Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தெஹிவளை பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக அதன் பிரதி பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு அல்லது சனிக்கிழமை அதிகாலை இந்த பறவைகள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பறவைகள் வைக்கப்பட்டிருந்த கூண்டை உடைத்து புறாக்கள் திருடப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவின் பேரில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழக்குப் பொருட்களாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் புறாக்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கையாக மிருகக்காட்சிசாலையில் பறவைகள் வைக்கப்பட்டிருந்த பிரிவின் பொறுப்பதிகாரியை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர மேலும் தெரிவித்தார். இருப்பினும், இந்தத் திருட்டில் ஈடுபட்ட நபர் அல்லது திருடப்பட்ட புறாக்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விடயம் குறித்து தெஹிவளை பொலிஸாரும் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளனர். https://www.battinews.com/2025/10/32.html?fbclid=IwY2xjawNQr1ZleHRuA2FlbQIxMABicmlkETBlSUNTVG96M2YzazZWcXQyAR5fo_W4FBwSC1z7TpZFFSS0uAKKSraxCCpAENqBL-Vuq8g4ofAmbqGUEXirMQ_aem_9GebpKWcyuLws0tn8O1l6g
  2. மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு! இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று(6) முதல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலாவது நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்காக மொத்தம் 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. உ லகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவத்துக்காக அமெரிக்காவை சேர்ந்த 2 விஞ்ஞானிகள் மற்றும் ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு தாங்கு திறன் குறித்த ஆய்வுக்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்படுகிறது. உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் நோபல் பரிசு, கடந்த 1091ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு வழங்கியவர்களுக்கு இந்த விருது கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு பெறப்போகும் விருதாளர்களின் பெயர்கள், இன்று முதல் நாள்தோறும் ஒவ்வொரு துறையாக அறிவிக்கப்பட இருக்கிறது. முதல்நாளான இன்று (06) மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவரின் விபரம் வெளியிடப்பட்டது. இந்தாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த மேரி பிரங்கோ, பிரட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமொன் சாகாகுச்சி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நோபல் விருது குழு அறிவித்துள்ளது. இதேவேளை, பாகிஸ்தான் தலைவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பரிந்துரைத்ததாக கூறியுள்ளனர். ஆனால் ஜனவரி 31 என்ற காலக்கெடுவுக்கு பின்னர் அவர்கள் பரிந்துரை செய்துள்ளதால் நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு ட்ரம்ப்பின் பெயர் பரீசீலிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேவேளை ட்ரம்ப் தற்போது சர்வதேச உறவுகளை சீர்குலைத்து வருகிறார் என குற்றம்சாட்டும் நோபல் விருது குழு ட்ரம்ப் தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டால் மட்டுமே நோபல்பரிசு பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என கூறியுள்ளது. இம் முறை நோபல் பரிசுக்கு மனித உரிமை அமைப்புகள், பத்திரிகையாளர்கள், ஐ.நா போன்ற அமைப்புகளை குழுவினர் முன்னிலைப்படுத்தி இருக்கலாம் என கூறப்படும் நிலையில் ஆச்சரியமிக்க அறிவிப்புகளையும் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. https://athavannews.com/2025/1449649
  3. சுமந்திரன்… இதுவரை தமிழ் மக்களுக்கு, ஒரு ஆணியும் புடுங்கவில்லை. அவர் புடுங்கின ஆணி முழுக்க சிங்களவருக்குத்தான். ஆன படியால் சிங்கள சம்பந்தி சுமன்…. கண்டி, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை போன்ற சிங்களப் பகுதிகளில் போட்டியிட்டு… அவரின் “பாராளுமன்ற கனவை” நிறைவேற்றும் படி… வேண்டிக் கொள்கின்றோம். 😂 தமிழ் பகுதிகளில் நின்றால்… மீண்டும், மீண்டும் மண் கவ்வுவது நிச்சயம். 🤣
  4. சுமந்திரன்.... தமிழருக்கு துரோகம் செய்து, சிங்கள அரசியல்வாதிகளை போர்க்குற்ற விசாரணைகளில் இருந்து காப்பாற்றி விட்ட நன்றிக் கடனுக்கு... சென்ற பாராளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற சுமந்திரனை... தமது கட்சியின் சார்பில் சிங்களப் பகுதிகளில் போட்டியிட வைத்திருந்தால்... சிங்கள மக்கள் சுமந்திரனை, அமோக வெற்றி பெற வைத்திருப்பார்கள். ஏனென்றால்.... சுமந்திரன், தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவையை விட சிங்கள இனத்துக்கும், சிங்கள மக்களுக்கும் ஆற்றிய சேவை அதிகம். சிங்களவர்கள் உண்மையான இனப்பற்று உள்ளவர்களாக இருந்திருந்தால், அடுத்த தேர்தலில்.... மகிந்த, ரணில், சஜித், விமல் வீரவன்ச போன்றோர்... சுத்துமாத்து சுமந்திரனை தத்து எடுத்து தமது கட்சி சார்பில் போட்டியிட வைக்க வேண்டும். வெற்றி நிச்சயம். 😂
  5. ஹம்பாந்தோட்டையில்.... ஒரே "ஐஸ்" போதை வஸ்து. பென்குயின் எல்லாம் உண்மையான ஐஸ் என்று நம்பி.... சறுக்கி விளையாட வந்திருக்குது. 😂
  6. சம்பந்தன் உயிரோடு இருக்கும் மட்டும்... சுமந்திரனை பின்கதவால் பாராளுமன்றத்துக்குள் கூட்டிக் கொண்டு போனார். சம்பந்தன் செத்த பின்.... சுமந்திரனுக்கு பாராளுமன்ற பின்கதவும் அடைக்கப் பட்டு, வீட்டில் குந்த வைத்துள்ளார்கள். 😂 சென்ற பாராளுமன்ற தேர்தலில் சுமந்திரன் மண் கவ்விய பின்.... பாராளுமன்றத்துக்குள் நுழைய... வென்ற பாராளுமன்ற உறுப்பினரான சத்தியமூர்த்திக்கும் வேறு சிலருக்கும் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக வேறு பதவி பெற்றுத் தருவதாகவும், அவர்கள் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா பண்ணி.. அந்த இடத்தை தமக்குத் தரும்படி பல வழிகளில் கெஞ்சி, ஆசை வார்த்தை காட்டியும்... சுமந்திரனை நம்பி அவர்கள் நடுத் தெருவில் நிற்க தயார் இல்லாததால்... அவர்கள் சுமந்திரனின் சூழ்ச்சி வலையில் விழாமல் ஒரேயடியாக மறுப்பு தெரிவித்து விட்டார்கள். 😅 சம்பந்தன் செத்தவுடன்.... சுமந்திரனின் பின்கதவு பாராளுமன்ற ராசியும் கை விட்டுப் போய் விட்டது. இனி சுமந்திரன் தனது வாழ்நாள் முழுக்க பாராளுமன்றத்துக்கு வெளியில் நின்று பாராளுமன்றத்தை "ஆ" வென்று அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான். 😂 🤣
  7. நேபாளத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழப்பு! நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் நேபாளத்தின் பிற இடங்களிலும் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் சிக்குண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நேபாளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வீதிகள் சேதம் அடைந்ததால், போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மீட்பு பணிகளுக்காக நேபாள இராணுவம் வானூர்திகளை அனுப்பியுள்ளதுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோரை இராணுவத்தினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனர். இருப்பினும், குறித்த மோசமான வானிலை காரணமாக, தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு நடவடிக்கைகள் தடைபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை மேலும் பலர் மண்ணில் புதையுண்டதாக அஞ்சப்படும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். நேபாளத்தின் குறித்த நெருக்கடி நிலையை கருத்திற்கொண்டு அவசர சேவைகள் மற்றும் பேரிடர் மீட்புக் குழுக்கள் தவிர்ந்த ஏனைய அனைவருக்கும் நாளை மற்றும் நாளை மறுதினங்களுக்கு நாடு தழுவிய பொது விடுமுறை நாட்களாக நேபாள அரசு அறிவித்துள்ளது. https://athavannews.com/2025/1449597
  8. சுத்துமாத்து சுமந்திரன் தானாக பதவி விலக மாட்டார். விலக்கி வைக்கப் பட வேண்டும். மயிலே… மயிலே… இறகு போடு என்றால் போடாது. புடுங்கி எடுக்க வேண்டும். 😂 வருகின்ற வட மாகாண சபைத் தேர்தலில்… ஆபிரஹாம் சுமந்திரனுக்கு போட்டியிடுகிற எண்ணம் இருக்கின்றது போலுள்ளது. ஏற்கெனவே சுமந்திரனுக்கு தமிழரசு கட்சி தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் தமிழ் மக்கள்… இவர் தேவையில்லாத ஆணி என்று தோல்வியை பரிசாக கொடுத்தவர்கள். அதற்குப் பிறகும் வெட்கம், மானம், ரோசம் எதுவும் இல்லாமல்… தானும் ஒரு ஆள் என்று, பல்லை காட்டிக் கொண்டு சூடு, சுரணை இல்லாமல் தமிழ் மக்கள் மத்தியில் உலாவிக் கொண்டு திரிகிறார். ஆபிரஹாம் சுமந்திரன் இனியும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டால்….? சுமந்திரனை தோல்வியுறச் செய்ய தமிழரசு கட்சியில் இருக்கும் அதிர்ப்தி வாக்குகள் அனுரா கட்சிக்கே சென்று… முதல் முறையாக சிங்கள கட்சி ஒன்று வட மாகாண சபை முதல்வராக வரக் கூடிய வாய்ப்புகள் அதிகரிக்கும். சுத்துமாத்து சுமந்திரன்…. தனக்கு தமிழ் மக்களிடம் செல்வாக்கு இல்லை என்பதை ஏற்றுக் கொண்டு…. இனி தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவாமல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதே அவருக்கு நல்லது. அதனையும் மீறி, போட்டியிட்டால்…. தமிழ் மக்கள் தமது வாக்குகளால் கொடுக்கும் செருப்பு அடியில்… “சுமந்திரன், பின்னங்கால் பிடரியில் பட கொழும்புக்கு ஓட வேண்டி வரும்” என்று ஊரில் பரவலாக சொல்கிறார்கள்.
  9. 📌👉யாழ்ப்பாணம் ஏழாலையில் சோகம்: வாய்த்தகராறு கத்திக்குத்தாக மாறியதில் கடை உரிமையாளர் பலி‼️‼️‼️ யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் உள்ள வாணிப நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வாய்த்தகராறு கத்திக்குத்தில் முடிவடைந்ததில், கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (அக்டோபர் 04) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்த விபரம் ஏழாலை கிழக்கு பகுதியில் உள்ள வாணிப நிலையத்திற்கு, மதுபோதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மிக்சர் (உணவுப் பண்டம்) கேட்டுள்ளனர். அப்போது கடை உரிமையாளர், மிக்சருக்கான பணத்தை முதலில் தருமாறு கேட்டுள்ளார். இதன் காரணமாக மிக்சர் வாங்க வந்தவர்களுக்கும் கடை உரிமையாளருக்கும் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்தத் தர்க்கம் முற்றிய நிலையில், இளைஞர்கள் கடை உரிமையாளர் மீது கத்திக்குத்துத் தாக்குதலை மேற்கொண்டனர். இதில் படுகாயமடைந்த கடை உரிமையாளர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிங்காராவேல் தானவன் (வயது 35) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் கைது உயிரிழந்தவரின் சடலம் தற்போது தொல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் சுன்னாகம் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நம்ம யாழ்ப்பாணம்
  10. முன்னாள் திமுக MLA சங்கரவள்ளியின் மகன் தான் நீதிபதியாம்.. அதனால் நியாயமா இருப்பார் என்று நம்புகிறேன். Sooriya Prakash ################# ################## நீதியரசர் இல்ல விழாவில் கலந்து கொண்ட நம்ம முதல்வர். நீதிதான் மறைந்தது. விஜய் மறையவில்லை அவரின் புகழ் பலமடங்கு ஏறிக்கொண்டுள்ளது. Er. K. Arumugam ################# ############### ############# மகா பிரபுவே வணக்கங்கள் பல.🙏🙂‍↕️ திருநெல்வேலிகாரன் ########################## எலி, ஏன்... ஜட்டி போட்டுக் கொண்டு ஓடுது என்று பார்த்தேன். இப்படிப் பட்டவரிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும். ஒரு கட்சிக்கு சார்பானவர் நீதிபதியாக இருக்கும் தகுதியை இழந்து விட்டார்.
  11. சுன்னாகம் பகுதியில் கத்திக்குத்து- ஒருவர் உயிரிழப்பு! சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகிய கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார். ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட கடையொன்றுக்கு மது போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மிக்சர் தருமாறு கேட்டுள்ள நிலையில் கடை உரிமையாளர் மிக்சருக்கு உரிய பணத்தை தருமாறு கேட்டபோது மிக்சரை வாங்க வந்தவர்களுக்கும் கடை உரிமையாளருக்கும் இடையே வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது கடை உரிமையாளர் மீது மிக்சர் வாங்க வந்தவர்கள் கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையில் கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் ஏழாலை கிழக்கு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய சிங்காராவேல் தானவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் தற்போது தொல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களையும் சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுண்ணாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1449571
  12. இந்தியாவில் 11 குழந்தைகள் உயிரிழப்பு- தடைசெய்யப்பட்ட மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் கைது! இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 11 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இருமல் மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் பிரவீன் சோனி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்திலும், ராஜஸ்தானின் சிகாரி எனும் பகுதியிலும் கடந்த 15 நாட்களாக, 1 – 6 வயதுக்குட்பட்ட 11 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்துள்ளன. குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர்கள் ‘கோல்ட்ரிப்’ மற்றும் ‘நெக்ஸ்ட்ரோ’ ஆகிய இருமல் மருந்துகளை உட்கொண்டமை தெரியவந்துள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலான குழந்தைகள் பராசியாவில் உள்ள குழந்தை நல வைத்தியரான பிரவீன் சோனியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் குறித்த வைத்தியர் தடைசெய்யப்பட்ட குறித்த இருமல் மருந்தினை பரிந்துரைத்துள்ளார். இதேவேளை, மேற்குறித்த இரு மாநிலங்களிலும், இந்த மருந்து உட்பட 15க்கும் மேற்பட்ட மருந்துகளை விற்பனை செய்ய முன்னதாகவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோல்ட்ரிப் மருத்தை தயாரித்த நிறுவனத்திற்கு எதிராக மத்தியப் பிரதேச அரசு வழக்குப் பதிவு செய்த நிலையில் தற்போது குறித்த மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார். https://athavannews.com/2025/1449568
  13. ட்ரம்பின் அழைப்புக்கு மத்தியில் காசா மீது இஸ்ரேல் புதிய தாக்குதல்! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குண்டு வீச்சுத் தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவர உத்தரவிட்டு ஹமாஸ் அமைதிக்குத் தயாராக இருப்பதாக கூறி, அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் சனிக்கிழமை (04) காசாவில் இஸ்ரேல் புதிய தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்களின் விளைவாக ஆறு பேர் உயிரிழந்தனர். உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, காசா நகரில் ஒரு வீட்டைத் தாக்கிய இஸ்ரேலிய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர். அதேநேரத்தில் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் நடந்த மற்றொரு தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம், ஹமாஸின் பதிலைத் தொடர்ந்து இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை உள்ளடக்கிய ட்ரம்பின் காசா திட்டத்தின் முதல் கட்டத்தை “உடனடியாக செயல்படுத்த” இஸ்ரேல் தயாராகி வருவதாகக் கூறிய சிறிது நேரத்திலேயே இந்தத் தாக்குதல்கள் நடந்தன. https://athavannews.com/2025/1449546
  14. முன்னாள் திமுக MLA சங்கரவள்ளியின் மகன் தான் நீதிபதியாம்.. அதனால் நியாயமா இருப்பார் என்று நம்புகிறேன். Sooriya Prakash ################# ################## நீதியரசர் இல்ல விழாவில் கலந்து கொண்ட நம்ம முதல்வர். நீதிதான் மறைந்தது விஜய் மறையவில்லை அவரின் புகழ் பலமடங்கு ஏறிக்கொண்டுள்ளது. Er. K. Arumugam
  15. சிந்திக்க வைக்கும், அருமையான கருத்தோவியம். 😂
  16. மஹிந்தவின் குண்டு துளைக்காத வாகனம் ஒப்படைப்பு! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே, நேற்று (3) சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மூலம் வாகனத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை நீக்குதல் சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஐந்தாவது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்களும் உத்தியோகபூர்வ இல்லமும் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி செயலாளர் செப்டம்பர் 24 அன்று தெரிவித்ததாகவும் கமகே மேலும் குறிப்பிட்டார். மேலும், முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட பயணிகள் வாகனமும் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார். இந்த நிலைமை மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2025/1449531
  17. இலங்கையின் வெளிநாட்டுக் கடன் 37 பில்லியன் டொலர்கள்! இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் தொகையானது 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரியவந்துள்ளது. அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடியபோது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டது. இலங்கை பெற்ற கடன்கள் குறித்து குழு விசாரித்தபோது, கூட்டத்திற்கு அழைக்கப்பட்ட பொதுக் கடன் மேலாண்மை அலுவலக அதிகாரிகள், 37 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது 19.6 டிரில்லியன் ரூபாய் வெளிநாட்டுக் கடன்கள் பெறப்பட்டுள்ளதாகக் கூறினர். அனைத்து கடன் வாங்கும் செயல்முறைகளும் தற்போது அரச கடன் மேலாண்மை அலுவலகத்தால் மட்டுமே நிர்வகிக்கப்படுகின்றன. நாட்டின் கடன் மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்த திறமையான அதிகாரிகளை நியமிப்பதன் முக்கியத்துவத்தையும் கோப் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இதன்போது எடுத்துரைத்தார். https://athavannews.com/2025/1449528
  18. me இலங்கை 17 ஆண்டு கால ஆராய்ச்சியின் விளைவாக புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்து கண்டுபிடிப்பு! சுமார் 17 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் புற்றுநோய் செல்களைக் கொல்லும் ஊட்டச்சத்து மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. இந்த ஊட்டச்சத்து மருந்து, மூலக்கூறு உயிரியல் மற்றும் நெட்வொர்க் மருந்தியல் போன்ற நவீன அறிவியல் முறைகளைப் பயன்படுத்தி 05 மருத்துவ தாவரங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வெர்னோனியா ஜெய்லானிகா, ( Vernonia zeylanica) நிஜெல்லா சாடிவா, (Nigella sativa) ஹெமிடெஸ்மஸ் இண்டிகஸ், (Hemidesmus indicus) லூகாஸ் ஜெய்லானிகா (Leucas zeylanica) மற்றும் ஸ்மைலாக்ஸ் கிளாப்ரா (Smilax glabra) ஆகிய தாவரங்களிலிருந்து பெறப்பட்ட மருந்துகளின் கலவையானது புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடும் என்று பேராசிரியர் சமீரா ஆர். சமரக்கோன் உள்ளிட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ள குழுவினர் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1449481

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.