Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. யாழில் பொலிஸாருக்கும் பட்டதாரிகளுக்கும் இடையில் முரண்பாடு! வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் நேற்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் ஆரம்பமாக குறித்த போராட்டம் யாழ். நகரத்தின் ஊடாக பயணித்து ஆளுநர் அலுவலகத்தை வந்தடைந்தது. இதன் போது போராட்டக்காரர்கள் வடக்கு மாகாண ஆளுநரை சந்திக்க முற்பட்டனர். எனினும் நான்கு பேர் மாத்திரம் ஆளுநருடன் பேச முடியும் என தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் வீதியை மறிக்க முற்பட்டதால் பொலிஸாருடன் தர்க்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் போராட்டக்காரர்களைச் சந்தித்து கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சனை நாடு முழுவதும் இருப்பதாகவும் இது தொடர்பான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட்டு அது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஆளுநர் உறுதிமொழி வழங்கினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1417418
  2. அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும்! -ட்ரம்ப் அறிவிப்பு! அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே இனி அங்கீகரிக்கப்படும் என அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட டொனால்ட் ட்ரம்ப், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது ”சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாகவும், அத்துடன் இராணுவத்திலும் மாற்றுப் பாலினத்தவர்களை இணைப்பதற்குத் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளதாகவும், விரைவில் இது தொடர்பான உத்தரவுகளில் கையெழுத்திடவுள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் உரையில் தெரிவித்துள்ளார். அத்துடன் ”எல்லை விவகாரம், இயற்கைப் பேரிடர்கள், வெளிநாட்டு கொள்கைகள் எனப் பலவற்றிலும் பைடன் அரசு தோல்வியடைந்துவிட்டதாக குற்றம்சாட்டிய ட்ரம்ப் ”அமெரிக்கர்களின் நலனுக்காக வெளிநாடுகள் மீது மேலும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை தனது நிர்வாகம் உறுதியாக பின்பற்றும் என்றும் உறுதியளித்துள்ளார். https://athavannews.com/2025/1417323
  3. மியான்மர் முஸ்லீம் முல்லைத்தீவிற்கு வந்த ஒரு மாதத்தில்.... தனது முதலாவது உற்பத்தியை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்தார். போகப் போக அவர்களின் உற்பத்தித் திறன் அமோகமாக இயங்கத் தொடங்கும். முல்லைத்தீவு மக்கள்... இப்பவே, இடம் பெயர ஆயத்தப் படுத்துவது நல்லது.
  4. ரயில் மசாஜ் நல்லது தானே… அதுக்கு ஏன் வயித்தெரிச்சல் பிடித்தவங்கள்… விசாரணை செய்யப் போகிறார்களாம். இவற்றை ஊக்குவிக்காமல்… மறுத்தான் போடும்…. இப்படியானவர்களால் தான், நாடு அழிவுப் பாதையை நோக்கி செல்கின்றது. 😂
  5. சரியான பதில் பெருமாள். 😂 கணவருக்குத்தான் தெரியும்… தனது மனைவி எதனைக் கண்டு பயப்பட்டு கீழே பாய்வார் என்று… 🤣
  6. ஆமை புகுந்த வீடும், அப்புக்காத்து புகுந்த கட்சியும்…. உருப்பட்ட மாதிரித்தான். 😂 🤣
  7. வெள்ளைக்காரன் எப்படி மாடு பிடிக்கிறான் என்று பார்ப்போம் என்றால், அவரை… வயது மூப்பு காட்டி நீக்கி விட்டார்கள். 🥲
  8. கள்வர்கள்… கஸ்ரப்பட்டு களவெடுக்க மாட்டார்கள். நோகாமல்… நொங்கு தின்றுவிட்டு போய்விடுவார்கள். 😂
  9. 1956’ம் ஆண்டின் 70 வருடத்தைய தொழில் நுட்பம், இப்போது சரி வருமா?
  10. அண்மையில்… சிங்களப் பகுதி ஒன்றில், பல மில்லியன் அமெரிக்க டொலர் செலவழித்து கட்டப் பட்ட பாலத்திலிருந்த செப்புக் கம்பிகளை வெட்டி எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம் விலைவாசி உயர்ந்து, மக்களிடம் பொருட்களை வாங்கும் சக்தி குறையும் போது…. லஞ்சம், களவு, கொலை, ஏமாற்றுதல் என்று தீய வழிகளை நோக்கி மக்கள் செல்கிறார்கள். “பசி வந்திட… பத்தும் பறந்து போகும்.”
  11. எல்லோரும் அரச உத்தியோகத்தையே விரும்புகின்றனர். இலங்கையில் 18 பேரில் ஒருவர் அரச உத்தியோத்தில் இருப்பதாக வாசித்த நினைவு. இது உண்மையானால், ஏழை நாட்டிற்கு மிக அதிகம். எமது நாட்டின் கல்விப் பாடத்திட்டத்தை சீர் செய்து… எட்டாம் வகுப்புகளில் இருந்தே தொழில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது… பல சுய தொழில் முனைவோர் உருவாகுவார்கள். எல்லா அரசாங்கங்களும் தினமும் அறிக்கை மழையாக பொழிந்து, வாயால்… வடை சுட்டுக் கொண்டு இருந்தால், உலகின் முதலாவது பிச்சைக்கார நாடாக ஶ்ரீலங்கா வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
  12. அன்புத் தம்பி உங்களுக்கு ஜேர்மன் பாசை தெரியுமா. மேலே உள்ளது தரமான…. ரைமிங் பகிடி. மொழி புரியாதவர்களுக்காக…. //வீதி பழுதாகி உள்ளது என்று எச்சரிக்கை பலகை வைக்கப் பட்டுளது. அதற்கு கீழே யாரோ ஒருவர்… “அறிவித்தலுக்கு நன்றி. தயவு செய்து திருத்தி விடுங்கள்” என்று எழுதி விட்டுப் போயுள்ளார். 😂
  13. கனகபுரம் துயிலுமில்லத்தில், கூட வந்தவர்களே கூட்டி வந்தவர்களுக்கு எதிராக மாறிய சம்பவம்! மக்கள் எதிர்ப்பால் ஓடித்தப்பிய சந்திரகுமார் குழு!! கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் 2016 முதல் சிறப்பாக மாவீரர் நாளை எழுச்சிபூர்வமாக நடாத்திவருகிறார்கள். இந்த நிலையில் தற்போது இருக்கும் மாவீரர் பணிக்குழுவை மாற்ற வேண்டும் என்று EPDP சந்திரகுமாருடன் சேர்ந்தியங்கும் ஒரு தரப்பு கடுமையாக முயற்சி செய்தது. அந்த முயற்சியின் இறுதியாக இன்று 11ஆம் திகதி காலை கனகபுரம் துயிலுமில்லத்தில் புதிய நிர்வாக தெரிவு நடைபெறும் என்று EPDP சந்திரகுமாரின் தம்பியான தீபன் என்பவர் சமூகவலைத்தளங்களில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் குறித்த நிர்வாக தெரிவுக்கு எதிராக மாவீரர் துயிலுமில்லத்திற்கு முன் பெருமளவான மக்களும் போராளிகளும் ஒன்றுகூடியிருந்தார்கள். அந்த நேரத்தில் புதிய தெரிவை ஒழுங்கு செய்ந தீபன், 13 பேருடன் துயிலுமில்லத்தடிக்கு வந்தார். அப்போது அங்கிருந்த மக்களும் முன்னாள் போராளிகளும் பல கேள்விகளை தீபனிடம் கேட்டார்கள். கூட வந்தவர்களிடமும் கேட்டார்கள். (“இவளவு காலமும் சிறப்பாக எந்தவித பிரச்சினையும் இல்லாமல் மாவீர்ர நாள் நடந்துவருகிறது, பிறகு ஏன் புதிய பணிக்குழு தெரிவு?” “தமிழ்த்தேசியத்தை அழித்து புலிகளை காட்டிக்கொடுத்த இனத்துரோகி சந்திரகுமாருக்கு மாவீரர் நினைவேந்தல் செய்ய என்ற அருகதை இருக்கிறது?” “2016 முதல் இதுவரை மூன்று தடவை மாவீரர் பணிக்குழு தெரிவு செய்யப்பட்டு புதிய தலைவர் செயலாளர் தெரிவு செய்ப்பட்டு வெளிப்படையாக நடக்கிறார்கள் அதை ஏன் குழப்ப முற்படுகிறீர்கள்?” “தற்போது மக்கள் மயப்பட்டிருக்கும் மாவீரர் நினைவேந்தலை தனியுரிமையாக்கும் தேவை என்ன?” போன்ற பல கேள்விகளை கூடியிருந்த மக்கள் கேட்டார்கள். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தீபனும் கூடவந்தவர்களும் பதறினார்கள். ஒருகட்டத்தில் தீபனுடன் கூட வந்த பெண்கள் சிலர் இன்று புதிய நிர்வாக தெரிவு என்று சொல்லி தான் அழைத்தார்கள். இப்படி குழப்பத்தை ஏற்படுத்தும் வேலை என்று எமக்கு தெரியாது. எங்களை மன்னித்துவிடுங்கள் என்று சொன்னார்கள். பின் அவர்களே இந்த புதிய தெரிவு தேவையில்லை என்று சொன்னார்கள். தீபனுடன் வந்திருந்த EPDP சந்திரகுமாரின் கனகாம்பிகைக்குள வட்டார இணைப்பாளர் பாலன் என்பவர் புதிய தெரிவு செய்யப்பட வேண்டும் என சொல்ல வெளிக்கிட்ட போது சுற்றியிருந்த சிலர் பாலனை கடுமையாக எச்சரித்தவுடன் இருந்த இடம் தெரியாமல் பாலன் பம்மிவிட்டார். இறுதியாக மக்களினதும் முன்னாள் போராளிகளினதும் கடும் எதிர்ப்பினால், புதிய தெரிவு நடாத்த வந்த EPDP சந்திரகுமார் தரப்பு வேறு வழியின்றி காயங்கள் ஏதுமின்றி உயிர்பிழைத்தால் போதும் என்று வந்த வழியே திரும்பி சென்றார்கள். Monisha Kokul is with மதி தீபன்
  14. இந்த நான்கு பேரில்... இந்தப் பெண்ணின், கணவன் யார்? 😂
  15. பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள்-மனோ! “அரசியல் கைதிகள் இல்லை” என்ற பழைய பல்லவியை பாடாமல் தமிழ் அரசியல் கைதிகளை உடனேயே விடுவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார். நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கருத்து தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, “சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்ற கருத்தைத்தான் எப்போதும் எல்லா சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களிலும், எல்லா அமைச்சர்களும் சொன்னார்கள். அரசாங்க தரப்பு அப்படிதான் சொல்வார்கள். அவர்களுக்கு “பயங்கரவாதி”. மக்களுக்கு “போராளி”. பாலஸ்தீனம் முதல் இலங்கை வரை, உலகம் முழுக்க போராட்டங்கள் நிகழ்ந்த நாடுகளில் இப்படி தான். இந்நாட்டில், 1971ல் தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே ஆயுதம் தூக்கி பின்னர், 1989லும் ஆயுதம் தூக்கி ஜேவிபி போராட்டம் செய்த போது, கைதாகி சிறையில் இருந்த ஜேவிபி போராளிகளை, அன்றைய அரசாங்கம், “பயங்கரவாதிகள்” என்றது. ஆனால் ஜேவிபியினர், “இல்லை, அவர்கள் அரசியல் போராளிகள்” என்றார்கள். 2015-2019 கால நமது நல்லாட்சியிலும் இடைக்கிடை ஓரிரு அமைச்சர்கள் இப்படி சொன்னார்கள். ஆனால் அன்றைய தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சராக இருந்து, அவர்களை கண்டித்து, அமைச்சரவைக்குள் அவர்களை புறந்தள்ளி, ஏனைய முற்போக்கு அமைச்சர்களுடனும், வெளியே தமிழ் தேசிய கட்சிகளுடனும் இணைந்து, கணிசமான தமிழ் அரசியல் கைதிகளை நாம் சத்தமில்லாமல் விடுவித்தோம். தமிழ் அரசியல் கைதிகளை அதிகமாக விடுவித்தது எமது நல்லாட்சி அரசாங்கம்தான். இதில் மாற்று பேச்சுக்கு இடமில்லை. இதனால்தான் இன்று வரை இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. ஆனால், அன்று ஆயுத போராட்டம் செய்த ஜேவிபியே, இன்று இப்படி கூறுகிறது. “அரசியல் கைதிகள் இல்லை” என்று கூறி, அவர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டம் சூட்ட முனைகிறது. 1971ல், தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே, ஆயுதம் தூக்கிய தமது அங்கத்தவர்களை அரசியல் போராளிகளாக அடையாளம் காணும் ஜேவிபி, கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களை, அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுகிறது. இந்த இரட்டை வேடம், இவர்களுக்கு இன்று வாக்களித்த செந்தமிழர்களுக்கு தான் வெளிச்சம். மேலும் “சிறையில் அரசியல் கைதிகள் இல்லை” என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறுகிறார். இவர் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவின் தம்பி மகன். இன்றைய ஜேவிபி அரசில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர். அன்று அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கி போராடிய தமது கட்சி அங்கத்தவர்களை “அரசியல் போராளிகள்” என்று கூறிய ஜேவிபி, இன்று தமிழ் அரசியல் போராளி கைதிகளை “அரசியல் கைதிகள்” என அங்கீகரிக்க மறுக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1416354
  16. இது புத்தரின் வீடு என்று தவறான தகவல் பரப்பப்படுகின்றது . யாழில் கரையொதுங்கிய இந்த பொருள் மியன்மார் ( பர்மா ) நாட்டில் ஒரு இறந்த பிக்குவின் நினைவாக கிரியை செய்த பின்னர் ( இங்கு அந்தியெட்டி கிரியை அன்று கடலில் விடப்படுகின்ற நினைவுப்பொருள் போன்றது ) கடலில் மிதக்கப்பட்ட விடயமாக இருக்கலாம் . ஆனால் அதற்குள் பாவம் புத்தரை வைத்தது தவறு . பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட கைதிகளின் தலைவன் விஜயனின் படகு இலங்கையில் கரையொதுங்கி பூர்வீக தமிழர்களை அழித்தது போன்று அண்மையில் மியன்மார் அகதிகளின் படகு வடமாகாணத்தில் ஒதுங்கியது. Kunalan Karunagaran
  17. யாழ் – நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய படகு! யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று படகு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது அண்மைக்காலமாக கடல் நிலையில் மாற்றங்களினால் கடல் சீற்றங்கள் சூறாவளி புயல் நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது அதன் போது மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா, போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த படகில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது https://athavannews.com/2025/1416338
  18. வெலே சுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு எட்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை! போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் கம்பொல விதானலாகே சமந்த குமார எனப்படும் வெலே சுதா, அவரது மனைவி மற்றும் மற்றொரு பெண்ணுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் மூலம் 17 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் மற்றும் பணம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சம்பவம் தொடர்பில், வெலே சுதா உள்ளிட்ட மூவருக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, நீண்ட சாட்சிய விசாரணைக்கு பிறகு விசாரணையை முடித்து வைத்த உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை இன்று அறிவித்துள்ளார். https://athavannews.com/2025/1416332
  19. மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்! சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தியுள்ளார் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார். பின்னர், சீன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமான குங் அரண்மனை அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து சீன மக்கள் குடியரசின் ஸ்தாபகர் தலைவர் மாவோ சேதுங் நினைவிடத்திற்குச் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார். வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இந்த சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1416335
  20. தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் கைது! பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் ஊழல் தடுப்பு நிறுவனத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மாத தொடக்கத்தில் அவரைக் கைது செய்ய புலனாய்வாளர்களின் முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் இராணுவச் சட்டத்தை அமல்படுத்தியதாகவும், நாட்டில் கிளர்ச்சியைத் தூண்ட முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1416318
  21. ஓம் பையன். பாம்பு படம் எடுக்கிற கதை எனக்கும் சொன்னவை. 😂 மேலே படத்தில் உள்ள மாதிரித்தான்... பாம்பு படம் எடுத்து வைத்திருக்கும் என்று, கனகாலம் நம்பிக் கொண்டு இருந்தனான். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.