Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. எனக்கு… கெட்ட கோவம், வரப் பண்ணாதேங்கோ… 😂 🤣
  2. வெளிநாடுகளின் விருப்பத்திற்கு அமைவாக அரசை நடத்தா விட்டால் ஆறு மாதத்தில் அனுராவை பதவி இறக்கி விடுவார்கள். ஒருவன் நல்லதை நினைத்து... ஆட்சி செய்ய வந்தாலும், அயல் நாடுகளால் பிரச்சினை. 😢
  3. இரண்டும் ஒன்றை ஒன்று வென்றதுகள். கள நிலைமை தெரியாமல்... ஏவல் பேய்களாக.. வேறு ஆட்களின் நிகழ்ச்சி நிரலுக்காக. இனத்தை விற்று காசு பார்க்கும் கோஸ்டிகள். பலாலி இராணுவ படைத்தளத்தில்... நடந்த விருது வழங்கும் நிகழ்வின் போது, பிக்குகள் அமரும் கதிரைக்கு வெள்ளைத்துணி போர்க்கப்படவில்லை என்பதற்காக... மறவன்புலவு சச்சி, தனது வேட்டியை அவிட்டு போர்க்கக் கொடுத்துவிட்டு, உள்ளாடையுடன் பல்லைக் காட்டிக் கொண்டிருக்குது, வெட்கம் கெட்டது.
  4. இவர்கள்... 7 பேர் பாராளுமன்றம் போயும், என்னத்தை வெட்டி வீழ்த்துகின்றவர்கள். இவர்களுக்கு பாரளுமன்ற பதவி.... கௌரவத்துக்கும், பணம் சம்பாதிக்கவும், வயிறு வளர்க்கவும்தான் உதவியிருக்கு. பேசாமல்... வேலைக்குப் போய், உழைத்து சாப்பிடட்டும். 😂
  5. சுமந்திரனுக்கு கிடைத்த மூன்று மதுபான அனுமதி பத்திரங்களில்... ஒன்று, வல்வெட்டித்துறையில் இயங்கிக் கொண்டு உள்ளது. சாணக்கியனுக்கு கிடைத்த ஒரு மதுபான அனுமதி, கல்லடியில் இயங்கிக் கொண்டுள்ளது. கிளிநொச்சியில் இரண்டு நாட்களுக்கு முன் ஏற்கெனவே இருந்த மதுபான நிலையத்துக்கு அருகில் புதிய மதுபான நிலையைம் 700 மீற்றர் இடை வெளியில் திறந்து வைக்கப் பட்டுள்ளது. கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வரும் தானே... அதுமட்டும் நடக்கிறதை பார்த்துக் கொண்டு இருப்போம்.
  6. இப்போ... ஞாபகம் வந்து விட்டது ஏராளன். நன்றி. அருண் சித்தார்த்தன். கோத்தபாயவை... பதவி விலத்த நடந்த போராட்டத்தின் போது, யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து ஹிருணிகாவின் ஆதரவாளர்களால் செருப்படி வாங்கியவர்.
  7. கோத்தபாய ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பல விலை உயர்ந்த புத்தம் புதிய வாகனங்கள் பிக்குகளிடம் இருந்தது. அத்துடன் யாழ்ப்பாணத்தில் இயங்கிக் கொண்டு தமிழர் வெறுப்புக்களை கக்கிக் கொண்டு இருந்த ஓட்டுக்குழு உறுப்பினருக்கும் ஒரு வாகனம் கொடுக்கப் பட்டு இருந்தது. அவர்தான்... நல்லூர் கோவிலை இடித்து மலசல கூடம் கட்டுவேன் என்று சொன்னவன். அவனின் பெயர் தற்போது நினைவிற்கு வரவில்லை.
  8. மனதை தொட்ட வரிகள் இவை. கவிதைக்கு நன்றி நொச்சி.
  9. பன்முகத்தன்மையை மதிக்கும் தேசமாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்-ஜனாதிபதி! ஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக இருந்த இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம். எங்கள் வேலைத்திட்டத்தில் உடன்படாத தரப்பினர் கூட நாங்கள் அடைந்த வெற்றியால் மகிழ்ச்சி அடைந்தால் மாத்திரமே நீங்கள் அளித்த இந்த வெற்றி மேலும் பலமானதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, இந்த வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறேன். நமது அரசியல் இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, பல்வேறு அவதூறுகளையும், பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களையும் ஒதுக்கி விட்டு, புதிய பரிசோதனைக்கு அஞ்சாமல், எமது அரசியல் இயக்கத்திற்கு நமது நாட்டின் ஆட்சி அதிகாரத்தை வழங்கும் அளவிற்கு பெரும் உறுதியுடன் இருந்த பிரஜைகள் உட்பட அனைத்து மக்களுக்கும் இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள் கொடுப்பதற்கான பலம் இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். இந்த வெற்றிக்காக எமக்கு முன்னரும், எங்களுடனும் பலவிதமான தியாகங்களைச் செய்த, சில சமயங்களில் தங்கள் உயிரைக்கூட தியாகம் செய்த பல தலைமுறைகளின் விலைமதிப்பற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் நாங்கள் மரியாதையுடன் நினைவுகூருகிறோம். இந்த வெற்றியையும், அதன் மூலம் கட்டியெழுப்பப்படும் வளமான நாட்டையும் அவர்களுக்கு அளிக்கும் கௌரவமாகவே நான் கருதுகிறேன். இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான பங்கை கூட்டுசெயற்பாடாக நிறைவேற்றும் திறன் எமக்கு உள்ளது. அதற்கான மிகத் திறமையான குழு எங்களிடம் உள்ளது. நம் அனைவருக்கும் அது குறித்த முழுமையான உறுதிப்பாடு உள்ளது. நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த எத்தகைய மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு முன்னதாக பொருளாதாரத்தை நிரந்தரமான நிலைக்கு உயர்த்துவது அவசியம் என நாம் நம்புகிறோம். அதற்காக நீண்டகால மத்திய கால திட்டங்களைத் தயாரிப்பதற்கு முன்னர், பின்பற்ற வேண்டிய துரித பொருளாதார செயற்பாடுகளின் ஊடாக குறுங்கால ஸ்தீரநிலையை ஏற்படுத்த நாம் நடவடிக்கை எடுப்போம். நாம் எதிர்பார்க்கும் மாற்றத்திற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவை அனைத்தும் தற்போதைய பொருளாதாரத்தில் ஸ்தீர நிலையையும் நம்பிக்கையும் கட்டியெழுப்புவதில் மாத்திரமே தங்கியுள்ளது. அதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் துரிதமாக பேச்சுவார்த்தை ஆரம்பித்து நீடிக்கப்பட்ட கடன் வசதியுடன் தொடர்புள்ள விடயங்களை தொடர்ந்து முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கிறோம். கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக, சம்பந்தப்பட்ட கடன் தரப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அது தொடர்பான பணிகளை விரைவில் நிறைவு செய்து, உரிய கடன் நிவாரணத்தைப் பெறுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அதற்கு இந்த நாட்டு மக்களைப் போலவே சர்வதேச சமூகத்தினதும் ஆதரவையும் பெற முடியும் என நம்புகிறோம். அந்த ஒத்துழைப்பின் மூலம் இந்த கூட்டு முயற்சியில் வெற்றி பெற முடியும் என எதிர்பார்க்கிறோம். எமக்கு அதிகாரத்தை கையளிக்கையில் ‘மாற்றம்’ ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணக் கருவே மக்களிடத்தில் ஆழமாக பதிந்திருந்தது. மாற்றம் என எமது நாட்டு மக்கள் கருதுவது அரசியல் முறைமையில் காணப்படும் அனைத்துவிதமான மோசமான பண்புகளை மாற்றுவதையாகும். தற்போது அது நிரூபனமாகியுள்ளது. இந்த நாட்டில் நடைபெற்ற அனைத்துவிதமான தேர்தல்களையும் நோக்கினால், தேர்தலுக்குப் பின்னரான எந்த வன்முறைச் சம்பவமும் நடைபெறாத ஒரேயொரு தேர்தலாக நாம் வெற்றியீட்டிய ஜனாதிபதித் தேர்தலாக வரலாற்றில் இணைக்க முடிந்துள்ளது. இது நமது நாட்டு மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது. இந்த நிலைமையை உறுதிப்படுத்தி நிலைப்படுத்துவது எமது நோக்கமாகும். அரசியலில் அதிகாரத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கும் அதற்காக வியூகம் அமைப்பதற்கும் எவருக்கும் உரிமையுள்ளது. அரசியல் செய்யும் நேரத்தில் அரசியல் செய்வதற்கும், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரத்தில் அதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கியத்துவத்தையும் இந்த தருணத்தில் வலியுறுத்துகிறேன். அதற்கான தலைமைத்துவத்தை நாம் வழங்குகிறோம். சிங்களவராக இருந்தாலும், தமிழராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும், பேர்கராக இருந்தாலும், மலேயராக இருந்தாலும், இவர்கள் அனைவருக்கும் “நாம் இலங்கைப் பிரஜைகள்” என்று பெருமையுடன் வாழக்கூடிய நடைமுறைச்சாத்தியமான ஒரு நாடு உருவாகும் வரை, இந்த நாடு தோல்வியடையுமே தவிர வெற்றியடையாது. அதற்காக அரசியலமைப்பு ரீதியான,பொருளாதார.அரசியல் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள ஒரு போதும் நாம் பின்வாங்க மாட்டோம். தனது இனம், தனது மதம், தனது வர்க்கம், தனது சாதி என இந்த நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமாக இந்நாட்டைக் கட்டியெழுப்பும் நிலையான, நிரந்தரமான வேலைத்திட்டத்தை நாம் ஆரம்பிப்போம். இந்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்காக அவற்றை செயல்படுத்த அவசியமான செயற்திறன்மிக்க மற்றும் நேர்மையான அதிகாரிகளை நியமிக்கும் பல நடவடிக்கைகளை நாங்கள் ஏற்கனவே நிறைவு செய்துள்ளோம். பொதுப் பணிக்கு இடையூறு ஏற்படாத மற்றும் பிரஜைகள் தொடர்பில் பாதகமான அழுத்தங்கள் ஏற்படாத வகையில் , எதிர்பார்த்த மாற்றங்கள் படிப்படியாக மேற்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம். சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கவும், ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கவும் நாங்கள் அர்ப்பணிப்புடன் உள்ளோம். அனைத்து பிரஜைகளினதும் சமூக பாதுகாப்பை உறுதி செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2024/1401122
  10. கடந்த மூன்று வருடமாக பியர் குடிப்பதில்லை. எல்லாம் ஒரு வயதில், ஆசை தீர குடித்து கும்மாளம் போட்டாயிற்று. இப்போ.... பாலும், பழரசமும் தான். 😂 🤣
  11. நொச்சி... தங்களது இந்தக் கேள்வியை தற்போதுதான் கவனித்தேன். காலையில் உடற் பயிற்சிக்குப் போய் விட்டு வந்து, மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்டு விட்டு... இரண்டு மணியளவில் சைக்கிளை எடுத்துக் கொண்டு 7 கிலோ மீற்றர் ஓடி விட்டு வந்து இப்போ... ஐஸ் கோப்பி குடித்துக் கொண்டு இருக்கின்றேன்.
  12. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைத்த மதுபான அனுமதிப் பத்திரங்களை, சிலர் பல கோடி ரூபாய்களுக்கு விற்று பணமாக்கி விட்டார்களாம். அதே போல் அமைச்சர்மார் இந்த வாகனங்களை விற்று இருந்தால்.... காசு கொடுத்து வாங்கியவன் திருப்பி கொடுப்பானா...
  13. முதலில்... சுமந்திரன் அவர்களுடன் கதைத்தாரா? என்பதே சந்தேகத்துக்கு இடமானது. ஏனென்றால்... சஜித்துக்கு, சுமந்திரன் ஆதரவு கொடுத்ததை, பத்திரிகை வாயிலாகவே தான் அறிந்து கொண்டதாக சஜித் தெரிவித்து இருந்தமை ஊர்ப்புதின செய்தியிலும் இங்கு இணைக்கப் பட்டு இருந்தது. சுமந்திரன் வாயை திறந்தால், 90 வீதம்... பொய்யும், பிரட்டும், சுத்துமாத்தும்தான். உளறு வாயன், சொல்வதை எல்லாம் சீரியஸாக எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வருகின்ற தேர்தலுடன் காணாமல் போகின்ற ஆள்தானே, அலட்டிப் போட்டு போகட்டும். 🤣
  14. அருமையான பதில் ரஞ்சித். சுத்து மாத்து சுமந்திரனுக்கு மட்டுமல்ல இங்கு அரைகுறை அரசியல் அறிவுடன் நுனிப்புல் மேய்கின்ற அதி மேதாவிகளுக்கும் நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள். அவர்கள் எப்பவும் இருட்டுக்குள் யானையை பார்த்துவிட்டு வந்து அவித்து இறக்குகின்ற ஆட்கள் தானே.. 😂
  15. வாயை திறந்தால் பொய். சகுனி நாட்டின் தொழிலே அடுத்த நாட்டில் என்ன நடக்குது என்று கண் கொத்திப் பாம்பாக பார்த்துக் கொண்டு இருப்பது தான்.
  16. மதுபான அனுமதி கொடுக்கப் படவில்லை என்று @Kapithan போன்றோர் பொய் சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். இப்போதைய புதிய ஜனாதிபதிக்கு சொல்லுங்கள்… சுமந்திரனுக்கோ, சாணக்கியனுக்கோ, ஶ்ரீதரனுக்கோ, அங்கஜனுக்கோ ஒரு Bar license ம் கிடைக்க வில்லை என்று. சுத்துமாத்துகளுக்கு வெள்ளை அடிக்கப் போனால்.. இப்பிடித்தான் எக்கச்சக்கமாக மாட்டுப் பட வேண்டி வரும். 😂
  17. ஏராளன்.... நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல, @Paanch , @குமாரசாமி, @Kandiah57, @Kavi arunasalam, @nochchi, @shanthy ஆகியோரை மேடைக்கு வரும்படி அழைக்கின்றேன். அவர்கள் வராவிட்டால் நான் சொல்கின்றேன். அதற்கிடையில்... உங்கள் கைத்தொலை பேசி கீழே விழுந்தால் என்ன சொல்வீர்கள் என்பதையும் சொல்லி விடுங்கள். 😂
  18. நான்... "சயிச" என்று சொல்லிவிட்டு, தொலை பேசியை எடுத்து உடைந்திருக்கின்றதா, கீறல் விழுந்து இருக்கின்றதா என பார்ப்பேன். 😂
  19. கிளிநொச்சியில் மருமகனை இரும்பினால் தாக்கிய மாமா கைது! கிளிநொச்சி, கல்மடு பகுதியில் ஏற்பட்ட கைக்கலப்பில் படுகாயமடைந்த ஒருவர், யாழ்., போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி, பெரியகுளம் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் கிளிநொச்சி கல்மடு பகுதியைச் சேர்ந்த பூபாலசிங்கம் ஐங்கரன் என்னும் 32 வயதுடைய இளைஞனே படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மாமன் மருமகனுக்கு இடையில் மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இரும்பினால் தாக்கப்பட்டதில் மருமகன் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்., போதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மாமனார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1401007
  20. கிளிநொச்சி சிறுவனின் சாதனை நடைபயணம்! சாதனையொன்றை நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கில், கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவன், நாடளாவிய ரீதியாக நடைபயணமொன்றை ஆரம்பித்துள்ளார். கிளிநொச்சி, கோணாவில் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் டியோஜன் எனும் 11 வயதுடைய மாணவன் முழு நாட்டையும் சுற்றி நடை பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார். சிறுவயதில் ஏதாவது ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் இந்த பயணத்தை இவர் ஆரம்பித்துள்ளார் என்று குறித்த மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார். அந்தவகையில், இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக சமய நிகழ்வுகளுடன் முல்லைத்தீவு நோக்கி குறித்த மாணவன் தனது சாதனை பயணத்தை ஆரம்பித்துள்ளார். இந்த பயணத்தை குடும்ப உறுப்பினர்களும், சமயத்தலைவர்களும், பிரதேச மக்களும் இணைந்து ஆரம்பித்து வைத்து மாணவனுக்கு உற்சாகமளித்துள்ளனர். https://athavannews.com/2024/1401006
  21. முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயம்! புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கமைய கையளிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களில் சில மாயமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக பதவியேற்றதன் பின்னர் முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களை கையளிக்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார். இந்நிலையில், குறித்த பணிப்புரைக்கமைய கையளிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாயமான முன்னாள் அமைச்சரவையின் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1401045
  22. காரில் இருந்து ஐவரின் சடலம் மீட்பு – விசாரணைகள் தீவிரம். புதுக்கோட்டை-மதுரை தேசிய நெஞ்சாலையில் நமன சமுத்திரம் பகுதி அருகே வீதியோரமாக ஒரு கார் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த காரில் இருந்து ஐவரின் சடலம் மீடக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியில் வெகு நேரமாக கார் நின்று கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் நமனசமுத்திரம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காரில் சடலங்கள் இருப்பதை கண்டுள்ளனர். காரில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 5 பேர் உயிரற்ற நிலையில் காருக்குள் சடலமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் சேலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்கள் எதற்காக புதுக்கோட்டை பகுதிக்கு வந்தனர் என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் அவர்களின் உயிரிழப்புக்கு காரணம் தற்கொலையா? அல்லது காரில் கேஸ் கசிவு ஏற்பட்டதா? என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அவர்கள் 5 பேரும் குடும்ப பிரச்சினையின் காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் எழுந்திருப்பதாகவும், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1401042

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.