Everything posted by தமிழ் சிறி
-
உள்நாட்டு யுத்த காலத்தை விட தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- சாகர காரியவசம்!
உள்நாட்டு யுத்த காலத்தை விட தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- சாகர காரியவசம்! தமிழீழ விடுதலை புலிகள் கூட அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளைக் கொலை செய்யவில்லை போர்க் காலத்தை விடவும் தற்போது பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். வெலிகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது படு பயங்கரமாகும் எனவும் தமக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தவிசாளர் லசந்த விக்கிரமசேகர கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அது வழங்கப்படாத சூழ்நிலையிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். நாட்டில் 30 வருடகாலம் போர் நிலவியது. இந்தக் காலப்பகுதியில் விடுதலை புலிகள் கூட இவ்வாறு அச்சமின்றி அலுவலகங்களுக்குள் புகுந்து தமது எதிரிகளை கொல்லவில்லை. ஆனால், இந்த அரசாங்க ஆட்சியின் கீழ் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், அரசாங்கம் நாட்டை அராஜக நிலைக்குக் கொண்டு செல்வதற்காகப் பாதாளக் குழு என்ற போர்வையில் தமக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் இதன்போது கூறியுள்ளார். மக்கள், நாய் பூனைகள்போல சுட்டுக்கொல்லப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் பாதாளக் குழுக்களை ஒடுக்குகின்றோம் என்ற போர்வையில் அக்குழுக்கள் பலப்படுத்தப்படுகின்றனவா என்ற சந்தேகமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1451060
-
நாட்டில் குறைவடைந்து வரும் திருமணம், பிறப்பு வீதங்கள்!
நாட்டில் குறைவடைந்து வரும் திருமணம், பிறப்பு வீதங்கள்! 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் திருமணங்கள் மற்றும் பிறப்புக வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 1இலட்சத்து 39ஆயிரத்து 290 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8 சதவீத குறைவாகும் என தரவுகள் குறிப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த 2022 ஆம் ஆண்டு, பொருளாதார நெருக்கடியின் காலத்தில், நாடு முழுவதும் 1இலட்சத்து 71ஆயிரத்து 140 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. முன்னதாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிபர தரவுகளின்படி பிறப்புகளிலும் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டில் 2 இலட்சத்து 20ஆயிரத்து 761 பிறப்புகள் பதிவாகியுள்ளன. இது 2020 ஆம் ஆண்டில் பதிவான 3 இலட்சத்து ஆயிரத்து 706 பிறப்புகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாகும். https://athavannews.com/2025/1451063
-
ஆஸ்திரேலிய முதலீட்டாளரின் சொத்துக்களை மோசடி செய்த இருவர் கைது!
ஆஸ்திரேலிய முதலீட்டாளரின் சொத்துக்களை மோசடி செய்த இருவர் கைது! மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்த குற்றச்சாட்டுகளில் மன்னார் நானாட்டான் பகுதியை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களை நேற்று (24) மாலை முருங்கன் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில்,குறித்த இரு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு, ஓமந்தை மற்றும் ஆலம்பில் பகுதிகளில் பல வணிகங்களை ஆரம்பிக்க ஆஸ்திரேலிய முதலீட்டாளர் குறித்த நபர்களுக்கு நிதி வழங்கியிருந்தார். இந்த வணிக முயற்சிகளில் நான்கு வன்பொருள் கடைகள், இரண்டு பெரிய தன்னந்தோட்டம் , ஒரு பால் பண்ணை, ஒரு நெல் வயல் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் அடங்குவதுடன் இவற்றிற்காக சுமார் 180 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் தற்போது அது மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டாளர் கூறியுள்ளார். இந்நிலையில் குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் முக்கிய சந்தேக நபர் ஒருவரும் அவரது மனைவியும் தற்போது தலைமறைவாகியுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ஏனைய இரு சந்தேக நபர்களையும் முருங்கன் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நேற்று (24) மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். https://athavannews.com/2025/1451058
-
இலங்கைக்கு பரிசாக வழங்கிய யானைகளை மீண்டும் திரும்பப் பெற தாய்லாந்து நடவடிக்கை!
மேலே உள்ள மூன்று படத்திலும் Tikiri எனப்படும் ஒரே யானைதான். 70 வயதான அந்த நோய் வாய்ப்பட்ட யானைக்கு, பட்டுத் துணிகளால் போர்த்தி கண்டி பெரஹரா நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கு பற்ற வைத்தவன்தான் சிங்களவன். சிங்களவனிடம்... மனிதாபிமானமும் இல்லை, மிருக அபிமானமும் இல்லை என உணர்த்திய செயல் அது. சில வருடங்களுக்கு முன் அந்த யானை இறந்து விட்டது.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அப்பா எங்கே? வேலைக்குப் போய் விட்டாரா....? குடும்பப் புகைப்படம் எடுக்கும் போது ... அப்பா, வீட்டில் நிற்கும் நேரமாக பார்த்து எடுங்கள். 😂
-
கருத்து படங்கள்
- இலங்கைக்கு பரிசாக வழங்கிய யானைகளை மீண்டும் திரும்பப் பெற தாய்லாந்து நடவடிக்கை!
இலங்கைக்கு பரிசாக வழங்கிய யானைகளை மீண்டும் திரும்பப் பெற தாய்லாந்து நடவடிக்கை! தாய்லாந்து பரிசாக வழங்கிய இரண்டு யானைகளை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதற்காக தாய்லாந்து அரசாங்கம் இலங்கையுடன் எதிர்வரும் 28 ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இலங்கையில் குறித்த யானைகள் மேசமாக பராமறிக்கப்படுவதாகவும், தவறாக நடத்தப்படுவதாகவும் வெளியான செய்திகளைத் தொடர்ந்து அவற்றை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வர தாய்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. தாய்லாந்து யானைகளான Plai Pratu Pha மற்றும் Plai Srinarong ஆகியவற்றின் நலன் குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், தாய்லாந்தின் பிரதிப் பிரதமரும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சருமான Suchart Chomklin வியாழக்கிழமை (23) தனது முகநூல் பக்கத்தில் அவசரமாக இலங்கைக்கு விமானத்தில் செல்ல திட்டமிட்டுள்ளதாக பதிவிட்டார். கடந்த ஆண்டு தாய் யானை மீட்புக் குழுவால் இந்த கவலைகள் முதலில் வெளிப்படுத்தப்பட்டன. தாய்லாந்தால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட யானைகள், அதிகமாக வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டு, சரியான வாழ்க்கைத் தரங்கள் இல்லாமல் உள்ளன என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது. விலங்குகள் எல்லா நேரங்களிலும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்காக அவை உடனடியாக தாய்லாந்திற்குத் திரும்ப வேண்டும் என்று அந்தக் குழு வலியுறுத்தியது. இந்த நிலையில் இது தொடர்பான நேற்றைய முகநூல் பதிவில் தாய்லாந்தின் பிரதிப் பிரதமர், யானைகளின் நிலைமையினை பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் மற்றும் பிற தாய்லாந்து அரசு நிறுவனங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இந்தப் பிரச்சினையைப் புறக்கணிக்கவில்லை என்றும் விளக்கினார். யானைகளை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுடனும் ஒருங்கிணைக்க இராஜதந்திர முயற்சிகளுக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் அனுடினுடன் இந்த விடயத்தைப் பற்றி விவாதித்ததாகவும் கூறினார். எனினும், இந்த செயல்முறைக்கு சிறிது நேரம் ஆகலாம் என்று அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்களுடன் இணைந்து யானைகளின் உடல்நலம் குறித்து மதிப்பிடுவதற்காக இலங்கைக்கு செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். யானைகளை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான இராஜதந்திர விவாதங்கள் தொடரும் வரை, உள்ளூர் பராமரிப்பாளர்கள் அவற்றுக்கு முறையான பராமரிப்பை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பிரதமர் Suchart Chomklin தெளிவுபடுத்தினார். https://athavannews.com/2025/1451029- நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களை வரவேற்கத் தயார் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களை வரவேற்கத் தயார் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவில் இருக்கும் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் அரசாங்கம் வரவேற்கத் தயாராகவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் நடைபெறும் நிகழ்வொன்றுக்காக தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதி அமைச்சர், அங்கு ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர், இலங்கை அரசு பொருளாதாரத்தில் சிக்கலான சூழலில் இருந்த போது இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ளது. மலையக தமிழர்களுக்கு இந்தியா சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் இலங்கை வந்த இந்திய பிரதமர் பல்வேறு நிதி உதவிகள் உள்ளிட்ட உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார். தற்போது பொருளாதார சிக்கலில் இருந்து இலங்கை வேகமாக மீண்டு வருகிறது. நாட்டில் இலஞ்சம் முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பிரதிநிதிகளின் செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டு வீண் விரையம் தவிர்க்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களை போல் செயல்படுகின்றனர். இலங்கையில் இருந்த இரட்டை சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கடந்த கால ஆட்சியாளர்கள் ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள் தவறு செய்ததால் அவர்களை சிறையில் அடைக்கப்பட்டதன் பின் அனைவருக்கும் நீதி சமம் என்பதை உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தற்போதய ஒதுக்கீட்டில் வடமாகாணத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கு ஏராளமான பணிகள் நடந்து வருகிறது, சர்வதேச விளையாட்டு மையம் யாழ்ப்பாணம் பகுதியில் அமைக்கப்பட்டு வருகிறது. இலங்கை – இந்திய மீனவர் பிரச்சனையை ஒதுக்கி வைத்து மீன்வளம் கடல் வளம் குறித்து அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மீன்வளத்தை பாதிக்கும் வகையிலான திட்டங்களை தடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியா – இலங்கை என இரு நாடுகளும் அரசியல் ரீதியாக ஒற்றுமையாக உள்ளது. இரண்டு நாட்டு அரசும் மீனவர் பிரச்சனையை பேசி முடிக்க நடவடிக்கைகள் எடுக்க இருக்கிறோம். இந்திய இலங்கை மீனவர்கள் இடையேயான பிரச்சனை சகோதரர்களுக்குள் இருக்கும் பிரச்சனை தான் உள்ளது. பேசி சுமுகமான முடிவை எட்ட முடியும். இலங்கை – இந்தியா என இருநாட்டு மக்கள் உறவுகாரர்கள். ஏன் மீனவர் பிரச்சனையை மட்டும் வைத்து பகைமை உண்டாக்க வேண்டும். இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புடன் உள்ளது. இலங்கையை சீனா ஆக்கிரமித்துள்ளதாக சொல்வது அனைத்தும் பொய் சுயாதீனமான நாடாக இலங்கை உள்ளது. மற்ற அனைத்து நாடுகளும் முதலீடுகளும் உதவிகளையும் செய்வதை வைத்து அந்த நாடுகள் இலங்கையை ஆக்கிரமிப்பு செய்துள்ளது என சொல்லக்கூடாது. இலங்கை அகதிகளுக்கு இந்திய மற்றும் தமிழக அரசு பெரு உதவிகள் செய்து வருகிறது. இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவில் இருக்கும் மக்கள் மீண்டும் தாயகம் திரும்பினால் இலங்கை அரசாங்கம் வரவேற்கத் தயாராக உள்ளது. இலங்கை மக்களின் கோரிக்கை குறித்து இரு நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார். https://athavannews.com/2025/1451026- இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட படகு கண்டுபிடிப்பு! கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி இந்தியாவுக்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு படகினை கண்டுபிடித்துள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது இந்த படகு கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் படகு, பிரியங்கா என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது 400 குதிரை வலுவினை கொண்ட இயந்திரத்தைக் கொண்டுள்ளது. இதற்கிடையில், செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் ஆனந்தன் என்ற சந்தேக நபரிடமிருந்து இரண்டு நவீன துப்பாக்கிகளையும் புலனாய்வாளர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணைகளில், ஆனந்தன் முன்னர் பல சந்தர்ப்பங்களில் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நபர்களை இந்தியாவிற்கு சட்டவிரோதமாக கடல் வழியாக அனுப்ப உதவியதாக தெரியவந்துள்ளது. https://athavannews.com/2025/1451009- Lemon வால் நட்சத்திரத்தை இலங்கையர்களும் காணும் வாய்ப்பு!
Lemon வால் நட்சத்திரத்தை இலங்கையர்களும் காணும் வாய்ப்பு! ‘Lemon’ என்றும் அழைக்கப்படும் ‘C/2025 A6’ வால் நட்சத்திரத்தை தற்போது மாலை வானில் இலங்கையர்களும் காண முடியும் என்று விண்வெளி விஞ்ஞானியும் பொறியியலாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னர், மாலை 6.30 மணி முதல் சுமார் 30 தொடக்கம் 45 நிமிடங்கள் வரை இந்த வால் நட்சத்திரம் அடிவானத்திற்கு அருகில் தெரியும். மழை இல்லாத தெளிவான மாலை நேரங்களில் இலங்கையின் மேற்கு கடற்கரையிலிருந்து இந்த வால் நட்சத்திரத்தை எளிதாகக் காணலாம் என்றும் அவர் மேலும் கூறினார். 2025 ஜனவரி மாதம் அமெரிக்காவில் உள்ள மவுண்ட் லெமன் ஆய்வகத்தில் இந்த இந்த வால் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டமையினால் அதற்கு Lemon என்று பெயரிடப்பட்டுள்ளது. இது சுமார் 90 மில்லியன் கிலோ மீட்டர்கள் அல்லது பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தில் சுமார் 60% தூரத்திற்குள் உள்ளது. இது தற்போது அதன் முதன்மையான பார்வைத் திறனில் உள்ளது. நாசாவின் கூற்றுப்படி, Lemon வால் நட்சத்திரம் சுமார் 1,350 ஆண்டுகளுக்குப் பின்னர் நமது சூரிய மண்டலத்திற்குள் திரும்பி வருகிறது. இது நவம்பர் 8 ஆம் திகதி சூரியனுக்கு மிக அருகில், சுமார் 80 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் வரும். பொதுவாக, வால் நட்சத்திரங்கள் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும்போது பிரகாசமாக பிரகாசிக்கும். இருப்பினும், Lemon வால் நட்சத்திரம் அதற்கு முன்பே பூமியை நெருங்கும் என்பதால், அது இரவு வானத்தைக் கடக்கும்போது அதன் பிரகாசத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1451006- ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 25க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழப்பு!
ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 25க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழப்பு! ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னத்தேகூர் அருகே இன்று (24) அதிகாலை தனியார் சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹைதராபாத்திலிருந்து பெங்களூரு நோக்கி சுமார் 20 பயணிகளுடன் சென்ற குறித்த பேருந்து இன்று அதிகாலை 03.30 மணியளவில் எதிர் திசையில் வந்த மோட்டர் சைக்கிளுடன் மோதுண்டு தீப்பிடித்ததாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது. விபத்தினை அடுத்து பேருந்தின் முன்பக்கத்திலிருந்து உடனடியாக தீப்பிழம்புகள் எழுந்து, வேகமாகப் பரவி, எரிபொருள் தொட்டி வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அனர்த்தத்தில் மேலும் பலர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கர்னூல் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்தில் பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து (PMNRF) தலா ரூ.2 இலட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். https://athavannews.com/2025/1451016- இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=1478446303380793 👈 அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்ட பெக்கோ சமனின் புத்தம் புதிய அதி சொகுசு பஸ்கள்.- இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
பெக்கோ சமனுக்கு சொந்தமான சொகுசு பேருந்துகள் பறிமுதல்! பெக்கோ சமனுக்கு சொந்தமான 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 2 சொகுசு பேருந்துகளை மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. அவற்றில் ஒரு பேருந்து, கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வெளிநாட்டவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குறித்த பேருந்தின் பெறுமதி 5 கோடி ரூபாவிற்கும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், சுமார் 2.5 கோடி ரூபா பெறுமதியான மற்றைய பேருந்து மொனராகலை – கொழும்பு இடையில் பயணிகள் போக்குவரத்திற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ‘பெக்கோ சமன்’ கைது செய்யப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த பேருந்துகளில் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த இரண்டு பேருந்துகளும் வேறு நபர்களின் பெயர்களைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, குறித்த பேருந்துகள் தனக்குச் சொந்தமானவை என ‘பெக்கோ சமன்’ ஒப்புக்கொண்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவின் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல மற்றும் அதன் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம பொலிஸ் பரிசோதகர் லின்டன் சில்வா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றன. https://athavannews.com/2025/1450994- அதென்ன குதிரை திறன்? ஏன்... கழுதை திறன், புலி திறன், சிங்க திறன், இருக்கக் கூடாதா?
குதிரைத் திறன் (HP) என்பது திறனை (Power) அளவிடும் ஒரு அலகு ஆகும். இது குறிப்பாக இயந்திரங்கள், மோட்டார்கள் மற்றும் வாகனங்களின் திறனை அளவிடப் பயன்படுகிறது. குதிரைத் திறன் என்றால் என்ன? * திறன் (Power): திறன் என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்யப்படும் வேலையின் வீதம் ஆகும். * வரையறை: ஒரு குதிரைத் திறன் (1 \ HP) என்பது, ஒரு குதிரை தொடர்ச்சியாகச் செய்யக்கூடிய சராசரி வேலையின் அளவை அடிப்படையாகக் கொண்டது. * இதன் அசல் வரையறையின்படி: 550 பவுண்டுகள் எடையுள்ள பொருளை ஒரு வினாடியில் 1 அடி தூரம் தூக்குவதற்கு ஒரு குதிரை பயன்படுத்தும் திறனுக்குச் சமம். * வாட்ஸுடனான தொடர்பு: குதிரைத் திறனின் சர்வதேச அலகு (SI) அமைப்பில் உள்ள அலகான வாட்ஸ் (Watts) உடன் ஒப்பிடும்போது, * 1 \ HP \ \approx \ 746 \ \text{வாட்ஸ்} \ (W) அல்லது 0.746 \ \text{கிலோவாட்} \ (kW) ஆகும். குதிரைத் திறன் ஏன் என்று அழைக்கப்படுகிறது? (வரலாறு) * ஜேம்ஸ் வாட்: ஸ்காட்டிஷ் கண்டுபிடிப்பாளரான ஜேம்ஸ் வாட் (James Watt) என்பவரால் 18-ஆம் நூற்றாண்டில் இந்த அளவீடு உருவாக்கப்பட்டது. இவர் தான் நீராவி இயந்திரத்தையும் மேம்படுத்தியவர். * தேவை: நீராவி இயந்திரங்களை அறிமுகப்படுத்தியபோது, அந்த இயந்திரங்களின் திறனைப் பற்றி மக்களுக்குப் புரியவைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்குப் பழக்கப்பட்ட ஒரு அளவுகோல் தேவைப்பட்டது. * ஒப்பீடு: அப்போது, சுரங்கங்களிலிருந்து நீரை வெளியேற்றுவது போன்ற வேலைகளுக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வந்த குதிரைகளின் வேலை செய்யும் திறனுடன் தனது நீராவி இயந்திரத்தின் திறனை வாட் ஒப்பிட்டார். * பெயர் காரணம்: ஒரு சராசரி குதிரை எவ்வளவு வேலை செய்ய முடியுமோ, அந்த அளவைத் தரநிலையாகக் கொண்டு, அதற்குச் சமமான இயந்திரத்தின் திறனைக் குறிக்க "குதிரைத் திறன் (Horse Power)" என்ற பெயரைத் தேர்வு செய்தார். இந்த வரலாற்றுப் பின்னணியின் காரணமாகவே, நவீன வாகனங்கள், மோட்டார்கள் போன்றவற்றுக்கு வேறு எந்த விலங்கின் பெயரையும் பயன்படுத்தாமல், இன்றளவும் குதிரைத் திறன் (HP) என்ற அலகே பயன்படுத்தப்படுகிறது. Sujath ############### ###################### அதுமட்டுமல்ல : முக்கியமான ஒரு பாயிண்ட்டை நீங்கள் விட்டுவிட்டீர்கள். *சிறுத்தை உணவு க்காக தனது இரையை துரத்திக் கொண்டு ஓடும். *மான் தனது உயிரை காத்துக் கொள்வற்காக தலை தெறிக்க ஓடும்.ஆனால்! இவையெல்லாம் முதுகில் அதிக எடைகளை சுமந்து கொண்டோ, அல்லது இழுத்துக்கொண்டோ ஓடுவதில்லை. ஆனால்! குதிரை அப்படியில்லை. தனியே வேகமாய் ஓடும் திறனும் உண்டு. மனிதர்களை முதுகில் சுமந்து கொண்டு ஓடும் திறனும் உண்டு.வண்டியில் பூட்டி ஒட்டினாலும் அதில் வைத்த கனமான எடையையும் இழுத்துக் கொண்டு ஓடும் திறனும் உண்டு. அதனால் தான் மோட்டார், எஞ்சின், வண்டி, வாகனங்களை புல்லிங் பவர் அடிப்படையில் குறிப்பிடும் போது... இத்தனை "குதிரை சக்தி", அதாவது இவ்வளவு "horse power" என்று கெப்பாசிட்டி அடிப்படையில் குறிப்பிடுகிறார்கள். நசிகேதன் நடராஜன்- அதென்ன குதிரை திறன்? ஏன்... கழுதை திறன், புலி திறன், சிங்க திறன், இருக்கக் கூடாதா?
அதென்ன குதிரை திறன்? ஏன் கழுதை திறன், புலி திறன், சிங்க திறன், இருக்கக் கூடாதா? எனது பள்ளி நாட்களில் நான் இப்படித்தான் சிந்தித்தேன்! மிக அருமையான வினா! குதிரையை விட வேகமாக ஓடி, அடித்துத் தின்னும் வலிமை படைத்த, புலி, சிங்கம் ஆகிய வலிமையான விலங்குகள் பெயரில் திறன்-அலகு தீர்மானிப்பதுதானே இயல்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும்! இன்னும் சொல்லப்போனால், சிறுத்தைகள், ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும்! ஏன் இவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு, குதிரைத்திறன் - HorsePower என்று சொன்னார்களோ? ஒருவேளை, திறன்-அலகு தீர்மானித்தவர்கள், சைவர்களாக இருப்பார்களோ? அப்போதும் உதைக்கிறதே! குதிரையைவிட வேகமாக ஓடும் மான்கள் இருக்க, குதிரைக்கு ஏன் ஓட்டு விழ வேண்டும்? ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும் சிறுத்தையும், மணிக்கு 60 மைல் வேகத்தில் ஓடும் சிங்கம், புலி போன்ற விலங்குகள், சில-நிமிட நேரத்திலேயே, சோர்வடைந்து, வேகம் குறைந்து நின்றுவிடும். இவற்றுக்கு, அதிக-வேக ஓட்டத்தை, வெகுநேரம் தாக்குப்பிடிக்கும் திறன் - STAMINA - இல்லை! குறுகிய தூரத்துக்குள் அடிக்க இயலவில்லை என்றால், இவற்றின் இரை-விலங்குகள் தப்பிவிடும்! மாறாக, மற்ற எல்லா விலங்குகளிடமும் இல்லாத ஒரு திறன் குதிரையிடம் உண்டு! சீராக, ஒரே வேகத்தில், நீண்ட நேரம் ஓடக் கூடிய திறன் - STAMINA, குதிரையிடம் மட்டுமே உண்டு! எனவேதான், குதிரைத்திறன் (HORSE POWER) திறன்-அலகாகக் கொள்ளப்படுகின்றது! வெகுநேரம் தாக்குப் பிடிக்கும் திறனில், குதிரைக்கு இணையான விலங்குகள் இவ்வுலகில் இல்லை. Umamahesvari Ck- இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
கனேமுல்ல சஞ்சீவ என்பவன் யார்..? ஏன் கொலைசெய்யப்பட்டார்..? கனமுல்ல சஞ்சீவ நீதிமன்றத்துக்குள் சினிமா பாணியில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான பல தகவல்களை நிறைய இடங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த கனேமுல்ல சஞ்சீவ கொழும்பின் பாதாள உலக கோட் பாதராக தன்னை நிலைநாட்டிக்கொள்ள முயற்சித்தவர். 30 க்கும் அதிகமான கொலை சம்பவங்களில் கூலி கொலைகாரராக இவர் செயல்பட்டதாக தகவல்கள் இருக்கின்றன. *திட்டமிட்ட ஒரு கும்பலோடு சேர்ந்து தனியார் வங்கியொன்றில் 7 கோடி ரூபா கொள்ளையிட்ட சம்பவத்தில் இவர் கைதானவர். சிறைக்கு சென்ற சஞ்சீவ அப்போதைய கொழும்பின் பாதாள கோட் பாதர்களான “பிளூமெண்டல் சங்க, ஆர்மி சம்பத்” ஆகியோரது அடியாளாக வெளியில் வருகின்றார். அதன் பின்னர் கட்டம் கட்டமாக கொழும்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சஞ்சீவ முயட்சிகளை செய்தாலும் அதற்கு தடையாக தெமட்டகொட சமிந்த (இவரும் பாதாள உலக உறுப்பினர்) தடையாக இருக்கிறார். எனவே சமிந்தவை கொலை செய்ய சஞ்சீவ முயற்சி செய்தார். முதல் சம்பவமாக தெமட்டகொட இறைச்சிக்கடைக்கு முன்னாள் வாகனத்தில் வந்து துப்பாக்கி சூடு நடத்தினார். ஆனால் சமிந்தவின் தம்பி ருவன், சஞ்சீவவுக்கு முன்னர் வந்தார் எதிரில் இருந்து சஞ்சீவ வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனால் இவர்களின் அடியாள் ஒருவர் உயிரிழந்தாலும் தெமட்டகொட சமிந்த உயிர் தப்பினார். இந்த சம்பவத்தின் பின்னர் சஞ்சீவ உட்பட குழு போலி கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொண்டு துபாய் சென்றனர். ஆனால் குறுகிய நாட்களுக்கு பின்னர் மீண்டும் சஞ்சீவ இலங்கை வந்தார். மீண்டும் சமிந்தவை கொலை செய்ய முயன்றார். பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் சமிந்த ஆஜராகி மீண்டும் சிறைக்குச் சென்றுகொண்டிருந்த பஸ் வண்டியை தெமட்டகொட பகுதியில் பாதை நடுவில் இடைமறித்து பஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர் இந்த சஞ்சீவ உட்பட அவரது குழு. அங்கேயும் சமிந்த உயிர்தப்பிய நிலையில் குற்றவாளிகளை தேடி போலீசார் வலைவீச ஆரம்பித்தனர். குறுகிய காலத்துக்குள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதில் இந்த சஞ்சீவவும் இருந்தார். மீண்டும் சிறைக்குச் சென்ற சஞ்சீவ கொழும்பை கைவிட்டுவிட்டு கம்பஹா மாவட்ட பாதாள செயட்பாடுகளை தனக்குக் கீழ் கொண்டுவர முயற்சி செய்தார். அங்கே அவருக்கு தடையாக இருந்தவர்தான் ஒஸ்மான் என்பவர். 2018 ஏப்ரல் மாதம் ஒஸ்மான் மீதும் துப்பாக்கிச்சூட்டு நடத்தினார் சஞ்சீவ. அதற்காக தனது அடியாட்களான “அஜா மற்றும் சூளா” என்பவரையே பாவித்தார். இதுவே சஞ்சீவவின் சாதாரணமான பின்னணி. இவருடைய திட்டங்களின் அடிப்படையில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கிலிட முடியாதவை. 30 க்கும் அதிகம் என்று ஒரு புறம் சொல்லப்படுகிறது. போதைப்பொருள் வியாபாரம், கப்பம் பெறுதல், கொலைகள் என்பவற்றை பகிரங்கமாக செய்த இவர் கடந்த செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். இன்னுமொரு கொலைவழக்கு தொடர்பில் பூஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் இலக்கம் 05 நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டு சாட்சியம் வழங்கிக்கொண்டிருந்தார். குற்றவாளிக்கூண்டில் நின்றுகொண்டிருந்த நிலையில்தான் சட்டத்தரணி வேடம் அணிந்த துப்பாக்கி தாரி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். குற்றவாளிக்கூண்டுக்கு மிக அருகில் சென்றுதான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி தாரி அருகில் சென்றாலும் ஒருவேளை சஞ்சீவவின் சட்டத்தரணியாக இருக்கலாம் என்றே அநேகர் நம்பியுள்ளனர். எவ்வராயினும் கத்தியெடுத்தவனுக்கு கத்தியால் சாவு என்பார்கள். இங்கே அதுதான் நிறைவேறியுள்ளது. Thenral MH ·- தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!
தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான சரிவு; ஒரு பவுண் 335,000 ரூபா! இந்த வார தொடக்கத்தில் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான சரிவைக் கண்ட பின்னர் வியாழக்கிழமை (23) தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து சரிந்தன. நீண்ட கால ஏற்றத்தால் இரு உலோகங்களும் சாதனை உச்சத்தை எட்டிய பின்னர், பரந்த சந்தை பலவீனத்தின் மத்தியில் முதலீட்டாளர்கள் இலாபத்தை பதிவு செய்யத் தூண்டியதைத் தொடர்ந்து இந்த சரிவு வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை (21) தங்கத்தின் விலை ஒரு நாளில் ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு அதிகமாக சரிந்தது. அதே நேரத்தில் வெள்ளி 2021 பெப்ரவரிக்குப் பின்னர் ஒரு நாள் மிக மோசமான சரிவைப் பதிவு செய்தது. புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகளுக்கான எதிர்பார்ப்புகள் ஆகியவற்றால் இந்த ஆண்டு தங்கத்தின் விலைகள் பல சாதனை உச்சங்களை எட்டியதுடன், 57% அதிகரித்தது. முந்தைய அமர்வில் $4,381.21 என்ற சாதனை அளவை எட்டிய பின்னர், செவ்வாயன்று தங்கத்தின் விலைகள் 5.3% சரிந்தன. அத்துடன், வியாழக்கிழமை (23) காலை வர்த்தகத்தில் தங்கத்தின் விலைகள் குறைந்து வர்த்தகமாகின. GMT நேரப்படி அதிகாலை 1:44 மணி நிலவரப்படி, ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.3% குறைந்து $4,082.95 ஆகவும், டிசம்பர் டெலிவரிக்கான அமெரிக்க தங்க எதிர்காலம் 0.8% உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு $4,097.40 ஆகவும் இருந்தது. தங்கத்தின் விலை சரிவு, ஏனைய உலோகங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்பாட் வெள்ளி ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு 0.4% சரிந்து $48.31 ஆக இருந்தது, இந்த மாத தொடக்கத்தில் சாதனை உச்சத்தை எட்டிய பின்னர் அதன் சரிவை நீட்டித்தது. பிளாட்டினம் ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு 1.4% சரிந்து $1,598.65 ஆகவும், பல்லேடியம் ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு 1.4% சரிந்து $1,438.47 ஆகவும் இருந்தது. அமெரிக்க பணவீக்க தரவுகள் மற்றும் மத்திய வங்கி கொள்கை புதுப்பிப்புகளை வர்த்தகர்கள் மதிப்பிடுவதால், தங்கத்திற்கான குறுகிய கால போக்கு நிலையற்றதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். பணவீக்கம் தணிந்து, பெடரல் ரிசர்வ் விகிதங்களில் மென்மையான நிலைப்பாட்டைக் காட்டினால், தங்கத்தின் விலையானது மீண்டும் நிலையான நிலைக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. இலங்கை விலை விபரம்! கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 335,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 307,00 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1450955- துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!
நினைத்துப் பார்த்திருக்க முடியாத..... பல பாதாள உலக கோஷ்டிகளின் தலைவர்களையும், அவர்களின் அடியாட்களையும்... அனுர அரசு கைது செய்திருக்கும் நிலையில்... விசாரணையின் பிடிகள் இறுக... அடுத்த கட்டமாக, இயக்கிய தம்மை இவர்கள் அடையாளம் காட்டி விடுவார்கள் என்ற முன் எச்சரிக்கையுடன் பழைய கொழுத்த அரசியல்வாதிகள் இக்கொலையை செய்திருக்கலாம் என்று ஏன் நீங்கள் சிந்திக்கவில்லை. அனுர அரசு காலத்திலேயே.... நீதிமன்றத்திற்குள் குற்றவாளிக் கூண்டில் நின்ற கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்லப் பட்ட போது... நீதிமன்றத்துக்குளேயே பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பும் நிலையில்.... மீண்டும் ஒரு கொலையை வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் வைத்து அதன் தலைவரை... அனுர அரசு சுட்டுக் கொன்று, எதிர்க் கட்சிகளுக்கு பிடி கொடுக்க நினைத்து இருக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கின்றேன். அனுர அரசு... இவரை கொல்ல வேண்டும் என்றால், வேறு எத்தனையோ வழிகள் இருக்க.... பிரதேச சபை அலுவலகத்தை தேர்ந்து எடுத்து இருக்க மாட்டார்கள் என்பதே எனது கணிப்பு. தற்போது... இளைய தளபதி நாமலும் நாட்டில் இல்லை. அவர் இல்லாத நேரம் இந்தக் கொலை நடந்த படியால்.. சந்தேகம் தன் மேல் வராமல் பார்த்துக் கொண்டார் போலுள்ளது. உங்களுக்கு, அனுர அரசு மேல் இருக்கும் கடுப்பில், "சந்துல... சிந்து பாடுகின்றீர்கள்" போலுள்ளது. 😂- கருத்து படங்கள்
- நாடாளுமன்றத்தில் விசேட சோதனை!
நாடாளுமன்றத்தில் விசேட சோதனை! எதிர்வரும் நவம்பர் மாதத்தில் மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் விசேட பாதுகாப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் இன்று (23) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, எதிர்வரும் நவம்பர் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் நாடாளுமன்றத்தில் இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள் மற்றும் ஆடை அலுமாரிகள் உட்பட முழு நாடாளுமன்ற கட்டிடமும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும் என்று சபாநாயகர் அறிவித்தார். இதற்கிடையில், நவம்பர் 7 ஆம் திகதி நாடாளுமன்ற கட்டிடத்தின் உயர் பாதுகாப்பு பகுதிகளும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படும். அன்றையதினம் பொது மக்கள் பார்வையிடும் பகுதி விருந்தினர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். இதேவேளை, விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் நிதி அமைச்சினால் வழங்கப்படுவதுடன், விசேட பாதுகாப்பு திட்டம் அமுலில் இருக்கும் அன்றையதினம் (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாரதிகளுடன் வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அன்று நாடாளுமன்ற வாகன நிறுத்துமிடம் மூடப்படும் என்பதால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரும் வாகனங்கள் வாகன நிறுத்துமிடத்திற்கு அனுப்பப்படும் என்றும் சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார். இதேவேளை, அன்றைய தினம் விசேட போக்குவரத்துத் திட்டமும் செயல்படுத்தப்படும் என்று சபாநாயகர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2025/1450953- யாழில் மழையுடன் சேர்ந்து விழுந்த மீன்கள்!
காணொளி: 👉 https://www.facebook.com/watch/?v=2171647533266181 👈 இது... பனையேறி கெண்டை மீன் என்கிறார்கள். இது... நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியதாம். மண்ணுக்கு கீழ் ஈரலிப்பான இடத்தில் இருந்து விட்டு... மழை பொழிய வெளியே வருமாம். ஆன படியால்... இது வானத்தில் இருந்து விழுந்ததாக சொல்வதை ஏற்க கடினமாக உள்ளது. மேலே உள்ள காணொளியில் பல பனையேறி கெண்டை மீன் நீர் நிலைகளை தேடி அணிவகுத்து செல்வதை காணலாம். அப்படி வானத்தில் இருந்து விழுவதாக இருந்தால்... பாரை, விளை, திரளி, நண்டு, இறால், கணவாய் எல்லாம் விழுந்து இருக்க வேண்டும். 😂 வாசகர்கள்... தமது கருத்துக்களை பகிர்வது வரவேற்கப் படுகின்றது. 🙂- கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனேகமான பகுதிகளில் தொடர்ந்தும் பலத்த மழை-மூவர் மரணம் -144 குடும்பங்கள் பாதிப்பு!
சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு! நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 2,609 குடும்பங்களைச் சேர்ந்த 10,553 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், 387 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளதுடன், 02 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இதேவேளை, 36 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் திம்பிரிகஸ்யாய பகுதியில் 30 பேர் பாதுகாப்பு முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1450912- ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை உத்தரவு!
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை உத்தரவு! உக்ரேனில் அமைதி ஒப்பந்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்கா புதிய தடைகளை புதன்கிழமை (22) அறிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இடையேயான உச்சிமாநாட்டிற்கான திட்டங்கள் முறிந்த ஒரு நாளுக்குப் பின்னர் புதிய தடைகள் வெளியிடப்பட்டன. ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil ஆகியவை மொஸ்கோவின் போர் நடவடிக்கைக்கு நிதியளிக்கும் திறனை தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை வந்துள்ளதாக அமெரிக்க திறைசேரி கூறியது. இந்த நடவடிக்கை, மொஸ்கோவிற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், உக்ரேனில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் மேலும் இணக்கமான அணுகுமுறையை எடுப்பதற்கும் இடையே உள்ள வெள்ளை மாளிகைக்கு ஒரு கூர்மையான திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்புடன் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் ஒரு பீப்பாய்க்கு 2 அமெரிக்க டொலர்களுக்கும் மேல் உயர்ந்தது. வியாழக்கிழமை (23) ஆரம்ப ஆசிய வர்த்தக நேரங்களில், அமெரிக்காவின் மசகு எண்ணெய் அளவுகோலான மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) சுமார் $60.23 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 64.36 அமெரிக்க டொலர்களுக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. மேற்கண்ட இரண்டு ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களும் ஒரு நாளைக்கு 3.1 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை ஏற்றுமதி செய்கின்றன. இங்கிலாந்து அரசாங்கத்தின் மதிப்பீடுகளின்படி, உலகளாவிய உற்பத்தியில் 6% ஆக இருக்கும் மொத்த ரஷ்ய எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதிக்கு Rosneft பொறுப்பாகும். எண்ணெய் மற்றும் எரிவாயு ரஷ்யாவின் மிகப்பெரிய ஏற்றுமதிகள், மேலும் மொஸ்கோவின் மிகப்பெரிய வாடிக்கையாளர்களில் சீனா, இந்தியா மற்றும் துருக்கி ஆகியவை அடங்கும். கிரெம்ளின் மீது பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறும் ட்ரம்ப் இந்த நாடுகளை வலியுறுத்தியுள்ளார். ட்ரம்பின் நடவடிக்கையை இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் யெவெட் கூப்பர் பாராட்டினார், அவர் அமெரிக்காவின் தடைகள் “வலுவாக வரவேற்கப்படுகின்றன” என்று கூறினார். https://athavannews.com/2025/1450931- துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!
காணொளி: 👉 https://www.facebook.com/reel/1573701207336196 👈 சுட்டுக் கொல்லப் பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர்.... மிதிகம லசா.- துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!
தவிசாளர் கதிரையில் சுடப்பட்டு இறந்தார் மிதிகம லசா..! மாத்தறை, வெலிகம பிரதேசசபை தவிசாளர் லசந்த விக்கிரமசேகர மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் இறந்துள்ளார். பிரதேச சபை தவிசாளர் அறைக்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் அவரை சுட்டதாக முதற்கட்ட தகவல். லசந்த விக்கிரமசேகர, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர். அவரது மரணம் தொடர்பில் பாராளுமன்றில் பேசிய சஜித் பிரேமதாச, பொதுப்பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். விசாரணைகளை பொலிசார் முன்னெடுக்கின்றனர். 🔴 வெலிகம பிரதேச சபை சார்ந்த சில பின்னணிகள். * வெலிகம பிரதேச சபையின் கன்னி அமர்வு 27.06.2025 அன்று கூடியபோது சபை வளாகத்தில் உறுப்பினர்கள் மோதல் இடம்பெற்றது. - அன்று தவிசாளர் தெரிவுக்காக சென்ற இரு NPP உறுப்பினர்கள் கடத்தப்பட்டிருந்தனர். * வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் வீட்டின்மீது 16.07.2025 அன்று துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டது. 🔴 யார் இந்த மிதிகம லசா (Midigama Lasa)? * தெற்கின் பாதாள உலகில் அறியப்பட்ட 38 வயதான ஒரு நபர். * ஹரக் கட்டா எனப்படும் பாதாளகுழு தலைவனின் நெருக்கத்துக்குரிய ஒருவர். * 2020 செப்டெம்பரில் கொலைச்சம்பவம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்ட ஒருவர். * 2025 இல் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் வழக்கறிஞர் தாரக நாணயக்காரவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக லசந்த விக்ரமசேகரவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கும் உள்ளது. 🔴 வெலிகம பற்றிய அண்மைய செய்திகள் * சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் (22.09), ரஸ்ய நபரின் வழிகாட்டலில் இயங்கிய இடத்தில் மீட்கப்பட்ட மெபெட்ரோன் என்ற போதைப்பொருள் மீட்கப்பட்ட பிரதேசமே வெலிகம. அங்கே மோல்டா நாட்டவரும் கைதாகியிருந்தார். * 24.09 அன்று, துப்பாக்கிகள், ரவைகள், போதைப்பொருட்களோடு பெண் உட்பட 2 பேர் வெலிகமவில் கைதாகினர். * முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வெலிகம பகுதியில் ஹோட்டல் அருகில் 2023ம் ஆண்டு நடந்த துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். 🔻 ஆக மொத்தத்தில், மக்களால் தெரிவுசெய்யப்பட்டு அரசியல் அதிகார கதிரையில் இருந்த ஒரு குற்றப்பின்னணியான நபர் இன்று சுடப்பட்டு இறந்துள்ளார். இத்தகைய பின்னணியுள்ள ஒருவரை தவிசாளராக மட்டுமல்ல வேட்பாளராக நியமிக்கவேண்டிய தேவை ஏன் ஐ. ம. சக்திக்கு ஏற்பட்டது? நீதிமன்ற வழக்கும், பிடியாணையும் விதிக்கப்பட்டிருந்த போதும் அவரது பதவியை பறிக்காகததும், உறுப்பினர் பதவியை வறிதாக்காமல் விட்டதும் ஐ. ம. சக்தியின் பெரும் தவறு. பொதுப்பாதுகாப்பு குறித்து பாராளுமன்றில் கேள்வியெழுப்பும் எதிர்க்கட்சித்தலைவர், இவற்றுக்கும் பொறுப்பேற்று அதே சபையில் விளக்கமளிக்க வேண்டியது கட்டாயமானது. Janakan Sivagnanam - இலங்கைக்கு பரிசாக வழங்கிய யானைகளை மீண்டும் திரும்பப் பெற தாய்லாந்து நடவடிக்கை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.