Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. 👇 கீழே உள்ள இணைப்பை அழுத்தி, காணொளியை பார்க்கவும். 👇 👉 https://www.facebook.com/100072424320459/videos/1370364317293121/ 👈 இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் மட்டும் தான் மேடையில் இருந்தார்கள். அழைப்பு இல்லாமல் போனவர்கள் அனைவரும் பார்வையாளர் வரிசையில் கீழே இருத்தப்பட்டார்கள். கீழே... இருத்தப் பட்டவர்கள் யார் என்பது, உங்களுக்கு இப்போ புரிந்து இருக்கும். சாணக்கியனின் தயவில்... தொத்திக் கொண்டு போன சுமந்திரனும் கீழே தான். சாணக்கியனும், சுமந்திரனும்... மேடைக்கு கீழே பார்வையாளர் பகுதியில் 2500 பார்வையாளர்களுடன்... இருத்தப்பட்டிருந்தனர்.
  2. நடந்து போன தமிழக முதல்வரை, இழுத்துப் பிடித்து… செல்பி எடுத்துவிட்டு… இலங்கை அகதிகள் சம்பந்தமாக கலந்துரையாடியதாக, கதை அளக்கின்றார்கள். ஓரு கலந்துரையாடல்… எப்படி இருக்கும் என்பதை, தெரியாத முட்டாள் மக்கள் என நினைத்து விட்டார்கள் போலுள்ளது. முன்பு ஒருமுறை… சுமந்திரனும், சாணக்கியனும் கனடாவில் உள்ள பாராளுமன்றத்தின் முன்னால் நின்று படம் எடுத்து விட்டு வந்து, கனடா அரசுடன் இலங்கைத் தமிழர் விடயமாக பேச்சு வார்த்தை நடத்தினோம் என்று மக்களின் காதில் பூ சுற்றிய… சுத்துமாத்து கூட்டம் தான் இது.
  3. தன்னுடைய கூட்டத்திற்கு 5 பேரைக் கூட… வர வைக்க முடியாத பொன்சேகா எல்லாம், அரசாங்கத்துக்கு ஆலோசனை சொல்ல வெளிக்கிட்டுது. 😂 🤣
  4. முஸ்லீம் இனம் என்றால்…. தமது செய்தித் தளங்களில் பெயரை வெளியிட மாட்டார்கள். தமிழர் என்றால்…. அக்கு வேறு, ஆணி வேறாக “பிரேக்கிங் நியூஸ்” போட்டு, பிரித்து மேய்ந்து விடுவார்கள். போதாக் குறைக்கு… “யூ ரியூப்” காரரும் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு செய்தி சேகரிக்கப் புறப்பட்டு விடுவார்கள்.
  5. ஈழப்பிரியன், அந்த மினி பஸ்ஸில் கடத்தும் காணொளியை பார்த்தேன். சினிமா பட காட்சியைப் போலிருந்தது. வீதியால் போன ஒருவர்தான் உதவிக்கு ஓடிப் போனவர். மற்றவர்கள் சுதாகரித்து தடுக்க முதல், மினிபஸ் கிளம்பி போய் விட்டது. இப்போ... பல இடங்களிலும், சிசிரிவி கமெரா பொருத்தப் பட்டுள்ளதால், கடத்தல்கள் உடனே பிடிபட்டு விடுகின்றன. நீங்கள் கூறிய காரணத்தையும்... தட்டிக் கழிக்க முடியாது. இப்போ... எந்தப் புற்றில், இந்தப் பாம்பு உள்ளது என கண்டுபிடிப்பது சிரமம்.
  6. இவன்தான் மாணவியைக் கடத்தி 50 இலட்சம் ரூபாய் கப்பம் கேட்டவன்! இவனுடைய பெயர்: முஹமட் நஷார் முஹமட் நஷீர்.
  7. கடத்தப் பட்ட மாணவியின் பெற்றோரிடம்.... கடத்தல்காரன் 50 லட்ச ரூபாய் கப்பம் கேட்டுள்ள நிலையில்... மாணவியும், கடத்தல்காரனும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளனர்.
  8. முல்லைத்தீவில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு! தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி, பானை மற்றும் பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்று முல்லைத்தீவு வற்றாப்பளையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது தமிழர்களுடைய கலை கலாச்சாரம் பாரம்பரியங்களை மெருகூட்டும் வகையில் தைத்திருநாளுக்கான இந்த உதவி 30 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாட்டில் வசிக்கும் பார்த்தீபனின் ஒழுங்குபடுத்தலில் சமூக செயற்பாட்டாளர் ஞா.யூட்சனால் முன்பள்ளி ஆசிரியர்கள், மாவீரரின் குடும்பங்கள் மற்றும் முன்னாள் போராளிகள் குடும்பத்திற்கு இந்த அரிசி பானை பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களும் வழங்கி வைக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1416214
  9. ஈழப்பிரியன்... ஆளுக்கு ஒரு மில்லியன் தருவதாக அமெரிக்க தேர்தலின் போது சொன்னவரா. இது எப்படி சாத்தியம். சரியான ஏமாற்றுப் பேர்வழி போலுள்ளது.
  10. தை திருநாளினை கொண்டாடுவதற்கு மலையக மக்கள் தயார்-ஆனால் அரிசி இல்லை! உலகமெங்கும் வாழும் இந்துக்கள் நாளை உழவர் பெருநாளான தைதிருநாளினை கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இந்த தை திருநாளினை கொண்டாடுவதற்கு மலையக மக்களும் ஆயத்தமாகியுள்ளனர் இன்னிலையில் தைப்பொங்களினை முன்னிட்டு மக்கள் பூசை பொருட்களையும் அத்தியவசிய பொருட்களையும் கொள்வனவு செய்வதற்காக மலையக நகரங்களுக்கு மக்கள் வருகை தந்திருந்தனர். சூரிய பொங்கல் வைப்பதற்காக பலர் புதுப்பானயினையும், பழங்களையும் கொள்வனவு செய்ததுடன் தைதிருநாளினை முன்னிட்டு இந்துக்களின் வீடுகள் சுத்தம் செய்து அலங்கரித்து வருகின்றனர். இதேவேளை தற்போது, மலையகத்தில் சிவப்பு அரிசிக்கு பல இடங்களில் தட்டுப்பாடு நிலவுகின்றது அதனால் சில மக்கள் வெள்ளை அரிசியை கொள்வனவு செய்கின்றனர்.மேலும், தேங்காய் உள்ளிட்ட சில பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் பல அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1416217
  11. ஏராளன்... 400 பேருக்கும் அதிகமான றோ ஸ்ரீலங்காவில் நிற்கிறது என்றால், 200 + 200 யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் நிற்கிறது. மிகுதி கண்டி, ஹம்பாந்தோட்டையில் நிற்கிறது. யாழ்ப்பாணமும், கொழும்பும் தான்... இந்தியனின், தீவிர கண்காணிப்பில் உள்ளது. 😂
  12. 200... ரோ ஒற்றர்கள்... யாழ்ப்பாண இந்திய தூதரகத்திலும், மிகுதி 200 கொழும்பு இந்திய தூதரகத்திலும் இருக்கின்றார்கள் என ஊர்க்கிழவி சொல்லுது. 😎 😂 🤣
  13. சீனாவிற்கு ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம்! சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நாட்டிலிருந்து பயணமாகிறார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின்(Xi Jinping) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை (14) முதல் 17 ஆம் திகதி வரை சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன பிரதமர் லி கியாங்(Li Qiang) மற்றும் இராஜதந்திரிகளை சந்திக்க உள்ளார். அத்தோடு இந்த விஜயத்தின் போது, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைசார் பல கள விஜயங்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளதோடு பல உயர் மட்ட வர்த்தகக் கூட்டங்களிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த விஜயம் மிக முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறதுடன் இதன் ஊடாக இருதரப்பு பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1416196
  14. எரிபொருள் வரிகளில் திருத்தமா? அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி! தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் வரிகளை திருத்தங்களை அரசாங்கம் அதேநிலையில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2024 ஜனவரி முதலாம் திகதி முதல், ஒரு லீட்டர் பெற்றோலுக்கு 72 ரூபாவும், ஒரு லீட்டர் ஓட்டோ டீசலுக்கு 50 ரூபாவும், சூப்பர் டீசலுக்கு 57 ரூபாவும் வரியாக அறவிடப்படுகின்றது. இந்நிலையில், ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, 2025 ஜனவரி 11ஆம் திகதி முதல் தொடர்புடைய வரிகள் அதே முறையில் பேணுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1416175
  15. இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு ஜானாதிபதி விடுத்துள்ள பணிப்புரை! இலங்கை சுங்கம் மற்றும் துறைமுகங்கள் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இறக்குமதி செய்யப்படும் கொள்கலன்களின் சுங்கத்துறை விடுவிப்பில் ஏற்படும் தாமதத்தை அடுத்த நான்கு நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இலங்கை சுங்கம் உட்பட அரசதுறையில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி , துறைமுகம் தொடர்பான சேவைகளை வழங்கும் சங்கங்களின் பிரச்சினைகள் குறித்தும் விரிவாக ஆராய்ந்தார். இதன் போது துறைமுக துறையை அபிவிருத்தி செய்வதற்கான குறுகிய கால மற்றும் மத்திய கால மற்றும் நீண்ட கால திட்டங்களைச் செயற்படுத்துவது அவசியமான போதும் தற்பொழுது எழுந்துள்ள சூழ்நிலையைத் தீர்க்க,அனைவரும் இணைந்து செயற்படுவதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்பொழுது எழுந்த சூழ்நிலையைத் தீர்க்க, ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களின்படி, அரச மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டன. இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களுக்கு அனுமதி வழங்கும் செயல்பாட்டில் நிலுவையில் உள்ள தேக்கத்தைத் தீர்க்க, இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணிநேரமும் பணியாற்ற உடன்பாட தெரிவித்துள்ளனர். அத்துடன் பரிசோதனை மட்டத்திலுள்ள கொள்கலன்களை வைப்பதற்கான துரித நடவடிக்கையாக UCTயில் (Unity container Terminal) இடம் ஒதுக்க அமைச்சு முடிவு செய்துள்ளது. அதற்கமைய புளூ மெண்டல் பகுதியில் 5 ஏக்கர் காணியைப் பயன்படுத்த இதன் போது முடிவு செய்யப்பட்டது. ஜனவரி 31 ஆம் திகதிக்குள் இரண்டு ஏக்கர் நிலத்தை பெற்றுக் கொடுப்பதற்கும், எஞ்சிய நிலத்தை பெப்ரவரி 28 ஆம் திகதிக்குள் வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டது. துறைமுக முனையத்தில் வேண்டுமென்றே கொள்கலன் லாரிகளை நிறுத்தி வைத்திருப்பது கொள்கலன் போக்குவரத்து நெரிசல் உக்கிரமடைய காரணம் என அடையாளம் காணப்பட்டதால், இந்தக் கொள்கலன் லாரிகளை நிறுத்துவதற்கு பேலியகொட பகுதியில் காணியொன்றை வழங்க அரசாங்கம் உடன்பாடு தெரிவித்தது. இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களுக்கு சுங்கத்துறை விடுவிப்பு வழங்குவதில் இலங்கை தர நிர்ணய நிறுவனம், உணவு ஆணையாளர் திணைக்களம், தாவர தனிமைப்படுத்தல் பிரிவு ஆகியவற்றில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் இந்தக் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த நிறுவனங்களில் ஊழியர் பற்றாக்குறை நிலவுவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், அந்த வெற்றிடங்களை நிரப்பவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நலன்புரி கொடுப்பனவுகளை அதிகரிக்கவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இதற்கான நிதி தேவை இருந்தால், துறைமுக அமைச்சினால் அதை வழங்க முடியும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களுக்கு சுங்கத்துறை விடுவிப்புக்கான நேரத்தில் பணிக்கு வராத தடயவியல் எழுதுவினைஞர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தனியார் சங்கங்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தன. இந்த ஊழியர்கள் சரியான நேரத்தில் வேலைக்கு அழைத்து வரும் பொறுப்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களிடமே உள்ளது என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வலியுறுத்தினார். உணவு சார்ந்த பொருட்களுக்கு வெளிநாட்டு ஆய்வகங்களிலிருந்து பெறப்பட்ட சான்றிதழ்கள் கட்டாயம் என்பதையும்,அதில் ஏதேனும் முறைகேடுகள் நடத்திருந்தால், அரசாங்க சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு இறக்குமதியாளர்கள் உடன்பாடு தெரிவித்தனர். துறைமுக வளாகத்திற்குள் கொள்கலன்களை சுங்கத்துறை விடுவிப்பு வரையான காலம் வரை கட்டணமின்றி தரித்து வைப்பதற்கான காலத்தை இரண்டு நாட்களாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டதாகவும், அடுத்த ஜூன் மாதத்திற்குப் பிறகு இதனை ஒரு நாளாகக் குறைக்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த அவசரகால செயல்முறையை ஜூன் 30 ஆம் திகதி வரை தொடர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ,துறைமுகங்கள், சுங்கம் மற்றும் துறைமுகம் தொடர்பான ஏனைய சேவைகளை வழங்கும் தனியார் நிறுவனங்கள் யாவும் ஒரே குடும்பமாக செயல்பட வேண்டும் என்றும் கூறினார். தற்பொழுது வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கொள்கலன் வாகனங்களுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற துறைமுக சேவை வழங்கும் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதில் தொழில் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர்கள் ரஸ்ஸல் அப்பொன்சு, கபில பெரேரா, இலங்கை சுங்க அதிகாரிகள், இலங்கை துறைமுக அதிகாரிகள், இலங்கை தரநிர்ணய நிறுவன அதிகாரிகள் , உணவு ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள், இலங்கை கப்பல் ஏற்றுவோர் சங்கத்தின் அதிகாரிகள், கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் அதிகாரிகள், கொள்கலன் போக்குவரத்து செய்பவர்கள் சங்கத்தின் அதிகாரிகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சுங்கத்துறை விடுவிப்பு அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2025/1416144
  16. கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு! கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இன்று காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்தபோது, கடத்தலை மேற்கொண்ட நபரையும், சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவியையும் போலீசார் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர் அத்துடன் நேற்று இரவு அம்பாறை பகுதியில் உள்ள ஒரு இரவு விடுதியில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் அந்த இளைஞன் தற்போது கைது செய்யப்பட்டு, பெண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேவேளை கண்டி – தவுலகல பகுதியில் தனது தோழியுடன் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது கடந்த சனிக்கிழமை குறித்த பாடசாலை மாணவி கடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது https://athavannews.com/2025/1416191
  17. போப் பிரான்சிசுக்கு உயர்ந்த விருது வழங்கிய ஜோ பைடன்! அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் வரும் 20-ம் திகதி அமெரிக்காவின் 47-வது ஜானாதிபதியாக பதவியேற்க உள்ளதுடன் அந்நாட்டு உயர் நீதிமன்ற நீதிபதி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார் இந்நிலையில், அமெரிக்க அதிபரின் ஆக உயரிய மெடல் ஆப் பிரீடம் விருது போப் பிரான்சிசுக்கு வழங்கப்பட்டதுடம் ஜானாதி ஜோ பைடன் முதல் முறையாக அந்த உயரிய விருதை வழங்கி வைத்தார் இன்னிலையில் போப் பிரான்சிசிடம் தொலைபேசியில் உரையாடியஜானாதி பைடன் ஏழை மக்களுக்கு சேவையாற்றிய போப் பிரான்சிஸின் அர்ப்பணிப்பை பாராட்டினார். இதுதொடர்பாக, அதிபர் பைடன் வெளியிட்ட செய்தியில், உங்கள் பணிவையும் பண்பையும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. நீங்கள் காட்டும் அன்புக்கு ஈடு இணை இல்லை என்றும் அவர் தெரிவித்தார் இதேவேளை அமெரிக்காவின் வளர்ச்சி, பண்புகள், பாதுகாப்பு, உலக அமைதி போன்றவற்றில் சிறந்த பங்காற்றியவர்களுக்கு ஜானாதி மெடல் ஆப் பிரீடம் விருது வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1416171
  18. எலான் மஸ்க்…. பெரிய பருப்பு, என்ற நினைப்பு. 😂 குவாட்டரும், பிரியாணியும் தருபவர்களுக்கே எமது வாக்கு. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.