Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. யாழில் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஐ.நாவுக்கான அறிக்கை தீ வைப்பு! செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி நடத்தப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று நிறைவுக்கு வந்தது. இறுதி நாளான இன்று சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பாரிய தீப்பந்தப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 25ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது. வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்ககள், சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம், படுகொலை செய்யப்பட்ட பாலச்சந்திரனுக்கு நீதி வேண்டும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் உள்ளிட்ட கோசங்களை எழுப்பியிருந்தனர். இப்போராட்டத்தில் அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டு அந்த அறிக்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கபபடவுள்ள அதேவேளை, இலங்கை அரசாங்கத்தினைக் காப்பாற்றும் வகையில் ஐ.நா வினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் மூலம் தமிழர்களுக்கு எந்த நீதியும் வழங்கப்படப்போவதில்லை எனும் அடிப்படையில் குறித்த அறிக்கை போராட்டக்காரர்களால் தீ வைத்துக் கொழுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1449225
  2. அமெரிக்காவுடன் இணையுமாறு கனடாவுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கும் ட்ரம்ப்! கனடா பிரதமர் பதவியில் இருந்து ஜஸ்டின் ட்ரூடோ இராஜினாமா செய்து பதவி விலகிய போது அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா ஏன் மாறக்கூடாது என ட்ரம்ப் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் கனடா பிரதமர் பதவி விலகல் குறித்து கருத்து பதிவிட்ட ட்ரம்ப், கனடாவில் உள்ள பலர் தங்கள் நாடு அமெரிக்காவின் 51வது மாகாணமாக இருப்பதை விரும்புகிறார்கள். கனடா அமெரிக்காவின் தயவில்தான் இருக்கிறது. நாம் அவர்களுக்கு நிதி உதவி கொடுக்கிறோம். நிறைய சலுகைகள் கொடுக்கிறோம். ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்பு தருகிறோம்.இனி அப்படி எல்லாம் வழங்க முடியாது. ஜஸ்டின் ட்ரூடோ இதை அறிந்திருந்தார், ராஜினாமா செய்தார். கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரிகள் இருக்காது, வரிகள் வெகுவாகக் குறையும், மேலும் அவர்களைச் சுற்றி தொடர்ந்து இருக்கும் ரஷிய மற்றும் சீனக் கப்பல்களின் அச்சுறுத்தலிலிருந்து அவர்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பார்கள். ஒன்றாகச் சேர்ந்தால், அது எவ்வளவு சிறந்த தேசமாக இருக்கும்” என்று பதிவிட்டார். ட்ரம்பின் இக் கருத்துக்கு கனடா அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், நீங்கள் ஏன் அமெரிக்காவுடன் இணையக்கூடாது என்று கனடாவுக்கு ட்ரம்ப் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய டிரம்ப், “அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக கனடா இணைந்தால், Golden Dome எனும் வான் பாதுகாப்பு திட்டம் கனடாவுக்கு இலவசமாகவே கிடைக்கும்” எனத் தெரிவித்தார். குறித்த கருத்தானது தற்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1449238
  3. ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார் ஜனாதிபதி! ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) பேரரசர் மாளிகையில் ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார். டொகியோவில் உள்ள ஜப்பான் பேரரசரின் உத்தியோகபூர்வ இல்லமான பேரரசர் மாளிகைக்கு வருகை தந்த ஜனாதிபதியை, பேரரசர் அமோகமாக வரவேற்றதுடன், சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1449151
  4. செனட் வாக்கெடுப்பு தோல்வி; முடக்கத்தை எதிர்கொள்ளும் அமெரிக்க அரசாங்கம்! செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு செனட் இடைநிறுத்த நிதி சட்டமூலத்தை அங்கீகரிக்கத் தவறியதை அடுத்து, அமெரிக்கா கூட்டாட்சி அரசாங்க முடக்கத்தை நோக்கிச் சென்றது. அதே நேரத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூட்டாட்சி ஊழியர்களின் புதிய பணிநீக்கங்களை அச்சுறுத்துவதன் மூலம் பதற்றங்களை அதிகரித்தார். செனட் ஜனநாயகக் கட்சியினர், அரசாங்கத்திற்கு நிதியுதவி அளிக்கும் குடியரசுக் கட்சி சட்டமூலத்தை நிராகரித்து. கூட்டாட்சி நிதியுதவியை ஏழு வாரங்களுக்கு நீட்டிப்பதற்கான சட்டமூலத்தின் மீதான 55-45 வாக்குகள் சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் தேவையான 60 வாக்குகளை விட குறைவாக இருந்தது. சட்டமியற்றுபவர்கள் வருடாந்திர செலவின சட்டமூலங்களில் தங்கள் பணிகளை முடிக்கும் வரை, கூட்டாட்சி நிதியை ஏழு வாரங்களுக்கு நீட்டிக்கும் நடவடிக்கையை செனட் நிறைவேற்றவில்லை என்றால், அரசாங்க செலவினம் புதன்கிழமை (01) அதிகாலை 12.01 மணிக்கு காலாவதியாகிவிடும். இது கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளில் முதல் அமெரிக்க பணிநிறுத்தத்தைத் தூண்டும். குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் தற்போது சுகாதாரச் செலவுகள் தொடர்பாக ஒரு பக்கச்சார்பான மோதலில் ஈடுபட்டுள்ளனர். இது உடனடி பணிநிறுத்தத்தைத் தூண்டுகிறது, இது தேசிய சேவைகளை சீர்குலைத்து, கூட்டாட்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்யக்கூடும். இது அமெரிக்க பொருளாதாரத்தில் முக்கியமான தரவுகளின் ஓட்டத்தை எதிர்மறையாக பாதிக்கும். நள்ளிரவில் அரசாங்க நிதி காலாவதியான பின்னர், வெள்ளை மாளிகை பட்ஜெட் அலுவலகம் ஒரு ஆணையை வெளியிடும், இது முறையான பணிநிறுத்தத்தைத் தூண்டும். இதன் மூலம், இராணுவப் படைகள் உட்பட அத்தியாவசிய ஊழியர்கள் ஊதியமின்றி வேலை செய்வார்கள். மேலும் அத்தியாவசியமற்ற ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிரந்தர பணிநீக்கங்களை முடிவு செய்யாவிட்டாலும், 750,000 கூட்டாட்சி ஊழியர்கள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என்று காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ட்ரம்ப் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஒரு ஒப்பந்தத்தை நோக்கியோ அல்லது முகத்தை காப்பாற்றும் ஒரு வழியை நோக்கியோ பணியாற்றத் தயாராக இல்லை என்று ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. மாறாக, பணிநிறுத்தம் நடந்தால் அவரது நிர்வாகம் “நிறைய” கூட்டாட்சி தொழிலாளர்களை விடுவித்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்தார். https://athavannews.com/2025/1449145
  5. பிலிப்பைன்ஸை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 27 பேர் உயிரிழப்பு! மத்திய பிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், இடிந்து வீழ்ந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருவதனால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் அஞ்சுகின்றனர். பிலிப்பைன்ஸின் மத்திய விசாயாஸ் பகுதியில் உள்ள செபு மாகாணத்தில் உள்ள போகோ நகரின் கடற்கரையில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு 10 மணிக்கு (1400 GMT) முன்னதாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மின்சாரம் தடைப்பட்டதுடன்,100 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு தேவாலயம் உட்பட கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன. பிலிப்பைன்ஸின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான செபு மாகாணத்தில் 3.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். நாட்டின் இரண்டாவது பரபரப்பான நுழைவாயிலான மக்டன்-செபு சர்வதேச விமான நிலையம் செயல்பாட்டில் உள்ளது. சான் ரெமிஜியோ உட்பட வடக்கு செபுவில் இந்த நிலநடுக்கம் கடுமையாக தாக்கியது. அண்டை நகரமான போகோவில், நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில், மருத்துவமனை நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர் மற்றும் வலுவான பின் அதிர்வுகள் பல குடியிருப்பாளர்களை வெளியேற்றும் மையங்களிலும் தெருக்களிலும் தஞ்சம்புகுர கட்டாயப்படுத்தியது. நிலநடுக்க கண்காணிப்பு முகமைகள் நிலநடுக்கத்தின் ஆழத்தை சுமார் 10 கிமீ (6.2 மைல்) வரை வைத்து பல பின்அதிர்வுகளை பதிவு செய்தன, இது 6 ரிக்டர் அளவில் வலுவானது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை. பிலிப்பைன்ஸ் பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” பகுதியில் உள்ளது. அங்கு எரிமலை செயல்பாடு மற்றும் பூகம்பங்கள் பொதுவானவை. ஜனவரியில் நாட்டில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. எனினும், எந்த உயிரிழப்பும் இல்லை. 2023 இல், 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் எட்டு பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1449136
  6. எத்தனை எத்தனை கனவுகளுடன்… அவரும், அவரின் பெற்றோரும் இருந்திருப்பார்கள். எல்லாம் மீள முடியாத துக்கத்தில் கொண்டு வந்து விட்டது. மனதை மிகவும் பாதித்த இழப்பு. 🥲
  7. பெற்றோருக்கு ஒரேயொரு பிள்ளையாக வளர்ந்து, உயர்தர தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று... பெற்றோருக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்த பரமேஸ்வரன் பாணுசனின் வாழ்க்கை, சுகயீனத்தால் பாதியில் முடித்துக் கொண்டமை பெரும் சோகம். அவரின் ஆத்மா சாந்தியடையவும், பெற்றோர் இந்த இழப்பிலிருந்து விரைவில் மீண்டு வரவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
  8. அர்ச்சுனா ராஜபக்ச. 😂 அர்ச்சுனா ராமநாதனை பிணை எடுக்க, நாமல் ராஜபக்சவுடன்... மகிந்த கட்சியின் வக்கீல்கள்தான் சென்றவர்களாம் என்று, மேலுள்ள படத்தைப் போட்டு... அர்ச்சுனா ராஜபக்ச என்று இணையத்தில் கலாய்க்கிறார்கள். 🤣
  9. 1974 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஓர் இனத்தின் தனித்துவத்தை எடுத்துக் கூறுவதில் கல்விச்சாலைகள், உயர்கல்வி நிறுவனங்கள் காத்திரமான வகிபங்கை ஆற்றுகின்றன. அந்தவகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் எம் தமிழினத்தின் ஒரு பெரும் கல்விச் சொத்து தமிழ் மாணவர்களுக்காக ஆரம்பிக்கப் பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்று இனத்துவத்தை இழந்து நிற்கிறது. பரவாயில்லை. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையால் என்ற அடிப்படையில் அதனை ஏற்றுத்தானாக வேண்டும். எனினும் எங்கள் தமிழ் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கான சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்தவர்கள் நம்மவர்களேயன்றி, சிங்களவர்கள் அல்ல என்ற உண்மை யாழ்.பல்கலைக்கழக நுழைவாயிலில் எழுதப்பட வேண்டும். இஃது ஒருபுறமிருக்க, இப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்பகதரு போல பேராசிரியர்கள் குவிந்த வண்ணமுள்ளனர். முன்பெல்லாம் வருடக்கணக்காகிய பேராசிரியர் பதவிகள் இப்போது நாளொறும் அறிவிக்கப்படுகின்றன. பரவாயில்லை. எங்கள் விரிவுரையாளர்களின் கல்வித் தரம் மற்றும் பட்டப்பின் படிப்புகள் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிலான கற்றல்கள் என்பன வேகமாகும்போது, அவர்கள் பேராசிரியர் பதவிக்குரிய தகைமையைப் பெற்றுக் கொள்கின்றனர். இது உண்மையில் வரவேற்கப்பட வேண்டும். அதிலும் மிகக் குறைந்த வயதில் பேராசிரியர் பதவியைப் பெறுவதென்பது எங்களின் கல்வித் தகைமைக்கான சான்றாக அமையும். அதேநேரம் மாணவர்களின் கல்விக்கும் அது ஊக்க சக்தியாக இருக்கும் என்பதால், பேராசிரியர் பதவிகளைப் பெற்ற அத்தனை பேரையும் பாராட்டி வாழ்த்துகின்றோம். அதேநேரம் பேராசிரியர்களால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நிரம்பி வழிகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தடக்கி விழுந்தாலும் அது ஒரு பேராசிரியர் மீது விழுவதாகவே இருக்கும். நிலைமை இதுவாயின், எங்கள் தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எங்கள் இளைஞர்களின் வேலைவாய்ப்பில் - எங்கள் தமிழர் தாயகத்தின் அபிவிருத்தியில் - எங்கள் மருத்துவத் துறையில் - ஆய்வுத் துறையில் பின்தங்கி வாழுகின்ற எம் மக்களின் உயர்வில் பேராசிரியர்களின் பங்கும் பணியும் எவ்வாறாக உள்ளன என்ற கேள்வி எழுவதில் நியாயம் இருக்கவே செய்யும். ஆம், நாளுக்கு நாள் பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றதாயினும் எம் மக்களின் வாழ்க்கைத்தரம் இன்னமும் ஏற்ற முறாமல் இருக்கிறதெனில், பேராசிரியர்களின் பணிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்ற எல்லைக்குள் இருக்கக்கூடிய விரிவுரை மண்டபங்களுடன் மட்டுப்படுத்தப் பட்டுள்ளனவா? என்ற ஐயம் எழவே செய்யும். எனவே மேன்மைக்குரிய பேராசிரியப் பெருமக்களே! உங்களின் வாண்மை, உங்களின் ஆய்வுப்புலம் எங்கள் மக்களின் வாழ்வை உன்னதமாக்குவதிலும் கணிசமாகப் பயன்படட்டும் என்பதுதான் உங்களை நோக்கிய எங்களின் தாழ்மையான கோரிக்கை. ஆசிரியர் வலம்புரி பத்திரிகை - 29.09.2025 Babu Babugi
  10. ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ஐ.சி.யு வார்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட படுக்கையில் மட்டும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையிலும் சரியாக 11மணிக்கு அந்த படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிகள் இறந்து போகிறார்கள். இது அந்த ஆஸ்பித்திரியில் இருக்கும் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் அளித்தது. பல நாடுகளிலிருந்து மிக சிறந்த மருத்துவர்களும் வந்து பார்த்துவிட்டு இறப்புகளுக்கு காரணம் தெரியாமல் குழம்பினர். மீண்டும் ஒரு ஞாயிற்று கிழமையில் என்ன தான் நடக்கிறது என்று பார்க்க மிக பெரிய மருத்துவ குழு ஒன்று 11மணிக்கு முன்னால் அந்த குறிப்பிட்ட படுக்கையை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். என்ன ஆக போகிறதோ என்று அன்னைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்க..... திடீரென உள்ளே நுழைந்தாள் ஞாயிற்று கிழமையில் மட்டும் பகுதி நேரமாக கூட்டி, பெருக்கும் வேலை செய்யும் முனியம்மா... வந்தவுடனையே நோயாளியின் ஆக்சிஜன் சப்ளை இயந்திரத்தின் PLUG கை பிடுங்கிவிட்டு, தனது செல் போனை சார்ஜில் போட்டுவிட்டு கடமையே கண்ணாக அந்த அறையை பெருக்க ஆரம்பித்தாள். 😂
  11. தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா! ஆசிய வர்த்தகத்தில் தங்கத்தின் விலையானது செவ்வாய்க்கிழமை (30) புதிய சாதனை உச்சத்தை எட்டியது. அமெரிக்க அரசாங்க முடக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் மற்றும் அமெரிக்க வட்டி விகிதக் குறைப்புகளின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகள் பாதுகாப்பான புகலிட உலோகத்திற்கான தேவையை அதிகரித்தன. அதன்படி, ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 3,865.73 அமெரிக்க டொலர்கள் என்ற உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில் தங்க எதிர்காலம் ஒரு அவுன்ஸ் 3.893.72 அமெரிக்க டொலர்கள் என்ற உச்சத்தை எட்டியது. மூன்றாம் காலாண்டில் மஞ்சள் உலோகத்தின் வி‍லை சுமார் 17% சதவீதமாக உயர்ந்துள்ளது. ஏனெனில் பல காரணிகள் மஞ்சள் உலோகத்தின் விலை உயர்வுக்கு செல்வாக்கு செலுத்துகின்றன. அமெரிக்க சட்டமியற்றுபவர்கள் அரசாங்க முடக்கத்தைத் தவிர்க்க முடியாது என்ற நம்பிக்கை அதிகரித்து வரும் நிலையில், தங்கத்திற்கான தேவை இந்த வாரம் அதிகரித்துள்ளது. செலவு சட்டமூல நிறைவேற்றவும் நூற்றுக்கணக்கான கூட்டாட்சி நிறுவனங்கள் மூடப்படுவதைத் தவிர்க்கவும் செப்டம்பர் 30 (புதன்கிழமை 0400 GMT) நள்ளிரவு வரை காங்கிரஸ் அவகாசம் அளித்துள்ளது. குடியரசுக் கட்சி ஆதரவுடன் கூடிய செலவு சட்டமூலம் அண்மையில் பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது. ஆனால் இப்போது செனட்டில் எதிர்ப்பை எதிர்கொள்கிறது. குடியரசுக் கட்சியினர் செனட்டில் 53 இடங்களைக் கொண்ட பெரும்பான்மையைக் கொண்டுள்ளனர். ஆனால் செலவு சட்டமூலத்தை அங்கீகரிக்க குறைந்தது 60 வாக்குகள் தேவை. சுகாதாரச் செலவுகள் மற்றும் சமூக நலத் திட்டங்கள் குறித்த கருத்து வேறுபாடுகளை மையமாகக் கொண்ட அரசியல் முட்டுக்கட்டையை உடைக்க திங்களன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இரு கட்சிகளும் நடத்திய பேச்சுவார்த்தைகள் சிறிதும் முன்னேற்றமில்லை என்று தெரிகிறது. அரசாங்க முடக்கம் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை சீர்குலைக்கும், இது வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். முடக்கம் ஏற்பட்டால் ஆயிரக்கணக்கான அரசு வேலைகள் பறிக்கப்படலாம் என்றும் வெள்ளை மாளிகை எச்சரித்தது – இது தொழிலாளர் சந்தையில் மேலும் பலவீனத்தை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலை. இலங்கை விலை விபரம்; கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 306,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 282,000 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1449028
  12. இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லை!-அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம். இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் நிலைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பான அறிக்கையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லாமையினால் நிறுவன ஊழல் தொடர்ந்து நிலவுவதாகவும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தனது 2025 முதலீட்டு சூழல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. புதிய நிர்வாகத்தின் கீழ் உயர் மட்ட அரசியல் லஞ்சக் கோரிக்கைகள் குறைவடைந்துள்ள போதிலும் சலுகை பெற்ற குழுக்களால் பாதுகாக்கப்படும் துறைகளில் ஊழல் நீடிப்பதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேவையற்ற விதிமுறைகள், சட்ட நிச்சயமின்மை, அதிகாரிகளின் பலவீனங்கள் முதலீட்டாளர்களுக்கு சவாலாக உள்ளதாகவும்; குறிப்பிடப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சிரேஷ்ட அரச அதிகாரிகள் தனியார்துறை தலைமையிலான பொருளாதார வளர்ச்சியை விமர்சித்துவருவதுடன் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை ஊக்குவிக்கும் நிலைப்பாட்டையும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் உட்கட்டமைப்பு துறைகளில் முன்னணி உலகளாவிய நிறுவுனங்கள் பெரும்பாலும் இல்லை என்பதனையும் தெரிவித்துள்ளது சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு உத்தரவாதங்களை வழங்கியிருந்தாலும், ஆரம்பகாலம் முதல் உள்ள இந்த அரசாங்கத்தின் மேற்குலக எதிர்ப்பு மற்றும் மார்க்சிச சித்தாந்தங்கள் காரணமாக பல முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வது குறித்து சந்தேகம் கொண்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் 400 மில்லியன் டொலர் பெறுமதியிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திலிருந்து இந்திய அதானி கிரீன் எனர்ஜி விலகியதனையும் மேற்கோள்காட்டி குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. பலவீனமாக அதிகாரிகள் நிச்சயமற்றதன்மை தேவையற்ற விதிமுறைகள் ஆகியன இலங்கையில் முதலீடு செய்வதற்கான ஏனைய சவால்களாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஊழலை ஒழிப்பதற்கும் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி பகிரங்கமாக உறுதியளித்துள்ளதாகவும் உயர்மட்ட அரசியல் லஞ்சம் குறைவடைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1449036
  13. லண்டனிலுள்ள மகாத்மா காந்தி சிலை சேதம்; இந்தியா கடும் கண்டனம்! ஒக்டோபர் 2 ஆம் திகதி ஆண்டுதோறும் நடைபெறும் காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு, லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு இங்கிலாந்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடரபில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, லண்டனில் உள்ள டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய வெட்கக்கேடான செயலுக்கு வருத்தத்தையும், கடுமையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம். இது வெறும் நாசவேலை மட்டுமல்ல, சர்வதேச அகிம்சை தினத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அகிம்சை என்ற கருத்து மற்றும் மகாத்மாவின் மரபு மீதான வன்முறைத் தாக்குதலாகும். இதற்கான உடனடி நடவடிக்கையை நாங்கள் உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். மேலும் எங்கள் குழு ஏற்கனவே சம்பவ இடத்தில் உள்ளது. சிலையை அதன் அசல் வடிவமைப்புடன் மீட்டெடுக்க அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம் – என்று அது கூறியது. ஐக்கிய நாடுகள் சபையால் சர்வதேச அகிம்சை தினமாக நியமிக்கப்பட்ட காந்தி ஜெயந்தி, ஆண்டுதோறும் ஒக்டோபர் 2 ஆம் திகதியன்று லண்டனில் உள்ள நினைவுச்சின்னத்தில் மலர் அஞ்சலி மற்றும் காந்திஜியின் விருப்பமான பாடல்களுடன் நினைவுகூரப்படுகிறது. இந்தியா லீக்கின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட வெண்கலச் சிலை, அருகிலுள்ள லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் மகாத்மா காந்தி சட்ட மாணவராக இருந்த நாட்களைக் குறிக்கும் வகையில் 1968 ஆம் ஆண்டு சதுக்கத்தில் திறக்கப்பட்டது. இந்த நிலையில் லண்டன் பெருநகர காவல்துறை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் நாசவேலை குறித்த விசாரணை மேற்கொண்டு வருகின்றது. https://athavannews.com/2025/1449019
  14. குமாரசாமி அண்ணை, கூட்டமாக… காட்டுப் பன்றிகள் போல் வரும் குரங்குகளுக்கு, மாங்காய் + மிளகாய்த் தூளை கலந்து வைத்தால்…. அதனை சாப்பிட்ட குரங்குகள் மட்டும் மீண்டும் அந்தத் தோட்டத்திற்கு வர மாட்டுதா அல்லது அதனை சாப்பிடாத குரங்குகளும் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்காதா. ஏனென்றால்…. அது உறைக்கும் என்று, தன்னுடைய கூட்டத்திற்கு தனது மொழியில் சொல்லியிருக்கக் கூடிய உணர்வு இருக்கலாமோ என நினைக்கின்றேன். 🙂
  15. இணையவன்…. அந்தச் செய்தியை நான் பார்த்த போது, எனது பார்வையில் உண்மை போலிருந்ததால் இணைத்தேன். அதற்குக் கீழ் அந்தச் செய்தியை இணைத்தவரின் பெயரையும் போட்டே இருந்தேன். நிச்சயமாக அது பொய்ச் செய்தி என்று தெரிந்து கொண்டு நான் இணைக்கவில்லை. இப்போது அது பொய்ச் செய்தி என்று தெரிந்த படியால்…. அதனை நீக்கி விடுங்கள். இந்த சோகமான திரியில்… தேவையில்லாத விவாதங்களை தவிர்ப்போம். நன்றி.
  16. விபத்து ஏற்பட்டவுடன்… அந்த வீதியால் சென்றவர்கள், தமது வாகனத்தில் உடனடியாக அந்தச் சிறுமியை வைத்தியசாலையில் சேர்த்திருந்தால்… 5 வயது சிறுமியின் உயிர் காப்பாற்றப் பட்டிருக்கலாம். ஆபத்தில் உதவுவதற்கு கூட… மனித நேயம் அற்ற இனமாக மாறி விட்டோம். சிறுமிக்கு கண்ணீர் அஞ்சலிகள்.
  17. பத்தையாக கிடந்த காணியை… துப்பரவு செய்து தந்த அதிரடிப் படையினருக்கு கோடானு கோடி நன்றி. 😂 - இங்ஙனம், காணி உரிமையாளர். - 🤣
  18. கரூர் படுகொலையை பின்புறமாக இருந்து செயல்படுத்தியவர்களின் முகம் தெரிகிறது. நன்கு திட்டமிடல் இருக்கும் போல. எல்லாத்தையும் மறச்ச நீ கொண்டைய மறைக்கலயே என்கிற கதையா சம்பவத்திற்கு பிறகு நடக்கிற ஒவ்வொரு நாடகங்களும் சந்தேகத்தை மேலும் மேலும் உறுஜிதப்படுத்துகிறது. புரிஞ்சவன் பிஸ்தா குகன் அருமைநாட்டார்
  19. அர்ச்சுனா எம்.பிக்கு பிணை! கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது. இன்று காலை அவர் வாக்குமூலம் அளிக்க கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார். அண்மையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற போராட்டத்தின் போது வந்த நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு பொலிஸ் அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். Athavan Newsஅர்ச்சுனா எம்.பிக்கு பிணை!கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது. இன்று காலை அவர் வாக்குமூலம் அளிக்க கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வந்தபோது கை
  20. பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது! யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1448885

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.