Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அதுவும் சரிதான். 2025´ம் ஆண்டு முழுக்க அவர் பழக அவகாசம் கொடுப்போம். அப்பவும் திருந்தவில்லை என்றால்... சவுக்கடிதான். 🤣
  2. இந்த வருடத்தின் மிக மோசமான போட்டோசொப் படம். 😂 இதனை தயாரித்தவனுக்கு 100 சவுக்கடி கொடுக்க வேண்டும். 🤣
  3. இலங்கையில்... வெள்ளம் வந்தது, இந்தியாவுக்கு தெரியாது போலை இருக்கு. 😀 தெரிந்திருந்தால்... அள்ளிக் கொட்டியிருக்கும். சீனாக்காரனின் சுறு சுறுப்பு... இந்தியரிடம் இல்லை. 🤣
  4. பாஞ்ச் அவர்களே.... என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லி விடுங்க. 😂
  5. போர் நடக்கும் இடத்தில்... சேவை ஆற்றிய மருத்துவரை, இஸ்ரேல் கைது செய்திருக்கின்றது. அதனை எந்த உலக நாடுகளும் கண்டிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. இதற்குள் மற்றவர்களுக்கு... மனிதாபிமானம், மனிதநேயம் என்று கிலோ கணக்கில் ஆலோசனை வழங்கிக் கொண்டிப்பார்கள். வெட்கம் கெட்டவர்கள்.
  6. கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்! அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தின் முன்பாக இந்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இதில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும் புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இதில் அருட்தந்தையர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2024/1414486
  7. ஆண்டுகள் பல கடந்தாலும், எமது போராட்டத்துக்கான தீர்வும், நீதியும் இன்றுவரை கிடைக்கவில்லை! தாய்மாரின் கண்ணீருக்கு பதில் தருவதாகக் கூறிய புதிய ஜனாதிபதியும் ஏமாற்றியுள்ளார் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். குறித்த போராட்டம் இன்று காலை கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அலுவலகம் முன்பாக இடம் பெற்றதுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது படங்களை ஏந்தியவாறு குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எமது பிள்ளைகள் கையளித்தும், சரணடைந்தும் காணாமல் ஆக்கப்பட்டள்ளனர். கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். குழந்தைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளைத் தேடி நாங்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றோம். அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டுபிடிக்க சர்வதேசம் முன்வர வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் போராடுகின்றோம். இதற்கு முன் இருந்த அரசுகள் எம்மை ஏமாற்றின. தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட நிலையில் சர்வதேசத்திடம் நீதி கேட்டு போராடுகிறோம். ஆண்டுகள் பல கடந்தாலும், எமது போராட்டத்துக்கான தீர்வும், நீதியும் இன்றுவரை கிடைக்கவில்லை. எமக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம். இலங்கையில் இடம்பெற்ற தேர்தல்களில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீருக்கு நீதி பெற்றுக் கொடுப்பேன் என புதிய ஜனாதிபதி கூறினார். ஆனால் 6 மாதங்களாகியும் இன்றுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனைய ஜனாதிபதிகள் போன்று இவரும் ஏமாற்றுவதாகவே உணர்கின்றோம். இன்றுவரை பாதிக்கப்பட்ட எம்முடன் பேசக்கூவில்லை. அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வலியும், கண்ணீரும் எனக்கும் தெரியும் என்றார். அதன் வலி எனக்கு புரியும் என்றார். ஆனால் இன்றுவரை எந்த முயற்சியும் அவர் எடுத்திருக்கவில்லை. நாங்கள் தொடர்ந்தும் ஏமாற்றபட்டே வருகின்றோம் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர் https://athavannews.com/2024/1414481
  8. ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்! அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. “தூய்மையான இலங்கை” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்று அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமாநாயக்க, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படை தளபதிகள் உட்பட 18 பேர் இந்த செயலணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இந்த ஜனாதிபதி செயலணியின் பொறுப்புகள், “தூய்மையான இலங்கை” திட்டத்தை திட்டமிடல், வழிகாட்டுதல், நடைமுறைப்படுத்துதல், முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவு செய்தல் என்பனவாகும். https://athavannews.com/2024/1414438
  9. பாடசாலை நாட்கள் எண்ணிக்கையில் மாற்றம்! 2025 ஆம் ஆண்டு பாடசாலை பருவ நாட்கள் எண்ணிக்கை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கம் 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடாத்தினாலும் வருடத்திற்கு பாடசாலை நாட்களை அடுத்த வருடம் 181 நாட்களாக குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதிகளவிலான அரசு விடுமுறைகள் மற்றும் முதல் தவணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் மற்றும் அரசுப் பாடசாலைகளில் ஆண்டுதோறும் கல்வி பயிலும் மாணவர்களின் வருகை திகதி குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையை நிறைவு செய்வதற்கு, ஜனவரி 2 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை பாடசாலையின் முதல் 03 வாரங்கள் நடைபெறவுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக அடுத்த ஆண்டுக்கான கல்வியாண்டு ஜனவரி 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டுக்கு 26 பொது விடுமுறைகள் உள்ளன, அதில் 4 நாட்கள் மட்டுமே வார இறுதி நாட்கள். ஏனைய அனைத்தும் வாரநாட்களாக இருப்பதால் 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடத்த இயலாது, இதனால் பாடசலைகள் நடத்தும் நாட்கள் 181 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1414448
  10. விலை மனுக்கோரல் மூலம்; 78 கோடி ரூபா நட்டம்! கடந்த மூன்று மாதங்களில் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தில் நிலக்கரி எரிக்கப்பட்டதன் பின்னர் எஞ்சியிருக்கும் சாம்பல் விலை மனுக்கோரலுக்கு விடப்பட்டதன் மூலமாக அரசாங்கத்திற்கு 78 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. சீமெந்து உற்பத்திக்கு பயன்படுத்தக்கூடிய இந்த சாம்பல், தொன் ஒன்று 13,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டாலும், தொன் ஒன்றுக்கு 2,900 ரூபாவுக்கு விலை மனுக்கோரல் விடப்பட்டுள்ளது. இதனால், தொன் ஒன்றுக்கு 10,400 ரூபாய் நஷ்டத்தில் இந்த ஆண்டு மே 15 ஆம் திகதி அவசர விலை மனுக்கோரல் அழைப்பின் மூலம் பெரிய அளவில் சீமெந்து வியாபாரிகளுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு இந்த விலை மனுக்கோரல் விடப்பட்டுள்ளது. இதன்படி 36 மாதங்களில் அரசாங்கத்திற்கு 6.2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2024/1414455
  11. உலகெங்கிலும் தமிழ் மொழியை படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-நரேந்திர மோடி! நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மனதின் குரல் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார் இன்னிலையில் நேற்றுடன் 117-வது அத்தியாயத்தை எட்டியுள்ளதுடன் இந்தாண்டுக்கான கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார் இதில் உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழி ஆகும் என்றும் இது, இந்தியர்கள் அனைவருக்கும் பெருமிதமான, பெருமை சேர்க்கும் விஷயம். என்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் தமிழ் மொழியை படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என அவர் தெரிவித்தார் இதேவேளை கடந்த மாத இறுதியில் ஃபிஜியில் இந்திய அரசின் ஆதரவுடன் தமிழ் கற்பித்தல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் கடந்த 80 ஆண்டுகளில் ஃபிஜியில் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மொழியை பயிற்றுவிப்பது இதுவே முதல்முறையாகும் மேலும் ஃபிஜி மாணவர்கள் தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் இந்த சம்பவங்கள் வெறும் வெற்றிக் கதை அல்ல. நம்மை பெருமிதத்தால் நிரப்புபவை எனவும் நரேந்திர மோடி தெரிவித்தார் https://athavannews.com/2024/1414458
  12. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் 100 ஆவது வயதில் காலமானார்! 1977 முதல் 1981 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 39 ஆவது ஜனாதிபதியாக பணியாற்றிய ஜிம்மி கார்ட்டர் (Jimmy Carter), தனது 100 ஆவது வயதில் ஜோர்ஜியாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார் என்று அமெரிக்க ஊடகத்தை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தனது மனிதாபிமானப் பணிக்காக அமைதிக்கான நோபல் பரிசை வென்ற கார்ட்டர், இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்திய பெருமைக்குரியவர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கார்ட்டர், 1976 அமெரிக்கத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் ஜெரால்ட் ஃபோர்டை தோற்கடித்து வெள்ளை மாளிகைக்குள் நுழைந்தார். முன்னதாக கலிபோர்னியா ஆளுநராக பணியாற்றிய நடிகரும் அரசியல்வாதியுமான ரொனால்ட் ரீகனால் 1980 தேர்தலில் கார்ட்டர் தோற்கடிக்கப்பட்டார். கார்ட்டரின் மறைவு குறித்து அவரது புல்வர் சிப் கார்ட்டர் இட்டுள்ள பதிவொன்றில், “என் தந்தை எனக்கு மட்டுமல்ல, அமைதி, மனித உரிமைகள் மற்றும் தன்னலமற்ற அன்பில் நம்பிக்கை கொண்ட அனைவருக்கும் ஒரு ஹீரோ” என்று கூறியுள்ளார். கார்ட்டர், அண்மைய ஆண்டுகளில், கல்லீரல் மற்றும் மூளைக்கு பரவிய மெலனோமா உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளால் தொடர்ந்தும் போராடி வந்தார். அவர் 2023 ஆம் ஆண்டில் தீவிர நோய்வாய்ப்பட்டவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் ஒரு வகை சுகாதாரப் பராமரிப்பைப் பெற முடிவு செய்தார். மேலும் கூடுதல் மருத்துவ தலையீட்டிற்கு உட்படுத்த வேண்டாம் என்றும் அவர் தீர்மானித்திருந்தார். 2023 நவம்பர் 19 அன்று, 96 வயதில் உயிரிழந்த அவரது மனைவி ரோசலின் கார்டரின் இறுதிச் சடங்கில் அவர் கலந்து கொண்டார். இதன்போது அவர் பலவீனமான நிலையில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்தார். எவ்வாறெனினும், கார்ட்டர் தனது பதவிக் காலத்திற்குப் பின்னர், மற்ற எந்த அமெரிக்க ஜனாதிபதியையும் விட நீண்ட காலம் வாழ்ந்தவர் என்ற சிறப்பை அடைந்தார். ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை முன்னெடுப்பதைத் தவிர, சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளைக் கண்டறிவதில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக 2002 இல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. ஓவல் அலுவலகத்தில் (அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ அலுவலகம்) அவர் நான்கு ஆண்டுகள் பணியாற்றியது இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே 1978 ஆம் ஆண்டு கேம்ப் டேவிட் உடன்படிக்கைகளுக்கு பெரும் பங்களிப்பை நல்கியது. இது இரு நாடுகளுக்கு இடையில் சமாதானத்தை ஏற்படுத்தியதுடன், மத்திய கிழக்கில் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரவும் உதவியது. எனினும் ஒரு பொருளாதார மந்தநிலை, அவரது செல்வாக்கற்ற தன்மை மற்றும் 1979 ஈரான் பணயக்கைதிகள் நெருக்கடி ஆகியவை அவருக்கு எதிராக ஒரு சூழ்நிலையை உருவாக்கியது. மேலும் அவர் 1980 அமெரிக்க தேர்தலில் ரீகனிடம் தோற்று வெளியேற்றப்பட்டார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பிடன் ஆகியோர் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டனர் மேலும் அதில், கார்டரை “அசாதாரண தலைவர், அரசியல்வாதி மற்றும் மனிதாபிமானவாதி” என்றும் நினைவு கூர்ந்தனர். அதேநேரம் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், கார்ட்டர் தனது பதவிக்காலத்தில் தான் எதிர்கொண்ட துன்பங்களுக்கு மத்தியிலும் அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபட்ட தலைவர் என்று கூறினார். கார்ட்டர் ஒரு பிரபலமற்ற ஜனாதிபதியாக பதவியை விட்டு வெளியேறினார், ஆனால் அவரது பதவிக்காலத்திற்குப் பின்னர், அவர் மனிதாபிமான காரணங்களுக்காக பல தசாப்தங்களாக ஆர்வத்துடன் பணியாற்றினார். அடுத்த ஆண்டுகளில், கார்ட்டர் ஒரு மனித உரிமை சாம்பியனாக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார், மேலும் பின்தங்கியவர்களுக்கான குரலாக பிரபலமடைந்தார். அவர் பசி மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தினார் மற்றும் முன்னோடியில்லாத புகழ் பெற்றார், இது ஜனாதிபதியாக பதவியில் இருக்கும் போது கூட அவரால் அடைய முடியாத பெருமிதம் ஆகும். https://athavannews.com/2024/1414431
  13. தாய்லாந்தில் இருந்து வந்த விமானம் தென் கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 181 பேரில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர். விபத்திற்கு சற்று முன், பறவை தாக்கும் விமானிகளுக்கு கோபுரம் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. தென்கொரியாவின் முவான் நகரில் விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். அதிகாரப்பூர்வ Yonhap செய்தி நிறுவனம் தெரிவித்தபடி, தீயணைப்புத் துறை இதை உறுதிப்படுத்தியது. 181 பேரில் இருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். பல வருடங்களில் நடந்த மிக மோசமான விமான விபத்துகளில் இதுவும் ஒன்று. யோன்ஹாப்பின் கூற்றுப்படி, விமானத்தில் மொத்தம் 173 தென் கொரிய மற்றும் இரண்டு தாய்லாந்து பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் இருந்தனர். இதுவரை, 65 பேர் இறந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தீயணைப்பு ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. விமானம் சுவரில் மோதியதையடுத்து, பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். உயிர் பிழைத்தவர்கள் இரண்டு குழு உறுப்பினர்கள். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த தென் கொரிய மலிவு விலை விமான நிறுவனமான Jeju Air இன் Boeing 737-8AS, காலை 9 மணிக்கு (உள்ளூர் நேரம்) சிறிது நேரத்திற்குப் பிறகு, ஓடுபாதையை நெருங்கி, ஓடுபாதையின் பின்னால் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியது. தரையிறங்கும் கருவிகள் மடிக்கப்படவில்லை - பறவை தாக்கியதா? தென் கொரிய தொலைக்காட்சியில் காட்டப்பட்ட ஒரு வீடியோ, தரையிறங்கும் கியர் இல்லாமல் ஓடுபாதையில் சறுக்கிச் செல்வதைக் காட்டியது, பாதையின் முடிவில் விபத்துக்குள்ளானது மற்றும் தீப்பிடித்தது. யோன்ஹாப்பின் கூற்றுப்படி, தரையில் இருந்த பல நேரில் கண்ட சாட்சிகள் விசையாழிகளில் ஒன்றில் நெருப்பைக் கண்டதாகவும் பல இடி சத்தம் கேட்டதாகவும் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை, போயிங் 737-800 விமானத்தில் எந்தக் கோளாறும் ஏற்படவில்லை. ஊடக அறிக்கைகளின்படி, அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் விபத்துக்குப் பிறகு ஜெஜு ஏர் நிறுவனத்தைத் தொடர்புகொண்டது. அதிகாரிகளை மேற்கோள் காட்டி Yonhap அறிக்கை, ஒரு பறவை தாக்கியது, அதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பறவைகளுடன் மோதியதால், தரையிறங்கும் கருவி பழுதடைந்திருக்கலாம். அதன்படி, விமானிகள் தரையிறங்குவதற்கான முதல் முயற்சியை மேற்கொண்டனர், ஆனால் அதைக் கலைத்துவிட்டு பின்னர் கிராஷ் லேண்டிங்கிற்கு முயன்றனர். இருப்பினும், ஓடுபாதையின் முடிவை அடையும் முன், விமானத்தின் வேகத்தை அவர்களால் போதுமான அளவு குறைக்க முடியவில்லை. தென் கொரிய போக்குவரத்து அமைச்சகத்தின் கூற்றுப்படி, விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பு விமானத்தின் விமானிகளை பறவை தாக்கும் என்று கோபுரம் எச்சரித்தது. "ஒரு நிமிடம் கழித்து விமானி அவசர அழைப்பு விடுத்தார், ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு விமானம் விபத்துக்குள்ளானது," என்று கொரியா டைம்ஸ் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியது. இரண்டு பணியாளர்கள் உயிர் தப்பினர் தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள், விபத்து நடந்த இடத்தில் பெரிய, இருண்ட புகை மூட்டங்களைக் காட்டியது. பின்னர் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் அழிக்கப்பட்ட விமானத்திலிருந்து எரியும் சிதைவுகள் மற்றும் எரிந்த குப்பைகள் மற்றும் தீயணைப்புத் துறையின் தீயணைப்பு இயந்திரங்களைக் காட்டியது. விபத்து நடந்த இடத்தில் டஜன் கணக்கான மீட்புப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டனர், தீயை அணைத்து, உயிர் பிழைத்த பயணிகளை மீட்டனர். அதே நேரத்தில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கியது. https://www.faz.net/aktuell/gesellschaft/ungluecke/suedkorea-fast-180-tote-bei-flugzeugabsturz-in-muan-110200177.html
  14. டங்குவார் அறுந்து போவது என்றால் என்ன பொருள்? இரண்டையுமே அறிவோம். Tanga / Tonga என இந்தியில் அழைக்கப்படும் குதிரை வண்டியில் குதிரையை வண்டியுடன் பிணைக்க பயன் பட்ட தோல் வார் தான் (மாட்டுத் தோலால் ஆன பட்டையான கனமான பெல்ட் போன்ற ஒன்று) குதிரையின் முழு பலமும் இந்த டங்குவாரின் மூலமே வண்டிக்கு கிடைக்கும். வண்டியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு வளையங்களின் ஊடே இந்த டங்குவார் நுழைக்கப் பட்டு குதிரையின் உடலோடு சேர்த்து கட்டப்பட்டிருக்கும். மேற்கண்ட டோங்கா வண்டிகள் முகலாயர் காலத்தியவை. வண்டியோட்டி முன் புறம் பார்த்தபடி வண்டியோட்ட பயணிப்பவர்கள் பின்னோக்கி பார்த்தபடி அமர்ந்திருப்பர். பின்னர் ஆள வந்த ஆங்கில உயர் அலுவலர்களாலும் ஆங்கில மேட்டுக்குடி மக்களாலும் மிகுதியாக டோங்கா வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. முறையான சாலைகளே இல்லாத வழிகளில் இந்த டோங்காக்கள் பயணிக்கும். தொடர்ச்சியாக ஓரே நாளில் பல மணி நேரங்களுக்கும் தொடர்ந்து பல நாட்களுக்கும் குதிரை ஓடும் போது இரும்பு வளையங்களின் இடையே உராய்ந்து உராய்ந்து இந்த டங்கு வார் தேய்ந்து வலிமை இழந்து விடும்.‌ சில சமயங்களில் ஒரே பயணத்திலேயே இந்த டங்கு வார்கள் அறுந்து போகும்.. இதிலிருந்து அப்பயணத்தின் கடுமையை உணரலாம். சில கடும் பயண வழித்தடங்களை குறிப்பிட. "ஐயோ அந்த ஊருக்கு போகனுமா? டங்குவார் அறுந்துடுமே" என குறிப்பால் பயண கடுமையை குறித்துப் பேச... அதுவே, ஓர் செயலை செய்ய பெரும் துன்பப்படும் நிலைகள் ஏற்படுகையில் அக்கால கட்டத்தில் வண்டியோட்டிகள் பயன் படுத்திய இச்சொலவடை வழக்கு எல்லாவற்றுக்கும் பயன்படுத்தப்படலானது. காலணியின் டங்குவார் அறுந்து போவதும் பெரும் அலைச்சலையும் சரியாக நடக்க இயலாது சிரமமான நிலையையும் குறிக்கும். அதாவது ஒருவர், அவரது இயல்பு வாழ்க்கையில் பெரும் துயரங்களை பட்டால்தான் ஒரு சாதாரண வேலையையே முடிக்க முடியும் என்பதே. டங்குவார் அறுந்துடும் என்பதன் பொருள். நன்றி Quara
  15. 2024 : வென்றவை தோற்றவை – நிலாந்தன். இந்த ஆண்டின் தொடக்கத்திலும் முடிவிலும் நடந்த இரண்டு தேர்தல்கள் தமிழ் அரசியலின் சீரழிவை வெளியே கொண்டு வந்தன.இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தலானது தமிழ் அரசியலில் சீரழிவை குறிப்பாகத் தமிழரசுக் கட்சியின் சீரழிவை வெளியே கொண்டு வந்தது. இந்த ஆண்டின் இறுதியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்த் தேசிய அரசியலின் இயலாமையை வெளியே கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில், தமிழ்த் தேசியத் தரப்பின் பிரதிநிதித்துவம் மேலும் குறைந்திருக்கிறது. இந்த ஆண்டின் தொடக்கமே தேர்தல்தான். கட்சித் தலைவரை தேர்தல்மூலம் தெரிந்தெடுப்பது கட்சி ஜனநாயகத்தைச் செழிப்பாக்கும். எனினும் தமிழரசுக் கட்சி தன் தலைவரை தேர்தல்கள்மூலம் தெரிந்தெடுக்கும் ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருக்கவில்லை.அந்த அடிப்படையில் சுமந்திரன்தான் கட்சியின் தலைவராக வந்திருக்க வேண்டும்.ஏனென்றால் சம்பந்தர் அவரைத்தான் தன்னுடைய வாரிசாக வளர்த்தார்.ஆனால் சுமந்திரன் ஜனநாயக வழிமுறைமூலம் தன் பலத்தைக் காட்ட விரும்பினார்.எனினும் அது அவருடைய பலவீனத்தைத்தான் காட்டியது.அவர் தோற்கடிக்கப்பட்டார். அதன் விளைவாக கட்சி இப்பொழுது நீதிமன்றத்தில் நிற்கின்றது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த அந்த தேர்தல் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சியின் உட்பகையை வெளியே கொண்டு வந்தது. தமிழரசுக் கட்சி எந்தளவுக்குத் தூர்ந்து போய் உள்ளது என்பதனை அது வெளிப்படுத்தியது. அதேபோல இந்த ஆண்டின் இறுதியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல், தமிழ்த் தேசிய அரசியல் எந்தளவுக்குத் தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டியது. சுமந்திரன் தோற்கடிக்கப்பட்டதை;டக்ளஸ்,பிள்ளையான்,அங்கஜன் போன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டதை;தமிழரசு கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்ததை,வெற்றியாகக் காட்டமுடியும். ஆனால் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலில் ஆசனங்கள் குறைந்துவிட்டன.அது ஒப்பீட்டளவில் தோல்வி. தமிழ் மக்கள் நாடாளுமன்றத்தில் ஒரு தேசமாக, பலமாக இல்லை. இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம்.ஆண்டின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரையிலும் தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவை வெளிப்படுத்தும் இரண்டு தேர்தல் நடந்திருக்கின்றன.இந்த இரண்டு தேர்தல்களும் தமிழ் மக்கள் இன அழிப்புக்கு எதிராக நீதியை பெறத் தேவையான பலத்தை பெருக்கிக் கொள்ள முடியாதிருக்கிறார்கள் என்பதனை வெளியே கொண்டுவந்தன. எனினும் இந்த இரண்டு தேர்தல்களுக்கும் இடையில் ஒரு தேர்தல் வந்தது.அது ஜனாதிபதித் தேர்தல்.அதில் ஒரு தமிழ் பொது வேட்பாளர் முன்னிறுத்தப்பட்டார். அவருக்கு கிடைத்த வாக்குகள் ஏறக்குறைய 2,26,000.அது ஒரு அடிப்படை வெற்றி.கட்சிகளைக் கடந்து தமிழ்மக்களை ஒரு தேசமாகத் திரட்ட போகிறோம் என்று கூறி ஒரு மக்கள் அமைப்பு அந்தத் தேர்தலைக் கையாண்டது.ஏழு கட்சிகளை வைத்து கட்சிகளைக் கடந்த ஒரு வாக்குத் திரட்டியை ஏற்படுத்தலாம் என்று அந்த அமைப்புத் திட்டமிட்டது. அதற்கென்று ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பொதுக் கட்டமைப்புக்குள் கட்சிகளும் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் அடங்கியிருந்தனர். கட்சிகளைக கடந்து மக்களைத் திரட்டலாம் என்ற நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தின.இங்கு ஒரு உதாரணத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும்.தேர்தல் பரப்புரைக்காக பிரம்மாண்டமான கூட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட பொழுது,குடாநாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மக்களைக் கொண்டுவரும் பேருந்துகளுக்கு சிறிய தொகைப் பணம் வழங்கப்பட்டது. எரிபொருட் செலவு,சாரதி மற்றும் வழிநடத்தினருக்கான சிற்றுண்டி,தேனீர் செலவுகள். இவ்வாறு வலிகாமம் பகுதியில் இருந்து மக்களைக் கொண்டு வந்த ஒரு பேருந்து உரிமையாளரிடம் செலவுப் பணத்தை கொடுத்த பொழுது, அவர் அதை வாங்க மறுத்து விட்டார்.”15 ஆண்டுகளாக கட்சிகளுக்குத்தான் ஆட்களை ஏற்றி இறக்குகிறேன். இதுதான் முதல் தடவை இப்படி ஒரு கூட்டத்துக்கு ஆட்களைக் கொண்டு வருவது. வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களை இப்படி ஒன்றாக ஒரு கூட்டத்துக்கு அழைத்துக் கொண்டு வருவது என்பது புதியது. 2009க்கு முந்திய நினைவுகளை அது மீட்டியது. எனக்கு நீங்கள் விருப்பம் என்றால் எரிபொருள் செலவு மட்டும் தாருங்கள்” என்று கேட்டார். கட்சி கடந்து தமிழ் மக்களைத் திரட்டும்போது மக்கள் மத்தியில் எவ்வாறு எழுச்சி ஏற்பட்டது என்பதனை காட்டும் ஒரு உதாரணம் அது. அதுபோலவே ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தோடு மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச்சபை கிராமங்கள் தோறும் சிறிய மற்றும் பெரிய மக்கள் சந்திப்புகளை நடத்தியது.இந்த சந்திப்புகளில் 75 விகிதமானவற்றில் ஒரு விடயம் திரும்பத் திரும்ப மக்களால் கூறப்பட்டது. என்னவென்றால், “கட்சிகளோடு வராதீர்கள், மக்கள் அமைப்பாக வாருங்கள், கட்சிகள் வேண்டாம்” என்பதே அது. ஆனால் மக்கள் அமைப்பு தேர்தலை நேரடியாகக் கையாள விரும்பவில்லை. அதற்குரிய கட்டமைப்புப் பலமும் இருக்கவில்லை. எனவே கட்சிகளோடு இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கியது.அந்தப் பொதுக் கட்டமைப்பு தமிழ்த் தேசிய வரலாற்றில் ஒரு புதிய அனுபவம்.கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை எழுதிச் செயல்படுவது என்பது. ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவையும் அவ்வாறான ஓர் அனுபவந்தான். ஆனால் அங்கே புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதப்படவில்லை. தமிழ் மக்கள் பேரவை ஓய்ந்தபின் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு உருவாகியது. அது தேர்தலில் ஒரு ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி வெற்றியும் பெற்றது.கிழக்கிலிருந்து வந்த ஒரு வேட்பாளருக்கு வடக்கில் சுமார் ஒன்றரை லட்சம் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன. ஒரு பெரிய ஊடகத்தின் முதலாளி மக்கள் அமைப்பிடம் சொன்னார் “கிழக்கில் இருந்து கொண்டு வரும் ஒரு வேட்பாளருக்கு வடக்கில் வாக்களிப்பார்களா?” என்று. “ஒரு பத்தாயிரம் வாக்குகள் கிடைக்குமா” என்று கேட்டார்.ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட 20 மடங்கு வாக்குகள் கிடைத்தன. தமிழ்ப் பொது வேட்பாளர் கடந்த 15 ஆண்டு கால தேர்தல் அரசியலில் தமிழ் மக்களுக்கு ஒரு புது அனுபவம். தமிழ்ப் பொது வேட்பாளரை இந்தியாவின் புரஜக்ட் என்று கூறி நிராகரித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இப்பொழுது சிவில் சமூகங்கள் முன் கை எடுத்ததனால் உருவாகிய திரட்சி என்ற பொருள்பட அதை வியாக்கியானம் செய்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளை தேசியவாத வாக்குகள் என்று கஜேந்திரகுமார் கூறுகிறார்.அது காலத்தால் பிந்திய ஞானம்.கஜேந்திரக்குமாரை அந்த அணிக்குள் இணைப்பதற்கு தமிழ் மக்கள் பொதுச்சபை கடுமையாக உழைத்தது.ஆனால் கஜேந்திரன் ஒரு சந்திப்பின்போது சொன்னார் “இந்த விடயத்தில் நீங்கள் வென்றால் நாங்கள் எங்களிடம் இப்பொழுது இருக்கும் இரண்டு ஆசனங்களையும் இழந்து விடுவோம் என்பது எங்களுக்கு தெரியும்.அதைத் தெரிந்து கொண்டுதான் தாங்கள் பொது வேட்பாளரை எதிர்க்கிறோம்.” என்று. சிறீதரன் சொன்னார் “மக்களமைப்பு சுயேட்சையாக வேட்பாளர்களை இறக்கப் போவதாக எமது ஆதரவாளர்கள் கதைக்கிறார்கள்” என்று. ஒரு மூத்த அரசியல்வாதி மற்றொரு மூத்த அரசியல்வாதி மற்றொரு கட்சியின் தலைவரிடம் கூறினாராம் “இவங்கள் வெற்றி பெற்றால் நாங்கள் இல்லாமல் போய் விடுவோம்” என்று. சுமந்திரன் அதனை மூர்க்கமாக எதிர்த்தார். அதை ஒரு கேலிக் கூத்து என்று வர்ணித்தார். மக்கள் அமைப்பைக் கடுமையாக எச்சரித்தார். தமிழ்ப் பொது வேட்பாளருக்கு விழும் வாக்குகள் அனைத்தும் “வீணாய் போகும் வாக்குகள்” என்று எச்சரித்தார்.அதனை அவர் சஜித்தின் கூட்டத்தில் பேசும்போது சொன்னார். தமிழ் ஊடகங்களிலும் ஒரு பகுதி தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக இருந்தது. ஊடகவியலாளர்களில் சிறு பகுதியினர் எதிராக இருந்தார்கள். ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் முகநூலில் எழுதினார் “கட்டுரை எழுதுவது வேறு தேர்தலில் வேட்பாளர் நிறுத்தி வெல்வது வேறு இரண்டும் ஒன்று அல்ல” என்று. தமிழ் மக்கள் பொதுச்சபையைச் சேர்ந்த கருத்துருவாக்கிகளை சில ஊடகவியலாளர்களும் சில யூடியூப் வெறுப்பர்க்களும் எதிரியைவிடக் கேவலமாக சிறுமைப்படுத்தினார்கள். தமிழ்ப் பொது வேட்பாளரைக் கண்டு தமிழ் அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் பயந்தார்கள். பெரும்பாலான சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் பயந்தார்கள். அல்லது உஷார் அடைந்தார்கள். “நாடு முழுவதும் மாற்றத்துக்காக நிற்கும் பொழுது நீங்கள் மட்டும் அதற்கு எதிராக போகப் போகிறீர்களா” என்று அனுர கேட்டார்.தமிழ் பொது வேட்பாளரை உங்களால் நிறுத்த முடியாது. முடியுமானால் நிறுத்திக்காட்டுங்கள் என்று ரணில் விக்கிரமசிங்க விக்னேஸ்வரனிடம் சொன்னார்.”தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது பொதுவான பேரழிவு”என்று சஜித் எச்சரித்தார். ஆனால் எல்லாவிதமான எதிர்ப்புகளையும் தாண்டி தமிழ்ப் பொது வேட்பாளர் வடக்கையும் கிழக்கையும் இணைத்தார்.தமிழ் தேர்தல் வரலாற்றில் ஒரு தனி நபருக்கு கிடைத்த ஆகக்கூடிய வாக்குகளை அவர் வென்றார். எனினும் பொது வேட்பாளருக்கு கிடைத்த அடிப்படை வெற்றியை கொண்டாட முடியவில்லை. தேர்தல் முடிந்த சில நாட்களில் அடுத்த தேர்தல் அறிவிக்கப்பட்டது.அடுத்த தேர்தலை கையாள்வதற்கு மக்கள் அமைப்பு தயாராக இருக்கவில்லை. மக்கள் அமைப்புக்குள் இருவேறு கருத்துக்கள் கிளம்பின. அதனால் மக்கள் அமைப்புக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டன.மக்கள் அமைப்பு தேர்தலைக் கையாளாத ஒரு பின்னணியில்,வெற்றிபெற்ற சின்னத்தைத் தாங்கள் சுவிகரிப்பது என்று பொதுக் கட்டமைப்புக்கள் இருந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது. அது பொதுக் கட்டமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மாறானது.அதன் விளைவாக கட்சிகளுக்கும் மக்கள் அமைப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு சோதனைக்கு உள்ளாகியது. சங்குச் சின்னத்துக்கு ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வாக்குகள் நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கவில்லை.ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைக்கப்படாத கட்சிகள் மீண்டும் சிதறின. அதிகரித்த அளவில் சுயேச்சைகள் தோன்றின.தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குத் தண்டனையாக அமைந்தன. அரசாங்கத்துக்கும் தமிழரசுக் கட்சிக்கும் ஒரே அளவு ஆசனங்கள்.தமிழ்த் தேசிய ஆசனங்களின் மொத்த தொகை மேலும் வீழ்ச்சியடைந்தது. ஆனால் தமிழரசுக் கட்சி தனிக் கட்சியாக அதிக ஆசனங்களைப் பெற்றது. அந்த வெற்றியைக் கொண்டாட முடியாது. ஏனென்றால் தேசியவாத அரசியல் என்பது ஒரு மக்களை தேசமாகத் திரட்டுவது.ஆகப் பெரிய திரளாகத் திரட்டுவது. அவ்வாறு திரட்டப்படாத காரணத்தால்தான் இம்முறை தமிழ்த் தேசிய ஆசனங்களின் மொத்த தொகை குறைந்தது.தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில் தமிழரசுக் கட்சியும் உட்பட எல்லாக் கட்சிகளும் தோல்வியடைந்து விட்டன. எனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழரசு கட்சிக்குள் நடந்த தேர்தலும் ஆண்டின் முடிவிலும் நடந்த இரண்டு தேர்தல்களும் தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவுகளை வெளியே கொண்டுவந்தன.எனினும் செப்டம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டலாம் என்ற நம்பிக்கைகளைப் பலப்படுத்தியது. இந்த ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்த குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ஒரனுபவம் அது. கட்சிகளைக் கடந்து மக்களைத் திரட்டலாம் என்ற நம்பிக்கைகளை அது புதுப்பித்தது. அந்த அனுபவத்தின் தொடர்ச்சியாக உழைத்தால் மட்டும்தான் புதிய ஆண்டில் தமிழ் மக்கள் வெற்றி பெறலாம். https://athavannews.com/2024/1414409
  16. சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல் தொடர்பில் பணிப்புரை! போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல்,சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. அதற்காக, குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் ஆகிய மூன்று நிறுவனங்களிலும் இணை கமரா கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு நிலையத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆலோசனை வழங்கினார். அதேபோல், தற்போதுள்ள ஸ்கேன் இயந்திரங்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்கேன் இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த நிறுவனங்கள் ஊடாக நடக்கும் கடத்தல்களை தடுப்பதற்கு நடைமுறை சாத்தியமான புதிய செயல்முறையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், நாட்டு மக்கள் மத்தியில் சுஙகம் தொடர்பில் தற்போது காணப்படும் தவறான புரிதல்கள் களையப்பட வேண்டும் எனவும், அதற்காக கடுமையான ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது வலியுறுத்தினார். இதில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ், குடிவரவுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் (பதில்) பீ.எம்.டி. நிலுஷா பாலசூரிய, நிதி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (தேசிய வரவு செலவு) ஜூட் நிலுக் ஷான், விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் எயார் சீப் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1414404
  17. 181 பேருடன் சென்ற தாய்லாந்து விமானம் விபத்து! 181 பேருடன் சென்ற விமானம் தென் கொரியாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி விமான நிலைய சுவரில் மோதியதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. விபத்தின் போது, பயணிகள் விமானத்தில் 175 பயணிகளும், 6 விமான பணிப்பெண்களும் இருந்துள்ளனர். தாய்லாந்தின் இருந்து புறப்பட்ட விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இதேவேளை மீட்புப் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக கொரிய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1414412
  18. //👆👍 இதுதான் உண்மை. நாளைக்கு சுமன் இவருக்கு (சி.வி.கே.சிவஞானம்) பதவி தர ஒத்து கொண்டால் இந்த மனிசன் வாலை ஆட்டி கொண்டு அவர் பின்னால் ஓடும்.// கடந்த வியாழக்கிழமை @goshan_che தெரிவித்த கருத்து, இன்று பலித்து விட்டது. 😂
  19. அணிலின் முதுகில் முன்பு கோடுகள் இருக்கவில்லை. ராமர் பாலம் கட்டும் போது... அணிலும் உதவி செய்ததை பார்த்து, ராமர் அந்த அணிலை அன்புடன் முதுகில் தடவிக் கொடுக்கும் போது. ராமரின் மூன்று விரல்கள் அந்த அணிலின் முதுகில் பதிந்து விட்டது. இப்போ நீங்கள் பார்க்கும் அணில்கள் எல்லாம், ராமர் தடவிய அணிலின் வாரிசுகளே. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.