Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தரமற்ற இம்யுனோகுளோபுளின் மருந்துகள்? ”தரமற்ற இம்யுனோகுளோபுளின் மருந்துகள், நாட்டுக்கு மீண்டும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் விசேட வைத்திய நிபுணர், சமன் சன்ஜீவ இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார். தரமற்ற மருந்து மற்றும் தடுப்பூசிகள் சந்தையில் விநியோகிக்கப்பட்டு, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய சம்பவங்கள் கடந்த காலங்களில் நாட்டில் நிகழ்ந்திருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை நடத்தியிருந்த நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்தனர். தரமற்ற மனித இம்யுனோகுளோபின் மருந்துகளை நாட்டுக்கு இறக்குமதி செய்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், மீண்டும் இந்தியாவிலிருந்து தரமற்ற மனித இம்யுனோகுளோபின் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக தீவிர மற்றும் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறும், விசேட வைத்திய நிபுணர் சமல் சன்ஜீவ இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு அளித்துள்ளார். இது குறித்து விசேட வைத்திய நிபுணர் சமல் சன்ஜீவ கருத்துத் தெரிவிக்கையில்” முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த காலத்திலும், நாட்டுக்கு இந்தியாவிலிருந்து தரமற்ற இம்யுனோகுளோபுலின் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மருந்து விநியோகப் பிரிவின் தலைவர் தேதுன் டயஸினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இம்யுனோகுளோபுலின் மருந்துகளும் தரமற்றவை என்பதால், செப்டம்பர் மாதத்திலேயே இந்த மருந்துத் தொகைகளை பயன்பாட்டிலிருந்து நீக்கிவிட்டதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீண்டும் மீண்டும் தரமற்ற மருந்துகள் நாட்டுக்கு கொண்டுவரப்படும் நிலையில், சிறார்கள் முதல் பெரியவர்கள் வரையானோரின் உயிருக்குள்ள உத்தரவாதம் தான் என்ன? மருத்துகளின் தரம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல், மருந்துகளின் பதிவின்போது மேற்கொள்ளப்படும் உரிய முறைகளுக்கு அப்பாற் சென்று, அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகள் தேவைக்காகவே இவ்வாறான மருந்துகள் நாட்டுக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த மருந்து தற்போது பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டாலும், இதனைக் கொண்டுவர செலவான மில்லியன் கணக்கான நிதிக்கு யார் பொறுப்பு கூறுவது? எனவே, இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி, அனைத்து அதிகாரிகளுக்கு எதிராகவும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு விசேட வைத்திய நிபுணர் சமல் சன்ஜீவ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1401858
  2. 8 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்: 60 வயதுடைய நபர் கைது! சம்மாந்துறை, புதிய வளத்தாப்பிட்டி பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 60 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீடுகளுக்கு சென்று குர்ஆன் ஓதுவிக்கும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு, அதிக இரத்த போக்கு ஏற்பட்டமையால், தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1401839 @Kandiah57
  3. ராமநாதபுரத்தில் மீட்கப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான ஈழத்து நாணயம்! தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் பாடசாலை மாணவிகள் மூவர், தங்கள் வீடுகளுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது ராஜராஜ சோழன் (கி.பி. 985-1012) பெயர் பொறிக்கப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான ஈழத்து நாணயத்தைக் கண்டுபிடித்துள்ளனர். சுரேஷ் சுதா அழகன் மெமோரியல் அரசு மேல்நிலைப் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும்,கே மணிமேகலை, எஸ் திவ்யதர்ஷினி மற்றும் எஸ் கனிஷ்கஸ்ரீ ஆகியோரே இந்த நாணயங்களை கண்டுபிடித்துள்ளனர். குழி தோண்டி விளையாடிக் கொண்டிந்த வேளையில் அவர்கள், பழங்கால நாணயங்கள், பானை ஓடுகள் மற்றும் கல் கல்வெட்டுகளை மீட்டுள்ளனர். தகவல் அறிந்த பாரம்பரிய சங்க செயலாளரும், ராமநாதபுரம் தொல்லியல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவருமான வி.ராஜகுருஇ குறித்த இடத்தை பார்வையிட்டபோது, அங்கு சீன பீங்கான், பானை ஓடுகள்,இரும்புத்தாது, சிவப்பு பானை ஓடுகள் இருப்பதை கண்டதாக தெரிவித்தார். நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஒரு மனிதன் கையில் பூவுடன் நிற்கிறார். அவரது இடதுபுறத்தில் நான்கு வட்டங்கள் உள்ளன. அவருக்கு மேலே ஒரு பிறை உள்ளது. வலதுபுறம் திரிசூலமும் தீபமும் உள்ளது. நாணயத்தின் மறுபுறம், கையில் சங்கு ஏந்தியபடி ஒரு மனிதன் அமர்ந்திருப்பதைக் காணலாம். ‘ஸ்ரீராஜராஜா’ என்ற பெயர் தேவநாகரி எழுத்துக்களில் அவரது இடது கைக்கு அருகில் மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் விளிம்புகள் தேய்ந்துவிட்டன. முதலாம் இராஜராஜ சோழன் இலங்கையைக் கைப்பற்றியதன் நினைவாக ஈழத்து நாணயங்கள் தங்கம்இ வெள்ளி மற்றும் செம்புகளில் வெளியிடப்பட்டதாக வி.ராஜகுரு கூறினார். இலங்கையில் பயன்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட இந்த நாணயங்கள் சோழர்கள் ஆண்ட நாடுகளில் புழக்கத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. https://athavannews.com/2024/1401797
  4. ஆஸ்திரியாவில் புதிய சகாப்தத்தைப் படைக்கவுள்ள தீவிர வலதுசாரி கட்சி! ஆஸ்திரியாவின் சுதந்திரக் கட்சி (FPO) ஞாயிற்றுக்கிழமை இரவு (29) நாட்டின் பொதுத் தேர்தலில் ஆளும் பழமைவாத கட்சியைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஆஸ்திரியாவின் தீவிர வலதுசாரிக் கட்சி பெற்றுக் கொண்ட முதல் வெற்றி இதுவாகும். 10 மில்லியன் மக்கள் வசிக்கும் குறித்த நாட்டில் அதிக பணவீக்கம், உக்ரேன் – ரஷ்யப் போர் மற்றும் கொவிட்-19 தொற்றுநோய் ஆகியன பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. இதனால் அந்நாட்டு மக்கள் ஆளும் கட்சி மீது பெரும் விரக்தியில் இருந்துள்ளனர். இந்நிலையில் முதற்கட்ட உத்தியோகபூர்வ முடிவுகள் சுதந்திரக் கட்சி 29.2% வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்ததாகவும், ஜனாதிபதி கார்ல் நெஹாமரின் ஆஸ்திரிய மக்கள் கட்சி 26.5% வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்ததாகவும் தெரிவித்தது. மத்திய-இடது சமூக ஜனநாயகவாதிகள் 21% உடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். வெளியேறும் அரசாங்கம் – நெஹாமரின் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் பசுமைவாதிகளின் கூட்டணி – நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் பெரும்பான்மையை இழந்தது. 2021 முதல் சுதந்திரக் கட்சிக்கு தலைமை தாங்கிய முன்னாள் உள்துறை அமைச்சரும் நீண்டகால பிரச்சாரருமான ஹெர்பர்ட் கிக்ல் (Herbert Kickl) ஜனாதிபாயக இருக்க விரும்புகிறார். ஆனால், ஆஸ்திரியாவின் புதிய தலைவராவதற்கு, அவருக்கு நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவதற்கு ஒரு கூட்டணிக் கட்சி தேவை. அரசாங்கத்தில் கிக்லுடன் இணைந்து பணியாற்ற மாட்டோம் என்று போட்டியாளர்கள் கூறியுள்ளனர். இதனால், சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்கான வாய்ப்பு சிக்கலாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1401707
  5. ஹெலன் சூறாவளியால் 30 பேர் உயிரிழப்பு! அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை தாக்கிய ஹெலன் சூறாவளியால் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி பல மாநிலங்களில் வீசிய சூறாவளியால் ஏற்பட்ட விபத்துக்களில் 105 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சிலர் காணாமல் போயுள்ளனர் அமலும் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைபட்டுள்ளது. https://athavannews.com/2024/1401842
  6. இவர்கள் கீரியும், பாம்பும்........... மாதிரி இருப்பது, அனுர கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கலாம்.
  7. ஜனாதிபதியின் தீர்மானத்த‍ை இடைநிறுத்திய தேர்தல்கள் ஆணைக்குழு! நெற்செய்கையாளர்களுக்கு உயர் பருவத்தில் 25,000 ரூபா கொடுப்பனவும், மீனவ மக்களுக்கு எரிபொருள் மானியமும் வழங்குவதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. பொதுத்தேர்தல் அறிவிக்கப்படும் போது இவ்வாறான மானியத்தை வழங்க தீர்மானித்ததன் மூலம் ஏனைய வேட்பாளர்களின் பாதகத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். இதன்படி, பொதுத் தேர்தலின் பின்னர் உரிய பொதுக் கொள்கைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது. ஆணைக்குழு நேற்று கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1401702
  8. முதலில் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுக்கு…. பிரேமதாசவையும், பியதாசவையும் எப்படி வாசிப்பது என்று கற்றுக் கொடுக்க வேண்டும். 😂 தொலை பேசிக்கும், கல்குலேட்டருக்கும் வித்தியாசம் தெரியாத சனம் கொஞ்சம் அங்கு வாழ்ந்து கொண்டு இருக்கின்றது. 🤣
  9. இதில் ஒரு தமிழரும் இல்லைப் போலுள்ளது. 😥 பிரேமதாசவையும், பியதாசவையும் வாசித்து வோட்டு போடத் தெரியாத ஆட்கள் உள்ள இனம் அல்லவா நாம். 😁
  10. எச்சரிக்கை!!! இரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், இதயம் பலவீனமானவர்கள், வயித்தெரிச்சல் பிடித்தவர்கள்… இந்தப் பதிவை வாசிப்பது, உங்கள் உடல் நலத்திற்கு தீங்காக அமையலாம். 😂 🤣
  11. பொது வேட்பாளர் பெற்ற வெற்றிகள் – நிலாந்தன். பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியமை என்பதே முதலாவது வெற்றி. ஏனெனில் ஓர் அரசுடைய தரப்பு வைக்கும் தேர்தலை அரசற்ற தரப்பு எப்படி படைப்புத்திறனோடும் புதுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் எதிர்கொள்ள முடியும் என்பதற்கு பொது வேட்பாளர் ஒரு முன்னுதாரணம். அரசற்ற தரப்பு ஒன்று அரசாங்கம் நடத்தும் ஒரு தேர்தலை தன்னுடைய கூட்டு விருப்பை வெளிப்படுத்துவதற்கான ஒரு களமாக பயன்படுத்தியது ;அத்தேர்தல் களத்தைத் தேசத்தைத் திரட்டும் ஒரு பயில் களமாகாகக் கையாண்டமை என்பது முதலாவது வெற்றி. இரண்டாவது வெற்றி, பொது வேட்பாளர் தமிழ் மக்களை ஐக்கியப் படுத்துவதில் முதற்கட்டத் திரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அரியநேத்திரன் பெற்ற வாக்குகள் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரம்.அது கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகளில் அரைவாசியை விட அதிகம். இந்த அடிப்படையில் அவர் பெற்றது ஒரு தொடக்க வெற்றி. அது ஒரு பிரகாசமான வெற்றி இல்லைத்தான். ஆனாலும் வெற்றி. பொது வேட்பாளரை தமிழ் மக்கள் பொருட்படுத்தவில்லை என்று சுமந்திரன் கூறுகிறார். இரண்டு லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்களை அவர் பொருட்படுத்தத் தேவையில்லாத ஒரு கணக்கு என்று கருதுகின்றாரா? இரண்டு லட்சத்து 26 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கொடுக்கும் மதிப்பு அதுதானா? மூன்றாவது வெற்றி, பொது வேட்பாளர் தாயகத்தில் உள்ள மக்களை கட்சி கடந்து ஒன்று திரட்டியது மட்டுமல்ல, புலம்பெயர்ந்த தமிழர்களையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒன்று திரட்டியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளிலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகம் உற்சாகமாகவும் ஆர்வமாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையீடு செய்த ஒரு தேர்தல் இது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பொது வேட்பாளரை நோக்கி ஒப்பீட்டளவில் அதிகமாக ஒன்று குவிந்தார்கள். இது மூன்றாவது வெற்றி. நாலாவது வெற்றி, கிழக்கில் இருந்து வந்த ஒரு வேட்பாளர் வடக்கில் பெற்ற வாக்குகள்.வடக்கையும் கிழக்கையும் சட்டரீதியாக ஏற்கனவே பிரித்து விட்டார்கள் நிர்வாக எல்லைகளின் மூலமும் குடியேற்றங்களின் மூலமும் கிழக்கில் கிழக்கு மையக் கட்சிகளை வளர்த்தெடுப்பதன் மூலமும் வடக்கையும் கிழக்கையும் பிரிக்க முற்படும் சக்திகள் வெற்றி பெற்று வரும் ஒரு காலகட்டத்தில்,கிழக்க்கில் இருந்து ஒரு வேட்பாளர் பொது வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டார்.அவருக்கு வடக்கில் கிடைத்த ஆதரவு என்பது வடக்கையும் கிழக்கையும் உணர்வுபூர்வமாக பிரிக்க முடியாது என்பதனை உணர்த்தி இருக்கிறது.அதுவும் வடக்கு கிழக்கை சட்ட ரீதியாகப் பிரித்த கட்சியின் தலைவர் அரசுத் தலைவராகத் தெரித்தெடுக்கப்படட ஒரு தேர்தலில். இது ஒரு மகத்தான வெற்றி ஐந்தாவது வெற்றி, ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. சங்குச் சின்னத்தின் கீழ் ஏழு கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டன. மக்கள் அமைப்பு ஒன்றும் கட்சிகளும் இணைந்து அவ்வாறு தேர்தல் நடவடிக்கைகள் ஈடுபட்டமை தமிழ் அரசியல் பண்பாட்டில் ஒரு புதிய போக்கு. அது ஒரு புதிய பண்பாடு. அது ஒரு புதிய பரிசோதனையும் கூட. அந்த ஜனநாயகப் பரிசோதனையில் தமிழ் மக்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு சித்தி பெற்றிருக்கிறார்கள். பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது ஜூலை 29 ஆம் தேதி. ஜனாதிபதி தேர்தல் நடந்தது செப்டம்பர் 21 ஆம் தேதி. இடைப்பட்ட சுமார் 50 நாட்கள் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு மிகவும் புதிய ஒரு சின்னத்தை சங்குச் சின்னத்தை வெற்றிச் சின்னமாக மாற்றியது என்பதில் ஒரு செய்தி இருக்கிறது.தமிழ் மக்கள் கூட்டுணர்வோடு வாக்களிக்கும் பொழுது எந்த ஒரு புதிய சின்னத்தையும் ஸ்தாபிக்கலாம் என்பதுதான் அது. இது ஏற்கனவே தமிழ் மக்கள் உதயசூரியன் சின்னத்தை நிராகரித்த பொழுது நிரூபிக்கப்பட்டது. அதன் பின் ஈரோஸ் இயக்கம் சுயேட்சையாகப் போட்டியிட்ட பொழுது கிடைத்த வெற்றியும் அதனை நிரூபித்தது. இப்பொழுது சங்குக்கு கிடைத்த வெற்றியும் அத்தகையதுதான். முற்றிலும் புதிய ஒரு சின்னத்தை 50 நாட்களில் ஸ்தாபிக்க முடிந்தமை என்பது ஒற்றுமையின் விளைவு. ஒற்றுமையின் பலமும் தான். ஆனால் இந்த ஒற்றுமை இப்பொழுதும் பலவீனமானதாகவே காணப்படுகிறது பொதுக் கட்டமைப்பு ஒரு பலமான இறுகிப் பிணைந்த கூட்டாக இன்னமும் உருவாகவில்லை. ஒரு ஜனாதிபதித் தேர்தலை நோக்கி கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து செயல்பட்டன. இதே இணைந்த செயல்பாடு தொடர்ந்து வரும் தேர்தலிலும் இருக்குமா என்ற கேள்வி உண்டு. கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் நடந்த கூட்டத்தில் அது அது தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்குள் காணப்படும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பானது தொடர்ந்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பாக தனது கருத்தை தெரிவிப்பதற்கு சில நாட்கள் அவகாசத்தை கேட்டுள்ளது. அந்த மக்கள் அமைப்பு அதன் பொதுச்சபையைக் கூட்டி அது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஒரு மக்கள் அமைப்பு தொடர்ச்சியாக தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து அந்த அமைப்பிடம் தயக்கம் காணப்படுவதாக தெரிகின்றது.தேர்தல் முடிந்த கையோடு தமிழ் மக்கள் பொதுச்சபை ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் தேசத்தைக் கட்டியெழுப்பும் வழியில் தேர்தல் ஒரு பகுதியே தவிர தேர்தல்கள் மூலம் மட்டும் தேசத்தைக் கட்டி எழுப்ப முடியாது என்று தெளிவாகத் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலை தமிழ் ஐக்கியத்தைக் கட்டி எழுப்புவதற்கான ஒரு களமாக பயன்படுத்துவது என்று கூறிப் பொதுகட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பொதுக் கட்டமைப்பு எனப்படுவது தமிழ் ஐக்கியத்தின் ஆகப் பிந்திய முயற்சி. கட்சிகள் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தயாராகிவிட்டன.பொதுக் கட்டமைப்புக்குள் அங்கமாக உள்ள ஏழு கட்சிகளும் அது தொடர்பில் கூடி முடிவெடுத்து விட்டதாகத் தெரிகிறது. ஆனால் பொதுக் கட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் பொதுச்சபை என்ற மக்கள் அமைப்பானது அது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் கூடி முடிவெடுக்க விருப்பதாகத் தெரிகிறது. ஒரு ஜனாதிபதித் தேர்தலை கையாள்வது வேறு, ஏனைய தேர்தல்களை கையாள்வது வேறு என்ற விளக்கம் பொதுச் சபையிடம் காணப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலை ஒரு தேர்தலாக அல்லாது தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்கான ஒரு பயில் களமாகவே பொதுச்சபை பார்த்தது. அந்த அடிப்படையில்தான் பொதுச்சபை பொதுக் கட்டமைப்புக்குள் இணைந்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் முழு அளவுக்கு ஈடுபட்டது. ஆனால் ஏனைய தேதர்கள் அவ்வாறானவை அல்ல. எனவே அந்த தேர்தல் தொடர்பாக முடிவு எடுப்பதற்கு பொதுச் சபை கால அவகாசத்தை கேட்டது. பொதுச்சபை எனப்படுவது ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி உதயமாகிய ஒரு கட்டமைப்பு. அதற்கு ஐந்து மாதங்கள் தான் வயது.5 மாத வயதான ஒரு கட்டமைப்பு அடுத்தடுத்து வரும் தேர்தல்களுக்கு பதில் வினை ஆற்ற வேண்டியது அவசியமா என்ற கேள்விக்கு விடை இன்று இரவுக்குள் தெரிய வந்து விடும். https://athavannews.com/2024/1401614
  12. ஒன்றாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை... கடந்த உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்பு வந்த நேரம்.... தமிழரசு கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவிப்பு செய்து, மற்றைய கட்சிகளை வெளியே அனுப்பியவர் தான் சுமந்திரன். ஜனாதிபதி தேர்தலுடன்... மக்கள் அவர்களுக்கு கொடுத்த அடியுடன் மிரண்டு போய்... எல்லோரையும் ஒன்றாக வந்து இணையும் படி அழைப்பு விடுகின்றார். இந்த யோசனை இவருக்கு முன்பே வரவில்லையா... அல்லது அதனை கணிக்கும், "தூர நோக்குப் பார்வை" அறவே இல்லையா? இப்போ.... இருந்த பாராளுமன்ற கதிரைகள் பறி போய்விடும் என்ற அச்சத்தில், ஒற்றுமையை பற்றி கவலைப் படுகின்றார். அரசியல்வாதிகள் ரோசம் கெட்டவர்களாக இருக்கலாம். மக்களும் அப்படி இருப்பார்கள் என்று எதிர் பார்க்கின்றார்கள் போலுள்ளது. பாராளுமன்ற தேர்தல் முடிய.... வர இருக்கும் உள்ளுராட்சி தேர்தல்களில், மீண்டும் தமிழரசு கட்சி தனித்துப் போட்டி என்று மற்றவர்களை வெளியே அனுப்புவார்கள். இவர்களின் குறி கதிரைகளே தவிர, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நலன் அல்ல. "இன்னுமா... இந்த ஊர், நம்மளை நம்புது" என்ற வடிவேலுவின் நகைச்சுவை தான் நினைவிற்கு வருகின்றது. 😂
  13. ஒன்றாக இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை... கடந்த உள்ளூராட்சி தேர்தல் அறிவிப்பு வந்த நேரம்.... தமிழரசு கட்சி தனித்தே போட்டியிடும் என அறிவிப்பு செய்து, மற்றைய கட்சிகளை வெளியே அனுப்பியவர் தான் சுமந்திரன். ஜனாதிபதி தேர்தலுடன்... மக்கள் அவர்களுக்கு கொடுத்த அடியுடன் மிரண்டு போய்... எல்லோரையும் ஒன்றாக வந்து இணையும் படி அழைப்பு விடுகின்றார். இந்த யோசனை இவருக்கு முன்பே வரவில்லையா... அல்லது அதனை கணிக்கும், "தூர நோக்குப் பார்வை" அறவே இல்லையா? இப்போ.... இருந்த பாராளுமன்ற கதிரைகள் பறி போய்விடும் என்ற அச்சத்தில், ஒற்றுமையை பற்றி கவலைப் படுகின்றார். அரசியல்வாதிகள் ரோசம் கெட்டவர்களாக இருக்கலாம். மக்களும் அப்படி இருப்பார்கள் என்று எதிர் பார்க்கின்றார்கள் போலுள்ளது. பாராளுமன்ற தேர்தல் முடிய.... வர இருக்கும் உள்ளுராட்சி தேர்தல்களில், மீண்டும் தமிழரசு கட்சி தனித்துப் போட்டி என்று மற்றவர்களை வெளியே அனுப்புவார்கள். இவர்களின் குறி கதிரைகளே தவிர, ஒட்டு மொத்த தமிழ் மக்களின் நலன் அல்ல. "இன்னுமா... இந்த ஊர், நம்மளை நம்புது" என்ற வடிவேலுவின் நகைச்சுவை தான் நினைவிற்கு வருகின்றது. 😂
  14. 4 மாதத்தில் 172 மதுபான அனுமதி பத்திரங்கள் வழங்கப் பட்டுள்ளது. அதாவது 1 கிழமைக்கு 10 புதிய மதுபான அனுமதி பத்திரங்கள் வழங்கப் பட்டுள்ளது. மாத்திரமே வழங்கப் பட்டதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையர் எம்.ஜே.குணசிறி சப்பைக் கட்டு கட்டுகின்றார். இவர்களுக்கு குறுகிய காலத்தில் 172 அனுமதி பத்திரங்கள் வழங்கப்படுவது அதிகமாக தெரியவில்லையா? அதனை யார், யார்.... பெயரில் வழங்கப் பட்டது என்ற தகவலையும் மதுவரித் திணைக்கள ஆணையர் வெளிக் கொணர வேண்டும். எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்களும் மதுபான அனுமதி பத்திரங்களை வாங்கி விட்டு உத்தமன் மாதிரி... வெள்ளை வேட்டியும், கோட்டு சூட்டும் போட்டுக் கொண்டு ஊருக்குள் நடமாடுகிறார்கள்.
  15. நானும் அப்படித்தான் நினைக்கின்றேன் ஈழப்பிரியன். தமிழ் மக்கள்…. தமிழ் கட்சிகளுக்கு கொடுத்த கால அவகாசத்தை சரியாக பயன்படுத்தாமால், தங்களுக்குள் “குடுமிப் பிடி” சண்டை பிடித்துக் கொண்டு இருந்ததை எவரும் ரசிக்கவில்லை. அவர்கள் அமைதியாக வேறு ஒரு மாற்றத்திற்கு தயாராகி விட்டதாகவே ஊரில் இருந்து வரும் செய்திகளும் தெரிவிக்கின்றன.
  16. தமிழர் நலன் சார்ந்து தமிழ் கட்சிகள் செயற்படுவார்கள் என்று அவர்களை பாராளுமன்றம் அனுப்பினால்… தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றியோ, காணாமல் போனவர்கள் பற்றியோ, தமிழர்களின் எதிர்கால இருப்பு பற்றிய எதுவித அக்கறையும், அடுத்த நகர்வும் இல்லாமல்… அவர்கள் தமது சுய தேவையை பூர்த்தி செய்ய சிங்களத் தலைவர்களுடன் ஒட்டி உறவாடும் போது… இவர்களை… சிங்கள கட்சிகளிடம் “புறோக்கர்” மாதிரி செயல் பட மேலும் அனுமதிக்காமல், நேரடியாகவே தமிழ் மக்கள்…. சிங்கள கட்சிக்கு ஆதரவு தெரிவித்து தமது தேவைகளை தற்காலிகமாக பூர்த்தி செய்து கொள்வதுதான் சிறந்த வழி. தற்போது இருக்கும்… “சீழ்” பிடித்துப் போன தமிழ் தலைமைகளை தமிழ் அரசியல் அரங்கில் இருந்து முற்றாக அப்புறப் படுத்தாவிடில், தமிழ் மக்களுக்கு விமோசனம் என்பது எட்டாக்கனி தான்.
  17. அனுரவின்... தேசிய மக்கள் சக்தி கட்சி, நாளை 29.09.2024 அன்று புலம் பெயர் தமிழர்களுடன் இணையவழி (Zoom meeting) சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிய முடிகின்றது. கேள்வி பதில் அரங்கு. பங்கு கொள்வோர்... # இராமலிங்கம் சந்திர சேகர். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # சிவா சிவப்பிரகாசம். (மலையக தேசியக்குழு உறுப்பினர்) # எம்.ஜே.எம். பைசல். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # ஜனகா செல்வராஜ். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) வழிப்படுத்தல்: எம். பெளசர். காலை 10:00 மணி - கனடா. மதியம் 2:00 மணி ஐரோப்பா. மதியம் 3:00 இங்கிலாந்து. மாலை 7:30 இலங்கை நேரப்படி இந்த சந்திப்பு நிகழும். Meeting ID : 831 9644 1969 Pass Code: 660804 Contact - Fauzer 0776613739 (Mob.) 0044 7817262980 (WhatsApp)
  18. அனுரவின்... தேசிய மக்கள் சக்தி கட்சி, நாளை 29.09.2024 அன்று புலம் பெயர் தமிழர்களுடன் இணையவழி (Zoom meeting) சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிய முடிகின்றது. கேள்வி பதில் அரங்கு. பங்கு கொள்வோர்... # இராமலிங்கம் சந்திர சேகர். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # சிவா சிவப்பிரகாசம். (மலையக தேசியக்குழு உறுப்பினர்) # எம்.ஜே.எம். பைசல். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # ஜனகா செல்வராஜ். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) வழிப்படுத்தல்: எம். பெளசர். காலை 10:00 மணி - கனடா. மதியம் 2:00 மணி ஐரோப்பா. மதியம் 3:00 இங்கிலாந்து. மாலை 7:30 இலங்கை நேரப்படி இந்த சந்திப்பு நிகழும். Meeting ID : 831 9644 1969 Pass Code: 660804 Contact - Fauzer 0776613739 (Mob.) 0044 7817262980 (WhatsApp)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.