Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. 14 நாடுகளை கடந்து செல்லும் உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை. ஒரு வளைவு கூட கிடையாது... 14 நாடுகளை கடந்து செல்லும் உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை எங்க இருக்கு தெரியுமா? ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில் நமக்கு பிடித்த பாடலை கேட்டபடி வாகனத்தில் செல்வது எவ்வளவு ரம்மியமாக இருக்கும். இதுபோன்ற பயணங்களை அனுபவிக்க விரும்பும் நபர்களுக்கு ஏற்ற நெடுஞ்சாலை ஒன்றைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளப் போகிறோம். பான்-அமெரிக்க நெடுஞ்சாலை என்பது மெக்ஸிகோ, குவாத்தமாலா, எல் சால்வடார், ஹோண்டுராஸ், நிகரகுவா, கோஸ்டாரிகா மற்றும் பனாமா போன்ற வட அமெரிக்காவின் முக்கிய நாடுகளின் வழியாக செல்லும் தொடர்ச்சியான பாதை ஆகும். இது கொலம்பியா, ஈக்வடார், பெரு, சிலி மற்றும் அர்ஜென்டினா போன்ற தென் அமெரிக்க நாடுகளின் வழியாகவும் செல்கிறது. இந்த நெடுஞ்சாலை பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறது. குறிப்பாக, பான்-அமெரிக்க நெடுஞ்சாலை உலகின் மிக நீளமான மோட்டார் சாலையாக கின்னஸ் புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் மிக நீளமான நெடுஞ்சாலையாக கருதப்படும் இந்த பான்-அமெரிக்க நெடுஞ்சாலை பற்றிய அனைத்து விவரங்களையும் இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம். தூரம் எவ்வளவு? அலாஸ்காவின் ப்ருதோ பேயிலிருந்து தொடங்கும் பான்-அமெரிக்க நெடுஞ்சாலை, பயணிகள் செல்லும் பாதையைப் பொறுத்து சுமார் 30,000 கிமீ நீளம் கொண்டது. அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் அதிக பரப்பளவு மற்றும் சாலைகளின் எண்ணிக்கை காரணமாக இந்த நெடுஞ்சாலைக்கு பல ஆப்ஷன்கள் உள்ளன. அடர்ந்த காடுகளில் இருந்து வறண்ட பாலைவனங்கள் வரை பல்வேறு காலநிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் வகைகளைக் கடந்து செல்லும் பான்-அமெரிக்க நெடுஞ்சாலை உலகின் மிக நீளமான நெடுஞ்சாலையாக இருப்பதுடன், உலகின் மிகவும் பிரபலமான நெடுஞ்சாலைகளில் ஒன்றாகவும் உள்ளது. இந்த சலையில் பயணம் செய்யும் போது பல்வேறு வானிலை மற்றும் சுற்றுச்சூழலை நாம் அணுபவிக்க முடியும். கடப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? நமக்கு கிடைத்த செய்தி அறிக்கைகளின் படி பார்த்தோமென்றால், பான்-அமெரிக்க நெடுஞ்சாலை முழுதும் சுறி வந்து ஒரு பயணத்தை முடிக்க தனிநபர்களுக்கு பொதுவாக 60 நாட்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் ஒருவருடைய வாகனத்தின் வேகத்தின் அடிப்படையில் இந்தக் கால அளவு மாறுபடவும் வாய்ப்புள்ளது. உதாரணமாக, கார்லோஸ் சான்டாமரியா என்ற நபர் இந்த நெடுஞ்சாலை பயணத்தை முடிக்க 117 நாட்கள் எடுத்துக்கொண்டார். மேலும், பெரும்பாலான பான்-அமெரிக்க நெடுஞ்சாலை பாதைகள் ஸ்பானிய மொழி பேசும் நாடுகளின் வழியாக செல்கிறது. ஆகவே இந்த நெடுஞ்சாலை வழியாக செல்லும் பயணிகள், சங்கடமில்லாமல் பயணிக்க வேண்டுமென்றால் ஸ்பானிஷ் மொழியைக் கொஞ்சம் கற்றுக்கொள்ள முயற்சி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வளைவுகள் இல்லாத நெடுஞ்சாலையா? 1923-ல் கட்டப்பட்ட பான்-அமெரிக்க நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதன் நோக்கம் வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மாநிலங்களை இணைப்பதாகும். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சுமார் 30,000 கிமீ நீளமுள்ள இந்த நெடுஞ்சாலையில் யு-டர்ன் அல்லது வளைவும் எதுவும் இல்லை என்று சில அறிக்கைகள் கூறுகின்றன. படித்ததில் பிடித்தது.
  2. யாழில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது! யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐந்து இளைஞர்களை கைது செய்யப்பட்டுள்ளனர் கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களிடம் இருந்து, 40 ஆயிரம் போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களையும் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2025/1418757
  3. மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும் என அறிய முயன்ற மாணவி உயிரிழப்பு. ‘மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும்?’ என்பதை இணையதளத்தில் தேடிய ரிசர்வ் வங்கி உயர் அதிகாரியின் ஒரே மகளான பிளஸ்-2 படிக்கும் மாணவி கழுத்தை அறுத்து தனது உயிரை மாய்த்து கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் 2-வது நிர்வாக தலைநகராக கருதப்படும் நாக்பூரிலேயே 17 வயது மாணவி ஒருவர் இவ்வாறு தனது உயிரை மாய்த்து செய்துகொண்டுள்ளார். கற்றல் செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவி இந்தி, மராத்தி, ஆங்கிலம், ஜெர்மன் என 12 மொழிகளை கற்று தேர்ந்தவராக இருந்து இருக்கிறார். நேற்று அதிகாலை மாணவியின் தாய் அவரது படுக்கை அறைக்கு சென்ற போது மாணவி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குடும்பத்தினர் மாணவியை அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் , அவர் ஏலவே உயிரழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சென்ற பொலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மாணவி கல்லால் செய்யப்பட்ட கத்தியால் கை, கழுத்தை அறுத்து தனது உயிரை மாய்த்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மேலும் பொலிஸார் மாணவியின் செயல் குறித்து விசாரித்தபோது நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. மாணவி படிப்பில் சிறந்து விளங்கிய போதும் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வமாக இருந்து உள்ளார். மேற்கத்திய கலாசாரத்திலும் அதீத ஆர்வம் காட்டி உள்ளார். நாட்கள் செல்ல செல்ல செல்போனில் மூழ்கிய மாணவி, ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி விட்டார். வெளிநாட்டு கலாசாரம் பற்றியும் ஆன்லைனில் அதிகம் தேடிப்பார்த்து இருக்கிறார். இதையடுத்து மாணவிக்கு விபரீத சிந்தனைகள் உருவாகின. ‘மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும்?’ என்பதை தெரிந்து கொள்வதில் மாணவி அதீத ஆர்வம் காட்டினார். இதனை ஆன்லைனில் பார்த்து தெரிந்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் அவர் ஆன்லைனில் கற்காலத்தில் மனிதர்கள் வேட்டையாட பயன்படுத்தும் கல்லால் செய்யப்பட்ட கத்தியை ஆர்டர் செய்தார். அந்த கத்தியால் தான் அவர் தனது உயிரை மாய்த்துள்ளார். மாணவி கத்தியை பயன்படுத்தி கையின் மணிக்கட்டு பகுதியில் 5 முறை அறுத்து உள்ளார். இறுதியில் அவர் கழுத்தை அறுத்து தனது உயிரை மாய்த்து கொண்டுள்ளார். மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும் என பிளஸ்-2 மாணவி ஒருவர் ஆன்லைனில் தேடிப்பார்த்து தன் உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒரே மகளை இழந்த மாணவியின் பெற்றோர் மீள முடியாத துயரத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து நாக்பூர் தன்தோலி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்துள்ள பிளஸ்-2 மாணவியின் வீட்டில் இருந்து ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட கடிதத்தை பொலிஸார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதம் 4 பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. அதில் மரணம் மீதான ஈர்ப்பு, வெளிநாட்டு சித்தாந்தம், நாசிசம், ரஷிய கலாசாரம், மெட்டா பிசிக்ஸ் பற்றி மாணவி குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. https://athavannews.com/2025/1418737
  4. மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு ட்ரம்பின் விசேட இராஜினாமா திட்டம்! கூட்டாட்சி பணியாளர்களின் அளவை கணிசமாகக் குறைக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம், அலுவலகத்தில் பணிக்குத் திரும்ப விரும்பாத அனைத்து ஊழியர்களுக்குமான விசேட இராஜினாமா திட்டத்தை வெளியிட்டது. அமெரிக்க பணியாளர் மேலாண்மை அலுவலகம் செவ்வாய்க்கிழமை (28) இது குறித்து மில்லியன் கணக்கான ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில் இந்த சலுகையை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, கூட்டாட்சித் தொழிலாளர்கள் பெப்ரவரி 6 ஆம் திகதிக்குள் இராஜினாமா செய்தால், அவர்கள் செப்டம்பர் வரை எட்டு மாத ஊதியம் மற்றும் பலன்களைப் பெறுவார்கள். அதேநேரம், இதில் பங்கேற்பதா என்பதை முடிவு செய்ய மத்திய அரசு ஊழியர்களுக்கு பெப்ரவரி 6 வரை அவகாசம் அளித்துள்ளது. 10% ஊழியர்கள் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்வார்கள் என்று ட்ரம்ப் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. மூத்த ட்ரம்ப் அதிகாரிகள் இந்த திட்டமானது அரசாங்கத்திற்கு 100 பில்லியன் டொலர் வரை சேகரிக்க உதவும் என்று கூறியுள்ளனர். அரசாங்கத்தின் குடிவரவு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பதவிகளில் உள்ளவர்கள் மற்றும் அமெரிக்க தபால் சேவையில் பணிபுரிபவர்கள் தவிர குடிமக்கள் பணியாளர்களை இந்த சலுகை உள்ளடக்கியது. குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அரசியல் முன்னுரிமைகளுக்கு இணங்க அமெரிக்க கூட்டாட்சி அரசாங்கத்தை சுருக்கவும், சுத்தப்படுத்தவும் மற்றும் மறு உருவாக்கவும் முன்னெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை வந்துள்ளது. https://athavannews.com/2025/1418733
  5. கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பம்! கொழும்பு துறைமுக பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நான்கு மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 28 ஆம் திகதியுடன் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்த புதைக் குழியிலிருந்து இதுவரை 3 மனித எச்சங்களும் 4 மண்டை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒக்டோபர் மாதத்தில் அகழ்வுப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டபோதிலும் போதுமான நிதிவசதிகள் இல்லாத காரணத்தினால் இந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்ட நேரத்தில், தடயவியல் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ, மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியின் விசாரணையை நீண்ட காலத்திற்கு இடைநிறுத்த முடியாது எனக் கூறியிருந்தார். இந்த நிலையிலேயே நேற்று முதல் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த பணிகளை 20 நாட்களுக்குள் முடிக்க எதிர்பார்ப்பதாக பேராசிரியர் சோமதேவ நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்திற்குச் செல்ல புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானத்திற்காக பூமியைத் தோண்டியபோதே இந்த மனித புதைக்குழி கண்டறியப்பட்டது. நீதிமன்றத்திற்கு விடயம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நீதவான் பண்டார இலங்கசிங்கவின் உத்தரவின் பேரில் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 05 ஆம் திகதி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1418619
  6. உத்தரப்பிரதேசில் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு! உத்தரப்பிரதேசின் பிரயாக்ராஜில் புதன்கிழமை (29) காலை நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்றைய தை (மௌனி) அமாவாசையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் திரண்டதில் நிறுவப்பட்ட தடைகள் உடைந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்தது. நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்க ஏராளமான அம்பியூலன்ஸகள் விரைந்து செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த நபர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுதமிக்கப்பட்டனர். குறைந்தபட்சம் 15 உடல்கள் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டதாக ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், இந்த சம்பவத்தில் குறைந்தது 30 முதல் 40 பேர் காயமடைந்திருக்கலாம் என்று நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களை மேற்கொள்ளிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் மூன்று முறை தெலைபேசியில் உரையாடி நிலைமையை கேட்டறிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்போது நிலைமையை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோரும் ஆதித்யநாத்திடம் பேசி, மத்திய அரசின் அனைத்து உதவிகளை வழங்குவதையும் உறுதி செய்தனர். இதனிடையே பக்தர்கள் புதின திரிவோணி சங்கமத்தில் நீராடிவிட்டு அங்கிருந்து விரைந்து வெளியேறுமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திரிவேணி சங்கமம் என்பது கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய புனித நதிகள் இடமாகும். இது இந்துக்களால் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. மகா கும்பமேளாவின் போதும் அமாவாசை நாள் அன்றிலும் குறிப்பாக தை மா அமாவாசை போன்ற சிறப்பு ஸ்நானத் திதிகளில் நீராடுவது மக்களின் பாவங்களைக் கழுவி அவர்களுக்கு மோட்சத்தை அளிப்பதாக நம்பப்படுகிறது. https://athavannews.com/2025/1418691
  7. மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு; கடும் கண்டனத்தை வெளியிட்ட இந்தியா! செவ்வாய்கிழமை (28) அதிகாலை 13 இந்திய மீனவர்கள் சம்பந்தப்பட்ட இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நெடுந்தீவுக்கு அருகேயுள்ள கடற்பரப்பில் இன்று அதிகாலை இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர்களை கைது செய்ய முயன்றபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இந்தப் துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இரண்டு மீனவர்கள் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்த மீனவர்கள் தற்சமயம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மூன்று மீனவர்களும் சிறு காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் காயமடைந்த மீனவர்களை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்துள்ளனர். மேலும், மீனவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றர் என்றும் அமைச்சு அந்த அறிக்கையில் குறிப்பட்டுள்ளது. இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் புதுடெல்லியில் உள்ள இலங்கையின் தற்காலிக உயர்ஸ்தானிகரை வரவழைத்து, சம்பவம் குறித்து கடும் கண்டனத்தை பதிவு செய்தார். கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த விடயத்தை இலங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சிடமும் எழுப்பியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரக் கவலைகளை மனதில் கொண்டு, மீனவர்கள் தொடர்பான பிரச்னைகளை மனிதாபிமானமாக கையாள வேண்டியதன் அவசியத்தை இந்திய அரசு எப்போதும் வலியுறுத்தி வருகிறது. எந்தச் சூழ்நிலையிலும் பலத்தை பயன்படுத்துவதை ஏற்க முடியாது. இது தொடர்பாக இரு அரசாங்கங்களுக்கும் இடையே இருக்கும் புரிந்துணர்வுகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இலங்கை கடற்படையின் அறிக்கை 2025 ஜனவரி 27, அன்று, யாழ்ப்பாணத்தின் வெல்வெட்டித்துறைப் பகுதியிலிருந்து இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த ஏராளமான இந்திய மீன்பிடிக் கப்பல்களை வடக்கு கடற்படைக் கட்டளை அவதானித்து. அந்த கட்டளைக்கு சொந்தமான கடற்படையின் கப்பல்களை அனுப்புவதன் மூலம் அந்த மீன்பிடி படகுகளை நாட்டின் கடல் எல்லையில் இருந்து அகற்றும் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு குறித்த கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு மீன் வளங்களை சேகரித்துக்கொண்டிருந்த பதின்மூன்று (13) இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடி படகொன்றும் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது. இந்திய மீன்பிடிக் கப்பலை கடற்படையினர் கைது செய்யவிருந்த போது, கடற்படையினரின் சட்ட உத்தரவை மீறியதாலும், மேலும் கலவரமான நடத்தையாலும் கடற்படைக் குழுவொன்று கப்பலில் ஏறியுள்ளது. கப்பலுக்குள் கடற்படையினர் ஏற விடாமல் தடுக்கும் வகையில் இந்திய மீனவர்கள் அதற்கு செவிசாய்க்காமல், வழக்கமான பணிகளுக்கு இடையூறு விளைவித்து, கடும் எதிர்ப்பை காட்டி, மீன்பிடி கப்பலை ஆக்ரோஷமாக கையாண்டதால், இந்திய மீனவர்கள் கலவரத்தில் ஈடுபட்டதுடன், கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கப்பலில் ஏறும்போது, கடற்படை வீரர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மீனவர்கள் குழு ஆக்ரோஷமாக தாக்க முயன்றது. கடற்படை அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பறிக்க முற்பட்ட போது, அந்த துப்பாக்கியின் செயல்பாட்டினால் இரண்டு மீனவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகினர். கடற்படையினரால் இரு மீனவர்களுக்கும் அடிப்படை முதலுதவிகளை வழங்கியதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். குறித்த மீனவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என யாழ்ப்பாணம் வைத்தியசாலை உறுதிப்படுத்தியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கடற்படையினர் காங்கேசன்துறை பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளனர். கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் எஞ்சிய பதினொரு (11) மீனவர்கள் இன்று (2025 ஜனவரி 28,) காலை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ். மயிலடி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. https://athavannews.com/2025/1418632
  8. அமெரிக்காவுக்கு தீங்கு விளைவித்தால் வரி விதிக்கப்படும்! – ட்ரம்ப் எச்சரிக்கை. ‘அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப்படும்’ என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறை பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், பதவியேற்ற முதல் நாளிலேயே பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். குறிப்பாக ‘உலகின் உற்பத்தி மையமாக மீண்டும் அமெரிக்காவை மாற்றுவதற்கு தான் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரி, கனடா, மெக்சிகோ பொருட்களுக்கு 25 சதவீத வரி என வரிசையாக வரிகளை விதித்த ட்ரம்ப், நட்பு நாடான இந்தியாவுக்கு 100 சதவீத வரி விதிப்பதாகவும் எச்சரித்துள்ளார். மேலும் ‘பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் டொலருக்கு மாற்றாக வேறு நாணயத்தில் வர்த்தகம் செய்து, டொலரின் மதிப்பை குறைக்க நினைத்தால், அந்த நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படுமென ட்ரம்ப் கூறியிருப்பது, இந்தியாவுக்கு எதிரான எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது. இந்நிலையில், குடியரசுக் கட்சி எம்.பி.இக் கள் முன்னிலையில் ட்ரம்ப் நேற்று உரையாற்றிய போது ” அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கும் வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டவர்கள் மீது வரிகளை விதிக்க தாம் தீர்மானித்துள்ளதாகவும், அவர்கள் தங்கள் நாட்டுக்கு நல்லது செய்ய விரும்பினாலும், அது அமெரிக்காவுக்கு தீங்கு விளைவிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மிகப்பெரிய அளவில் வரி விதிக்கின்றன எனவும், ஆனால் இனி அப்படி நடக்காது எனவும் அமெரிக்கா முதன்மையானது என்பதே எனது கொள்கையாக இருக்கும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1418700
  9. தாத்தா... ஊருடன் ஒத்து, வீட்டை விற்று விட்டு போயிருக்க வேண்டும். வறட்டு பிடிவாதம் பிடித்ததால்... இரண்டு கோடியையும் இழந்து, அவர் ஆசைப்பட்ட வீட்டிலும் வசிக்க முடியாமல் போய் விட்டது. இதுதான்... அந்தத் தாத்தாவின் வீடு என நினைக்கின்றேன்.
  10. மாவை சேனாதிராஜா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி! இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2025/1418524
  11. கடந்த ஆண்டில் துஷ்பிரயோகம் தொடர்பில் 321 முறைப்பாடுகள்! 2024 ஆம் ஆண்டில் சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 321 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கூற்றுப்படி, 2024 ஜனவரி முதலாம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் 580 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலப்பகுதியில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு சிறுவர்கள் தொடர்பான 8,746 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான முறைப்பாடுகளில் அதிகபட்சமாக 2,746 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1,950 முறைப்பாடுகளும், சிறுவர்களை யாசகர்களாகப் பயன்படுத்தப்படுவது தொடர்பாக 229 முறைப்பாடுகளும் பெறப்பட்டுள்ளன. பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 42 முறைப்பாடுகளும், பாலியல் செயல்களுக்கு குழந்தைகளை பரிந்துரைப்பது தொடர்பாக 25 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதேவேளை, கடந்த வருடத்தில் சிறுவர் திருமணங்கள் தொடர்பாக 14 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன், நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தப்பட்டதாக 151 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 2024 ஆம் ஆண்டு தற்கொலை முயற்சிகள் தொடர்பான 18 முறைப்பாடுகளும், போதைப்பொருள் பாவனை தொடர்பான 120 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடத்தில் வயதுக்குட்பட்ட கர்ப்பம் தொடர்பான 53 முறைப்பாடுகளும் பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் தொடர்பில் 39 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1418474
  12. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம்! யாழ்-பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது காயமடைந்த இருவரும் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது. இதன்போது இந்திய மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கைது செய்ய கடற்படை வீரர் முயற்சித்தார். இதன்போது கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு மீனவர்களின் படகு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளது. இதனையடுத்து ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் இந்திய மீனவர்கள் இருவர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1418480
  13. 6 கோள்களின் அணிவகுப்பை பார்வையிடும் அரிதான வாய்ப்பு! இன்றைய நாட்களில் சூரிய குடும்பத்தின் 6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களை இவ்வாறு பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் பிரிவின் வானியல், விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். வௌ்ளி, சனி, வியாழன், செவ்வாய் ஆகிய கோள்கள் வெற்றுக்கண்களால் அவதானிக்கக் கூடியவாறு பிரகாசமாக தென்படும் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்களை தொலைநோக்கியினுடாக பார்வையிடுவதற்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக பேராசிரியர் கூறினார். எதிர்வரும் 29 ஆம் திகதி வரை சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் 90 நிமிடங்களுக்கு கோள்களை இவ்வாறு பார்வையிட முடியும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1418509
  14. கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேலும் 20 சோதனை முகப்புக்கள்? சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதையடுத்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குறைந்தது 20 சோதனை முகப்புக்களை உள்ளடக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் விமான நிலையத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் அறிக்கையின்படி, கூடுதல் சோதனை முகப்புக்களுக்கான இடங்களை தீர்மானிக்க விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கலந்துரையாடலின் போது, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, சுற்றுலாப் பயணிகளின் வருகை வேகமாக அதிகரித்து வருவதால், விமான நிலைய வசதிகளை முடிந்தவரை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். 2028 ஆம் ஆண்டளவில் 12 மில்லியன் விமானப் பயணிகளை ஈர்க்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது, அதே நேரத்தில் மற்ற சர்வதேச விமான நிலையங்களில் உள்ள நிறுவனங்களையும் இலங்கைக்கு அழைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அரசாங்கத்தின் முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு கூறுகிறது. https://athavannews.com/2025/1418555
  15. யோஷிதவுக்கு பிணை வழங்கப்படுவதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அர்த்தமில்லை! -ஹர்ஷன நாணயக்கார. ”முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்படுவதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்று அர்த்தப்படுத்த முடியாது” என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். யோஷித ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” குறித்த வழக்கில் யோஷித ராஜபக்ஷ இதுவரை சந்தேக நபராகப் பெயரிடப்படவில்லை. யோஷித ராஜபக்ஷ தொடர்புபட்டுள்ள குறித்த பணமோசடி சம்பவம் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதுவரை, யோஷித இந்த வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்படவில்லை. உயர் நீதிமன்றத்தில் ஒரு நபருக்கு குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு, சந்தேக நபராக அவரிடமிருந்து வாக்குமூலம் பெறுவது அவசியம். வாக்குமூலம் பெறுவதற்காக இந்த நபரை சந்தேக நபராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதுதான் வழக்கமான நடைமுறை. பிணை சட்டத்தின் விதிகளின்படி, அவர் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்காவிட்டால், அல்லது நாட்டை விட்டு தப்பிச் செல்லாவிட்டால் பிணை வழங்குவது இயல்பானது. பிணை வழங்கப்படுவதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று அர்த்தமல்ல” இவ்வாறு நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1418564
  16. ட்ரம்ப் மீதான விசாரணையை மேற்கொண்ட சட்டத்தரணிகள் குழு பணி நீக்கம்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் அவருக்கு எதிரான இரண்டு குற்றவியல் வழக்குகளில் பணியாற்றிய பத்துக்கும் மேற்பட்ட நீதித்துறை சட்டத்தரணிகளை பணிநீக்கம் செய்துள்ளது. பதவி நீக்கமானது திங்கட்கிழமை (27) முதல் அமுலுக்கு வந்துள்ளது. ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடுப்பதில் இவர்கள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருப்பதால், ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலை நம்பிக்கைத் தன்மையாக செயல்படுத்துவதை நம்ப முடியாது என்று தீர்மானம் எடுக்கப்பட்டதை அடுத்து சட்டத்தரணிகள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக செயல் சட்டமா அதிபர் ஜேம்ஸ் மெக்ஹென்றி சுட்டிக்காட்டியுள்ளார். சட்டத்தரணிகள் முன்னாள் சிறப்பு ஆலோசகர் ஜாக் ஸ்மித்தின் குழுவின் ஒரு பகுதியாக இருந்தனர். இந்தக் குழு ட்ரம்பின் இரகசிய ஆவணங்களை தவறாகக் கையாண்டதுடன், 2020 தேர்தல் தோல்வியை முறியடிக்க அவர் செய்ததாகக் கூறப்படும் முயற்சி மீதான விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ட்ரம்ப் மீதான இரண்டு நீதித்துறை வழக்குகளை மேற்பார்வையிட ஜாக் ஸ்மித் 2022 இல் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற இரண்டு வினாடிகளுக்குள் அவரை பதவி நீக்கம் செய்வதாக ஜனாதிபதி சபதம் செய்திருந்தார். எனினும், ஜனவரி 20 ஆம் திகதி ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்பே ஜாக் ஸ்மித் பதவி விலகினார். இரண்டு வழக்குகளும் ட்ரம்ப் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளை விளைவித்தன. எனினும், 2024 நவம்பர் தேர்தலில் அவர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வழக்குகள் முடக்கப்பட்டன. நீதித்துறை விதிமுறைகளின் படி, ஒரு பதவியில் இருக்கும் ஜனாதிபதியை வழக்குத் தொடர அனுமதிக்காது என்று சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர். எவ்வாறெனினும் ஸ்மித்தின் குழுவிலிருந்து பதவி நீக்கப்பட்டவர்கள் யார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. https://athavannews.com/2025/1418491

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.