Everything posted by தமிழ் சிறி
-
பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள்-மனோ!
பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள்-மனோ! “அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கருத்து தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, “சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற கருத்தைத்தான் எப்போதும் எல்லா சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களிலும், எல்லா அமைச்சர்களும் சொன்னார்கள். அரசாங்க தரப்பு அப்படிதான் சொல்வார்கள். அவர்களுக்கு “பயங்கரவாதி”. மக்களுக்கு “போராளி”. பாலஸ்தீனம் முதல் இலங்கை வரை, உலகம் முழுக்க போராட்டங்கள் நிகழ்ந்த நாடுகளில் இப்படி தான். இந்நாட்டில், 1971ல் தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே ஆயுதம் தூக்கி பின்னர், 1989லும் ஆயுதம் தூக்கி ஜேவிபி போராட்டம் செய்த போது, கைதாகி சிறையில் இருந்த ஜேவிபி போராளிகளை, அன்றைய அரசாங்கம், “பயங்கரவாதிகள்” என்றது. ஆனால் ஜேவிபியினர், “இல்லை, அவர்கள் அரசியல் போராளிகள்” என்றார்கள். 2015-2019 கால நமது நல்லாட்சியிலும் இடைக்கிடை ஓரிரு அமைச்சர்கள் இப்படி சொன்னார்கள். ஆனால் அன்றைய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக இருந்து, அவர்களை கண்டித்து, அமைச்சரவைக்குள் அவர்களை புறந்தள்ளி, ஏனைய முற்போக்கு அமைச்சர்களுடனும், வெளியே தமிழ் தேசிய கட்சிகளுடனும் இணைந்து, கணிசமான தமிழ் அரசியல் கைதிகளை நாம் சத்தமில்லாமல் விடுவித்தோம். தமிழ் அரசியல் கைதிகளை அதிகமாக விடுவித்தது எமது நல்லாட்சி அரசாங்கம்தான். இதில் மாற்று பேச்சுக்கு இடமில்லை. இதனால்தான் இன்று வரை இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. ஆனால், அன்று ஆயுத போராட்டம் செய்த ஜேவிபியே, இன்று இப்படி கூறுகிறது. “அரசியல் கைதிகள் இல்லை” என்று கூறி, அவர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டம் சூட்ட முனைகிறது. 1971ல், தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே, ஆயுதம் தூக்கிய தமது அங்கத்தவர்களை அரசியல் போராளிகளாக அடையாளம் காணும் ஜேவிபி, கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களை, அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுகிறது. இந்த இரட்டை வேடம், இவர்களுக்கு இன்று வாக்களித்த செந்தமிழர்களுக்கு தான் வெளிச்சம். மேலும் “சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகிறார். இவர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் தம்பி மகன். இன்றைய ஜேவிபி அரசில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர். அன்று அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கி போராடிய தமது கட்சி அங்கத்தவர்களை “அரசியல் போராளிகள்” என்று கூறிய ஜேவிபி, இன்று தமிழ் அரசியல் போராளி கைதிகளை “அரசியல் கைதிகள்” என அங்கீகரிக்க மறுக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1416354
-
யாழ் – நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய படகு!
இது புத்தரின் வீடு என்று தவறான தகவல் பரப்பப்படுகின்றது . யாழில் கரையொதுங்கிய இந்த பொருள் மியன்மார் ( பர்மா ) நாட்டில் ஒரு இறந்த பிக்குவின் நினைவாக கிரியை செய்த பின்னர் ( இங்கு அந்தியெட்டி கிரியை அன்று கடலில் விடப்படுகின்ற நினைவுப்பொருள் போன்றது ) கடலில் மிதக்கப்பட்ட விடயமாக இருக்கலாம் . ஆனால் அதற்குள் பாவம் புத்தரை வைத்தது தவறு . பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட கைதிகளின் தலைவன் விஜயனின் படகு இலங்கையில் கரையொதுங்கி பூர்வீக தமிழர்களை அழித்தது போன்று அண்மையில் மியன்மார் அகதிகளின் படகு வடமாகாணத்தில் ஒதுங்கியது. Kunalan Karunagaran
-
யாழ் – நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய படகு!
யாழ் – நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய படகு! யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று படகு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது அண்மைக்காலமாக கடல் நிலையில் மாற்றங்களினால் கடல் சீற்றங்கள் சூறாவளி புயல் நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது அதன் போது மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா, போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த படகில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது https://athavannews.com/2025/1416338
-
இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர
- கருத்து படங்கள்
- வெலே சுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு எட்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!
வெலே சுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு எட்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை! போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் கம்பொல விதானலாகே சமந்த குமார எனப்படும் வெலே சுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் 17 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் பணம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், வெலே சுதா உள்ளிட்ட மூவருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, நீண்ட சாட்சிய விசாரணைக்கு பிறகு விசாரணையை முடித்து வைத்த உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை இன்று அறிவித்துள்ளார். https://athavannews.com/2025/1416332- இராணுவ மரியாதையுடன் சீனாவில் வரவேற்கப்பட்ட ஜனாதிபதி அநுர
மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்! சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தியுள்ளார் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார். பின்னர், சீன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமான குங் அரண்மனை அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1416335- யூன் சுக் யோல் கைது: தென் கொரிய அதிபர் இல்லத்திற்குள் ஏணி மூலம் குதித்த அதிகாரிகள் - என்ன நடந்தது?
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் கைது! பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் ஊழல் தடுப்பு நிறுவனத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மாத தொடக்கத்தில் அவரைக் கைது செய்ய புலனாய்வாளர்களின் முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதாகவும், நாட்டில் கிளர்ச்சியைத் தூண்ட முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1416318- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
ஓம் பையன். பாம்பு படம் எடுக்கிற கதை எனக்கும் சொன்னவை. 😂 மேலே படத்தில் உள்ள மாதிரித்தான்... பாம்பு படம் எடுத்து வைத்திருக்கும் என்று, கனகாலம் நம்பிக் கொண்டு இருந்தனான். 🤣- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
பையன்... மயில் இறகை புத்தகத்துக்குள் வைத்தால், குட்டி போடும் என்றும் சொல்வார்கள். 😂 பாம்பு... படம் எடுக்கின்ற, கதையும் ஊரிலை உலாவியது. 🤣- இரசித்த.... புகைப்படங்கள்.
- பொங்கல் சிரிப்புகள்.
- நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனத்தில் பாரபட்சம். புதிதாக மேற்கொள்ளப்பட்ட உயர் நீதிமன்ற நீதியரசர்களின் நியமனத்தில் நீதியரசர் எம்.டி.எம். லபார் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது வெற்றிடமாகவுள்ள நான்கு உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிகளுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் முன்மொழியப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்க அரசியலமைப்பு பேரவை கடந்த வாரம் அனுமதி வழங்கியது. இதற்கமைய, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியரசர்களான ஆர்.எம். சோபித ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பி. அபேயகோன் மற்றும் எம். சம்பத் கே.பி. விஜேரத்ன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நேற்று (12) ஞாயிற்றுக்கிழமை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இவர்கள், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் சிரேஷ்டத்துவத்தில் முறையே 1ஆம், 2ஆம், 4ஆம் மற்றும் 5ஆம் இடங்களில் காணப்பட்டனர். எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் 3ஆவது சிரேஷ்டத்துவத்திலுள்ள நீதியரசர் லபார், உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு ஜனாதிபதியினால் முன்மொழியப்படவில்லை என்ற விடயம் தற்போது தெரியவந்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசரர்களான புவனகே அலுவிகார, பிரியந்த ஜயவர்த்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோரின் ஓய்வினை அடுத்து உயர் நீதிமன்ற நீதியரசர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கே புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசாரக சோபித ராஜகருணா நியமிக்கப்பட்டவதற்கு முன்னர், சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிரேஷ்ட சொலிஸிட்டர் ஜெனரலாக பணியாற்றியுள்ளார். நீதியரசர் மேனகா விஜேயசுந்தர சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட அரச சட்டத்தரணியாக செயற்பட்ட நிலையில் மேல் நீதிமன்ற நீதியதியாக நியமிக்கப்பட்டார். அதிலிருந்தே மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசாரக நியமிக்கப்பட்டார். இதேவேளை, நீதியரசர்களான சம்பத் பி. அபேயகோன் மற்றும் எம். சம்பத் கே.பி. விஜேரத்ன ஆகிய இருவரும், நீதவான், மாவட்ட நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஆகிய பதவிகளை வகித்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களைப் போன்றே நீதியரசர் லபாரும் நீதவான், மாவட்ட நீதிபதி மற்றும் மேல் நீதிமன்ற நீதிபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உயர் நீதிமன்ற நீதியரசாரக தற்போது இவர் நியமிக்கப்படாமையினால் எதிர்வரும் ஜுன் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசாரக ஓய்வுபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் 63 வயது வரையே கடமையாற்ற முடியும். இதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகவுள்ள நீதியரசர் நிசங்க பந்துல கருணாரத்ன, குறித்த பதவியிலிருந்து இம்மாத இறுதியில் இராஜினாமாச் செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் இவருக்கு எதிராக விரைவில் குற்றப் பிரேரணையொன்று கொண்டுவரப்படவுள்ளதாக அறிய முடிகின்றது. இவ்வாறான நிலையிலேயே மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் பதவியிலிருந்து இவர் இராஜினாமாச் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஜுன் 16ஆம் திகதி இவர் 63 வயதை அடையவுள்ளமையினால் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக ஓய்வுபெறவுள்ளார். நீதவானாக தனது நீதித் துறையை ஆரம்பித்த நீதிரயசர் நிசங்க பந்துல கருணாரத்ன பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரானார். உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு இவருடைய பெயர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால்; முன்மொழியப்பட்டது. எனினும், அரசியலமைப்பு பேரவையினால் குறித்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அரசியலமைப்பு பேரவையின் இந்த தீர்மானத்தினை சவாலுக்குட்படுத்தி சட்டத்தரணி ஒருவரினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் மாதம் இந்த மனுவினை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தமை குறிப்பிடத்தக்கது.இந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில அவதானிப்புகளை நீதியரசர் நிசங்க பந்துல கருணாரத்னவுக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு பயன்படுத்த அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அறியப்படுகின்றது. இதேவேளை,உயர் நீதிமன்ற நீதியரசர்களின் நியமனங்களை அடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நான்கு நீதியரசர்களுக்கான வெற்றிடங்கள் தற்போது ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://madawalaenews.com/12347.html?fbclid=IwY2xjawHzWX9leHRuA2FlbQIxMAABHeb66bfmRlxcDZTlilRYJCgJh3DLIjMRUl8Dkr-aH7snI4XeoZ92LnZUrw_aem_2rT6O1FijFJWc5SauNz48g- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
மயில் இறகு... கண்ணில் பட்டால், கண் தெரியாமல் போய் விடும்.- ஸ்டாலினுடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்த இலங்கை எம்.பிக்கள்: யாழ். கடற்றொழிலாளர்கள் காட்டம்
ஓ.... இப்படி செல்பி எடுப்பதைத்தான், இலங்கை அகதிகள் சம்பந்தமாக கலந்துரையாடியதாக... சுமந்திரனும், சாணக்கியனும் ஊருக்குள் சொல்லிக் கொண்டு திரிகிறார்களா. அவர்கள் இலங்கைக்கு திரும்பி வருவதற்குள், அவர்களின் தில்லாலங்கடி செய்திகள் வேகமாக... தாயகத்தை நோக்கி வந்து விட்டமை மகிழ்ச்சி. இது இணையத்தள காலம். எங்கும் பேய்க்காட்ட முடியாது என்பதை... அவர்களுக்கு மீண்டும் நிரூபித்துள்ளது.- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
பையன்.... உங்களுக்கு நிறைய சம்பவங்கள் தெரிந்திருக்கும். ஒவொன்றாக சொல்லுங்க. வாய் விட்டு சிரிப்போம். 😂- பொங்கல் சிரிப்புகள்.
- பொங்கல் சிரிப்புகள்.
- பொங்கல் சிரிப்புகள்.
இது... ஒவ்வொரு பொங்கலுக்கும், எழுதப்படாத சட்டம். 😂- பொங்கல் சிரிப்புகள்.
- இஸ்ரேலிய வீரர்களுக்கான விசாக்களை நிராகரியுங்கள்; ஜனாதிபதி அநுரவுக்கு தேசிய ஷுரா சபை கடிதம்
இலங்கை முஸ்லீம்கள்... இஸ்ரேலை நினைத்து கதறிக் கொண்டு இருக்கின்றார்கள். கதறுங்க.... கதறுங்க....- பொங்கல் சிரிப்புகள்.
உதயநிதி ஸ்ராலினின்... காலில் செருப்புடன், அடுப்பில் நெருப்பு இல்லாத கோமாளி பொங்கல். அருகில் வடிவேலு???? 😂 ஒருவர் கையில் பைபிளுடன், மற்றவர் கையில் செல்போனுடன்... 🤣- பொங்கல் சிரிப்புகள்.
- சிரிக்கலாம் வாங்க
- தூய்மை இலங்கை திட்டம்-முன்மொழிவுகளை சமர்பிக்குமாறு அறிவிப்பு!
தூய்மை இலங்கை திட்டம்-முன்மொழிவுகளை சமர்பிக்குமாறு அறிவிப்பு! தூய்மை இலங்கை திட்டம் தொடர்பாக செயல்படுத்தப்பட வேண்டிய புதிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து அமைச்சகங்களிடமிருந்தும் முன்மொழிவுகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கோரியுள்ளார். இது தொடர்பாக, ஒவ்வொரு அமைச்சகத்திலும் வெவ்வேறு குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதுடன் தற்போது அமைச்சகங்களால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்குப் பதிலாக புதிய திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள், தூய்மை இலங்கை திட்டம் மற்றும் ஒவ்வொரு அமைச்சகமும் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள் குறித்து அமைச்சுகளில் உள்ள பணியாளர் மட்ட அதிகாரிகளுக்குச் சென்று விளக்கமளிப்பார்கள் என்று ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ள புதிய திட்டங்கள் அடங்கிய அறிக்கைகளை அனைத்து அமைச்சகங்களும் தயாரிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி ஒவ்வொரு அமைச்சகத்தையும் தனித்தனியாக வரவழைக்க உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன. https://athavannews.com/2025/1416262Important Information
By using this site, you agree to our Terms of Use.
- கருத்து படங்கள்
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.