Everything posted by தமிழ் சிறி
-
வவுனியாவில் தைப் பொங்கலை முன்னிட்டு விசேட வழிபாடுகள்!
மன்னாரில் மழைக்கு மத்தியில் தைப்பொங்கல் கொண்டாட்டம்! உலக வாழ் தமிழர்கள் இன்றைய தினம் தைப் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மற்றும் கத்தோலிக்க மக்கள் தைப்பொங்கல் பண்டிகை யை மிகவும் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் விசேட தைப் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பூஜை வழிபாடுகளும் இடம் பெற்றது. மேலும் வர்த்தக நிலையங்கள் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட தோடு விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் பஜார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவும் பொங்கல் பொங்கி மக்கள் மகிழ்சியை பகிர்ந்து கொண்டனர். மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் மக்கள் அமைதியான முறையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். https://athavannews.com/2025/1416277
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
பொங்கல் பண்டிகையானது தமிழர் கலாச்சாரத்தை உணர்த்தும் பண்டிகையாக விளங்குகிறது! பொங்கல் பண்டிகையானது தமிழர் கலாச்சாரத்தை உணர்த்தும் பண்டிகையாக விளங்குகிறது. சூரியனாக கருதப்படும் இறைவனுக்கு நன்றி கூறும் வகையில் இந்த பொங்கல் பண்டிகை தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையானது உழவர் திருநாளாக தை மாதம் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை உருவான கதை: பொங்கல் பண்டிகையின் தோற்றமானது எப்போது உருவானது என்று சரியாக தெரியவில்லை என்றாலும் 1000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது என்று ஒரு கூற்று உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இது கொண்டாடப்படுகிறது என்று இன்னொரு கூற்றும் உள்ளது. சோழர் காலங்களில் பொங்கல் பண்டிகைக்கு புதியீடு என்று பெயர் இருந்தது. இதற்கு என்ன பொருள் என்றால் ஆண்டினுடைய முதல் அறுவடை என்று அர்த்தமாம். உழவர்கள் தை மாதம் முதல் நாளில் அறுவடை செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள். பின்னர் இதுதான் பொங்கல் பண்டிகையாக மாறியது என்று கூறுகிறார்கள். பொங்கல் பண்டிகையானது வேளாண்மையை அடிப்படையாக கொண்ட நாளாகும். பொங்கல் அன்று விவசாயிகள் தாங்கள் நிலத்தில் விளைந்த புதுநெல்லை குத்தி எடுத்த பச்சரியைஇ புதுப்பானையில் பொங்கலிட்டுஇ தோட்டத்தில் விளைந்த இஞ்சிஇ மஞ்சள்இ கிழங்கு வகைகளை கரும்புடன் படைத்துஇ நன்றி தெரிவிக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும். ஒரு சிலர் பொங்கல் அன்று புதிய பானையிலோ அல்லது வழக்கம் மாறாமல் எப்போதும் வைக்கும் பொங்கல் பானையில் மஞ்சள் குங்குமம் இட்டுஇ பொங்கல் பானையின் கழுத்து பகுதியில் விளைந்த மஞ்சள் கொத்தினை கட்டி நல்ல நேரம் பார்த்து பொங்கல் வைப்பார்கள். பால் பானையிலிருந்து பொங்கி வழியும் நேரத்தில் வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் ஒன்றாக சேர்ந்து பொங்கலோ பொங்கல் என்று ஆனந்தமாய் உரைப்பார்கள். பொங்கல் தயார் செய்த பிறகு அவர்களுடைய இஷ்ட தெய்வத்திற்கு படைத்துவிட்டு தீபம் காட்டிய பிறகு அனைவருக்கும் கொடுத்துவிட்டு உண்பார்கள். பொங்கல் பொதுவாக நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். முதல் நாளில் போகி பண்டிகையும் இரண்டாம் நாளில் பொங்கல் பண்டிகையும் மூன்றாம் நாள் பட்டிப்பொங்கல் அல்லது மாட்டுப்பொங்கலும் நான்காவது நாள் காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. அதற்கமைய போகி பண்டிகை தினத்தன்று காலையிலேயே அனைவரும் குளித்து வீட்டில் இருக்கக்கூடிய தேவையில்லாத பொருள்களை வீட்டின் முன்பு எரித்து போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை – இந்த பண்டிகைக்கு சர்க்கரை பொங்கல் என்ற பெயரும் உள்ளது. புதுப்பானை எடுத்துஇ மஞ்சள் உள்ளிட்டவற்றை பானையைச் சுற்றிக் கட்டிஇ புதுப் பாலில்இ புது அரிசியிட்டுஇ வெல்லம் உள்ளிட்டவற்றைக் கலந்து பொங்கலிடுவார்கள். வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி இந்த பொங்கலிடும் நிகழ்ச்சி நடைபெறும். மாட்டு பொங்கல்: உழவர்களின் வாழ்வில் முக்கிய பங்காக இருப்பது கால்நடைகள். கிராமங்களில் மாட்டு பொங்கலானது மிக சிறப்பாக கொண்டாடப்படும். மாடுகள் இருக்கும் இடத்தை தூய்மைப்படுத்தி மாடுகளை குளிப்பாட்டி வண்ணம் பூசி உழவு கருவிகள் அனைத்தையும் வைத்து படையல் வைத்துஇ வருடம் முழுவதும் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக பொங்கல் வைக்கபடுகிறது. மாட்டு பொங்கலின் போது கிராமங்கள் தோறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். காணும் பொங்கல்: காணும் பொங்கல் அன்று பிரிந்த நண்பர்கள்இ உறவினர்களை சந்திக்கும் நாளாகும். பெண்கள் தங்களுடைய சகோதரின் நலனுக்காக படைப்பது காணும் பொங்கல். இந்த நான்காம் தின பொங்கலை கன்னி பொங்கல்இ கணு பொங்கல்இ காணும் பொங்கல் என்று அழைப்பார்கள். பொங்கல் விளையாட்டு: பொங்கல் என்றாலே கிராமங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நிறைய விளையாட்டு போட்டிகள் நடைபெறும். பொங்கல் நிகழ்ச்சிகள் அன்று காலம் காலமாக கபடிஇ சிலம்பம்இ உறியடிஇ மாட்டு வண்டி பந்தயம்இ ஏறுதழுவுதல் பெண்களுக்கான சில போட்டிகளும் நடைப்பெறும். தமிழர்களின் திருநாளாக உழவர் திருநாளாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையைஇ தமிழக அரசு தமிழ்ப் புத்தாண்டு தினமாகவும் அறிவித்துள்ளதால்இ தமிழர்கள் அனைவரும் இந்த இனிய நாளை இரட்டிப்பு சந்தோஷத்துடன்இ தித்திப்புடன் கொண்டாட வாழ்த்துவோம். எந்நாளும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கி அது நீங்காமல் இருக்க உங்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். வரும் ஆண்டில் எல்லா வளமும் நலமும் பெற்று அமைதியுடன் வாழவும் சூரியக் கடவுளைப் பிரார்த்திப்போம். https://athavannews.com/2025/1416289
-
கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!
கடத்தப்பட்ட மாணவி தொடர்பில் வெளியான தகவல். கம்பளை, தவுலகல பகுதியில் அண்மையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவியையும், அவரை கடத்திய சந்தேக நபரையும் நேற்று (13) இரவு அம்பாறை பொலிஸ் அதிகாரிகள் தவுலகல பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். சந்தேக நபரும் மாணவியும் இன்று (14) கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதேவேளை, சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்ததோடு, ஊடகங்களிடம் பேசுகையில், தனது மகளுக்கும் சந்தேக நபருக்கும் இடையே காதல் உறவு இல்லை என்று தெரிவித்தார். தனது மகளைக் கடத்திய சந்தேக நபர் தனது மருமகன் என்றும், ஆனால் ஏனைய இருவரைப் பற்றி தனக்குத் தெரியாது என்று கூறிய கடத்தப்பட்ட மாணவியின் தந்தை, இது பணம் பறிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே செய்யப்பட்டதாகக் கூறினார் https://athavannews.com/2025/1416298
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
ஸ்ரீதரன் விழா மேடையில் தமிழக முதல்வர் ஸ்ராலினுடன் அமர்ந்திருக்க, சுமந்திரனும், சாணக்கியனும்.... கீழே 2500 பார்வையாளர்களுடன், 24´வது வரிசையில் குந்தி இருந்து வேடிக்கை பார்க்க, அவமானமாக இருக்கும் என்றுதான்.... கட்டுநாயக்கா விமான நிலையத்திலேயே... புலனாய்வுத் துறைக்கு பெட்டிசம் போட்டு, ஸ்ரீதரனின் பயணத்தை, தடை செய்ய திட்டம் போட்டிருக்கின்றார்கள். 😎 ஸ்ரீதரன் அதனையும் தாண்டி... நிகழ்வில் கலந்து கொண்டு, சுமந்திரன், சாணக்கியன் முகத்தில் அசடு வழியப் பண்ணியுள்ளார். 😂 இவர்களின்... ஊத்தைவாளி வேலை, மக்களுக்கு அம்பலப் படுத்தப்பட்டுள்ளது இன்னும் சிறப்பு. 👍 இந்த அரசியல் அநாதை... செய்யும் சுத்துமாத்து எல்லாம், உடனே அம்பலத்துக்கு வருவது தெரியாமல், வெட்கமில்லாமல் பல்லைக் காட்டிக் கொண்டு திரிவதை பார்க்க... தமாசாக இருக்கு. 😂
-
ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!
சீனா சென்றடைந்தார் ஜனாதிபதி! சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார் அங்கு, சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் சியாடோங் வரவேற்றதோடு சீன இராணுவ மரியாதையுடன் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டிருந்தது இதில் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச். எஸ். கே. ஜே. பண்டார ஆகியோரும் இந்த விஜயத்தில் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1416270
-
வவுனியாவில் தைப் பொங்கலை முன்னிட்டு விசேட வழிபாடுகள்!
வவுனியாவில் தைப் பொங்கலை முன்னிட்டு விசேட வழிபாடுகள்! உழவர் திருநாளான தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் இந்து ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று இடம்பெற்றுள்ளன அதன்படி வவுனியாவின் பிரதான ஆலயங்களில் ஒன்றாகிய கந்தசாமி ஆலயத்தில் புதுப் பானையில் புத்தரிசி இட்டு பொங்கல் இடம்பெற்றதுடன், ஆலய பிரதம குரு தலைமையில் விசேட பூசையும் இடம்பெற்றுள்ளன. https://athavannews.com/2025/1416292
-
கடவுசீட்டுக்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு!
கடவுசீட்டுக்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு! நாளொன்றுக்கு 2,500 வெளிநாட்டு கடவுசீட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஒரு நாளைக்கு வழங்கப்பட்ட கடவுசீட்டுக்களின் எண்ணிக்கை 1,200 ஆக இருந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டியிருந்தால், கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு தனி பீடம் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் அன்னதா விஜேபால தெரிவித்தார். அந்த பீடம் ஊடாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, உடனடியாக கடவுசீட்டுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார். https://athavannews.com/2025/1416281
-
ஜேர்மன் மக்களிடம் எலான் மஸ்க் விடுத்துள்ள கோரிக்கை.
அயல்நாட்டு கொள்கையை சரியாக கடைப்பிடிக்காததால்.... உள்நாட்டு மக்களின் ஆதரவினை இழந்து நிற்கிறார்கள்.
-
கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!
கண்டி மாணவி கடத்தல் சம்பவம்-சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலை! கண்டி – தவுலகல பகுதியில் கடத்தப்பட்ட தொழிலதிபர் ஒருவரின் மகளும், அவரை கடத்திய சந்தேக நபரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபர் நேற்று கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். அத்துடன் கடத்தப்பட்ட மாணவியும், சந்தேக நபரும்... நேற்று அம்பாறை பேருந்து நிறுத்தத்தில் இருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இதேவேளை கண்டி – தவுலகல பகுதியில் தனது தோழியுடன் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது கடந்த சனிக்கிழமை குறித்த பாடசாலை மாணவி கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1416286 @ஈழப்பிரியன், @நிலாமதி, @alvayan
-
புதிதாக வழங்கப்படும் டிஜிட்டல் அடையாள அட்டைகள்!
புதிதாக வழங்கப்படும் டிஜிட்டல் அடையாள அட்டைகள்! இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார். அத்துடன் அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதனை நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார் மேலும் டிஜிட்டல் அடையாள அட்டை முறையை உருவாக்குவதற்கு சுமார் 20 பில்லியன் ரூபா செலவாகும் என்பதால், அதில் பாதியை இந்தியாவின் உதவி மூலம் பெற எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1416295
-
உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகியுள்ளது
உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகியுள்ளது. தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகியுள்ளது. இதில் 1,100 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. இந்த காளைகளை பிடிக்க 900 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். வெற்றி பெறும் சிறந்த காளைக்கு டிராக்டரும், வீரருக்கு காரும் பரிசாக வழங்கப்பட உள்ளது. ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விண்ணப்பித்த 1,100 காளைகள் உரிமையாளர்களால் இன்று 5 மணி முதல் அவனியாபுரத்திற்கு அழைத்து வரப்பட்டன. காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன்பின் அவிழ்த்து விடப்பட்டது. அதேபோல் காளைகள் பிடிக்கும் வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 1,500 பொலிஸாரட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். https://athavannews.com/2025/1416273
-
தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
யாழ். கள உறவுகளுக்கு, உளம் கனிந்த.. இனிய தைப் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். 🙏
-
இலங்கையில் இஸ்ரேலிய மதஸ்தலங்களா? அனுமதியளித்தது யார் என முஜிபுர் ரஹ்மான் கேள்வி
நொச்சி… இஸ்ரேலைப் பற்றி நல்ல அபிப்பிராயம் எனக்கும் இல்லை. ஆனால்… முஸ்லீம் முஜிபுர் ரஹ்மானுக்கு, இஸ்ரேல் வணக்க ஸ்தலத்தை கட்டக் கூடாது என்று சொல்ல எந்த யோக்கியதையும் இல்லை. இந்த முஸ்லீம் மதத்தவர்தான் கிழக்கு இலங்கையில் உள்ள பல சைவக் கோவில் விக்கிரகங்களை உடைத்தும், கோவிலில் மாடு வெட்டிய இரத்தங்களையும், மாட்டுத் தலையையும் கொண்டு வந்து போட்ட அயோக்கியர்களை கண்டிக்க மனம் இல்லாமல் மௌனமாக அதனை ஆமோதித்துக் கொண்டு இருந்தவர்கள். முஸ்லீம் இனத்தவனுக்கு… இஸ்ரேல்காரன்தான் குளிசை குடுக்க சரியான ஆள்.
-
இலங்கையில் இஸ்ரேலிய மதஸ்தலங்களா? அனுமதியளித்தது யார் என முஜிபுர் ரஹ்மான் கேள்வி
முஸ்லீம்கள்…. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் மசூதி கட்டும் போது, இஸ்ரேலியர்கள் இலங்கையில் மசூதி கட்டினால், முஜிபுர் ரஹ்மானுக்கு ஏன் வயிறு எரியுது. ஶ்ரீலங்காவில் உள்ள ஒவ்வொரு மசூதிக்குப் பக்கத்திலும், இஸ்ரேலியர்கள் தமது மத வழிபாட்டு இடங்களை அமைக்க முன்வர வேண்டும்.
-
சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் இலக்கை அடையலாம் - சரத் பொன்சேகா
இவருக்கும் அரசியலுக்கும் எட்டாப் பொருத்தம் என்றவுடன் விலகி இருக்க வேண்டும். ஆனால் சிலருக்கு, நம்ம சும் மாதிரி… சிக்கி, சீரழிந்து, அவமானப் பட்டுத்தான் போக வேண்டும் என்று விதி. 😂
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
அப்போ... சுமந்திரன், சாணக்கியன்... அழையா விருந்தாளிகளாக, "பிலிம்" காட்டப் போனவர்களா. 🤣
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
👇 கீழே உள்ள இணைப்பை அழுத்தி, காணொளியை பார்க்கவும். 👇 👉 https://www.facebook.com/100072424320459/videos/1370364317293121/ 👈 இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் மட்டும் தான் மேடையில் இருந்தார்கள். அழைப்பு இல்லாமல் போனவர்கள் அனைவரும் பார்வையாளர் வரிசையில் கீழே இருத்தப்பட்டார்கள். கீழே... இருத்தப் பட்டவர்கள் யார் என்பது, உங்களுக்கு இப்போ புரிந்து இருக்கும். சாணக்கியனின் தயவில்... தொத்திக் கொண்டு போன சுமந்திரனும் கீழே தான். சாணக்கியனும், சுமந்திரனும்... மேடைக்கு கீழே பார்வையாளர் பகுதியில் 2500 பார்வையாளர்களுடன்... இருத்தப்பட்டிருந்தனர்.
-
ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
நடந்து போன தமிழக முதல்வரை, இழுத்துப் பிடித்து… செல்பி எடுத்துவிட்டு… இலங்கை அகதிகள் சம்பந்தமாக கலந்துரையாடியதாக, கதை அளக்கின்றார்கள். ஓரு கலந்துரையாடல்… எப்படி இருக்கும் என்பதை, தெரியாத முட்டாள் மக்கள் என நினைத்து விட்டார்கள் போலுள்ளது. முன்பு ஒருமுறை… சுமந்திரனும், சாணக்கியனும் கனடாவில் உள்ள பாராளுமன்றத்தின் முன்னால் நின்று படம் எடுத்து விட்டு வந்து, கனடா அரசுடன் இலங்கைத் தமிழர் விடயமாக பேச்சு வார்த்தை நடத்தினோம் என்று மக்களின் காதில் பூ சுற்றிய… சுத்துமாத்து கூட்டம் தான் இது.
-
சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினால் க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் இலக்கை அடையலாம் - சரத் பொன்சேகா
தன்னுடைய கூட்டத்திற்கு 5 பேரைக் கூட… வர வைக்க முடியாத பொன்சேகா எல்லாம், அரசாங்கத்துக்கு ஆலோசனை சொல்ல வெளிக்கிட்டுது. 😂 🤣
-
கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!
முஸ்லீம் இனம் என்றால்…. தமது செய்தித் தளங்களில் பெயரை வெளியிட மாட்டார்கள். தமிழர் என்றால்…. அக்கு வேறு, ஆணி வேறாக “பிரேக்கிங் நியூஸ்” போட்டு, பிரித்து மேய்ந்து விடுவார்கள். போதாக் குறைக்கு… “யூ ரியூப்” காரரும் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு செய்தி சேகரிக்கப் புறப்பட்டு விடுவார்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!
ஈழப்பிரியன், அந்த மினி பஸ்ஸில் கடத்தும் காணொளியை பார்த்தேன். சினிமா பட காட்சியைப் போலிருந்தது. வீதியால் போன ஒருவர்தான் உதவிக்கு ஓடிப் போனவர். மற்றவர்கள் சுதாகரித்து தடுக்க முதல், மினிபஸ் கிளம்பி போய் விட்டது. இப்போ... பல இடங்களிலும், சிசிரிவி கமெரா பொருத்தப் பட்டுள்ளதால், கடத்தல்கள் உடனே பிடிபட்டு விடுகின்றன. நீங்கள் கூறிய காரணத்தையும்... தட்டிக் கழிக்க முடியாது. இப்போ... எந்தப் புற்றில், இந்தப் பாம்பு உள்ளது என கண்டுபிடிப்பது சிரமம்.- கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!
இவன்தான் மாணவியைக் கடத்தி 50 இலட்சம் ரூபாய் கப்பம் கேட்டவன்! இவனுடைய பெயர்: முஹமட் நஷார் முஹமட் நஷீர்.- மலரும் நினைவுகள் ..
- கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.