Everything posted by தமிழ் சிறி
-
ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் சங்கமித்த 5 அமெரிக்க ஜனாதிபதிகள்!
ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் சங்கமித்த 5 அமெரிக்க ஜனாதிபதிகள்! கடந்த மாத இறுதியில் தனது 100 ஆவது வயதில் உயிரிழந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் இறுதிச் சடங்கில் தற்போதைய, முன்னாள் ஜனாதிபதிகள் 5 பேர் மற்றும் துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இறுதிச் சடங்கானது வியாழக்கிழமை (09) வொஷிங்டன் நேஷனல் கதீட்ரலில் நடைபெற்றது. அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதிகளான ஜோ பைடன், டெனால்ட் ட்ரம்ப், பராக் ஒபாமா, ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் பில் கிளிண்டன் ஆகியோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, முதல் வரிசையில் ஒன்றாக அமர்ந்திருந்தனர். கடந்த நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சித் தலைவர் ட்ரம்பிடம் தோல்வியடைந்த துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் அவரது முன்னோடிகளான மைக் பென்ஸ் மற்றும் அல் கோர் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளும் இறுதி சடங்கில் கலந்து கொண்டு கார்டருக்கு மரியாதை செலுத்தினர். 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் டரம்பிடம் தோல்வியடைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அவரது கணவருடன் சடங்கில் பங்கெடுத்தனர். ஜனாதிபதி ஜோ பைடன் தனது புகழஞ்சலியில், கார்டரின் பண்பு மற்றும் தலைமைத்துவத்தை பலமுறை பாராட்டினார். ஒரு தசாப்தத்தில் அரசியல் ரீதியாக மோதலில் ஈடுபட்டுள்ள ட்ரம்ப் மற்றும் ஒபாமா – இறுதி சடங்கு நிகழ்வானது தொடங்குவதற்கு முன்பு சிரித்து அரட்டையடிப்பதை காட்டும் புகைப்படங்களும் இதன்போது படம்பிடிக்கப்பட்டது. முன்னாள் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் தனது கணவருடன் சடங்கில் பங்கெடுத்தார்.ஆனால் மிச்செல் ஒபாமா கலந்து கொள்ளவில்லை. அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தபோது ட்ரம்ப் மற்றும் அவரது முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் கைகுலுக்கினர். ட்ரம்பின் ஜனாதிபதி பதவியின் முடிவில் இருவரும் வெளியேறினர், ட்ரம்பின் அழுத்தம் இருந்தபோதிலும் பைடனின் ஜனாதிபதி பதவி வெற்றிக்கான சான்றிதழை பென்ஸ் தலைமை தாங்கினார். ஒரு கலக கும்பல் 2021 ஜனவரி 6 அன்று அமெரிக்க கேபிட்டலில் நுழைந்து சான்றிதழை நிறுத்த முயற்சித்தது, சிலர் பென்ஸ் தூக்கிலிடப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். பின்னர் அவர் 2024 குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்பிற்கு எதிராக போட்டியிட்டும் இருந்தார். நிகழ்வில் போர்த்துக்கள் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சௌசா, நெதர்லாந்தின் இளவரசி மாபெல் ஆஃப் ஆரஞ்ச்-நாசாவ் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உட்பட பல தற்போதைய மற்றும் முன்னாள் உலகத் தலைவர்கள், முக்கிய சர்வதேச அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதேநேரம், அண்மையக் காலங்களில் ட்ரம்பின் கண்ணில் வீழ்ந்த தூசியாகவுள்ள பதவி விலகும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இதில் பங்கெடுத்தார். அண்மைய வாரங்களில் ட்ரம்ப், ட்ரூடோவை “கவர்னர் ட்ரூடோ” என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு, கனடாவிற்கு எதிராக “பொருளாதார சக்தியை” பயன்படுத்துவதாக சபதம் மேற்கொண்டிருந்தார். 2024 தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் இடையில் எவ்விதமான பேச்சுக்களும், புன் சிரிப்புக்களும் இங்கு இடம்பெறவில்லை. இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும், இரு அரசியல்வாதிகளும் தேவாலயத்திற்குள் நுழைந்த பின்னர் கைகுலுக்கவில்லை. ட்ரம்ப் தனது இருக்கையில் அமர்ந்தபோது ஹாரிஸை வெறித்துப் பார்த்தார். ஹாரிஸின் கணவரான செகண்ட் ஜென்டில்மேன் டக் எம்ஹாஃப், பின்னர் கமலா ஹாரிஸ் புஷ்ஷிடம் பேசிய சந்தர்ப்பத்தில் ட்ரம்புடன் கைகுலுக்கினார். இவர்கள் தவிர கார்டரின் உயிருள்ள வாரிசுகள் அனைவரும் வொஷிங்டனில் வியாழன் அன்று நடந்த இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர். 1976 ஆம் ஆண்டு ஜெரால்ட் ஆர். ஃபோர்டை தோற்கடித்து, அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியான காட்டர் கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி தனது 100 ஆவது வயதில் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1415931
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
கடந்த பாராளுமன்றத் தேர்தலில்.... மக்களால் நிராகரிக்கப் பட்டு, படு தோல்வி அடைந்த சுமந்திரன், ஐ. நா. வதிவிடப் பிரதிநிதியை மூன்று கிழமைக்கு முன் சாணக்கியனுடன் சென்று சந்தித்த சந்திப்பு. 👇
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
புதிய வகையான பாம்பு. 😂 🤣- பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!
"ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு..'' - காந்தக் குரலோன் ஜெயச்சந்திரன் காலமானார்.- பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்!
பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் காலமானார்! பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் (80 வயது) உடல்நலக்குறைவால் காலமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (09-01-2025) சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் அவரது குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். பாடகர் ஜெயச்சந்திரன் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 14000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். https://jvpnews.com/article/popular-playback-singer-jayachandran-passed-away-1736438344- கந்த சஷ்டி கவசத்தை ஒலிப்பதிவு செய்ய... சூலமங்கலம் சகோதரிகள் பட்ட சிரமங்கள்.
இசையில் ஆர்வம் கொண்ட ஒரு இளம் பெண்... தன் சகோதரியோடு இணைந்து ஒரு பாடலை பாடி வெளியிட நினைத்து .. பல கிராமபோன் ரிகார்டு [இசைத்தட்டு ] கம்பெனிகளை கேட்டுப் பார்த்தாராம்.. ஆனால் இசைத்தட்டு கம்பெனிகள் இதற்கு மறுத்து விட்டார்களாம்.. அவர்கள் சொன்ன ஒரே காரணம் ‘‘ஓதுவார்கள் பலர் பாடியும் அது மக்களைச் சரியாக சென்றடையவில்லை. வேண்டாம் இந்த வீண்வேலை, விட்டு விடுங்கள்..’’ விடவில்லை அந்த சகோதரிகள்.. இசைத்தட்டு சுழல்வது போல் இசைத்தட்டு கம்பெனிகளை சுற்றி சுழன்று வந்து முயற்சித்தும்... கீறல் விழுந்த இசைத்தட்டாக “முடியாது “ என்ற பதிலே திரும்ப திரும்ப வந்ததாம்... ஆனாலும் மனம் தளராத அந்த சகோதரிகள் அந்தப் பாடலை பல ராகங்களில் டியூன் போட்டுப் பாடிப் பார்த்தார்களாம்... முதலில் ‘ஆபேரி’ அடுத்து ‘சுப பந்துவராளி’. அதனைத் தொடர்ந்து ‘கல்யாணி’. இறுதியாக ‘தோடி’.. இப்படி நான்கு ராகத்தில் பாடினார்கள் இந்தப் பாடலை... ஒருவழியாக 1970 - ல் வெறும் 500 ரிகார்டுகள் மட்டுமே வெளியிட்டார்களாம். ஆனால் அந்த ரிக்கார்ட் பல ரிக்கார்டுகளை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தது... இப்படி அந்தக் காலத்தில் படாத பாடுபட்டு பாடி இந்த இசைத்தட்டை வெளியிட்ட சகோதரிகள் சூலமங்கலம் சகோதரிகள்.. அந்தப் பாடல்... கந்த சஷ்டி கவசம்... சஷ்டியை நோக்கச் சரவண பவனார்.. சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்.. கந்தசஷ்டி கவசத்தை வேறு சிலரும் பாடியிருந்தாலும், சூலமங்கலம் சகோதரிகள் அளவுக்கு வேறு எதுவும் நம்மைக் கவரவில்லை... சரணம் சரணம் சண்முகா சரணம்.. சரணம் .. Paranji Sankar- பிரபல தவில் வித்துவானின் மகன் விபத்தில் உயிரிழப்பு
ஆழ்ந்த அனுதாபங்கள். வீதியில் அனாமத்ததாக திரியும்... கட்டாக்காலி நாய், மாடுகள் போன்றவற்றால் தினமும் பல மனித உயிர்கள் பறி போகின்றன. மூன்று மாதத்திற்கு முன் எனது உறவினர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது... தெருவில் நின்ற நாய் திரத்த, இவர் பதட்டப் பட்டு வேகமாக ஓட, வீதியில் இருந்த மணலில்... மோட்டார் சைக்கிள் சறுக்கி விபத்து ஏற்பட்டு, மூன்று மாதமாக... பல லட்சங்கள் செலவழித்து, வைத்தியம் பார்த்து இன்னும் மருத்துவ விடுப்பில் உள்ளார்.- ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!
கொரோனாவின் போது... ஜனாஸாவை எரித்த, கோத்தாவும் பதவியில் இல்லை என்ற படியால்... அனுரா... "அது, ஒரு துன்பியல் சம்பவம்" என்று சொன்னால், காத்தான்குடிகாரனின் வாக்கும், அனுரவுக்கே கிடைக்கும்.- ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!
அத்துடன்... முஸ்லீம்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்காத கவலையையும் மறந்து விடுவார்கள். 😂 வரும் உள்ளூராட்சி தேர்தலிலும்... முஸ்லீம்களின் வாக்கை, அனுர... கொத்தாக அள்ளுகின்றார். 🤣- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
மேலுள்ள படத்தப் பார்த்து... இலங்கை முஸ்லீம் ஒருவர், அமெரிக்காவின்... காஸா போலுள்ளது என கருத்து எழுதி இருந்தார்.- ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!
பிரான்ஸ் மனைவிக்கு... இரண்டு பெரிய பெண் பிள்ளைகள். அவர் மனது வைத்தால்... ஞானசார தேரரின் அபராதத்தை 1500 ஐரோவாக கட்டி... கந்தையா அண்ணையை குளிர்விப்பார் என நினைக்கின்றேன். 😂 இப்ப சந்தோசமா.... 🤣- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
நீளக் கை வைத்த சேர்ட் உங்களுக்கு, Summer Shirt ? 😂 யாழ்ப்பாண வெக்கைக்குள்... கோட்டு, சூட்டுடன் திரியும்... முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், ஒரு வெளி நாட்டு அதிகாரியை சந்திக்கப் போகும் போது வெளியில் இழுத்து விடப்பட்ட கசங்கிய சட்டையும், அவரின் உடல் மொழியும்... சாணக்கியனின் கார்ச் சாரதியாக போயிருப்பார் என்ற சந்தேகத்தை இங்கு பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது. 😎 உங்களுக்கு அது தெரிய வாய்ப்பு இல்லை. நீங்கள் அதுக்கு, வெள்ளையடிக்கப் பார்க்கிறீர்கள். 🤣 போட்ட சேர்ட்டின் நிறத்தையும் கவனிக்கவும். கொள்ளையிலை போன ராஜதந்திரமோ.... 😂 🤣- கலிபோர்னியாவில் காட்டுத்தீ: 30 ஆயிரம் பேர் பாதிப்பு
இது இன்றைய (அமெரிக்கா) லாஸ் ஏஞ்சல்ஸ், காட்டு தீ 🔥 AB Amam- ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!
பிக்குகள்.... சொத்து , சுகம் எல்லாம் துறந்தவர்கள். அவர்கள் வேலை வெட்டிக்குப் போய் சம்பாதிப்பதில்லை. அதனால் அவர்களிடம் பணம் பெரிதாக இராது என்று, நீதவான், 1500 ரூபாவை அபராதமாக விதித்திருக்கலாம்.- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியார்... தனது வளர்ப்பு மகளான, மணியம்மையை திருமணம் செய்தது உண்மைதானே. 😎 😂 அதற்கு ஏன்... வேலை வெட்டி இல்லாதவங்கள், செந்தமிழன் சீமான் வீட்டை முற்றுகையிடுகிறார்கள். 🤣- ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!
ஞானசாரவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு! பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கையை கொழும்பு, மேலதிக நீதிவான் இன்று (09) நிராகரித்தார். இஸ்லாம் மதத்தை அவதூறு செய்யும் வகையில் அவதூறு பேசியமைக்காக ஞானசார தேரருக்கு 09 மாத சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. தண்டனைக்கு எதிராக அவர் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளதால், மேன்முறையீட்டு மனு விசாரணை செய்யப்பட்டு இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் வரை ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் இந்த பிணை கோரிக்கையை சமர்ப்பித்திருந்தனர். எனினும், அந்த கோரிக்கையை கொழும்பு, மேலதிக நீதிவான் பசன் அமரசேன நிராகரித்தார். https://athavannews.com/2025/1415921- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்திக்குதான்.. சுமந்திரன், சிக்னல் கொடுக்கிறார். ஏற்கெனவே மகிந்த, கோத்தா, மைத்திரி, ரணில் எல்லாரையும் பின்கதவாலை போய் சந்தித்தவருக்கு, இப்ப பாராளுமன்ற பதவி இல்லாததாலை, அனுரவை சந்திக்க ஒரு சாட்டும் இல்லை. அதுதான்... சிவப்பு சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பி விட்டார். "கிளீன் ஸ்ரீலங்கா"விலை இவரையும் தூக்கி, குப்பை வாளிக்குள் போட்டு விட வேண்டும். 🤣- கருத்து படங்கள்
- ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
- அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம்!
அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம்! நான்காவது அனைத்துலக தமிழாராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51ஆவது நினைவு தினம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள நான்காவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபிக்கு முன்பாக காலை 10 மணிக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி தினமான ஜனவரி 10ஆம் திகதி, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில், பதினொரு பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1415826- ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை!
ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறை! இஸ்லாம் மததத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 09 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு மேலதிகமாக அவருக்கு 1500 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 2016 ஜூலை 16 அன்று, கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், “இஸ்லாம் ஒரு புற்றுநோய்… அதை ஒழிக்க வேண்டும்” என்று அவர் கூறினார். இது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கை என்ற குற்றச்சாட்டின் கீழ் பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர். https://athavannews.com/2025/1415834- வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு!
வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு! எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்பட உள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் சம்பளத்தை அதிகரிப்பதில் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1415833- சட்டவிரோத மீன்பிடி: 10 இந்திய மீனவர்கள் கைது!
சட்டவிரோத மீன்பிடி: 10 இந்திய மீனவர்கள் கைது! இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக மீன்பிடி படகுடன் 10 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம், கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் நேற்றிரவு (08) மேற்கொண்ட ரோந்து பணிகளின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுடன் இந்திய மீனவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லவும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கவும் இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்திருந்தது. https://athavannews.com/2025/1415842- திருப்பதியில் பக்தர்கள் குவிந்ததால்-6 பேர் உயிரிழப்பு!
திருப்பதியில் பக்தர்கள் குவிந்ததால்-6 பேர் உயிரிழப்பு! திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி நாள்ளையோட்டி சொர்க்கவாசல் திறப்புக்கான இலவச தரிசன அனுமதி சீட்டு விநியோகம் இடம்பெற்றுள்ளது இந்த இலவச தரிசன அனுமதி சீட்டுக்களை வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதுடன் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இன்னிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்து பாதிப்பு அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளையும், உயர்தர சிகிச்சைகளையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். https://athavannews.com/2025/1415810 - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.