Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. தமிழரசியலில் ஒரு மிஸ்டர் பீன்ஸ்! நிலாந்தன். தொடக்கத்திலிருந்தே அர்ஜுனா சர்ச்சைகளின் மையமாக இருந்தார். சர்ச்சைகள்தான் அவரை வைரல் ஆக்கின. சர்ச்சைகள்தான் அவரை பிரபல்யம் ஆக்கின.சர்ச்சைகள்தான் அவருடைய அரசியல் பிரவேசத்துக்கான முதலீடு. அரசியலில் மிகக் குறுகிய காலத்துக்குள் எழுச்சி பெற்றவர் அவர். இப்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகம் ஊடகக் கவனிப்பை பெற்ற ஒருவராக குறிப்பாக,சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் குவிமையப்படுத்தப்படும் ஒருவராக அவர்தான் காணப்படுகிறார். ஏனென்றால் அவர் ஒவ்வொரு நாளும் எதையாவது வில்லங்கமாகச் செய்து விடுகிறார். பின்னர் அதை அவரே பெருமிதமாகப் பகிரவும் செய்கிறார். அவருக்கு இப்பொழுது கிடைக்கும் ஊடக கவர்ச்சி நெகட்டிவானது.ஆனால் அவர் அதை ரசிக்கிறார். கிட்டத்தட்ட சுமந்திரனும் தமிழரசியலில் அப்படி ஒரு நெகட்டிவ் கவர்ச்சியைத்தான் அதிகமாகப் பெற்றார். அதன் மூலமே தமிழரசியலில் எப்பொழுதும் பேசப்படும் ஒருவராக விளங்கினார். இப்பொழுது அர்ஜுனா. அர்ஜுனா நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதிலிருந்து அவரையும் கிண்டல் செய்து அவரைத் தெரிவு செய்த யாழ்ப்பாணத்தவர்களையும் கிண்டல் செய்து விமர்சனங்கள், மீம்ஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவரைப் போன்ற ஒருவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பியதன்மூலம் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே தோற்கடித்து விட்டதாக, தமிழ் மக்களுக்குள் ஒரு பகுதியினர் கருதுவதாகத் தெரிகிறது. ஆனால் உலகின் மிகப்பெரிய ஜனநாயகமும் உலகப் பேரரசும் ஆகிய அமெரிக்காவில் ஒரு ட்ரம்ப் தெரிவு செய்யப்படலாம் என்றால், ஏன் அர்ஜுனாவை யாழ்ப்பாணத்தவர்கள் தெரிவு செய்யக்கூடாது என்று கேட்டால் அதற்கு என்ன பதில்? அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப்பும் ஒரு சர்ச்சைகளின் நாயகன்தான். வழமையான அரசுத் தலைவருக்குரிய பாரம்பரியங்களை அவர் பெருமளவுக்கு கட்டுடைக்கின்றார். ஒரு அரசுத் தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பவித்திரமான வரையறைகளை உடைத்துக் கொண்டு அவர் வெளியே வருகிறார். உலகப் பேரரசு ஒன்றின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் வலிந்து நடிப்பதில்லை. சில சமயங்களில் அவர் ஆங்கிலத் திரை உலகின் நகைச்சுவை நாயகன் “மிஸ்டர் பீன்சை” ஞாபகப்படுத்துவார். “மிஸ்டர் பீன்ஸ்” மேற்கத்திய பண்பாட்டின் நடுத்தர வர்க்கத்தின் நவநாகரீக பிம்பங்களை உடைப்பவர்.”டீசன்ட்” என்று கருதப்படும் விடயங்களில் வழமைக்கு மாறாக நடப்பதுதான் அவருடைய வழமை. நவ நாகரிக நடுத்தர வர்க்கமும் மேட்டுக்குடியும் எதையெல்லாம் டீசன்ட் என்று கருதுகின்றனவோ, பாதுகாக்கின்றனவோ, அவற்றையெல்லாம் மிஸ்டர் பீன்ஸ் கேள்விக்கு உள்ளாக்குவார்; சிரிக்கத் தக்கவையாக்குவார். அல்லது சிரிப்புக் கிடமாக்குவார். அவர் நவநாகரீக உலகின் புனிதங்களை உடைப்பார், பௌத்திரமான வரையறைகளை உடைப்பார். மிஸ்டர் பீன்ஸைப் பார்த்துச் சிரிப்பவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிப்பவர்கள்தான். தங்களுக்குள் இருக்கும் நடுத்தர வர்க்க சுபாவத்தை சுயவிமர்சனம் செய்து கொள்பவர்கள்தான். அர்ஜுனாவின் நடவடிக்கைகளிலும் அந்தப் பண்பு உண்டு. அவர் எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. யாரையுமே சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளவில்லை. எதுவெல்லாம் சீரியஸ் ஆனவையாக , டீசன்ட் ஆனவையாக , இங்கிதமானவையாகக் கருதப்படுகின்றனவோ,,அவற்றையெல்லாம்ல்லாம் அவர் கட்டுடைக்கின்றார். அவற்றையெல்லாம் அவர் வேடிக்கையாகுகின்றார். அவர் எதிலுமே ஒளிவுமறைவு இல்லாதவர்போல தன்னை வெளிப்படுத்துகிறார். தன் தவறுகளையும் தன் வாயாலே சொல்கிறார். அவருடைய சொந்த வாக்குமூலங்களே எதிர்காலத்தில் அவருக்கு எதிராகத் திரும்ப முடியும். ஆனால் அவர் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளத் தெரியாத அல்லது தற்காத்துக் கொள்ள முடியாத ஒரு பிரபல்யம். ஐரோப்பாவில் வசிக்கும் ஒரு நண்பர் என்னிடம் கேட்டார், இவருடைய வேடிக்கையான நடவடிக்கைகள் அவருடைய அடிப்படை இயல்பா? அல்லது அவர் வேண்டுமென்று அவ்வாறு நடிக்கின்றாரா? என்று.ஏன் அவர் நடிக்க வேண்டும்? என்று கேட்டேன். அவர் கண்டபடி எதிரிகளைச் சம்பாதித்துக் கொள்கிறார். எனவே அந்த எதிரிகளிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு ஒரு கோமாளி வேடத்தை அவர் பூண்டிருக்கலாம் அல்லவா? என்று கேட்டார். நான் சொன்னேன், அவர் நடிக்கவில்லை அதுதான் அவருடைய இயல்பு. இயல்பாக இருப்பதுதான் அவருடைய பலமும் பலவீனமும். அவர் நேரலையில் எப்பொழுதும் இயல்பாகத் தோன்றுகிறார். கமராவுக்கு முன் நிற்கிறேன் என்பதற்காக நடிக்கவோ அல்லது இறுக்கமாக,சீரியஸாகத் தன்னை காட்டவோ அவர் முயல்வதில்லை. அதை வெளிப்படைத் தன்மையாக ஏற்றுக் கொள்பவர்கள் அவரை ஆர்வத்தோடு பார்க்கின்றார்கள். தமிழரசியலின் சீரியசான, இறுக்கமான, சிரிப்புக் குறைந்த பண்பில் இருந்து முற்றிலும் வேறுபட்டு அவர் நிற்கிறார். எல்லாவற்றையுமே சிரிப்பாக்குகிறார். தானும் ஒரு சிரிப்புப் பொருளாக “மீம்சாக”, மிஸ்டர் பீன்சாகத் தோன்றுகிறார். பத்தாவது நாடாளுமன்றத்தில் தொடக்க அமர்விலேயே அவர் எங்களைச் சிரிக்க வைத்து விட்டார். தொடக்கமே பரபரப்புத்தான்.அர்ஜுனா நாடாளுமன்றத்துக்கு ஒரு அதிர்ச்சி. அவர் நாடாளுமன்றத்தையும் அது புனிதம் என்று கருதும் நடைமுறைகளையும் அபத்தமாக்கி விட்டார். தமிழ் மக்களின் கடந்த சுமார் 75 ஆண்டு கால அனுபவத்தின்படி நாடாளுமன்றத்துக்குள்ளால் மீட்சி கிடைக்கப் போவதில்லை. நாடாளுமன்றம்தான் தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்புச் சட்டங்களை நிறைவேற்றியது. ஜிஜி பொன்னம்பலத்தில் தொடங்கி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வரையிலும் மூன்று தலைமுறைகளின் காலப்பகுதிக்குள் ஆற்றப்பட்ட எல்லா உரைகளும் ஹன்சாட்டில் பதிவு செய்யப்பட்டதற்குமப்பால் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வெளிவந்ததற்குமப்பால் தமிழ் மக்களுக்கு திருப்தியான,பாதுகாப்பான எதையுமே பெற்றுத்தரவில்லை. நாடாளுமன்றத்தை ஒரு அபத்த மேடையாக மாற்றிய சிங்கள பௌத்த அரசியல் பாரம்பரியத்துக்கு தமிழ் மக்கள் கொடுத்த ஒரு தண்டனையாக அர்ஜுனாவைக் கருத வேண்டும் என்று ஒரு நண்பர் முகநூலில் எழுதியிருந்தார். அர்ஜுனாவின் வெற்றியும் தோல்வியும் அவர் இறுக்கமின்றி இயல்பாகத் தோன்றுவதுதான்.அவருடைய வெளிப்படைத் தன்மைதான். அவர் தன்னைத் தற்காத்துக் கொள்ளாமல் எதிரிகளைச் சம்பாதிக்கிறார். தன்னை தற்காத்துக் கொள்ளாமல் நேரலையில் வருகிறார். தன்னைத் தற்காத்துக் கொள்ளாமல் கண்டபடி கதைக்கிறார். நீதிக்காகப் போராடும் ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியிலிருந்து, அவ்வாறு தற்காப்புணர்வற்ற ஒருவர் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். அதற்கு முதலாவது பிரதான காரணம், அவர் ஒரு மருத்துவராக இருந்து கொண்டு மருத்துவத்துறைக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்தமை. அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர் கொண்டமை. இரண்டாவது காரணம், தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் தலைமைத்துவ வெற்றிடம். தங்களுடைய உடனடிப் பிரச்சினைகளைப் பேசவல்ல, தங்களுடைய வெறுப்பையும் எதிர்ப்பையும் வெளிக்காட்டவல்ல தலைவர்களுக்காகத் தமிழ் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஏக்கத்தின் விளைவாகவே அர்ஜுனா வெற்றி பெற்றார். மூன்றாவது காரணம், சமூக வலைத்தளங்களின் பெருக்கமும் யூட்யூப்களின் பெருக்கமும். செய்தி இப்பொழுது பணம். பரபரப்பு இப்பொழுது பணம். யூடியுப்கள் பார்வையாளர்களை எப்படி அதிகப்படுத்தலாம், வருமானத்தை எப்படிக் கூட்டலாம் என்றுதான் அதிகமாகச் சிந்திக்கின்றன. இதில் தேசத்தைக் கட்டியெழுப்பும் யூடியுப்கள் எத்தனை? இப்படிப்பட்டதோர் ஊடகச் சூழலும் அர்ஜுனாவை வீங்கச் செய்தது. சமூக வலைத்தளங்கள் ஊதிப் பெருப்பித்த ஒரு பலூன் அவர். நாலாவது காரணம், அவருடைய வெளிப்படைத் தன்மை, இறுக்கமில்லாத அப்பாவித்தனமான வெளிப்படைத்தன்மை. தமிழ்த் தேசிய அரசியலின் சீரியஸான,இறுக்கமான,சிரிப்பில்லாத பண்புக்கு எதிராக அர்ஜுனா சீரியஸான எல்லாவற்றையுமே சிரிப்புக்கிடமாக மாற்றுகிறார்.அதுவும் அவருக்குக் கவர்ச்சியைக் கொடுத்தது. பத்தாவது நாடாளுமன்றம் அவரை எவ்வளவு காலத்துக்குச் சகித்துக் கொள்ளும் என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் தென்னிலங்கை மையக் கட்சி ஒன்றுக்கு கணிசமான அளவுக்கு நேரடியாக வாக்களித்திருக்கும் ஒரு பின்னணிக்குள், தமிழ்த் தேசியப் பிரதிநிதித்துவம் கடந்த நாடாளுமன்றத்தை விடவும் இந்த முறை மேலும் இரண்டு ஆசனங்களால் குறைந்து போயிருக்கும் ஒரு பின்னணிக்குள், அதாவது சீரியசான, பின்னடைவான ஓர் அரசியல் சூழலுக்குள், தமிழ் மக்களின் இறுக்கத்தைத் தளர்த்தி, எல்லாவற்றையும் சிரித்துக் கடக்கும் ஒரு அனுபவத்தைத் தர ஒரு மிஸ்டர் பீன்ஸ் கிடைத்திருக்கிறாரா? சிரிப்போம். கடப்போம். https://athavannews.com/2024/1409694
  2. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள். மாவீரர் நினைவை அனுஷ்டித்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு நன்றி.
  3. இந்திய தூதுவர் சந்திப்புக்கள். அதிலும்... குழுவாக, கூட்டாக, சம்பந்தனுடன், சாணக்கியனுடன், தன்னந் தனியாக... என்று, சுமந்திரன் இந்தியத் தூதுவர்களை சந்திப்பதில் "படு பயங்கர கில்லாடி". 😂 நேற்றைய அவர்களின் சந்திப்பை பார்த்து, சுமந்திரனுக்கு... ஒரே, "புழுக்கமாக" இருந்திருக்கும். 🤣
  4. இந்திய தூதுவர் சந்திப்புக்கள். அதிலும்... குழுவாக, கூட்டாக, சம்பந்தனுடன், சாணக்கியனுடன், தன்னந் தனியாக... என்று, சுமந்திரன் இந்தியத் தூதுவர்களை சந்திப்பதில் கில்லாடி. அப்போதெல்லாம்... ஓவியம் கீறுபவர்கள் கண்ணை இறுக மூடிக் கொண்டு இருப்பார்கள். 😂 ஸ்ரீதரன் சந்தித்தவுடன் விழுந்தடித்து... ஓவியம் கீறத் தொடங்கி விடுவார்கள். அது... அவர்களின் டிசைன். 😃 இதற்குள்... தாங்கள் நடுநிலைமை என்று சொல்லிக் கொண்டு திரிவார்கள். நாங்க... அதை நம்பீட்டம். 🤣
  5. முருகேசு என்பவர் உயரமான மரத்தில் இருந்து தவறி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை வீட்டிற்கு தூக்கிச் சென்றனர். அங்கு வந்த டாக்டர் அவரை பரிசோதித்து பார்த்துவிட்டு... “ முருகேசு இறந்து விட்டார்” என்று கூறினார். ஆனால் அடிபட்ட முருகேசு கண்ணை விழித்து... “ நான் இறக்கவில்லை டாக்டர். உயிரோடுதான் இருக்கிறேன்” என்றார். உடனே அருகில் இருந்த முருகேசு மனைவி “ வாயை மூடுங்கள். உங்களுக்கு என்ன தெரியும்? டாக்டருக்கு தெரியாததா” என்று அதட்டினாள். 😂😂 குறிப்பு: நம்புங்கள்! இந்த பதிவிற்கும் மேலே உள்ள படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 🤣 தோழர் பாலன்
  6. ஜனாதிபதி அநுரகுமாரவின் 56 ஆவது பிறந்த தினம் இன்று! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்றைய தினம் தனது 56 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவர் இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டம் கலேவலை என்னும் ஊரில் 1968 நவம்பர் 24 இல் பிறந்தார். அநுரகுமார தனது பாடசாலைக் கல்வியை தம்புத்தேகமை காமினி மகா வித்தியாலயத்திலும், தம்புத்தேகமை மத்திய கல்லூரியிலும் கற்றார். தனது பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான முதலாவது மாணவராக விளங்கிய இவர் பாடசாலை நாட்களில் இருந்தே மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டாளராக இருந்ததோடு, அக்கட்சியில் 1987 இல் இணைந்து, மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நுழைந்த அவர் சில மாதங்களுக்குப் பிறகு அச்சுறுத்தல் காரணமாக வெளியேறி ஓராண்டு கழித்து 1992 இல் களனி பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டு, 1995 இல் இளம் அறிவியல் பட்டத்துடன் வெளியேறினார். 2000 இல் நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து கட்சியின் தேசியப் பட்டியலில் நாடாளுமன்றம் சென்றார். 2001 தேர்தலில் மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானார். பின்னர் 2015 செப்டம்பர் முதல் 2018 டிசம்பர் வரை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் தலைமைக் கொறடாவாகப் பணியாற்றினார். 2014 பெப்ரவரி 2 அன்று, மக்கள் விடுதலை முன்னணியின் 17ஆவது தேசிய மாநாட்டின் போது, சோமவன்ச அமரசிங்கவிற்குப் பின், கட்சியின் புதிய தலைவராக அநுரகுமார திசாநாயக்க நியமிக்கப்பட்டார். 2019 ஓகஸ்ட் 18 ஆம் திகதியன்று, மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசியல் கூட்டமைப்பான தேசிய மக்கள் சக்தி, 2019 ஜனாதிபதி தேர்தலில் அநுர தனது ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார் என்று அறிவித்தது. இத்தேர்தலில் திசாநாயக்க 418,553 (3%) வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெற்றார். மீண்டும் 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு 5,634,915 வாக்குகளைப் பெற்று இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகக் தெரிவானார். https://athavannews.com/2024/1409643
  7. உத்தியோகப்பூர்வ குடியிருப்புக்களை கையளிக்காத 30 முன்னாள் எம்.பி.க்கள்! சுமார் 30 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய உத்தியோகப்பூர்வ குடியிருப்புகளை இன்னும் ஒப்படைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய எம்.பி.க்களுக்கு குடியிருப்புகள் வழங்க வேண்டியுள்ள தேவையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை வீடுகளை காலி செய்யும்படி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றுமுன்தினம் (22) ஏழு எம்.பி.க்கள் தங்களுடைய குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதேவேளை, முன்னாள் எம்.பி.க்கள் குறித்த குடியிருப்புகளை காலி செய்யாவிடின் அந்த குடியிருப்புகளுக்கான நீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படும் என நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர அண்மையில் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். எவ்வாறெனினும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை வழங்கும் வகையில் தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மாதிவெல வீட்டுத் தொகுதி புதிய நடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 35 க்கும் மேற்பட்டோர் மாதிவெல வீட்டுத் தொகுதியிலிருந்து உத்தியோகபூர்வ வீடமைப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். கொழும்பில் இருந்து 40 கிலோ மீற்றர்களுக்குள் வீடு இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் வீடுகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த வீடுகள் வழங்கப்படும் என நாடாளுமன்ற சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது. மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் 110 வீடுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1409649
  8. 24)சுவி - 35 புள்ளிகள் 25) வசி - 27 புள்ளிகள் 26) தமிழன்பன் - 21 புள்ளிகள் "வயாகரா" குளிசை எல்லாம், கொம்பனி கணக்கில் வழங்கப்படும். ✔️ கடைசியாக வந்த மூன்று பேருக்கும்... தாய்லாந்து மசாஜுக்கு ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது. 🤣 அங்கு யானைதான்... மசாஜ் செய்யும். 😂
  9. அதுக்குத்தானே "வயாகரா" குளிசை இருக்கு. 😂 🤣
  10. பிலிப்பைன்ஸுக்கு...போக இருக்கிற ஆட்கள் இப்பவே, உங்கள் வேலை இடத்தில், லீவுக்கு விண்ணப்பித்து வைக்கவும். பாஸ்போட், விசா, விமான சீட்டு, ஹோட்டேல், சாப்பாடு, மசாஜ்... எல்லாம் எங்களுடைய பொறுப்பு. நீங்கள்... ஒரு சூட்கேசில் உங்கள் உடுப்புக்களையும், வழக்கமாக பாவிக்கிற... பிரசர், நித்திரை, இருமல், சர்க்கரை வியாதி குளிசைகளையும் மறக்காமல் இப்பவே எடுத்து, ரெடியாக வையுங்கள். 😂 எந்த நேரமும் உங்களை விமான நிலையத்திற்கு ஏற்றிக் கொண்டு செல்ல இரண்டு பிலிப்பைன்ஸ் பெண்கள் வந்து, உங்கள் வீட்டு அழைப்பு மணியை... "டிங்... டொங்..." என்று அடிப்பார்கள். ஆயத்தமாக இருங்கள். 🤣
  11. மூன்றாம் உலகப்போர் ஆரம்பித்து விட்டது. மூன்றாம் உலகப் போர் ஆரம்பித்து விட்டதாக உக்ரைனின் (Ukraine) முன்னாள் இராணுவத் தளபதி வலேரி ஜலுஸ்னி (Valery Zaluzhny) தெரிவித்துள்ளார். ரஷ்ய- உக்ரைன் மோதலில் ரஷ்ய சார்பு நாடுகளின்; நேரடி ஈடுபாடு அதனையே குறிக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைனில் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், 2024 ஆம் ஆண்டில் மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டது என்றும் தாம் அதனை உறுதியாக நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய இராச்சியத்திற்கான உக்ரைனின் தூதராக தற்போது பணியாற்றும் ஜலுஸ்னி, போரின் உலகளாவிய விரிவாக்கத்தில் குறிப்பிடத்தக்க காரணியாக, ரஷ்யாவின் எதேச்சதிகார கூட்டு நாடுகளின் நேரடி ஈடுபாட்டை சுட்டிக்காட்டியுள்ளார். வடகொரியாவின் படையினர் மற்றும் ஈரானிய படையினர் உக்ரைனுக்கு எதிரான போரின் பங்கேற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மொஸ்கோ 10,000 வட கொரிய துருப்புக்களை குர்ஸ்க் பிராந்தியத்தில் நிலைநிறுத்தியதாகவும், உக்ரைனுக்கு எதிராக போரில், ஈரானிய ட்ரோன்கள் மற்றும் பிற மேம்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில், உக்ரைன் இந்த போரில் தனியாக வெற்றி பெற முடியுமா என்பதில் தெளிவில்லை என்றும் ஜலுஸ்னி கூறியுள்ளார். https://athavannews.com/2024/1409616
  12. நீங்கள் கூறியபடி... பாராளுமன்றத்தில் "எனக்கு நடந்தது என்று... அவர் அழுது ஒரு வீடியோ போடும் நாள் வரும்" என்றே நினைக்கின்றேன். (அப்படி எதுவும் நடக்கக் கூடாது என்பதே.. எனது பிரார்த்தனை.)
  13. வீட்டிலை... யாரும் இல்லையா? படம் எடுக்க வந்திருக்கின்றேன், கொஞ்சம் கதவை திறங்க.
  14. உங்களுக்கு... சமூக ஊடகத்திற்கும், பத்திரிகைகளுக்கும் வித்தியாசம் தெரியாதா? சுமந்திரன் பதவியில் இருக்கும் போது, மிதப்பிலை விட்ட அறிக்கைகளைத்தான்.... மேலே உள்ள பிரபல பத்திரிகைகள், தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளன. அதனை திரட்டிப் போட்டால்... உங்களுக்கு கோபம் வருவதை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என்பதை நான் புரிந்து கொள்கின்றேன். ஆனால்... அதற்கு நான் என்ன செய்ய..? அவர் சம்பாதித்து வைத்தது இவைதான். அதனால்தான்... மக்கள் சுமந்திரனுக்கு, ஒய்வு கொடுத்து அனுப்பியுள்ளார்கள்.😂 அவர் செய்த வேலையாலை... வீட்டில் இருந்து, கொட்டாவி விட வேண்டிய நிலை வந்திட்டுது. 🤣 இல்லாவிடில்... சுமந்திரன் நேற்று, கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரை சந்திக்க முதல் ஆளாக, கோட்டு சூட்டுடன் போய் நின்றிருப்பார். 🤣 காலம் செய்த கோலம்... பத்திரிகையை பார்த்து செய்தி அறிய வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார். 😂 நன்றி வணக்கம். 🙏
  15. என்னுடைய பொது அறிவை பரிதோதனை செய்து, கேடயம் தரப் போகின்றீர்களா. 😂 எனக்கு உந்த "ஈர வெங்காயம்" ஒன்றும் வேண்டாம். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். 🤣 கேட்டமைக்கு... நன்றி. 😃
  16. 1970´ம் ஆண்டுகளில் தமிழர் அதிகமாக இருந்தார்கள். பின்...சம்பந்தன் ஐயா... திருகோணமலை எம்.பி.யாக வந்த பின், தமிழர்கள் குறைந்து... சிங்களவரும், முஸ்லீமும் பல்கி பெருகி விட்டார்கள். 😂
  17. முதலை ஒன்று வெளியே வந்ததன் மூலம்... இன்னும்... அதன் கணவன், தாய், தந்தை, பிள்ளை, குட்டி, தாத்தா, பாட்டி, பெரியம்மா, பெரியப்பா, அன்ரி, அங்கிள், மச்சான், மச்சாள் என்று பெரிய குடும்பமே அங்கு குடியிருக்கும். முதலை முட்டை போடுவது என்றால்... கோழி மாதிரி ஒன்றுடன் நிறுத்திக் கொள்வதில்லை. ஒரே வீச்சில் 100 முட்டையாவது இடும். ஆனபடியால்... மிகுந்த அவதானத்ததுடன் இருக்க வேண்டும். யாரோ... உடும்பு இறைச்சி சாப்பிடும் ஆசையில் குட்டி முதலையை... உடும்பு என எங்கிருந்தோ பிடித்துக் கொண்டு வந்து அது முதலை என தெரிந்தவுடன் குளத்தில் விட்டு விட்டார்கள் போலுள்ளது. மேற்கு நாடுகளில் முதலை, மலைப்பாம்பை... பொழுது போக்காக அரசுக்கு தெரியாமல் வீட்டில் வளர்ப்பவர்கள் அது பெரிதாகியவுடன் பக்கத்தில் உள்ள காட்டிலோ, குளத்திலோ விட்டு விட்டுப் போய்... பிடிபடும் செய்திகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வரும். ஒரு முறை ஜேர்மனியில், அனாதை கங்காரு ஒன்று சுற்றித் திரிந்ததை பிடித்தார்கள்.
  18. இந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவுக்கு அரசியல் அறிவு பூச்சியம். 🙃 சுமந்திரன்... எப்போ, பிரிவினைவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்பட்டவர்? அவர் ஒற்றை ஆட்சியை ஆதரித்தும், சிங்கள மக்களுடன் வாழ்வது பெரும் பேறு என்றும், இலங்கையில் போர்க்குற்றம் நடக்கவில்லை என்றும், ஸ்ரீலங்காவில் நடந்த இனப் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை தேவை இல்லை, உள்ளூரிலேயே விசாரிக்கலாம் என்றும், போர்க்குற்ற விசாரணையில் புலிகளையும் விசாரிக்க வேண்டும் என்றும்... சிங்கள மக்களுக்கு ஆதரவாக இருந்ததுடன்... மேலும் தான் இருந்த கட்சியையே சிதைக்கும்.. பல உளறுவாய் வேலைகளை செய்தபடியால் தான்... சுமந்திரன் தோற்கடிக்கப் பட்டார் என்பதை, அந்த சிங்கள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு நினைவு படுத்தி விடுங்கள். 😂 விட்டால்... வரலாறை திரித்து, சுமந்திரனை மாவீரன் நெப்போலியன் ஆக்கி விடுவார்கள் போலுள்ளது. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.