Everything posted by தமிழ் சிறி
-
நாடாளுமன்றத்தில் அர்ச்சுனாவிற்கு பாரிய அநீதி : எழுந்துள்ள புதிய சர்ச்சை
அர்ச்சுனாவின் தலைவிதி தீர்மானம் குழு விசாரணைக்கு பிறகு! பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் தலைவிதி குழு விசாரணையின் முடிவுகளை சார்ந்து தீர்மானிக்கப்படும் என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன இன்று அறிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு உரிமை பறித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட அர்ச்சுனாவிடம் விசாரணை நடைபெற்று வருவதாக சபாநாயகர் கூறினார். “எதிர்க்கட்சி சபாநாயகரின் ஆலோசனையின் முடிவுக்கு காத்திருக்கின்றது,” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக் தெரிவித்தார். மேலும் அண்மையில் தவறான நடத்தையால் குற்றம் சாட்டப்பட்ட குறித்த எம்.பி., தற்போது விசாரணைக்கு முகங்கொடுத்துள்ளார். https://athavannews.com/2025/1415485
-
க்ளீன் ஸ்ரீலங்கா நடவடிக்கை: விதிமுறைகளை மீறிய பேருந்தில் இருந்து இறக்கப்பட்ட பயணிகள்
- கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
இரண்டு கிழமைக்கு முன் நண்பர் ஒருவர், எயார் லங்காவில் இலங்கைக்கு பயணித்த போது... விமானத்தில் கொடுக்கப் பட்ட உணவை உண்ட அனைவருக்கும் வாந்தியும், வயித்தாலை அடியும் என்று சொன்னார். அந்த உணவை உண்ணாதவர்களுக்கு எதுவும் நடக்கவில்லையாம்.- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- மியன்மார் அகதிகள் இன்று கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றம்!
மியன்மார் அகதிகள் இன்று கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு மாற்றம்! மியன்மாரில் இருந்து வந்து கைது செய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 மியன்மார் அகதிகளும் இன்று விடுதலையாகி கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு மியன்மார் அகதிகள் 12 பேர் சட்டவிரோத படகு பயணத்திற்கு செயற்பட்டதாக கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த12 பேரும் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கேப்பாபுலவு விமானப் படைத்தளத்திற்கு கடந்த (23.12.2024) மாலை 5 மணியளவில் மியன்மார் அகதிகள் 103 பேர் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து இன்றையதினம் தடுப்புகாவலில் வைக்கப்பட்ட ஏனைய 12 பேரும் விடுதலையாகி குறித்த முகாமிற்கு தங்கவைக்க அழைத்து வரப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த 19 ஆம் திகதி 115 பயணிகளுடன் மியன்மார் அகதிகள் படகு கரை ஒதுங்கியிருந்தது. பின்னர் கப்பல் கரைக்கு வர முடியாத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் திருகோணமலை ஐமாலிய முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் தஞ்சம் கோரிய 115 முஸ்லீம் இனத்தினை சேர்ந்த மியன்மார் அகதிகளும் மிரிஹானை இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பதற்கான இடவசதி இல்லாத காரணத்தினால் இவர்களில் 103 பேர் இரண்டு பேருந்துகளில் மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தளம் ஒன்றில் தற்காலிகமாக தங்கவைக்க அழைத்து வரப்பட்டுள்ளனர். குறித்த படகில் 45 சிறுவர்கள், 24 பெண்கள், 46 ஆண்கள் உள்ளடங்கலாக 115 பேர் பயணித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. https://athavannews.com/2025/1415593- எப்படி ஜக்காம்மாவை சாப்பிடுவது
அட.... இது, ஏற்றுக் கொள்ளக் கூடிய காரணமாக இருக்கே. 😂 சாமி குற்றம், பொல்லாதது. நேர்த்தி முடிந்தவுடன் சொல்லுங்கள், ஜக்கம்மாவை அனுப்பி வைக்கின்றேன். 🤣- திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
தமிழ்நாட்டின் அயல் மாநிலங்களான.... கர்நாடகம், ஆந்திரம், கேரளா போன்றவை, தமிழ்நாட்டிற்கு வரும் தண்ணீரை மறித்து அணை கட்டும் போது... தடுக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த இந்திய மத்திய அரசுக்கு நல்ல படிப்பினை.- “தாக்கியவர்களை கைது செய்யாவிட்டால் உயிர் மாய்ப்பேன்”
என்ன மனிசனுகள்ர நீங்க ….? தவற விடப்பட்ட தங்க நகையை ஒப்படைத்தவரையே கட்டிவைத்து தாக்கியுள்ளார்கள், தாக்குதலுக்குள்ளான நபரின் வாக்குமூலம் இது. 24 ஆம் திகதி உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள பேக்கரி ஒன்றுக்கு பாண் வாங்கச் சென்ற போது பேக்கரியின் முன்னால் உள்ள நிலத்தில் தங்க நகை ஒன்று கிடந்தது,அதை எடுத்து அந்த பேக்கரி உரிமையாளரிடம் கொடுத்து உரியவர்களிடம் ஒப்படையுங்கள் என்று கூறினேன். இரண்டு நாட்களில் அந்த வழியால் செல்லும் போது அந்த பேக்கரிக்குச் சென்று நான் கொடுத்த நகையை உரியவரிடம் ஒப்படைத்தீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இன்னும் உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை என்று கூறினர்கள். இதை நான் எனக்கு நெருக்கமானவர்களுக்கு சொன்னபோது அனைவரும் என்னை ஒரு முட்டாள் என்று திட்டினார்கள்,நீயே அதை வைத்திருந்து தொலைத்தவர்கள் தேடுவதை அவதானித்து கொடுத்திருக்க வேண்டும். அப்படி உரிமையாளர் கிடைக்கவில்லையென்றால் எத்தனை அனாதை ஆச்சிரமங்கள் உள்ளன அங்கு சென்று கொடுத்திருக்கலாம் என்று ஏசினார்கள்.இப்ப அந்த நகையை பேக்கரிக்காரனே ஆட்டையைப் போட்டிடுவான் என்றும் கூறினார்கள். அதனால் இரண்டு நாட்கள் கழித்து நானாகவே அந்த பேக்கரிக்குச் சென்று நகையை உரியவர்களிடம் கொடுத்தீர்களா என்று கேட்டேன்.இல்லை என்று கூறினார்கள். அப்போது பொருளைத் தாருங்கள் ஏதாவது அனாதை இல்லத்திற்கு கொடுப்போம் என்று கூறினேன். என்ன செய்யனும் என்று எங்களுக்கு தெரியும் முதல்ல நீ பேக்கரியில் இருந்து வெளியால போ என்று என்னை விரட்டினார்கள். இல்லை, இல்லை, நான் தந்த பொருளை என்னிடம் தாங்க என்று நான் கூறினேன், உடனே அங்கு நின்ற இருவர் என் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார்கள். நான் சொல்வதை கேளுங்கள் என்று நானும் முட்டுக் கொடுத்து பின்னுக்குச் செல்லாமல் நின்றேன். உடனே பேக்கரியில் நின்ற மற்றவர்களும் சேர்ந்து ஐந்துக்கு மேற்பட்டவர்கள் என்னை கண்டபடி அடித்து இளுத்து கம்பத்தில் கட்டிவைத்து தாறு மாறாக அடித்தார்கள். வீதியால் சென்ற பலர் அவதானித்து தடுத்து நிறுத்தி எனது நியாயத்தை கேட்டு என்னை மீட்டு கோப்பாய் பொலீசுக்கும், அம்பிலன்சுக்கு அறிவித்தார்கள். அந்த வழியால் எனக்குத் தெரிந்த பலர் வந்து எனக்காகப் பேசினார்கள். முகத்திலும் உடலிலும் பலத்த காயங்களுக்கு உள்ளான நான் கோப்பாய் பொலீசுக்கு முறைப்பாடு தெரிவித்து விட்டு வைத்தியசாலைக்கு அம்புலன்சில் சென்றுவிட்டேன். வைத்திய சாலையில் இருந்து வீடு திரும்பிய நான் கோப்பாய் பொலிசுக்குச் சென்று என்னை தாக்கியவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டேன்.. யாரோ ஒரு லோயர் சமரசம் செய்வதாக பொலிசுக்குச் சொன்னதாகவும், நாங்க அந்தபேக்கரிக் காரங்களைக் கூப்பிடுறோம் என்ற பொலிஸ் சம்மந்தப்பட்டவர்களை கோப்பாய் பொலீஸ் நிலையம் வரச் சொன்னது. சம்மந்தப்பட்ட பேக்கரிக்காரங்களுடன் ஒரு லோயரும் வந்தார். வந்த லோயர் சமரசமாப் போங்க ஒருவருக்கு ஒருவர் சமாதானமாக செல்லுங்கள் இல்லையென்றால் கோட், ஜெயில், என்று பயமுறுத்தினார். எனக்கு நியாயம் வேண்டும் என்னை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும், இல்லாவிட்டால் தற்கொலை செய்வேன் என்று கூறியுள்ளேன். குறிப்பு* உதவியும் செய்து, உதையும் வாங்கி, சமரசமாகவும் போகனும், இல்லையென்றால் தற்கொலை செய்யனும். இந்த அநியாயங்களைத் தட்டிக் கேட்டாலோ, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலோ.. முதலாளி வர்க்கத்துக்காக செம்பு காவிக் கொண்டு வந்து விடுவார்கள் காசுக்கு ,,,,💩,,,, தின்னிகள். Mohammad Yousuf- கருத்து படங்கள்
- புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு போக்குவரத்து திட்டங்கள்
- உள்ளூராட்சி தேர்தல்; வரைவு சட்டமூலம் வர்த்தமானியில்!
உள்ளூராட்சி தேர்தல்; வரைவு சட்டமூலம் வர்த்தமானியில்! 2023 தேர்தலுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்வதற்கும் புதிய வேட்புமனுக்களை கோருவதற்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு சட்டமூலம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக பின்னர் ஒரு திகதியில் சமர்ப்பிக்கப்படவும் உள்ளது. 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத் திருத்தச் சட்டமூலம் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் உத்தரவிற்கு அமைய அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சட்டமூலத்தின் பிரகாரம், 2023 மார்ச் 09 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் செல்லுபடியாகாது. ஒரு அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களைப் பொறுத்தவரையில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறவும் இந்த வர்த்தமானி வழிவகை செய்கிறது. அதற்கான சட்டமூலம் நாடாளுமன்ற்த்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன்படி, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோரும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்க வேண்டும். அந்தத் திகதியானது மேற்படி சட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு 3 மாதங்களுக்கு முந்திய திகதியாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1415460- பெண்கள் பாதுகாப்பு குறித்து ரஜினிகாந்த் அபத்தமான பதில்!
பெண்கள் பாதுகாப்பு குறித்து ரஜினிகாந்த் அபத்தமான பதில்! சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் 19 வயது மாணவி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புறக்கணித்துள்ளார். கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் 19 வயது பொறியியல் மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார். புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றில் நடந்த இந்தச் சம்பவம், தமிழகத்தில் பரவலான சீற்றத்தைத் தூண்டி, பெண்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில் கூலி படத்தின் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து சென்று நாடு திரும்பிய ரஜினிகாந்திடம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அவர் தனது நடிப்பு திட்டங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தபோது, பெண்களின் பாதுகாப்பு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அபத்தமான பதிலை அளித்தார். அந்த பதிலில் அவர், “என்னிடம் அரசியல் கேள்விகள் கேட்காதீர்கள்” என்று ரஜினிகாந்த் கடுமையான தொனியில் பதிலளித்தார். இதனிடையே, ரஜினிகாந்த் தனது வரவிருக்கும் கூலி திரைப்படம் குறித்த புதுப்பிப்பைப் பகிர்ந்துள்ளார். திரைப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீத நிறைவடைந்துள்ளதாகவும், அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி 13 முதல் ஜனவரி 28 வரை நடைபெறும் என்று இதன்போது கூறினார். ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இத் திரைப்படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இந்த ஆண்டு திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகுவதுடன், இதன் வெளியீட்டுத் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2025/1415516- சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 50-க்கும் மேற்பட்டோர் பலி
திபெத் நிலநடுக்கத்தில் 53 பேர் உயிரிழப்பு, பலர் காயம்! சீனாவின் மலைப்பகுதியான திபெத்தில் செவ்வாய்கிழமை (07) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 53 பேர் உயிரிழந்துள்ளதுடன், 62 பேர் காயமடைந்துள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது. பீஜிங் நேரப்படி 09:05 மணியளவில் (01:00 GMT) திபெத்தின் புனித ஷிகாட்சே (Shigatse) நகரத்தை தாக்கிய நிலநடுக்கம் 7.1 மெக்னிடியூட் அளவு மற்றும் 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் இருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் கூறியுள்ளது. எனினும் நிலநடுக்கம் 6.8 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவித்தது. எவ்வாறெனினும், இதன் தாக்கம் அண்டை நாடான நேபாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தை அடுத்து சமூக ஊடக பதிவுகள் இடிந்து வீழ்ந்த கட்டிடங்களையும், மீட்பு பணிகளையும் வெளிக்காட்டுகின்றன. அனர்த்தத்தை அடுத்து தீபத்தின் பல பகுதிகளுக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோம் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், உயிரிழப்புகளைக் குறைப்பதற்கும், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை மீள்குடியேற்றுவதற்கும் முழுமையான தேடல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேபாளத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டாலும் அங்கு சொத்து சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகளின் பெரிய கோட்டிற்கு அருகில் அமைந்துள்ள இப்பகுதி, அடிக்கடி நில அதிர்வு நடவடிக்கைகளுக்கு தாயகமாக உள்ளது. 2015 ஆம் ஆண்டில், நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு அருகே ஏற்பட்ட 7.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1415504- எப்படி ஜக்காம்மாவை சாப்பிடுவது
அல்வாயன், சும்மா… ஒரு கிழங்கை தோல் சீவாமல் சாப்பிட்டு பாருங்கோவன். 😂 🤣- பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த சிரேஷ்ட அரசியல்வாதிகள் ; மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட கலந்துரையாடல்
சுமந்திரனுக்கு… மக்கள் வாக்குப் போட முன்வர வேணுமே. 😂 சுமந்திரனின் பெயரையும், திருட்டு முழியையும் பார்த்தவுடனேயே மக்கள்… காலில் உள்ளதை, கழட்டி அடிக்க விரும்புகின்றார்கள். 🤣- “தாக்கியவர்களை கைது செய்யாவிட்டால் உயிர் மாய்ப்பேன்”
உதவி செய்யப் போய்…. உபத்திரவத்தை வாங்கியுள்ளார். இனிமேல்… கீழே கிடந்ததை எடுத்து மற்றவர்களிடம் கொடுக்காமல், சம்பந்தப் பட்டவரை கண்டு பிடிக்கும் மட்டும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். அப்படி கண்டு பிடிக்க முடியாத பட்சத்தில்… அனாதை ஆச்சிரமங்களுக்கு வழங்கி விடுங்கள். மூன்றாம் நபரிடமோ, காவல் துறையிடமோ… ஒப்படைப்பது எல்லாம் நம்பிக்கை அற்ற செயல்கள்.- "எங்கள் பேத்தி ஜெயாவின் எட்டாவது பிறந்தநாள் இன்று!" / Eight Birthday Wishes for Jeya!" / [06 / 01 / 2025]
உங்கள் பேத்திக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
இயற்கை வளங்களை நீங்களே அழித்துவிட்டு, உவர் நீரை உள்ளே வர விட்டுவிட்டு, பிறகு கிளிநொச்சியில் இருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து... நீரை கொண்டு போகப் போறம் என்றால், யாரில் பிழை இருக்கிறது? இயற்கையை பாதுகாத்தாலே வாழ்வும் வளமும் சிறப்பாய் இருக்கும்! Kilinochchi Podiyan- இரசித்த.... புகைப்படங்கள்.
- பிரபல வைத்தியசாலையில் சிக்கிய போலி மருத்துவர்!
சொந்த அனுபவத்தை எம்முடன் பகிர்ந்து கொண்ட தகவலுக்கும், அக்கறைக்கும் நன்றி.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Samsung... சம்சுதீனாக, (மதம்) மாறிய தருணம். 😂 🤣- புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு போக்குவரத்து திட்டங்கள்
வாகனங்களில் அளவுக்கு அதிகமாக பொருத்தப் பட்ட ஒலி பெருக்கிகள், அலங்கார விளக்குகளை அகற்றும் பணி இலங்கை பொலிஸாரால் முன்னெடுக்கப் பட்டுள்ளது. ####### ############ ########### ########## ஆயிரம் நபர் ஆயிரம் விதமாக சொன்னாலும் இப்படி வாகனங்களை அலங்கரிப்பது தண்டனைக்குரிய குற்றம் காரணம். இதனால் எண்ணில் அடங்காத விபத்துக்கள் ஏற்படுகின்றன. விபத்தில் சேதம் அடைந்த ஆட்களுக்கு தான் தெரியும் இதன் விளைவு. வெறும் விமர்சனம் செய்றவனுக்கும் இதை எல்லாம் வாங்கி பொருத்துபவனுக்கும் எப்போதும் புரியபோவதே இல்லை. Ahamed Bary Bilal- அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!
அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர். எம். டபிள்யூ. ராஜபக்ச, பேராசிரியர் ஜோசப் யோகராஜா (Stanislaus Joseph Yogarajah)மற்றும் லரீனா அப்துல் ஹக் (Lareena Abdul Haq) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன. https://athavannews.com/2025/1415382 - கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.