Everything posted by தமிழ் சிறி
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
சும்முக்கு, காசு வருகுது என்றால்..... புனிதமானது மண்ணாங்கட்டியாவது. 😂 எல்லாம்... திருட்டு கூட்டங்கள். இந்தத் தேர்தலுடன்... பின்னங்கால் பிடரியில் பட... ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும். 🤣 💪
-
மதுபான சாலை இருப்பதை நிரூபித்தால் விலகிக் கொள்வேன்! - செல்வம் அடைக்கலநாதன்
அனேகமாக எல்லோரும் மதுபானசாலை அனுமதி பெறவில்லை என்று… தமது சுய விளக்கத்தையும், மறுப்பு அறிக்கையையும் வெளியிட்டு விட்டார்கள். 👍🏽 👏🏻 சுமந்திரனும், சாணக்கியனும் தான்… திருட்டு முழி முழித்துக் கொண்டு “பம்மிக்” கொண்டு இருக்கின்றார்கள். 😂 ஓறிஜினல் சாராய வியாபாரிகள்…. சுமந்திரனும், சாணக்கியனும் தான் போலுள்ளது. 🤣
-
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 277 யானைகள் உயிரிழப்பு
சென்ற வருடத்தை விட… இந்த வருடம் யானைகளின் உயிரிழப்பு ஒப்பீட்டளவில் குறைவு என்றாலும், சிறிய நாட்டிற்கு இது மிக அதிகம்.
-
பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக யாழ். இளைஞனிடம் மோசடி ; ஒருவர் கைது!
எத்தனை ஏமாற்று செய்திகள் வந்தாலும், ஏமாறுபவர்கள்…. ஏமாந்து கொண்டே இருக்கின்றார்கள். கொஞ்சமாவது மூளையை பாவிக்க வேண்டாமோ…
-
தேர்தலில் போட்டியிடப் போவதில்லை; சிவசக்தி ஆனந்தன் அறிவிப்பு
இவர்… பாராளுமன்றில் பேசியதாக ஒரு செய்தியும் நான் வாசித்ததில்லை. சில வேளை… பாராளுமன்ற “கன்டீனில்” சாப்பிட்டு விட்டு, “நித்தா” கொண்டு விடுவாரோ… 🤣
-
தலைமையை ஏற்குமாறு சிறிதரனுக்கு கடிதம் அனுப்பியுள்ள மாவை!
மாவையின் கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று… சத்தியலிங்கம் சொன்னதாக பிறிதொரு செய்தியில் உள்ளது. 🧐 சத்தியலிங்கம்… சுமந்திரனின் செம்புகளில் ஒருவர். இவர் “ஜில்மால் சுத்துமாத்துக்களை சுமந்திரனிடமிருந்து” நன்கு கற்று தேறிய ஒருவர். ஆகவே… இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 😂 எல்லா திருடர்களையும்…. வெளியே அனுப்ப வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டுளது. 🤣
-
ப்ரோக்கோலி சாப்பிட்டால் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து குறையுமா?
புரோக்கோலி… எனக்குப் பிடித்த உணவு. அதனை ஒரு முக்கால் அவியலில் வறை செய்து சாப்பிடும் போது அதன் சுவையே தனி. இப்போ அதன் அறுவடைக் காலம் என்பதால் எங்கும் மலிவாகவும், தாராளமாகவும் கிடைக்கின்றது. இங்கு 500 கிராம் 99 சதம் விற்கின்றார்கள். 🙂
-
சுமந்திரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கும் தமிழரசு கட்சியின் மகளிர் அணி
சுமந்திரன் மீது… குற்றம் சாட்டாத தமிழரசு கட்சியினரே இல்லைப் போல் தெரிகிறது. அந்தளவுக்கு… அவர் தனது தான் தோன்றித்தனமான செய்கைகளால் அல்லக்கைகளுக்கு இடம் கொடுத்து கட்சியை கெடுத்து வைத்துள்ளார். வரும் தேர்தலுடன் “கட்டுக்காசும் கிடைக்காமல்” போகப் போற ஆள் தானே…. நல்லாய் ஆடட்டும்.🤣
-
தமிழரசுக்கட்சியிலிருந்து விலகினார் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா - உத்தியோகபூர்வ கடிதம் கிடைக்கவில்லை என்கிறார் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம்
மாவை…. மனம் மாற முதல், அவரது இராஜினாமா கடிதத்தை ஏற்று, அவருக்கு ஓய்வு கொடுங்கள். 😂
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
எப்ப செத்தது என்று சொல்லாதேங்கோ... ஒப்பாரி வைத்து அழுதிடுவார். 🤣
-
25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவழி.
மீண்டும் புளோரிடாவா...? ஈழப்பிரியன். ஒய்வு கொடுக்க அவகாசம் இல்லாமல் தாக்குது.
-
25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவழி.
அமெரிக்காவை உலுக்கிய ஹெலீன் புயல்: 227 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவைத் தாக்கிய ஹெலீன் புயலால் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 227 ஆக உயர்வடைந்துள்ளது. கரீபியன் கடற்பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அதிதீவிர புயலாக உருமாறி, அமெரிக்காவில் பல இடங்களைத் தாக்கியுள்ளது. ஹெலீன் என்று பெயரிடப்பட்ட குறித்த புயல், கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை தாக்கியது. இதனையடுத்து வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜியார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களும் புயல் தாக்கத்திற்கு உள்ளானது. இப் புயல் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்தமையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புயல் தாக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 227 ஆக உயர்வடைந்துள்ளது. தற்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1402938
-
2024-ஆம் ஆண்டு நோபல் பரிசு: செய்திகள்
மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு! 2024 ஆம் ஆண்டுக்கான உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசானது அமெரிக்க விஞ்ஞானிகளான விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மரபணு ஒழுங்குமுறையில் முக்கிய பங்கு வகிக்கும் சிறிய RNA மூலக்கூறுகளின் புதிய வகுப்பைக் கண்டுபிடித்தமைக்காக அவர்கள் இந்த பரிசினை கூட்டாக வென்றனர். வெற்றியாளர்கள் 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (சுமார் £810,000) பரிசைப் பகிர்ந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான விருது 1901 முதல் உடலியல் அல்லது மருத்துவத்தில் வழங்கப்படும் 115 ஆவது நோபல் பரிசு ஆகும். 2024 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு செவ்வாய்க்கிழமையும், அதைத் தொடர்ந்து வேதியியலுக்கான பரிசு புதன்கிழமையும் அறிவிக்கப்படும். https://athavannews.com/2024/1402922
-
ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமாணம்!
நீங்கள் நினைத்தபடி படம் சரியாக இருக்கலாம். ஆனால்... அதில் உள்ள செய்தி அவர்களுக்கு பாதகமாக அல்லவா உள்ளது. யாராவது தனது பத்திரிகையில்... தன்னைப் பற்றி எதிர்மறையாக எழுத மாட்டார்கள் தானே. எதற்கும் சில நாள் பொறுத்திருக்க... சாயம் வெளுத்து, சுயம் வெளிப்படும்.
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
செத்த ஆட்களின் ஆவி.... ஒரு வருசத்துக்கு சுற்றிக் கொண்டு திரியும் என்பது சிலரின் நம்பிக்கை. அந்த வகையில்... சம்பந்தனும் இந்தக் காட்சியை பார்த்து ரசிக்கலாம். தான்... ஆரம்பித்து வைத்ததை, தனது வாரிசு சுமந்திரன் முடித்து வைக்கின்றார் என்று ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்.
-
ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமாணம்!
அது... சஜித் பிரேமதாச மட்டும் வாசிக்க, "சுமந்திரய" என்ற பெயரில் சிங்களத்தில் வருகுது போலை கிடக்கு. 😂 🤣
-
தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி
தமிழரசு கட்சிக்கு.... கடைசி ஆணி அடித்து, பெட்டி மூடப் போகிறார்கள். கடைசியாக பார்க்க வேண்டிய ஆட்கள், வந்து... பார்த்திட்டு போங்கோ.
-
ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமாணம்!
சிலவேளை இந்தியா....? இந்தியாவின் கண்ணசைவு இல்லாமல் இதுகள் நடக்க சாத்தியம் குறைவு. அத்துடன் பத்திரிகையின் வர்ணம் இந்தியக் கொடியை நினைவூட்டுகின்றது.
-
ஒருவன் ஊடக வலையமைப்பின் மற்றுமொரு பரிமாணம்!
சுமந்திரனாக இருக்குமோ. ஏனென்றால்... அண்மைய கால நட்புகளாக சுமந்திரனும், வித்தியாதரனும் தான் நெருக்கமாக இருக்கின்றார்கள். அத்துடன்... பத்திரிகையின் முதலாவது வெளியீட்டு தலைப்பு செய்தியே, பின் நின்று இயக்கும் ஆளை காட்டிக் கொடுத்து விட்டது என்பது எனது கணிப்பு. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள். மற்றவர்களிடம் இந்தக் கேள்வியை கேட்டு இருக்க மாட்டேன். உங்களிடம் இருந்து உவத்தல், காய்த்தல் இன்றி நேர்மையான பதில் வரும் என்று கருதியதாலேயே கேட்டேன். பதில் சொல்ல தயக்கமாக இருந்தால்.. விட்டு விடுங்கள். 🙂
-
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படும்; பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் - ஜனாதிபதி!
அதுதான்... இவ்வளவு துணிவாக மக்கள் முன் நடமாடிக் கொண்டு இருக்கின்றார்கள்.
-
தேர்தலில் போட்டியிட... ஏன் பலர் முன்வருகின்றனர்?
•தேர்தலில் போட்டியிட ஏன் பலர் முன்வருகின்றனர்? தேர்தலில் போட்டியிட முன்வரும் அனைவரும் தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வருவதாகவே கூறுகின்றனர். போராட்டம் நடைபெற்ற காலத்தில் தமிழ் மக்களுக்கு எந்த சேவையோ அல்லது அர்ப்பணிப்போ செய்யாமல் இருந்தவர்கள் இப்போது ஏன் முன்வருகின்றனர்? ஏனெனில் தேர்தலில் வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் சலுகைகளுமே காரணமாகும். இதோ ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் சம்பள விபரம், salary -54,485 Rs fuel -30,000 Rs transport-10,000 Rs Entertainment- 10,000 Rs mobile phone -2000 Rs meeting each -500Rs Current bill - free Land line phone - free train ticket first class free Air tickets 40 free For Him and for his wife or PA (two persons) மற்றும் Secretary Vehicle Quarters Computers Bodyguards ஆக மொத்தம் சராசரி மாதாந்த சம்பளம் 120000 ரூபா. வருடத்திற்கு 1440000 ரூபா. ஒரு படித்த பட்டதாரி ஆசிரியரின் சம்பளம் வெறும் 30 ஆயிரம் ரூபா மட்டுமே. எந்த படிப்பும் தேவையற்ற ஒரு எம.பி யின் சம்பளம்- 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபா இந்தளவு சம்பளம் பெறும் உறுப்பினர் பாராளுமன்றில் செய்வது, குறட்டை விட்டு தூங்குவது கெட்ட வாhத்தைகளால் திட்டுவது சண்டை பிடிப்பது, பேப்பர் ராக்கட் விடுவது மிளகாய் தூள் வீசுவது அப்புறம் மதியம் பாராளுமன்ற கண்டீனில் மலிவு விலையில் சாப்பாடு. கொழும்பில் சொகுசு பங்களா, சொகுசு வாகனம், சிங்கள பொலிஸ் பாதுகாப்பு சொகுசு வாகன பெர்மிட்டை விற்று 5 கோடி ரூபா சுளையாக எடுக்கலாம். உதவியாளர், சாரதி, அலுவலக வாடகை எல்லாம் தம் உறவினர்களுக்கு கொடுத்து அதில் இருந்தும் காசு பார்க்கலாம். 5 வருடம் பதவி காலம் முடிய பென்சன் பெறலாம். இதைவிட செம்புகளிடமிருந்து “போராளி” “வாழும் வீரர்” போன்ற பட்டங்கள் பெறலாம். இத்தனைக்குமாகவே இவர்கள் முன்வருகின்றனர். இவை இல்லை என்றால் இதில் ஒருவர்கூட முன்வர மாட்டார்கள். தோழர் பாலன்
-
வேட்பாளர் தெரிவில் தூய்மையான அரசியலை பேணுதல் வேண்டும்; மார்ச் 12 இயக்கம்
தகவலுக்கு நன்றி ஏராளன்.
-
வேட்பாளர் தெரிவில் தூய்மையான அரசியலை பேணுதல் வேண்டும்; மார்ச் 12 இயக்கம்
மார்ச் 12 இயக்கமா? ஏன்... அந்தப் பெயராய் வைத்தார்கள் என்ற தகவல் தெரியுமா.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
தமிழரசு கட்சிக்கு, சுமந்திரன்.... இறுதிக் கிரியை நடத்துகின்றார். 😂 டணக்கு.... டணக்கு... டாங்கு டக்கு..... 🤣 - தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் அதிரடி முடிவு
Important Information
By using this site, you agree to our Terms of Use.