Everything posted by தமிழ் சிறி
-
அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது.
வர்த்தகப் போரில் அமெரிக்காவும் கொலம்பியாவும்! கொலம்பியா மீது 25% வரிகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வரும் அனைத்து பொருட்கள் மீதான கட்டணங்கள் உடனடியாக அமுல்படுத்தப்படும் என்றும், ஒரு வாரத்தில் 25% கட்டணங்கள் 50% ஆக உயர்த்தப்படும் என்றும் ட்ரம்ப் கூறினார். அது தவிர கொலம்பிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் அதன் கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்கள் மீது அமெரிக்கா பயணத் தடை மற்றும் “உடனடி விசா இரத்துகளை” விதிக்கும் என்று அவர் கூறினார். நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்களை கொலம்பியாவில் தரையிறக்கக் கூடாது என்று அந் நாட்டு ஜனாதிபதி தடை விதித்ததை அடுத்து ட்ரம்பின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதேவேளை, லத்தீன் அமெரிக்காவில் மூன்றாவது பெரிய அமெரிக்க வர்த்தக பங்காளியான கொலம்பியா, ட்ரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு விரைவாக பதிலளித்தது. ட்ரம்பின் அறிவிப்பின் சில மணி நேரங்களுக்கு பின்னர் கொலம்பியாவின் இடதுசாரி ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ, அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை 25% உயர்த்துமாறு வர்த்தக அமைச்சகத்திற்கு உத்தரவிட்டதாகக் கூறினார். “அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு எங்கள் மனித உழைப்பின் பலன்களுக்கு நீங்கள் 50% வரி விதிக்கிறீர்கள் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது, நானும் அதையே செய்கிறேன்” என்று பெட்ரோ ட்ரம்பை இலக்காகக் கொண்ட எக்ஸ் பதிவில் இதனைக் குறிப்பிட்டார். முன்னதாக நாட்டை நோக்கிச் செல்லும் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்லும் இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்களைத் தடுத்துள்ளதாக அறிவித்தார். மேலும் புலம்பெயர்ந்தோரை நடத்துவதில் சிறந்த நெறிமுறைகளை நிறுவுமாறு அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்தார். புலம்பெயர்ந்த நாடுகடத்தப்பட்டவர்களுடன் ஞாயிற்றுக்கிழமை சான் டியாகோவிலிருந்து இரண்டு இராணுவ விமானங்கள் கொலம்பியாவில் தரையிறங்கவிருந்ததாகவும், ஆனால் சிக்கல்கள் காரணமாக அந்தத் திட்டங்கள் கைவிடப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1418305
-
முன்னாள் நீதிபதி இளஞ்செழியனுக்கு அநுர அரசில் நடந்த அநியாயம்!
சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது, நீதிபதி இளஞ்செழியனை அனுர கட்சி சார்பில்… வடக்கில் போட்டியிட முயற்சி நடந்தது. அதற்கு இளஞ்செழியன் அவர்கள் சம்மதிக்கவில்லை. அதுதான்… இப்போ பழிவாங்கி விட்டார்கள் போலுள்ளது.
-
யாழ்ப்பாணத்தின் மிகஉயரமான கட்டிடத்தின் பெயரை ஏன் மாற்றினார்கள்? நிலாந்தன்.
யாழ்ப்பாணத்தின் மிகஉயரமான கட்டிடத்தின் பெயரை ஏன் மாற்றினார்கள்? நிலாந்தன். தமிழ்ப் பகுதிகளில் கடலட்டை ஒரு ராஜதந்திரப் பொருளாகிவிட்டது. காற்றாலை ஒரு ராஜதந்திரப் பொருளாகிவிட்டது. ஒரு கலாச்சார மண்டபமும் அதன் பெயரும் ராஜதந்திரப் பொருட்களாகிவிட்டன. தமிழர்களுக்கான குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கான இந்திய அரசாங்கத்தின் பரிசு என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான தமிழர்கள் சார்ந்த பலப் பிரயோகத்தின் குறியீடா? ஒரு பெரிய நாடு அயலில் உள்ள ஒரு சிறிய நாட்டின் சிறிய மக்கள் கூட்டத்துக்கு பரிசாகக் கட்டிய கலாச்சார மண்டபம் என்று பார்த்தால்,உலகிலேயே மிகப்பெரியது இந்த கலாச்சார மண்டபம்தான். உலகின் வெவ்வேறு பகுதிகளில் இதுபோன்ற வெவ்வேறு கட்டுமானங்களை வெளிநாடுகள் கட்டிக் கொடுத்திருக்கின்றன.ஆனால் அவ்வாறு ஒரு மக்கள் கூட்டத்துக்கு பரிசாக என்று கூறிக் கட்டப்பட்ட கலாச்சார மண்டபங்களில் ஆகப்பெரியது யாழ். கலாச்சார மண்டபம்தான்.அந்த மண்டபம் 10 மாடிகளைக கொண்டது. யாழ்ப்பாணத்தின் சுண்ணக்கல் தரையமைப்பைப் பொறுத்தவரை ஆறு மாடிகளுக்கு மேல் கட்டுவதற்கு விசேஷ அனுமதிகள் தேவை. யாழ்.கலாச்சார மண்டபம் அவ்வாறான விசேஷ அனுமதிகளோடு,விசேஷ கட்டுமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டது.அதனால் தான் வடக்கு கிழக்கில் உள்ள ஆக உயரமான-10 மாடிக்கட்டடமாக-அது கட்டி எழுப்பப்பட்டது. தமிழ்ப் பகுதிகளில் உள்ள மிக உயரமான கட்டிடமும் அதுவே.தமிழ்ப் பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பின் முழுமையாகத் திறக்கப்படாத, முழுமையாகப் பயன்படுத்தப்படாத ஆகப்பெரிய பொதுக் கட்டடமும் அதுவே. கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் குறிப்பிட்ட எண்ணிக்கையான சிலரை கலாச்சார மண்டபத்துக்கு வருமாறு அழைத்தது.வழமையாக அங்கே நடக்கும் சந்திப்புகள் கலாச்சார நிகழ்வுகளைப் போன்று எதோ ஒரு நிகழ்வுக்காகத்தான் அழைக்கப்படுவதாகக் கருதி அழைக்கப்பட்டவர்கள் சென்றார்கள். கலாச்சார மண்டபத்தின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் சிறிய கைக்கடக்கமான மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது. அதில் ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், அரச அதிகாரிகள், ஊடக முதலாளிகள் உள்ளடங்கலாக மிகச்சிறிய தொகையினர் காணப்பட்டார்கள். நிகழ்வில் முதலில் பேசியவர் இலங்கையின் புத்தசாசன அமைச்சர்.அவர் பேச வரும்போது கையில் ஒரு புத்தகத்தை வைத்திருந்தார். பேச்சின் போது அது சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் என்று கூறினார்.அது முதலாவது மொழிபெயர்ப்பு என்றும் 1961ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது என்றும்,அதன்பின் பல்வேறு மொழிபெயர்ப்புகள் வந்துவிட்டதாகவும் அவர் அங்கு சொன்னார்.திருக்குறளைப் புகழ்ந்து பேசினார். அதன்பின் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவர் பேசினார்.அவரும் திருக்குறளைப் புகழ்ந்து பேசினார்.அந்த கலாச்சார மண்டபம் லோக்கலான அதாவது உள்ளூர் நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றிடம் கையளிக்கப்பட வேண்டும் என்று பேசினார்.மேலும் அதை முழுமையாக உபயோகத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் பேசினார்.முடிவில் டிஜிட்டலாக அந்த மண்டபத்தின் பெயர் திருவள்ளுவர் கலாச்சார மண்டபம் என்று மாற்றப்பட்டது. ஒரு மக்கள் கூட்டத்துக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒரு கட்டடத்தின் பெயரை, அந்த மக்கள் கூட்டத்தைச் சேர்ந்த சமூகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், கலைஞர்கள் போன்றோரைக் கலந்தாலோசிக்காமல் ரகசியமாக மாற்றியமை என்பது பரவலாக விவாதிக்கப்படும், விமர்சிக்கப்படும் ஒரு விடயமாக மாறியது.பெயர் மாற்ற நிகழ்வில் பேசிய கொழும்புக்கான இந்திய தூதர் லோக்கல் கட்டமைப்பின் மூலம் அதை நிர்வகிக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தார்.ஆனால் பெயர்மாற்ற விடயத்தில் உள்ளூர் உணர்வுகள் கவனத்தில் எடுக்கப்படவில்லை. ஏன் அவ்வாறு பெயர் மாற்றப்பட்டது என்று விசாரித்த பொழுது, உலகப் பொது மறையை எழுதிய வள்ளுவரின் பெயரைச் சூட்டுவதன்மூலம் அந்த மண்டபத்துக்கு உலகளாவிய ஒரு பரிமாணத்தை கொடுக்க முடியும் என்று கருதியதாகவும், அது பிரதேசம் கடந்த,மதம் கடந்த ஒரு குறியீடாக நிற்கும் என்று எதிர்பார்த்ததாகவும் இந்திய தூதரக வட்டாரங்கள் கருத்து தெரிவித்தன.இந்தியப் பிரதமர், இந்திய வெளியுறவு அமைச்சர் போன்றவர்கள் தெரிவித்த கருத்துக்களும் அவ்வாறுதான் காணப்படுகின்றன. அதேசமயம் உள்ளூர் உணர்வுகளைக் கவனத்தில் எடுக்காமல் அவ்வாறு பெயர் மாற்றியதன் விளைவுகளைத் தாம் உணர்ந்திருப்பதாகவும், அது தொடர்பாக டெல்லிக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த அடிப்படையில் மண்டபத்தின் பெயரில் யாழ்ப்பாணம் என்ற சொல் மீண்டும் சேர்க்கப்பட்டதாகவும் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் என்பது ஒரு புவியியல் பதம் மட்டும் அல்ல.அதைவிட ஆழமான பொருளில், அது ஒரு பண்பாட்டுப் பதம்.ஓர் அரசியல் பதம். ஈழத் தமிழர்களின் கலாச்சார தலைநகரங்களில் ஒன்று என்ற அடிப்படையில் அது ஈழத் தமிழ் அடையாளங்களில் முக்கியமானது.எனவே அந்தப் அரசியல்,பண்பாட்டுப் பெயரை மாற்றியமை ஈழத் தமிழர்களின் அரசியல் மற்றும் பண்பாட்டு உணர்வுகளைப் புண்படுத்துவதாக அமைந்திருப்பதைத் நாம் உணர்ந்திருப்பதாக இந்தியத் துணைத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. அப்பெயர் மாற்றத்திற்கு உத்தியோக பூர்வமாக கூறப்படும் காரணம் எதுவாகும் இருக்கலாம். ஆனால் அதற்குப் பின்னால் வேறு ஒரு ராஜதந்திர இலக்கு உண்டா என்ற கேள்வியுண்டு. கட்டி முடிக்கப்பட்ட பின் இன்றுவரை முழுமையாகக் கையளிக்கப்படாத, முழுமையாகத் திறக்கப்படாத ஒரு பொதுக் கட்டிடம் அது.ஏன் அவ்வாறு முழுமையாக கையளிக்கவோ அல்லது திறக்கவோ முடியவில்லை? ஏனென்றால் அதில் இரண்டு விடயங்கள் சம்பந்தப்படுகின்றன.முதலாவது, தமிழ் மக்களுக்கு உரிய தன்னாட்சி அதிகாரத்தின் அளவை அளக்கும் ஒரு கட்டடம் அது. இரண்டாவது தமிழ் மக்களுக்கான தன்னாட்சி அதிகாரம் தொடர்பில் கொழும்பில் உள்ள மத்திய அரசாங்கத்தின் மீது இந்தியா பிரயோகிக்கக்கூடிய அழுத்தங்களின் அளவைக் குறிக்கும் ஒரு கட்டடம் அது. பிரதமர் மோடி அதனை சில ஆண்டுகளுக்கு முன்பு மென் திறப்பு என்று கூறி அரைவாசி திறந்து வைத்தார்.அதற்குப் பின்னர் இரண்டு அரசாங்கங்கள் வந்துவிட்டன.ஆனால் இப்பொழுதும் அதனை முழுமையாகத் திறக்க முடியவில்லை. ஏன் ? அந்த மண்டபத்தை இந்தியா தமிழர்களுக்கான பரிசு என்று கூறுகிறது. அதை தமிழர்களையும் உள்ளடக்கிய குறிப்பாக யாழ்.மாநகர சபை நிர்வாகத்தையும் உள்ளடக்கிய, ஒரு கட்டமைப்புத்தான் பரிபாலிக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்க்கின்றது. ஆனால் இதுவரையிலும் இருந்த இலங்கை அரசாங்கங்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை. அது கூடுதலான பட்சம் கொழும்பில் உள்ள மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று கொழும்பில் இதுவரையிலும் இருந்த அரசாங்கங்கள் சிந்தித்தன. மணிவண்ணன் யாழ்.மாநகர சபை முதல்வராக இருந்த காலத்தில் ஒரு சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.அதில் இந்திய துணைத் தூதுவரும் பங்குபற்றினார். உரையாடலின்போது அந்தப் பெரிய மண்டபத்தை பரிபாலிப்பதற்கு வேண்டிய நிதிக் கொள்ளளவு மாநகர சபையிடம் இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது. எனினும் தனக்கு நிதி உதவி வழங்கப்பட்டால் தான் அதனை நிர்வாகிக்கத் தயார் என்று மணிவண்ணன் தெரிவித்திருக்கிறார். அந்த நிதியை குறிப்பிட்ட காலத்துக்கு இந்தியா வழங்கும் என்று இந்திய துணைத் தூதுவர் தெரிவித்துள்ளார். அப்பொழுது சந்திப்பில் பங்குபற்றிய கலாச்சார அமைச்சின் செயலாளர்- அவர் ஒரு மருத்துவர்- மணிவண்ணனைப் பார்த்துப் பின்வருமாறு கூறியுள்ளார்..”நீங்கள் இந்தியாவை நம்பக் கூடாது ; எங்களைத்தான் நம்ப வேண்டும்” என்று. மேலும் அந்த மண்டபத்தில் உள்ள ஒரு மாடியைத் தனது அமைச்சுக்குத் தருமாறு நாமல் ராஜபக்ச முன்பு அமைச்சராக இருந்த பொழுது கோரிக்கை விடுத்ததாகச் செய்திகள் வெளிவந்தன. அதுபோலவே யாழ்ப்பாணத்தில் உள்ள சிறீலங்கா படைத்தரப்பும் அதில் இரு மாடிகளை தமது பிரயோகத்துக்குத் தருமாறு கேட்டதாக ஒரு தகவல் உண்டு.ஆனால் இந்தியத் துணைத் தூதரகம் அந்த வேண்டுகோள்களை சாதகமாகப் பரிசீலிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுதான் இந்த மண்டபத்தை சூழ்ந்திருக்கும் அரசியல் யதார்த்தம். அதனால்தான் அந்தக் கட்டடத்தை மென் திறப்பு என்று அரைவாசி திறக்க வேண்டியிந்தது.அதைத் திறந்து இத்தனை ஆண்டுகளின் பின்னரும் முழுமையாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை விட வேண்டியிருக்கிறது. இப்பொழுது கொழும்பில் புதிய அரசாங்கம் வந்திருக்கிறது.அந்த அரசாங்கத்தை இந்த விடயத்தில் சம்மதிக்கச் செய்யலாமா என்று இந்தியா சிந்திக்கக்கூடும். குறிப்பாக அரசுத் தலைவர் சீனாவுக்குச் சென்று வந்த சில நாட்களில் இந்த விடயத்தை ஒரு பேசுபொருளாக்க இந்தியா விரும்பியிருக்கலாம். மண்டபத்தின் பெயரில் யாழ்ப்பாணம் என்ற அரசியல் பதத்தை அகற்றினால் கொழும்பை நம்பச் செய்யலாம் என்று இந்தியா சிந்தித்ததா? ஆனால் பெயர் மாற்ற விவகாரம் ஒரு சர்ச்சையாக மாறிய பின்னணியில், அந்நிகழ்வில் பங்குபற்றிய அமைச்சர் சந்திரசேகரன் இந்த விடயத்தில் தமிழ் வாக்காளர்களின் உணர்வுகளைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு பதில் கூறியிருக்கிறார். பெயர் மாற்ற விவகாரம் தனக்கு முன்கூட்டியே தெரியாது என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் அவரோடு வருகை தந்த புத்தசாசன அமைச்சருக்கு ஏற்கனவே அது தெரியும். ஏனெனில் அவர் சிங்களத் திருக்குறளையும் கையில் எடுத்துக் கொண்டே பேச வந்தார். ஆயின் அமைச்சர் சந்திரசேகரனுக்கு தமிழ் மக்கள் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் முடிவுகள் அறிவிக்கப்படுவதில்லையா? எதுவாயினும் யாழ் கலாச்சார மண்டபம் இதுவரை முழுமையாகத் திறக்கப்படவில்லை என்பதுதான் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலுமான அரசியல் யதார்த்தம் ஆகும். அப்பெருமண்டபம் இந்தியா ஈழத் தமிழர்களுக்கு வழங்கிய பரிசு மட்டுமல்ல, அது தமிழ் மக்களுக்கான தன்னாட்சி அதிகாரத்தின் அளவைக் குறிக்கும் ஒரு குறியீடு.தமிழ் மக்கள் தொடர்பாக இந்தியா,கொழும்பின்மீது பிரயோகிக்கக்கூடிய அழுத்தத்தின் அளவைக் குறிக்கும் ஒரு குறியீடு என்பதுதான் கடந்த பல ஆண்டு கால அரசியல் யதார்த்தம். https://athavannews.com/2025/1418239
-
கருத்து படங்கள்
- நாட்டை வந்தடையவுள்ள 4,500 மெற்றிக் தொன் உப்பு
நாட்டை வந்தடையவுள்ள 4,500 மெற்றிக் தொன் உப்பு. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 4,500 மெற்றிக் தொன் உப்பு எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார் எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் 12,500 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்படவுள்ள நிலையில், முதலாவது தொகுதி நாட்டை வந்தடையவுள்ளது நாட்டில் நிலவும் உப்பு தட்டுபாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்தியாவிலுள்ள இரண்டு நிறுவனங்களுக்கு உப்பை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக 2025 ஆண்டின் முதலாம் காலாண்டில் உள்நாட்டு சந்தையில் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான உப்பு விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படலாமென அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் தொன் உச்ச அளவுக்கு உட்பட்ட உப்பை எதிர்வரும் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் வரையறுக்கப்பட்ட இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபத்தின் மூலம் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டது இந்த நிலையில் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்காக அண்மையில் விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தன. இந்த நிலையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யும் உப்பை தொழிற்றுறையினருக்கு விநியோகிக்கவுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1418157- இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்துள்ள புதிய அங்கீகாரம்
இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்துள்ள புதிய அங்கீகாரம். தெற்காசியாவின் நான்காவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக இலங்கை கடவுச்சீட்டு பெயரிடப்பட்டுள்ளது. ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டிற்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் உலகளவில் 100 வது இடத்தில் இருந்த இலங்கை கடவுச்சீட்டு தற்போது 96 வது இடத்தில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது இலங்கை கடவுச்சீட்டு வலுவடைந்து வருவதாக ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் தெரியவந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் 102வது இடத்தில் இருந்த இலங்கை கடவுச்சீட்டு தொடர்ந்து முன்னேற்றத்தைக் காட்டுவதாகவும் ஹென்லி கடவுச்சீட்டு குறியீடு குறிப்பிட்டுள்ளது. இலங்கையர்கள் 44 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். https://athavannews.com/2025/1418163- நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது!
நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது! நடிகராக மட்டுமின்றி துப்பாக்கிச் சுடும் வீரர், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர், ட்ரோன் வடிவமைப்பாளர் உட்பட பன்முகம் கொண்டவராக திகழ்ந்து வரும் அஜித் குமாருக்கு, இந்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது அறிக்கப்பட்டுள்ளமை அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படுகின்றன. பொது சேவைத்துறையின் அனைத்து நடவடிக்கைகளிலும் அல்லது துறைகளிலும் சாதனைகள் செய்தவர்களை அங்கீகரிப்பதற்காக பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பிரதமரால் அமைக்கப்பட்ட பத்ம விருதுகள் குழுவின் பரிந்துரையின் பேரில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இவ்வருடமும் 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 19 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் நடிகர் அஜித் குமார், நல்லி குப்புசாமி, நடிகை சோபனா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதும், அஸ்வின், குருவாயூர் துரை, தாமோதரன், லட்சுமிபதி ராமசுப்பையர், ஸ்ரீநிவாஸ், புரிசை கண்ணப்ப சம்பந்தம், சந்திரமோகன், ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, ஸ்ரீனி விஸ்வநாதன், வேலு ஆசான் ஆகியோருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1418213- சமூக வலைத்தள மோகம் – மூக்கில் பாம்பிடம் கடி வாங்கிய இளம் பெண்
சமூக வலைத்தள மோகம் – மூக்கில் பாம்பிடம் கடி வாங்கிய இளம் பெண். சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் தங்கள் வாழ்வில் நடைபெறும் செயல்களை வீடியோ எடுத்து பதிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ரஷ்யாவை சேர்ந்த ஷ்கோடலேரா என்ற இளம்பெண் பாம்பை கையில் வைத்து விளையாடிய காட்சிகளை வீடியோ எடுத்துள்ளார். அப்போது அவர் கையில் பாம்பை பிடித்து கொண்டு போஸ் கொடுப்பது போன்று வீடியோ தொடங்குகிறது. உற்சாகமிகுதியில் ஷ்கோடலேரா பாம்பை மேலே தூக்கிய போது திடீரென பாம்பு அவரின் மூக்கை கடித்தது. இதனால் வலியில் துடித்த ஷ்கோடலேரா பாம்பை தரையில் வைத்துவிட்டு தப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. நெட்டிசன்கள் பலரும் ஷ்கோடலேராவின் செயலை விமர்சித்து பதிவிட்டனர். ஒரு பயனர், பணம் சம்பாதிப்பதற்காக விலங்குகளை பொம்மையாக பயன்படுத்த வேண்டாம் என பதிவிட்டிருந்தார். மற்றொரு பயனர், இதுபோன்று பாம்புகளை வைத்து விளையாட யார் அனுமதித்தார்கள்? இது மிகப்பெரிய தவறு என பதிவிட்டிருந்தார். https://athavannews.com/2025/1418130- "காதலர்தின", சிரிப்புகள். (14.02.)
- இரசித்த.... புகைப்படங்கள்.
- கருத்து படங்கள்
- எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை.
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை. எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படக் கூடும் என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி(Sunil Handunnetti) தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இதனை கூறினார். இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் உரிய தரத்தில் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உரிய தரத்தில் மீன் உற்பத்தி செய்வது குறித்த தெளிவின்மையே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் இலங்கையில் மீன் உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 70 ஆண்டுகளாகவே நாட்டின் உற்பத்தி பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காடடியுள்ளார். கொள்ளைககளின் மூலம் நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்தவர்கள் தற்பொழுது பொருளாதாரம் பற்றி தம்மிடம் கேள்வி எழுப்பி வருவதாகவும் அதில் பயனில்லை எனவும் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இந்த யதார்த்தம் கசப்பானது என்றாலும் அதனை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1418106- அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது.
அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த 20-ம் திகதி பொறுப்பேற்ற டிரம்ப், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதார். குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதில் தீவிரம் காட்டுகிறார். இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அதன்படி சட்டவிரோத குடியேறிகளை அடையாளம் கண்டு கைது செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக 538 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களில் நுற்றுக்கும் மேற்பட்டோர் ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவிக்கயைில், சட்டவிரோதமாக குடியேறிய 538 குற்றவாளிகளை டிரம்ப் நிர்வாகம் கைது செய்தது. இதில் ஒருவர் பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர், ட்ரென் டி அரகுவா கும்பலைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பல சட்டவிரோதக் குற்றவாளிகள் ஆகியோரும் அடங்குவர். டிரம்ப் நிர்வாகம் நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேற்ற வாசிகளை ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தி உள்ளது. வரலாற்றில் மிகப்பெரிய நாடுகடத்தல் நடவடிக்கை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் எக்ஸ் தளத்திலும் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க டிரம்ப் நிர்வாகம் செய்து வரும் பணியின் ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே இது என்று கூறி உள்ளது. அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சிலரின் பெயர்களையும், அவர்கள் செய்த குற்றங்களையும் குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2025/1418082- கருத்து படங்கள்
- ட்ரம்ப் விதித்த உத்தரவால் வைத்தியர்களை தேடி ஓடும் நிலை !
ட்ரம்ப் விதித்த உத்தரவால் வைத்தியர்களை தேடி ஓடும் நிலை ! ட்ரம்ப் விதித்த உத்தரவால் வைத்தியர்களை தேடி ஓடும் நிலை ! by Kavipriya S 2025/01/24 in அமொிக்கா, உலகம், பிரதான செய்திகள் 67 1 A A 0 31 SHARES 1k VIEWS Share on FacebookShare on Twitter அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டிரம்ப், பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகளை கைப்பற்றி வெற்றி பெற்று அமெரிக்க அரசியலமைப்பின்படி கடந்த 20ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்றார். இதன்பின்னர் அவர் பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அவற்றில், பிறப்பால் அமெரிக்க குடியுரிமை கிடைப்பதற்கு விதிக்கப்பட்ட தடையும் ஒன்றாகும். டிரம்ப் பிறப்பித்த உத்தரவின்படி, பிப்ரவரி 20ஆம் திகதிக்கு பின்னர் பிறக்கும் குழந்தைகளுக்கு இனி அமெரிக்க குடியுரிமை கிடையாது என்ற உத்தரவும் அடங்கும். டிரம்பின் குடியுரிமை காலக்கெடு உத்தரவால் தம்பதிகள் பலரும் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அந்த நாளுக்கு முன்னர் குழந்தைகளை பெற்று கொள்ள கர்ப்பிணிகள் முயன்று வருகின்றனர். இதற்காக, அமெரிக்காவில் வசிக்கும் தம்பதிகள் வைத்தியர்களை தொடர்பு கொண்டு அந்த நாளுக்கு முன்பு குழந்தை பிறக்கும் வகையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்படி வலியுறுத்தி வருகின்றனர். பலரும் வைத்தியர்களை தொடர்பு கொண்டு முன்பதிவும் செய்து வருகின்றனர். பெப்ரவரி 19ஆம் திகதிக்கு பின்னர், அமெரிக்க குடிமக்கள் அல்லாத தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள், இயற்கையாகவே அமெரிக்க குடிமக்கள் ஆவது என்பது இனி முடியாது. இதனால், 8 மாதம் மற்றும் 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் பெண்கள் பலரும் வைத்தியர்களை தேடி ஓடுகின்றனர். 7 மாத கர்ப்பிணிகள் கூட இதுபோன்று வருகிறார்கள் என வைத்தியர்கள் கூறுகின்றனர். இதேபோன்று அமெரிக்க குடியுரிமை அல்லாத பெற்றோரிடம் கிரீன் கார்ட் இல்லாவிட்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அமெரிக்க குடியுரிமை கிடைக்காது. இதனால், கிரீன் கார்ட் பெறுவதற்காகவும், பலரும் வரிசையில் காத்திருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1417973- Pizza... ஏன், வட்ட வடிவில் இருக்கிறது?
பீட்சா... ஏன், வட்ட வடிவில் இருக்கிறது? பீட்சாவின் வடிவம் குறித்து பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். பீட்சா வட்ட வடிவில் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன: 1) காற்றில் சுழற்றுதல்: பீட்சா மாவு காற்றில் சுழற்றப்பட்டு தட்டையாக விரிக்கப்படும். இதற்கு வட்ட வடிவம் மிகவும் ஏற்றது. 2) சமச்சீர் சூடு: வட்ட வடிவத்தில் பீட்சா முழுவதும் சமமாக சூடாகும். 3) வெட்டுதல்: வட்ட வடிவத்தை சம பாகங்களாக வெட்டுவது எளிது. 4) ஏன் சதுர பெட்டியில் வைத்துத் தருகின்றனர்? உற்பத்தி எளிமை சதுர பெட்டிகளை உற்பத்தி செய்வது வட்ட பெட்டிகளை விட எளிது மற்றும் மலிவு. 5) சேமிப்பு: சதுர பெட்டிகளை ஒன்றன் மேல் ஒன்றாக சேமித்து வைக்க எளிது. 6) பேக்கேஜிங்: சதுர பெட்டிகளை பிற பொருட்களுடன் சேர்ந்து பேக்கேஜ் செய்வது எளிது. 7) ஏன் முக்கோண வடிவில் வெட்டி சாப்பிடுகிறோம்? சம பாகங்கள் வட்ட வடிவ பீட்சாவை சம பாகங்களாக வெட்டுவதற்கு எளிதான வழி முக்கோணமாக வெட்டுவதே. 😎 பகிர்ந்து கொள்ளுதல்: முக்கோண வடிவில் வெட்டப்பட்ட பீட்சாவை பலருடன் எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். சுருக்கமாக: பீட்சாவின் வடிவம், அதன் தயாரிப்பு, பேக்கேஜிங் மற்றும் நுகர்வு ஆகியவற்றுடன் தொடர்புடையது. படித்ததில் பிடித்தது.- இரசித்த.... புகைப்படங்கள்.
- நாடாளுமன்றில் அரசாங்கத்தை கடுமையாக சாடிப் பேசிய அர்ச்சுனா எம்.பி!
நாடாளுமன்றில் அரசாங்கத்தை கடுமையாக சாடிப் பேசிய அர்ச்சுனா எம்.பி! உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளமையினால் தனக்கு பாதுகாப்பையும் வாகனத்தையும் ஒதுக்கித் தருமாறு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தனக்கு எதிராக 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் எதுவுமே தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பானவை அல்ல என்றார். நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், வடக்கிற்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் தனக்குப் பாதுகாப்பு மற்றும் வாகனம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். தனக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜே.வி.பி.யின் கடந்த காலத்தை குறிப்பிட்ட அவர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஒரு கொலைகார அரசாங்கம் என்றும் சாடிப் பேசினார். https://athavannews.com/2025/1417838- சீனாவுக்கான இலங்கையின் கோழி இறைச்சி ஏற்றுமதி!
சீனாவுக்கான இலங்கையின் கோழி இறைச்சி ஏற்றுமதி! உள்ளூர் கோழிப்பண்ணை தொழிலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில், சீன சந்தைக்கு கோழி இறைச்சிப் பொருட்களை நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கான உடன்படிக்கையை இலங்கை மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட 15 ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று என நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். உடன்படிக்கையின் விவரங்களை வழங்குகையில், இலங்கை தனது இறைச்சி பதப்படுத்தும் தொழிற்துறையின் உப தயாரிப்பான கோழி தலைகள் மற்றும் கால்களை நேரடியாக சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும். இந்த ஒப்பந்தம் பொருளாதாரம் அதன் அந்நிய செலாவணி வருவாயை அதிகரிக்க உதவும் என்றார். ஜனாதிபதியின் சீன விஜயத்திற்கு முன்னதாக, சீன சந்தைக்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வது தொடர்பான நெறிமுறையில் கைச்சாத்திடுவதற்கு விவசாய மற்றும் கால்நடை அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1417842- பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பொலிஸார் தவறாகவே பயன்படுத்துகின்றனர்!
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பொலிஸார் தவறாகவே பயன்படுத்துகின்றனர்! கடந்த தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய, பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளப்பெறுவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு வலியுறுத்தியிருந்தார். இது குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளதாவது” தெற்கில் உள்ளவர்கள் நினைவேந்தலை பயங்கரவாதம் என்கின்றனர். இது நெறிமுறையை மீறும் விதமாகும். அரசாங்கத்துக்கு ஏற்றாட் போல் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த முடியாது. தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கமை பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளப்பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிளீன் ஶ்ரீலங்கா திட்டம் தொடர்பான இணையத்தளத்திற்கு சென்று அந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் அறிந்துகொள்ள முயற்சித்தேன். ஆனால் இன்னும் விரிவான விளக்கங்கள் அவசியமாகும். இந்த அரசாங்கத்திற்கு மக்கள் பெரிய ஆணையை வழங்கியுள்ளார்கள். ஊழலுக்கு எதிராகவே மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தில் தவறுகள் இடம்பெற்றுள்ளது. இதனை மீளப்பெறுவதாக கூறினாலும் பொலிஸார் இதனை எப்போதும் தவறாகவே பயன்படுத்துகின்றனர். அரசாங்கம் செய்யாவிட்டாலும் பொலிஸார் தவறான வகையிலேயே இந்த சட்டத்தை பயன்படுத்துகின்றனர். இந்த நிலைமையை மாற்ற வேண்டும். இதனையே நாம் தொடர்ச்சியாக குறிப்பிடுகிறோம். இந்த சட்டம் பாடசாலை ஆசிரியர்கள் மீதும் பயன்படுத்தப்படுகின்றது” இவ்வாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் என ஜனாதிபதி மீண்டும் உறுதியளித்துள்ளதாக பிரதி அமைச்சர் சுனில் வடகல, நேற்று சபையில் பதில் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1417859- உலக நாடுகளுக்கு எரிபொருள் விநியோகிக்கின்ற மையமாக இலங்கை மாற்றமடையும்!
உலக நாடுகளுக்கு எரிபொருள் விநியோகிக்கின்ற மையமாக இலங்கை மாற்றமடையும்! ”உலக நாடுகளுக்கு எரிபொருளினை விநியோகிக்கின்ற மையமாக இலங்கை மாற்றமடையும்” என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் சீனாவின் சினோபெக் நிறுவனம் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது. இதன்மூலம் உள்ளுர் சந்தைகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும். ஆனால் இவ்வாறு விநியோகிக்கின்ற எரிபொருளின் அளவு தொடர்பாக இன்னும் எட்டப்படவில்லை. அதற்கு ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுகின்றது. எனினும் இது தொடர்பான உடன்பாடுகள் அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எந்த நாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யப்படும் என்பது குறித்து சினோபெக் நிறுவனமே இறுதி முடிவுகளை எடுக்கும். சீன அரசின் சினோபெக் நிறுவனத்துடன் நிலம் மற்றும் ஏனைய பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதே எமது எதிர்பார்ப்பாகும். உதாரணமாக, சிங்கப்பூர் எந்தவொரு எரிபொருளையும் உற்பத்தி செய்யாத ஒரு நாடாக உள்ளது. எனினும், அந்த நாடு இன்று உலகின் பல நாடுகளுக்கு எரிபொருள் விநியோகிக்கும் ஒரு மையமாகச் செயற்படுகிறது. எனவே, சினோபெக் நிறுவனத்தினால் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையும் அவ்வாறானதொரு எரிபொருள் மையமாக மாற்றமடையும்” இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1417868- கீழடி அருங்காட்சியகத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் தமிழக முதலமைச்சர்!
கீழடி அருங்காட்சியகத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் தமிழக முதலமைச்சர்! ‘இரும்பின் தொன்மை’ நூல் வெளியீடு மற்றும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (ஜனவரி 23) காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டவுள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் முதலமைச்சர் வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ”தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் ‘இரும்பின் தொன்மை நூல் வெளியீடு, கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல், கீழடி இணையதளத்தினைத் தொடங்கி வைத்தல்’ போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. தமிழக தொல்லியல் துறையானது தமிழ்நாட்டில் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் பல்வேறு அகழாய்வுகளின் வாயிலாக கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. குறிப்பாக சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட சங்ககால செங்கல் கட்டுமானங்கள், உறைகிணறுகள், தொழிற்கூடப் பகுதிகள் ஆகியவற்றை பொதுமக்களும் எதிர்காலத் தலைமுறையினரும் நேரடியாகக் கண்டு உணரும் வகையில் கீழடி அகழாய்வுத் தளத்தில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் 4.48 ஏக்கர் பரப்பளவில் ரூ.17.10 கோடி மதிப்பீட்டில் வடிவமைக்கப்படவுள்ளது. இக்கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் இவ்விழாவில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டவுள்ளார். தமிழர்களின் பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளூர் கட்டடக் கலைப் பாணியைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமானது 1) வைகை மற்றும் கீழடி 2) வேளாண்மை மற்றும் நீர் மேலாண்மை 3) கலம் செய் கோ 4) ஆடையும் அணிகலனும் 5) கடல்வழி வணிகம் 6) வாழ்வும் வளமும் ஆகிய ஆறு கருப்பொருட்களின் அடிப்படையில் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கீழடியின் தொன்மைச் சிறப்பையும் வரலாற்றுப் பெருமையையும் அறிந்து கொள்ளவும் பல்துறை அணுகுமுறையோடு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை நேரடியாக வந்து காண இயலாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே கண்டுகளிப்பதற்காக மெய்நிகர் சுற்றுலா உருவாக்கப்பட்டு கீழடி இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. கீழடி அருங்காட்சியகத் திரையரங்கில் திரையிடப்படும் ஆவணப்படம் மற்றும் காட்சிக் கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து வகையான தரவுகள் எனக் கீழடி அருங்காட்சியகம் குறித்தான அனைத்து விவரங்களையும் இந்த மெய்நிகர் சுற்றுலாவில் கண்டு மகிழலாம்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1417811- உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து வெளியேறுகின்றது அமெரிக்கா- உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- நாட்டை வந்தடையவுள்ள 4,500 மெற்றிக் தொன் உப்பு
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.