Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தியாவுக்கு பயணம். தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ‘எத்திசையும் தமிழணங்கே’ என்ற தலைப்பில் இடம்பெறும் உலக புலம்பெயர் தமிழர்கள் தின நிகழ்வில் தமிழக அரசின் அழைப்பின் பெயரில் கலந்துகொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ளனர். சென்னை சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்திய நாடாளுமன்றில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கனிமொழியைச் சந்தித்து ஈழத் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும், மத்திய அரசில் தமிழ் நாட்டின் குரலை எமக்காகத் தொடர்ந்து எழுப்புவது சம்பந்தமாகவும் உரையாடினர். தமிழ்நாட்டில் இரு தினங்கள் இடம்பெறும் மாநாட்டில் பங்குகொண்டு எதிர்வரும் 13 ஆம் திகதி மேற்படி மூவரும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1416051
  2. சீனா செல்லவுள்ள ஜனாதிபதி. சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சீன மக்கள் குடியரசிற்கு, எதிர்வரும் 14 முதல் 17 வரையிலான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி ஷீ ஜின்பிங்குடன் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன், சீனப் பிரதமர் லீ சியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் தற்போதைய நிலைக்குழுவின் தலைவர் ஜாஓ லெர்ஜி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். ஜனாதிபதியின், சீன விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1416054
  3. பின் கதவால்... கள்ள பெட்டிசம் போடுவது, சுமந்திரனின் தொழில். இந்த வேலையை, பல சந்தர்ப்பங்களில்.... தமிழரசு கட்சி விவகாரங்களில் செய்து விட்டு... வெளியே தெரிந்தவுடன்... நல்ல பிள்ளை மாதிரி, மறுப்பு தெரிவிப்பது அவரின் இரத்தத்தில் ஊறியது. "நாய் வாலை, நிமிர்த்த முடியாது." "கிளீன் ஸ்ரீலங்கா"வில்... இதைப் பிடித்து, குப்பை வாளிக்குள் போட வேண்டும். சுமந்திரனின் சுத்துமாத்து தெரிந்தும்..., அவருக்கு வக்காலத்து வாங்கும் ஒரு சிலரின் நோக்கம் எப்படிப் பட்டது என்று, பார்க்கவே தெரிகின்றது.
  4. லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – 11 பேர் உயிரிழப்பு. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவத்தொடங்கியது. பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே, காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகி வருகின்றன. காட்டுத்தீ காரணமாக சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காட்டுத்தீயால் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகியுள்ளது. இந்நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த காட்டுத்தீயால் குறைந்தது 10,000க்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் எரித்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1416066
  5. டொனால்ட் டிரம்ப் நிபந்தனையின்றி விடுதலை! ஆபாச நடிகைக்கு பணம் அளித்த வழக்கில் இருந்து அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளார். 2016 அதிபா் தோ்தலுக்கு முன்னா் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் நியூயோர்க் நீதிமன்றம் இன்று தண்டனை விவரங்களை வெளியிடுவதாக தெரிவித்திருந்தது. ஆபாசப் பட நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் டிரம்பின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுவதாக இருந்தது. அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டு அவர் ஒருவேளை சிறை செல்ல நேரிட்டால் அவரால் அதிபராகப் பதவியேற்க முடியுமா என்பதில் பலருக்கும் கேள்வி எழுந்ததுடன் டொனால்ட் டிரம்ப் நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் இன்று பண மோசடி வழக்கில் நிபந்தனையின்றியும் அவருக்கு சிறைத்தண்டனை, அபராதம் எதுவுமின்றியும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப் 10 நாள்களில் அதிபராகப் பதவியேற்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1416029
  6. வெள்ளிக்கிழமைகளில் பாகிஸ்தான் மசூதிகளில் குண்டு வெடிப்பதும், ஶ்ரீலங்காவில் முஸ்லீம்கள் தம் மதத்திற்காக மட்டும் கொடி பிடிப்பதும் வழமையான நிகழ்வுகள்.
  7. பிரதேசவாதத்தை தூண்டி தம்மை வளப்படுத்துவதில்… பிள்ளையானும், கருணாவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
  8. கனிமொழிக்கு… இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை ஒன்றும் தெரியாது போலுள்ளது. இவர்கள் இருவரும் விளங்கப் படுத்தி விட்டது நல்லதாய் போச்சு.
  9. வரும் 20’ம் திகதி நடைபெற இருக்கும்…. ட்ரம்பின் பதவி ஏற்பு விழாவிற்கு கமலா ஹரிஸ் செல்வாரா? 😂
  10. 2020’ம் ஆண்டுதான்…. சாணக்கியன் தமிழரசு கட்சிக்குள் வந்து போட்டியிட்டவர். அதற்கு முன் அவர்… மகிந்த கட்சியில் இருந்தவர். @Kapithan…. சுமந்திரனுக்கு வெள்ளை அடிக்கும், அவசரத்தில்… இதுகளை கவனிக்காமல் விட்டு விட்டார். 🤣
  11. ட்ரம்பையும், கமலாவையும் பார்க்க நல்ல முசுப்பாத்தியாய் இருக்கு. ஊரிலும்…. செத்த வீட்டில் வந்து, தமது கறளை தீர்க்கிற சம்பவம் நிறைய நடந்து இருக்கு. அமெரிக்கனும் அதுக்கு விதிவிலக்கல்ல. 😂
  12. ஈழப்பிரியன்... இவர்கள் இருவரும் சில்மிஷத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, மற்றப் பயணிகள், "வெள்ளி" பார்த்துக் கொண்டு இருந்தவர்களா? 🤣
  13. பறக்கின்ற விமானத்தில்... பாலியல் வன்புணர்வு செய்த ஆள் என்றால், எப்படிப்பட்ட கில்லாடியாக இருப்பான். நிச்சயம் சிங்களவனாகத்தான் இருப்பான். தமிழன் என்றால்... பெயர், ஊர், விலாசம் எல்லாம் பத்திரிகையில் போட்டிருப்பார்கள். 😂
  14. தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் ஆரம்பம்! தேசியதைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளது. புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்,மற்றும் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் இணைந்து 2025ம் ஆண்டுக்கான தேசிய தைப்பொங்கல் பண்டிகை நடைபெறவுள்ளது. அதன்படி புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியின் தலைமையில் காலை 7.30 மணிக்குதெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் சமய வழிபாடுகளுடன் ஆரம்பமாகி பின்னர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வரை ஆன்மிக விழிப்புணர்வு நடைப் பயணமும் அதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது. https://athavannews.com/2025/1416023
  15. புட்டினுடனான சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்ப் அறிவிப்பு! ரஷ்ய ஜனாதிபதியுடன் ஒரு சந்திப்பினை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்துள்ளதாக அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டெனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சந்திப்பு குறித்த திகதி மற்றும் இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்பதற்கு முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நவம்பர் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப், ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் உக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்தார். இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான தீர்வுகளைப் பற்றி விவாதிக்க ட்ரம்புடன் ஒரு சந்திப்பினை கோரியிருந்தார். அதற்கு இணங்க இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. 2022 பெப்ரவரி முதல் ரஷ்யப் படையெடுப்பின் கீழ் இருக்கும் உக்ரேனில் அமைதியை நிலை நாட்டுவதற்கான பிரச்சார வாக்குறுதிகளை ட்ரம்பின் கருத்துக்கள் வெளிக்காட்டுகின்றன. எனினும், பதவியேற்கும் ஜனாதிபதி இன்னும் உறுதியான போர்நிறுத்தம் அல்லது சமாதான ஒப்பந்த முன்மொழிவுகளை கோடிட்டுக் காட்டவில்லை. ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் உக்ரேனுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க இராணுவ உதவியை ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் விமர்சித்தார். மேலும், நேட்டோவில் அமெரிக்காவின் தொடர் ஈடுபாடு குறித்து சந்தேகம் தெரிவித்தார். எவ்வாறெனினும், 2022 பெப்ரவரி முதல் $65 பில்லியனுக்கும் அதிகம் பெறுமதியான இராணுவ உதவிகளை வழங்கிய வொஷிங்டன், போரின் போது உக்ரேனின் மிகப்பெரிய ஆதரவாளராக இருந்து வருகிறது. https://athavannews.com/2025/1416003
  16. 👇 கபிதன்... நான் இணைத்த படம் மூன்று கிழமைக்கு முன்பு, யாழில் ஏராளனால், இணைக்கப்பட்ட செய்தியில் இருந்து எடுக்கப் பட்டது. 17. 12. 2024´ல் இணைக்கப் பட்ட தலைப்பில், நீங்களும் கருத்து எழுதிவிட்டு. இப்போ வந்து.... அது 2017´ம் ஆண்டில் எடுத்த படம் என்று பச்சைப் பொய் சொல்லி, சுமந்திரனுக்கு.. வெள்ளை அடிப்பதாக நினைத்துக் கொண்டு, மற்றவர்கள் மீது அவதூறு பரப்பி... முட்டாளக்கும் செயலை செய்யாதீர்கள். இந்தத் தலைப்பு, தன்னுடைய பாட்டில்... "தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!" என்பதுடன் முடிந்து இருக்க வேண்டியது. அதற்குள்... நீங்களும், இன்னும் ஒருவரும்... திரிக்கு சம்பந்தமே இல்லாமல், பார் லைசன்சைப் பற்றி கதைத்து, சுமந்திரனை முச்சந்தியில் வைத்து துகில் உரியப் பண்ணி விட்ட பெருமை, உங்கள் இருவரையுமே சாரும். 😂 நீங்கள் இங்கு வந்து, சுய நினைவுடன் தான் கருத்து எழுதுகின்றீர்களா என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகின்றது. மற்றவர்கள் மீது குற்றம் சொல்ல முதல் நன்கு யோசித்து சொல்வது உங்களுக்கு நல்லது. இத்தகைய செய்கைகளால் உங்களுடன் பலர் கருத்தாடுவதை தவிர்த்து விட்டார்கள் என்பதை அறிவீர்கள் என நினைக்கின்றேன். இனியாவது சுமந்திரனுக்கு வெள்ளையடிக்கும் போது.... உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எழுதவும். அது, உங்கள் மீதுள்ள மரியாதையை தக்க வைக்கும். நன்றி. 🙏
  17. பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு! அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்க நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா பயணித்த விமானத்தில் 41 வயதான குறித்த சந்தேக நபர் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக பெண் பயணி ஒருவர் விமான ஊழியர்களிடம் முறைப்படு அளித்திருந்தார். இதையடுத்து டிசம்பர் 18 ஆம் திகதி மெல்பேர்ன் விமான நிலையத்லை் வைத்து சந்தேக நபரான இலங்கையர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு எதிரான வழக்கு வியாழனன்று மெல்போர்ன் நீதிவான் நீதிமன்றில் வந்த நிலையில் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். தற்சமயம் குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கையர் பிணையில் உள்ளார். அவரது கடவுச்சீட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கு விசாரணை முடியும் வரை விக்டோரியா அல்லது அவுஸ்திரேலியாவின் ஏனைய பகுதிகளில் தங்கியிருப்பார். பிணையின் நிபந்தனைகளின் கீழ், அவர் வாரத்திற்கு மூன்று முறை பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1415943
  18. 2025ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் மாற்றம் ஏற்படும்-வடக்கு மாகாண ஆளுநர்! அரசாங்க பணியாளர்களின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார் ‘கிளீன் சிறிலங்கா’ திட்டம் தொடர்பில் வடக்கு மாகாண அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் . ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலர் சாரதாஞ்சலி மனோகரன் கலந்துகொண்டு, ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத் திட்டம் தொடர்பான விரிவான விளக்கங்களை வழங்கியதுடன், அரசாங்க அலுவலர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். இதன் பின்னர் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், ‘கிளீன் சிறிலங்கா’ வேலைத் திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது என்பதையும் இந்த அரசாங்கத்தின் அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உண்டு என்றும் குறிப்பிட்டார். மேலும் மக்களின் சேவைகளை விரைவாகவும், தரமாகவும், அன்பாகவும் வழங்குவது அரச பணியாளர்கள் ஒவ்வொருவரினதும் பொறுப்பு எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், அந்த மாற்றத்தை அரச பணியாளர்களின் நடத்தையில் ஏற்படுத்துவதன் ஊடாக செய்ய முடியும் என்று தெரிவித்தார் அத்துடன் இந்த நடத்தை மாற்றங்கள் உடனடியாகச் செய்யக் கூடியவை எனக் குறிப்பிட்ட ஆளுநர் 2025ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் இந்த மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக மாற்றுவோம் என்றும் குறிப்பிட்டார் https://athavannews.com/2025/1415898
  19. தண்டனை அறிவிப்பை நிறுத்துமாறு கோரிக்கை முன்வைத்த ட்ரம்ப். ஆபாச பட நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்திவைக்க கோரி டொனால்ட் டிரம்ப் தாக்கல் செய்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்த நிலையில், தனக்கு தண்டனை அறிவிக்கப்படுவதை நிறுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து குடியரசுக் கட்சி சாா்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டாா். அப்போது, ஆபாச பட நடிகை ஸ்டாா்மி டேனியல்ஸ் மற்றும் டிரம்ப் இடையே தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், நடிகையுடன் இருந்த தொடா்பு குறித்து வெளியே சொல்லாமல் இருப்பதற்காக டொனால்ட் டிரம்ப் நடிகைக்கு 1.3 லட்சம் டாலா்கள் டிரம்ப் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த பண பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவன கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதவிர, தோ்தல் முடிவுகளில் தவறான தாக்கத்தை ஏற்படுத்த ஆதரவாளா்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பிரசார நிதியை டிரம்ப் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக டொனல்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நியூயாா்க்-இல் உள்ள மேன்ஹாட்டன் குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு உறுதி செய்தது. அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒருவா் மீது குற்றவியல் வழக்கில் குற்றச்சாட்டு உறுதி செய்யட்டது அதுவே முதல்முறை ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தோ்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1415959
  20. ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் சங்கமித்த 5 அமெரிக்க ஜனாதிபதிகள்! கடந்த மாத இறுதியில் தனது 100 ஆவது வயதில் உயிரிழந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் இறுதிச் சடங்கில் தற்போதைய, முன்னாள் ஜனாதிபதிகள் 5 பேர் மற்றும் துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இறுதிச் சடங்கானது வியாழக்கிழமை (09) வொஷிங்டன் நேஷனல் கதீட்ரலில் நடைபெற்றது. அமெரிக்காவின் ஜனாதிபதி ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதிகளான ஜோ பைடன், டெனால்ட் ட்ரம்ப், பராக் ஒபாமா, ஜார்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் பில் கிளிண்டன் ஆகியோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, முதல் வரிசையில் ஒன்றாக அமர்ந்திருந்தனர். கடந்த நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சித் தலைவர் ட்ரம்பிடம் தோல்வியடைந்த துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் அவரது முன்னோடிகளான மைக் பென்ஸ் மற்றும் அல் கோர் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளும் இறுதி சடங்கில் கலந்து கொண்டு கார்டருக்கு மரியாதை செலுத்தினர். 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் டரம்பிடம் தோல்வியடைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் அவரது கணவருடன் சடங்கில் பங்கெடுத்தனர். ஜனாதிபதி ஜோ பைடன் தனது புகழஞ்சலியில், கார்டரின் பண்பு மற்றும் தலைமைத்துவத்தை பலமுறை பாராட்டினார். ஒரு தசாப்தத்தில் அரசியல் ரீதியாக மோதலில் ஈடுபட்டுள்ள ட்ரம்ப் மற்றும் ஒபாமா – இறுதி சடங்கு நிகழ்வானது தொடங்குவதற்கு முன்பு சிரித்து அரட்டையடிப்பதை காட்டும் புகைப்படங்களும் இதன்போது படம்பிடிக்கப்பட்டது. முன்னாள் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் தனது கணவருடன் சடங்கில் பங்கெடுத்தார்.ஆனால் மிச்செல் ஒபாமா கலந்து கொள்ளவில்லை. அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தபோது ட்ரம்ப் மற்றும் அவரது முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆகியோர் கைகுலுக்கினர். ட்ரம்பின் ஜனாதிபதி பதவியின் முடிவில் இருவரும் வெளியேறினர், ட்ரம்பின் அழுத்தம் இருந்தபோதிலும் பைடனின் ஜனாதிபதி பதவி வெற்றிக்கான சான்றிதழை பென்ஸ் தலைமை தாங்கினார். ஒரு கலக கும்பல் 2021 ஜனவரி 6 அன்று அமெரிக்க கேபிட்டலில் நுழைந்து சான்றிதழை நிறுத்த முயற்சித்தது, சிலர் பென்ஸ் தூக்கிலிடப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். பின்னர் அவர் 2024 குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ட்ரம்பிற்கு எதிராக போட்டியிட்டும் இருந்தார். நிகழ்வில் போர்த்துக்கள் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சௌசா, நெதர்லாந்தின் இளவரசி மாபெல் ஆஃப் ஆரஞ்ச்-நாசாவ் மற்றும் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் உட்பட பல தற்போதைய மற்றும் முன்னாள் உலகத் தலைவர்கள், முக்கிய சர்வதேச அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதேநேரம், அண்மையக் காலங்களில் ட்ரம்பின் கண்ணில் வீழ்ந்த தூசியாகவுள்ள பதவி விலகும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இதில் பங்கெடுத்தார். அண்மைய வாரங்களில் ட்ரம்ப், ட்ரூடோவை “கவர்னர் ட்ரூடோ” என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டு, கனடாவிற்கு எதிராக “பொருளாதார சக்தியை” பயன்படுத்துவதாக சபதம் மேற்கொண்டிருந்தார். 2024 தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் இடையில் எவ்விதமான பேச்சுக்களும், புன் சிரிப்புக்களும் இங்கு இடம்பெறவில்லை. இருவரும் அருகருகே அமர்ந்திருந்தாலும், இரு அரசியல்வாதிகளும் தேவாலயத்திற்குள் நுழைந்த பின்னர் கைகுலுக்கவில்லை. ட்ரம்ப் தனது இருக்கையில் அமர்ந்தபோது ஹாரிஸை வெறித்துப் பார்த்தார். ஹாரிஸின் கணவரான செகண்ட் ஜென்டில்மேன் டக் எம்ஹாஃப், பின்னர் கமலா ஹாரிஸ் புஷ்ஷிடம் பேசிய சந்தர்ப்பத்தில் ட்ரம்புடன் கைகுலுக்கினார். இவர்கள் தவிர கார்டரின் உயிருள்ள வாரிசுகள் அனைவரும் வொஷிங்டனில் வியாழன் அன்று நடந்த இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர். 1976 ஆம் ஆண்டு ஜெரால்ட் ஆர். ஃபோர்டை தோற்கடித்து, அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியான காட்டர் கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி தனது 100 ஆவது வயதில் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1415931
  21. கடந்த பாராளுமன்றத் தேர்தலில்.... மக்களால் நிராகரிக்கப் பட்டு, படு தோல்வி அடைந்த சுமந்திரன், ஐ. நா. வதிவிடப் பிரதிநிதியை மூன்று கிழமைக்கு முன் சாணக்கியனுடன் சென்று சந்தித்த சந்திப்பு. 👇

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.