Everything posted by தமிழ் சிறி
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
சாத்தான்... வேதம் ஓதுகின்றது. எங்களை நம்பட்டாம். 😂 சுமந்திரன் பதவி விலகினால்... பக்கத்தில் உள்ள தேவாலயத்தில் 10 மெழுகு திரி கொழுத்துவேன்.
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
சாத்தான்.... இந்த இக்கட்டான சூழ்நிலையில், விக்னேஸ்வரனின் முன் மாதிரியை பாராட்டியே ஆக வேண்டும். சுமந்திரனிடம்... அப்படியான முன்மாதிரி இருக்குமா என்பது கேள்விக்குறியே. சுமந்திரன் கதையை கொடுத்து, ஆட்களை திசை திருப்பி காரியம் சாதிப்பதில் கில்லாடி. ஆன படியால்... இவரை நம்ப முதல், நாற்பது தரம் யோசிக்க வேணும். 😂
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
சரியாக சொன்னீர்கள் விசுகு. மாற்றத்தை... நாம் செய்யாமல், மற்றவனிடம் அதை எதிர்பார்ப்பது நிலைமையை இன்னும் சிக்கல் ஆக்கும். இளையவர்கள் வழி விட வேண்டும் என்று சுமந்திரன் வாயை குடுத்த மாதிரி... செயலில் காட்ட வேண்டும். அப்படி இல்லை என்றால்... வாயை பொத்திக் கொண்டு இருந்திருக்க வேண்டும். அது தான்...மனிதனுக்கு அழகு. அதை விட்டுட்டு நெடுகவும் சுத்துமாத்து கதைகள் கதைத்துக் கொண்டு இருந்தால்... இவர்கள் கிழித்தது காணும் என்று, சனம்... சிங்கள கட்சிக்கு வாக்குப் போட்டு விட்டு, தங்களுடைய அலுவலை பார்க்கப் போய் விடுவார்கள். அந்த மாற்றம் ஏற்கெனவே ஆரம்பித்து விட்டதாகவே நான் கருதுகின்றேன்.
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
நியாயம்... அவர், பாராளுமன்ற உறுப்பினராகித்தான் கடிவாளம் போட வேண்டும் இல்லை. ஒரு கட்சியின் உறுப்பினராக வெளியில் இருந்து கொண்டே அதை செய்யலாம். பெற்ரோல்மாக்ஸ் லைட்டுத்தான் வேணும்... என்ற மாதிரி, உங்கள் கதை இருக்கு.
-
தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம்
ஓமோம்.... இவர்கள், அதுக்கும் கொமிசன் கேட்கிறார்கள். 😂 நாடு, உருப்பட்ட மாதிரித்தான். 🤣
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நல்ல காலம்... ஓணான், உடம்பில் பாய்ந்து விறாண்டவில்லை. 😂
-
அரச நிறுவனங்களுக்கு சொந்தமான 4000 வாகனங்கள் மாயம் – விசேட ஆய்வு ஆரம்பம்
அரச நிறுவனங்களுக்கு சொந்தமான 4000 வாகனங்கள் மாயம் – விசேட ஆய்வு ஆரம்பம். சுகாதாரம், கல்வி, தபால், நீர்ப்பாசனம் ஆகிய ஜனாதிபதி செயலகம் உட்பட பல அரச நிறுவனங்களில் சுமார் 4000 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் படி, அனைத்து அரச நிறுவனங்களையும் உள்ளடக்கும் வகையில் தேசிய கணக்காய்வு அலுவலகம் விசேட கணக்காய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்தக் கணக்காய்வின் பின்னர், காணாமல் போன அல்லது இடம்பெயர்ந்த அரச வாகனங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதான கணக்காய்வாளர்டபிள்யூ.பி.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். காலி முகத்திடலத்தில் ஒப்படைக்கப்பட்ட 110 சொகுசு வாகனங்கள் தொடர்பிலான தகவல்களை ஆராய விசேட கணக்காய்வு குழுவொன்று அங்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்துடன் இணைந்து விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்த கணக்காய்வாளர் நாயகம், வாகனங்களை பயன்படுத்தியவர்கள் யார் என்பது தொடர்பில் உரிய தகவல்களைச் சரிபார்க்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 1794 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக அல்லது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் 679 கார்கள் மற்றும் 1115 மோட்டார் சைக்கிள்கள் உள்ளன. மேலும், கல்வி அமைச்சுக்குச் சொந்தமான 212 வாகனங்களும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 880 வாகனங்களும், தபால் திணைக்களத்திற்குச் சொந்தமான 45 வாகனங்களும் காணமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://athavannews.com/2024/1401553
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
அநாவசியமான இடங்களில் காணப்படும் மதுபானசாலைகளை அகற்ற நடவடிக்கை. மதுபானசாலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு இடம்பெற்ற வர்த்தகம் தொடர்பான தகவல்கள் எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு முழுமையான தரவுகளுடன் வெளிப்படுத்தப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்து தேர்தல் பிரசார செயற்பாடுகளுக்கான பணம் பெறப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. அதேபோன்று அநாவசியமான இடங்களில் காணப்படும் மதுபானசாலைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கொள்ளையர்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். கொள்ளையர்களை அடையாளம் காணும் செயற்பாடு கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. அவ்வாறான பலர் தற்போது வாகனங்களை விட்டுச் சென்றுள்ளனர். பலர் வாகனங்களை வீதியில் பயன்படுத்தாமல் மறைத்து வைத்துள்ளமை தொடர்பிலும் தகவல் கிடைத்துள்ளதாகத் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1401514
-
தமிழரசு கட்சியின் மத்திய குழுக்கூட்டம்
தமிழரசு கட்சியின் மத்திய குழுக்கூட்டம். தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக்கூட்டம் இன்றைய தினம் வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்று வருகின்றது. மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், க.குகதாசன், ஈ.சரவணபவன்,இரா.சாணக்கியன், கலையரசன்,சாந்தி சிறீஸ்கந்தராஜா, சி.சிவமோகன்,அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், சட்டத்தரணி கே.வி தவராசா கட்சியின் செயலாளர் ப.சத்தியலிங்கம், உட்பட கட்சியின் பெரும்பாலான மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். https://athavannews.com/2024/1401538
-
இலங்கையின் பொருளாதரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துக்கு சீனாவின் ஒத்துழைப்பு அவசியமாகும் - வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்
சேர்ந்து இருந்து, குழி பறிக்கும் சகுனி இந்தியாவை விட... சீனா பத்தாயிரம் மடங்கு திறம். 👍 நீங்கள், தொடருங்கள் அனுர. 🙂
-
மக்கள் விருப்பப்படி பொதுத்தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி ஆற்றல் மிக்க புதுமுகங்களைக் களமிறக்கவேண்டும் - சுமந்திரன்
சுமந்திரன்.... இதனை "இதய சுத்தியுடன்" சொல்லி இருந்தால்.... வரவேற்கத் தக்கது. 👍 ஆனால்.... இவரை, முழுக்க நம்புவது ஆபத்தானது. முதலில்... சுமந்திரன் வெளியே போய், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதை செய்யாமல்... "வாயால் வடை சுடும் வேலை" ஒன்றும் நடைமுறைக்கு சரிவராது. 😂 சுமந்திரன் வெளியேறி போட்டியிடாமல் விட்டால், மற்றவர்களும் தாமாக வெளியேறுவார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 👍 சுமந்திரன் இளையவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று சொல்லி விட்டு... அவர், கடைசி நேரத்தில் பின்கதவால் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய ஆள். அவர் கடந்த காலத்தில் செய்த "தில்லு முல்லுகள்".... இவரின் நேர்மையை, கேள்விக்குறி ஆக்கியுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
-
வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்
என்ன... இந்திய தூதர் எல்லா இடமும் முண்டியடித்து, முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துக் கொண்டு திரிகிறார். சிங்களப் பகுதிகளில் நியமிக்கப் பட்ட, சிங்கள ஆளுநர்களுக்கும் அல்லவா வாழ்த்து தெரிவிக்க வேண்டும். தமிழ்ப் பிரதேசங்களில்... சகுனி வேலைகளை செய்ய முன்னேற்பாடு செய்கிறார் போலுள்ளது.
-
தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம்
இதை, எனக்கு சொல்லாமல்.... @ரசோதரன், @நீர்வேலியான் க்கு சொல்லவும்.
-
தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம்
தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம். இலங்கையின் வெளிநாட்டுத் தூதரகங்களில் கடமையாற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்ப உறவினர்களை திருப்பி அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு நெருக்கமான முக்கியஸ்தர்களின் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் எந்தவொரு நியமனத்தையும் வழங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் உள்ளது. அதன் காரணமாக போதிய தகுதிகள் இன்றி கடந்த காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைத் திருப்பியழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு இராஜதந்திர துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. https://athavannews.com/2024/1401508
-
கருத்து படங்கள்
- 25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவழி.
ஒவ்வொரு வருடமும் வருகின்ற சூறாவளி, இம்முறை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது போல் தெரிகின்றது.- லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகின்றது - இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி
- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
நல்ல ஒரு காணொளி. இணைப்பிற்கு நன்றி சுவியர். 👍- புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டம் – ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்து!
புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டம் – ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்து! அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைக்குத் தீர்வு காணும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டார். இப் புதிய சட்டப்படி, பாடசாலைகளில் மாணவர்களுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மேம்படுத்தப்படும் எனவும், சட்டவிரோதமான துப்பாக்கிகள், ஸ்கேனர்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்களால் கண்டுபிடிக்க முடியாத 3-டி முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை கண்டறிந்து அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார். அத்துடன் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களின் விற்பனையையும், கண்மூடித்தனமான பயன்பாட்டையும் கண்காணிக்க அதிரடிப் படை அமைக்கப்படும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1401465- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
- இரசித்த.... புகைப்படங்கள்.
ஒரு மீனை உண்ண.... பாம்புக்கும், கொக்குக்கும் போட்டி.- நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி இன்று விசேட உரை!
ஜனாதிபதி உரை ( தமிழில் ) ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு கூறியது என்ன anura kumara thisanayakka- சவுதி அரேபியாவின் முடிவால் எண்ணெய் விலை சரிந்தது!
சவுதி அரேபியாவின் முடிவால் எண்ணெய் விலை சரிந்தது! சவுதி அரேபியாவின் முடிவால் சர்வதேச சந்தையில் நேற்றைய தினம் (26)எண்ணெய் விலைகள் 3 சதவீதத்துக்கு மேல் சரிவடைந்துள்ளதாக ஃபைனான்சியல் டைம்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகின் முதன்மையான மசகு எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, டிசம்பர் மாதத்தில் OPEC உறுப்பினர்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் சேர்ந்து உற்பத்தியை உயர்த்த தீர்மானித்ததன் பின்னர் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெ்ய் ஒரு பீப்பாய்க்கு $1.86 அல்லது 2.53% குறைந்து 71.60 அமெரிக்க டொலர்களாக பதிவானது. அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு $2.02 அல்லது 2.90% குறைந்து 67.67 அமெரிக்க டொலர்களாக பதிவானது. சவுதி தனது அதிகாரப்பூர்வமற்ற எண்ணெய் விலை இலக்கான பீப்பாய்க்கு 100 அமெரிக்க டொலர்கள் என்ற இலக்கை கைவிடத் தயாராக உள்ளது என்று இராஜ்யத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை மேற்கொள்காட்டி தி பைனான்சியல் டைம்ஸ் கூறியுள்ளது. இதன்படி, சவுதி அரேபிய அதிகாரிகள் டிசம்பரில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயாராக உள்ளனர், இந்த நடவடிக்கை நீண்ட காலத்திற்கு எண்ணெய் விலை குறைப்புக்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. https://athavannews.com/2024/1401335 - 25 பேருக்கு மேற்பட்டவர்களைப் பலி கொண்ட சூறாவழி.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.