Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. இனி அரிசி இறக்குமதி செய்யப்படமாட்டாது. அரிசி இறக்குமதி செய்வதற்கு இனி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார். இன்று (11) லுனுகம்வெஹெர, பன்னேகமுவ பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், நாட்டிற்கு அரிசி இறக்குமதி செய்வது தொடர்பான சுற்றறிக்கை மேலும் நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார். அரிசி இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட காலம் நேற்று (10) நள்ளிரவுடன் முடிவடைந்தது. அதன்படி, நேற்று நள்ளிரவு நிலவரப்படி, இறக்குமதி செய்யப்பட்டு சுங்கம் மூலம் விடுவிக்கப்பட்ட மொத்த அரிசியின் அளவு 167,000 மெற்றிக் தொன்களை கடந்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. இவற்றில் 66,000 தொன் பச்சை அரிசி மற்றும் 101,000 தொன் புழுங்கல் அரிசி ஆகியவை அடங்கும். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 8,000 மெற்றிக் தொன் அரிசி இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பதாகவும் சுங்கத் துறை தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1416096
  2. வட மாகாண வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தை சேர்ந்தவர்களை நியமிக்க வேண்டிய நிலைமை. வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ். கல்விக் கண்காட்சி – 2025 திறப்பு விழா இன்று சனிக்கிழமை யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகவும் , சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவனும், கௌரவ விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும் கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர். பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், முன்னைய காலத்தில் இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் குறிப்பிட்ட தொகையானவர்களுக்கு மாத்திரமே உயர்கல்விக்கான வாய்ப்பு இருந்தது. தற்போது அரச பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களும் உயர்கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பு பரந்தளவில் கிடைக்கின்றன. அதனைச் சரிவரப் பயன்படுத்தவேண்டும் அத்துடன் எமது முயற்சி மற்றும் தேடலில்தான் உயர்கல்வித் தெரிவு இருக்கின்றது. பொருத்தமான துறைகளை தெரிவு செய்வதன் ஊடாக வேலை வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும். வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி ஆகும். இவ்வாறான கல்விக் கண்காட்சிகள் எமது மாகாண மாணவர்களின் எதிர்காலத்துக்கு சிறப்பானவை, இவை தொடரவேண்டும் என மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2025/1416099
  3. நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்! நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான கௌரவ ஆர்.எம்.எஸ். ராஜகருணா, கௌரவ மேனகா விஜேசுந்தர, கெளரவ சம்பத் பி.அபேகோன் மற்றும் கௌரவ எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்து கொண்டிருந்தார். https://athavannews.com/2025/1416130
  4. என்னாங்க... "சொன்னது எல்லாம் ஞாபகமிருக்கா...?? நான் ரயிலேறின பிறகு எதையும் மறந்துட மாட்டீங்களே"...!! "மாட்டேன்"... "எதச் சொன்னாலும் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டுங்க"... "கவலை படாம போயிட்டு வாம்மா, நாலே நாளுதானே நான் பாத்துக்கிறேன்"... "உங்கள நம்ப முடியாது, எதுக்கும் இன்னொரு தடவ பாயிண்ட் பாயிண்ட்டா சொல்லிடுறேன்".... பாயிண்ட் நம்பர் 1... "வீட்ல வச்சது வச்சபடி இருக்கணும். எதாவது எடம் மாறியிருந்ததுன்னா எக்கச்சக்கமா கடுப்பாயிடுவேன்". பாயிண்ட் நம்பர் 2... "சமையல் கட்ட நீட்டா தொடச்சி வச்சிருக்கேன், காபி, டீ போட்டு சாப்ட்டா... டம்ளரையும், பால் காய்ச்சுன பாத்திரத்தையும் காய விடாமா, உடனே கழுவி கவுத்தி வச்சிடணும்"... "உத்தரவு"... பாயிண்ட் நம்பர் 3... "சாதம் மட்டும் சமைச்சிக்குங்க. பக்கத்து வீடுகள்ல இருக்கிற சுந்தரியக்காவும், மாலதியும் அவங்க வீட்டு கொழம்பு, கூட்டு, பொரியல கொண்டு வந்து கொடுப்பாங்க. அத சாப்ட்டுட்டு... மறக்காம பாத்திரத்த கழுவி அவங்ககிட்ட கொடுத்துடுங்க. அப்பத்தான் மறுநாளுக்கும் கொழம்பு வரும்"... "சரிம்மா"... பாயிண்ட் நம்பர் 4... பொண்ணுங்கள கூடப் பொறந்தவங்களா பாருங்க. அனாவசியமா வழியாதீங்க"... "ம்ம்... ம்ம்"... பாயிண்ட் நம்பர் 5... "வீட்ல நான் இல்லன்னு, உங்க குடிகார பிரண்டுகள கூப்ட்டு வந்து... கூத்தடிச்சி ஏரியால உங்களுக்கு இருக்கிற நல்ல பேர கெடுத்துக்காதீங்க" "ஓக்கேம்மா"... பாயிண்ட் நம்பர் 6... "அடக்க ஒடுக்கமா இருங்க... வீட்ட விட்டு வெளிய போனா... நீட்டா தலைய சீவி, பவுடர் போட்டுட்டு போங்க... பாண்டை மாதிரி போகாதீங்க"... "சரிம்மா"... பாயிண்ட் நம்பர் 7... "எங்கயாவது பணத்த ஒளிச்சி வச்சிருக்கனான்னு எலி மாதிரி எல்லாத்தையும் உருட்டாதீங்க. பீரோல கணிசமா பணத்த எண்ணி வச்சிருக்கேன். வேணும்னா எடுத்து செலவு பண்ணுங்க... ஆனா, நான் வர்றதுக்குள்ள வச்சிடுங்க. அப்படி வக்கலன்னா பெனால்ட்டி போட்டு வாங்கிடுவேன்"... "உம் பணம் எனக் கெதுக்கு?? எல்லாம் பத்திரமா இருக்கும் நீ பத்திரமா போயிட்டு வா"... "அப்புறம் பாயிண்ட் நம்பர் 8... "பால்காரன் போட்டுட்டு போற பால் பாக்கெட்ட உடனே எடுத்து கழுவி ஃபிரிஜ்ல வச்சிடுங்க. இல்லன்னா பூனை தூக்கிட்டுப் போயிடும்... என்ன கேக்குறீங்களா"...!? "கேக்குது... கேக்குது"... "அப்புறம் பாயிண்ட்"... "யம்மா போதும்மா.. ரொம்ப லெந்தியா போகுது... பாரு ரயிலும் பிளாட்பார்ம்ல வந்திட்டிருக்கு"... "சரி... சரி... சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கட்டும்"... நான்காம் நாள் காலை... ---------------------------------------------- "என்னதிது... வீடு... வீடு மாதிரியா இருக்கு?? ஒரே தூசியா இருக்கு... வெளக்க மாத்த எடுத்து கூட்டக் கூடவா உங்களால முடியல"...!? கூட்டலாம்னு தான் நெனச்சேன்... ஆனா, நீ சொன்ன மொத பாயிண்ட் ஞாபகம் வந்துச்சி... அதனால வெளக்க மாத்தையே தொடல... "அப்படி நான் என்ன சொன்னேன்"...!? "வச்சது வச்ச எடத்துல இருக்கணும்னு நீ தான சொன்ன... அதனால, இந்த நாலு நாளும் வெளக்க மாத்த அம்மா சத்தியமா கையிலயே தொடலையே"...!! "அடப்பாவி மனுஷா"... K P K Mahidhara
  5. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு இல்லை – விஜய். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றது. இந்நிலையில் அக் கட்சித் தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் , தேர்தலுக்கு முன்பு போலியான வாக்குறுதிகளை மக்களைக் கொடுத்து தேர்தலின் பின் மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தற்போது தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம். அதற்கு நீட் தேர்வு விவகாரம் ஒரு சான்று. 2021 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்வோம் என்று ஆட்சியாளர்கள் மக்களை நம்ப வைத்தனர். ஆனால், தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் அரசுக்குத்தான் உள்ளது மாநில அரசால் அதனை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா? பல பொய்களைச் சொல்லி தமிழக மக்களை ஏமாற்றலாம் என்ற எண்ணம் இனி வரும் காலங்களில் ஈடேறப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1416110
  6. ஆம். இதனை வைத்து சபாநாயகர் மூலம்.. பாராளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமையை பாவித்து, பெட்டிசம் போட்ட சுத்துமாத்து களவாணிப் பயலை, இலகுவில் கண்டறியலாம். 😂
  7. ஹக்கீமுக்கும் தமிழ் நாட்டில் இருந்து அழைப்பு வந்திருந்ததால்... இருவரும் சேர்ந்தே போனார்கள். சுத்துமாத்து சுமந்திரனும், சாணக்கியனும் ஒரு குழுவாகவும், ஸ்ரீதரனும், ஹக்கீமும் ஒன்றாகவும் விமான நிலையத்திற்கு சென்று இருக்கலாம்.
  8. சுமந்திரனும், சாணக்கியனும்.... ஸ்ரீதரனுக்குத் தெரியாமல், கனிமொழியை போய் சந்தித்து இருக்கலாம். சம்பந்தர் காலத்தில் இருந்து... ஒரு கட்சியில் உள்ளவர்கள் ஒன்றாக தமிநாட்டிற்குச் சென்று அங்கு தமது உட்கட்சிப் பூசலை வெளி உலகத்திற்கு காட்டி சந்தி சிரிக்க வைக்கும் கேவலமான வேலைகளை செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இதனை ஒரு முன்னாள் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் என்னிடம் தெரிவித்த தகவலே இவை. தனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதாகவும் சொன்னார். சுமந்திரன்... உள்ளூரிலேயே, தன்னந்தனியாக பின்கதவால் சென்று, சிங்கள அரசியல் தலைவர்களை சந்தித்து விட்டு வரும் ஊத்தைவாளி பழக்க வழக்கம் உடைய நபர்.
  9. வாசித்தேன் ஈழப்பிரியன். இதனை பின் நின்று செயற்படுத்தியவர் சுமந்திரன் என்றும் சொல்கின்றார்கள். ஊத்தைவாளி வேலை செய்வதில், இவர் ஒரு கேவலமான மனிதன்.
  10. சுமந்திரனும், சாணக்கியனும்.... கனிமொழிக்கு எங்கள் பிரச்சினையை விளங்கப் படுத்தி சொன்னதால், திராவிடர் வரக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம். சுமந்திரனின் சாநக்கியத்துக்கு... கிடைத்த வெற்றி. 🤣
  11. சிங்களவர், தெலுங்கர், கிறிஸ்தவர் என்று... ஒரே கலவையாக உள்ளதால், சோடிப் பொருத்தம் இல்லை. 😂
  12. சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படவில்லை. 40 வருடமாக அகதிகளாக இருப்பவர்களுக்கு, இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை. குடியுரிமை இன்மையால் உயர் கல்வி கற்க முடியவில்லை. அரச வேலை வாய்ப்பு பெற முடியவில்லை. வெளிநாடுகளுக்கு செல்வதற்கு கடவுச்சீட்டும் பெற முடியவில்லை. வாழ முடியவில்லை என்று.. தாயகம் திரும்ப விரும்பினாலும் அதற்கும் அனுமதி இல்லை. இது குறித்து, எமது தலைவர்களுக்கு அக்கறையும் இல்லை. கடந்த வருடமும் தமிழக அரசின் புலம் பெயர் விழாவில் சுமந்திரன் கலந்துகொண்டார். இந்த வருடமும் கலந்துகொள்கிறார். இவர் எதற்கு அங்கு செல்கிறார்? புலம்பெயர் தமிழர் விழாவில் கலந்துகொண்ட இவர்கள் கனிமொழியுடன் என்னதான் உரையாடியிருப்பர்? தோழர் பாலன்
  13. புகழ் பெற்ற சிறந்த எழுத்தாளர். ஆழ்ந்த அஞ்சலிகள்.
  14. உண்மையை, உரக்கச் சொன்ன அறிக்கை. பாராட்டுக்கள். 👍 செல்வநாயகம் தோற்றுவித்த 75 வருட பாரம்பரியம் மிக்க தமிழரசு கட்சியை, பொதுத் தேர்தலில் படு தோல்வி அடைந்த.. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், குழி தோண்டிப் புதைக்க முதல்.. அக்கட்சியில் உள்ளவர்கள் விழித்துக் கொள்வது நல்லது.
  15. அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி. க்கும், மாவீரர் இல்லத்துக்கும் என்ன சம்பந்தம்? அந்த மண்ணிலேயே, கால் வைக்க... அருகதை அற்ற கொலைவெறி மிருகங்கள். பல தமிழ் மக்களையும், விடுதலைப் போராளிகளையும் கொன்ற நய வஞ்சக கும்பல்தான், இந்த ஈ.பி.டி.பி. திருட்டு கூட்டம்.
  16. வருகின்ற பொங்கலுக்கு, ஜஸ்டின் ட்ரூடோ... வேட்டியுடன் வருவாரா, இல்லையா.
  17. காலவரையறையின்றி மூடப்படும் பிக்குகளின் பல்கலைக்கழகம்! அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. பிக்கு மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. பகிடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 சிரேஸ்ட பிக்கு மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வகுப்புத்தடையை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7 ஆம் திகதி முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1416042
  18. படுகொலையாளிகளுக்கு கூட விடுதலை ! போராளிகளுக்கு கிடைக்காதா? கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலைசெய்யக்கூடாது என மட்டக்கப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப்போராட்டம் இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த போராட்டமானது கிழக்கின் மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என என்பதை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இன்று காலை மட்டக்களப்பு பிரதான பஸ்நிலையத்தில் இந்த போராட்டம் போராளிகள் நலன்புரி சங்கத்தினால் நடாத்தப்பட்டது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் இ.செல்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மட்டக்கப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,தமிழ் தேசி மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்,மாவட்ட அமைப்பாளர் குககுமார்,சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தின்போது மழைக்கும் மத்தியிலும் பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் வருகைதந்து கையெழுத்துப்போராட்டத்தில் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1416063
  19. மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. குறித்த துயிலுமில்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக தரப்புகள் முனைந்த போது குறித்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1416048

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.