Everything posted by தமிழ் சிறி
-
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
மம்தானி மனைவியின் இஸ்லாம் உடை பற்றி ஆராய இன்னும் ஒருத்தனும் கிளம்பலையா? Ashroff Shihabdeen
-
கருத்து படங்கள்
- தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு! தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை (07) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இது சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு-செலவுத் திட்டமாகும். நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்ட உரையை ஆற்றுவார். 2026 வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சனிக்கிழமை தொடங்கும். வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு மொத்தம் ஆறு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும். குழு நிலை விவாதம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 5 வரை 17 நாட்களுக்கு நடைபெறும். மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும். https://athavannews.com/2025/1452104- ட்ரம்பின் உலகளாவிய வரிகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்றம் சந்தேகம்!
ட்ரம்பின் உலகளாவிய வரிகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்றம் சந்தேகம்! உலகப் பொருளாதாரத்திற்கு தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு வழக்கில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரி விதிப்புகளின் சட்டபூர்வமான தன்மை குறித்து அமெரிக்க உயர் நீதிமன்ற நீதிபதிகள் புதன்கிழமை (05) சந்தேகங்களை எழுப்பினர். இது ஜனாதிபதி ட்ரம்பின் அதிகாரங்களுக்கான பெரிய சோதனையாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் உற்பத்தித் தளத்தை மீட்டெடுக்கவும் அதன் வர்த்தக ஏற்றத்தாழ்வை சரிசெய்யவும் அவசியம் என்று ஜனாதிபதி கூறிய இறக்குமதி வரிகளை வெள்ளை மாளிகை நியாயப்படுத்துவது குறித்து பல பழமைவாதிகள் உட்பட பெரும்பான்மையான நீதிபதிகள் சந்தேகங்களை இதன்போது வெளிப்படுத்தினர். ட்ர்பின் வரி விதிப்பானது பல சிறு வணிகங்களாலும், மாநிலங்களின் சில குழுக்களாலும் சவால் செய்யப்படுகின்றன. ஜனாதிபதி வரிகளை விதிப்பதில் தனது அதிகாரத்தை மீறிவிட்டதாக அவர்கள் வாதிடுகின்றனர். 6-3 பழமைவாத பெரும்பான்மையைக் கொண்ட அமெரிக்காவின் உயர் நீதிமன்றம், ஒரு வழக்கில் இறுதி முடிவுகளை எட்டுவதற்கு வழக்கமாக பல மாதங்கள் எடுக்கும். ஆனால், இந்த வழக்கில் அது வேகமாக நகரும் என்று பலர் எதிர்பார்க்கிறார்கள். இது ட்ரம்ப் நிர்வாகத்தின் ஜனாதிபதி அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கான உந்துதலின் முதல் பெரிய சோதனையாகவும் கருதப்படுகிறது. இந்த வழக்கு 1977 ஆம் ஆண்டு சட்டமான சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை (IEEPA) மையமாகக் கொண்டுள்ளது. இது அவசரநிலைக்கு பதிலளிக்கும் விதமாக வர்த்தகத்தை “ஒழுங்குபடுத்தும்” அதிகாரத்தை அமெரிக்க ஜனாதிபதிக்கு வழங்குகிறது. ட்ரம்ப் முதன்முதலில் கடந்த பெப்ரவரியில் சீனா, மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து வரும் பொருட்களுக்கு வரி விதிக்க IEEPA ஐப் பயன்படுத்தினார். ஏப்ரல் மாதத்தில் அவர் அதை மீண்டும் பயன்படுத்தி, உலகின் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வரும் பொருட்களுக்கு 10% முதல் 50% வரை வரிகளை விதிக்க உத்தரவிட்டார். அந்த வரிகள் இந்த கோடையில் நிலைபெற்று, அமெரிக்கா நாடுகளை ஒப்பந்தங்களை செய்யத் தள்ளியது. இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் மீதான வரிகள் – அடுத்த தசாப்தத்தில் அமெரிக்காவிற்கு டிரில்லியன் கணக்கான டொலர்கள் வருவாயைச் சேர்க்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1452111- இரசித்த.... புகைப்படங்கள்.
ஐந்து அடுக்கு பாதுகாப்பு. 😂- சிரிக்கலாம் வாங்க
டாக்டர்... நேற்று எனக்கு பாம்பு கடிச்சுப் போட்டுது. 😂- துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார்!
அம்பலாங்கொட துப்பாக்கிச்சூடு – வெளியான காரணம்! நேற்றைய தினம் அம்பலாங்கொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர். வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவை பழிவாங்கும் நோக்கில், அவரது மைத்துனர், அம்பலங்கொடை, மோதர தேவாலயக் குழுவின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கடந்த மே மாதம் மீட்டியாகொடையில் கரந்தெனிய சுத்தாவின் தரப்பால் சுட்டுக் கொல்லப்பட்ட நபரின் மகனால் இந்த கொலை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் எனத் தற்போது தகவல் வெளியாகி உள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அம்பலங்கொடை நகர சபைக்குச் சொந்தமான பிரதான நூலகத்திற்கு அருகில் நேற்று (04) காலை 10.30 மணியளவில் மோதர தேவாலய குழுவின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கிடையில், கடந்த மே மாதம் 4ஆம் திகதி மீட்டியாகொடை, மானம்பிய, தம்பஹிட்டிய பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான பழிவாங்கலாகவே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்தக் கொலையை கரந்தெனிய சுத்தாவின் தரப்பு இயக்கியிருந்த நிலையில், அதற்குப் பழிவாங்கும் நோக்கில் அவரது மைத்துனர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர். மீட்டியாகொடையில் கொல்லப்பட்டவரின் மகனான இசுரு என்பவர், கரந்தெனிய சுத்தாவின் மைத்துனனின் வெளிநாட்டில் உள்ள மகனுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதுடன் அவர், “உங்கள் அப்பாவை கொன்றது நான் தான். அவர் என் அப்பாவைக் கொன்றதால்” நான் அவரை கொன்றேன் என கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த இசுரு என்பவர் தற்போது பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கு தென் மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் ஆலோனையின் பேரில், எல்பிட்டிய பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்கி ரந்தெனியவின் மேற்பார்வையின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. https://athavannews.com/2025/1452085- பொது வெளியில் மீண்டும் விஜய்; மீனவர், விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்!
பொது வெளியில் மீண்டும் விஜய்; மீனவர், விவசாயிகளின் பிரச்சினை தொடர்பில் முக்கிய தீர்மானங்கள்! கரூர் கூட்ட நெரிசல் துயரத்தைத் தொடர்ந்து 38 நாட்கள் மௌனத்திற்குப் பின்னர், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் விஜய் இன்று (05) கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முதல் முறையாகப் பொதுவில் தோன்றினார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு முதல் விவசாயிகளின் இழப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் விடயங்கள் வரை 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன்போது, கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை கட்சி கடுமையாகக் கண்டித்தது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியது. திமுக அரசு “சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தவறிவிட்டது” என்றும், “பெண்களின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது” என்றும் குற்றம் சாட்டிய TVK, முதலமைச்சர் “தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வாரா” என்றும் கேள்வி எழுப்பியது. மற்றொரு தீர்மானத்தில், இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது குறித்து பாஜக தலைமையிலான மத்திய அரசை விமர்சித்த TVK, அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வலுவான தலையீட்டைக் கோரியது. கனமழைக்கு மத்தியில் டெல்டா பகுதியில் நெல் கொள்முதல் செய்யும் போது விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு TVK திமுக அரசை கடுமையாக சாடியது. அரசாங்கத்தின் “செயலற்ற தன்மை 20 லட்சம் தொன் இழப்புக்கு வழிவகுத்தது” என்று கட்சி குற்றம் சாட்டியதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கோரியது. வடகிழக்கு பருவமழை சென்னையில் ஏற்படுத்திய தாக்கத்தை எடுத்துக்காட்டிய மற்றொரு தீர்மானம், முழுமையடையாத மழைநீர் வடிகால்களை அம்பலப்படுத்தியுள்ளது என்று கூறியது. வெள்ளத்தைத் தடுக்க ரூ.4,000 கோடி திட்டத்தை போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்துமாறும் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியது. Athavan Newsபொது வெளியில் மீண்டும் விஜய்; மீனவர், விவசாயிகளின் பிரச்...கரூர் கூட்ட நெரிசல் துயரத்தைத் தொடர்ந்து 38 நாட்கள் மௌனத்திற்குப் பின்னர், தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் விஜய் இன்று (05) கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் முதல் முறையாகப் பொதுவில் தோன்றினார். க- கருத்து படங்கள்
- வெவ்வேறு வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு!
வெவ்வேறு வீதி விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு! வெல்லம்பிட்டி, கட்டுவன, வெரலபத்த மற்றும் தங்காலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று (04) நடந்த தனித்தனி வீதி விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். வெல்லம்பிட்டி:தொட்டலங்கை-அம்பத்லை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியின் பின் புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிட்டம்பஹுவவைச் சேர்ந்த 22 வயதான மோட்டார் சைக்கிளின் சாரதியே உயிரிழந்தவர் ஆவார். கட்டுவன: வலஸ்முல்ல-மிதெனியா வீதியில் பயணிகள் பேருந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 24 வயதான மோட்டார் சைக்கிளினின் சாரதியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார், பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். வெரலபத்த: கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் உள்ள “Y” சந்திக்கு அருகில் ஒரு கொள்கலன் லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோத்தியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலியந்தலையைச் சேர்ந்த 49 வயதான மோட்டாடர் சைக்கிளின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார். லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை: கொஸ்வத்த, சீனிமோதரவைச் சேர்ந்த 43 வயது பாதசாரி ஒருவர், மொரகெட்டியாரவில் கொழும்பு-வெல்லவாய வீதியை கடக்கும்போது, இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துடன் மோதி உயிரிழந்தார். பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் ஒவ்வொரு பிரிவிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1452030- சத்தீஸ்கரில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 11 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!
சத்தீஸ்கரில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 11 பேர் உயிரிழப்பு, பலர் காயம்! சத்தீஸ்கரில் உள்ள பிலாஸ்பூர் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில், பொருட்கள் சேவை ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை (04) மாலை 04.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கோர்பா மாவட்டத்தில் உள்ள கெவ்ராவிலிருந்து பிலாஸ்பூருக்குச் சென்ற MEMU (Mainline Electric Multiple Unit) பயணிகள் ரயில், நின்று கொண்டிருந்த பொருட்கள் சேவை ரயிலுடன் மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த உடனேயே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன, காயமடைந்தவர்கள் பிலாஸ்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை, சத்தீஸ்கர் மருத்துவ அறிவியல் நிறுவனம் (CIMS) ஆகியவற்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணைகளல் பயணிகள் ரயில், சிவப்பு சமிக்ஞையை மீறி, 60-70 கிமீ வேகத்தில் பொருட்கள் சேவை ரயிலில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாவும் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும், மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு 1 இலட்சம் ரூபாவும் இழப்பீடு வழங்கப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1452038- நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு!
நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு! அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பாக இந்திய – அமெரிக்கரான ஸோரான் மம்தானி, குடியரசுக் கட்சியின் சார்பாக கர்டிஸ் ஸ்லிவா, முன்னாள் ஆளுனர் ஆண்ட்ரூ குவோமோ ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி ஆரம்பமான வாக்குப்பதிவின் முடிவில் ஸோரான் மம்தானி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயோர்க் நகரின் வாழ்க்கைச் செலவு மற்றும் மலிவுத் திறன் போன்ற முக்கிய பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இவரது பிரச்சாரம் அமைந்திருந்தது. தனது முற்போக்கு கருத்துகளால் நியூயோர்க் இளைஞர்கள், இடதுசாரி கருத்துடையவர்கள் மத்தியில் ஸோரானுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி, 1969 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகளவிலான வாக்குகளாக 20 இலட்சம் வாக்குகள் பதியப்பட்டதாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் மட்டுமன்றி, மிக இளம் வயதுடைய மேயர்களில் ஒருவராகவும், தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார். இவரது பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் (தந்தை குஜராத்தைச் சேர்ந்த முஸ்லிம்; தாய் ஒடிசாவைச் சேர்ந்த இந்து). இதனிடையே, ஸோரான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வரும்நிலையில், மேயர் தேர்தலில் ஸோரான் வெற்றி பெற்றால், நியூயோர்க் நகரத்துக்கு குறைந்தபட்ச நிதியைத் தவிர அனைத்து நிதியையும் நிறுத்தி விடுவதாக ட்ரம்ப் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1452021- பிலிப்பைன்சை தாக்கும் அடுத்தடுத்த சூறாவளிகள்
பிலிப்பைன்ஸில் கல்மேகி சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரிப்பு! பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கியுள்ள கல்மேகி என்ற சூறாவளி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 66ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு இராணுவ வீரர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 வீடுகள் சேதம் அடைந்துள்ளதுடன் பல வாகனங்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் தொலைத்தொடர்பு சேவைகளும் செயலிழந்துள்ளன. சூறாவளி காரணமாக 180க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. வெள்ள மீட்புப் பணிக்காக சென்ற வானூர்தி ஒன்று மோசமான வானிலையால் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த வானூர்தியிர் சென்ற ஆறு இராணுவ வீரர்களும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தத்தில் சிக்கி 13 பேர் காணாமல் போயுள்ளதாக பேரிடர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி நாளை இரவு(06) வியட்நாமின் மத்தியப் பகுதிகளில் கரையைக் கடக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. கல்மேகி சூறாவளி மணிக்கு 120 கிமீற்றர் தொடக்கம் 165 கிமீற்றர் வேகத்திலும் வீசிய வருவதுடன் இந்த ஆண்டில் மட்டும் பிலிப்பைன்ஸைத் தாக்கும் 20வது புயலாக கல்மேகி உருவாகியுள்ளது. இதனையடுத்து வியட்நாம் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமான முன்னெடுத்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காதகா வானம் தெளிவாகும் வரை காத்திருப்பதாக சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் துணை நிர்வாகி ரஃபேலிட்டோ அலெஜான்ட்ரோ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1452026- இலங்கையில் 13,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொது வெளிகளில் மலம் கழிப்பதாக தகவல்!
- கருத்து படங்கள்
- உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு கஞ்சா சாகுபடி திட்டத்தை திறக்கும் அரசாங்கம்!
உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு கஞ்சா சாகுபடி திட்டத்தை திறக்கும் அரசாங்கம்! இதுவரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த நாட்டின் கஞ்சா சாகுபடி திட்டத்தில் பங்கேற்க உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்தார். திட்டத்தின் ஆரம்ப கட்டத்திற்கு முதலீட்டு வாரியத்தால் (BOI) கடுமையான நிபந்தனைகளின் கீழ் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். இந்த முதலீட்டாளர்கள் இந்த ஆண்டு இறுதியில் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு சாகுபடி நடவடிக்கைகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்திற்காக மொத்தம் ஏழு நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சில குழுக்களின் எதிர்ப்பு இருந்தபோதிலும், இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. அடுத்த கட்டத்தில் உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்கேற்புடன் இந்த முயற்சி மிகவும் வெற்றிகரமாக இருக்கும் என்று பிரதி அமைச்சர் விஜேமுனி கூறினார். மிரிகமாவில் உள்ள 65 ஏக்கர் BOI-க்குச் சொந்தமான நிலத்தில் சிறப்புப் பாதுகாப்பின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். Athavan Newsஉள்ளூர் முதலீட்டாளர்களுக்கு கஞ்சா சாகுபடி திட்டத்தை திறக்...இதுவரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த நாட்டின் கஞ்சா சாகுபடி திட்டத்தில் பங்கேற்க உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர்- இலங்கையில் 13,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொது வெளிகளில் மலம் கழிப்பதாக தகவல்!
இரசாயன உரத்தை விட... மனிதன் போடும், இயற்கை உரம்... 💩 மண்ணுக்கு நல்லது தானே. 😂 🤣- 2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!
2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்! இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம் ரூ. 587.11 பில்லியன் சுங்க வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டில் இறக்குமதிகள் மூலம் அரச வருவாய்க்கு மிகப்பெரிய பங்களிப்பாகும் என்று அதிகாரிகள் நாடாளுமன்றத்தின் வழிவகைகள் பற்றிய குழுவிடம் தெரிவித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க தலைமையிலான குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, ஒக்டோபர் 14 ஆம் திகதி வரை 55,447 மோட்டார் கார்கள், 7,331 சரக்கு போக்குவரத்து வாகனங்கள், 142,524 மோட்டார் சைக்கிள்கள், 15,035 முச்சக்கர வண்டிகள் மற்றும் 1,679 பயணிகள் பேருந்துகள் மற்றும் வேன்கள் சுங்கம் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மொத்த சுங்க வருவாயில் வாகன இறக்குமதியின் வருவாய் 37% ஆக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது துறை தனது வருடாந்திர வருவாய் இலக்கை திட்டமிட்டதை விட முன்னதாகவே தாண்டிச் செல்ல உதவியது. செப்டம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னரே, சுங்கத்துறை ரூ. 1,737 பில்லியன் வசூலித்துள்ளது. இது அதன் எதிர்பார்க்கப்பட்ட இலக்கான ரூ. 1,485 பில்லியனில் 117% ஐ எட்டியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடுவதற்கு டிஜிட்டல் கேள்வி மனுக்கோரல்கள் முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. இது சுங்க நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1451902- நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!
நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது! நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே, நிதி முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் சரித ரத்வத்தே ஒரு சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டில் நிலையான கொள்முதல் நடைமுறைகளை மீறி 50 தற்காலிக கிடங்குகளை வாங்கியது தொடர்பான விசாரணை தொடர்பாக இந்த கைது நடந்துள்ளது. இந்த தற்காலிக கிடங்கு இலங்கை அரசு வர்த்தக கூட்டுத்தாபனத்தின் மூலம் ரூ.90 மில்லியனுக்கும் அதிகமான செலவில் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1451955- துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார்!
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார்! அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திட்டமிடப்பட்டகுற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவின் மைத்துனரான 54 வயதுடைய வருசவிதான மிலாந்த என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது கார் ஒன்றில் பிரவேசித்த அடையாளந்தெரியாத சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப் யு வுட்லர் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த தாக்குதலில் காயமடைந்த நபர் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கரந்தெனிய சுத்தாவின் மைத்துனர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் அமைக்கப்படட்டு தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப் யு வுட்லர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1451945- இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்!
இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம்! தென் மாநிலத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளுடன் விடுவிப்பதற்காக இலங்கை அரசாங்கத்துடன் உடனடி இராஜதந்திர முயற்சிகளைத் தொடங்குமாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், திமுக தலைவர் ஸ்டாலின், இலங்கை கடற்படையினரால் அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த 35 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டதை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். நவம்பர் 3 ஆம் திகதி, இலங்கை கடற்படை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுகளையும் கைது செய்தது. அதே நாளில், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களது நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ச்சியான இந்த சம்பவங்கள் தமிழக மீனவ சமூகங்களிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில் அவர்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடலுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அச்சமும் குடும்பங்களின் முதன்மை வாழ்வாதாரத்தை இழப்பது மட்டுமல்லாமல், ஆழ்ந்த பயத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்துகிறது. தற்போது 114 மீனவர்களும் 247 படகுகளும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளன. எனவே, தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளுடன் விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கத்துடன் உடனடியாக இராஜதந்திர முயற்சிகளைத் தொடங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் – என்று அவர் கோரினார். https://athavannews.com/2025/1451918- செம்மணி புதைகுழிக்குள் வெள்ளம்
செம்மணி மனித புதைகுழிக்குள் மழை நீர் தேங்கி நிற்பதனால் அடுத்த வருடமே மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. Babu Babugi- செம்மணியில் மீட்கப்பட்ட செருப்பு 1995ஆம் ஆண்டுக்கு முந்தையது ?
செம்மணியில் மீட்கப்பட்ட செருப்பு 1995ஆம் ஆண்டுக்கு முந்தையது ? செம்மணி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட காலணி ஒன்று தொடர்பில் ஆராயப்பட்டதில் அது 1995ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார். செம்மணி மனித புதைகுழியை இன்றைய தினம் திங்கட்கிழமை நேரில் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், செம்மணி புதைகுழியில் இருந்து காலணி ஒன்று மீட்கப்பட்டது. அதில் 39ரூபாய் 90 சதம் என விலை காணப்பட்டது. அதன் அடிப்படையில் குறித்த காலணி நிறுவனத்திடம் மேற்கொள்ளபட்ட விசராணையில் அக்காலணி 1985ஆம் ஆண்டு – 1995ஆம் ஆண்டு கால பகுதியில் சந்தையில் விற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அது 1995 ஆம் ஆண்டுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதேவேளை இரண்டு கட்டமாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது மீட்கப்பட்ட 239 என்புக்கூட்டு எச்சங்களையும் ஆய்வு செய்வதற்கான செலவீன பாதீட்டு அறிக்கை சட்ட வைத்தியர் அதிகாரியினால் தாயரிக்கப்பட்டுள்ளது. அது மன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்று நிதி ஒதுக்கப்பட்டதும், அதன் பணிகள் ஆரம்பிக்கப்படும். என்புக்கூடுகளை ஆராய்வதற்கு , அகழ்வு பணியில் கடமையாற்றி வந்த சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன், யாழ். போதனா வைத்திய சாலை சட்ட வைத்தி அதிகாரி மயூதரன் உள்ளடங்கலாக, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி உள்ளிட்ட புதைகுழிகளில் மீட்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வு செய்த நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய 07 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான அனுமதிகள் கிடைக்கப்பெற்றதும் பணிகள் முன்னெடுக்கப்படும் என மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2025/1451889- கருத்து படங்கள்
- அத்துமீறிய மீன்பிடி; 31 இந்திய மீனவர்கள் கைது
அத்துமீறிய மீன்பிடி; 31 இந்திய மீனவர்கள் கைது. எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இன்றைய தினம் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மூன்று படகுகளில் வந்த 31 இந்திய மீனவர்களே இவ்வாறு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் மாவட்ட நீரியல்வள திணைக்களத்தினர், கடற்படையினரிடமிருந்து பொறுப்பேற்று, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1451865 - தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.