Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. கட்டுப்பாடற்ற காட்டுத்தீயால் லாஸ் ஏஞ்சல்ஸில் 5 பேர் உயிரிழப்பு! லாஸ் ஏஞ்சல்ஸைச் புதன்கிழமை (08) சூழ்ந்த காட்டுத் தீயானது குறைந்தது 5 பேரின் உயிரை காவு கொண்டதுடன், நூற்றுக்கணக்கான வீடுகளை அழித்தது, 100,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றவும் கட்டாயப்படுத்தியது. இதனிடையே, தீ விபத்தினை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு விரார்களும், விமானப் படையினரும் போராடி வருகின்றனர். சூறாவளி காற்று தீயை அணைக்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமைந்ததுடன், இதன் தாக்கம் காரணமாக செவ்வாய்க்கிழமை (07) ஆரம்பித்த தீயானது வேகமாக பரவியது. தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல ஹொலிவுட் நட்சத்திரங்கள் வசிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸின் அழகிய புறநகர்ப் பகுதியான பசுபிக் பாலிசேட்ஸ் சுற்றுப்புறத்தில் புதன்கிழமை தீ வேகமாக பரவியது. தீப்பரவலினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் ஏற்கனவே அழிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஜனாதிபதி ஜோ பைடன், ஒரு பெரிய பேரழிவு அறிவிப்புக்கு புதன்கிழமை ஒப்புதல் அளித்தார் மற்றும் கலிபோர்னிய ஆளுநர் கவின் நியூசோம் அவசரகால நிலையை அறிவித்தார். எனெனில், புதன்கிழமை இரவு முழுவதும் காற்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் வியாழன் வரை நிலைமை மோசமாக இருக்கும் என்று முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்தனர். ஒரேகான், நியூ மெக்சிகோ மற்றும் வாஷிங்டன் மாநிலத்தைச் சேர்ந்த குழுவினர் உட்பட கிட்டத்தட்ட 5,000 வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ளதாக ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், கலிபோர்னியா தீயை எதிர்த்துப் போராடுவதற்கு பாதுகாப்புத் துறை கூடுதல் ஆதாரங்களை வழங்குகிறது என்று பைடன் அறிவித்தார். இதில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கடற்படை ஹெலிகொப்டர் நீர் விநியோக வாளிகள் அடங்கும். https://athavannews.com/2025/1415818
  2. சுமந்திரனின் அந்த வேதனையை… வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அமைச்சர் கனவில் இருந்தவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்தால், தாங்க முடியாதுதானே. 😂 எல்லாம் அவரே தனது தலையில் அள்ளிப் போட்டுக் கொண்ட மண். 👍🏽 🤣 சுமந்திரன் இல்லாத படம்… வேறை லெவல். 😁 😂 🤣 💪
  3. வியாபாரம் என்பது லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இருக்காமல், அறம் சார்ந்த தொழிலாக இருக்க வேண்டும். மக்கள் நம்பிக்கையுடன் தமது காசை கொண்டு பொருள் வாங்கும் போது, அவர்களுக்கு தரமான பொருளை கொடுக்க வியாபாரிகள் முன்வர வேண்டும். உங்களை நம்பி வரும் மக்களுக்கு, நோய் பரப்பும் வேலைகளை செய்யக் கூடாது. உணவுப் பொருட்கள் விடயத்தில்… “கிளீன் ஶ்ரீலங்கா” அமைப்பு உடனடி கவனம் செலுத்த வேண்டும். மீறுபவர்கள் மீது, தயவு தாட்சண்ணியம் பார்க்காமல், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  4. இனிமேல்... உங்களுக்கு கிட்ட வந்து கதைக்க, நாலுதரம் யோசிக்க வேண்டும் போலுள்ளது. 😂
  5. நம்மூரிலும்... தண்ணீர் போகும் பாதையை மறித்து மதில்களை கட்டி விட்டு, ஊருக்குள் வெள்ளம் வந்து விட்டது என்று, மாரி மழையில் கோவிக்கிற மாதிரிதான் இதுவும். 😂 🤣
  6. ஒரு தலையுடன் உள்ள மூன்று மீன்கள்.
  7. அராலி வீதி குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு நன்றிகள் 🥱 இதுதான் கிளீன் ஸ்ரீலங்காவோட பவர்😏 Kunalan Karunagaran
  8. தேவையற்ற அலங்காரங்களை காசு கொடுத்து வாங்கி, பூட்டி... காசு கொடுத்து கழட்டுகின்றார்கள். இவற்றின் இறக்குமதிக்கு, விற்பனைக்கும் முன்பே தடை விதித்து இருந்தால்... தேவையற்ற பண விரயத்தையும், நூற்றுக்காணக்கான உயிர்களையும் காப்பாற்றி இருக்கலாம்.
  9. புதிய அரசியலமைப்பு உருவாக்கும் விவகாரம்-தமிழ்த்தேசிய கட்சிகள் கலந்துரையாடல்! புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுநிலைப்பாடொன்றை எட்டுவது குறித்துக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளுக்கிடையே 25 ஆம் திகதி விசேட கலந்துரையாடல் புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் தமிழ்த்தேசிய கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் நாடாளும்னறக்குழுத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுவானதொரு தீர்வுத்திட்டத்தை முன்மொழிவது குறித்து ஆராயப்பட்டுள்ளது. அத்தோடு, தமிழ்த்தேசிய கட்சிகளின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கான திகதியொன்றை நிர்ணயிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதற்கமையவே எதிர்வரும் 25 ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் சந்தித்து, இதுபற்றி விரிவாகக் கலந்துரையாடுவதற்குத் தீரமானிக்கப்பட்டது. மேலும் குறித்த கலந்துரையாடலை எங்கு நடாத்துவது என வெகுவிரைவில் தீர்மானித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 25 ஆம் திகதி நடைபெறவுள்ள சந்திப்பில் குறித்த மூன்று கட்சிகளினதும் பிரதிநிதிகள் பங்கேற்கவிருப்பதுடன், தமிழர்களுக்கு ஏற்றவாறான தீர்வுத்திட்ட முன்மொழிவை முன்வைக்கக்கூடிய வகையில் ஒவ்வொரு கட்சியிலிருந்தும் எந்தெந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பதை அந்தந்தக் கட்சிகளே தீர்மானிப்பதற்கு இதன்போது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1415672
  10. இலங்கையில், இஸ்ரேலிய மத ஸ்தலங்கள் நிர்மாணம் தொடர்பான அரசாங்கத்தின் பதில்! இஸ்ரேலிய மத ஸ்தலங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் இதுவரை அனுமதி வழங்கவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்று (08) நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “இதுவரை, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அல்லது அதன் எந்தவொரு திணைக்களமும் இஸ்ரேலிய பிரஜைகளால் மத ஸ்தலங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கவில்லை. எனினும், இவ்வாறான நிலையங்கள் பராமரிக்கப்படுவதை நாம் அறிவோம். அவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்று நிலைமையை அவதானித்துள்ளோம். அத்தகைய அனுமதி இதுவரை வழங்கப்படாததால், இந்த நடவடிக்கைகள் அனுமதியின்றி நடைபெறுகின்றன என்றும் பிரதமர் வலியுறுத்தினார். அதேநேரம், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார். எவ்வாறெனினும், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலியர்களுக்கான மத மற்றும் கலாச்சார மையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக முஜிபுர் ரஹ்மான் குற்றம் சுமத்தினார். இதுபோன்ற இடங்களில் பாதுகாப்புக்காக பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2025/1415709
  11. 77 ஆவது சுதந்திர தின விழாவில் பாரம்பரியமாக வழங்கப்படும் செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு! 77 ஆவது சுதந்திர தின விழாக்கள் குறைக்கப்பட்ட செலவுகள், குறைவான விருந்தினர்கள் மற்றும் செயற்பாடுகளுடன் நடத்தப்படும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்களின் எண்ணிக்கை 3,000 இலிருந்து 1,600 ஆக குறைக்கப்படும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். அத்துடன் ஜனாதிபதியினால் பாரம்பரியமாக வழங்கப்படும் 21 பீரங்கி வேட்டுகள் இந்த ஆண்டு இடம்பெறாது எனவும் முப்படைகள் மற்றும் பொலிஸ் அணிவகுப்புகளில் இராணுவம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இராணுவ அணிவகுப்பின் போது ஆயுதம் ஏந்திய வாகனங்கள் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி இந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படாது. இதேவேளை இந்த ஆண்டு நிகழ்வில் விமான காட்சிகள் மட்டுப்படுத்தப்படும் என்றும் இவ்வருட சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளதாக அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1415734
  12. யாழ்ப்பாணத்துக்கு வந்தால், நல்லூருக்கு போக வேண்டி வரும். ஆனால் இவர், சட்டையை கழட்ட மாட்டார். ஆனபடியால்... யாழ்ப்பாண புரோகிராம் கான்சல். 😂 இந்தியாவால்... 15 மாடியில் கட்டப் பட்ட யாழ்ப்பாண கலாச்சார மண்டபமும் இந்தியப் பிரதமரால்... உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு செய்தி ஒன்று வந்திருந்தது. இப்போதும்... அதே நிலைப்பாட்டில் உள்ளார்களா என தெரியவில்லை.
  13. 31 நாய்களை பாலத்தில் இருந்து கீழே வீசிய கொடூரம். தெலுங்கானாவில் 31 நாய்களை மர்ம நபர்கள் பாலத்தில் இருந்து கீழே வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் பாலத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதில் 20 நாய்கள் இறந்ததாகவும், 11 நாய்கள் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எட்டுமைலாரம் கிராமம் அருகே உள்ள பாலத்தில் இருந்து நாய்கள் வீசப்பட்டதாக விலங்குகள் நல அமைப்பினர் முறைப்பாடளித்ததை தொடர்ந்தே இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக இந்திரகரன் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாய்கள் வேறு எங்காவது கொன்று பாலத்தில் இருந்து வீசப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த 20 நாய்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் விலங்குகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா என்பதை தீர்மானிக்க தடய அறிவியல் ஆய்வகத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன என்று போலீசார் மேலும் தெரிவித்தனர். 31 நாய்களில் 20 நாய்கள் இறந்து கிடந்ததாகவும், காயமடைந்த 11 நாய்கள் விலங்குகள் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு நாகோலில் உள்ள காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1415731
  14. கலிஃபோர்னிய காட்டுத் தீயால் மில்லியன் கணக்கானோர் பாதிப்பு! 13,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பு மற்றும் கட்டிடங்களை அச்சுறுத்திய கடுமையான காட்டுத் தீ காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ் குடியிருப்பாளர்கள் சுமார் 30,000 பேர் செவ்வாய்க்கிழமை (08) வெளியேற்ற உத்தரவுகளைப் பெற்றனர். கடற்கரை நகரங்களான சாண்டா மோனிகா மற்றும் மலிபு ஆகியவற்றுக்கு இடையே பசுபிக் பாலிசேட்ஸ் பகுதியில் குறைந்தது 2,921 ஏக்கர் (1,182 ஹெக்டேர்) தீக்கிரையாகியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். நீட்டிக்கப்பட்ட வறண்ட காலநிலையைத் தொடர்ந்து வலுப்பெற்றுள்ள பலத்த காற்றானது தீப்பரவலை மேலும் அதிகரிக்கலாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே தீப்பரவலை கட்டுப்படுத்து முயற்சியில் விமானப் படை வீரர்களும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். காயங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என கூறிய கலிபோர்னியாவின் ஆளுனர் கவின் நியூசோம், எனினும் பல கட்டிடங்கள் ஏற்கனவே தீக்கிரையாகிவிட்டதாக குறிப்பிட்டர். அதேரேநம், அரை மில்லியன் மக்கள் மின் வெட்டு பாதிப்பினை எதிர்கொண்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். பல மாதங்களாக கணிசமான மழை பெய்யாத மலைப்பாங்கான பகுதிகளில் மணிக்கு 100 மைல் (மணிக்கு 160 கி.மீ.) வேகத்தில் வீசும் சூறாவளி காற்று பல நாட்களுக்கு நீடிக்கும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர். இதனிடையே பசுபிக் பாலிசேட்ஸ் பகுதியில் வீடுகள் தீப்பிடித்து எரிவதையும், குடியிருப்பாளர்கள் தீயில் இருந்து தப்பிக்க தங்கள் செல்ல பிராணிகளுடன் வெளியேறும் காட்சிகளும் சமூக தளங்களில் வெளியாகியுள்ளது. https://athavannews.com/2025/1415624
  15. சர்வதேசத்தை உலுக்கிய ட்ரம்பின் ஊடகவியலாளர் சந்திப்பு! வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்தைக் கையகப்படுத்துவதற்கு இராணுவ பலத்தை பயன்படுத்துவதை நிராகரிக்க மறுத்துள்ளார். அதேநேரம், கனடாவை 51 ஆவது அமெரிக்க மாநிலமாக மாற்றுவதற்கு “பொருளாதார சக்தியை” பயன்படுத்துவதாகவும் அச்சுறுத்தினார். எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ட்ரம்ப், செவ்வாய்க்கிழமை (07) புளோரிடாவில் உள்ள Mar-a-Lago ரிசார்ட்டில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் உரையாற்றும் போது இதனைக் கூறினார். மெக்சிகோ வளைகுடாவை “அமெரிக்கா வளைகுடா” என்று மறுபெயரிடுவதாகவும் இதன்போது அவர் உறுதியளித்தார். கனடாவை 51 ஆவது அமெரிக்க மாநிலமாக்கும் திட்டம் 2024 நவம்பர் 5 தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்ததில் இருந்தே, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப் கனடாவை 51 ஆவது அமெரிக்க மாநிலமாக மாற்றும் யோசனையில் மூழ்கியுள்ளார். அவர் பல சமூக ஊடக இடுகைகளில் இதைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சில பதிவுகளில், திங்களன்று இராஜினாமா செய்த பிரதமரை “கவர்னர் ட்ரூடோ” என்றும் குறிப்பிட்டுள்ளார். செவ்வாயன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், கனடாவை அமெரிக்காவிற்குள் உள்வாங்குவதற்கான தனது யோசனையை நிறைவேற்ற இராணுவ நடவடிக்கையைப் பயன்படுத்துவீர்களா என்று ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், கனடா மற்றும் அமெரிக்காவை ஒன்றாக இணைக்க “பொருளாதார சக்தியை” பயன்படுத்துவதை பரிசீலிப்பதாக கூறினார். அத்துடன், கனேடிய பொருட்களுக்கான அமெரிக்க செலவுகள் மற்றும் நாட்டிற்கான இராணுவ ஆதரவையும் ட்ரம்ப் இதன்போது குறை கூறினார். கடந்த ஆண்டு நவம்பரில், ட்ரம்ப் பதவியேற்றவுடன் இரு அண்டை நாடுகளும் அமெரிக்காவுக்குள் குடியேறும் மற்றும் போதைப்பொருள் ஓட்டத்தை நிவர்த்தி செய்யாவிட்டால் கனேடிய மற்றும் மெக்சிகன் பொருட்களுக்கு 25 சதவீத வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில் ட்ரம்பின் கருத்துக்கு கனடா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கனடாவின் வெளி விவகார அமைச்சர் மெலனி ஜோலி கூறுகையில், “அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்பின் கருத்துக்கள் கனடாவை ஒரு வலுவான நாடாக மாற்றுவது பற்றிய முழுமையான புரிதல் இல்லாததைக் காட்டுகிறது. நமது பொருளாதாரம் வலுவாக உள்ளது. எங்கள் மக்கள் வலிமையானவர்கள். அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம் என்றார். அதேபோல் ட்ரூடோ கூறும்போது, “அமெரிக்காவுடன் கனடா இணைவதற்கு வாய்ப்பே இல்லை” என்றார். கிரீன்லாந்தின் பனாமா கால்வாய் கையகப்படுத்தும் முயற்சி செவ்வாயன்று ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ட்ரம்ப், பனாமா கால்வாயை மீட்டெடுப்பது மற்றும் டென்மார்க்கிலிருந்து கிரீன்லாந்தைக் கைப்பற்றுவது குறித்தும் பேசினார். மேலும் தனது விரிவாக்கத் திட்டங்களைச் செயல்படுத்த இராணுவ பலத்தை பயன்படுத்துவதையும் நிராகரிக்க மறுத்து விட்டார். மத்திய அமெரிக்க வர்த்தகப் பாதை மற்றும் டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசத்தின் கட்டுப்பாட்டைப் பெற முயற்சிக்கும்போது, இராணுவ அல்லது பொருளாதார வற்புறுத்தலைப் பயன்படுத்த மட்டோம் என்று உலகிற்கு உறுதியளிக்க முடியுமா என்று ஊடகவியலாளர்கள் ட்ரம்பிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, “இல்லை, என்னால் அது தொடர்பில் உறுதியளிக்க முடியாது. பனாமா கால்வாய் எங்கள் இராணுவத்திற்காகக் நிர்மாணிக்கப்பட்டது என்றார். தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து, ட்ரம்ப் பனாமா கால்வாயை இணைக்கும் தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினார். மேலும் கடந்த மாதம் உயிரிழந்த முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரையும் சாடிப் பேசிய அவர், ஜிம்மி கார்ட்டர் மேற்கொண்ட ஒப்பந்தப் பேச்சுவார்த்தை 51 மைல் நீர்வழியின் முழு கட்டுப்பாட்டையும் பனாமாவுக்கு வழங்கியதாக கூறினார். மேலும், கிரீன்லாந்தை வாங்குவதற்கான தனது விருப்பத்தை டென்மார்க் எதிர்த்தால், அது “அமெரிக்க தேசிய பாதுகாப்பிற்கு இன்றியமையாதது” என்றும் ட்ரம்ப் கூறினார். இதற்கு பதிலளித்த டென்மார்க், கிரீன்லாந்து “விற்பனைக்கு இல்லை” என்று கூறியது. “நாங்கள் நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளாக இருக்கும்போது நிதி ரீதியாக ஒருவருக்கொருவர் சண்டையிட இது ஒரு நல்ல வழி அல்ல” என்று டென்மார்க் பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன் செவ்வாய் இரவு கூறினார். மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்கா வளைகுடா என பெயர் மாற்றும் திட்டம் அதே செய்தியாளர் கூட்டத்தில், ட்ரம்ப் தனது நிர்வாகம் மெக்சிகோ வளைகுடாவின் பெயரை “அமெரிக்கா வளைகுடா” என்று மாற்ற முயற்சிப்பதாக அறிவித்தார். “மெக்ஸிகோ வளைகுடாவின் பெயரை அழகான வளையத்தைக் கொண்ட அமெரிக்க வளைகுடா என்று மாற்றப் போகிறோம். இது நிறைய பிரதேசங்களை உள்ளடக்கியது. அமெரிக்கா வளைகுடா! என்ன அழகான பெயர். அது பொருத்தமானது” என்று அவர் கூறினார். பெட்ரோலியம் நிறைந்த மெக்ஸிகோ வளைகுடா நீர்நிலை உலகின் ஒன்பதாவது பெரியதாகும். மேலும் 1500 ஆம் ஆண்டுகளில் இருந்து அது மெக்ஸிகோ வளைகுடா என வரைபடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. மெக்சிகோ வளைகுடாவை மறுபெயரிடுவதற்கான ட்ரம்பின் வாக்குறுதியானது, வட அமெரிக்காவின் மிக உயரமான மலை சிகரமான தெனாலியின் பெயரை மவுண்ட் மெக்கின்லி என மாற்றுவதற்கான அவரது முந்தைய சபதத்தையும் எதிரொலித்தது. பூர்வீக அமெரிக்கர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அலாஸ்கன் மலையின் பெயரை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மாற்றினார். பணயக்கைதிகள் விடயத்தில் ஹமாஸுக்கு எச்சரிக்கை 2023 ஒக்டோபரில் இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுத்த போது சிறைபிடித்த அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால், தான் வெள்ளை மாளிகைக்கு திரும்பும் நேரத்தில், “மத்திய கிழக்கில் அனைத்தும் மோதல்கள் வெடிக்கும்” என்ற தனது அச்சுறுத்தலை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ட்ரம்ப் ஊடகவியலாளர் சந்திப்பில் மீண்டும் வலியுறுத்தினார். அத்துடன் இது ஹமாஸுக்கும், வெளிப்படையாக யாருக்கும் நல்லதாக அமையாது என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலின் போது, சுமார் 250 பணயக்கைதிகள் காஸாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர், அவர்களில் 96 பேர் எஞ்சியுள்ளனர். இதில் 34 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. நேட்டோ செலவு நேட்டோ உறுப்பினர்கள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதத்தை பாதுகாப்பிற்காக செலவிட வேண்டும் என்று ட்ரம்ப் கூறினார், இது தற்போதைய 2 சதவீத இலக்கில் இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பு. பதவியேற்கவுள்ள அமெரிக்க ஜனாதிபதி, பெரும்பாலான நேட்டோ உறுப்பினர்கள் தங்கள் நியாயமான பங்கை செலுத்தவில்லை என்று அடிக்கடி முறைப்பாடு அளித்தார். மேலும் அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாதுகாப்பு பங்களிப்புகளை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரினார். https://athavannews.com/2025/1415682
  16. ட்ரம்பின்... பனாமா கால்வாய் செய்தியும், கனடாவை... அமெரிக்காவுடன் இணைக்கும் செய்தியும் தான், இங்குள்ள ஊடகங்களில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
  17. இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்தியப் பிரதமர் மோடி! இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்வார் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. எவ்வாறெனினும், இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதால், வருகைக்கான குறிப்பிட்ட திகதிகள் தீர்மானிக்கப்படவில்லை. இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த டிசம்பரில் புதுடெல்லிக்கு விஜயம் செய்திருந்த போது விடுத்த அழைப்பின் பிரகாரம் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. அநுரகுமாரவின் இந்தியப் பயணம், பதவியேற்ற பின்னர் அவரது முதல் சர்வதேச விஜயமாக அமைந்தது. அநுரகுமாவரின் தெரிவைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் செய்த முதலாவது உயர்மட்ட வெளிநாட்டு அதிகாரி இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கர் ஆவார். இதற்கு முன்பு பிரதம் மோடி 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1415617
  18. பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று தீர்மானம் – தனியார் பஸ் உரிமையாளர்கள்! பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட பஸ் சோதனைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் முன்னெடுக்கபடவுள்ள பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று (08) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று காலை பதில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார். இந்த கலந்துரையாடலின் பின்னர் பணிப்புறக்கணிப்பு தீர்மானம் தொடர்பில் இன்று நண்பகல் 12 மணிக்குள் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். https://athavannews.com/2025/1415640
  19. Clean Sri Lanka வேலைத்திட்டம் தொடர்பில் விவாதம்! Clean Sri Lanka (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டம் தொடர்பில் இரண்டு நாட்கள் நாடாளுமன்ற விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மேற்படி விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Clean Sri Lanka (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த விவாதம் நடத்தப்படவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1415662
  20. இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு புதிய தலைவர் நியமனம்! இந்திய விண்வெளி ஆய்வு மையம் எனப்படும் இஸ்ரோ பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இது விண்வெளித்துறையில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு சவால் அளிக்கும் வகையில் பல்வேறு சாதனைகளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் செய்து வருகிறது. இன்னிலையில் இஸ்ரோவின் தற்போதைய தலைவராக சோம்நாத் உள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைவராக வி. நாராயணனை (தமிழகம் குமரி மாவட்டம் ) மத்திய அரசின் நியமனக்குழு தேர்வு செய்துள்ளது. வரும் 14-ம் திகதி இஸ்ரோ தலைவராக வி.நாராயணன் பொறுப்பேற்க உள்ளார். இவர் இஸ்ரோவின் Liquid Propulsion Systems மையத்தின் இயக்குனராக தற்போது உள்ளதுடன் இவர் இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1415621
  21. பல ஆண்டுகளுக்கு முன் வந்த... சில பீடி விளம்பரங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.