Everything posted by தமிழ் சிறி
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அது... சுமந்திரனுக்கு "முட்டுக் கொடுத்து" ... "குழை அடிப்பவர்கள்" செய்யும் தில்லாலங்கடி விளையாட்டு. 😂 மற்றவர்களையும், தமிழர்களையும் முட்டாள்கள் என நினைத்துக் கொண்டு, தமக்குத்தாமே... சேறு பூசிக் கொள்கின்றார்கள். 🤣
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
தமிழரசு கட்சியின் பொதுக்குழுவில், சுமந்திரனின் ஆளுமை தான்.... தமிழரசு கட்சியை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கு. "உள்ளதும் போச்சுடா... நொள்ளைக் கண்ணா" நிலைமை.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இனியும்.... இவரின், தேவையில்லாத ஆணி புடுங்கிற வேலை எல்லாம் தமிழரசு கட்சிக்கு தேவை இல்லை. சாணக்கியனுக்கு... இருக்கும் திறமை கூட இவருக்கு இல்லை. கிழக்கிலே தனி ஒருவனாக நின்று கட்சிக்கு நாலு பாராளுமன்ற உறுப்பினர்களை எடுத்துக் கொடுத்துள்ளார். சுமந்திரன்... இருந்த தொகுதிகளையும் பறி கொடுத்திட்டு, தானும் வெல்ல முடியாமல் அரசியலில் தோல்வி உற்ற மனிதன். அவர் இனி இருப்பதையும் கெடுக்காமல்... அரசியலில் இருந்து விலகி ஒய்வு எடுப்பதே.. தமிழ் மக்களுக்கு நல்லது. வடக்கு மாகாணத்தையே... சிங்களவனிடம் பறி கொடுத்தவர், தனது வெற்றியையே உறுதிப்படுத்தத் தெரியாதவர்... தமிழரசு கட்சியில் இருப்பது அவமானம்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
சுமந்திரன் இந்தத் தேர்தலில் தோற்றுப் போவார் என்று, கனவிலும் நினைத்திருக்க மாட்டார். அவரின் நினைப்பு எல்லாம் அனுரா அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர் பதவி பெறுவதிலேயே இருந்தது. ஏன்.... பிரதம மந்திரி ஆசை கூட ஆளுக்கு இருந்தது. அதற்கான... முன்னேற்பாடுகளை சமூக வலைத்தளங்களில் சொல்லிக் கொண்டே வந்துள்ளார். 😂 🤣 இப்போ... மக்கள் அவரின் கனவில், சாணியில் தோய்த்த செருப்பால்... முகத்தில் அடித்து கலைத்து விட்டார்கள் என்பதே உண்மை.
-
'ஆண்களுடன் உடலுறவு இல்லை, குழந்தைகள் வேண்டாம்' - அமெரிக்காவில் பிரபலமாகும் 4B இயக்கம் என்பது என்ன?
இப்படியாவது…. உலக சனத்தொகை கொஞ்சம் கட்டுப்பட்டு இருக்கட்டும்.
-
முதல் தடவையாக இரு மலையகத் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு
உங்கள் ஏரியாவில் இருந்து என்றால்… கைதடி தானே. 😁
-
முதல் தடவையாக இரு மலையகத் தமிழ்ப்பெண்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு
பெருமையாக உள்ளது, தமிழ் சகோதரிகளே. மிக நீண்ட காலமாக பாராளுமன்றத்தில் தமிழ்ப் பெண்கள் இல்லாத குறையை நீங்கள் நீக்கி விட்டீர்கள். புலிகள் காலத்தில்… பத்மினி சிதம்பரநாதன் பாராளுமன்றில் இருந்தவர் என நினைக்கின்றேன். அனுர கட்சி தமிழ் பெண்களை போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்தமைக்கு நன்றிகள்.
-
தேர்தலில் பெரும் வெற்றி ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணை- உலக நாடுகள் ஆதரவளிக்கவேண்டும் - எரிக்சொல்ஹெய்ம்
திரும்ப வந்திட்டார். ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும்… தான் முன்பே எழுதி வைத்த அறிக்கைகளை அச்சுப் பிசகாமல் பத்திரிகைகளில் வெளியிட்டு, தனது இருப்பையும் காட்டிக் கொள்ளும் சுயநல அல்ப புத்தி உள்ள மனிதன் தான் எரிக்சோல்ஹைய்ம். இவர் போர் முடிந்த பின்… சர்வதேச அளவில் தமிழ் மக்களுக்கக ஒரு துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை. மொத்தத்தில்… இவர் ஒரு காகிதப் புலி.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
தனிமனிதன்…. சுமந்திரன் ஒருவரை நம்பித்தான் 75 வருட பாரம்பரியம் உள்ள தமிழரசு கட்சியே உள்ள மாதிரி இங்கே கருத்து வைக்கப் படுகின்றவர்களின் நோக்கம்.... மக்களால் தோல்வி அடையச் செய்த ஒருவரை, மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் அனுப்புவதற்கான சதி வேலை என்றே கருத வேண்டி உள்ளது. சுமந்திரனை மீண்டும் பின்கதவால் பாராளுமன்றம் அனுப்பினால்…. 75 வருட கால தமிழரசு கட்சியே காணாமல் போய் விடும் என்பதை மறவாதீர்கள். மக்கள் தீர்ப்பை மதியுங்கள். அவர்கள் மேல், உங்களின் தனிப்பட்ட சுயநல ஆசைகளை திணிக்காதீர்கள். இனி…. உள்ளூராட்சி, மாகாணசபைத் தேர்தல்கள் வர இருக்கின்றன. தமிழரசு கட்சிக்கு… ஒரு புதிய ஊடகப் பேச்சாளாரை நியமித்து, சுமந்திரனை அப்புறப் படுத்துங்கள். சுமந்திரனின் மூஞ்சையை பார்த்தாலே மக்கள் வேறு கட்சிகளுக்கு வாக்கு போட்டு விட்டு போய் விடுவார்கள். அந்தளவு கோபத்தை சுமந்திரன், தனது தான் தோன்றித்தனமான செயல்களால் தமிழ் மக்களிடம் சம்பாதித்து வைத்துள்ளார்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
அதானே…. இவருக்கு, இந்தியாதான் சரிபட்டு வரும். 😂
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
திரி சங்கு நிலைமை. 😂 அந்த ஆளை கனடாவுக்கு கூப்பிட்டு விடுவமா. 🤣
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
உண்மை யில் எனக்குத் தெரிந்த காெடுரம் இதுதான். Vic Jeyathevan
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
இப்பவே... சுமந்திரன் உள்ளே போவதற்கு, சகல மட்டங்களிலும் தூள் பறக்கும் தொலை பேசி உரையாடல்களை இரவு பகலாக நடத்திக் கொண்டு இருப்பார்.
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
ஆம். என வாக்களித்துள்ளேன். எப்படியும் சுமந்திரன்... வழக்கமாக செய்வது போல், மத்திய குழுவை மிரட்டி.. (Black Mail பண்ணி) உள்ளே வந்து விடுவார் என நினைக்கின்றேன். 😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
போன தேர்தலில் மாவை சேனாதிராசாவை வீட்டுக்கு அனுப்பியவர்கள், இந்தத் தேர்தலில் சுமந்திரனை வீட்டுக்கு அனுப்பி உள்ளார்கள். 😂 மாற்றம் ஒன்றே மாறாதது. 🤣 நல்லாய் ஓய்வு எடுங்க ராசா.... 😂
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
கட்சியினை பிரதிநிதிப்படுத்துவதற்கு சுமந்திரன் நல்ல தெரிவாக இருக்கலாம். ஆனால்... மற்றவர்களை அரவணைத்து செல்லும் பழக்க வழக்கம், இல்லாதவரை.. கட்சி இன்னும் விட்டு வைத்திருந்தால்... கட்சியே காணாமல் போய் விடும். தனிமனிதன் முக்கியமா? கட்சி முக்கியமா எனும் போது.... கட்சியே பலரது தெரிவாக இருக்கும். கீழே... @zuma எழுதிய அருமையான பதிவு ஒன்று உள்ளது. அதனைப் பார்த்தீர்களோ தெரியாது. உங்கள் பார்வைக்காக இணைக்கின்றேன். 👇 👉 //யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சியின் தேல்விக்கு முக்கிய காரணம் சுமந்திரனே ஆகும். - ஒரு குழுவாக செயற்படாமை, தனது கட்சியின் தலைமை வேட்ப்பாளருக்கு எதிராக நிறுவப்படாத ஊழல் கட்டுக்கதைகளை பரப்பியமை. - தனது வெற்றிக்காக பிணாமி வேட்ப்பாளர்களை நியமித்தமை, அவர்கள் அனைவரும் ஒரே சமூக அந்தஸ்து ( social status) உடையவர்கள். - மக்களின் மனநிலை அறியாமல் மேட்டிக்குடி அரசியல் பேசியமை - மக்களுக்கும், அநுராவுக்கு இடையில் இடைத்தரகர் அரசியல் செய்ய நினைத்தமை. - தமிழரசு கட்சியை சமூக இயக்கமாக மாற்றாமல் ( NPP போல் ), தனது இருப்பை தக்க வைக்க செயற்பட்டமை என்று பலவற்றை கூறலாம்.// 👈
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நன்றி விசுகு. சுமந்திரன் அந்தப் பொறுப்பை கஜேந்திரகுமாரிடம் கொடுத்துள்ளார் எனும் போது, ஆரோக்கிய அரசியல் ஆரம்பமாகி விட்டது என நினைக்கின்றேன். இவர்கள் முதலே ஒற்றுமையாக இருந்திருந்தால் இன்று வடக்கு கிழக்கில் இருந்து 20 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல் தெரிவு செய்யப் பட்டிருப்பார்கள். ஆனால் என்ன செய்வது.... கையை சுட்ட பின்புதான், புத்தி தெளிய வேண்டும் என்று இருக்குது.
-
மக்கள் நிராகரித்தால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் திட்டவட்டம்
//யாழ்மாவட்டத்தைப்பொறுத்த வரை நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட கயேந்திரகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார் அரசியலமைப்பு வரைபை அக்கு வேறாக பிரித்து மக்களுக்கு கூறக்கூடிய அவரிடம் மக்கள் அதற்கான பொறுப்பை வழங்கியுள்ளனர் அதனை அவர் செய்வார் என நம்புறன் - சுமந்திரன் பேட்டி// நன்றி @விசுகு @vasee சுமந்திரன் அந்தப் பொறுப்பை கஜேந்திரகுமாரிடம் கொடுத்து விட்டார் என மேலே உள்ள பதிவில் உள்ளது. அத்துடன்... ஸ்ரீலங்காவில் சுமந்திரன் மட்டும்தான் லோயர் இல்லை கண்டியளோ... 😂 வசி... கடந்த இரு மாதமாக ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், யாழ்.கள தேர்தல், யாழ்.கள கருத்துக் கணிப்பு என்று... செய்திகளை தேடி சேகரித்து வாசித்து, காணொளி பார்த்து... என்ரை மண்டை எல்லாம்... விண் விண் என்று வலிக்குது. இனியும் ஒரு கருத்துக் கணிப்பா... வேண்டாம் சாமீ. 🤣
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
"கெடு குடி, சொல் கேளாது" என்பார்கள். மீண்டும் பழைய ஆள் சுமந்திரன் என்றால்... தந்தை செல்வா சொன்ன மாதிரி... "தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்."
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
வடக்கு மாகாணத்தில்... தமிழரசு கட்சிக்கு, இறுதிச் சடங்கு நடத்தி வைக்கப் பட்டது.
-
மக்கள் நிராகரித்தால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் திட்டவட்டம்
சுமந்திரன் மானஸ்தன். சொன்ன சொல்லை, காப்பாறுவார் என நம்புகின்றோம். தமிழரசு கட்சியும்.. சுமந்திரனுக்கு கரைச்சல் கொடுக்காமல், வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை கொடுக்கவும். ✔️ சுமந்திரனை மீண்டும் தமிழரசு கட்சி பின்கதவால் பாராளுமன்றம் அனுப்பினால் வருகின்ற உள்ளுராட்சி, மாகாண சபை தேர்தல்களில் எல்லாம் மக்கள் மூர்க்கமாக... தமிழரசு கட்சியை தோற்கடித்து, ஆறடி குழியில் புதைத்து விடுவார்கள். யோசித்து முடிவு எடுங்கோ.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஓம். நீங்கள் சொல்லிய பின்புதான் வடிவாக கவனித்தேன் அல்வாயன். பதுளை,யாழ்ப்பாணம், மாத்தறை, நுவரேலியா என நான்கு. 🙂
-
தேசியப்பட்டியலை பெறுவதில் சுமந்திரன் - வைத்தியர் சத்தியலிங்கம் இடையே போட்டி!
நீங்கள்... இவ்வளவு நாளும், புடுங்கின ஆணியே போதும். இனி... புதுசா ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அதில் மூன்று தமிழ் பெண்கள்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாய்ப் போய் விட்டதே... -சுமந்திரன்-