Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தாா் ஸ்ரீதரன்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார். இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் இறைமையின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துத் தெரிவித்த எஸ். ஸ்ரீதரன் , ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/2024/1401982
  2. பையா.... அந்தப் பெயரை வைத்தால்தான், சந்தேகப் பட மாட்டார்கள். "படிக்கிறது தேவாரம், இடிக்கிறது சிவன் கோவில்" என்ற மாதிரி இருக்கு இவர்களின் செயல்கள். 😂
  3. வடக்கில் மூவாயிரம் வாக்குகள் மாத்திரம் எடுத்த ஈ.பி.டி.பி. முன்னாள் எம்.பி. திலீபன் உட்பட மூவருக்கு மதுபானச்சாலை பெர்மிட்! ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் உள்ளிட்ட மூவருக்கு வடக்கில் மதுபானசாலை பெர்மிட்டுகள் வழங்கியமை உறுதி செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு மது பானசாலைகளுக்கான அனுமதியைப் பெற்று வவுனியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கு.திலீபன் அவற்றைக் கை மாற்றியுள்ளார். இந்த இரு மதுபானசாலை களையும் திறப்பதற்காக பிரதேச செயலகத்திற்கான கட்டணத்தை செலுத்த முயன்றபோதும் பிரதேச செயலகம்அதை ஏற்க மறுத்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் புதுக்குடியிருப்பு மற்றும் ஆனந்தபுரம் பகுதிகளில் அமைப்பதற்கான அனுமதிகளே நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கப்பட்டுள்ளன. இந்த இரு அனுமதிப் பத்திரங்களும் விநியோகிக்கப்பட்டு உள்ள நிலையில் அந்த இடங்களில் மதுபான சாலைகளை திறப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெறுகின்றன எனத் தெரிகின்றது. இதேபோன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரதானியான சாகல ரட்ணாயக்காவின் சிபார்சில் வழங்கப்பட்ட ஒரு மது பாடசாலைக்கான பெர்மிட்டின் அடிப்படையில் வவுனியா நெடுங்கேணியில் ஒரு பார் அமைக்க முயற்சிக்கப்படுகின்றது. வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணிச் சந்தியில் ஓர் மது பானசாலைக்கான அனுமதி சாகல ரட்ணாயக்க ஊடாக பெறப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சாகல ரட்ணாயக்க எழுத்து மூலக் கடிதம் வழங்கியே இந்த மது பானசாலைக்கான அனுமதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்காவின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. பாலநாயகம் என்னும் பெயரில் இந்த மதுபான சாலைக்காகன அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறிய தந்தையின் மகனின் பெயரில் பரந்தன், கண்டாவளை பிரதேச செயலகத்தில் 2024-06-11 அன்று பணம் செலுத்தப்பட்டு மதுபானச்சாலைக்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. Kunalan Karunagaran is with தமிழரசுக் கட்சி ஊர்காவற்றுறை தொகுதி and 11 others
  4. வன்னியில் Bar பொமிட் எடுத்தவர்களின் List வெளிவந்திருக்கிறது. 1) EPDP வன்னி எம்பி திலீபன் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் இரண்டு Bar பொமிட் எடுத்துள்ளார். 2) ரணிலின் செயலாளர் சாகல ரட்ணாயக்க நெடுங்கேணியில் பாலநாயகம் என்ற பெயரில் ஒரு Bar பொமிட் எடுத்திருக்கிறார். யாழ் அங்கயனின் சித்தப்பா ராஜன், தனது மகன் விதுர்சனின் பெயரில் ஒரு Bar பொமிட் எடுத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கண்டாவளை பிரதேச செயலகத்தில் விதுர்சனின் பெயரிலேயே பணம் செலுத்தியிருக்கிறார். Kilinochchi Podiyan
  5. பிரித்தானியாவில் பிரம்மாண்டமாக இடம்பெற்ற தமிழர் விளையாட்டு விழா! பிரித்தானியாவில் நோர்தம்ரன் பகுதியில் நோர்தம்ரன் தமிழ் விளையாட்டு கழகம் மற்றும் நோர்தம்ரன் தமிழ் கல்விக்கூடம் இணைந்து நடத்திய விளையாட்டு விழா கடந்த 29 ஆம் திகதி Caroline chisolm பாடசாலையில் காலை 9 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நோர்தம்டன் மேஜர் கலந்து சிறப்பித்தித்துடன் ஐக்கிய இராச்சிய தேசிய கொடியையும் ஏற்றி வைத்தார். நிகழ்வில் சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், கரப்பந்தாட்டம் மற்றும் பெரியவர்களுக்கான கிராமிய விளையாட்டுகளும் நடை பெற்றதோடு சுவையான தாயக உணவுகளும் வழங்கப்பட்டது. அத்துடன் விளையாட்டில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பணப் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் சிறுவர்கள் பெரியவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நிகழ்விற்கான நிதி பங்களிப்பினை நோர் தம்டன் தமிழ் வர்த்தகர்கள் வழங்கியிருந்தன. குறித்த விளையாட்டு போட்டி முதல் தடவையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1401882
  6. மன்னார் மக்களுக்கு வாழ்த்துக்கள். இதே முன் மாதிரியை மற்றைய மாவட்ட மக்களும் பின் பின்பற்ற வேண்டும்.
  7. “கௌரவ” என்ற சொல்லுக்கு… இப்போ இருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் எவரும் இல்லை. ஏல்லாரும் கசிப்பு காச்சுகின்ற சாராய வியாபாரிகள். 😂 திருட்டுப் பயல்கள். 🤣
  8. யாழ்ப்பாணத்தில் காலை 7:50 மணிக்கே மதுபானசாலை திறந்து வியாபாரம் களை கட்டுதாம். 😮 திராவிடத்தை பார்த்து, தொழில் கற்றுக் கொண்ட…. வடக்கு / கிழக்கு தமிழ் அரசியல் வாதிகள். 🧐 தமிழர் உரிமைக்காக போராடப் போகின்றோம் என்றவர்கள்… கனக்க “Bar Licence“ எடுக்க உயிரை கொடுத்து போராடி இருக்கின்றார்கள். 😂 🤣
  9. மிக்க நன்றி கந்தப்பு. 🙂 இம்முறை தேர்தல் யாரும் எதிர்பார்க்காத முடிவுடன் இருக்கும் என நினைக்கின்றேன். போட்டியை நடத்த சம்மதித்தமைக்கு மீண்டும் நன்றிகள். 🙏
  10. பத்து வருடம் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால்….. 80,000 ரூபாய் ஓய்வூதியம் எடுக்கின்றார்கள். ஏழை நாட்டுக்கு இது மிக அதிகம். மக்களின் வரிப்பணம் எல்லாம் இப்படி வீணாக போகின்றது.
  11. பதிலுக்கு நன்றி கிருபன் ஜீ. கந்தப்பு அவர்களின் சாதகமான பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
  12. இவ்வளவையும் கை நீட்டி, வாங்கி விட்டுத்தான்... தமிழ் மக்களின் பிரச்சனை பற்றி பாராளுமன்றத்தில் கதைக்காமல், "பம்மிக்" கொண்டு இருந்தவர்கள். 😂
  13. யாழ்.கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் வைக்க.... @கந்தப்பு அல்லது @கிருபன் ஜீயை உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 😂 வருகின்ற நவம்பர் மாதம் மட்டும்... தேர்தல் ஆணையாளர் என்ற பாரிய பொறுப்பை, யாழ். களம் தங்களுக்கு தருகின்றது. தாமதிக்காமல்... தங்கள் கடமையை பொறுப்பேற்கவும். 🤣
  14. ஓம்... பையா. எல்லாரும் திருட்டு பயல்கள். வரும்... தேர்தலுடன், "பின்னங்கால் பிடரியில் அடிபட", ஓட விட வேணும்.
  15. நீங்கள் மேலே பதிந்த தகவலின்படி.. வெளிவந்தது 10 மதுபானசாலைகள். கடந்த நான்கு மாதத்தில் மாத்திரம் 172 மதுபான அனுமதி பத்திரங்கள் கொடுக்கப் பட்டுள்ளதாம். இன்னும்... வெளிவரும். லோயர்... பழம் தின்று, கொட்டை போட்ட ஆள் 😂. எப்படியும், இந்த விசயத்தை அமுசடக்கமாக... இடது கைக்கு தெரியாமல் சாதுரியமாகத்தான் கையாண்டு இருப்பார். நெருப்பு இல்லாமல்... புகை வராது. அது வரை பொறுமை காப்போம். 🤣
  16. தமிழ் நாடு மாதிரி…. சாராயக் கடைகளை எல்லா இடமும் திறந்து, மக்களுக்கு சிந்திக்கும் ஆற்றலை இல்லாது செய்யப் போகின்றார்கள். சாராயம், கசிப்பு, கஞ்சா… என்று எதிர்கால சந்ததியே பாழாய்ப் போகப் போகுது. ஓரு சிலர் பணம் சம்பாதிப்பற்காக, ஒரு இனத்தையே அழிக்கப் போகின்றார்கள்.
  17. இவர்கள் செய்த சுத்துமாத்துகள் எல்லாம்… மகிந்த, ரணில் ஆட்சிக் காலத்தில் நடந்தது போல்…. தங்களை காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என்று நினைத்திருந்தார்கள். அனுர ஜனாதிபதியாய் வருவார் என இவர்கள் எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். இப்போ, திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி… திருட்டு முழி, முழித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இப்போ வருவது கொசுறு😂. “மெயின் பிக்சர்” இனித்தான் வரப் போகுது. 🤣
  18. தமிழ் கட்சிகளை விட்டு, மக்கள் விலகி செல்கின்றார்கள் போலுள்ளது. அனுர கட்சி வடக்கில், எப்படியும் இரண்டு இடங்கள் எடுப்பார்கள். அவர்களே… முழுக்க எடுத்தால் இன்னும் சந்தோசம். 😂 தமிழ் கட்சிகள் நிரந்தர ஓய்வெடுக்கும் நேரம் வந்து விட்டது. 🤣 உங்கள் தலையில்… நீங்களே மண் அள்ளிப் போட்டீர்கள். அனுபவியுங்கள்.
  19. மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தரமற்ற இம்யுனோகுளோபுளின் மருந்துகள்? ”தரமற்ற இம்யுனோகுளோபுளின் மருந்துகள், நாட்டுக்கு மீண்டும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றும் விசேட வைத்திய நிபுணர், சமன் சன்ஜீவ இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார். தரமற்ற மருந்து மற்றும் தடுப்பூசிகள் சந்தையில் விநியோகிக்கப்பட்டு, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திய சம்பவங்கள் கடந்த காலங்களில் நாட்டில் நிகழ்ந்திருந்தன. இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை நடத்தியிருந்த நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்தனர். தரமற்ற மனித இம்யுனோகுளோபின் மருந்துகளை நாட்டுக்கு இறக்குமதி செய்த குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், மீண்டும் இந்தியாவிலிருந்து தரமற்ற மனித இம்யுனோகுளோபின் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுதொடர்பாக தீவிர மற்றும் விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறும், விசேட வைத்திய நிபுணர் சமல் சன்ஜீவ இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடு அளித்துள்ளார். இது குறித்து விசேட வைத்திய நிபுணர் சமல் சன்ஜீவ கருத்துத் தெரிவிக்கையில்” முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்த காலத்திலும், நாட்டுக்கு இந்தியாவிலிருந்து தரமற்ற இம்யுனோகுளோபுலின் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மருந்து விநியோகப் பிரிவின் தலைவர் தேதுன் டயஸினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இம்யுனோகுளோபுலின் மருந்துகளும் தரமற்றவை என்பதால், செப்டம்பர் மாதத்திலேயே இந்த மருந்துத் தொகைகளை பயன்பாட்டிலிருந்து நீக்கிவிட்டதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீண்டும் மீண்டும் தரமற்ற மருந்துகள் நாட்டுக்கு கொண்டுவரப்படும் நிலையில், சிறார்கள் முதல் பெரியவர்கள் வரையானோரின் உயிருக்குள்ள உத்தரவாதம் தான் என்ன? மருத்துகளின் தரம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல், மருந்துகளின் பதிவின்போது மேற்கொள்ளப்படும் உரிய முறைகளுக்கு அப்பாற் சென்று, அரசியல்வாதிகள் அல்லது அதிகாரிகள் தேவைக்காகவே இவ்வாறான மருந்துகள் நாட்டுக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த மருந்து தற்போது பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டாலும், இதனைக் கொண்டுவர செலவான மில்லியன் கணக்கான நிதிக்கு யார் பொறுப்பு கூறுவது? எனவே, இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி, அனைத்து அதிகாரிகளுக்கு எதிராகவும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு விசேட வைத்திய நிபுணர் சமல் சன்ஜீவ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1401858
  20. 8 வயதுச் சிறுமி துஷ்பிரயோகம்: 60 வயதுடைய நபர் கைது! சம்மாந்துறை, புதிய வளத்தாப்பிட்டி பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 60 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீடுகளுக்கு சென்று குர்ஆன் ஓதுவிக்கும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமிக்கு, அதிக இரத்த போக்கு ஏற்பட்டமையால், தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2024/1401839 @Kandiah57
  21. ராமநாதபுரத்தில் மீட்கப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான ஈழத்து நாணயம்! தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரச பாடசாலை ஒன்றின் பாடசாலை மாணவிகள் மூவர், தங்கள் வீடுகளுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது ராஜராஜ சோழன் (கி.பி. 985-1012) பெயர் பொறிக்கப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான ஈழத்து நாணயத்தைக் கண்டுபிடித்துள்ளனர். சுரேஷ் சுதா அழகன் மெமோரியல் அரசு மேல்நிலைப் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும்,கே மணிமேகலை, எஸ் திவ்யதர்ஷினி மற்றும் எஸ் கனிஷ்கஸ்ரீ ஆகியோரே இந்த நாணயங்களை கண்டுபிடித்துள்ளனர். குழி தோண்டி விளையாடிக் கொண்டிந்த வேளையில் அவர்கள், பழங்கால நாணயங்கள், பானை ஓடுகள் மற்றும் கல் கல்வெட்டுகளை மீட்டுள்ளனர். தகவல் அறிந்த பாரம்பரிய சங்க செயலாளரும், ராமநாதபுரம் தொல்லியல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவருமான வி.ராஜகுருஇ குறித்த இடத்தை பார்வையிட்டபோது, அங்கு சீன பீங்கான், பானை ஓடுகள்,இரும்புத்தாது, சிவப்பு பானை ஓடுகள் இருப்பதை கண்டதாக தெரிவித்தார். நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஒரு மனிதன் கையில் பூவுடன் நிற்கிறார். அவரது இடதுபுறத்தில் நான்கு வட்டங்கள் உள்ளன. அவருக்கு மேலே ஒரு பிறை உள்ளது. வலதுபுறம் திரிசூலமும் தீபமும் உள்ளது. நாணயத்தின் மறுபுறம், கையில் சங்கு ஏந்தியபடி ஒரு மனிதன் அமர்ந்திருப்பதைக் காணலாம். ‘ஸ்ரீராஜராஜா’ என்ற பெயர் தேவநாகரி எழுத்துக்களில் அவரது இடது கைக்கு அருகில் மூன்று வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் விளிம்புகள் தேய்ந்துவிட்டன. முதலாம் இராஜராஜ சோழன் இலங்கையைக் கைப்பற்றியதன் நினைவாக ஈழத்து நாணயங்கள் தங்கம்இ வெள்ளி மற்றும் செம்புகளில் வெளியிடப்பட்டதாக வி.ராஜகுரு கூறினார். இலங்கையில் பயன்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட இந்த நாணயங்கள் சோழர்கள் ஆண்ட நாடுகளில் புழக்கத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. https://athavannews.com/2024/1401797

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.