Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நாடாளுமன்றில் அரசாங்கத்தை கடுமையாக சாடிப் பேசிய அர்ச்சுனா எம்.பி! உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளமையினால் தனக்கு பாதுகாப்பையும் வாகனத்தையும் ஒதுக்கித் தருமாறு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தனக்கு எதிராக 24 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் எதுவுமே தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பானவை அல்ல என்றார். நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், வடக்கிற்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் தனக்குப் பாதுகாப்பு மற்றும் வாகனம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். தனக்கு ஏதேனும் நேர்ந்தால் அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜே.வி.பி.யின் கடந்த காலத்தை குறிப்பிட்ட அவர் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஒரு கொலைகார அரசாங்கம் என்றும் சாடிப் பேசினார். https://athavannews.com/2025/1417838
  2. சீனாவுக்கான இலங்கையின் கோழி இறைச்சி ஏற்றுமதி! உள்ளூர் கோழிப்பண்ணை தொழிலில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில், சீன சந்தைக்கு கோழி இறைச்சிப் பொருட்களை நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கான உடன்படிக்கையை இலங்கை மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய சீன விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட 15 ஒப்பந்தங்களில் இதுவும் ஒன்று என நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். உடன்படிக்கையின் விவரங்களை வழங்குகையில், இலங்கை தனது இறைச்சி பதப்படுத்தும் தொழிற்துறையின் உப தயாரிப்பான கோழி தலைகள் மற்றும் கால்களை நேரடியாக சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும். இந்த ஒப்பந்தம் பொருளாதாரம் அதன் அந்நிய செலாவணி வருவாயை அதிகரிக்க உதவும் என்றார். ஜனாதிபதியின் சீன விஜயத்திற்கு முன்னதாக, சீன சந்தைக்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வது தொடர்பான நெறிமுறையில் கைச்சாத்திடுவதற்கு விவசாய மற்றும் கால்நடை அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1417842
  3. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பொலிஸார் தவறாகவே பயன்படுத்துகின்றனர்! கடந்த தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய, பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளப்பெறுவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு வலியுறுத்தியிருந்தார். இது குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளதாவது” தெற்கில் உள்ளவர்கள் நினைவேந்தலை பயங்கரவாதம் என்கின்றனர். இது நெறிமுறையை மீறும் விதமாகும். அரசாங்கத்துக்கு ஏற்றாட் போல் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த முடியாது. தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளுக்கமை பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளப்பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிளீன் ஶ்ரீலங்கா திட்டம் தொடர்பான இணையத்தளத்திற்கு சென்று அந்த நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் அறிந்துகொள்ள முயற்சித்தேன். ஆனால் இன்னும் விரிவான விளக்கங்கள் அவசியமாகும். இந்த அரசாங்கத்திற்கு மக்கள் பெரிய ஆணையை வழங்கியுள்ளார்கள். ஊழலுக்கு எதிராகவே மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தில் தவறுகள் இடம்பெற்றுள்ளது. இதனை மீளப்பெறுவதாக கூறினாலும் பொலிஸார் இதனை எப்போதும் தவறாகவே பயன்படுத்துகின்றனர். அரசாங்கம் செய்யாவிட்டாலும் பொலிஸார் தவறான வகையிலேயே இந்த சட்டத்தை பயன்படுத்துகின்றனர். இந்த நிலைமையை மாற்ற வேண்டும். இதனையே நாம் தொடர்ச்சியாக குறிப்பிடுகிறோம். இந்த சட்டம் பாடசாலை ஆசிரியர்கள் மீதும் பயன்படுத்தப்படுகின்றது” இவ்வாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டம் வெகுவிரைவில் நீக்கப்படும் என ஜனாதிபதி மீண்டும் உறுதியளித்துள்ளதாக பிரதி அமைச்சர் சுனில் வடகல, நேற்று சபையில் பதில் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1417859
  4. உலக நாடுகளுக்கு எரிபொருள் விநியோகிக்கின்ற மையமாக இலங்கை மாற்றமடையும்! ”உலக நாடுகளுக்கு எரிபொருளினை விநியோகிக்கின்ற மையமாக இலங்கை மாற்றமடையும்” என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் சீனாவின் சினோபெக் நிறுவனம் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கவுள்ளது. இதன்மூலம் உள்ளுர் சந்தைகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும். ஆனால் இவ்வாறு விநியோகிக்கின்ற எரிபொருளின் அளவு தொடர்பாக இன்னும் எட்டப்படவில்லை. அதற்கு ஒரு மாத கால அவகாசம் தேவைப்படுகின்றது. எனினும் இது தொடர்பான உடன்பாடுகள் அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து எந்த நாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யப்படும் என்பது குறித்து சினோபெக் நிறுவனமே இறுதி முடிவுகளை எடுக்கும். சீன அரசின் சினோபெக் நிறுவனத்துடன் நிலம் மற்றும் ஏனைய பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதே எமது எதிர்பார்ப்பாகும். உதாரணமாக, சிங்கப்பூர் எந்தவொரு எரிபொருளையும் உற்பத்தி செய்யாத ஒரு நாடாக உள்ளது. எனினும், அந்த நாடு இன்று உலகின் பல நாடுகளுக்கு எரிபொருள் விநியோகிக்கும் ஒரு மையமாகச் செயற்படுகிறது. எனவே, சினோபெக் நிறுவனத்தினால் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையும் அவ்வாறானதொரு எரிபொருள் மையமாக மாற்றமடையும்” இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1417868
  5. கீழடி அருங்காட்சியகத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் தமிழக முதலமைச்சர்! ‘இரும்பின் தொன்மை’ நூல் வெளியீடு மற்றும் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (ஜனவரி 23) காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டவுள்ளார். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் போது முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் முதலமைச்சர் வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ”தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் ‘இரும்பின் தொன்மை நூல் வெளியீடு, கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுதல், கீழடி இணையதளத்தினைத் தொடங்கி வைத்தல்’ போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது. தமிழக தொல்லியல் துறையானது தமிழ்நாட்டில் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் பல்வேறு அகழாய்வுகளின் வாயிலாக கிடைக்கப்பெற்ற தொல்பொருட்கள் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. குறிப்பாக சிவகங்கை மாவட்டம், கீழடி அகழாய்வுகளில் வெளிப்படுத்தப்பட்ட சங்ககால செங்கல் கட்டுமானங்கள், உறைகிணறுகள், தொழிற்கூடப் பகுதிகள் ஆகியவற்றை பொதுமக்களும் எதிர்காலத் தலைமுறையினரும் நேரடியாகக் கண்டு உணரும் வகையில் கீழடி அகழாய்வுத் தளத்தில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம் 4.48 ஏக்கர் பரப்பளவில் ரூ.17.10 கோடி மதிப்பீட்டில் வடிவமைக்கப்படவுள்ளது. இக்கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்கும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் இவ்விழாவில் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டவுள்ளார். தமிழர்களின் பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளூர் கட்டடக் கலைப் பாணியைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமானது 1) வைகை மற்றும் கீழடி 2) வேளாண்மை மற்றும் நீர் மேலாண்மை 3) கலம் செய் கோ 4) ஆடையும் அணிகலனும் 5) கடல்வழி வணிகம் 6) வாழ்வும் வளமும் ஆகிய ஆறு கருப்பொருட்களின் அடிப்படையில் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கீழடியின் தொன்மைச் சிறப்பையும் வரலாற்றுப் பெருமையையும் அறிந்து கொள்ளவும் பல்துறை அணுகுமுறையோடு அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை நேரடியாக வந்து காண இயலாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே கண்டுகளிப்பதற்காக மெய்நிகர் சுற்றுலா உருவாக்கப்பட்டு கீழடி இணையதளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. கீழடி அருங்காட்சியகத் திரையரங்கில் திரையிடப்படும் ஆவணப்படம் மற்றும் காட்சிக் கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து வகையான தரவுகள் எனக் கீழடி அருங்காட்சியகம் குறித்தான அனைத்து விவரங்களையும் இந்த மெய்நிகர் சுற்றுலாவில் கண்டு மகிழலாம்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1417811
  6. அமெரிக்காவில் தீவிர பனிப்புயல்: 13 பேர் உயிரிழப்பு. அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வீசிவரும் பனிப்புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பனிப்புயல் வீசி வருகின்றது. குறிப்பாக டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா, ஜார்ஜியா, தென் கரோலினா மற்றும் புளோரிடா மாகாணங்களின் பல பகுதிகளில் 10 அங்குலம் அளவிலான பனிப்பொழி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 62 ஆண்டுகளில் இல்லாத வகையில், பனிப்புயல் பாதிப்பால் 2,100-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,அடர்பனியால் டெக்சாஸ் மற்றும் ஜார்ஜியா மற்றும் மில்வாகீ, புளோரிடா உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு மாநிலங்களில் 1,20, 000க்கும் மேற்பட்டோருக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், கடுமையான பனிப்பொழிவால் வீதி மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1417841
  7. மகா கும்பமேளா விழாவில் வைரலான காந்தக் கண்ணழகி மோனாலிசா போஸ்லே! இந்தூரைச் சேர்ந்த மாலை விற்பனையாளரான மோனாலிசா போஸ்லே (Monalisa Bhosle) பிரயாக்ராஜில் நடந்த 2025 ஆம் ஆண்டுக்கான மகா கும்பமேளா விழாவின் போது எதிர்பாராத விதமாக புகழ் பெற்றதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வைரலானார். அவர் தற்போது போலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர் சனோஜ் மிஸ்ராவின் கவனத்தை ஈர்த்துள்ளது. மிஸ்ரா மோனாலிசாவை அவரது திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் கும்பமேளா விழாவில் மாலைகள் மற்றும் ருத்ராட்சம் விற்கும் 16 வயதான மோனாலிசாவின் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த பின்னர், இணைய நட்சத்திரமாக அவரது பயணம் தொடங்கியது. அவரது தனித்துவமான வசீகரிக்கும் கண்கள் மற்றும் தனித்துவமான தோற்றத்தால் பார்வையாளர்களை கவர்ந்த வீடியோ விரைவில் வைரலானது. இவரது அழகை வர்ணித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக பலர் லியோனார்டோ டா வின்சியின் புகழ்பெற்ற கலைப்படைப்பான மொனாலிசா ஓவியத்துடன் ஒப்பிட்டும் பதிவிட்டுள்ளனர். தற்சமயம் அவர் பிரபலமான நிலையில் கும்பமேளாவிற்கு சென்ற பலரும் மோனாலிசாவை தேடியுள்ளனர். அவரை கண்டதும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். எனினும், இதுபோன்ற நிகழ்வுகள் அதிகம் நடைபெற்றதால் மோனாலிசா மிகவும் சிரமத்திற்கு ஆளானார். இணையத்தில் வெளியான ஒரு வீடியோ, அவர் பல ஆண்களால் துன்புறுத்தப்படுவதைக் காட்டுகிறது. அந்த வீடியோவில் அவள் சிவப்பு நிற சல்வார் உடையணிந்து, தன்னை நெருங்கும் கூட்டத்திலிருந்து தப்பிக்க முயற்சிப்பதைக் காட்டுகிறது. அவளுடைய குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் அவளை பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறார், இன்னும் சிலர் அவளுடன் நெருங்கி பழகவும் அவளைப் புகைப்படம் எடுக்கவும் முயற்சி செய்கிறார்கள். அவள் கீழே அமர்ந்து துப்பட்டாவினால் முகத்தை மறைப்பதுடன் குறித்த வீடியோ முடிகிறது. ஃப்ரீ பிரஸ் ஜர்னல் (FPJ) தகவலின்படி, அவரது அதிகரித்து வரும் புகழ் அவரது வணிகத்தில் விற்பனையை குறைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. மோனாலிசா தொடர்பில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்கள் தொடர்ந்து பகிரப்படுகின்றன. அவள் மாலைகளை விற்பது முதல் அவரது பிறந்தநாளை தனது குடும்பத்துடன் கொண்டாடுவது வரை பேட்டி கொடுப்பது வரை பல காட்சிகள் உள்ளன. https://athavannews.com/2025/1417690
  8. அரிசி ஆலைகளை இராணுவம் கண்காணிக்கும்! -ஜனாதிபதி தெரிவிப்பு. அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய செயற்படாத அரிசி ஆலைகளை கட்டுப்படுத்த இராணுவத்தை களமிறக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரிசி ஆலைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது ”பாரிய நெல் ஆலைகளின் உரிமையாளர்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாவிட்டால், நெல் ஆலையில் உள்ள தமது கடைக்கு அரிசி கொண்டு செல்லும் வரை இராணுவ கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார். அத்துடன் அரிசி தேசிய சொத்து என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கம் இதுவரை எந்தவிதமான நியாயமற்ற விதிமுறைகளையும் ஏற்படுத்தவில்லை எனவும் மில் உரிமையாளர் எவரேனும் இதற்கு இணங்காவிட்டால், ஆலையை இராணுவத்தினர் கையகப்படுத்தி அரிசி உற்பத்தி செய்து சந்தைக்கு விடப்படும் என்றும் ஜனாதிபதி எச்சரித்தார். தற்போதைய கட்டுப்பாட்டு விலையை விட ஒரு சதம் அதிகமாக அரிசி விற்பனை செய்வதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1417682
  9. சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு! சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதுடன், நுகர்வோர் இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்தப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இன்னிலையில் ரூ.1095 ஆக இருந்த நிலக்கடலை ரூ.995 ஆக குறைக்கப்பட்டுள்ளது 340 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பிரவுன் சீனி 300 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது அத்துடன் 210 ரூபாவாக இருந்த இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 180 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது 795 ரூபாவாக இருந்த சிவப்பு கௌபி கிலோ ஒன்று 765 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது ஒரு கிலோ உலர் நெத்தலி 940 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதுடன் ,ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 830 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது பாஸ்மதி அரிசி (பிரீமியர்) கிலோ முன்னைய விலை ரூ.655 ஆகவும், புதிய விலை ரூ.645 ஆகவும் இருந்தது. இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் முன்னைய விலை 240 ரூபாவாகவும், புதிய விலை 230 ரூபாவாகவு குறைக்கப்பட்டுள்ளது மேலும் ஒரு கிலோ துவரம் பருப்பின் முந்தைய விலை 290 ரூபாவாகவும், புதிய விலை 288 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதுடன் ஒரு கிலோ வெள்ளை சீனியின் முந்தைய விலை 242 ரூபாவாகவும், புதிய விலை 240 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1417643
  10. ரம்ப், புட்டின், அனுரா, கமலா ஹாரிஸ், தமன்னா, நித்தியானந்தா. நான் பெயர் வைத்து விட்டேன். 😂
  11. புதிதாக பிறந்த சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு! ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவில் புதிதாகப் பிறந்த ஆறு சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பூங்கா நிர்வாகத்தின் கூற்றுப்படி, டோரா மற்றும் லாரா ஆகிய சிங்கங்கள் கடந்த மாதம் தலா மூன்று சிங்கக் குட்டிகளைப் பெற்றெடுத்தன. சிங்கம் டோராவுக்கு 3 பெண் குட்டிகளும், லாராவுக்கு இரண்டு பெண் குட்டிகளும் ஒரு ஆண் குட்டியும் பிறந்தன. ஏறக்குறைய மூன்று மாதங்களே ஆன சிங்கக்குட்டிகள் பெப்ரவரி மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தயாராகி வருகிறது. இந்நிலையில், ரிதியகம சபாரி பூங்கா நிர்வாகம், சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்க பொதுமக்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. https://athavannews.com/2025/1417654
  12. ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி! அரசாங்கம் வழங்கிய இல்லத்தினை ஏற்க மறுத்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க நன்றியை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளிற்கு வழங்கப்பட்டுள்ள ஆடம்பர உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களினால் அரசாங்கத்திற்கு ஏற்படும் இழப்புகள் குறித்து கருத்துத் தெரிவித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, அரசாங்கம் வழங்கிய வீட்டிலேயே வசிப்பதாகவும், அந்த வீட்டின் மாதாந்த வாடகை பெறுமதி 2 மில்லியன் ரூபாய் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ள வீட்டிற்கு 0.9 மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசிக்கும் வீட்டின் வாடகை பெறுமதி மாதம் 4.6 மில்லியன் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். எனினும் சில தலைவர்கள் தங்களிற்கு வழங்கப்பட்ட விசேட சலுகைகளை மீள ஒப்படைத்துள்ளதாக அநுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். அந்தவகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்தை சமீபத்தில் மீள கையளித்துள்ளார் எனவும், ரணசிங்க பிரேமதாசவின் மனைவியான ஹேமா பிரேமதாசவும் தனக்கு வழங்கப்பட்ட வீட்டை சில காலத்திற்கு முன்னர் திருப்பி ஒப்படைத்துள்ளார் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன் அரசியல் பிரமுகர்களிற்கான தேவையற்ற செலவீனங்களை குறைப்பது குறித்து அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1417667
  13. தென் கொரிய விமான விபத்து; முவான் விமான நிலையத்திலிருந்து அகற்றப்படும் கொன்கிரீட் சுவர்! 179 பேரைக் கொன்ற ஜெஜு விமான விபத்தின் எதிரொலியாக முவான் சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்ட கொன்கிரீட் சுவரினை அகற்றுவதாக தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை (22) தெரிவித்தது. போயிங் 737-800 ரக விமானம் தாய்லாந்தில் இருந்து தென்மேற்கில் உள்ள முவானுக்கு டிசம்பர் 29 ஆம் திகதி 181 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் பறந்து கொண்டிருந்தது. பின்னர், அது தென்கொரியாவின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது ஓடுபாதையின் முடிவிலிருந்த கொன்கிரீட் தடுப்புச்சுவரில் மோதி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த பேரழிவானது தென்கொரியாவில் இடம்பெற்ற மோசமான விமான விபத்தாக பதிவானது. தென் கொரிய மற்றும் அமெரிக்க புலனாய்வாளர்கள் இன்னும் விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர், இது நாடு முழுவதும் நினைவுச்சின்னங்களுடன் தேசிய துக்கத்தைத் தூண்டியது. விமானம் மோதிய கொன்கிரீட் தடுப்புச் சுவர், விமானங்கள் தரையிறங்குவதற்கு உதவும் வகையிலான ஓடுபாதையின் முடிவில் ஏன் இருந்தது என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த நிலையில் தென்கொரிய போக்குவரத்து அமைச்சின் மேற்கண்ட அறிக்கை வந்துள்ளது. அதில், முவான் சர்வதேச விமான நிலையம் ஏற்கனவே உள்ள கான்கிரீட்டை முழுவதுமாக அகற்றி, ஒரு உடையக்கூடிய கட்டமைப்பில் உள்ளமைப்பினை மீண்டும் நிறுவ திட்டமிட்டுள்ளது. அதேநேரம், விமான நிலையங்களிலும் 240-மீட்டர் (787-அடி) நீளமான ஓடுபாதை பாதுகாப்புப் பகுதியை உறுதி செய்வதாகக் கூறியது. எனினும், முவான் விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதை பகுதி விபத்துக்கு முன் சுமார் 200 மீட்டர் நீளம் இருந்தது. இதனிடையே, முவான் விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டபோது பதவியில் இருந்த அரசு நடத்தும் கொரியா விமான நிலையக் கழகத்தின் முன்னாள் தலைவரான சோன் சாங்-வான் செவ்வாயன்று (21) தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, முவான் விமான நிலையத்தை மூடுவது ஏப்ரல் 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1417646
  14. மகிந்த, சந்திரிகா, மைத்திரி... மூவரின் மாதாந்த வீட்டு வாடகைப் பணமே 75 லட்சம் ரூபாவை தாண்டுகின்றது.
  15. அது... இதுகுத்தான் என்று, இப்போதான்... தெரியுது. 😂
  16. பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
  17. பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் பராமரிக்கப்படும்! -பிமல் ரத்நாயக்க. புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் பராமரிக்கப்படும் என அவைத்தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளதாவது” பயங்கரவாத தடைச்சட்டம் என்பது அரசாங்கத்தின் விருப்பமோ கொள்கையோ அல்ல. புதிய சட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் வரை நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கப்படும். புதிய சட்டமொன்று நிறைவேற்றப்படும் வரை அரசாங்கத்தினை முன்னெடுத்து செல்ல வேண்டிய தேவை உள்ளது. அது தொடர்பாக நீதியமைச்சர் காரணிகளை முன்வைத்திருந்தார் அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் விமான நிலையத்தில் எதிர்நோக்கிய அசௌகரியத்திற்கு வருந்துகிறோம். இந்த விடயம் தொடர்பாக தற்போதே எனக்கு அறியக்கிடைத்தது. விமான சேவைகள் நிறுவன தலைவரிடம் இந்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரியுள்ளேன்.அதுபோல் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகரவிடமும் நான் இந்த விடயம் தொடர்பாக அறிவுறுத்தியுள்ளேன். ஸ்ரீதரனின் நாடாளுமன்ற வரப்பிரசாதங்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்போம்” இவ்வாறு பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1417497

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.