Everything posted by தமிழ் சிறி
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
கல்வி கற்ற இளையவர்... அரசியலில் முன்மாதிரியாக இருப்பார் என்று பார்த்தால், ஆரம்பத்திலேயே சுத்துமாத்து செய்ய வெளிக்கிட்டு விட்டார். போற போக்கில் சுமந்திரனையே... தூக்கி சாப்பிட்டு விடுவார் போலுள்ளது. 😂
-
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிய ராஜபக்ச குடும்பம்
நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த ராஜபக்சக்கள்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ராஜபக்ச குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பஷில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ ஆகியோர் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள். எவ்வாறெனினும், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேர்தல் பிரச்சாரத்திற்கு தலைமை தாங்குவதுடன் தேசியப்பட்டியல் வேட்பாளராக களமிறங்குவார் என தெரிவிக்கப்பகிறது. நவம்பர் 14 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1403716
-
வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு!
வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிப்பு! முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் சார்பில் கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்யும் செயற்பாடுகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்க தவறியமையினால் வியாழேந்திரனின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1403789
-
2024-ஆம் ஆண்டு நோபல் பரிசு: செய்திகள்
ஜப்பானைச் சேர்ந்த பிரபல அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு! ஜப்பானில் உள்ள நிஹான் ஹிடான்க்யோ அமைப்பு கடந்த 2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளது. இந்த அமைப்பு இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு குண்டு வீசப்பட்டதில் உயிர் தப்பியவர்களின் சமூகமாகும். இவர்கள், அணு ஆயுதங்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் பெரும் பங்காற்றியமைக்காக இந்தப் பரிசை பெற்றுள்ளனர். ஹிபாகுஷா என அழைக்கப்படும் குறித்த அமைப்பினர், அணு ஆயுதங்கள் உலகில் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடாது என வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1403766
-
இலங்கை விமானப் படைக்கு அமெரிக்க விமானம் அன்பளிப்பு
அண்ணளவாக ஓரு வருடத்துக்கு முன்பு... அமெரிக்கா பாவித்த ஒரு சிறிய போர்க்கப்பல் கொடுத்திருந்தது. அந்தக் கப்பலை இலங்கைக்கு கொண்டு வர 30 கப்பல் படையினர் அமெரிக்கா சென்று பலர் அங்கு தலைமறைவாகி விட்டனர். அந்தப் பயத்தில் இப்போ... அமெரிக்கா, விமானத்தை நாட்டுக்கே கொண்டு வந்து தருகின்றார்கள் போலுள்ளது.
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
இன்று மதியத்துடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற இருக்கின்றது. நேற்றைய நிலவரப்படி, நாடு முழுவதும்… 147 அரசியல் கட்சிகளும் 94 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன. தேர்தலுக்காக மொத்தம் 349 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. யாழ்கள. பாராளுமன்ற தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்த இருக்கும்.... @கந்தப்பு அவர்களுக்கு மேலுள்ள தகவல்கள் பிரயோசனப் படலாம்.
-
கருத்து படங்கள்
- ரத்தன் டாடா காலமானார்: இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்தவர்
- நவராத்திரியின் 9 ஆம் நாள் வழிபாடு!
நவராத்திரியின் 9 ஆம் நாள் வழிபாடு! நவராத்திரியின் ஒன்பதாவது நாளான இந்த நாளில் அம்பிகையை பரமேஸ்வரி திருக்கோலத்தில் வழிபட வேண்டும். இந்த நாளில் அம்பிகையை பரமேஸ்வரி திருக்கோலத்தில் வழிபட வேண்டும். கையில் வில், அம்புகள், அங்குசம், சூலத்துடன் போருக்கு புறப்படும் கோலத்தில் இந்த அம்பிகை காட்சி தருகிறாள். இந்த அம்பிகைக்கு வாசனைப் பொடிகளால் கோலமிட்டு வழிபட்டு தேவியின் மனதை மகிழ செய்யும் வகையில் வழிபடுவதால் ஆயுள், ஆரோக்கியம் பெருகும். நம்முடைய பல தலைமுறைகள் சுகமாக, எந்த குறையும் இல்லாமல் இருப்பார்கள் என்பது ஐதீகம். https://athavannews.com/2024/1403649- வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு!
வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவு! 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (11) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைகிறது. இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய பிற்பகல் 1.30 மணி வரை அவகாசம் அளித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலுக்காக மொத்தம் 349 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. நேற்றைய நிலவரப்படி 147 அரசியல் கட்சிகளும் 94 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன. தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரகாரம், வேட்பாளர்களுக்கான செலவீன வரம்பு தொடர்பான விபரங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, வேட்புமனுத் தாக்கல் நடைபெறும் காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்களிலும் ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்திலும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1403672- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
தகவலுக்கு நன்றி நிழலி.- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
சென்ற பாரளுமன்றத்தில் இருந்த உறுப்பினர்களின் அடிப்படையில்.... திருகோணமலை மாவட்டம்: (4 இடங்கள்.) 2 முஸ்லீம், 1 தமிழ். (குகதாசன்.), 1 சிங்களம். மட்டக்களப்பு மாவட்டம்: (5 இடங்கள்.) 4 தமிழ், ( சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன், வியாளேந்திரன், பிள்ளையான்) 1 முஸ்லீம். யாழ்ப்பாண மாவட்டம்: (7 இடங்கள்) (அங்கஜன், சுமந்திரன், விக்னேஸ்வரன், ஸ்ரீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டக்ளஸ் தேவானந்தா, சித்தார்த்தன். வன்னி மாவட்டம் : (6 இடங்கள்) 2 முஸ்லீம், 4 தமிழ்.(அடைக்கலநாதன், திலீபன், சாள்ஸ் நிர்மலநாதன், நோகராதலிங்கம்.) தேசியப் பட்டியல்: சுரேன் ராகவன், செல்வராசா கஜேந்திரன், தவராஜா கலை அரசன். திகாமடுல்ல எனப்படும் அம்பாறை மாவட்டத்தில்... (7 இடங்கள்) 4 முஸ்லீம், 3 சிங்களம். அங்கு தமிழர்கள் இரண்டு பேர் வரக் கூடிய சந்தர்ப்பம் இருந்தும்.... ஒற்றுமை இன்றி பிரிந்து நின்று பல தமிழ் கட்சிகளில் போட்டியிடுவதால், அங்குள்ள தமிழர்களின் வாக்குப் பிரிந்து ஒரு தமிழரும் வெல்ல முடியவில்லை என்பது சோகம். சென்ற பாராளுமன்றத்திற்கு வடக்கு கிழக்கில் இருந்து தேர்ந்து எடுக்கப் பட்டவர்கள் 16 பேர். தேசியப் பட்டியல் 3 பேர். மொத்தம் 19 பேர். மலையகத்தையும் சேர்த்தால்.... 25 தமிழ் பாரளுமன்ற உறுப்பினர்கள் இருக்கலாம் என நினைக்கின்றேன். அவர்கள் தமிழ் என்று நாம் பெருமைப்படலாமே தவிர... ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கொள்கை உடையவர்கள்.- விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
கவி அருணாசலம். மிக்க நன்றி, வணக்கம். 🙏- வன்னியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய மன்னார் யுவதி இறுதி நேரத்தில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல்
அட்றா...சக்கை, அம்மன் கோயில் புக்கை எண்டானாம். 🤣 தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கீட்டுது. நோட்டீஸை பார்க்க வடிவாய் இருக்குது. நல்ல காலம்.. வென்ற பின் கட்சி மாறவில்லை. 😂- நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி!
அந்த மூன்று வருடமும்.... கை, அரித்துக் கொண்டே இருந்திருக்கும். 😂 தகவலுக்கு... நன்றி நிழலி. 👍- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன. உங்களுக்கு தெரிந்ததை இங்கே பதியுங்கள். @Kandiah57 அண்ணை கேட்டுக் கொண்டதற்கு இணங்க... வரும் பாராளுமன்ற தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்ற தகவலை, ஊர்ப்புதினம் செய்திகளில் இருந்து திரட்டியவற்றை... கீழே பதிந்துள்ளேன். சில விடுபட்டு இருக்கலாம். அதனை தயவு செய்து... நீங்கள் மேற்கொண்டு இணைத்து விடுங்கள். 1) தமிழரசு கட்சி, (ஸ்ரீதரன், சுமந்திரன்.....) (சின்னம்: வீடு) 2) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, (கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன்...) (சின்னம்: சைக்கிள்.) 3) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, (தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சசிகலா ரவிராஜ்....) (சின்னம்: சங்கு) 4) தமிழ் மக்கள் கூட்டணி, (சி.வி. விக்னேஸ்வரனின் கட்சி ஆனால் அவர் போட்டியிடவில்லை... வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்) , வ.பார்த்தீபன், செல்டன் (யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் பயிற்சியாளர்...) (சின்னம்: மான்) 5) தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி: கிழக்கில் மட்டும், கருணா என்னும் முரளிதரன். 6) தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்: கிழக்கில் மட்டும், பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன். 7) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி: (வடக்கு, கிழக்கு, கொழும்பு) டக்ளஸ் தேவானந்தா. (சின்னம்: வீணை) # தேசிய மக்கள் சக்தி: அனுரவின் கட்சி, (மருத்துவர் எஸ் சிறிபவானந்தராஜா, இளங்குமரன், மோகன், வெண்ணிலா) (சின்னம்: திசைகாட்டி) # மற்றும்.... சஜித், ரணில், மகிந்த ஆகியோரின் கட்சிகளும் போட்டியிடும். # அங்கஜன் இராமநாதன் எந்தக் கட்சியில் நிற்கப் போகிறார் என்று தெரியவில்லை. # அத்துடன் முன்னாள் போராளிகளும் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடுகிறார்கள் என நினைக்கின்றேன். # சிறீரெலோ என்னும் கட்சி, வன்னியில் தனித்து போட்டியிடவுள்ளதாக தெரிகின்றது. # சில முஸ்லீம் கட்சிகளும் தனித்து போட்டியிடும் என எதிர்பார்க்கலாம்.- நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி!
டக்ளஸ்... வாழ் நாள் அமைச்சராக இருப்பார் என எண்ணியிருந்தேன். அனுர அதை கெடுத்து விட்டார் போலுள்ளது. 🤣- விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
நீங்கள்... முட்டையில், மயிர் புடுங்குகின்றீர்கள். 😂- தமிழரசு கட்சியினா் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி
எத்தனை கட்சிகள் என்று தெரியவில்லை கந்தையா அண்ணை. எண்ணிப் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன் வேறொரு தலைப்பில் பதிந்து விடுகின்றேன்.- தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி
நேரத்துக்கு நேரம்... நிறம் மாறும், பச்சோந்தி. 🤣 இந்தப் பிழைப்புக்கு.... சிங்களவன் கட்சியிலேயே சேர்ந்து, கொழும்பில் நின்று தேர்தலை சந்திக்க வேண்டியதுதானே... என்ன இழவுக்கு 70 வருட பாரம்பரியமான தமிழரசு கட்சியை அழித்துக் கொண்டு இருக்குது இந்தக் கிருமி. செத்த வீட்டில் பிணமாகாவும், கலியாண வீட்டில் மாப்பிள்ளையாகவும்... மாலை போட விரும்பும், விளம்பரத்துக்கு பிறந்த ஒரு ஜீவன். 😂- விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
மதில் மேல்.... பூனைகள்.- விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
தானாடா விட்டாலும், தசை ஆடும் தருணம். 😂 🤣- விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
விசுகு... சிங்களவனிடம் மன மாற்றத்தை எதிர்பார்ப்பது கடினம். ஏனென்றால் அவர்கள் சிறு வயதில் இருந்தே.. கல்வி, மதம் மூலம்... மூளைச் சலவை செய்து வைக்கப் பட்டுள்ளளார்கள். மயிலே... மயிலே.... இறகு போடு என்றால் போடாது. தலைவர் பிரபாகரன் காலத்தில் இவர்களிடம் இருந்து எமது உரிமைகளை அடித்து பறித்திருக்க வேண்டும். அந்தப் போராட்டம் கூட 75% வெற்றியளித்து சரியாக போய்க் கொண்டிருந்த நிலையில்... ஒட்டுக்கு ழுக்களும், எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு கை கொடுக்காமல் இருந்ததன் விளைவு எல்லாம் கை நழுவி போய் இந்த அவலத்தில் வந்து நிற்கின்றது. இப்போ... காட்டிக் கொடுத்த ஓட்டுக் குழுக்களும், ஒப்புக்கு சப்பாணிகளாக இருந்த பாரளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் செயலை நினைத்து வெட்கப் படுவது கூட இல்லை. இன்னும் தமிழ் மக்களை ஏமாற்றி தமது வயிறை எப்படி வளர்க்கலாம் என்று திரிகின்றார்கள்.- தனிநபர் சுயநலத்திற்காக சிதைந்து சின்னாப்பின்னமான தமிழரசுக் கட்சி
கிறிஸ்தவர் ஆகிய தந்தை செல்வா அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட தமிழரசு கட்சி, ஆபிரகாம் சுமந்திரன் என்னும் கிறிஸ்தவரால் அழிக்கப் படுவது.... காலம் செய்த கோலம் தான். சுமந்திரன்.... ஒறிஜினல் கோடாலி காம்பு.- கருத்து படங்கள்
- ரத்தன் டாடா காலமானார்: இந்தியத் தொழில்துறையின் முகமாகத் திகழ்ந்தவர்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.