Everything posted by தமிழ் சிறி
-
கருத்து படங்கள்
- 2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு!
2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு! இலங்கைக் கடற்படை தனது 74 ஆவது ஆண்டு நிறைவை இன்று (09) கொண்டாடுகிறது. இதனை முன்னிட்டு, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரையின் பேரில், கடற்படையின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2138 சிரேஷ்ட மற்றும் சாதாரண மாலுமிகள் இன்று முதல் அமுலாகும் வகையில் உயர் பதவிகளுக்காக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். முதன்முறையாக, இலங்கையில் கடற்படையின் ஆரம்பம் 1937 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்கத் தொண்டர் கடற்படை கட்டளைச் சட்டத்தின் கீழ் ராயல் இலங்கை தன்னார்வ கடற்படை 1939 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. மேலும் அது 1943 அக்டோபர் 1 ஆம் திகதி ‘ராயல் இலங்கை தன்னார்வ கடற்படை சேவை’ ஆனது. 1950 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க கடற்படைச் சட்டத்தின் மூலம், 1950 ஆம் ஆண்டு டிசம்பர் 09 ஆம் திகதி ‘ராயல் சிலோன் நேவி’ ஸ்தாபிக்கப்பட்டதன் மூலம், அன்றைய அரச இலங்கை தன்னார்வ கடற்படை சேவையில் செயற்பட்ட அதிகாரிகள் மற்றும் மாலுமிகளிடமிருந்து, நிரந்தரமான ஒரு தொடக்கமாக அமைந்தது. அன்றிலிருந்து, நாட்டின் கடல் பரப்பின் பாதுகாவலர் என்ற சிறப்புப் பொறுப்பை நிறைவேற்றி, நாளுக்கு நாள் வளர்ந்து வந்த ராயல் சிலோன் கடற்படை, 1972 இல் இலங்கை குடியரசாக மாறியதும் ‘இலங்கை கடற்படை’ ஆனது. 1980 ஆண்டு முற்பகுதியில், நாட்டின் வடக்குப் பகுதியை மையமாகக் கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக, கடற்படையின் பாரம்பரியப் பாத்திரத்திலிருந்து போர்ப் பாத்திரமாக மாற்றப்பட்ட கடற்படை, அதன் பின்னர் தேசிய மனிதவளத்திலும் இராணுவத் திறனிலும் படிப்படியாக வளர்ந்தது. 2009 ஆம் ஆண்டு மனிதாபிமான நடவடிக்கையின் மூலம் நாட்டில் பயங்கரவாதத்தை வெற்றிகொள்வதில் சுமார் மூன்று தசாப்தங்களாக தனித்துவமான பங்களிப்பை வழங்கியது. இலங்கை கடற்படை தற்போது போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காகவும், அத்துடன் அல்லாதவற்றைக் கட்டுப்படுத்தவும் தனது வளங்களைப் பயன்படுத்துகிறது. கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பைப் பாதிக்கும் பாரம்பரிய கடல்சார் சவால்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுத்து கடற்படையினரின் அதிகபட்ச பலத்தைப் பயன்படுத்தி நாட்டின் கடல்சார் லட்சியத்தை அடைவதில் உறுதியாக உள்ளது. https://athavannews.com/2024/1411486- அமெரிக்க கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டோருக்கு ட்ரம்ப் மன்னிப்பு!
அமெரிக்க கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டோருக்கு ட்ரம்ப் மன்னிப்பு! அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், அடுத்த மாதம் பதவியேற்கும் முதல் நாளில், 2021 அமெரிக்க கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். அதேநேரம், 2024 ஜனவரி 6 கேபிடல் கலவரத்தை விசாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த லிஸ் செனி மற்றும் அவரது சக ஹவுஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கிய தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீது நீதித்துறை விசாரணையை நாடமாட்டேன் என்று ட்ரம்ப் கூறியதுடன், கேபிடல் கலவரத்தை விசாரித்த சட்டமியற்றுபவர்கள் உட்பட அவரது அரசியல் எதிரிகள் சிலர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும், ஜனவரி 20 அன்று பதவியேற்ற பின்னர், குடியேற்றம், எரிசக்தி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட நிர்வாக உத்தரவுகளை பிறப்பிக்கவுள்ளதாகவும் ட்ரம்ப் உறுதியளித்தார். அமெரிக்காவின் மிகப் பெரிய குற்றவியல் விசாரணை எனக் கூறப்பட்ட 2021 ஜனவரி 6 தாக்குதலில் குறைந்தது 1,572 பிரதிவாதிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக நுழைவது முதல் தேசத்துரோக சதி மற்றும் வன்முறைத் தாக்குதல் வரையிலான குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும். இவர்களில் 1,251 க்கும் மேற்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர் மற்றும் 645 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1411506- சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்! பதவி நீக்கம் செய்யப்பட்ட சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் (Bashar al-Assad) தனது குடும்பத்துடன் மொஸ்கோவிற்கு வந்தடைந்தார், அங்கு அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ரஷ்யா புகலிடம் வழங்கியதாக கிரெம்ளின் வட்டாரம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிகாரிகள் ஆயுதமேந்திய சிரிய எதிர்ப்பின் பிரதிநிதிகளுடன் தொடர்பில் உள்ளனர், அவர்களது தலைவர்கள் சிரியாவில் உள்ள ரஷ்ய இராணுவ தளங்கள் மற்றும் இராஜதந்திர பணிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். சிரிய மக்களின் நலன்களைப் பாதுகாக்கவும் ரஷ்யாவிற்கும் சிரியாவிற்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்தவும் அரசியல் உரையாடலைத் தொடர மொஸ்கோ எதிர்பார்த்துள்ளதாகவும் கிரெம்ளின் வட்டாரம் மேலும் கூறியுள்ளது. சிரிய கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை (08) ஒரு மின்னல் முன்னேற்றத்திற்குப் பின்னர் தலைநகர் டமாஸ்கஸை எதிர்ப்பின்றி கைப்பற்றினர். இது 14 ஆண்டுகால உள் நாட்டுப் போருக்கு மத்தியில் சுமார் 50 ஆண்டுகால பஷர் அல்-அசாத்தின் குடும்ப ஆட்சியை முடிவுக்கும் கொண்டு வந்தது. https://athavannews.com/2024/1411490- பார் அனுமதி பெற்றவர்கள் யார்?; இன்று மாலை தெரிந்துவிடும்
நன்றி கவியரசு கண்ணதாசன் & @Kavi arunasalam- மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
ஓணாண்டி... மேலே உள்ளது உங்களை போன்றவர்களுக்காகத்தான் எழுதியிருக்கு. நன்றி கவியரசு கண்ணதாசன் & @Kavi arunasalam- மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
மாகாண சபைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப் படும் போது... சூடு கண்ட பூனை, ஸ்ரீதரன் வேறொரு வியூகத்தை எடுப்பார் என நம்புகின்றேன். ஆனால்... நீங்கள் சொல்வது போல்... சிறி, கஜேஸ், செல்வம், விக்கி அணி அமைக்க தற்போது காலம் கனியவில்லை. ஓரிரு வருடத்தில் நடக்கலாம்.- மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
தமிழரசு கட்சியின் தேசியப் பட்டியல் மூலம்... தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் வைத்தியர் சத்தியலிங்கத்தை, பதவி விலக வைத்து... அவரை வடக்கு மாகாண சபைக்கு போட்டியிடச் செய்வதன் மூலம் பாராளுமன்றில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்... வழக்கம் போல் பின்கதவால் பாராளுமன்றம் போக முயற்சிக்கின்றார். 😎 முன்பு சுமந்திரன்... " நான், தேர்தலில் மக்களால் நிராகரிக்கப் பட்டால்... தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் போக மாட்டேன்" என்று கூறினாரே என்று நீங்கள் கேட்டால்... "அது... போன மாசம், இது... இந்த மாசம்" என்று சொன்னாலும் சொல்வார். 😂 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின்... ராஜதந்திர சிந்தனைகளை எல்லாம், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களே... டக்கென்று கண்டுபிடித்து விடுவதுதான் சுமந்திரனின் கஸ்ரகாலம். 🤣- புலியின் தொழிற்சாலை.
ஒரு காட்டில் வயசாகி போன🐱 புலி ஒன்னு ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சுது. அங்கே ஒரு எறும்பு🐜 வேலை செஞ்சுது. அதுபாட்டுக்கு வரும் சுறுசுறுப்பா எல்லா வேலைகளையும் செஞ்சு முடிச்சிட்டு சாயந்திரம் ஆனா வீட்டுக்கு போயிடும். புலியாருக்கு ஏக சந்தோசம் கணிசமான லாபமும் கிடைச்சுது. நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, நம்மூர்ல பணம் படைச்சவனுக்கு தோணுற மாதிரி நடு ராத்திரியில் திடீர்ன்னு புலியாருக்கு ஒரு ஐடியா தோணுச்சு. எறும்பு தனியாவே வேலை செய்யுதே அதை கண்காணிக்கற அளவுக்கு நமக்கும் போதுமான அறிவு இல்லை, நாம எறும்பை கண்காணிக்கவும் ஆலோசனை சொல்லவும் ஒரு உற்பத்தி மேலாளரை (production manager) நியமித்தால் உற்பத்தி அதிகமாகும்னு ஒரு தேனியை கொண்டு வந்தது. அந்த தேனியும் வேலையில் ஒரு புலிதான். பல கம்பெனிகளில் வேலை செய்த பழுத்த அனுபவசாலி (இப்போ அந்த கம்பெனியெல்லாம் இருக்குதான்னு கேக்காதிங்க). அந்த தேனி சொல்லுச்சு, "பாஸ் எறும்பை அதன் போக்குல விட முடியாது, அதுக்கு முறையான ஒர்க் ஷெட்யூல் போட்டுக் கொடுத்தால் இன்னும் கூடுதலா வேலை வாங்கலாம். அதுக்கு நிறைய வேலை இருக்கு எனக்கு ஒரு செக்ரட்ரி வேணும்"னுச்சு. புலிக்கு ஏக சந்தோஷம் இந்த தேனி என்னமா யோசிக்குது நமக்கு இவ்வளவு நாளா இது தோணலையேன்னு ஒரு முயலை🐰 செக்ரட்டரியாக்குச்சு. அத்தோட புலியார் நமக்கும் கொஞ்சம் தெரியும்னு காட்டிக்க, "ஆள் போட்டாச்சு இனிமே எனக்கு தினமும் வேலை முன்னேற்றம் குறித்து ரிப்போர்ட் வரைபடமாவும் அட்டவணையாவும் கொடுக்கனும்"னுச்சு. "ஓகே பாஸ் அதுக்கென்ன, பிரமாதமா செஞ்சிடலாம் அதுக்கு ஒரு கம்ப்யூட்டர், பிரிண்டர், புராஜக்டர் எல்லாம் வேணுமே"ன்னுச்சு, அப்படியே வாங்கிகிச்சு... ஒரு கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்டும் பூனை 🐱ஒன்றின் தலைமையில் அமைச்சாச்சு. இப்போ ஏகப்பட்ட கெடுபிடி நெருக்கடிகளால் விரக்தியடைந்த அந்த எறும்போட வேலையில் ஒரு தொய்வு வந்துச்சு. உற்பத்தி குறைந்தது. புலி நினைச்சுது, எல்லாம் சரியா இருந்தும் ஏனிப்படி? தேனியோட ஐடியாக்களை எறும்புக்கு விளக்கமா எடுத்துச்சொல்ல ஒரு தொழில்நுட்ப ஆலோசகரை போடுவோம்னு ஒரு குரங்குக்கு🐒 அந்த வேலையை கொடுத்தது. ஏற்கனவே டல்லான எறும்பை இப்போது குரங்கும் அதன் பங்குக்கு குழப்ப அன்றய தினத்துக்காக திட்டமிடப்பட்ட வேலைகளை அன்றைக்கே முடிக்காமல் போனது எறும்பு. மேலும் உற்பத்தி குறைவு நஷ்டத்தில் இயங்கியது ஃபேக்டரி. 'எதைத் தின்னா பித்தம் தெளியும்' என்ற மனநிலைக்கு ஆளான புலியார் நஷ்டத்தை சரி செய்ய என்ன செய்லாம்னு ஆராய ஒரு ஆந்தையை நியமிச்சது. ஆந்தை மூன்று மாத ஆராய்ச்சிக்கு பின் கடைசியா இப்படி சொன்னது. "தொழிற்சாலையில் தேவைக்கு அதிகமா ஆள் இருப்பதே காரணம் யாரையாவது வேலையை விட்டு எடுத்துட்டா நிலைமை ஓரளவு சீராகும்" "யாரை எடுக்கலாம் அதையும் நீயே சொல்லிடு" என்றது புலி. "அதிலென்ன சந்தேகம் சரியாக வேலை செய்யாத அந்த எறும்பை தானென்று" அதிரடியாக சொன்னது ஆந்தை.🦉 இப்படித்தான் உலகெங்கும் பொதுத்துறை மற்றும் தனியார்துறைகளில் எதுவும் செய்யாமலே "படம் காட்டுபவன் பிழைத்துக் கொள்கிறான்". வேறெதுவும் தெரியாது வேலையை மட்டுமே செய்பவன் பாதிப்புக்கு உள்ளாகிறான்...! Latha Babu 😂 🤣- சிரிக்கலாம் வாங்க
டாக்டர் "ஸ்டெதஸ்கோப்"பை காதில் வைக்க மறந்துட்டீங்க. 😂- மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடந்த தமிழரசு கட்சித் தலைவருக்கான போட்டியில்... அவருடைய சொந்தக் கட்சிக்காரர்களாலேயே தோற்கடிக்கப் பட்டார். பின்... சென்ற மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில், தமிழ் மக்களால் தோற்கடிக்கப் பட்டார். ஆக... சுமந்திரனுக்கு இந்த ஆண்டு... "கனதியான" இரண்டு தோல்விகளை கொடுத்துள்ளது. முன்னாள் பா. உ. சுமந்திரன்... இந்த இரண்டு தோல்விகளையும் ஏற்றுக் கொண்டு, அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதே.. நல்லது. அவர், மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவாரேயானால்.. தமிழ் மக்கள், வடக்கு மாகாண சபைக்கு... அனுரவின் சிங்கள கட்சியை தெரிவு செய்வார்கள் என்பது 100 வீதம் உண்மை.- மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
அப்போதைய பத்திரிகைகளில்... வடக்கு மாகாணசபை அங்கத்தவர்களால் பகிரங்கமாக சுமந்திரனை குற்றம்சாட்டி தெரிவிக்கப்பட்ட கருத்துக்களே அவை. அத்துடன்.... அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச கூட, சுமந்திரனின் தலையீட்டைப் பற்றியும், மாகாணசபைத் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டாம் என்று, சுமந்திரன் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்து இருந்தார். நான் எனது நினைவில் உள்ளதை வைத்தே எழுதுகின்றேன். உதாரணத்துக்கு ஒன்று கீழே உள்ளது. எல்லா... ஆதாரமும் என்னால் திரட்ட எனக்கு நேரம் இல்லை. ஆர்வம் இருந்தால்... நீங்களே தேடி எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொல்வதை பார்த்தால்.... சுமந்திரன் இவற்றை செய்திருக்க மாட்டார் என்று நம்புவதுபோல் தெரிகின்றது. அதுசரி... உங்களிடம் இருந்து நான் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாதுதானே. 😂 நேரம் பொன்னானது. நன்றி, வணக்கம். 🙏 https://www.samakalam.com/தலைகாட்ட-தயங்கும்-தலைவர/- மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
மாகாணசபைத் தேர்தல் நடாத்தப் பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால்... இலங்கையின் தமிழ் மக்களுக்கு வடக்கிலும், கிழக்கிலும் இரு மாகாண சபைகள் கிடைக்க இருந்தது. அதில் கிழக்கில் இருந்ததை... சம்பந்தன் முஸ்லீம்களுக்கு தாரைவார்த்து கொடுத்தபின்... மிஞ்சி இருந்தது விக்கியர் தலைமையில் இருந்த வடக்கு மாகாண சபை. அதனை பொறுக்க முடியாத சுமந்திரன்... இல்லாத குடைச்சல் எல்லாம், சி. வி. கே. சிவஞானம் மூலமாக கொடுத்து அதை இயங்க விடாமல்... இறுதியில் ஜனாதிபதிவரை சென்று, அதனை முடக்கியவர்தான் சுமந்திரன். அவர்... மீண்டும் மாகாண சபை தேர்தல் வேண்டும் என்று கேட்பது முரணின் உச்சம். தனக்குத் தேவை இல்லாவிடில்... குழப்பி அடிப்பது. இப்போ... தனக்குத் தேவை என்றவுடன், தேர்தல் வேண்டும் என்று சொல்வதைத்ததான் தவறு என்கிறோம்.- மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
அதேதான்... நொச்சி. வந்த வேலையில்...பலதை முடித்து விட்டார். இன்னும் மிஞ்சி இருக்கிறதையும்... "வெட்டி சாய்ப்பம்" என்று புறப்பட்டு விட்டார். அண்மையில், யாழ்ப்பாணத்தில் சிறீதரனின் வீட்டில்... கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், செல்வராஜா கஜேந்திரனும் சந்தித்தித்தமையும்... சுமந்திரனுக்கு... "வயிற்று எரிச்சலை" ஏற்படுத்தி இருக்கும். அதை குழப்ப வேண்டுமென்றால்... இப்போ மாகாணசபை மூலமாக உள்ளே வந்துதான் ஆகவேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார் போலுள்ளது.- புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர
நீங்கள்... எல்லா, முட்டையையும் ஒரே கூடையில் வைக்கின்கிறீர்கள். அது... தப்புங்க. கூடை, கீழே விழுந்தால்.... "ஆம்லெட்" போடக் கூட... ஒரு முட்டையும், மிஞ்சாதுங்க.- சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
நாங்கள் பி.பி.சி.யில் வந்தால்தான் நம்புவம். 😜- மாகாண சபைத் தேர்தலை கால தாமதமின்றி நடத்தக் கோரும் சுமந்திரன்!
மாகாண சபை முதல்வராக... வர, சுமந்திரன் அந்தரப் படுகிறார் போலுள்ளது. அது சரி... "பாடின வாயும், ஆடின காலும் சும்மா இருக்காது" என்று சொல்வார்கள். 😂 விக்கியர் தலைமையில் இருந்த மாகாண சபைக்கு... குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருந்ததே சுமந்திரன் தானே. 😎 சுமந்திரன்... மாகாண சபை தேர்தலில் நின்றால், அனுரா கட்சிக்கும், அர்ஜுனா கட்சிக்கும் "ஜாக்போட்" பரிசு காத்திருக்குது. 🤣- சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
ஜோர்தானில் புரட்சி ஏற்பட்டாலும்... சவூதி கொஞ்சம் கஸ்ரம் என நினைக்கின்றேன். 😂 நம்ம அமெரிக்க Cow Boy அண்ணர் மனது வைத்தால் எதுவும் சாத்தியமே. 🤣- புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது - பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர
புதிய அரசியலமைப்பை உருவாக்கி சமர்ப்பிக்க... மூன்று வருடங்களை எடுக்கும் என்று எங்கோ ஒரு செய்தியில் வாசித்தேன். அதன் பின் இரண்டு வருடத்தில்... அடுத்த தேர்தல் வந்து விடும். நமது நாட்டில்.... வாக்குறுதிகளுக்கு மட்டும் பஞ்சம் ஏற்பட்டதே இல்லை. மகிந்த, ரணில், அனுர... ஆட்சி எதுவாக இருந்தாலும், புத்திரிகைகள் தினமும் வாக்குறுதிகளால் நிரம்பி வழியும்.- நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?
சிந்திக்க வைக்கும்.... நியாயமான கேள்வி சுவியர். உப்பை... அரசனில் இருந்து ஆண்டி வரை பாவிக்கின்றார்கள். ஆனால்.... அதில், பெரும் லாபம் இல்லாததால்... முதலாளிகள் அதில் அக்கறை செலுத்துவதில்லை.- கருத்து படங்கள்
- தேர்தல் முடிவுகளில் இருந்து கற்றுக் கொள்வதும் கற்றுக் கொள்ளாததும் – நிலாந்தன்!
தேர்தல் முடிவுகளில் இருந்து கற்றுக் கொள்வதும் கற்றுக் கொள்ளாததும் – நிலாந்தன்! நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பு, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு வழங்கிய ஒரு தண்டனைதான். அதே சமயம் அர்ஜுனாவைத் தெரிவு செய்தமை என்பது தமிழ் மக்கள் தங்களுக்கு தாங்களே வழங்கிய ஒரு தண்டனைதான்.அதன் விளைவுகளை அவர்கள் பின்னாளில் அனுபவிக்க வேண்டியிருக்கும் . தேர்தலுக்கு முன்பாக கட்சிகள் தங்களுக்கு இடையே அடிபட்டுக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் ஒரு மூத்த அரசு அதிகாரி என்னிடம் சொன்னார்,” போகிற போக்கைப் பார்த்தால் தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம் என்று தமிழ்ச் சனம் முடிவெடுக்கும் ஒரு நிலைமை வரலாம்” என்று. ஆம் அதுதான் நாடாளுமன்ற தேர்தலில் நடந்தது. அதுபோல கொழும்பில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஒரு மூத்த முகாமையாளர் சொன்னார் “இந்த முறை தும்புத்தடியை மாற்றிப் பார்ப்போம்” என்று. திருநெல்வேலி சந்தையில் ஒரு மூத்த வியாபாரி சொன்னார், “இவர்களுக்கு- அதாவது- தமிழ் தேசிய கட்சிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும்” என்று. இம் மூன்று கூற்றுக்களும் தமிழ் மக்களின் மனநிலையை ஏதோ ஒரு விகிதமளவுக்கு பிரதிபலித்தன என்றுதான் சொல்ல வேண்டும். அதுதான் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய தண்டனை. ஆனால் அந்த தண்டனையிலிருந்து கட்சிகள் கற்றுக் கொண்டனவா ? தமிழரசுக் கட்சிக்குள் சுமந்திரன் அணி அவ்வாறு கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.தேர்தல் முடிவுகளின் பின் சுமந்திரன் வழங்கும் நேர்காணல்கள், அவருடைய விசுவாசிகள் சமூகவலைத்தளங்களில் எழுதும் கருத்துக்கள், உட்கட்சி முரண்பாடுகளை அவர்கள் வெளிப்படுத்தும் விதம், தோல்வியை, அதனால் ஏற்பட்ட வெறுப்பை வெளிப்படுத்தும் விதம், போன்றவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அவர்கள் தேர்தல் முடிவுகளில் இருந்து எதையும் கற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. தேர்தல் முடிவுகள் மிகவும் தெளிவானவை.கடந்த ஆண்டின் முடிவிலும் இந்த ஆண்டின் தொடக்கத்திலும் ஆதவனுக்கு நான் எழுதிய கட்டுரைகளில் அதை மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தேன். “இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடக்கும் ஒரு தேர்தல் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மூத்த,பெரிய கட்சிக்குள் காணப்படும் சீரழிவை வெளியே கொண்டுவரும். அதேபோல இந்த ஆண்டின் முடிவில் நடக்கக்கூடிய ஒரு தேர்தலானது தமிழ்த் தேசிய அரசியலுக்குள் காணப்படும் சீரழிவை வெளியே கொண்டு வரும்” என்று. உண்மையில் அங்கு இந்த ஆண்டின் முடிவில் என்று கருதப்பட்டது, ஜனாதிபதி தேர்தல்தான். ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியதன்மூலம் அந்தச் சீரழிவை ஓரளவுக்குத் தவிர்க்கக்கூடியதாக இருந்தது. எனினும் ஜனாதிபதித்தேர்தல் முடிந்த கையோடு வந்த நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவை வெளியே கொண்டு வந்துவிட்டது. அந்தத் தேர்தல்மூலம் தமிழ் மக்கள் தங்களுக்கு வழங்கிய தண்டனையை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் போதிய அளவுக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்களா? இதில் தொடர் தோல்வி சுமந்திரனுக்குத்தான். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சிக்குள் நடந்த தேர்தலில் கட்சி உறுப்பினர்கள் அவரைத் தோற்கடித்தார்கள். அந்தத் தோல்வியை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. விளைவாக ஏற்பட்ட குழப்பங்களின் முடிவில் கட்சி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டது. இப்பொழுதும் நீதிமன்றத்தில் தான் நிற்கிறது. அதன் தலைவர் யார் என்பதில் தெளிவற்ற ஒரு நிலை. சுமந்திரன் உட்கட்சிப் பிரச்சினையை கையாண்ட விதம் தமிழ் மக்களுக்கு அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியதும் அவருடைய தோல்விக்கு ஒரு காரணம். அதாவது ஆண்டின் தொடக்கத்தில் அவருடைய கட்சி ஆட்களே அவரைத் தோற்கடித்தார்கள்.ஆண்டின் முடிவில் தமிழ்மக்கள் அவரைத் தோற்கடித்தார்கள்.இந்த தோல்விகளில் இருந்து அவர் கற்றுக் கொண்டிருக்கிறாரா ? அவருடைய நேர்காணல்களைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. கட்சிக்கு ஆசனங்கள் அதிகரித்து இருப்பதனை ஒரு வெற்றியாக அவர் காட்டப் பார்க்கிறார். இல்லை,அது வெற்றி அல்ல. தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த அதே அளவு ஆசனங்கள்தான் அரசாங்கத்துக்கும் கிடைத்திருக்கின்றன. அதையும் ஒப்பிட வேண்டும். மொத்த தமிழ் தேசிய ஆசனங்கள் சுருங்கியுள்ளன. அதையும் கணக்கில் எடுக்க வேண்டும். சாணக்கியனுக்கு கிடைத்த வெற்றி அவருடைய தனிப்பட்ட உழைப்பினால் மட்டும் கிடைக்கவில்லை. ஜனாதிபதி தேர்தலின் விளைவாகவும்தான் அந்த வெற்றி கிடைத்தது. தமிழ்ப் பொது வேட்பாளருக்கு மட்டக்களப்பில் கிடைத்தது 36 ஆயிரம் வாக்குகள்தான். ஆனால் வடக்கில் கிடைத்தது அதுபோல நான்கு மடங்கு. ஒரு கிழக்கு வேட்பாளருக்கு வடக்கில் கிடைத்த வாக்குகள் தாயக ஒருமைப்பாட்டுக்கு கிடைத்த வாக்குகள்தான். தாயக ஒருமைப்பாட்டுக்கான ஒரு நொதிப்பை அந்த வாக்களிப்பு ஏற்படுத்தியது. அந்த நொதிப்பும் ஒரு விதத்தில் கிழக்கில் தமிழரசுக் கட்சி பெற்ற வெற்றிகளுக்குக் காரணம். எனவே சாணக்கியன் தன்னுடைய வெற்றியின் எல்லாப் பரிமாணங்களையும் சரியாக மதிப்பிட வேண்டும். தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தேர்தல் முடிவுகளிலிருந்து பாடங்களைக் கற்றிருப்பதாகத் தெரியவில்லை. புலம்பெயர்ந்து வாழும் அதன் உறுப்பினர்கள் சிலர் வழங்கும் நேர்காணல்களில் அதைக் காண முடிகிறது. இம்முறை தேர்தலில் ஆயுதப் போராட்டப் பாரம்பரியத்தில் இருந்து வந்த பெரும்பாலான தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். செல்வம் அடைக்கலநாதனைத் தவிர. அவருக்கு கிடைத்த வெற்றி கூட அரும்பொட்டில் கிடைத்த ஒரு வெற்றி.மன்னாரில் அவருக்குச் சவாலான ஒரு வேட்பாளர் நிறுத்தப்படாததால் கிடைத்த வெற்றி. உள்ளூரில் சமூகம் சார்ந்து, மதம் சார்ந்து கிடைத்த வெற்றி. அவரைத் தவிர வேறு எந்த ஆயுதப் போராட்ட மரபில் வந்த தலைவரும், உறுப்பினரும் வெற்றி பெறவில்லை. அதிலிருந்து கற்றுக் கொள்வதற்குப் பதிலாக “அங்கே ஒரு சதி நடந்திருக்கிறது. ஆயுதப் போராட்ட மரபில் வந்தவர்களைத் தோற்கடிக்கும் சதி ” என்று ஒரு சூழ்ச்சிக் கோட்பாடு உருவாக்கப்படுகிறது. அது மட்டுமல்ல,பொதுக் கட்டமைப்பு தொடர்ந்து இயங்கியிருந்திருந்தால் அந்த தோல்வியைத் தவிர்த்திருக்கலாம் என்றும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அதில் உண்மை உண்டு. ஆனால் பொதுக் கட்டமைப்பை நோக்கி உழைத்த தமிழ் மக்கள் பொதுச்சபையானது அரசியலில் அறம், நேர்மை என்பவற்றை அதிகம் வலியுறுத்திய ஒரு சிவில் சமூகக் கூட்டமைப்பு ஆகும். கட்சிகள் தந்திரங்களைச் செய்யலாம். அரசியல்வாதிகள் தந்திரம்தான் வாழ்க்கை என்று கூறலாம். ஆனால் சிவில் சமூகங்கள் அவ்வாறு கூற முடியாது. “அரசியலில் கண்ணியமானவர்களின் தொகையை அதிகப்படுத்துவது, நேர்மையானவர்களின் தொகையை அதிகப்படுத்துவது, வாக்காளர்களுக்கு பொறுப்புக் கூறும் ஆட்களை முன்னிறுத்துவது…” என்றெல்லாம் கூறிவிட்டு, சிவில் சமூகங்கள் அதற்கு மாறாக நடக்க முடியாது. பொதுக்கட்டமைப்பை உருவாக்கும் பொருட்டு எழுதப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மாறாக சங்குச் சின்னத்தை சில கட்சிகள் சுவிகரித்தன. தமிழ் மக்கள் பொதுச்சபையானது அந்த சின்னத்தை பயன்படுத்த வேண்டாம் என்று ஞாயிற்றுக்கிழமை கேட்டிருந்தது. திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களுக்குள் அது தொடர்பான முடிவை எடுத்து தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்திருக்கலாம். அந்த இடத்தில் பொதுக் கட்டமைப்பின் புரிந்துணர்வுத் தளத்தைப் பாதுகாப்பதா? அல்லது சங்குச் சின்னத்தின் மூலம் புதிதாகத் திரட்டப்பட்ட வாக்குகளை சுவிகரிப்பதா? என்ற இரண்டு தெரிவுகளுக்கு இடையில் முடிவெடுக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருந்தது. அவர்கள் பொதுக் கட்டமைப்பை பாதுகாப்பது என்று முடிவெடுத்து இருந்திருந்தால், சங்குச் சின்னத்தை சுவிகரிக்கும் முயற்சியைக் கைவிட்டு இருந்திருப்பார்கள். எனவே பொதுக் கட்டமைப்பை பாதுகாக்க முடியாமல் போனதற்கு கட்சிகள்தான் பொறுப்பு. இப்பொழுது தோல்விக்கு யார் யார் மீதோ பழியைப் போட்டு, சூழ்ச்சிக் கோட்பாடுகளை உற்பத்தி செய்து கொண்டிருப்பது என்பது அந்தத் தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள தயாரில்லை என்பதனைத்தான் காட்டுகின்றது. இவ்வாறு தமிழ்த்தேசிய அரங்கில் உள்ள பிரதான கட்சிகளும் கூட்டுக்களும் தேர்தல் முடிவுகளில் இருந்து பொருத்தமான உண்மைகளைக் கற்றுக்கொள்ள முயற்சிக்காத ஒரு பின்னணிக்குள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தல் முடிந்த கையோடு, பகிரங்கமாக ஒரு அறிவிப்பை விடுத்திருக்கிறது. புதிய அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்குமாக இருந்தால் அதில் இனப் பிரச்சனைக்கான தீர்வாக முன்வைக்கப்படக்கூடிய தீர்வு பொதியை எதிர்கொள்வதற்கு தமிழ் தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் அந்த அழைப்பு.தமிழ் மக்கள் பேரவையின் யாப்பு முன்மொழிவை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று முன்னணி அழைத்திருக்கிறது. அந்த அழைப்பு இறந்த காலத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவாக இருந்தால், அதை வரவேற்கலாம். அந்த அழைப்பை ஏற்று சிறீதரன் இரண்டு கஜன்களையும் சந்தித்திருப்பதனை ஆர்வத்தோடு பரிசீலிக்க வேண்டும். முன்னணி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களோடும் அது தொடர்பாகப் பேச விருப்பதாக ஒரு தகவல். முன்னணி மீது ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஐக்கிய முயற்சிகளுக்கு முதலில் முட்டுக்கட்டை போடுவது அவர்கள்தான். எனினும் இம்முறை அவர்களாக முன்வந்து ஓர் அழைப்பை விடுத்திருப்பதை சாதகமாகப் பரிசீலிக்கலாம். கட்சி அரசியலில் நிரந்தரமான நண்பர்களோ பகைவர்களோ கிடையாது. நிரந்தரமான நலன்கள்தான் உண்டு.தமிழ்த்தேசிய அரசியலில் தமிழ் மக்களுக்குப் பொருத்தமான,தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வை நோக்கி உழைப்பதற்காக இறந்த காலத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில், நேர்மையாக உண்மையாக, யார் உழைத்தாலும் யார் அழைத்தாலும் அதனை வரவேற்க வேண்டும். https://athavannews.com/2024/1411448- சட்டவிரோத மீன்பிடி: 8 இந்திய மீனவர்கள் கைது!
சட்டவிரோத மீன்பிடி: 8 இந்திய மீனவர்கள் கைது! யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் இன்று (08) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்பிடி நடவடிக்கைக்காக அவர்கள் பயன்படுத்திய இரு படகுகளும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கசந்துறை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாகவும் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த வருடத்தில் இதுவரையான காலப் பகுதியில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக 537 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 67 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. https://athavannews.com/2024/1411433- புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் வீழ்ச்சி!
புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பல் வீழ்ச்சி! இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த நவம்பர் மாதம் மொத்தமாக 530.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர். இந்த தொகை கடந்த ஒக்டோபர் மாதம் 587.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக 2024 ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும் போது நவம்பர் மாதம் புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்பலானது நவம்பர் மாதம் சரிவினை கண்டுள்ளது. மேலும், 2023 நவம்பரில் பதிவுசெய்யப்பட்ட 537.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை ஒரு சிறிய வீழ்ச்சியையும் எடுத்துக் காட்டுகிறது. இதேவேளை, 206,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த ஏல விற்பனை எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 76,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும், 182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 90,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளன. மேலும், 364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 40,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1411422- நாட்டில் உப்புக்குத் தட்டுப்பாடு?
நாட்டில் உப்பு உற்பத்தி வீழ்ச்சி குறித்து விசேட ஆய்வு! நாட்டில் உப்பு உற்பத்தி வீழ்ச்சி குறித்து ஆராய்ந்து வருவதாக வர்த்தகம், வணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த வருடமும் இந்த வருடமும் உப்பு உற்பத்தி குறைந்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து உடனடியாக ஆய்வு செய்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடமும் இந்த வருடமும் நாட்டில் உப்பு உற்பத்தி 40 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி தற்போது உள்நாட்டில் உற்பத்தி குறைவடைந்துள்ளதாகவும், இதற்கு தீர்வாக உப்பை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உப்பு வரத்தக நிறுவனங்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன. எவ்வாறெனினும், நாட்டில் உள்ள உப்பு இருப்பு மற்றும் நுகர்வுக்கு தேவையான அளவு ஆகியவற்றை ஆய்வு செய்த பின், இறக்குமதி குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் நகரங்களைச் சுற்றி விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் பானங்களைச் சரிபார்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்காக சுமார் 1750 கள பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டார். பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களும் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பட்டார். டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் 150க்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன மேலும் சுட்டிக்காட்டினார். https://athavannews.com/2024/1411426 - 2138 கடற்படை மாலுமிகளுக்கு பதவி உயர்வு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.