Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நீங்கள்... என்ன டிராமா போட்டலும்... மண் கவ்வுவது உறுதி. 😂
  2. புளோரிடாவை தாக்கிய ‘மில்டன் சூறாவளி’ மில்டன் சூறாவளி மணிக்கு சுமார் 160 கிலோ மீற்றர் வேகத்தில் புதன்கிழமை (09) புளோரிடாவின் நகரங்களை தாக்கியது. “மிகவும் ஆபத்தான” மற்றும் “உயிர் அச்சுறுத்தும்” மில்டன் சூறாவளி புளோரிடாவின் சியஸ்டா கீயில் கரையைக் கடந்தது என்று அமெரிக்க தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது. புயல் இறுதி மணிநேரத்தில் தெற்கே தடம் புரண்டது மற்றும் தம்பாவிற்கு தெற்கே 70 மைல் (112 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள சரசோட்டாவிற்கு அருகிலுள்ள சியஸ்டா கீயில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 16 அங்குலங்கள் (41 சென்டிமீட்டர்) மழை பதிவானதால், தம்பா பகுதியில் நிலைமை இன்னும் ஒரு பெரிய அவசரநிலையாக இருந்ததுடன் தேசிய வானிலை சேவை திடீர் வெள்ளம் குறித்த எச்சரிக்கையை தூண்டியது. இதனால், புளோரிடாவில் 2 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிகங்கள் மின்சாரம் இல்லாமல் இருந்ததுடன், மில்லியன் கணக்கான மக்கள் மாநிலத்தை விட்டு புதன்கிழமை வெளியேறினர். மாநிலத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள செயின்ட் லூசி கவுண்டியில் இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன, இருப்பினும் இறப்புகளின் எண்ணிக்கை தெளிவாகக் கூறப்படவில்லை. முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இது “ஒரு நூற்றாண்டில் மிகவும் அழிவுகரமான சூறாவளிகளில் ஒன்றாகும்” என்று கூறினார். புளோரிடா, ஜோர்ஜியா, தென் கரோலினா, டென்னசி, வர்ஜீனியா மற்றும் வட கரோலினாவில் குறைந்தது 225 பேரைக் கொன்ற ஹெலீன் சூறாவளி வளைகுடா கடற்கரையைத் தாக்கிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு மில்டன் சூறாவளியின் வருகை வந்துள்ளது. https://athavannews.com/2024/1403471
  3. சுமந்திரனுக்கு…. வெள்ளை அடிக்க வேணும் என்றால், அவரைப் பற்றி கருத்து சொல்பவர்கள் மேல்… சாதி, சமய வெறியர் என்று சொல்லி திருப்திப்பட வேண்டியது தான். 😂 சுமந்திரன் “பத்தரை மாற்று தங்கம் என்று நிறுவ”… எவ்வளவு கஸ்ரப் பட வேண்டி இருக்கு. 🤣
  4. பிச்சை வேண்டாம் நாயை பிடி என்று.. அவனவன் தமிழரசு கட்சியை விட்டு தலை தெறிக்க ஓடுறாங்கள். இவர்கள் என்னவென்றால்… ராஜுனாமா கடிதம் கிடைக்கவில்லை, கட்சியின் யாப்பின் பிரகாரம் நடவடிக்கை எடுப்போம் என்று காமெடி பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். 😂 போய்… ஓரமாக உட்கார்ந்து விளையாடுங்கப்பா.. 🤣
  5. யாழில் பெருந்தொகையான நாணயத் தாள்களைத் தீயிட்டுக் கொளுத்தியவர் கைது! யாழில் பெருந்தொகையான நாணயத் தாள்களையும் மோட்டார் சைக்கிளொன்றையும் தீயிட்டுக் கொளுத்தியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அராலி பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் நேற்றைய தினம் ஒரு தொகைப்பணத்துடன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று வட்டுக்கோட்டை பகுதியில் 5ஆயிரம் ரூபாய் தாள்கள் சிலவற்றை வீசியுள்ளார். பின்னர் தனது வீடு நோக்கி திரும்பியவர் வீட்டுக்கு அருகில் இருந்த மோட்டார் சைக்கிளொன்றையும் தன் கைவசம் இருந்த மிகுதி பணத்தினையும் வீதியில் போட்டு தீ வைத்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் குறித்த நபரின் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1403336
  6. களுவாஞ்சிக்குடி என்றால்... தமிழராக இருக்க சந்தர்ப்பம் இல்லை. அப்ப... அவர்களாகத்தான் இருக்கும். அல்வாயனை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. 🥰
  7. தமிழரசு கட்சியின் சின்னத்துடன்... தேர்தலில் நிற்க எல்லோரும் பயப்படுகின்றார்கள் போலுள்ளது. 🤣 தாழுகின்ற கப்பலில் யாராவது ஏறுவார்களா. 😂
  8. புளோரிடாவை அச்சுறுத்தும் மில்டன் சூறாவளி! மில்டன் சூறாவளி புளோரிடா கடற்கரையை நோக்கி நெருங்கும் போது, பொது மக்களின் உயர் ஆபத்து மற்றும் சேதங்கள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். அண்மைய ஆண்டுகளில் வடக்கு அட்லாண்டிக்கில் உருவாகும் மிக சக்திவாய்ந்த புயல்களில் ஒன்று மில்டன். ஹெலீன் சூறாவளி அமெரிக்கா முழுவதும் கணிசமான சேதத்தை ஏற்படுத்திய இரண்டு வாரங்களுக்குப் பின்னர் இந்த சூறாவளி உருவாகியுள்ளது. புயல் புதன்கிழமை (09) தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய சூறாவளி மையம் (NHC), மில்டன் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் “மிகவும் ஆபத்தான சூறாவளியாக” கரையைக் கடக்கும் என்று கூறியுள்ளது. மில்டன் சுமார் ஒரு நூற்றாண்டில் இப்பகுதியைத் தாக்கும் மிக மோசமான புயலாக இருக்கலாம். மில்டன் ஞாயிற்றுக்கிழமை ஒரு வகை சூறாவளியாக மாறியது மற்றும் மெக்சிகோவின் யுகடன் தீபகற்பத்தை கடந்த பிறகு மெக்ஸிகோ வளைகுடா வழியாக கிழக்கு நோக்கி சீராக நகர்கிறது. இது மிகவும் சக்திவாய்ந்த சூறாவளி பிரிவில் வைக்கப்பட்டது. https://athavannews.com/2024/1403304 @suvy இந்தச் சூறாவளிக்கு "மில்ரன்" என்று ஆணின் பெயர் வைத்துள்ளார்கள்.
  9. வைத்தியர் அர்ச்சனா விளக்கமறியலில் இருக்கும் போதுதான்…. ஜனாதிபதி தேர்தல் நடந்த்து. 🤣 அவரின் கட்சியை சேர்ந்த அனுரதான் இப்ப புது ஜனாதிபதி என்று சொல்லி விடுங்கோ. 🤣 அடுத்து பாராளுமன்ற தேர்தல் வருகுது. பிரச்சாரம் செய்ய வேணும். மீண்டும் விளக்கமறியலில் போய் இருக்காமல், நல்ல பிள்ளையாக இருங்கோ தம்பி. 😂 🤣
  10. தமிழரசு கட்சிக்குள்தான் உட்பூசல் என்றால்…. மலையக தமிழ் கட்சிகளுக்குள்ளும் உட் பூசலா… ? எனக்கென்னவோ சி.ஐ.ஏ., மொசாட், றோ…. போன்ற வெளிநாட்டு புலநாய்வு அமைப்பினரின் சதி வேலையாக இருக்குமோ என்று சந்தேகமாக கிடக்குது. 😁 😂 🤣
  11. உண்மையில் இந்த தேசியப் பட்டியல் முறை ஒழிக்கப் படவேண்டும். மக்களால்… நிராகரிக்கப் படுகின்றவர்கள், கள்ள வழியால் பாராளுமன்றம் போய், கதிரையில் குந்துவது வாக்களித்த மக்களை அவமதிப்பது போலாகும். இது உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியாது.
  12. முதியோர் கொடுப்பனவு… சகலருக்கும் கிடைக்கும் என்றால் மிக நல்ல விடயம். தகவலுக்கு நன்றி ஏராளன். 👍🏽
  13. விசுகு… ஊழல் ராஜபக்சக்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று… பெரும்பாலான சிங்களவர்களே ஒற்றைக்காலில் நிற்கிறார்கள்.
  14. எங்களுக்கு இந்த நல்ல ஆட்சி வேண்டாம். 😛 மதுபானசாலைக்கு அனுமதி தரும் ரணிலின் ஆட்சிதான் வேண்டும். 🤣 - தமிழ் பா.உ.க்கள். - 😁
  15. ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகள் ஆரம்பம்! கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல் மற்றும் மோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். இன்று (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் இதனை கூறினார். இது தொடர்பான விவரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதையும், விசாரணைகளின் தீவிரம் தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள ஆவலையும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1403207
  16. அனுர கட்சியில் இவர் போட்டியிட்டால்... 100 வீதம் வெல்ல சாத்தியக் கூறுகள் உள்ளன. மதில் மேல் பூனையாக உள்ள தமிழரசு கட்சியினரின், வாக்குகள் அப்படியே இவருக்கு விழும். 😃
  17. ஐ.நாவின் தீர்மானத்தை நிராகரிக்கும் இலங்கை அரசாங்கம். இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பிலான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51இன் கீழ் முதலாம் இலக்கத் தீர்மானத்தை நிராகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும் உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம் உட்பட மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வை காண அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று வாராந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், 2024 செப்டெம்பர் 9 ஆம் திகதி முதல் 2024 ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை ஜெனீவா நகரில் இடம்பெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடருக்கு அமைவாக, வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரிய சமர்ப்பித்த விடயங்கள் அமைச்சரவையின் கவனத்திற்கு எடுக்கப்பட்டது. இதனையடுத்து இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சமகாலக் கூட்டத்தொடரில் முன்மொழியப்பட்டுள்ள பிரேரணை வரைபை இலங்கை நிராகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51 இன் கீழ் முதலாம் இலக்கத் தீர்மானத்திற்கு இலங்கை தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதுடன் சாட்சிகளைத் திரட்டும் பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கின்ற எந்தவொரு தீர்மானத்திற்கும் உடன்படாதிருக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த தீர்மானத்தை நிராகரித்திருந்தாலும், உள்நாட்டுச் செயன்முறை மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமைகள் பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1403162
  18. இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு! 2024ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசினை பேராசிரியர்களான ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு மற்றும் கெஃப்ரே இ. கிளிண்டன் ஆகியோர் தட்டிச்சென்றுள்ளனர். செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றலைச் செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காகவே அவர்களுக்கு குறித்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு அமெரிக்காவில் உள்ள பிரிண்ட்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் கனடாவில் உள்ள ரொரண்டோ பல்கலைக்கழகத்தில் கெஃப்ரே இ. கிளிண்டனும் பேராசிரியர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1403194
  19. இலங்கை -இந்திய மீனவர் பிரச்சினை : சென்னையில் உள்ள இலங்கை துாதரகம் முற்றுகை ? இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்களை பாதுகாக்க கோரியும், தற்போது இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்க கோரியும், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கோரியும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை இன்று முற்றுகையிட போவதாக பா.ம.க. அறிவித்திருந்தது. அதன்படி வள்ளுவர் கோட்டம் அருகே பா.ம.க.வினர் திரண்டனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, பா.ம.க. பொருளாளர் திலகபாமா ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும் சத்ரிய நாடார் இயக்க நிறுவனர் சந்திரன் ஜெயபால், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ் நாடார், நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்க தலைவர் ஆனந்தராஜ், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மீனவர் கிராமங்களான தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். போராட்டத்தில் ஏ.கே.மூர்த்தி பேசும்போது, “கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இலங்கை சிறையில் மொட்டை அடித்து அவமானப்படுத்துகிறார்கள். கச்சத்தீவை தாரை வார்த்த தமிழக அரசுக்கு மீனவர்கள் படும் பாடு தெரியவில்லையா? இந்த பிரச்சனைக்கு தமிழக அரசு தீவிர அழுத்தம் கொடுத்து நிரந்தர தீர்வுகாண முன்வர வேண்டும். தமிழக மீனவர்களும் இந்திய மீனவர்களே என்பதை கருத்தில் கொண்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். எல்லையில் இந்திய மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாட்டு சிறைகளிலும் வாடும் இலங்கை மற்றும் இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். உடமைகளை திருப்பிக் கொடுக்க வேண்டும். இரு நாட்டு பிரதிநிதிகள் குழு அமைத்து பேச்சுவார்த்தை மூலம் உடனடி தீர்வை எட்ட வேண்டும்” என்று வலியுறுத்தினார். அதைத்தொடர்ந்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட புறப்பட்டார்கள் அவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார் 5 பேரை மட்டும் மனு கொடுக்க அழைத்து சென்றனர். https://athavannews.com/2024/1403168
  20. குடும்பத்தை காப்பாற்றுவதற்காக 69 வயதில் கடலுக்கு சென்று கடின உழைப்பின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டிய நிலை. சில வேலைகளை ஒரு வயதிற்கு மேல் செய்ய உடல் இடம் கொடுக்காது என்பதால்தான் ஓய்வு கொடுக்கின்றார்கள். கடின உழைப்பாளிகளுக்கும் அரசு ஓய்வூதியம் கொடுக்கக் கூடிய திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்த வேண்டும்.
  21. ஈழப்பிரியன்.... கீழே உள்ள ஐந்து செய்திகளும், கடந்த மூன்று நாட்களில் தமிழரசு கட்சியில் இருந்து விலகியவர்களின் தலைப்புடன் யாழ். களத்தில் உள்ள செய்திகளே. நிலைமை படு மோசம் போல் தெரிகின்றது. தமிழரசு கட்சி சேடம் இழுக்கும் நிலைமைக்கு வந்து விட்டது. 👇 👇 👇
  22. தமிழரசுக் கட்சியில் இருந்து.... முக்கியமான பலர் வெளியேறிக் கொண்டிருப்பத்தைத்தானே தினமும் பத்திரிகைகள் தலைப்பு செய்தியாக வெளியிடுகின்றன. தமிழரசுக் கட்சியில் இருந்த தொண்டர்கள் ஏற்கெனவே இடத்தை காலி பண்ணிவிட்டு வேறு கட்சிகளுக்கு சென்று விட்டார்கள். இப்போது அங்கு இருப்பது... சுமந்திரனின் செம்புகளும், அல்லக்கைகளும் மட்டுமே. 😂 🤣
  23. 35 வயது மாமியை , 16 பேர் கொண்ட குழுவுடன் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மருமகன். களுவாஞ்சிக்குடியில் 16 பேர் கொண்ட குழுவுடன் சென்ற மருமகன் மாமியாரை பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு 35 பவுண் தங்க நகைகள் பணத்தை திருடிவிட்டு தப்பிச்சென்றுள்ளார். தனிமையில் இருந்த 35 வயதுடைய மாமியாரின் வீட்டை 16 பேர் கொண்ட குழுவுடன் சென்று மருமகன் வீட்டை உடைத்து மாமியாரை பலாத்காரம் செய்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளான். பின் அவரின் 35 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்தாக பொலிசார் தெரிவித்தனர் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெணின் கணவர் இல்லாத நிலையில் தனது 19 வயது மகள் திருமணம் முடித்து வேறு இடத்தில் தங்கி வாழ்ந்து வருகின்றதுடன் தாயார் தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வருகின்றார் என தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்தமைக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பெண் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2024/1403097

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.