Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. வழமையாக புங்குடுதீவு ஆட்கள்.... வியாபாரத்தில் கவனம் செலுத்தி முன்னேறுவார்கள். இவர்... களவில் இறங்கி முன்னேறியதை, பிரபா குறிப்பிடுகின்றார் என நினைக்கின்றேன் ரதி. 😂
  2. டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்; எல்லை பகுதிகளில் பதற்றம்! வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பேராட்டத்தை ஆரம்பித்துள்ள இந்திய விவசாயிகள் குழு, இன்று டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனை முன்னிட்டு பஞ்சாப்-ஹரியானா எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, அவர்களின் முன்னேற்றத்தைத் தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ‘டெல்லிக்கு செல்வோம்’ (டெல்லி சலோ) என்ற போராட்டத்தை பஞ்சாப் – ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு என்ற இடத்தில் இருந்து விவசாயிகள் நவம்பர் 6 தொடங்கினர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று இருகின்றனர். டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி இந்தப் பேரணி செல்லும் என அவர்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து, விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர். கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவதற்கான ஏற்பாடுகளும், தண்ணீர் பீய்ச்சும் வாகனங்களும் தயாராக நிறுத்தப்பட்டிருந்தன. இருப்பினும் விவசாயிகள் கைகளில் கொடிகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிக்கொண்டு பேரணியை தொடங்கினர். பொலிஸார் அமைத்திருந்த கொங்கிரீட் தடுப்பு அருகே வந்தபோது, அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 6 பேர் காயமடைந்ததால் பேரணியை சற்று நிறுத்தி இருந்தனர். இந்நிலையில் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் இன்று மீண்டும் தொடங்க உள்ளனர். இதனால் ஹரியானாவின் ஷம்பு எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது. விவசாயிகளின் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் ஷம்பு எல்லையைவிட்டு வெளியே நகர முடியாத வகையில் ஆணி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. ஷம்பு எல்லையில் பெரும் எண்ணிக்கையில் பொலிசாரும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. https://athavannews.com/2024/1411436
  3. டொலரை பலவீனப்படுத்தும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை – எஸ் ஜெய்சங்கர். பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலளித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், அமெரிக்க டொலரை பலவீனப்படுத்தும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை என்று கூறினார். கட்டார் தலைநகர் தோஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இது தொடர்பில் உரையாற்றிய அவர், பிரிக்ஸ் நாணயத்தை வைத்திருக்கும் திட்டம் எங்களிடம் இல்லை என்றும், அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்த பங்காளியாகும். இந்த விவகாரத்தில் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். அமெரிக்க டொலருக்கு பதிலாக புதிய நாணயத்தை உருவாக்கவோ அல்லது வேறு எந்த நாணயத்தையும் திரும்பப் பெறவோ மாட்டோம் என்று பிரிக்ஸ் நாடுகளிடம் உறுதிமொழி கோரி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக தளத்தில் பதிவிட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் ஜெய்சங்கரின் இந்த பதில் வந்துள்ளது. ஜனவரி 2025 இல் வெள்ளை மாளிகைக்கு மீண்டும் திரும்பத் தயாராக உள்ள குடியரசுக் கட்சித் தலைவர், அமெரிக்க டொலரில் இருந்து விலகிச் செல்லும் திட்டங்களைத் தொடர்ந்தால், பிரிக்ஸ் நாடுகள் 100 சதவீத வரிக் கட்டணங்களை எதிர்கொள்வார்கள் என்றும் எச்சரித்திருந்தார். கடந்த மாதம் ரஷ்யாவில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, அதன் உறுப்பு நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டொலருக்கு மாற்றாக வேறு நாணயத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தியிருந்தன. பிரிக்ஸ் குழுவில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் பிற நாடுகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1411409
  4. பல கொலைகளுடன் தொடர்புடைய இலங்கையர் கனடாவில் கைது! யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அஜந்தன் சுப்ரமணியம் என்று அழைக்கப்படும் 32 வயதான பிரசன்ன நல்லலிங்கம் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இவர், இலங்கையிலும் பல கொலைகளுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம், சந்தேகநபரை கைது செய்ய இலங்கையின் பாதுகாப்புப் படையினர் சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற இவர், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கனடாவுக்கு வந்த போது கனேடிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர‍ை மேலதிக விசாரணைகளுக்காக பிரான்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கனேடிய பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர். பிரசன்ன நல்லலிங்கம் தற்போது காவலில் வைக்கப்பட்டு, நாடு கடத்துவது தொடர்பான முடிவுக்காக காத்திருக்கிறார். அவரது விசாரணை 2025 மே மாதம் திட்டமிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1411450
  5. டமாஸ்கஸை கட்டுப்படுத்தியதாக சிரியா கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு! பஷர் அல்-அசாத்தின் 24 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததாக சிரிய கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மின்னல் தாக்குதலைத் தொடர்ந்து அரசு தொலைக்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை (07) வெளியிட்ட முதல் அறிவிப்பில் அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர். சிரியாவின் ஆயுதமேந்திய எதிர்க்கட்சி, அதன் போராளிகள் தலைநகர் டமாஸ்கஸைக் கைப்பற்றியதாகவும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. டமாஸ்கஸ் “இப்போது அசாத்திடமிருந்து விடுபட்டுள்ளது” என்று கிளர்ச்சியாளர்கள் சமூக ஊடகங்களில் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டனர். ஜனாதிபதி பஷர் அல்-அசாத் எங்கிருக்கிறார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. எனினும், பிரிட்டனை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு, அசாத் டமாஸ்கஸில் இருந்து டிசம்பர் 8 அன்று அதிகாலையில் விமான மூலமாக புறப்பட்டுச் சென்றதாகக் கூறியது. அந்த அறிக்கையை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் சிரிய பிரதமர் மொஹமட் காசி அல்-ஜலாலி ஒரு வீடியோவில், “மக்கள் தேர்ந்தெடுக்கும் எந்தவொரு தலைமைக்கும் அரசாங்கம் ஒத்துழைக்க தயாராக உள்ளது” என்று கூறினார். ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) கிளர்ச்சிக் குழுவின் தலைவரான அபு மொஹமட் அல்-கோலானி, 775,000 மக்கள் வசிக்கும் ஹோம்ஸை கிளர்ச்சிப் போராளிகள் “விடுவிப்பதற்கான இறுதி தருணங்களில்” இருப்பதாக டிசம்பர் 7 ஆம் திகதி பிற்பகுதியில் கூறியிருந்தார். அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் HTS ஒரு பயங்கரவாதக் குழுவாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், அசாத் ஆட்சியின் வீழ்ச்சி ரஷ்யாவுக்கு‍ ஒரு பெரிய புவிசார் அரசியல் பின்னடைவை பிரதிநிதித்துவப்படுத்தும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். இது தெஹ்ரானுடன் சேர்ந்து பல ஆண்டுகால உள்நாட்டுப் போரின் மூலம் சிரிய அரசாங்கத்தை ஆதரித்துள்ளது. சிரியாவில் ரஷ்யா பல இராணுவ தளங்களைக் கொண்டுள்ளது. இதில் ஹெமிமிமில் ஒரு விமானத் தளம் மற்றும் டார்டஸில் உள்ள மூலோபாய கடற்படை வசதிகளும் அடங்கும். இவை ஆப்பிரிக்காவில் மொஸ்கோவின் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் பயன்படுத்தப்படுகின்றன. https://athavannews.com/2024/1411444
  6. சிரிய அதிபர் அசாத், சிரியாவை… விட்டு வெளியேறியதுடன் சிரியாவில் அமைதி திரும்புமா. அல்லது சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சிக்காரர்களின் மூலம், “தலிபான்கள்” போல கெடுபிடிகள் தொடருமா?
  7. உப்புக்கு தட்டுப்பாடு ? பண்டிகைக்காலம் நெருங்குகின்ற நிலையிலாவது அரசாங்கம் அத்தியவசிய பொருட்களின் விலையை குறைத்து, பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர். இந்நிலையில், எதிர்வரும் பண்டிகை காலத்தில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும், இதனால் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் எச்சரித்துள்னர். எனவே இதற்கு பரிகாரமாக இந்தியாவில் இருந்து உப்பை விரைவில் இறக்குமதி செய்ய வேண்டும் என தொழிலதிபர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மழையால் உப்பு உற்பத்தி இல்லை, மழையால் விளைந்த உப்பை அறுவடை செய்ய முடியாமல் வியாபாரிகள் தவித்து வருகின்றனர். இதற்கிடையில், உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், அதிக அளவு உப்பு கரைந்து நாசமாகியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக 05 கிராம் உப்பை ஒருவர் சாப்பிட வேண்டும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, சிற்றுண்டி மற்றும் உலர் உணவு உற்பத்தியிலும் உப்பு பயன்படுத்தப்படுகிறது, விவசாய நடவடிக்கைகளிலும் உப்பைப் பயன்படுத்துகின்றனர். அதன்படி, ஆண்டுக்கு குறைந்தபட்சம் 38,325 மெட்ரிக் டன் உப்பும், 46,000 மெட்ரிக் டன் உப்பும் தேவைப்படுகிறது. அம்பாந்தோட்டை, புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் உள்ள தனியார் மற்றும் அரச சுரங்கங்களில் மட்டுமே இந்த நாட்டில் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது என்பது சுட்டிக்காட்டத்தக்கது. https://athavannews.com/2024/1411376
  8. நீங்கள் பென்சன் எடுத்து விட்டீர்கள்தானே…. முன்னுக்குப் போய், “நோட்டம்” பார்த்து வையுங்கள். 😁 நாங்கள் பின்னாலை வாறம். 😂 🤣
  9. “Made in Germany“ என்றாலே… இரும்பு சாமான்களுக்கு, உலகம் எங்கும் மதிப்புத்தானே அண்ணை. 🤣
  10. அப்ப… யாழ். களத்திலை இருந்து ஒரு கூட்டமே வியட்னாம் போகப் போகுது போலை இருக்கு. 🤣
  11. யாழுக்கு குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை. குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான சேவையினை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது. இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் சேவையினை வழங்கி வந்த கடுகதி ரயில் , தற்போதைய பாடசாலை விடுமுறை மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் 30ஆம் திகதி வரை தனது சேவையினை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 5.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட புகையிரதமானது 11:15 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடைந்து பின்னர் காங்கேசன் துறையிலிருந்து மதியம் 12.34 க்கு தனது சேவையை ஆரம்பிக்கும் புகையிரதம் இரவு 7.20 மணிக்கு மீண்டும் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடைகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து பயணிக்கும் புகையிரதம் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்தில் தனது பயணத்தினை நிறைவு செய்கிறது. https://athavannews.com/2024/1411341
  12. அதிகரிக்கவுள்ள மழை வீழ்ச்சி. கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் வானிலையில் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெறும் என்றும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும். மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். https://athavannews.com/2024/1411332
  13. தரமற்ற மருந்துகள் தொடர்பாக வெளியான உண்மை. தரமற்ற மருந்துகள் தொடர்பாக நேற்று முன்தினம் செய்தித்தாள்களில் வெளியான செய்தி குறித்து எதிர்க்கட்சியின் பிரதான இணைப்பாளர் கயந்த கருணாதிலக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து குறிப்பிட்ட அமைச்சர், ” தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகள்தான் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை ஊடாக விநியோகிக்கப்படுகின்றன. குறித்த அதிகார சபையில் வினைத்திறனற்ற நிலை காணப்படுகின்றது. தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவுகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவ்வாறு கூறும் விதமாக தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பின் ஊடாக செல்லவில்லை. தரத்தின் தன்மை தொடர்பாக பிரச்சினை இருப்பின் அது அறிவிக்கப்படும். இந்நிலையில், இது தொடர்பாக எதிர்காலத்தில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெளிவுபடுத்தியுள்ளார். https://athavannews.com/2024/1411338
  14. வாடகைக்கு காதலனை தேடும் பெண்கள் – வளரும் புது கலாசாரம். பல ஆண்டுகளாக ஆண்களுக்கும், பெண்களுக்கும் குறிப்பிட்ட வயதிற்குள் எல்லாம் நடக்க வேண்டும், வயது தாண்டி போக கூடாது என்று சொல்லி வயதிற்கு ஏற்றவாறு சடங்கு, சுப நிகழ்ச்சிகள் சமூகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருமண வயதை எட்டிய வியட்நாம் பெண்கள் திருமணத்தின் அழுத்தத்தை சமாளிக்க ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளனர். இளம்பெண்கள் தங்களுக்கு பிடித்த காதலனை வாடகைக்கு எடுத்துக்கொள்ளும் புதிய நடைமுறை தான் தற்போது வியட்நாமில் நடைபெற்று வருகிறது. திருமணம் செய்துகொள்ளும்படி பெற்றோர்கள் தொந்தரவு செய்வதால் தற்காலிகமாக அவர்களை சமாதானம் செய்வதற்காக பெரும்பாலான பெண்கள் இந்த வழியை பின்பற்ற தொடங்கி உள்ளனர். வடக்கு வியட்நாமை சேர்ந்த 30 வயதான பெண் ஒருவருக்கு காதலனை வீட்டிற்கு அழைத்து வருமாறு பெற்றோர் வற்புறுத்தியதன் காரணமாக வாடகைக்கு காதலனை அழைத்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்தே இந்த நடைமுறை அறிமுகமாகி உள்ளது. அந்தவகையில், வாடகைக்கு சென்ற 25 வயதான நபர் கூறும்போது, ஒரு வருடத்திற்கும் மேலாக “போலி காதலனாக” வேலை செய்து வருகிறேன். தனது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வதற்காக ஜிம்மிற்குச் செல்வது, சமைக்கக் கற்றுக்கொள்வது மற்றும் பாடும் திறன் மற்றும் உரையாடல் திறன்களை மேம்படுத்துவது, தோற்றம் மற்றும் திறன்களை வளர்த்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1411353
  15. எங்கள் இடத்தில் இருந்து…. 280 கிலோ மீற்றர் தூரம்தான் München. உங்கள் அண்ணர்… @குமாரசாமி யின் இடத்தில் இருந்து 650 கிலோ மீற்றர். 😂 ஜேர்மனிக்கு முதன் முறையாக வந்தீர்களா? உங்கள் முதல் பார்வையில்… ஜேர்மனியை பற்றி மனதில் தோன்றிய அபிப்பிராயத்தை அறிய ஆவல் ரதி.
  16. எனக்குத் தெரிய…. கஸ்தூரியார் வீதியும், ஸ்ரான்லி வீதியும் சந்திக்கும் மூலையில் (லிடோ தியேட்டருக்கு எதிரில்) பெரிய குளம் ஒன்று இருந்தது. அதில் பல தொழிலாளர்கள் உடுப்புகளை தோய்த்து, அங்கேயே உள்ள விசாலமான இடத்தில் தோய்த்த உடைகளை, உலர்த்தி விட்டு எடுத்துச் செல்வார்கள். 1970 கள் இருக்கலாம்…. அவ்விடத்தில் முதன் முதலாக “பூம்புகார்” என்ற ஒரு குளிர்பான கடை வந்தது. யாழ். மாநகர சபை எப்படி அனுமதி கொடுத்தது என்று தெரியவில்லை. எதிரே… ஹோட்டேல் பரடைஸ் என்ற கடையும், ஒரு தளபாடக் கடையும், சந்தியில்…. இராஜசூரியரின் பெற்றோல் நிலையமும் இருந்தது.
  17. எப்ப… எந்த இடத்துக்கு வந்தீர்கள் என்று விபரமாக சொல்லுங்கள் ரதி. 😁
  18. பண்டாரநாயக்காவுக்கு… சிங்களம் எழுத, வாசிக்கத் தெரியாது என்று நீங்கள் சொல்லித்தான் தெரியும் குமாரசாமி அண்ணை. ஆனால்… அனுரா பண்டாரநாயக்கா, அவ்வளவு புத்திசாலியான ஆள் இல்லை என்று அரசல் புரசலாக கேள்விப் பட்டுள்ளேன். அப்படி இருந்தும் வாரிசு அரசியல் மூலம் பல முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றார். சந்திரிக்காவின் இடத்திற்கு… அனுரா பண்டாரநாயக்காவை நியமிப்பதே ஶ்ரீமாவோவின் விருப்பமாக இருந்ததாக அறிகின்றேன். இதனைப் பற்றி @goshan_che க்கு கூடுதலாக தெரியலாம். 🙂
  19. விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சில இடங்களிலேயே… கடையுடன் சேர்ந்த வீட்டில் வசிக்கின்றார்கள். எல்லா இடங்களிலும் அல்ல. வீட்டுடன் இருக்கும் கடைகளில்… ஞாயிற்றுக் கிழமைகளிலும் பின் கதவால் போய் பொருட்கள் வாங்கலாம். 🤣 ”கட்டடங்களாக” - ஆதவன் நியூஸ். 😂
  20. அனுரவின் அடியில்... அம்மியே காற்றில் பறக்குது வளவன். 😂 👇 இவர் எல்லாம்... எம்மாத்திரம். ஜுஜுப்பி. 🤣
  21. கடந்த காலத்தில்… அவர்களுடன் சேர்ந்து, இவரும் “கல்லா கட்டுவதில்” மும்முரமாக இருந்திருப்பார். 😂 இப்போ… “ரைம் பாசிங்” அரசியல் செய்கிறார். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.