Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. அத்துமீறிய மீன்பிடி; 47 இந்திய மீனவர்கள் கைது! இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது மீன்பிடி நடவடிக்கைக்காக மீனவர்கள் பயன்படுத்திய 5 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீன்வள அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. https://athavannews.com/2025/1449938
  2. காசா போர் நிறுத்தம், பணயக்கைதிகளை திருப்பி அனுப்ப இஸ்ரேலும் ஹமாஸும் உடன்பாடு. 67,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று மத்திய கிழக்கை மறுவடிவமைத்த காசாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைதித் திட்டத்தின் முதல் கட்டமான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டன. காசா மீதான இஸ்ரேலின் பேரழிவுகரமான தாக்குதலைத் தூண்டிய ஹமாஸ் போராளிகளின் எல்லை தாண்டிய தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளுக்கு ஒரு நாள் கழித்து, எகிப்தில் நடந்த மறைமுகப் பேச்சுவார்த்தைகள், பாலஸ்தீனப் பகுதியில் அமைதியைக் கொண்டுவருவதற்கான ட்ரம்பின் 20-அம்ச கட்டமைப்பின் ஆரம்ப கட்டத்தில் ஒரு உடன்பாட்டை எட்டின. இந்த ஒப்பந்தம் முழுமையாக செயல்படுத்தப்பட்டால், பிராந்திய மோதலாக உருவெடுத்த போரை நிறுத்துவதற்கான முந்தைய எந்த முயற்சியையும் விட இரு தரப்பினரும் நெருக்கமாக அமைதிருக்குத் திரும்புவார்கள். இந்த ஒப்பந்தம் பற்றிய செய்தி இஸ்ரேல், காசா மற்றும் அதற்கு அப்பால் கொண்டாட்டங்களைத் தூண்டியது. இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பங்கள் பட்டாசுகளை வெடித்தன, பாலஸ்தீனியர்கள் இரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நம்பிக்கையில் கைதட்டி ஆரவாரம் செய்தனர். எனினும், புதன்கிழமை (08) தாமதமாக ட்ரம்ப் அறிவித்த ஒப்பந்தம் விவரங்கள் குறைவாகவே இருந்தது. மேலும் முந்தைய அமைதி முயற்சிகளில் நடந்தது போல, அதன் சரிவுக்கு வழிவகுக்கும் பல தீர்க்கப்படாத கேள்விகளை விட்டுச் சென்றது. இந்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிப்பது குடியரசுக் கட்சி ஜனாதிபதிக்கு ஒரு குறிப்பிடத்தக்க வெளியுறவுக் கொள்கை சாதனையாக இருக்கும். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை (09) தனது அரசாங்கத்தை கூட்டி இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதாகக் கூறினார். திட்டத்தின் முதல் கட்ட ஒப்புதலுடன், எங்கள் அனைத்து பணயக்கைதிகளும் நாட்டிற்கு கொண்டு வரப்படுவார்கள் என்றதுடன், இது இஸ்ரேல் அரசுக்கு ஒரு இராஜதந்திர வெற்றி என்றார். அதேநேரம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாட்டை எட்டியதாக ஹமாஸ் உறுதிப்படுத்தியது, இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலியர்கள் அப்பகுதியிலிருந்து வெளியேறுவது மற்றும் பணயக்கைதிகள்-கைதிகள் பரிமாற்றம் ஆகியவை அடங்கும் என்று கூறியது. 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் எல்லை தாண்டிய தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவ பதிலடி கொடுக்கத் தொடங்கியதிலிருந்து 67,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான பகுதி தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் காசா அதிகாரிகள் கூறுகின்றனர். சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் காசாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 48 பணயக்கைதிகளில் 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. எவ்வாறெனினும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நம்பிக்கைகள் எழுந்துள்ள போதிலும், நேரம், காசா பகுதிக்கான போருக்குப் பிந்தைய நிர்வாகம் மற்றும் ஹமாஸின் தலைவிதி உள்ளிட்ட முக்கியமான விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. https://athavannews.com/2025/1449915
  3. தீபாவளி தினத்தை விடுமுறை தினமாக கலிபோர்னியா அறிவிப்பு! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம் விடுமுறை பட்டியலில் சேர்க்கப்படுவதாக கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூஸம் அறிவித்துள்ளார். சட்டமசோதா மூலம் உத்தியாகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தீபாவளி தினத்தன்று கலிபோர்னியா மாகாணத்தில் பாடசாலைகளுக்கு பொதுவிடுமுறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அன்றையதினம் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன்கூடிய விடுமுறை வழங்கப்படும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தீபாவளி பண்டிகையை, விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்த அமெரிக்காவின் மூன்றாவது மாகாணமாகும். ஏற்கனவே 2024 இல் பென்சில்வேனியாவும், 2025 இல் கனெக்டிகட் மாகாணங்கள் தீபாவளியை அரசு விடுமுறையாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்திருந்தன. இந்த விடுமுறை மூலம் அரசு பொதுக் கல்லூரிகள், பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் விடுமுறை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் கலிபோர்னியாவின் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும் தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவிக்கும் ‘ஏபி 268’ என்ற சட்டமூலம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் ஆளுநர் கவின் நியூசம் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தீபாவளியை அதிகாரபூர்வ விடுமுறையாக அறிவிக்கும் ‘ஏபி 268’ என்ற சட்டமூலத்துக்கு கவின் நியூசம் ஒப்புதல் அளித்துக் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி இனி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தீபாவளி தினம் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1449893
  4. வலிந்து காணாமல் போனோர் விசாரணை; இலங்கை தொடர்பில் ஐ.நா. குழு கவலை! காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை கையாள்வதில் இலங்கையின் முன்னேற்றம் இல்லாதது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் குழு கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் காணாமல் போனோர் அலுவலகத்தின் (OMP) செயல்திறனும் இதில் அடங்கும். குறித்த அலுவலகம் காணாமல் போனோர் தொடர்பான 17,000 முறைப்பாடுகளில் ஒரு பகுதியை மட்டுமே கண்டறிந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் குழு சுட்டிக்காட்டியுள்ளது. செவ்வாய்க்கிழமை (07) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் குழு (UNCED), கட்டாயமாக காணாமல் போனதாகக் கூறப்படும் விசாரணை, வழக்குத் தொடுப்பதில் முன்னேற்றம் இல்லாதது அதிக அளவிலான தண்டனை விலக்கு செயல் என்றும் குறிப்பிட்டது. இலங்கை மீதான மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) அதிகாரத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு (UNHRC) திங்களன்று நிறைவேற்றிய ஒரு நாளுக்குப் பின்னர் UNCEDவின் இந்த அறிக்கை வந்துள்ளது. https://athavannews.com/2025/1449855
  5. பல விஷயங்களை தொட்டுச் சென்ற பதிவு. உண்மையில் தமிழ் மக்கள் சித்திக்க வேண்டிய கால கட்டம் இது. இதுவரை செய்த தவறுகளை இனி செய்யாமல் இருந்தால்.... மீட்சி உண்டு. இல்லையேல், தந்தை செல்வா சொன்ன மாதிரி... தமிழ் மக்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். அந்த கடைசிப் பந்தி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. "தொப்பி" அளவானவர்கள் போட்டுக் கொள்ளலாம்.
  6. வடக்கில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது! யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இளைஞன் கஜேந்திரா வாள் உள்ளிட்ட மூன்று வாள்கள் மற்றும் ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் ஆகியவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேகேநபர் குருநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பொலிஸார் குறித்த வீட்டை முற்றுகையிட்டு , இளைஞனை கைது செய்தனர். அதன் போது வீட்டில் இருந்து கஜேந்திரா வாள் உள்ளிட்ட மூன்று வாள்கள் , ஒரு தொகை ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கையடக்க தொலைபேசி என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இதேவேளை, கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இன்று அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1449816
  7. தங்கத்தின் விலையில் புதிய எழுச்சி; ஒரு பவுண் 320,000 ரூபா! புதன்கிழமை (08) 4,000 அமெரிக்க டொலர்களைத் தாண்டி சாதனை அளவை எட்டியது. அதிகரித்து வரும் பொருளாதார, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் மேலும் வட்டி விகிதக் குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்புகளே இதற்கு காரணம். GMT 0300 நிலவரப்படி ஸ்பாட் தங்கம் 0.7% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,011.18 ஆக இருந்தது. அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 0.7% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,033.40 ஆக இருந்தது. பாரம்பரியமாக, நிலையற்ற காலங்களில் தங்கம் ஒரு மதிப்புக் களஞ்சியமாகக் கருதப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் 27 சதவீதம் விலை உயர்ந்த பின்னர், ஸ்பாட் தங்கம் இன்று வரை 53 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த வர்த்தகத்தில் இப்போது மிகுந்த நம்பிக்கை இருப்பதால், தங்கத்தின் விலையானது எதிர்காலத்தில் 5,000 டொலர்களை எட்டக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதக் குறைப்புகளின் எதிர்பார்ப்புகள், தொடர்ச்சியான அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, உறுதியான மத்திய வங்கி கொள்முதல், தங்க பரிமாற்ற-வர்த்தக நிதிகளில் முதலீடு மற்றும் பலவீனமான அமெரிக்க டொலர் உள்ளிட்ட பல காரணிகளால் மஞ்சள் உலோகத்தின் ஏற்றம் உந்தப்பட்டுள்ளது. அதேநேரம், ஏனைய விலைமதிப்பற்ற உலோகச் சந்தைகளில், ஸ்பாட் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 1.3 சதவீதம் உயர்ந்து 48.42 அமெரிக்க டொர்களாகவும், பிளாட்டினம் 2.5 சதவீதம் உயர்ந்து 1,658.40 அமெரிக்க டொலர்களாகவும், பல்லேடியம் 1.8 சதவீதம் உயர்ந்து 1,361.89 அமெரிக்க டொலர்களாகவும் உள்ளது. இதனிடையே, அமெரிக்க அரசாங்க முடக்கம் செவ்வாயன்று (07) ஏழாவது நாளை எட்டியது. கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று (08) 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 320,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 296,000 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1449812
  8. முல்லைத்தீவில் 100 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் தமிழ் பொலீஸ் உத்தியோகத்தர் கைது.! முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய லஞ்ச ஊழல் அராஜக பொலிஸ்காரன்.... போதைப் பொருளுடன் மாட்டிக்கொண்டார். கையும், மெய்யுமாக கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணை வளையத்தில் உள்ளார். இவரோடு தொடர்புள்ள பலரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவிப்பு. Mahinthan Mahi
  9. இன்று யாழ்ப்பாணத்தில், தென்னிலங்கை புகைப்படவியலாளர் Thilina Kaluthotage என்பவரால் பிடிக்கப்பட்ட புகைப்படம். Shanmugarasa Vadivelu
  10. எனக்கு... அமைதிக்கான நோபல் பரிசு தாராவிடில், நோபல் பரிசு கொடுபவர்களுக்கு... அமைதி இருக்காது. ஆமா.... இப்படிக்கு, தம்பர். 😂
  11. இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு! 2025 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகளான ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சர்க்யூட்களில் மைக்ரோஸ்கோபிக் குவாண்டம் மெக்கானிக்கல் டனல் மற்றும் ஆற்றல் அளவீட்டைக் கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச்.டெவோரெட் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் இன்று ஸ்டாக்ஹோமில் அறிவித்தது. நூற்றாண்டு பழமையான குவாண்டம் இயக்கவியல் தொடர்ந்து புதிய ஆச்சரியங்களை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குவாண்டம் மெக்கானிக்ஸ் அனைத்து டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கும் அடித்தளமாக இருப்பதால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நோபல் பரிசு குழுவின் தலைவர் ஓலே எரிக்சன் கருத்து தெரிவித்தார். மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வென்றவர்கள் குறித்த அறிவிப்பு நேற்று முதல் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இவ்விருது அறிவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தங்க பதக்கம், பட்டயம், ரொக்கப் பரிசு 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் அதாவது இலங்கை மதிப்பில் 3 கோடி ரூபா உள்ளிட்டவை ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10-ம் திகதி வழங்கப்படும் என்பதும் குறிப்பிடதக்கது. https://athavannews.com/2025/1449789
  12. பண்டார வன்னியன் காலத்திலிருந்து... காட்டிக் கொடுத்த எட்டப்பன் காக்கை வன்னியன் ஈறாக, தேசியத் தலைவர் பிரபாகரன் வரை... டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் என்று... தமிழனை எதிரிகளிடம் காட்டிக் கொடுத்து வயிறு வளர்த்துக் கொண்டே வந்திருப்பது தமிழ் இனத்தின் சாபக்கேடு. மற்றைய இனங்களில்.... அந்த இனத்திற்கு ஒரு ஆபத்து வரும் போது... தமது மொழியின் எதிர்கால நலன் கருதி மொத்த இனமும் ஒரு அணியில் ஒற்றுமையாக திரண்டு தம் இனத்திற்காக குரல் கொடுக்கும். ஆனால் உலகின் மூத்த இனமான தமிழ் இனத்தில் மட்டும்.... அற்ப சலுகைகளுக்காகவும், எதிரி போடும் எலும்புத் துண்டிற்காகவும்... மதம் மாறியும், இனம் மாறியும்.. இனத்தை காட்டிக் கொடுப்பவர்களும், காட்டிக் கொடுப்பவர்களுக்கு வெள்ளை அடித்து... முட்டுக் கொடுப்பவர்களும் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்து இனத்தை கருவறுத்துக் கொண்டே இருப்பார்கள். இவர்களை ஓட்டுக் குழுக்கள் என்றும், வெள்ளை வேட்டி கள்ளர் என்றும், செம்பு தூக்கிகள் என்றும்... காலத்திற்கு காலம் ஒவ்வொரு அடைமொழியுடன் அழைத்தாலும்... எருமை மாட்டின் மீது மழை பெய்த மாதிரி ஒரு அசுமாத்தமும் இல்லாமல் இருப்பது இவர்களின் தனிக் குணம். மற்றைய இனங்களில் இப்படி சோரம் போகின்றவர்களுக்கு, முதுகில் பச்சை மட்டையால் நாலு சாத்து சாத்தி... உப்புக்கருவாடு போட்டிருப்பார்கள்.
  13. நாகொடையில் பேனா வடிவிலான துப்பாக்கி மீட்பு! காலி, நாகொடை பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பேனா வடிவிலான துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்ததற்காக 23 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாகொடை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலைத் தொடர்ந்து நேற்று (06) மாலை இந்த கைது இடம்பெற்றுள்ளது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, பேனா வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தோட்டாவை மட்டுமே சுடும் திறன் கொண்டது. கைது செய்யப்பட்ட நேரத்தில் இரண்டு சுடப்படதாத தோட்டாக்கள், பயன்படுத்தப்படாத தோட்டங்கள் என்பவற்றை பொலிஸார் மீட்டனர். மாபலகமவைச் சேர்ந்த சந்தேக நபர், விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1449702
  14. வட மாகாண சட்டத்தரணிகள் இன்று ஒருநாள் பணிப்புறக்கணிப்பில்! உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது பொலிஸாரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண சட்டத்தரணிகள் இன்று (7) ஒருநாள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சட்டத்தரணிகள் இணைந்து போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர். இந்தப் போராட்டமானது யாழ்ப்பணத்தில் உள்ள நீதிமன்ற வளாகம் முன்னிலையில் இன்று காலை (07) ஆரம்பமானது. இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் காணி உறுதி மோசடிகளில் ஈடுபட்டார்கள் என சட்டத்தரணிகள் சிலருக்கு எதிராக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் நேற்று முன்தினம் காணி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான சட்டத்தரணி ஒருவரை கைது செய்யும் நோக்குடன் அவரது வீட்டுக்கு சென்ற பொலிஸார் வீட்டினுள் சென்று தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். வீட்டினுள் சென்று தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்க எவ்வித நீதிமன்ற அனுமதியும் பெறாது பொலிஸார் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து தேடுதல் மேற்கொண்டதாகவும் , பொலிசாரின் நடவடிக்கையை கண்டித்து வடமாகாண சட்டத்தரணிகள் இன்றைய தினம் நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு தோன்றாது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் , நீதிமன்றங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதேவேளை , காணி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ள சட்டத்தரணிகள் தம்மை பொலிஸார் கைது செய்வதனை தடுக்கும் முகமாக நாளைய தினம் (08) நீதிமன்றங்களில் முன் பிணை கோரவுள்ளதாகவும் அறியமுடிகிறது. https://athavannews.com/2025/1449742
  15. இந்தியா – பாகிஸ்தான் மோதலை முடிவுக்கு கொண்டுவர முக்கிய பங்கு வகித்ததாக ட்ரம்ப் மீண்டும் தெரிவிப்பு! வர்த்தக அச்சுறுத்தல்களைப் பயன்படுத்தி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராணுவ மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் முக்கிய பங்கு வகித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (06) மீண்டும் ஒருமுறை கூறியுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் மோதல்கள் அதிகரித்திருந்த நிலையில், அணு ஆயுதம் ஏந்திய இரண்டு நாடுகளையும் போர் நிறுத்தத்தை நோக்கித் தள்ளியது அவரது ஆக்ரோஷமான வரி உத்தி என்று கூறிய ட்ரம்ப், தான்தான் உலகளாவிய அமைதியை நிலைநாட்டுபவர் என்று கூறினார். அவரது வரி அச்சுறுத்தலைப் பாராட்டிய அவர், அது வொஷிங்டனுக்கு “நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்களை” ஈட்டித் தருவதாகக் கூறினார். அமெரிக்கத் தலைவர் இதுபோன்ற கூற்றுக்களை கூறுவது இது முதல் முறை அல்ல. மே 10 ஆம் திகதி, வொஷிங்டனின் மத்தியஸ்தத்தில் “நீண்ட இரவு” பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் “முழுமையான, உடனடி” போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக ட்ரம்ப் சமூக ஊடகங்களில் அறிவித்திருந்தார். அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம், இரண்டு ஆசிய அண்டை நாடுகளுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக வொஷிங்டன் வர்த்தகத்தை நிறுத்தி வைப்பதாகவும், அதிக வரிகளால் புது டெல்லிக்கு அழுத்தம் கொடுப்பபோம் என பிரதமர் மோடியை மிரட்டியதாக ட்ரம்ப் கூறினார். எனினும், பாகிஸ்தான் இராணுவத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் ஜெனரல், இந்த விவகாரம் தொடர்பாக நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடியை அணுகிய பின்னர், போர் நிறுத்தம் குறித்த புரிதல் எட்டப்பட்டதாக இந்தியா கூறி வருகிறது. பாகிஸ்தான் ஆரம்பத்தில் இந்தக் கூற்றை மறுத்தாலும், பின்னர் அதை ஏற்றுக்கொண்டது. https://athavannews.com/2025/1449725
  16. காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இரகசிய பேச்சுவார்த்தை! காசா போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க அமைதி திட்டம் குறித்த இறுதி ஒப்பந்தத்தை அடைவதற்கான மறைமுக பேச்சுவார்த்தைகள் எகிப்தின் ஷார்ம் எல்-ஷேக் நகரில் ஆரம்பமாகியுள்ளன. இதன்மூலம் இஸ்ரேலிய பணயக் கைதிகளையும் பலஸ்தீன பணயக் கைதிகளையும் விடுவிப்பதற்கான ஒப்பந்தம் சாத்தியமாகும் என கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பு, அமைதி திட்டத்தின் சில முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் பல கோரிக்கைகளுக்கு இதுவரையில் பதில் அளிக்கவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை எதிர்வரும் சில நாட்களில் சிறைபட்டவர்களின் விடுதலை குறித்து அறிவிக்க முடியும் என நம்புவதாக இஸ்ரேல் பிரதமர் கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார். மேலும், காஸா அமைதி திட்டத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் இந்த திட்டத்தை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள் எனவும் திட்டம் அமுலுக்கு வந்தால் மத்திய கிழக்கில் முதல் முறையாக அமைதி நிலவும் எனவும் பணயக்கைதிகளை உடனடியாக மீட்போம் எனவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1449713
  17. இங்கிலாந்தில் BYDஇன் விற்பனை 880 சதவீதம் அதிகரிப்பு! சீனாவின் கார் தயாரிப்பு நிறுவனமான BYD, செப்டம்பர் மாதத்தில் சீனாவிற்கு வெளியே அதன் மிகப்பெரிய சந்தையாக இங்கிலாந்து மாறியுள்ளது என்று கூறுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025 செப்டம்பர் மாதத்தில் அதன் விற்பனை அங்கு 880% அதிகரித்துள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்தில் 11,271 கார்களை விற்றதாக நிறுவனம் கூறுகிறது, அதன் Seal U sports utility (SUV) வாகனத்தின் பிளக்-இன் ஹைப்ரிட் பதிப்பு அந்த விற்பனையில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மின்சார வாகனங்களின் (EV) விற்பனை சாதனை அளவை எட்டியதாக கார் தொழில்துறை அமைப்பான மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் (SMMT) புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இது வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா போன்ற பிற முக்கிய சந்தைகளைப் போலல்லாமல், சீன மின்சார வாகனங்களுக்கு நாடு வரிகளை விதிக்காததால், BYD போன்ற நிறுவனங்களுக்கு இங்கிலாந்தில் குறிப்பாக கவர்ச்சிகரமானதாக உள்ளது. மேற்கத்திய போட்டியாளர்களை விட மலிவான மொடல்களை வழங்கும் BYD, செப்டம்பரில் இங்கலிந்து சந்தையில் அதன் பங்கு 3.6% ஆக உயர்ந்துள்ளதாகக் கூறியது. வரும் மாதங்களில் நிறுவனம் மேலும் புதிய கலப்பின மற்றும் மின்சார கார்களை அறிமுகப்படுத்தும் என்று BYD இன் இங்கிலாந்துக்கான முகாமையாளரம் போனோ ஜி கூறினார். கடந்த ஆண்டு ஒக்டோபரில், ஐரோப்பிய ஒன்றியம் சீன மின்சார வாகனங்களின் இறக்குமதியை 45% வரை வரிகளுடன் பாதிக்கும் என்று அறிவித்தது. இந்த நடவடிக்கை ஐரோப்பிய கார் தயாரிப்பாளர்கள் நியாயமற்ற சீன-அரசு மானியங்கள் என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்புவதால் பாதிக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது முன்னோடி ஜோ பைடன் இருவரும் ஆதரித்த உயர் கட்டணங்களால் BYD போன்ற சீன கார் தயாரிப்பாளர்கள் அமெரிக்காவிலிருந்து திறம்பட மூடப்பட்டுள்ளனர். https://athavannews.com/2025/1449698
  18. 40,000 மொபைல்கள் திருட்டு; சர்வதேச கொள்ளை கும்பல் இங்கிலாந்தில் கைது! கடந்த ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து சீனாவிற்கு 40,000 திருடப்பட்ட மொபைல் தொலைபேசிகளை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு சர்வதேச கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொலைபேசி திருட்டுகளுக்கு எதிரான இங்கிலாந்தின் மிகப்பெரிய நடவடிக்கையாக இது அமைந்ததாக மெட்ரோபொலிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்போது, 18 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், 2,000 க்கும் மேற்பட்ட திருடப்பட்ட மொபைல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. லண்டனில் திருடப்பட்ட அனைத்து மொபைல்களிலும் பாதி வரை ஏற்றுமதி செய்ததற்கு இந்தக் கும்பல் காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் நம்புகின்றனர் – இங்கிலாந்தில் பெரும்பாலான மொபைல்கள் இங்குதான் திருடப்படுகின்றன. கடந்த வாரம், திருட்டு, திருடப்பட்ட பொருட்களைக் கையாளுதல் மற்றும் திருட்டு சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் மேலும் 15 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். சந்தேக நபர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பெண்கள், ஒரு பல்கேரிய நாட்டவர் உட்படவரும் அதில் அடங்குவர். கடந்த நான்கு ஆண்டுகளில் லண்டனில் திருடப்பட்ட தொலைபேசிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. 2020 இல் இது 28,609 ஆக இருந்தது, 2024 இல் 80,588 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் திருடப்பட்ட அனைத்து மொலைபல்களில் நான்கில் மூன்று சதவீதம் லண்டனில் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1449692
  19. சுத்துமாத்து சுமந்திரன் என்றுமே….. தமிழ் இனம் சார்ந்தோ, தமிழரசு கட்சி சார்ந்தோ…. கொள்கை அளவில், பாதிக்கப் பட்ட தமிழ் மக்களுக்காக நல்ல முடிவு எடுக்கும் மனிதன் கிடையாது. செய்வது முழுக்க “பின்கதவு சுத்துமாத்து” வேலைகள்தான். கடந்த காலங்களில் கூட…. ஜனாதிபதிகளாக இருந்த மகிந்த, கோத்தா, மைத்திரி, ரணில் போன்றவர்களை…. தமிழரசு கட்சிக்கும், சக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரியாமல், இரகசியமாக பின் கதவால் சென்று சந்தித்து விட்டு வந்து, அதனைப் பற்றி வெளியில் எதுவும் சொல்லாமல் “அமுசடக்கி திருடன்” போல் இருப்பது அவரின் வழமையான செயல். ஜனாதிபதிகளை பின்கதவால் சந்தித்த செய்திகள் பத்திரிகைகளில் கசிந்த பின்பு…. தான், இவர் அங்கு சென்று இரகசிய சந்திப்பு நடத்தியது வெளியே தெரிய வரும். அதே போன்று தான்… வெளி நாட்டு தூதுவர்களையும் கட்சி சார்பாக அல்லாமல், தனியாக சென்று சந்தித்து…. சந்திப்பில் என்ன விடயமாக பேசப் பட்டது என்பது குறித்தும் வெளிப்படைத் தன்மை இல்லாமல் “இருட்டுக்குள், திருட்டு பேரம்” பேசுவதை வழமையாக கொண்ட கீழ்த்தரமான நடத்தை கொண்ட தமிழ் மக்களுக்கு எள்ளளவும் பிரயோசனமற்ற ஆபத்தை விளைவிக்கும் கேடு கெட்ட மனிதன்தான் சுமந்திரன். சுமந்திரன்…. காலம் காலமாக செய்து வரும், இந்தத் திருட்டுத்தனமான இரகசிய சந்திப்புக்களால் தமிழ் மக்களுக்கு ஒரு நன்மையோ, அல்லது ஏதாவது ஒரு முன்னேற்றமோ கிடைத்ததா என்றால்… எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை நிலை. “தமிழ் மக்களை காட்டிக் கொடுத்து…. தங்களது வயிற்றை வளர்க்கும்” இந்தச் செயல் உடனடியாக, அடியோடு நிறுத்தப் பட வேண்டும். வர இருக்கும் ஜெனீவா தீர்மானம் சம்பந்தமாக…. சுமந்திரன், பிரித்தானியாவுக்கு இரகசியமாக சென்று தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கும் வேலைகளை செய்யக் கூடிய ஆள்தான் சுமந்திரன். சுமந்திரன், கடந்த காலங்களில் கூட… ஐக்கிய நாடுகள் சபையில், போர்க்குற்ற விசாரணகளுக்கு வெளிநாட்டு விசாரணை தேவை இல்லை, உள்ளக விசாரணையே போதும் என்றும் சொல்லி ஶ்ரீலங்கா சிங்களவருக்கு முட்டுக் கொடுத்து விட்டு வந்த, “தற்குறி”தான் சுமந்திரன். இப்படிப்பட்ட….. சுமந்திரன் போன்ற நாத்தம் பிடித்த அரசியல்வாதிகளால், தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு, ஆபத்தாக மாறி விட்டது என்பதே கசப்பான உண்மை.
  20. டாஸ்மாக்கும்…. சத்து டானிக்தான். 😂 ஆனால் என்ன அதை குடிக்கிறவன் சத்தம் இல்லாமல் மேல்லோகம் போகிறான். 😜 அதற்குள் விசச் சாராயம் குடித்து இறந்தவனுக்கு… 10 லட்சம் ரூபாய், பம்பர் பரிசு. 😂 இது தெரியாமல்… இங்கை நின்று குப்பை கொட்ட வேண்டி இருக்கு. 🤣
  21. தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை அதிகாலை இந்த பறவைகள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பறவைகள் வைக்கப்பட்டிருந்த கூண்டை உடைத்து புறாக்கள் திருடப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவின் பேரில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழக்குப் பொருட்களாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் புறாக்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கையாக மிருகக்காட்சிசாலையில் பறவைகள் வைக்கப்பட்டிருந்த பிரிவின் பொறுப்பதிகாரியை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர மேலும் தெரிவித்தார். இருப்பினும், இந்தத் திருட்டில் ஈடுபட்ட நபர் அல்லது திருடப்பட்ட புறாக்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விடயம் குறித்து தெஹிவளை பொலிஸாரும் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளனர். https://www.battinews.com/2025/10/32.html?fbclid=IwY2xjawNQr1ZleHRuA2FlbQIxMABicmlkETBlSUNTVG96M2YzazZWcXQyAR5fo_W4FBwSC1z7TpZFFSS0uAKKSraxCCpAENqBL-Vuq8g4ofAmbqGUEXirMQ_aem_9GebpKWcyuLws0tn8O1l6g

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.