Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. முன்னாள் யாழ்பல்கலைக் கழக மாணவர் ஒருவரின் பதிவிலிருந்து….. THUGS’ LIFE EPRLF இயக்கம் இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கோடு வடக்கில் நிலைகொண்ட இந்திய இராணுவத்தோடு(IPKF) மீளவும் பிரசன்மாகியிருந்தது. ஒவ்வொரு பிரதான சந்திகளிலும், சாலைத் திருப்பங்களிலும் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்தது. EPRLF இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீளவும் வந்திறங்கினர். புலிகளை அழித்து இந்தியாவின் உதவியோடு ஈழத்தைக் கைப்பற்றுவோம் என EPRLF இன் தலைவர்களில் ஒருவரான வரதராஜப் பெருமாள் அறிக்கைவிடுக்கிறார். யாழ்ப்பாண நகரின் கோடியில் அமைந்திருந்த அசோக் ஹோட்டலில் இருந்து EPRLF இராணுவம் செயற்பட்டது. EPRLF குழுவினர், சந்தேகத்தின் பெரில் கைதுசெய்த பலரை வெட்டியே கொன்றனர் என்ற தகவல்கள் வெளியாகின. இந்திய இராணுவம் நிலைகொள்ள ஆரம்பித்த முதலாவது நாளில் இருந்தே மக்கள் விரோதக்க் கும்பலாகவே EPRLF தன்னை அறிமுகப்படுத்தியது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை என்ற அனைத்தும் இலங்கை இராணுவத்திற்கு ஒப்பான வகையில் நிறைவேற்றப்பட்டன. தேசியப் போராட்டம், வர்க்கப் புரட்சி, மக்கள் இயக்கம் என்ற அழகான வார்த்தைகளை உச்சரித்த EPRLF இயக்கம் இந்திய இராணுவத்தின் துணைக் குழுவாக இயங்க ஆரம்பித்தது. 1988 ஆம் நடுப்பகுதில் EPRLF மக்கள் மீதான பல முனைத் தாக்குதல்களை ஆரம்பித்தது. குறிப்பாகப் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான கைதுகள் உச்சத்தைத் தொட்டிருந்தன. பல்கலைக் கழகத்திற்குக் கல்விகற்கச் செல்வதென்பதே பாதுகாபற்றதாக இருந்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் அமைப்புச் சார்பாக ஒரு துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டோம். 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய இராணுவத்தின் தலைமையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற்றன. அவ்வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் விடுதியில் நான் தங்கியிருந்தேன். விடுதிக்கு நேர் எதிராக அமைந்திருந்த தொழில் நுட்பக் கல்லூரி தேர்தல் சாவடியாகப் பயன்படுத்தப்பட்டது. விடுதிக்குப் பின்புறமிருந்து தேர்தல் சாவடியை நோக்கி புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனையடுத்து இந்திய இராணுவத்தினர் விடுதியைச் சுற்றிவளைத்தனர். தெருவில் நடமாடிய ஒவ்வொருவரையும் எழுந்தமானமாகத் தாக்கினர். விடுதியிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் வரவில்லை என்பதை விடுதியைச் சுற்றிவளைத்திருந்த இந்திய இராணுவத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு என்னை அவர்களிடம் சென்று பேசுமாறு மாணவர்கள் முடிவெடுத்தனர். அவர்களிடம் பேசச் சென்ற போது நான் தேர்தல் சாவடியிலிருந்த இராணுவத் தளபதியிடம் பேசுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டேன். பஞ்சாபிக் காரரான அவரது முன்னால் சென்ற போது எனது மேலங்கியில் எண்ணைப் படிவு காணப்படுவதாகவும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது நானாக இருக்க வேண்டுமென முடிவெடுக்கிறார். என்னை தீர விசாரிக்குமாறு சில இராணுவத்தினரிடம் அனுப்பி வைக்கிறார். அவர்கள் என்னைத் தாக்க ஆரம்பிக்கின்றனர். இரண்டு இராணுவத்தினர் ஒரு மேசையுடன் இணைத்து என்னைக் கட்டிவைத்துவிட்டு மிருகத் தனமாக அடிக்க ஆரம்பிக்கின்றனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக எனக்கு அடி விழுகிறது. இறுதியில் நான் மயக்கமடைந்து விட்டேன். மயக்கம் தெளிந்த போது எனக்கு சிறிதளவு நீர் அருந்த அனுமதித்தார்கள். தேர்தல் முடிவடைந்திருந்தது. இராணுவத்தினர் முகாமிற்கு செல்ல ஆரம்பிக்கின்றனர். எனது கைகளை இறுகக்கட்டி இராணுவ வாகனத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றனர். சேகர் என்ற தமிழ் அதிகாரி அங்கு வருகிறார். என்னைப் புலியா எனக் கேட்கிறார். இல்லை என்றதும் தனது சப்பாத்துக் கால்களால் எனது முதுகில் உதைகிறார். சில நிமிடங்கள் நினைவிழந்த நிலையில் மருதானாமடம் பிரிவைச் சேர்ந்தா இராணுவத்தினரின் வாகனத்தில் ஏற்றப்படுகிறேன். அங்கு என்னை ஒப்ப்டைத்தவர் சேகர். அந்த அணியின் பொறுப்பதிகாரிக்கு நான் புலிகள் சார்ந்தவன் என்று கூறியே ஒப்படைக்கப்படுகிறேன். மருதனாமடம் முகாமிற்கு அவர்கள் என்னைக் கொண்டு செல்லும் வரைக்கும் ஏறத்தாழ 10 நிமிட நேரமாக பலர் அங்கும் இங்குமாகத் தாக்குதல் நடத்தினர். சிகரட் புகைத்துக்கொண்டிருந்த இராணுவதினர் ஒருவர் என் மீதே அதனை அணைக்கிறார். பல தடவைகள் உரத்து அலறியும் எந்தப் பயனும் இல்லை. எல்லாமே மரத்துப் போனது போன்ற உணர்வு. இறுதியாக முகாமை அடைந்ததும் அங்கு இராணுவ வண்டியில் படுக்க வைக்கப்பட்டிருந்த எனது கால்களைப் பிடித்து இழுத்ததில் எனது தலை அடிபட விழுந்ததில் மற்றொரு தடவை நினைவிழக்கிறேன். நான் விழித்துக்கொண்ட போது என்னைச் சுற்றிப் பலர் தமிழில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் EPRLF உறுப்பினர்கள். எனக்குத் தெரிந்த ஒருவரையும் காணக்கூடியதாக இருந்தது. ஒரு சிலர் குடி போதையில் இருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. எல்லோருமே என்னிடம் பல கேள்விகளைக் கேட்கின்றனர். அங்கிருந்த EPRLF உறுப்பினர் ஒருவர் நான் இந்திய இராணுவத்திற்கு எதிராகச் செயற்படுவது தனக்குத் தெரியும் என்கிறார். உடனடியாகவே கேள்விகள் நிறுத்தப்பட்டு சாரமாரியாகத் தாக்குதல் நடத்த ஆரம்பிக்கின்றனர். தமக்குத் தெரிந்த சித்திரவதை முறைமகள் அனைத்தையும் கையாள்கின்றனர். ஒரு புலி உறுப்பினரையாவது காட்டிக்கொடுக்காவிட்டல் கொன்றுவிடப் போவதாகக் கூறுகின்றனர். எனக்கு முன்னமே தெரிந்த EPRLF உறுப்பினர் அங்கிருந்து செல்லும் போது எனது முதுகில் வில்லுக் கத்தியால் கீறிவிட்டு மறு நாள் வரைக்கு இது இரத்தம் சொட்டப் போதுமானது எனக் கூறிவிட்டு அகன்று செல்கின்றார். மருதனாமடம் முகாம் வழமையாகக் கைதிகளைத் தடுத்துவைப்பதற்கான முகாம் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ள எனக்கு நேரமெடுக்கவில்லை. முகாமில் என்னைத் தவிர வேறு கைதிகளைக் காணமுடியவில்லை. இரவு நெடு நேரமாக கிணற்றிற்கு அருகிலிருந்த மரத்தோடு என்னைக் கட்டிவைத்திருந்தனர். நள்ளிரவு இருக்கலாம் ஒரு இந்திய இராணுவத்தினர் எனக்கு அருக்கில் வந்து குடிப்பதற்கு நீர் கொண்டுவந்து தந்த பின்னர் முகாமின் பின்புறதில் இருந்த மலசல கூடத்திற்குப் பின்புறம் காணப்பட்ட அறையில் அடைத்துவிட்டனர். இரவு உறங்கியதாக நினைவில்லை. அதிகாலையில் உறங்க முற்பட்ட வேளையில் சற்று உணவோடு அறைக்குள் எனைத் தள்ளிய இராணுவ சிப்பாய் வருகின்றார். சற்றுப் பின்னதாக இரண்டு EPRLF பிரதான உறுப்பினர்கள் வருகின்றனர். ஒருவர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட தங்கன் என்ற மானிப்பாயைச் சேர்ந்தவர். மற்றவர் பிரதீப் என்பவர். நீ எப்போது புலியில் சேர்ந்தாய் என்று கேட்டவாறே தங்கன் என்னைச் சாரமாரியாகத் தாக்குகிறார். கிணற்றிற்கு அருகில் அழைத்துச்சென்ற அவர்கள் நீர் நிரம்பிய ஒரு வாளிக்குள் எனது தலையை அமிழ்த்துகின்றனர். நான் மூச்சுத்திணறும் வரைக்கும் நீருக்குள் எனது தலையை வைத்திருக்கின்றனர். என்னிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாமையால் அறைக்கு அழைத்துச் சென்று மீண்டும் தாக்குதல்களைத் தொடர்கின்றனர். அப்போது தமிழ்ப் பேசும் இந்திய இராணுவ அதிகாரி சேகர் அங்கு வருகின்றார். தனது பங்கிற்கு அறையின் மூலையில் உட்காரவைக்கப்பட்டிருந்த என்னை கால்களால் உதைக்கிறார். என்னை இங்கு வைத்து விசாரணை செய்தால் உண்மை சொல்லப்போவதில்லை என்றும் மானிப்பாயில் உள்ள விசேட சித்திரவதை முகாமிற்கு என்னை அழைத்துச் செல்லப் போவதாகவும் கூறுகின்றனர். அங்கே மின்சாரம் பாய்ச்சும் உபகரணங்கள் உட்பட பல சித்திரவதைக் கருவிகள் இருப்பதாகவும் நான் எப்படியும் உண்மை சொல்வேன் என்றும் பேசிக்கொள்கின்றனர். அதன் பின்னர் வெளியே வாசலுக்குச் சென்று அங்கு சித்திரவதைச் செய்யப்படும் போது இறந்துபோன ஒருவரைப்பற்றியும் பேசிக்கொள்கின்றனர். அவர்கள் அங்கிருந்து அகன்ற சிறிது நேரத்தில் அறைக்குள் வந்த உப நிலை இராணுவ அதிகாரி ஒருவர் தன்னை நாகரீகமாக அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ராஜஸ்தானைச் சேந்தவர் என்கிறார். நான் உண்மையில் புலி இயக்கத்தைச் சார்ந்தவனா என்று கேட்கிறார். நான் நடந்தவற்றை விபரிக்கிறேன். அவர் சித்திரவதை முகாமில் நடப்பவற்றை விபரிக்கிறார். கைகளில் நகங்களைப் பிடுங்குவார்கள், கண்களில் ஊசி ஏற்றுவார்கள் என்று மனித நாகரீகங்கள் கேட்டிராத பல சித்திரவதைகளைப் பற்றிக் கூறுகின்றார். அவர் கூறும் போதே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. முதல் நாள் இரவு EPRLF உறுப்பினர் கீறிய கத்திக்காயம் மேலும் வலித்தது. யாராவது எனக்குத் தெரிந்த பல்கலைகழகப் புலி உறுப்பினர் தொடர்பான தகவல்களை மட்டும் கூறினால் என்னை இங்கிருந்து விடுதலை செய்துவிடுவதாகக் கூறினார். வெள்ளிக்கிளமை விடுமுறை நாளொன்றில் கைது செய்யப்படிருந்தேன். அன்று சனி. இன்னும் ஒரு ஞாயிறு கழிந்தால் திங்கள் பல்கலைக் கழகத்தில் போராட ஆரம்பித்துவிடுவார்கள். போராட்டம் ஆரம்பித்தபின்னர் அடிகாயங்களோடு என்னை விடுதலை செய்ய மாட்டார்கள். ஒன்றில் கொலை செய்துவிடுவார்கள் அல்லது சித்திரவதை முகாமில் நீண்டகாலம் வைத்திருப்பார்கள் என்கிறார். பல்கலைக் கழகதிலிருந்து சிலர் அணுகியதாகவும் இராணுவ அதிகாரிகள் நான் கைதானதை மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார். கைதானதை நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லாத காரணத்தால் கொலை செய்து அழித்துவிடுவது இலகுவானது என்கிறார். அவரோடு ஒத்துழைத்தால் விடுதலைக்காக ஆவன செய்வதாகக் கூறுகிறார். எனக்குத் யாரையும் தெரியாது என்று மீண்டும் கூறியதும் எதுவும் பேசாமல் அங்கிருந்து அகன்றுவிட்டார். மதிய உணவு தரப்பட்டதாக நினைவு. மாலை வேளையில் தங்கன் மீண்டும் என்னை வந்து மிரட்டிவிட்டுச் சென்றார். ஞாயிறு மாலை சித்திரவதை முகாமில் சந்திப்பதாகக் கூறினார். சில மணி நேரங்களின் பின்னர் அதே உப நிலை இராணுவ அதிகாரி வருகின்றார். புலிகளின் ஒரு உறுப்பினரை காட்டிக்கொடுத்த பின்னர் விடுதலையாகி வெளியில் சென்று தமக்குத் தகவல் தருமாறு செயற்பட்டால் உடனடியாகவே விடுதலை செய்வதாகக் கூறுகிறார். தவிர, நான் அதிகமாகத் தாக்கப்பட்டிருப்பதால் ஏனைய கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு அனுப்பத் தயாரில்லை என்றும் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்த அடிப்படையில் விடுதலை செய்யலாம் அல்லது சித்திரவதை முகாமிற்கு அனுப்ப வேண்டியதாக இருக்கும் என்கிறார். நான் இப்போது பேச ஆரம்பிக்கிறேன், “உங்களுடைய நாட்டில் வெள்ளையர்களை வெளியேற்றுவதற்கான போராட்டம் நடைபெற்றபோது மக்கள் ஆதரவு இருந்ததைப் போன்றே இப்போதும் புலிகளை மக்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் புலிகள் தலைமறைவு அமைப்பு. மக்களுக்குப் பழக்கப்பட்டவர்கள் இப்போது அங்கே இப்போது தலைமறைவாகிவிட்டார்கள். காட்டிக்கொடுப்பதற்கு யாரும் இல்லை. ஆனால் நீங்கள் அப்பாவிகளைத் தாக்கினால் அவர்கள் புலிகளோடு இணைவதைத் தவிர வேறு வழி இல்லை என்றாகிவிடும்” என்பன போன்ற விடயங்களைக் கூறுகிறேன். ஆமோதிப்பது போன்று தலையசைத்துவிட்டுச் செல்கிறார். அவரை மீண்டும் நான் காணவில்லை. அன்று இரவு சித்திரவதைகள் குறைந்திருந்தன. மறு நாள் ஞாயிறு, மதியம் அளவில் முகாமின் முன்னரங்கில் காவலுக்கு நின்றிருந்த இராணுவத்தோடு என்னை நிறுத்தி வைத்தனர். தெருவால் புலி உறுப்பினர்கள் சென்றால் காட்டிக்கொடுக்குமாறு பணிக்கப்பட்டேன். துப்பாக்கியோடு ஒரு இராணுவச் சிப்பாய் தெருவில் போகிறவர்களை கண்காணித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது இடைவெளி கிடைக்கும் போதெல்லாம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட என்னைத் தாக்குவார். பொழுது சாய்ந்ததும் மறுபடி அறைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். EPRLF உறுப்பினர்கள் வந்தார்கள். மானிப்பாய் முகாமிலிருந்து பிரதீப்பும் வந்திருந்தார். “*நல்ல தமிழ்” *மட்டும் தான் “தோழர்” பேசினார். வெளியே ஒடிச்சென்று பெரிய தடி ஒன்றைக் கொண்டுவந்து தாக்கியது நினைவிருக்கிறது. ஒரு கட்டத்தில் நான் நினைவிழந்துவிட்டேன். கண்விழித்த் போது யாரும் அருகில் இல்லை. நீண்ட நேரத்தின் பின்னர் இராணுவச் சிப்பாய் ஒருவர் வந்து ஏதோ ஹிந்தியில் கேட்டார். நான் பதில் சொல்லவில்லை. திட்டியபடி பல தடவை முகத்தில் அறைந்தார். அவர்கள் கூறியபடி சித்திரவதை முகாமிற்கு நான் கூட்டிச் செல்லப்படவில்லை என்பது ஆறுதலாக இருந்தது. மறு நாள் அதிகாலை அடி உதை எல்லாம் நிறுத்தப்பட்டிருந்தது. சித்திரவதை முகாமிற்குக் கொண்டு செல்லப்போவதாகவும் என்னை இராணுவ உடுப்பை அணிந்து கொள்ளுமாறும் ஒரு அதிகாரி உடை, தொப்பி ஆகியவற்றுடன் வந்தார். மதியத்திற்குச் சற்றுப்பின்னர், இராணுவ உடையுடன், பின்பக்கம் திறந்த இராணுவ வண்டியில் ஏற்றப்படுகிறேன். சித்திரவதை முகாமிற்குச் செல்லும் வழியில் எனது மானிப்பாய் வீட்டைச் சோதனையிடப் போவதாகச் சொல்கிறார்கள். வீட்டிற்குச் செல்லும் வழியில் பல்கலைக்கழகத்தில் போராட்டத்திற்கான தயாரிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக உளவாளிகள் மூலம் தகவல்கள் கிடைத்திருப்பதாகச் பொறுப்பதிகாரி சொல்கிறார். எனது வீட்டிற்குச் செல்லும் வழியில் கடை ஒன்றின் அருகில் சற்று மறைவான இடமொன்றில் என்னையும் இன்னொரு இராணுவ அதிகாரியை காவலுக்கும் நிறுத்திவிட்டு வீட்டைச் சோதனையிடச் செல்கிறார்கள். அவ்வேளையில் எனது வீட்டில் எனது ஆசிரியராகவிருந்த கலாநிதி சிறீதரன், பேராசிரியை ரஜனி திரணகம உட்பட உறவினர்கள், நண்பர்கள் பலர் “காணாமல்போன” என்னைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்ததை பின்னதாக அறியக் கூடியதாக இருந்தது. அங்கு சென்ற இந்திய இராணுவத்தினர் தாங்கள் என்னைக் கைது செய்யவில்லை என்றும், வீட்டில் ஒளிந்திருக்கிறேனா எனச் சோதனையிட வந்ததாகவும் கூறியிருந்தனர். எனக்குக் காவலுக்கு நின்றிருந்த இராணுவச் சிப்பாய் அருகிலிருந்த கடைக்கு பீடி வாங்குவதற்காகச் செல்கிறார். அவ்வேளையில் எனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவர் தெருவால் நடந்து செல்கிறார். அவரை நான் சைகை காட்டி அழைத்ததும் என்னை நோக்கி வருகிறார். அடி விழுந்ததில் முகம் முழுவதும் வீக்கமடைந்திருந்ததால், கூர்க்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அழைப்பதாகக் கருதியே அவர் என்னை அணுகியதாக பின்னதாக அவர் என்னிடம் கூறியிருந்தார். அருகில் வந்ததும் என்னை அடையாளம் கண்டுகொண்ட அவர் என்னுடன் ஏதும் பேசாமல் உடனடியாகவே மறுபக்கம் திரும்பிச் சென்று எனது வீட்டில் விடயத்தைத் தெரிவித்திருக்கிறார். வீட்டில் இருந்த அனைவரும் கடையை நோக்கி ஓடிச் செல்ல, நிலமையைப் புரிந்துகொண்ட இந்திய இராணுவத்தினர் அவசர அவசரமாக வாகனத்தை நோக்கி விரைந்து அதனைச் செலுத்த ஆரம்பித்தனர். வாகனத்தின் பின்னால் எனது குடும்பத்தினர் ,மற்றும் அவர்களுடனிருந்த பேராசியர்கள் ஓடிவருவதைக் காணக்கூடியதாக இருந்தது. இப்போது நான் முகாமில் உயிரோடு வைக்கப்பட்டிருப்பதைப் பலர் சாட்சியாகக் கண்டிருக்கிறார்கள். இராணுவ வாகனம் இடையில் நிறுத்தப்பட்டு யாரையோ தொடர்பு கொள்கிறார்கள். இப்போது அவர்களது திட்டம் மாறியிருக்க வேண்டும். மருதனாமடம் முகாமிற்கு மீண்டும் கொண்டு செல்லப்படுகிறேன். அன்று மாலைவரை எனக்கு யாரும் அடிக்கவில்லை. அன்று இரவிற்குள் எனது வீட்டார், ரஜனி திரணகம போன்றோர் பல அதிகாரிகளைச் சந்தித்து EPRLF செயலாளர் பத்மனாபாவையும் சந்திக்கின்றனர். அன்று இரவே விடுதலை செய்யப்படுகிறேன். காயங்கள் குணமாகும் வரை வெளியே வரக்கூடாது, பத்திரிகைகளில் படம் வரக்கூடாது, என்ற எச்சரிக்கையின் பின்னர் எனதுகுடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுகிறேன். * வைமன் வீதி முகாமில் நான் சந்தித்த வாசு இப்போது கே.பி இன் தன்னார்வ நிறுவனத்தின் பிரித்தானிய முகவர்…பிரித்தானியாவில் வசிக்கும் புலி எதிர்ப்பாளர். கலாநிதி சிறீ மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயற்பாட்டாளர், ஜெரோம் சில காலங்களின் பின்னர் மாரடைப்பால் மரணித்துவிட்டார், கிருபன் பிரான்சில் வசிக்கிறார், பிரதீப் பிரான்சின் புறநகர்ப் பகுதியில் வசிப்பதாகக் கூறுகிறார்கள். நான் மீண்டும் எழுத்துக்களோடு பிரித்தானியத் தெருக்களில். Naveen Nava, Rahulan Nadarajah @ரஞ்சித் , @நன்னிச் சோழன்
  2. டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு இருக்கின்றார் சர்வதேச போதை கடத்தல் மன்னன் மாகந்துர மதுஷ்வுடன் ஆயுத பரிமாற்றங்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியாளர்களால் கொ*ல்லப்பட்ட ஜேவிபியின் மூத்த உறுப்பினர் திருமதி மாலினி சமரசிங்கே என்பவரின் மகனான சமரசிங்க ஆராச்சிகே மதுஷ் லக்சித (மாகந்துர மதுஷ்) இலங்கையில் சர்வ வல்லமை பொருந்திய நபராகவிருந்த பாதாள உலக பேர்வழியாவர் திரு மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாகவிருந்த போது 2019 ஆம் ஆண்டு பெப்ரவர் மாதம் 4 ஆம் திகதி டுபாயில் நடைபெற்ற அவரின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கைது செயயப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்தார் பின்னர் கோத்தபாயா ராஜபக்சே ஜனாதிபதியாகவிருந்த போது Encounter முறையில் சிறையிலிருந்து அழைத்து செல்லப்பட்டு பொலிஸ் அதிகாரிகளால் சு*ட்டு கொ*ல்லப்பட்டிருந்தார் இலங்கையின் தென்னிலங்கையின் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மஹிந்த அமரவீர உட்பட 80 ற்கு மேற்பட்ட அரசியல் வாதிகள், வர்த்தகர்கள் உட்பட பலரோடு நெருங்கிய தொடர்புகளை பேணிய மாகந்துர மதுஷ் திரு மைத்திரிபால சிறிசேனா அவர்களை கொ*ல்ல முயற்சித்ததாகவும் சொல்லப்படுகின்றது இந்த கொ*லை மூலம் மாகந்துர மதுஷ் வசமிருந்த இலங்கையின் பிரபல அரசியல் வாதிகளின் போதை வர்த்தக வலையமைப்பு தொடர்பான பல்வேறு தகவல்கள் மறைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது அந்தவகையில் இராணுவ ஒட்டுக்குழுவாக இயங்கிய டக்ளஸ் தேவானந்தா பாதாள உலகத்தை சேர்ந்த மாகந்துர மதுஷ்வுடன் இணைந்து இயங்கியமை புதிய விடயமல்ல தென்னிலங்கை ஆட்சியாளர்கள் தமிழ் முஸ்லிம் ஆயுத ஒட்டுக்குழுக்களையும் பாதாள உலக குழுக்களையும் இணைத்தே இயக்கி வந்தார்கள் குறிப்பாக இறுதி யுத்தத்தின் போது கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆயுதங்கள் பாதாள உலக குழுக்களுக்கு கைமாற்றப்பட்டு இருக்கின்றது அதே போல கருணா பிளவின் போது இராணுவம் வசம் வந்த ஆயுதங்களும் பாதாள உலக குழுக்களுக்கு கைமாற்றப்பட்டு இருக்கின்றது கிழக்கு மாகாணத்தில் வாழைசேனையில் கருணா பிள்ளையான் குழுக்கள் மூலம் முஸ்லிம் மற்றும் பாதாள உலக குழுக்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டு இருந்தது கடந்த காலங்களில் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ வாகனங்களில் கூட பாதாள உலக குழுக்களுக்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டு இருக்கின்றன குறிப்பாக முஸ்லிம் அமைச்சராகவிருந்த தற்போதைய மாநகர சபை முதல்வர் ஒருவரின் வாகனத்தில் கூட பாதாள உலக குழுக்களுக்கு ஆயுதங்கள் கடத்தப்பட்டு இருக்கின்றது இந்த அட்டூழியங்களை அரச இராணுவ புலனாய்வு கட்டமைப்புகளே ஒருங்கிணைத்தன . அதாவது ஆட்சியாளர்களின் ஆசீர்வாதத்தோடு அரச இராணுவ புலனாய்வு கட்டமைப்புகளே இராணுவம் செய்ய முடியாத வேலைகளை செய்வதற்கு இவர்களை பயன்படுத்தினார்கள் அதன் அடிப்படையில் தான் மாமனிதர் ரவிராஜ் படுகொலை முதல் மாமனிதர் குமார் பொன்னம்பலம் வரையான பல்வேறு கொ*லைகளில் இராணுவம், ஒட்டுக்குழுக்கள் மட்டுமின்றி பாதாள உலக குழுக்களும் ஒருங்கிணைக்கப்பட்டு ஈடுபடுத்தப்பட்டன ஆனால் தற்போது தமிழ் முஸ்லிம் ஆயுத ஒட்டுக்குழுக்களின் தேவைகள் பொதுவில் முடிவடைந்த நிலையில் இராணுவத்தால் இயக்கப்பட்ட தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளான டக்ளஸ் தேவானந்தா முதல் பிள்ளையான் வரையான இராணுவ ஒட்டு குழு கூலிகளுக்கு கணக்கு தீர்க்கப்படுகின்றது ஆனால் இவர்களை இயக்கிய தரப்புகள் தொடர்ந்தும் மிக தெளிவாக பாதுகாப்பக வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் அவர்கள் புதிய நபர்களை அடையாளம் கண்டு அவர்களை பயன்படுத்தி சமூக நிர்வாக மட்ட குழப்பங்களில் ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார்கள். இனமொன்றின் குரல்
  3. காணொளி: 👉 https://www.facebook.com/100061934684688/videos/pcb.1185497690191376/2678679292485326 👈 சுமந்திரனின் தமிழரசு கட்சி பிரதேச சபை தவிசாளர் சோமபானத்தால் அசந்து வீதியில்… விழுந்து கிடக்கும் கண்கொள்ளா காட்சி. Vathsangan Pirabakaran சுத்துமாத்து சுமந்திரனின் அரசியல் வாரிசுக்கு.... சாராயத்தை ஊத்திக் கொடுத்து, காரியத்தை கச்சிதமாக ஆளும் கட்சி முடித்து விட்டது. 😂 இன்னும்... களை எடுக்க வேண்டிய, "அல்லக்கைகள்" நிறைய உள்ளது. எல்லாம் எடுத்து முடிய... தமிழரசு கட்சியின் கூடாரம் காலியாக விடும். 🤣
  4. தமிழரசுக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர். - சுமந்திரன் அதிரடி. - கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்த சின்னராசா லோகேஸ்வரன் என்பவரை கட்சி உறுப்புரிமையிலிருந்த நீக்குவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான கடிதமானது, அக்கட்சியின் பொதுச்செயலாளரான எம்.ஏ சுமந்திரனால் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகத்தின் தெரிவித்தாட்சி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடித்தில் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படுவதனால், வறிதாக்கப்படும் உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பாதீட்டிற்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானித்திருந்த நிலையில், லோகேஸ்வரன் ஆதரவாக வாக்களித்ததையடுத்து இந்த நீக்கம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. வாக்கெடுப்பின் போது குறித்த பாதீடு தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையில் தயாரிக்கப்பட்டது என விமர்சனங்கள் வலுத்திருந்ததாக கூறப்பட்டிருந்தது. Athavan Newsதமிழரசுக் கட்சி உறுப்புரிமையிலிருந்து அதிரடியாக நீக்கப்பட...கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்த சின்னராசா லோகேஸ்வரன் என்பவரை கட்சி உறுப்புரிமையிலிருந்த நீக்குவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான கட
  5. அரிய காட்சியை நாளை காணத் தவறாதீர்கள்: வருட முடிவில்.... செலென்ஸ்கிக்கு, அமெரிக்காவில் வைத்து... "விசேட சாத்துப்படி" நடக்க இருக்கின்றது. @குமாரசாமி 😂
  6. ஒற்றையாட்சியை திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டம் ஏற்படும் ––அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை.- இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் மீது ஒற்றையாட்சி முறையைத் திணிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிக்குமானால், மீண்டுமொரு ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு அது வழி வகுக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே, தற்போதைய அரசாங்கம், ஈழத் தமிழர்களுக்கு அர்த்தமுள்ள சுயாட்சியுடன் கூடிய கூட்டாட்சி அமைப்பை உறுதி செய்யவேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளின் சில தலைவர்கள், ஒற்றையாட்சி முறையை வலுப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்புத் திருத்தங்களைத் திட்டமிட்டு வருவதாகவும் அது, சிங்கள பெரும்பான்மைவாதத்தை மேலும் ஊக்குவிக்கும் என அன்புமணி அறிக்கையில் தெரிவித்துள்ளார். இரண்டு தேசிய இனங்கள் வசிக்கும் நாட்டில் இதுபோன்ற நடவடிக்கைகள் ஆபத்தானவை மற்றும் கண்டிக்கத்தக்கவை என்று அவர் கூறியுள்ளார். கடந்த 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நினைவு கூர்ந்துள்ள அன்புமணி, இந்த ஒப்பந்தம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பதன் மூலம் தமிழர்களுக்கு சுயாட்சியுடன் கூடிய கூட்டாட்சி அமைப்பைக் கருத்தில் கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், இலங்கை இதைத் தொடர்ந்து செயல்படுத்த மறுத்து வருவதாகவும் 13வது அரசியலமைப்பு திருத்தம், தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாகக் குறைத்து விட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். விடுதலைப் புலிகள் இல்லாத நிலையிலும், தமிழர் விடுதலைப் போராட்டத்தின் மூல காரணங்கள் நீடிப்பதாக அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இலங்கையில் சுயாட்சியை நிரந்தரமாக மறுக்கும் எந்தவொரு அரசியலமைப்பு மாற்றமும் ஈழத் தமிழர்களிடையே அடக்கப்பட்ட விடுதலை உணர்வுகளை மீண்டும் தூண்டிவிட்டு இலங்கையின் எதிர்காலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். https://athavannews.com/2025/1457334
  7. டொனால்ட் ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி இடையில் நாளை சந்திப்பு! உக்ரைன்-ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில் இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதேவேளையில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார். அதன்படி, போர் நிறுத்தம் தொடர்பாக 20 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கையை ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக உக்ரைன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பின் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று நிருபர்களிடம் பேசிய ஜெலன்ஸ்கி, இதனை உறுதி செய்துள்ளார். அதன்படி, 28 ஆம் திகதி (நாளை) அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ட்ரம்பை சந்திக்கிறேன் எனவும் 20 நிபந்தனைகளில் 90 சதவீத நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளோம் எனவும் இந்த சந்திப்பின் போது பொருளாதார ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்படும் எனவும் பிராந்திய பிரச்சினைகளையும் எழுப்ப உள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் குர்தா பேச்சுவார்த்தையில் டான்பாஸ் மற்றும் சபோரிஜியா அணுமின் நிலையம் குறித்து விவாதிக்கவுள்ளதாகவும் , மேலும் பிற பிரச்சினைகளையும் நிச்சயமாக விவாதிப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, இந்த பேச்சுவார்த்தை மூலம் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1457395
  8. காங்கேசன்துறை சிமெண்டிலை.... பலமாக பாலம் காட்டினாலும், புத்த பிக்குகள்.... பொறுத்த நேரத்தில், அத்திவாரத்தையே பேத்து விட்டு போயிடுவாங்கள்.
  9. ஒட்டுக்குழு தலைவன்... டக்ளஸ் தேவானந்தா, நாளைக்கு திங்கள்கிழமை மத்தியானம், தனது வீட்டில்... சோறும், ஆட்டு இறைச்சிக் கறியும் சாப்பிடுவார் என்று ஊர்க்கிழவி சொல்லுது. 😂 இலங்கை நீதித்தித்துறையின் "டிசைன்" அப்பிடியாம் என்கிறது கிழவி. 🤣 அவர் நாளை வெளியில் வராவிட்டால்.... தன்ரை "கூந்தலை", இனி முடியிறது இல்லை எண்டு சத்தியம் பண்ணி சொல்லுற படியால், நாங்கள் பொறுமையாக இருந்து பாப்பம். அது மட்டும்.... கொழுத்த வேண்டிய வெடிகளை, கொளுத்தி கொண்டாடுங்கோ.
  10. மகிந்தவுக்கு.... "விஸ்கி" ஊத்திக் குடுத்த ஆள் மாதிரி கிடக்கு. 😂
  11. யானைகள் இறப்பு விகிதத்தில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்! ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் இறக்கும் இலங்கை, தெற்காசியாவிலேயே அதிக யானை இறப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. யானை – மனித மோதல், சேதமடைந்த வேலிகள் மற்றும் காலநிலை பேரழிவுகள் தீவு நாட்டின் சின்னமான வனவிலங்குகளை நெருக்கடியை நோக்கித் தள்ளுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் 20,000 முதல் 27,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இலங்கையின் யானைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக (சுமார் 6,000 முதல் 7,000 வரை) உள்ளது. இருந்த போதிலும், இலங்கையில் ஆண்டுதோறும் உயிரிழக்கும் யானைகளின் விகிதம் இந்தியாவை விட மிக அதிகமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இது வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கொள்கை குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது. வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில் டிசம்பர் நடுப்பகுதி வரை 397 யானைகள் இறந்துள்ளன. இது 2024 ஆம் ஆண்டில் 386 முதல் 388 இறப்புகள் பதிவாகியதைத் தொடர்ந்து வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் நிலைமை மோசமான உச்சத்தை எட்டியது, இது 488 யானை இறப்புகளுடன் பதிவான மிக மோசமான ஆண்டாக உள்ளது. பெரும்பாலான யானை இறப்புகள் மனித யானை மோதலால் தொடர்ந்து நிகழ்கின்றன. துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள், சட்டவிரோத மின்சார வேலிகள், ரயில் மோதல்கள் மற்றும் உணவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் காரணமாக யானைகள் கொல்லப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த ஆண்டு மட்டும், 71 யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டன, 56 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்தன, 46 யானைகள் ரயில் விபத்துகளில் கொல்லப்பட்டன, 20 யானைகள் வெடி பொருட்களால் உயிரிழந்துள்ளன. இரண்டு யானைகள் விஷம் வைக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. குறிப்பாக கவலையளிக்கும் ஒரு சம்பவத்தில், மிஹிந்தலையில் உள்ள சீப்புகுளம் பகுதியில் மூன்று நபர்களால் தீ வைக்கப்பட்ட பின்னர் ஒரு யானை கடந்த வாரம் கொல்லப்பட்டது. ஏனைய யானைகளின் மரணங்கள் கைவிடப்பட்ட கிணறுகளில் வீழ்ந்து ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். டித்வா சூறாவளிக்குப் பின்னர் இந்த நிலைமை மோசமடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்தார். ஊடகங்களுக்குப் பேசிய அவர், மின்சார வேலிகள் சேதமடைந்ததால் யானைகள் கிராமங்களுக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறினார். மின்சார வேலி அமைப்பு முழுமையாக செயல்படவில்லை, மேலும் சில வனவிலங்கு பகுதிகள் இன்னும் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்றும் அவர் கூறினார். வனவிலங்கு அமைச்சினால் பராமரிக்கப்படும் சுமார் 5,700 கிலோமீட்டர் மின்சார வேலிகளில், 838 கிலோ மீட்டர் வேலிகள் சூறாவளியால் சேதமடைந்தன, அவற்றில் பாதி இப்போது சரிசெய்யப்பட்டுள்ளன. வெள்ளம் காரணமாக நான்கு யானைக் குட்டிகள் இறந்ததாகவும், ஆறு மீட்கப்பட்டதாகவும் யானைப் பாதுகாப்பு பிரதிப் பணிப்பாளர் யு.எல். தௌபிக் தெரிவித்தார். மனித யானை மோதலைக் குறைப்பதற்கும் இலங்கையில் மீதமுள்ள காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்கும் வலுவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசரத் தேவையை இந்த அறிக்கையின் மூலமாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை வலியுறுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1457285
  12. ஏராளனுக்கு… உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். 🙏
  13. மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தல்! இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் ‘தித்வா’ சூறாவளியினால் வட, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் மற்றும் நிவாரண வழங்கல் செயற்பாடுகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டறிந்தார். அதற்குப் பதிலளித்த தமிழ்ப்பிரதிநிதிகள் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் 3000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் அழிவடைந்திருப்பதாகவும், திருகோணமலையிலும் இதனையொத்த நிலை பதிவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். அதேபோன்று மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த அரசாங்கம், இன்னமும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ஜெய்சங்கரிடம் சுட்டிக்காட்டிய தமிழ்ப்பிரதிநிதிகள், மாகாணசபைத்தேர்தலைப் பழைய முறைமையில் நடாத்துவதற்கு ஏதுவாக இரா.சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை குறித்தும் எடுத்துரைத்தனர். அதுமாத்திரமன்றி மாகாணசபை முறைமையை நீக்கிவிட்டு, நிறைவேற்றதிகாரமுள்ள ஆளுநர் முறைமை உள்ளிட்ட வேறு முறைமைகளை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். எனவே இப்பேரனர்த்த சூழ்நிலையைக் காரணமாகக் குறிப்பிட்டு, அரசாங்கம் மாகாணசபைத்தேர்தல்களைப் பிற்போடுவதற்கு இடமளிக்கக்கூடாது என வேண்டுகோள்விடுத்த அவர்கள், ‘மாகாணசபைகள் என்பது இந்தியா பெற்ற பிள்ளை. நாங்கள் அதனை வளர்ப்பவர்கள் மாத்திரமே. எனவே அதனைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு இருக்கின்றது. ஆகவே மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ என்று வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1457101
  14. பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார் அர்ச்சுனா எம்.பி! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்றையதினம்(24.12.2025) சரணடைந்துள்ளார். பொலிஸில் சரண் குறித்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1457164
  15. பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்! கடுமையான வெப்பம் மற்றும் பரந்த பாலைவன நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற நாடான சவுதி அரேபியா அசாதாரண குளிர்கால அத்தியாயத்தை அனுபவித்து வருகின்றது. பனிப்பொழிவு, கனமழை மற்றும் கடுமையாக வீழ்ச்சியடைந்த வெப்பநிலை நாட்டின் பெரும்பகுதிகளை தற்சமயம் ஆக்கிரமித்து உள்ளது. இது குடியிருப்பாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது வேளையில் பாதுகாப்பு ஆலோசனைகளைத் தூண்டுவதற்கும் வழிவகுத்தது. இந்த அசாதாரண நிகழ்வு, காலநிலை மாற்றத்தைக் கையாளத் தயாராக இல்லாத பகுதிகளில் அசாதாரண வானிலையை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பனிப்பொழிவானது சவுதி அரேபியாவின் தபூக் மாகாணத்தில் உள்ள மலைத்தொடர்களின் தோற்றத்தை வியத்தகு முறையில் மாற்றியுள்ளது. குறிப்பாக ஜெபல் அல்-லாஸில் உள்ள ட்ரோஜெனா உட்பட, சுமார் 2,600 மீட்டர் உயரம் கொண்ட மலைப்பகுதிகள் பனியால் மூடப்பட்டிருந்தன. ஹெயில் நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட ஹெயில் பிராந்தியத்தின் சில பகுதிகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டது – இது மத்திய கிழக்கு நாட்டில் அரிதான நிகழ்வு. அதிகாலை நேரங்களில் சில இடங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறைந்தது, இதனால் உயர்ந்த நிலங்களில் பனி குவிவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டன. குளிர் காற்றுடன் பல பகுதிகளில் பரவலான மழைப் பொழிவு பதிவானது. பிர் பின் ஹெர்மாஸ், அல்-அய்னா, அம்மார், அல்உலா கவர்னரேட், ஷக்ரா மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் ரியாத், காசிம் மற்றும் கிழக்குப் பகுதியின் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. தேசிய வானிலை ஆய்வு நிலையத்தின் தகவலின்படி, ரியாத்தின் வடக்கே உள்ள அல்-மஜ்மா மற்றும் அல்-காட் ஆகிய இடங்களிலும் பனிப்பொழிவு காணப்பட்டது – அங்கு திறந்தவெளி பகுதிகளிலும் உயரமான நிலப்பரப்பிலும் பனி படிந்துள்ளது. இதேவேளை குடியிருப்பாளர்கள் அவதானமாக வாகனம் செலுத்துமாறும் வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிளில் வசிப்பதை மற்றும் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சவுதி அரேபியாவின் காலநிலை வரலாற்றில் ஒரு அரிய மற்றும் மறக்க முடியாத தருணத்தைக் குறிக்கிறது. இதேவேளை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) எதிர்பாராத குளிர்கால மழை, தெற்காசியாவில் வரலாறு காணாத வெப்ப அலைகள், பொதுவாக வறண்ட மத்திய கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்காவின் சில பகுதிகளில் ஏற்பட்ட அசாதாரண பனிப்பொழிவு நிகழ்வுகள், காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் வானிலை எவ்வாறு அடையாளம் காண முடியாததாக மாறி வருகிறது என்பதைக் காட்டுகின்றன. https://athavannews.com/2025/1457130
  16. ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை! நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கொழும்பு, கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவை கைது செய்து நீதிமன்றில் முன்னலைப்படுத்த இன்று உத்தரவிட்டார். https://athavannews.com/2025/1457050
  17. உக்ரேனின் முக்கிய பிராந்தியமான ஒடேசா மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா! தெற்கு உக்ரேன் பிராந்தியமான ஒடேசாவில் ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பரவலான மின்வெட்டு ஏற்பட்டு, பிராந்தியத்தின் கடல்சார் உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் துணைப் பிரதமர் ஒலெக்ஸி குலேபா, மொஸ்கோ இப்பகுதியில் “திட்டமிட்டு” தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறினார். மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்துவது, உக்ரேனின் கடல்சார் தளவாடங்களுக்கான அணுகலைத் தடுககும் மொஸ்கோவின் முயற்சி என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். டிசம்பர் மாத தொடக்கத்தில், கருங்கடலில் ரஷ்யாவின் நிழல் கடற்படை டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக உக்ரேனின் கடலுக்கான அணுகலைத் துண்டிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அச்சுறுத்தினார். “நிழல் கடற்படை” என்பது 2022 ஆம் ஆண்டு உக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்குப் பின்னர் விதிக்கப்பட்ட மேற்கத்திய தடைகளைத் தவிர்க்க ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான டேங்கர்களைக் குறிக்கும் ஒரு சொல். திங்கட்கிழமை (23) மாலை தாக்குதடல்கள் ஒடேசாவில் உள்ள துறைமுக உள்கட்டமைப்பைத் தாக்கி, ஒரு சிவிலியன் கப்பலை சேதப்படுத்தியதாக பிராந்திய ஆளுநர் கூறினார். இது நூற்றுக்கணக்கான தாக்குதல்களின் அண்மையது ஆகும் – இது இப்பகுதியில் பல நாட்களாக மின்சார விநியோகத்தை சீர்குலைத்து பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் 120,000 பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், ஒரு பெரிய துறைமுகத்தில் தீ விபத்துக்கும் வாழிவகுத்தது. இது டஜன் கணக்கான மாவு மற்றும் தாவர எண்ணெய் கொள்கலன்களை அழித்தது. கடந்த வாரம், ஒடேசாவின் கிழக்கே உள்ள பிவ்டென்னி துறைமுகத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர். இந்த வார தொடக்கத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் தனது மூன்று குழந்தைகளுடன் காரில் பயணித்த ஒரு பெண் கொல்லப்பட்டார். மேலும் உக்ரேன் மற்றும் மொல்டோவாவை இணைக்கும் ஒடேசா பிராந்தியத்தின் ஒரே பாலம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. https://athavannews.com/2025/1457017
  18. ஸ்விண்டனில் முன்னாள் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டில் கணவன் மீது 56 பாலியல் குற்றச்சாட்டு! தனது முன்னாள் மனைவிக்கு 13 ஆண்டுகளாக போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்தமைக்காக முன்னாள் டோரி கவுன்சிலர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் ஐந்து ஆண்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. வழக்கில் தற்போது லண்டன், என்ஃபீல்டில் வசித்து வரும் 49 வயதான பிலிப் யங் என்ற பிரதான சந்தேக நபர் மீது பாலியல் வன்புணர்வு உட்பட குறைந்தது 56 குற்றச்சாடுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வில்ட்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர். யங் முன்பு 2007 முதல் 2010 வரை ஸ்விண்டன் பெருநகர உள்ளூராட்சி அமைப்பின் கன்சர்வேடிவ் கவுன்சிலராக இருந்தார். அவர் 2010 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் கலாச்சாரம், மீளுருவாக்கம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான அமைச்சரவை உறுப்பினராக பதவி வகித்தார். அண்மையில் அவர் ஆலோசனை நிறுவனமான பிரசெடோவில் தலைமை இயக்க அதிகாரியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் யங் தவிர மேலும் ஐந்து ஆண்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களையும் இன்று ஸ்விண்டன் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வில்ட்ஷயர் பொலிஸார் மேற்கொண்டனர். https://athavannews.com/2025/1457042
  19. அமெரிக்கா – வெனிசுலா பதட்டம்; தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்! சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது திங்கட்கிழமை (22) 4,400 அமெரிக்க டொலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் மென்மையான பணவியல் கொள்கை ஆகியவை இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய உந்துதல்களாக அமைந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஸ்பாட் தங்கம் திங்கள் மதியம் 1:54 மணிக்கு (18.54 GMT) அவுன்ஸ் ஒன்றுக்கு 2.2% உயர்ந்து $4,434.26 ஆக இருந்தது. இதற்கு முன்பு அது $4,441.92 என்ற உச்சத்தை எட்டியது. அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 1.9% உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு $4,469.40 ஆக விற்பனை செய்யப்பட்டது. அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையிலான அதிகரித்த புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் குறுகிய கால இடைவேளையில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற காலங்களில் தங்கம் ஒரு பாதுகாப்பான சொத்தாக செழித்து வளர்கிறது. வலுவான அமெரிக்க மத்திய வங்கி கொள்முதல், பாதுகாப்பான புகலிட ஓட்டங்கள் மற்றும் குறைந்த வட்டி விகிதங்கள் ஆகியவற்றால் தூண்டப்பட்ட 1979க்குப் பின்னர் அதன் மிகப்பெரிய வருடாந்திர உயர்வில் தங்கத்தின் விலை இந்த ஆண்டு 69 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதேநேரம், 69.44 டொலர்கள் என்ற புதிய உச்சத்தை எட்டிய பின்னர், ஸ்பாட் வெள்ளி 1.9% உயர்ந்து $68.40 ஆக இருந்தது. இந்த ஆண்டு இதுவரை அதன் விலைகள் 136% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. இந்தியாவில் பண்டிகைக் காலத்தில் அதிகரித்து வரும் வெள்யின் தொடர்ச்சியான விநியோக-தேவை பற்றாக்குறை மற்றும் இறக்குமதி தேவை என்பன வெள்ளியின் அண்மைய விலை உயர்வுக்கு காரணமாக உள்ளன. இதேவ‍ேளை, பிளாட்டினத்தின் விலை 5.4% உயர்ந்து $2,079 ஆக இருந்தது – 17 ஆண்டுகளுக்குப் பின் மேலான அதிகபட்சத்தை எட்டியது. அதே நேரத்தில் பல்லேடியம் 2.1% உயர்ந்து $1,748.84 ஆக உயர்ந்து – கிட்டத்தட்ட மூன்று ஆண்டு உயர்வை எட்டியது. இலங்கை விலை விபரம்! கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 352,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 325,600 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1457032

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.