Everything posted by தமிழ் சிறி
-
20 நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய சாதனம் ஒன்றை கண்டுபிடித்த நபர், பொலிசாரால் கைது!
யாயினி, மெசினின்... டிசைன், ரெக்னிக் எல்லாம் என்னுடையது. 😂 தயாரிப்பு, நிர்வாகம் எல்லாம் வேறு ஒருவருடையது. 🤣 வாடிக்கையாளர்.... வேறை யார்? நீங்கள் தான். 😜
-
20 நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய சாதனம் ஒன்றை கண்டுபிடித்த நபர், பொலிசாரால் கைது!
விலேஜ் விஞ்ஞானி. 😂
-
20 நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய சாதனம் ஒன்றை கண்டுபிடித்த நபர், பொலிசாரால் கைது!
20 நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய சாதனம் ஒன்றை கண்டுபிடித்த நபர், பொலிசாரால் கைது! இருபது நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய ஒரு சாதனத்தை தயாரித்த ஒருவர் மொனராகலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அரசு ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு விற்பனையும் செய்துவந்துள்ளார். இந்நிலையில் மொனராகலை தலைமையக காவல் நிலைய அதிகாரிகள் குழுவினர் மொனராகலை கால்வாய் அருகே ஒரு சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை சோதனை செய்து ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் இருபது நிமிடங்களில் சட்டவிரோத மதுபானத்தை தயாரிக்கக்கூடிய ஒரு சாதனத்தை உருவாக்கி, உடனடியாக அந்த சாதனத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத மதுபானத்தை தயாரித்து வாங்குபவர்களுக்கு வழங்கியுள்ளார். சந்தேக நபர் இந்த மோசடியில் அரசு ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பிறரை குறிவைத்து செயல்பட்டு வருகிறார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை பகுதியைச் சேர்ந்த அறுபத்திரண்டு வயதுடையவர். இதேவேளை, சந்தேக நபர் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார், மேலும் சம்பவம் தொடர்பாக மொனராகலை தலைமையக காவல் நிலைய அதிகாரிகளால் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. https://athavannews.com/2026/1460303
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- கருத்து படங்கள்
நான் செய்த பணிக்காக, மரியா தனது அமைதிக்கான நோபல் பரிசை எனக்கு வழங்கினார். -தம்பர்.- 😂- கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்.
கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல். கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுவேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார். அந்தவகையில் முல்லைத்தீவு – தேராவில் மாவீரர் துயிலுமில்ல மண்டபத்திலும், மூங்கிலாறு வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்திலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கமை அகவணக்கம் செலுத்தப்பட்டு, மாவீரர்களின் திரு உருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்தன. மேலும் தேரவில் மாவீரர் துயிலுமில்லத்தில் கேணல் கிட்டு உள்ளிட்ட மாவீரர்களின் நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டிருந்தன. https://athavannews.com/2026/1460205- ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள்-பயணிகள் அவதி.
ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அனுப்பப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள்-பயணிகள் அவதி. நேற்றைய தினம் ஐனாதிபதியின் யாழ்ப்பாணம் நிகழ்சிக்காக பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டமையால் பயணிகள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர். பருத்திதுறையிலிருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து சேவகளும் காலை 10:00 மணியுடன் நிறுத்தப்பட்டிருந்தன. இலங்கை போக்குவரத்து சபையின் பருத்திதுறை சாலை முகாமையாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதுபோது ஜனாதிபதியின் யாழ்ப்பாண நிகழ்சிக்காக தமது சாலை பேருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக்கவும் இதனால் காலை 10:00 மணியுடன் அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டாதாக தெரிவித்தார். இதனால் பயணிகள் தமது பயணங்களை மேற்கொள்ள முடியாது பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர். இதேவேளை பருத்தித்துறையிலிருந்து வடமராட்சி கிழக்கு கோவில் வரை பிற்பகல் 6:15 மணிக்கு ஈடுபடும் சேவை சில மாதங்களாக பிற்பகல் 6:45 மணிக்கு பின்னரே இடம்பெறுகிறது. இதனால் வடமராட்சி கிழக்கு மக்கள் பிற்பகல் 12:30 மணிக்கு பின்னர் இரவு 6:45 மணிவரை காத்திருக்கின்றனர். தை பொங்கல் தினமும் பருத்தி துறை சாலை தனது சேவையையும் முழுமையாக நிறுத்திஇருந்தது. குறித்த விடயங்கள் தொடர்பாக ஒருங்கிணைப்பு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனிடம் ஒருங்கிணைப்பு கூட்டங்களில் பல தடவைகள் சுட்டிக்காட்டியும் அவரால் எந்தவித நடப்படிக்கையும் எடுக்கப்பப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. https://athavannews.com/2026/1460210- தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் !
தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – யாழில். ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல் ! தையிட்டி விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை , காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும் என நாக விகாரை மற்றும் நாக தீப விகாரை விகாரதிபதிகள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் நாக தீப மற்றும் நாக விகாரை ஆகியவற்றுக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டதுடன் , விகாரதிபதிகளிடம் ஆசி பெற்று , கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதன்போது, தையிட்டி விகாரை , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்திய நிர்மாணிக்கப்பட்டது. அவ்விகாரையை சூழ பெருமளவான தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தபட்டுள்ளன. அவற்றினை காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க வேண்டும். என விகாரதிபதிகள் இருவரும் தனித்தனியே ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளனர். அதேவேளை. யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி காணி விடுவிப்பு , தையிட்டி விகாரை விவகாரம் , பாதை விடுவிப்புக்கள் , தொடர்பில் முக்கிய அறிவிப்புக்களை வெளியிடுவார் என பலத்த எதிர்பார்ப்புக்கள் இருந்த போதிலும் , அவை தொடர்பில் ஜனாதிபதி எவ்வித கருத்துக்களையும் கூறாது சென்றமை காணி உரிமையாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் ஏமாற்றம் அளித்துள்ளது. https://athavannews.com/2026/1460244- கிரீன்லாந்து விவகாரம்: உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிய மிரட்டல்
கிரீன்லாந்து விவகாரத்தில் தலையிடும் நாடுகள் மீது புதிய வரி – டொனால்ட் டிரம்ப் எச்சரிகை! டென்மார்க்கினால் நிர்வகிக்கப்படும் சுயாட்சிப் பிராந்தியமான கிரீன்லாந்தை இணைத்துக்கொள்வதற்கான தனது திட்டத்திற்கு எதிராகச் செயல்படும் நாடுகளுக்கு எதிராக புதிய வரிகள் (Tariffs) விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், எந்த நாடுகளுக்குப் புதிய வரிகள் விதிக்கப்படும் என்பது குறித்தோ அல்லது அந்நாடுகளுக்கு எதிராகப் பின்பற்றப்படும் வரி கொள்கை என்ன என்பது குறித்தோ வெளியிடப்படவில்லை. கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதற்கான டிரம்பின் தீர்மானத்திற்கு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அத்தியாவசியமானது என்று டிரம்ப் கூறியதுடன், அது இலகுவானதோ அல்லது கடினமானதோ எப்படியாயினும் அதைக் கைப்பற்றிக்கொள்வதாக டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார். இதேவேளை, “தேசிய பாதுகாப்பிற்கு எமக்கு கிரீன்லாந்து தேவை எனவும் கிரீன்லாந்து விடயத்தில் அவர்கள் இணங்கவில்லை என்றால், என்னால் அந்த நாடுகள் மீது வரிகளை விதிக்க முடியும்,” என்றும் டிரம்ப் நேற்று தெரிவித்தார். கிரீன்லாந்து சனத்தொகை செறிவற்ற ஆனால் வளங்கள் நிறைந்த ஒரு பூமியாகும். வட அமெரிக்காவிற்கும் ஆர்க்டிக்கிற்கும் இடையில் அமைந்துள்ள கிரீன்லாந்து, ஏவுகணைத் தாக்குதல்களின் போது அமெரிக்காவிற்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் கட்டமைப்புகளுக்கும், பிராந்தியத்தில் கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் உகந்த இடமாகக் கருதப்படுகின்றது இவ்வாறான காரணங்களால் டிரம்ப் க்ரீன்லாந்தை கைப்பற்ற முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1460233- “மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
- “மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
நோபல் பரிசை… தம் இஷ்டத்துக்கு மாற்றிக் கொண்டதன் மூலம், ட்ரம்பும், அந்த வெனிசூலா பெண்மணியும்…. உலக அரங்கில்… தம்மைத் தாமே தரம் தாழ்த்திக் கொண்டார்கள். மிக அருவருப்பான ஒரு செயலை… அந்த இரண்டு பன்றிகளும் செய்துள்ளது.- பாலியல் குற்றவாளி என சந்தேகித்து தவறான நபரை தாக்கி கொலைசெய்த 16 வயது இளைஞன் கைது!
பாலியல் குற்றவாளி என சந்தேகித்து தவறான நபரை தாக்கி கொலைசெய்த 16 வயது இளைஞன் கைது! கென்ட் நகரில் உள்ள கடல் பகுதியில் (Alexander Cashford) அலெக்சாண்டர் காஷ்ஃபோர்ட் என்ற 49 வயது நபர், மூன்று பதின்ம வயது இளைஞர்களால் திட்டமிட்டுத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதேவேளை, இவ்வாறு பாதிக்கப்பட்ட நபர் ஒரு குழந்தை பாலியல் குற்றவாளி என்று தவறாகக் கருதி, இளைஞர்கள் அவரை ஒரு போலிப் பெயரில் குறுஞ்செய்திகள் மூலம் கடற்கரைக்கு வரவழைத்துள்ளனர். அங்கு அவரைத் துரத்திச் சென்று போத்தல்கள் மற்றும் கற்களால் மிகக் கொடூரமாகத் தாக்கியதில் அவருக்குத் தலையில் பலத்த காயங்களும் நுரையீரல் பாதிப்பும் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதேவேளை, இந்தச் சம்பவத்தை ஒரு சிறுமி காணொளியாக பதிவு செய்ததோடு, தாக்குதலில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் தற்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள இந்த வழக்கு, தன்னிச்சையான நீதி என்ற பெயரில் ஒரு குழு முன்னெடுத்த வன்முறையையும் அதன் கோரமான முடிவையும் சுட்டிக்காட்டுகிறது. இச்சம்பவம் ஒரு தவறான புரிதலால் உருவான திட்டமிடப்பட்ட கொலை வழக்காக நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1460141- கருத்து படங்கள்
- சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம்.
சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கம். சிங்கப்பூரின் எதிர்க்கட்சித் தலைவர் பிரீதம் சிங் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு சட்டவாக்க உறுப்பினர்களின் வாக்கெடுப்பைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதமரால் அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவி இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குழுவொன்றின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பொய்யான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பின்னரே அவரது பதவி இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது நாடாளுமன்றஉறுப்பினர் பதவியும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியும் தொடர்ந்து நீடிக்கும். ஆனால், மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் நாடாளுமன்ற விவாதங்களின் போது முதலில் பதிலளிக்கும் உரிமை போன்ற சலுகைகளை அவர் இழப்பார் என்று சிங்கப்பூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று மணிநேர விவாதத்திற்குப் பிறகு, சிங் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கு நாடாளுமன்றம் ஆதரவு அளித்துள்ளது. ஆனால் தொழிலாளர் கட்சியின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்றும் அந்த ஊடக அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் சட்டவாக்க உறுப்பினர் ரயீஸா கான், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணொருவரிடம் பொலிஸார் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டதை தான் கண்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்ததே இந்த வழக்குக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. பின்னர் அவர் தனது கூற்று உண்மையல்ல என்பதை ஒப்புக்கொண்டார். இது தொடர்பான நாடாளுமன்ற குழுவின் விசாரணையில், சிங் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் இந்த பொய்யான தகவலை அறிந்திருந்த போதிலும், அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு அவருக்கு அறிவுறுத்தியமை தெரியவந்தது. பின்னர் கான் கட்சியிலிருந்தும் நாடாளுமன்றத்திலிருந்தும் இராஜினாமா செய்ததுடன், பொய்யான தகவல்களைக் கூறியமை மற்றும் நாடாளுமன்றபாராளுமன்ற சிறப்புரிமைகளைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் அவருக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கானின் வழக்கை விசாரிக்கும் போது நாடாளுமன்ற குழுவின் முன் ஆஜராகி சத்தியப்பிரமாணம் செய்து பொய் கூறியமை தொடர்பில் சிங்கிற்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்ததுடன், அவருக்கு பல்லாயிரக்கணக்கான டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணைகள் முழுவதும் தான் நிரபராதி என்று கூறிய சிங், உணர்வுபூர்வமான விடயமொன்றைக் கையாள்வதற்கு கானுக்கு அவகாசம் வழங்கவே வேண்டும் என விரும்பியதாகத் தெரிவித்தார். எவ்வாறாயினும், வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட அவர், அத்தீர்ப்பிற்கு எதிராகச் செய்த மேன்முறையீடும் தோல்வியடைந்தது. https://athavannews.com/2026/1460081- சிரிக்கலாம் வாங்க
- பொங்கல் சிரிப்புகள்.
- கருத்து படங்கள்
- ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி!
ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி! வெற்றிகரமான விளைச்சலுக்கு உதவிய சூரியக் கடவுளுக்கும், கால்நடைகளுக்கும், இயற்கை அன்னைக்கும், நன்றி உணர்வை எடுத்தியம்பும் கொண்டாட்டமாக தைப்பொங்கல் தினம் அமைகின்றது. செழிப்பு மற்றும் நன்றியுணர்வை அடையாளப்படுத்தும் தைப்பொங்கல் பண்டிகை, சிறந்த விளைச்சலுக்கு நன்றி பாராட்டும் ஒரு நிகழ்வு மாத்திரமன்றி, எதிர்காலத்தில் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் ஒரு புதிய பயணத்தைத் தொடங்குவதற்கான அழைப்பாகவும் அமைகிறது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது விசேட வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அண்மையில் நாம் சந்தித்த மிகப் பாரிய இயற்கைப் அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் அயராத முயற்சி மற்றும் உறுதியுடனும், இதுவரை இல்லாத அளவிலான பாரிய புனரமைப்பு செயற்பாட்டில் நாம் ஒன்றாக கைகோர்த்துள்ளோம். அந்த வேலைத்திட்டத்துடன் மென்மேலும் வலுவாக கைகோர்க்க முன்வருமாறு சுபீட்சமான எதிர்பார்ப்புடன் இந்தத் தைப்பொங்கல் திருநாளில், நான் அனைவரிடமும் மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். மேலும், இயற்கையுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய அவசியம் முன்னெப்போதையும் விட அதிகமாக உணரப்படும் இந்த நேரத்தில், இயற்கையுடன் ஆழமாக இணைக்கப்பட்ட தைப் பொங்கல் பண்டிகை, நமது வாழ்க்கைக்கும் சமூகத்திற்கும் உயர்வான அர்த்தத்தைச் சேர்க்கிறது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். எந்தவொரு இருளுக்கும் பிறகு ஒளி பிறக்கும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம். உறுதியுடனும் ஒற்றுமையுடனும் சவால்களை வென்று ‘வளமான நாடு – அழகான வாழ்க்கையை’ கட்டியெழுப்புவதற்கான பயணத்திற்கு இவ்வருட தைப் பொங்கல் பண்டிகை சிறந்த ஆசிர்வாதமாக அமைய பிரார்த்திக்கிறேன். இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான தைப்பொங்கல் தின வாழ்த்துகள் என்றும் குறிப்பிட்டார். https://athavannews.com/2026/1459972- கிளிநொச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் தைப்பொங்கல் கொண்டாட்டம்.
கிளிநொச்சியில் கிறிஸ்தவ ஆலயங்களில் தைப்பொங்கல் கொண்டாட்டம். கிளிநொச்சி பரந்தன் நகரில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் தைப்பொங்கல் விசேட வழிபாடு இன்று இடம்பெற்றது இன்று காலை 6 மணியளவில் தேவாலயத்தின் பிரதான குரு தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் தொடர்ந்து 7.30 மணிக்கு விசேட வழிபாடும் இடம்பெற்றிருந்தது நிகழ்வில் ஆலயத்தை சேர்ந்த பொதுமக்கள் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு தைப்பொங்கலை கொண்டாடி மகிழ்ந்திருந்தனர் https://athavannews.com/2026/1460010- ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை! ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தலையிடுவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, வொஷிங்டன் ஈரானை தாக்கினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று தெஹ்ரான் எச்சரித்துள்ளது. இந்த விடயத்தை ஈரானிய மூத்த அதிகாரி ஒருவர் புதன்கிழமை (14) உறுதிபடுத்தியுள்ளார். 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர், நாடு தழுவிய போராட்டங்களை அடக்குவதற்கு மதகுருமார்கள் முயற்சித்து வரும் நிலையில், ஈரானின் அமைதியின்மையால் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,600 ஆக உயர்ந்துள்ளதாக ஒரு உரிமைக் குழு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய மதிப்பீட்டின்படி, இநத் விடயத்தில் ட்ரம்ப் தலையிட முடிவு செய்துள்ளார், ஆனால் இந்த நடவடிக்கையின் நோக்கம் மற்றும் நேரம் தெளிவாக இல்லை என்று டெல் அவிவ் அதிகாரி ஒருவர் கூறினார். இந்த நிலையில் வொஷிங்டன் ஈரானை தாக்குவதைத் தடுக்க” பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளை தெஹ்ரான் கேட்டுக் கொண்டதாகக் பெயர் குறிப்பிட விரும்பாத ஈரானிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா ஈரானை குறிவைத்தால், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதல் துருக்கி வரையிலான பிராந்திய நாடுகளுக்கு, அந்த நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் தாக்கப்படும் என்றும் தெஹ்ரான் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சிக்கும் அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப்பிற்கும் இடையிலான நேரடி தொடர்புகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இது அதிகரித்து வரும் பதட்டங்களை பிரதிபலிக்கிறது என்றும் அந்த அதிகாரி மேலும் கூறினார். https://athavannews.com/2026/1459954- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
அதிர்ச்சியான செய்தி. கண்ணீர் அஞ்சலிகள். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். அவரின் பிரிவால் துயருற்று இருக்கும்.. மோகன் அண்ணாவிற்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி. 🙏- கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
- இந்த ஆண்டின் முதல் 13 நாட்களில் வீதி விபத்துகளில் 82 பேர் உயிரிழப்பு!
இந்த ஆண்டின் முதல் 13 நாட்களில் வீதி விபத்துகளில் 82 பேர் உயிரிழப்பு! 2026 ஆம் ஆண்டின் முதல் 13 நாட்களில் நாடு முழுவதும் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் மொத்தம் 82 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை மதுபோதையில் வாகன் செலுத்தியதால் இடம்பெற்றதாக வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர குறிப்பிட்டார். இலங்கையில் ஒரு நாளைக்கு குறைந்தது 500 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்படுகின்றனர். மது போதையில் வாகனம் செலுத்துவர்களை கண்டறிவதற்கான மூச்சுப் பரிசோதனை கருவிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மது போதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறிவதற்காக கொழும்பில் ஒரு முன்னோடித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மது அல்லது பிற போதைப்பொருள் உட்கொண்டு வாகனம் செலுத்துபவர்களை அடையாளம் காண நடமாடும் போதைப்பொருள் சோதனை அலகுகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2026/1459939- கருத்து படங்கள்
- அருண் சித்தார்த் அலுவலகம், வீடு எரிக்கப்பட்டது.
அருண் சித்தார்த் அலுவலகம், வீடு எரிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தாவடியில் அமைந்துள்ள சர்வஜன அதிகாரம் கட்சி அலுவலகம் நேற்று நள்ளிரவு இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு 12.50 மணியளவில் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் வீடும் கட்டடமும் ஒன்றாக அமைந்துள்ள நிலையில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கட்டடத்தின் வாயிலில் இரண்டு பேர் பெற்றோல் ஊற்றி வைத்துவிட்டு தீயைப்பற்ற வைத்தகாக அறிய முடிகிறது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2026/1459863Important Information
By using this site, you agree to our Terms of Use.
- கருத்து படங்கள்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.