Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. சிங்களவர், தெலுங்கர், கிறிஸ்தவர் என்று... ஒரே கலவையாக உள்ளதால், சோடிப் பொருத்தம் இல்லை. 😂
  2. சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் விடுதலை செய்யப்படவில்லை. 40 வருடமாக அகதிகளாக இருப்பவர்களுக்கு, இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை. குடியுரிமை இன்மையால் உயர் கல்வி கற்க முடியவில்லை. அரச வேலை வாய்ப்பு பெற முடியவில்லை. வெளிநாடுகளுக்கு செல்வதற்கு கடவுச்சீட்டும் பெற முடியவில்லை. வாழ முடியவில்லை என்று.. தாயகம் திரும்ப விரும்பினாலும் அதற்கும் அனுமதி இல்லை. இது குறித்து, எமது தலைவர்களுக்கு அக்கறையும் இல்லை. கடந்த வருடமும் தமிழக அரசின் புலம் பெயர் விழாவில் சுமந்திரன் கலந்துகொண்டார். இந்த வருடமும் கலந்துகொள்கிறார். இவர் எதற்கு அங்கு செல்கிறார்? புலம்பெயர் தமிழர் விழாவில் கலந்துகொண்ட இவர்கள் கனிமொழியுடன் என்னதான் உரையாடியிருப்பர்? தோழர் பாலன்
  3. புகழ் பெற்ற சிறந்த எழுத்தாளர். ஆழ்ந்த அஞ்சலிகள்.
  4. உண்மையை, உரக்கச் சொன்ன அறிக்கை. பாராட்டுக்கள். 👍 செல்வநாயகம் தோற்றுவித்த 75 வருட பாரம்பரியம் மிக்க தமிழரசு கட்சியை, பொதுத் தேர்தலில் படு தோல்வி அடைந்த.. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், குழி தோண்டிப் புதைக்க முதல்.. அக்கட்சியில் உள்ளவர்கள் விழித்துக் கொள்வது நல்லது.
  5. அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கிய ஒட்டுக்குழு ஈ.பி.டி.பி. க்கும், மாவீரர் இல்லத்துக்கும் என்ன சம்பந்தம்? அந்த மண்ணிலேயே, கால் வைக்க... அருகதை அற்ற கொலைவெறி மிருகங்கள். பல தமிழ் மக்களையும், விடுதலைப் போராளிகளையும் கொன்ற நய வஞ்சக கும்பல்தான், இந்த ஈ.பி.டி.பி. திருட்டு கூட்டம்.
  6. வருகின்ற பொங்கலுக்கு, ஜஸ்டின் ட்ரூடோ... வேட்டியுடன் வருவாரா, இல்லையா.
  7. காலவரையறையின்றி மூடப்படும் பிக்குகளின் பல்கலைக்கழகம்! அநுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது. பிக்கு மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவுத்தவிர்ப்பு போராட்டம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. பகிடிவதைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 சிரேஸ்ட பிக்கு மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த வகுப்புத்தடையை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 7 ஆம் திகதி முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1416042
  8. படுகொலையாளிகளுக்கு கூட விடுதலை ! போராளிகளுக்கு கிடைக்காதா? கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலைசெய்யக்கூடாது என மட்டக்கப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப்போராட்டம் இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த போராட்டமானது கிழக்கின் மட்டக்களப்பில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என என்பதை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இன்று காலை மட்டக்களப்பு பிரதான பஸ்நிலையத்தில் இந்த போராட்டம் போராளிகள் நலன்புரி சங்கத்தினால் நடாத்தப்பட்டது. போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் இ.செல்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மட்டக்கப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,தமிழ் தேசி மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்,மாவட்ட அமைப்பாளர் குககுமார்,சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்தின்போது மழைக்கும் மத்தியிலும் பெருமளவான மக்கள் ஆர்வத்துடன் வருகைதந்து கையெழுத்துப்போராட்டத்தில் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1416063
  9. மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. குறித்த துயிலுமில்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக தரப்புகள் முனைந்த போது குறித்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1416048
  10. தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்தியாவுக்கு பயணம். தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ‘எத்திசையும் தமிழணங்கே’ என்ற தலைப்பில் இடம்பெறும் உலக புலம்பெயர் தமிழர்கள் தின நிகழ்வில் தமிழக அரசின் அழைப்பின் பெயரில் கலந்துகொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ளனர். சென்னை சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்திய நாடாளுமன்றில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கனிமொழியைச் சந்தித்து ஈழத் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும், மத்திய அரசில் தமிழ் நாட்டின் குரலை எமக்காகத் தொடர்ந்து எழுப்புவது சம்பந்தமாகவும் உரையாடினர். தமிழ்நாட்டில் இரு தினங்கள் இடம்பெறும் மாநாட்டில் பங்குகொண்டு எதிர்வரும் 13 ஆம் திகதி மேற்படி மூவரும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1416051
  11. சீனா செல்லவுள்ள ஜனாதிபதி. சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சீன மக்கள் குடியரசிற்கு, எதிர்வரும் 14 முதல் 17 வரையிலான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி ஷீ ஜின்பிங்குடன் பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகள் குறித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதுடன், சீனப் பிரதமர் லீ சியாங் மற்றும் சீன தேசிய மக்கள் காங்கிரஸின் தற்போதைய நிலைக்குழுவின் தலைவர் ஜாஓ லெர்ஜி ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். ஜனாதிபதியின், சீன விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1416054
  12. பின் கதவால்... கள்ள பெட்டிசம் போடுவது, சுமந்திரனின் தொழில். இந்த வேலையை, பல சந்தர்ப்பங்களில்.... தமிழரசு கட்சி விவகாரங்களில் செய்து விட்டு... வெளியே தெரிந்தவுடன்... நல்ல பிள்ளை மாதிரி, மறுப்பு தெரிவிப்பது அவரின் இரத்தத்தில் ஊறியது. "நாய் வாலை, நிமிர்த்த முடியாது." "கிளீன் ஸ்ரீலங்கா"வில்... இதைப் பிடித்து, குப்பை வாளிக்குள் போட வேண்டும். சுமந்திரனின் சுத்துமாத்து தெரிந்தும்..., அவருக்கு வக்காலத்து வாங்கும் ஒரு சிலரின் நோக்கம் எப்படிப் பட்டது என்று, பார்க்கவே தெரிகின்றது.
  13. லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – 11 பேர் உயிரிழப்பு. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவத்தொடங்கியது. பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே, காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவி வருகிறது. வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் தீக்கிரையாகி வருகின்றன. காட்டுத்தீ காரணமாக சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காட்டுத்தீயால் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகியுள்ளது. இந்நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த காட்டுத்தீயால் குறைந்தது 10,000க்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பிற கட்டமைப்புகள் எரித்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2025/1416066
  14. டொனால்ட் டிரம்ப் நிபந்தனையின்றி விடுதலை! ஆபாச நடிகைக்கு பணம் அளித்த வழக்கில் இருந்து அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளார். 2016 அதிபா் தோ்தலுக்கு முன்னா் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் நியூயோர்க் நீதிமன்றம் இன்று தண்டனை விவரங்களை வெளியிடுவதாக தெரிவித்திருந்தது. ஆபாசப் பட நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் டிரம்பின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுவதாக இருந்தது. அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டு அவர் ஒருவேளை சிறை செல்ல நேரிட்டால் அவரால் அதிபராகப் பதவியேற்க முடியுமா என்பதில் பலருக்கும் கேள்வி எழுந்ததுடன் டொனால்ட் டிரம்ப் நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் இன்று பண மோசடி வழக்கில் நிபந்தனையின்றியும் அவருக்கு சிறைத்தண்டனை, அபராதம் எதுவுமின்றியும் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளார். இதேவேளை அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப் 10 நாள்களில் அதிபராகப் பதவியேற்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1416029
  15. வெள்ளிக்கிழமைகளில் பாகிஸ்தான் மசூதிகளில் குண்டு வெடிப்பதும், ஶ்ரீலங்காவில் முஸ்லீம்கள் தம் மதத்திற்காக மட்டும் கொடி பிடிப்பதும் வழமையான நிகழ்வுகள்.
  16. பிரதேசவாதத்தை தூண்டி தம்மை வளப்படுத்துவதில்… பிள்ளையானும், கருணாவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
  17. கனிமொழிக்கு… இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை ஒன்றும் தெரியாது போலுள்ளது. இவர்கள் இருவரும் விளங்கப் படுத்தி விட்டது நல்லதாய் போச்சு.
  18. வரும் 20’ம் திகதி நடைபெற இருக்கும்…. ட்ரம்பின் பதவி ஏற்பு விழாவிற்கு கமலா ஹரிஸ் செல்வாரா? 😂
  19. 2020’ம் ஆண்டுதான்…. சாணக்கியன் தமிழரசு கட்சிக்குள் வந்து போட்டியிட்டவர். அதற்கு முன் அவர்… மகிந்த கட்சியில் இருந்தவர். @Kapithan…. சுமந்திரனுக்கு வெள்ளை அடிக்கும், அவசரத்தில்… இதுகளை கவனிக்காமல் விட்டு விட்டார். 🤣
  20. ட்ரம்பையும், கமலாவையும் பார்க்க நல்ல முசுப்பாத்தியாய் இருக்கு. ஊரிலும்…. செத்த வீட்டில் வந்து, தமது கறளை தீர்க்கிற சம்பவம் நிறைய நடந்து இருக்கு. அமெரிக்கனும் அதுக்கு விதிவிலக்கல்ல. 😂
  21. ஈழப்பிரியன்... இவர்கள் இருவரும் சில்மிஷத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, மற்றப் பயணிகள், "வெள்ளி" பார்த்துக் கொண்டு இருந்தவர்களா? 🤣
  22. பறக்கின்ற விமானத்தில்... பாலியல் வன்புணர்வு செய்த ஆள் என்றால், எப்படிப்பட்ட கில்லாடியாக இருப்பான். நிச்சயம் சிங்களவனாகத்தான் இருப்பான். தமிழன் என்றால்... பெயர், ஊர், விலாசம் எல்லாம் பத்திரிகையில் போட்டிருப்பார்கள். 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.