Everything posted by தமிழ் சிறி
-
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற 'ஃபெங்கல்' புயல் - எங்கு மழை பெய்யக்கூடும்?
அடுத்த 12 மணித்தியாலத்தில் புயலாக மாறவுள்ள ஆழ்ந்த காற்றீத்த தாழ்வு மண்டலம். வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக (பெங்கல் புயல்) மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. நாகையில் இருந்து 400 கி.மீ., தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 510 கி.மீ., தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவிலும் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பெங்கல் புயலாக மாறியபின் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்று கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், உள்மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும். நாளை மறுநாள் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்த மழை வருகிற முதலாம் திகதி வரை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன்படி தற்போது 650 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் மொத்தக் கொள்ளளவான 3,645 மில்லியன் கன அடியில், 2,198 மில்லியன் கன அடி இருப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1410056
-
இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம் தொடங்கியது
இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம் தொடங்கியது. ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு எதிராக லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். அவர்களை மீண்டும் அவர்களுடைய இடத்தில் குடியமர்த்துவதுதான் நோக்கம் என இஸ்ரேல் அறிவித்து கடந்த மாதம் முதலாம் திகதியில் இருந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. தரைவழி தாக்குதலையும் தொடங்கியது. இதனால் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையிலான சண்டை அதிகமானது. அடிக்கடி இஸ்ரேல் தாக்குவதும், ஹிஸ்புல்லா பதில் தாக்குதல் நடத்துவதுமாக இருந்தது. இந்த நிலையில்தான் இஸ்ரேல்- லெபனான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐ.நா. முயற்சி மேற்கொண்டன. இதற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. இஸ்ரேல் அரசின் கீழ் இயங்கி வரும் அதிக அதிகாரம் படைத்த பாதுகாப்பு கேபினட் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இன்று நள்ளிரவு முதல் போர் நிறுத்தம் அமல் படுத்தப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறுகையில் “லெபனானில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து போர் நிறுத்த நாட்கள் நீடிப்பது அமையும். நாங்கள் ஒப்பந்தத்தை அமல்படுத்துவோம். எதாவது மீறல் நடைபெற்றால் பதிலடி கொடுப்போம். பெற்றி பெறும் வரை நாங்கள் ஒன்றுபட்டு இருப்போம் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இலங்கை நேரப்படி இன்று காலை 7.30 மணி முதல் இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம் தொடங்கியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1410059
-
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை! நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அதன்படி இன்று முற்பகல் 11.00 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து 170 கிலோமீற்றர் தொலைவிலும் திருகோணமலையிலிருந்து 240 கிலோமீற்றர் தொலைவிலும் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாட்டின் கிழக்கு கரையை அண்மித்து நகர்ந்து நாளை மேலும் வலுவடைந்து சூறாவளியாக மாற வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தினால் நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதுடன், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். அத்துடன் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். இதேவேளை 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1409987
-
கிரீன்லாந்து பனிக்கட்டிக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம தளம்!
கிரீன்லாந்து பனிக்கட்டிக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம தளம்! கிரீன்லாந்தின் பனிப்பாறைக்கு அடியில் புதைந்துள்ள விசித்திரமான ஒன்றை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, சாட் கிரீன் மற்றும் அவரது குழுவினர் கிரீன்லாந்ன் பனிப்பாறைக்கு அடியில்1959 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட அமெரிக்க இராணுவ தளத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த தளம் ஆர்க்டிக்கில் இருந்து அணு ஏவுகணைகளை நிலைநிறுத்துவதற்கான அமெரிக்காவின் சோதனை தளமாக செயல்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த ஆண்டு ஏப்ரலில் ஒரு ஆய்வுப் பயணத்தின் போது, ரேடார் கருவிகளைச் சுமந்து சென்ற விமானம் கிரீன்லாந்தின் பனிக்கட்டியின் ஆழத்தையும் அதன் கீழே உள்ள பாறை அடுக்குகளையும் வரைபடமாக்கியது. இதன்போதே, இதுஉறைந்த தீவின் மேற்பரப்பில் இருந்து 100 அடிக்கு கீழே புதைந்தருந்த நிலையில் பனிப்போர் கால இராணுவ தளம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முகாம் 21 சுரங்கப்பாதைகளால் ஆனது, மொத்தம் 9,800 அடி நீளம் கொண்டது. இது அணு ஏவுகணைகளை வைப்பதற்கு பனிக்கு அடியில் சுரங்கப்பாதைகளின் வலையமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இது சோவியத் யூனியனை குறிவைக்கக்கூடிய ஒரு மொபைல் ஏவுகணை அமைப்பை உருவாக்கியது. இருப்பினும், பனிக்கட்டியின் நிலையற்ற தன்மை இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை, மேலும் அது இறுதியில் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். https://athavannews.com/2024/1409977
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பையனுக்கு... உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎉 🎁 வாழ்க வளமுடன். 🙂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நாங்கள்... யாழ்ப்பாண மண்ணையே தெரிந்திராத, பியதாசவுக்கு வாக்களிக்கும் போது... அவர்கள் ஹேமசந்திரவுக்கு வாக்களிக்கட்டுமன். 😂 பழிக்குப் பழி... வாங்கிட்டோமில்ல. ஆங்... 🤣
-
விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு
தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
ஓம். மேலுள்ள செய்தியும், நீங்கள் கூறியதைத்தான்... சொல்கின்றது. அப்படி செய்தாலும் தாயகத்தில் இருந்து பெரிய எதிர்ப்பு வராது என நினைக்கின்றேன். எங்களுடைய தமிழ் கட்சிகள்... அந்த அளவுக்கு காரியத்தை கெடுத்து வைத்துள்ளார்கள். அத்துடன் எங்களுடைய "யூ - ரியூப்" தம்பிமாரும், அந்த மாதிரி அனுரா அரசுக்கு முட்டுக் கொடுப்பார்கள். ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தலின் போது... சில "யூ - ரியூப்" தளங்களுக்கு 250,000 ரூபாய் வரை கொடுக்கப் பட்டதாக சில செய்திகள் உலாவியது.
-
திசைகாட்டி முஸ்லிம் எம்.பிக்களை திறமையற்றவர்களாக குறைத்து மதிப்பிடுவது எந்த வகையில் சரி : கேள்வியெழுப்புகிறார் ஸ்ரீ.ல.ஜனநாயக கட்சி தலைவர் !
மஹிந்தவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் (2005-2010 ) மகிந்தவின் கீழ் அமைச்சரவையில் முழு அமைச்சர்களாக இருந்த முஸ்லீம் பா.உ. கள்* 1.ALM.அதாஉல்லா 2.ரிசாட் பதியுதீன் 3.றஊப் ஹகீம் (தபால்) 4.பேரியல் அஸ்றப் 5.AHM.பெளசி 6M.H.முஹம்மட் *Deputy -பிரதி அமைச்சர்கள்* 1.Basheer 2.Husain bahaila 3.MIM.Hizbullah 4.abdul Majeed 5.Cader (காதர் ஹாஜ்யார் கண்டி) 6.Faizer Mushthafa மகிந்தவின் 2 வது ஆட்சிக்காலத்தில் (2010-2015) மகிந்தயோடு அமைச்சரவையில் இருந்தவரகள். 1.AHM.பெளசி 2.றஊப் ஹகீம் (நீதி) 3ALM.அதாஉல்லா 4.ரிசாட் பதியுதீன் 5.Abdul Cader கண்டி 6.Abdul haleem கண்டி 7.Basheer segudawuth பிரதி அமைச்சர்களாக இருந்தவர்கள், 1.பைசர் முஸ்தபா 2.ஹிஸ்புல்லா 3.அமீர் அலி 4.ஹசன் அலி 5.பசீர் சேகுதாவூத்
-
திசைகாட்டி முஸ்லிம் எம்.பிக்களை திறமையற்றவர்களாக குறைத்து மதிப்பிடுவது எந்த வகையில் சரி : கேள்வியெழுப்புகிறார் ஸ்ரீ.ல.ஜனநாயக கட்சி தலைவர் !
அஞ்சான் உம்மாவும், முஹம்மட் முசம்மிலும்... கட்சி மாறி இருக்காவிட்டால் தான் அதிசயம். ஆட்சியில் இல்லாத கட்சியில் குந்தி இருப்பது... அவர்களுக்கு நரக வேதனையாக இருக்கும். நாய் வாலை எப்படி நிமிர்த்த முடியாதோ... இவர்கள் கட்சி மாறுவதும் தடுக்க முடியாதது. 😂
-
இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
எனகுத் தெரிந்த ஒருவர், * * * * குமார் என்று முடியும் தனது பெயரை, * * * * குமார என்று மாற்றி வைத்தார். அதற்குப் பிறகு அவருக்கு, வாழ்க்கையில் ஒரே ஏறு முகம் தான். தனது பதவியில் உச்சத்தை தொடும் மட்டும் சென்றார். 😂
-
சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
திருகோணமலையில் இருந்து தேசிய மக்கள் சக்தி சார்பாக தேர்தெடுக்கப் பட்ட அருண் ஹேமச்சந்திர என்ற தமிழர்... வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக பதவி ஏற்றார். இவர் பிரதி அமைச்சர் என்றாலும்... ஓரு கனமான அமைச்சிற்குத்தான் நியமிக்கப் பட்டுள் ளார். இவரது தந்தை யாழ்.மத்திய கல்லுரியில் கல்வி கற்றவர். அவர் ஒரு வைத்தியர்.- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
திருகோணமலையில் இருந்து தேசிய மக்கள் சக்தி சார்பாக தேர்தெடுக்கப் பட்ட அருண் ஹேமச்சந்திர என்ற தமிழர்... வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக பதவி ஏற்றார். இவரது தந்தை யாழ்.மத்திய கல்லுரியில் கல்வி கற்றவர். அவர் ஒரு வைத்தியர்.- 2023 இல் நாளொன்றுக்கு சராசரியாக 140 பெண்கள், சிறுமிகள் படுகொலை: ஐ.நா வெளியிட்டிருக்கும் அதிர்ச்சி தகவல்
ஆசியாவில் 0.8 வீதம் என்று நாம் சந்தோசம் அடைய முடியாது. பல கொலைகள் வெளிச்சத்திற்கே வருவதில்லை. கள்ளிப்பால் கொலை, சீதன கொடுமையால் கொலைகளை.... இரண்டாம் பேருக்கு தெரியாமல் செய்து போட்டு, நல்ல பிள்ளை வேசம் போடுவார்கள். அதிக பெண், சிசுக் கொலைகள் ஆசியாவில்தான் நடந்து கொண்டு உள்ளது.- நிதி அமைச்சின் கீழ் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!
நிதி அமைச்சின் கீழ் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்! தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 2025 நவம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிடுவது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் ஒக்டோபர் மாதம், ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டு, அதிக இலாபகரமான எதிர்காலத்திற்காக அதனை மறுசீரமைக்குமாறு ஜனாதிபதி அனுநுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1409944- இரசித்த.... புகைப்படங்கள்.
பலர் கூறும் குறைகளில் ஒன்று... இவர்களின் சத்தத்தை கேட்டு, வீட்டுக்குள் போய் காசு எடுத்துக் கொண்டு வருவதற்குள், இவர்கள் அடுத்த தெருவுக்கு போய் விடுகின்றார்களாம். 😂- வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களித்த முறையை விளங்கிக்கொள்ளுதல்
சம்பந்தன்... ஒரு முறை, தமிழரசு கட்சி சார்பில்... "ஒரு தும்புக் கட்டையை" நிறுத்தினாலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்று கூறினார். தமிழ்மக்களின் வாக்குகாளால் தெரிவு செய்யப் பட்டு, பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டு... அந்த வார்த்தைகளை எவ்வளவு "திமிரில்" சொல்லி இருக்க வேண்டும். அதுக்குத்தான்... இப்போ மக்கள் இந்தத் தண்டனையை தந்து இருக்கின்றார்கள். அரசியல்வாதிகளின் ஒவ்வொரு வார்த்தைப் பிரயோகமும், அறிக்கைகளும், செயல்களும்... மக்களை உங்களிடம் இருந்து ஆயிரக் கணக்கில் விலகிச் சென்று விடும். மக்கள் உங்களுக்கு தண்டனை தர வருடக் கணக்கில் காத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு... ஞாபக மறதி என்று நீங்கள் நினைக்காதீர்கள். வருகின்ற தேர்தலில்... இன்னும், மரண அடி வாங்க முதல்... உங்களை சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.- இரசித்த.... புகைப்படங்கள்.
இலங்கையின் நடமாடும் பேக்கரி.- கருத்து படங்கள்
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள ஆறு தமிழ் இளைஞர்கள்! உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா முன்னெடுத்து வருகின்ற யுத்தத்தில் புலம் பெயர்நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் வலுக்கட்டாயாக இணைக்கப்படுவதாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துவந்தன. இந்நிலையில் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற வேளை வலுக்கட்டாயமாக ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள சம்பவம் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி குறித்த இளைஞன் இலங்கையிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்கு முயற்சித்துள்ளார். இதன்போது ரஷ்ய விமான நிலையத்தில் தரை இறங்கி அங்கிருந்து முகவர் ஊடாக பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் என அவருக்கு வெளிநாட்டு முகவர்களினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷ்ய விமான நிலையத்தில் தரையிறங்கிய இளைஞனுடன் முல்லைத்தீவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரும் யாழ்ப்பாணம் மெல்லியடைய சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரும் குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் ஒன்றாக இணைந்து பயணித்துள்ளனர். இவர்கள் அனைவரையும் ரஷ்ய விமான நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்து செல்வதாக முகவர் குறிப்பட்டு இளைஞர்களை அழைத்துச் சென்றுள்ளார். அதனை அடுத்து அங்குள்ள இராணுவ முகாமில் இவர்களைத் தங்க வைத்து இவர்களுக்கு ரஷ்ய இராணுவத்தின் சீருடைகள் வழங்கப்பட்டு 15 நாட்கள் கட்டாயமாக பயிற்சியின் பின்னர் உக்ரைன் நாட்டின் எல்லையில் போருக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக குருநகர் பகுதியை சேர்ந்த கோமஸ் அதிஸ்ரராஜா மிதுர்ஷன் தாயாருக்கு தனது புகைப்படங்களைத் பகிர்ந்துள்ள நிலையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பயணத்திற்காக முகவர் ஒருவருக்கு ஒவ்வொருவரும் தலா 60 லட்சம் ரூபாய் வரையான பணத்தை இவர்கள் செலுத்தியுள்ளனர். இது தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை சுமார் 280க்கும் மேற்பட்ட இலங்கை ராணுவத்தினர் ரஷ்ய படைகளோடு இணைந்து, உக்ரைனுக்கு எதிராக சண்டையிட்டு வருவதாக அண்மையில் தகவல் ஒன்று வெளியாகியது. அவ்வாறு இணைந்துள்ள இலங்கை இராணுவத்தை சேர்ந்த ஒருவரை உக்ரேன் இராணுவம் உயிருடன் கைது செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்ற காணொளி ஒன்றும் கடந்த 21ஆம் திகதி வெளியாகியிருந்தது. இலங்கையில் உள்ள ரஷ்ய மாஃபியாக்கள், மூலமாக ரஷ்ய ராணுவத்திற்கு ஆட்கள் திரட்டப்படுவதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையிலேயே 6 தமிழ் இளைஞர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக சென்றிருந்த நிலையில் வலுக்கட்டாயமாக ரஸ்ய படைகளில் இணைக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2024/1409819- மாவீரர் தினத்தில் விடுதலை புலிகளின் சின்னங்களை பயன்படுத்த முடியாது – அரசாங்கம்!
மாவீரர் தினத்தில் விடுதலை புலிகளின் சின்னங்களை பயன்படுத்த முடியாது – அரசாங்கம்! வடக்கு-கிழக்கிலுள்ள மக்கள் இன்றைய தினம் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இந்த நிலையில், யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூருவதற்கு வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு சுதந்திரம் உள்ளது, எனினும் அவற்றில் விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால், அந்த அமைப்பின் சின்னங்கள், சீருடைகள் அல்லது அங்கத்தவர்களின் படங்களைப் பயன்படுத்தி கொண்டாட்டங்களை நடத்த முடியாது. எனவே, நினைவுகூருவதற்கான உரிமை மற்றும் நாட்டின் சட்டக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் மதித்து, சட்டத்தின் எல்லைக்குள் நினைவேந்தல்களை நடத்துமாறு பொதுமக்களை அவர் கேட்டுள்ளார். கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1409858- அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை!
அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை! மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் மூலம் அரசாங்கத்திற்கு 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்படுத்தியதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே, 2025 பெப்ரவரி 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் மத்திய வங்கி ஆளுநருக்கு அழைப்பாணை உத்தரவை பிறப்பித்தார். https://athavannews.com/2024/1409898 - சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.