர் மற்றும் லோகோவை (இலட்சினை) தவறாகப் பயன்படுத்தி மில்லியன் கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போலியான மொபைல் செயலி மூலம் இந்த மோசடி நடந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் சிரேஷ்ட துணைத் தலைவர் நிரோஷன் விஜேசுந்தர தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. மேலும் இந்த மோசடி கடந்த ஆண்டு நவம்பர் முதல் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது வைப்பாளர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1458518
  21. திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் தீபம் ஏற்ற அனுமதி! தீபத் திருநாளின் போது தமிழகத்தின் திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் சடங்கு தீபம் ஏற்ற அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று (06) உறுதி செய்தது. நீதிபதிகளான ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, மதுரை மாவட்ட நிர்வாகம், அறநிலையத் துறை, சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உட்பட 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு 5 ஆவது நாளாக விசாரித்தது. வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதன்படி, தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் எனவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மேலும் நீதிபதிகள் உத்தரவில், அரசியல் காரணங்களை அடிப்படையாக கொண்டு அரசு செயல்படக் கூடாது. பொது அமைதிக்கு பிரச்சினை ஏற்படும் என்று அரசு காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல. மலையில் உள்ள தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் உள்ளது. தூணில் தீபம் ஏற்றும் போது பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது – என்று தெரிவித்தனர். https://athavannews.com/2026/1458522
  22. போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளி அல்ல – நிக்கோலஸ் மதுரோ தெரிவிப்பு! வெனிசுலா தலைநகர் கராகஸில் ஒரு இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் திங்களன்று (05) மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் முதன்முதலாக முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் தான் குற்றவாளி அல்ல என்று நிக்கோலஸ் மதுரோ கூறினார். அதேநேரம், மதுரோவின் மனைவி சிலியா புளோரஸும் குற்றமற்றவர் என்று வாதிட்டார். அரை மணி நேர விசாரணைக்கு முன்னதாக, மதுரோவுக்கு ஆதரவான மற்றும் எதிரான டஜன் கணக்கான போராட்டக்காரர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்தனர். அவர் கணுக்கால்களில் விலங்கிடப்பட்டு ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிற சிறைச்சாலை உடையுடன் நீதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, நான் நிரபராதி. நான் குற்றவாளி இல்லை. நான் ஒரு ஒழுக்கமான மனிதன். நான் இன்னும் என் நாட்டின் ஜனாதிபதிதான் என்று 63 வயதான மதுரோ ஒரு மொழிபெயர்ப்பாளரின் மூலம் நீதிபதி ஆல்வின் ஹெல்லர்ஸ்டீனிடம் வலியுறுத்தினார். விசாரணைகளின் பின்னர் வழக்கு மார்ச் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும்மன்ஹாட்டனில் உள்ள நீதிமன்றத்தில் உரையாற்றியபோது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வடக்கே சில மைல்கள் தொலைவில் ஒரு அவசரக் கூட்டத்தை நடத்தியது. அங்கு ஒரு டஜன் நாடுகள் அமெரிக்காவின் “ஆக்கிரமிப்பு குற்றத்தை” கண்டித்தன. மேலும் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டத்தை மீறுவதாகக் கூறினார். உலகெங்கிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்ட ஒரு நடவடிக்கையில் அமெரிக்க சிறப்புப் படைகளால் கைது செய்யப்பட்ட நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் பயங்கரவாதம், சதி, கொக்கெய்ன் இறக்குமதி சதி மற்றும் இயந்திர துப்பாக்கிகள் மற்றும் அழிவுகரமான சாதனங்களை வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். https://athavannews.com/2026/1458497

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.