Everything posted by தமிழ் சிறி
-
85 இந்தியர்களை இராணுவத்தில் இருந்து வெளியேற்றியது ரஷ்யா!
85 இந்தியர்களை இராணுவத்தில் இருந்து வெளியேற்றியது ரஷ்யா! ரஷ்ய இராணுவத்தில் இருந்து இதுவரை 85 இந்தியர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 20 இந்தியர்களை விடுவிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக இந்தியா வெளிவிவகாரச் செயலர் விக்ரம் மிஸ்ரி திங்களன்று (21) தெரிவித்தார். ரஷ்யாவின் கசான் நகரில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் செவ்வாய்கிழமை இருதரப்பு சந்திப்பை நடத்துவார். இதன்போது, மீதமுள்ள இந்திய படையினரை வெளியேற்றுவது குறித்து இந்திய தரப்பில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார். ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய ஒன்பது இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் முதல், ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சகம், இந்தியா உட்பட பல வெளிநாடுகளின் குடிமக்களை இராணுவ சேவையில் சேர்ப்பதை நிறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1405191
-
மதம்பிடித்து ஆக்ரோஷமான யானை; முதுகில் சிக்கிக்கொண்ட சகோதரிகள் - நடந்தது என்ன?
முன்பு யாழ். கோட்டையை சுற்றி, உரிமையாளர் அற்ற ஐந்தாறு குதிரைகள் மேய்ந்து கொண்டு திரியும். படிக்கும் காலங்களில் சில நண்பர்கள் சேர்ந்து... குதிரையை பிடித்து, தும்பு கயிறால் நாங்கள் செய்த கடிவாளத்தை போட்டு... ஏறி இருந்து சவாரி? (நடை பவனி) போவது வழக்கம். ஒரு முறை குதிரை... பின்னங்காலால் ஒரு உதை விட்டுது, வாழ்க்கையில் மறக்க முடியாது. அதன் பின் இன்று வரை... குதிரை ஏறும் ஆசையே போய் விட்டது. 😂
-
மதம்பிடித்து ஆக்ரோஷமான யானை; முதுகில் சிக்கிக்கொண்ட சகோதரிகள் - நடந்தது என்ன?
அவர்களுக்கு.... மீண்டும் யானைச் சவாரி செய்யும் ஆசை வருமா, வராதா. 🤣
-
கம்மன்பிலவின் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை நிராகரித்த அரசாங்கம்!
- கம்மன்பிலவின் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை நிராகரித்த அரசாங்கம்!
உதயகம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க திருச்சபை அறிவிப்பு! முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிவிதுரு கெலஉறுமய கட்சியின் தலைவருமான உதயகம்மன்பில நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுகளை இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை நிராகரித்துள்ளது. உதயகம்மன்பில வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கத்திலுள்ள இரண்டு அதிகாரிகளிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ள இலங்கை கத்தோலிக்க திருச்சபை தனது மறுப்பினை உத்தியோகபூர்வமாக இன்று அறிவிக்கவுள்ளனர். அத்துடன் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு எதிராக உதயகம்மன்பில வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில்வழங்கவுள்ளதாக அருட்தந்தை சிறில்காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை ஓய்வுபெற்ற நீதியரசர் இமாம் தலைமையிலான விசாரணை ஆணைக்குழு ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையை எதிர்வரும் 28ஆம் திகதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுதவுள்ளதாக பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில நேற்றையதினம் அறிவித்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1405141- கருத்து படங்கள்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் நேற்று (21) வெளியிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.- கம்மன்பிலவின் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை நிராகரித்த அரசாங்கம்!
கம்மன்பிலவின் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை நிராகரித்த அரசாங்கம்! முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் நேற்று (21) வெளியிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இந்த சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் புதிய விசாரணைகளை மேற்கொள்ளும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரை தற்போதைய பதவிகளில் இருந்து எக்காரணம் கொண்டும் நீக்க அரசாங்கம் தயாராக இல்லை என்றும் கூறினார். https://athavannews.com/2024/1405181- கடவுச் சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது
புதிய நீல நிற கடவுச்சீட்டு அறிமுகம்! வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் அண்மைக்காலமாக நிலவும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய நீல நிற கடவுச்சீட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய கடவுச்சீட்டானது 64 பக்கங்களை கொண்டிருந்தது. குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளான புதிய கடவுச்சீட்டு இப்போது 48 பக்கங்களைக் கொண்டுள்ளது. மேலும், முந்தைய கடவுச்சீட்டுகளில் N எண்கள் இருந்த நிலையில் புதிய கடவுச்சீட்டில் P எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய கடவுச்சீட்டின் அனைத்து பக்கங்களிலும் அழகான இலங்கையின் சிறப்பு மிக்க மற்றும் வரலாற்று சின்னங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக யாழ். நல்லூர் ஆலயம், வரலாற்று சிறப்புமிக்க காலி ஒல்லாந்தர் கோட்டை, ஸ்ரீ தலதா மாளிகை, கொழும்பின் தாமரை கோபுரம், சிகிரியா, ஒன்பது வலைவு பாலம், பொலன்னறுவையின் வரலாற்று தளங்கள் உட்பட இலங்கையின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் மற்றும் பாரம்பரிய தொழில்கள் ஆகியவை புதிய கடவுச்சீட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு நாள் சேவையின் கீழ் 20,000 ரூபா கட்டணத்துடன் விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னுரிமை அளித்து புதிய கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். புதிய கடவுச்சீட்டுகள் போதுமான அளவு கையிருப்பு கிடைத்துள்ளதால், எதிர்காலத்தில் கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்படும் நெரிசல் குறையலாம் என குடிவரவு குடியகல்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2024/1405109- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீ ரங்கா தலைமறைவு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீரங்கா... பல்வேறு சர்ச்சைகளில் சிக்கும் நபர். தெரிந்து செய்கின்றாரோ, தெரியாமல் செய்கின்றாரோ... ஆண்டவனுகுத்தான் வெளிச்சம். வவுனியாவியிலும் ஒருவரை வாகனத்தால் விபத்து ஏற்படுத்திவிட்டு, தனது சாரதி செய்தது என்று சொல்லிய நினைவு.- பெய்ரூட் வைத்தியசாலையின் கீழ் ஹெஸ்புல்லாவின் மில்லியன் கணக்கான பணம், தங்கம்!
பெய்ரூட் வைத்தியசாலையின் கீழ் ஹெஸ்புல்லாவின் மில்லியன் கணக்கான பணம், தங்கம்! இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் திங்களன்று (21) ஹெஸ்புல்லா பயங்கரவாதக் குழுவின் நிதி மையம் தொடர்பான உளவுத்துறை தகவலை வெளிப்படுத்தியது. அதில், பெய்ரூட்டில் உள்ள ஒரு வைத்தியசாலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பதுங்கு குழியில் ஹெஸ்புல்லா நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர்கள் மற்றும் தங்கத்தை பதுக்கி வைத்துள்ளமை கண்டறியப்பட்டதாக கூறியது. ஹெஸ்புல்லாவின் நிதி சொத்துக்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த இலக்கு மீது தாக்குதல் நடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. ஒரு தொலைக்காட்சி அறிக்கையில், இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி, இந்தக் கூற்றுக்கு வழிவகுக்கும் உளவுத்துறை தகவல்கள் பல ஆண்டுகளாக சேகரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். இஸ்ரேலின் இந்தக் கருத்துக்கு ஹெஸ்புல்லா உடனடியாக எந்தக் கருத்தினையும் தெரிவிக்கவில்லை. https://athavannews.com/2024/1405177- "நீங்கள் எனது மன்னரில்லை"- அவுஸ்திரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சார்ல்ஸின் நிகழ்வில் கோசமெழுப்பிய பெண் செனெட்டர்
இங்கிலாந்துக்காரன் குட்டிச் சுவராக்காமல் விட்ட நாடுகளை… அமெரிக்கன்காரன் குட்டிச் சுவராக்கிக் கொண்டுள்ளான். 🤣- கடவுச் சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது
இதனை நீங்கள்... ஜேர்மன்காரனுக்கும், பிரான்ஸ் காரனுக்கும், ஜப்பான்காரனுக்கும், சீனாக்காரனுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். 😂 அவர்கள் விஷயம் தெரியாமல், தமது தாய் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர் முட்டாள் பயலுகள். 🤣- கடவுச் சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது
இலங்கையின் புதிய கடவுச் சீட்டின் 6-7 ம் பக்கத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில் படம் உள்ளது. இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கடவுச்சீட்டு தொடர்பான சில தகவல்கள். இலங்கையில் 21.10.2024 இல் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்களின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இராஜதந்திர கடவுச்சீட்டு, உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்கள் மூன்று வெவ்வேறு வர்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சாதாரண கடவுச்சீட்டு கருமைநிறம் புலப்படக்கூடிய வகையில் கருநீல நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டில் கீழ்வரும் அம்சங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் புறவூதாக் கதிர்களில் ஒளிரக்கூடியவகையில் அச்சிடப்பட்டுள்ளன. 4-5 ம் பக்கத்தில் தலதாமாளிகை 6-7 ம் பக்கத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில் 8 ம் பக்கத்தில் கொழும்பு புனித லூசியா தேவாலயம் 9 ம் பக்கத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் 10-11 ம் பக்கத்தில் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம் 12-13 ம் பக்கத்தில் அனுரதபுர ரூவன்வெலிசாய மகா விகாரை 14-15 ம் பக்கத்தில் பதுளை ஒன்பது வில் பாலம் 16-17 ம் பக்கத்தில் மட்டக்களப்பு வாவி 18-19 ம் பக்கத்தில் கொழும்பு தாமரைக் கோபுரம் 20-21 ம் பக்கத்தில் காலி கோட்டை 22-23 ம் பக்கத்தில் கம்பகா இறப்பர் தோட்டம் 24-25 ம் பக்கத்தில் ஹம்பாந்தோட்டை உப்பளம் 26-27 ம் பக்கத்தில் களுத்துறை STILT மீனவர்கள் 28 ம் பக்கத்தில் பின்னவல யானைகள் சரணாலயம் 29 ம் பக்கத்தில் கிளிநொச்சி அடையாளமாக இலங்கை சாம்பல் இருவாச்சி பறவை 30 ம் பக்கத்தில் குருநாகல் யாப்பகூவா குன்றுகள் 31 ம் பக்கத்தில் தலைமன்னார் படகுத்துறை 32-33 ம் பக்கத்தில் சிகிரியா குன்று 34 ம் பக்கத்தில் மாத்தறை வெளிச்சவீடு 35 ம் பக்கத்தில் யால தேசிய பூங்கா 36 ம் பக்கத்தில் முல்லைத்தீவு கொக்கிளாய் பறவைகள் சரணாலயம் 37 ம் பக்கத்தில் நுவரெலியா தேயிலை தோட்டம் 38-39 ம் பக்கத்தில் பொலநறுவை பழமை நகரம் 40-41 ம் பக்கத்தில் புத்தளம் டொல்பின் காட்சிக்காணல் 42-43 ம் பக்கத்தில் சிவனொளிபாதமலை 44 ம் பக்கத்தில் திருகோணமலை புறாத்தீவு 45 ம் பக்கத்தில் வவுனியா அரிசி அறுவடை என்பன அச்சிடப்பட்டுள்ளன. AB Amam- யாழ். தெல்லிப்பளையில் பற்றைக்காட்டில் சொகுசு கார் மீட்பு
நல்லூர் கோவிலை இடித்து மலசலகூடம் கட்டுவேன் என்ற அருண் சித்தார்த் என்பனிடமும்.. கோத்தபாய ராஜபக்ச கொடுத்த சொகுசு வாகனம் ஒன்று உள்ளதாம்.- தலைக்கு ஐயாயிரம் ரூபா இலஞ்சம் கொடுத்த தமிழரசு வேட்பாளர்...!
எனக்கு…. சுமந்திரனின் நண்பர் சாணக்கியன் மேல்தான் சந்தேகமாக உள்ளது. இவர்கள் முன்னைய ஆட்சியில் ரணிலிடம் பல கோடிகளை பெற்ற பணம் மெல்ல வெளியே வருகின்றது போல… ஜனாதிபதி தேர்தலில்… சஜித் பிரேமதாசவை ஆதரித்தமைக்கும் சுளையாக பல கோடிகளை கறந்து இருப்பார்கள். லஞ்சம் கொடுத்து வாக்கு வாங்க வேண்டிய நிலையில்… தமிழரசு கட்சியை கொண்டு வந்து நிறுத்திய பெருமை… சுமந்திரன், சாணக்கியனையே சேரும்.- கடவுச் சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது
சிங்கம் பெரிதாகிக் கொண்டு வர, எழுத்துக்கள் சிறிதாகி.. தமிழ்... மூன்றாம் இடத்திற்கு போய் விட்டது ஈழப்பிரியன். கடன் கொடுக்கும் உலக வங்கியை பந்தம் பிடிக்க, ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்கள். 😂- கடவுச் சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது
எது வடிவாயிருக்கு.- இரசித்த.... புகைப்படங்கள்.
- இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.- தமிழ்த்தாய் வாழ்த்து - சுப.சோமசுந்தரம்
இனம் அழிந்த போது வராத கோபம்... இரு வரி அழிந்த போது வந்ததால்... நீ... அன்னியனே.- கடவுச் சீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டது
இலங்கைக்கு வந்துள்ள புதிய கடவுச் சீட்டு.- தமிழரசுக் கட்சிக்குள் இவ்வளவு பிரச்சினைகளா?
தமிழரசுக் கட்சிக்குள் இவ்வளவு பிரச்சினைகளா?- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
- கம்மன்பிலவின் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையை நிராகரித்த அரசாங்கம்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.